Monday, May 19, 2008

திராவிட வேதக்கடலை அடியேன் வணங்குகிறேன்!!!



நேற்று மகளுடன் பேசிக் கொண்டிருந்த போது 'நாளை முருகன் பிறந்த நாள். கொண்டாடலாமா?' என்றேன். உடனே அவள் 'முருகனுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?' என்று கேட்டாள். 'நீயே சொல்' என்றேன். இன்னும் சிந்தித்துக் கொண்டிருக்கிறாள். இன்று காலை எழுந்த பிறகு சொல்வாள் என்று நினைக்கிறேன்.

இன்று பிறந்த நாள் காணும் முருகப்பெருமானைப் போற்றி ஒரு இடுகை முருகனருளிலும் தமிழ் வேதமாம் திருவாய்மொழி தந்த மாறன் சடகோபன் நம்மாழ்வாரைப் போற்றி ஒரு இடுகை கண்ணன் பாட்டிலும் எழுதலாம் என்று நேற்றிரவே அமர்ந்தேன். ஆனால் ஒருத்திக்குக் கதை சொல்வதும் ஒருவனுக்குத் தாலாட்டு பாடுவதும் என்ற இனிய கடமைகள் அப்படி செய்ய விடாமல் செய்துவிட்டன. இன்று காலை எழுந்து பார்த்தால் நண்பர்கள் இராகவனும் இரவிசங்கரும் (முதலில் இரவிசங்கரும் இராகவனும் என்று தான் எழுதினேன். அப்புறம் சரி செய்துவிட்டேன். முருகனருள் என்றாலோ முருகனன்பு என்றாலோ முதலிடம் இராகவனுக்குத் தானே) போட்டி போட்டுக் கொண்டு முருகனருள் பதிவில் இடுகைகள் இட்டிருக்கிறார்கள். மதுரையம்பதி மௌலியும் முருகன் பிறந்தநாளுக்கு ஒரு இடுகை இட்டிருக்கிறார். சரி நாம் தான் இரண்டு நாட்களுக்கு முன்னரே கந்தனும் கண்ணனும் என்று ஒரு இடுகை இட்டாயிற்றே; நம்மாழ்வாரைப் போற்றி ஒரு சிறு இடுகை இடலாம் என்று தோன்றியது.

இன்று பார்த்து வேலைக்கு விரைவில் செல்லவேண்டும். அதனால் எண்ணியது போல் விரிவாக எழுதாமல் சுருக்கமாக ஒரு இடுகை. விரிவாக எழுதுவதைக் கண்ணன் பாட்டில் இனி மேல் இடுகிறேன். சுருக்கமாக இங்கே கூடலில்.



நன்றி: திரு. வாசுதேவன், யூட்யூப்.

பக்தாம்ருதம் விஸ்வஜநானுமோதனம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோபவாங்மயம்
ஸஹஸ்ர சாகோபநிஷத் ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்


பக்தர்களுக்கு அமுதம் போன்றதும் பக்தர்களை இறைவனுக்கு அமுதமாக்குவதும், பயிலும் எல்லா மக்களுக்கும் பெருமகிழ்ச்சியைத் தருவதும், வேண்டியவற்றை எல்லாம் தருவதும், மாறன் சடகோபனாம் நம்மாழ்வாரின் திருவாய்மொழியாக இருப்பதும், ஆயிரக்கணக்கான பகுதிகள் கொண்ட வேத உபநிடதங்களுக்கு நேரான ஆகமமானதும், தமிழ் வேதக்கடலை அடியேன் வணங்குகிறேன்.

ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே


ஓங்கி ஒலிக்கும் அருவிகள் நிறைந்த திருவேங்கடத்தில் நிலைத்து வாழும் அழகும் ஒளியும் உடைய சோதி உருவான என் தந்தை தந்தைக்கும் தந்தையான திருவேங்கடத்தானின் அருகிலேயே காலகாலமாக என்றைக்கும் நிலைத்து வாழ்ந்து எந்த வித குற்றங்களும் இல்லாத அடிமைத் திறத்தை நாங்கள் செய்ய வேண்டும்.

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்றும் உடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகலொன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே


நொடிப்பொழுதும் பிரிந்திருக்கமாட்டேன் என்று தாமரை மேல் வாழும் மங்கையாம் திருமகள் உறையும் திருமார்பினை உடையவனே! நிகரில்லாத புகழை உடையவனே! மூவுலகங்களையும் உடைமையாய் கொண்டவனே! என்னை என்றும் ஆள்பவனே! நிகரில்லாத அமரர்களும் முனிவர் கூட்டங்களும் விரும்பித் தொழும் திருவேங்கடத்தானே! வேறு கதி ஒன்றில்லாத அடியேன் உன் திருவடிகளின் கீழே தஞ்சமென்று புகுந்து அங்கேயே நிலைத்தேன்.

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று அருள் கொடுக்கும்
படிக்கேழ் இல்லா பெருமானைப் பழனக் குருகூர் சடகோபன்
முடிப்பான் சொன்னவாயிரத்துத் திருவேங்கடத்துக்கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே


தன்னுடைய திருவடிகளின் கீழ் தஞ்சமென்று புகுந்து நல்வாழ்க்கையை வாழுங்கள் என்று திருக்கைகளால் தன் திருவடிகளைக் காட்டி எல்லோருக்கும் திருவருள் செய்யும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெருமானை, பழமையும் பெருமையும் கொண்ட திருக்குருகூரில் வாழும் சடகோபன் தனது வினைப்பயன்களை முடிப்பதற்குச் சொன்ன ஓர் ஆயிரம் பாசுரங்களில் இந்தப் பத்துப் பாசுரங்களையும் சிக்கெனப் பிடித்தவர்கள் இறைவனின் பரமபதமாம் பெரிய வானுள் என்றென்றும் நிலைத்து வாழுவார்கள்.

***

திராவிட வேத சாகரத்தைப் போற்றும் சுலோகம் வைணவ ஆசாரிய பரம்பரையில் ஐந்தாவது ஆசாரியரான நாதமுனிகள் அருளிச் செய்தது (முதல் நால்வர் திருமால், திருமகள், சேனைமுதலியார், நம்மாழ்வார்). பாசுரங்கள் நம்மாழ்வார் திருவேங்கடத்தான் மேல் அருளிச் செய்த திருவாய்மொழிப்பாசுரங்கள்.

நம்மாழ்வாரின் திருக்கதையை இங்கே படிக்கலாம்.

57 comments:

  1. வணங்குகிறேன்.

    நன்றி,
    நா. கணேசன்

    ReplyDelete
  2. நன்றி கணேசன் ஐயா.

    ReplyDelete
  3. நம்மாழ்வாரின் திருக்கதையும் படித்துப் புளகித்தேன். அவரையும், இப்படிப்பட்ட அரும்பதிவுகள் தரும் உங்களையும் வணங்குகிறேன், குமரன்!

    ReplyDelete
  4. அடியார்கள் ஒருவரை ஒருவர் 'அடியேன் தண்டம்' என்று சொல்லி விழுந்து வணங்கி தண்டன் இடுவது வைணவ மரபு. அந்தவகையில் கவிநயா அக்கா நீங்கள் சொன்னதற்கு அடியேனின் மறுமொழி 'அடியேன் தண்டம்'. (அது தான் ஏற்கனவே தெரியுமே என்று தங்கமணி சொல்லுவாங்க. வலையுலக நண்பர்கள் சிலரும் ஒத்துக் கொள்வார்கள்). :-)

    ReplyDelete
  5. ஹா ஹா :) அப்ப அடியேனும் தண்டம்! :)

    ReplyDelete
  6. //நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்//

    வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன்!
    த்ராவிட வேத ஸாகரம்=தமிழ் வேதக் கடலை
    நமாம்யஹம்=வணங்குகிறேன்! வணங்குகிறேன்!

    வைகாசி விசாகத்துள் வந்துதித்தான் வாழியே!
    திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே!

    நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!

    ReplyDelete
  7. //முதலில் இரவிசங்கரும் இராகவனும் என்று தான் எழுதினேன். அப்புறம் சரி செய்துவிட்டேன்//

    இப்போ தான் தவறு செய்து விட்டீர்கள் குமரன்!

    வைகாசி விசாகப் பதிவை அடியேன் தான் முதலில் draft mode-இல் வைத்திருந்தேன்! நேற்று மாலை தான் இராகவனும் draft செய்தார் போல!
    பதிவை முதலில் பதிப்பித்து என்னப்பன் முருகப் பெருமானுக்கு முதலில் வாழ்த்து சொன்னதும் அடியேன் தான்!

    ஆனால் கனியை முருகனாகிய கேஆரெஸ்ஸுக்குத் தராமல் இராமனாகிய இராகவனுக்குத் தரப் பார்க்கிறீர்கள்!
    உங்கள் வைணவ பாசம் வெளியே வந்து விட்டது குமரன்!
    ஹா ஹா ஹா! :-)))

    ReplyDelete
  8. //முருகனருள் என்றாலோ முருகனன்பு என்றாலோ முதலிடம் இராகவனுக்குத் தானே//

    இதற்கும் அடியேன் முருகனின் கடும் கண்டனங்கள்! :-)))

    ReplyDelete
  9. //'முருகனுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?' என்று கேட்டாள்//

    சரி...
    எங்கே என் பரிசு?
    சங்கரன் வேறா சண்முகன் வேறா? :-)))

    ReplyDelete
  10. பாசுரங்களுக்கும் விளக்கங்களுக்கும் நன்றி குமரன்!

    //ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி//

    அது என்ன ஒழிவில்?
    அதான் காலம் எல்லாம் என்று சொல்லிட்டாரே!
    அப்புறம் என்ன ஒழிவு இல் காலம் எல்லாம்?

    பொதுவா வீட்டில் அம்மாவோ, மனைவியோ, இல்லை தங்கை மற்றும் வீட்டுப் பெண்களோ "ஓய்வு ஒழிவே இல்லப்பா" என்று சில சமயம் சலித்துக் கொள்வார்கள்.

    காலம் வெகு எளிதில் கரைந்து விடும் தன்மை கொண்டது! எப்படிப் போகுதுன்னே தெரியாது! ஆனாப் போயிடும்!

    காலமெல்லாம் உடனாய் மன்னி என்று மட்டும் சொன்னால், பெருமாளுடன் காலம் எல்லாம் இருக்க வேண்டும் என்று மட்டுமே பொருள் படும். அந்தக் காலம் படபட என்று ஓடி விட்டால் அப்புறம் அவனை எப்படி அனுபவிப்பது?

    அதனால் தான் ஒழிவில் காலம் எல்லாம் என்கிறார் ஆழ்வார்.
    ஓய்வு ஒழிச்சல் இல்லாத காலம்...
    உணர்வோடு இருக்கும் காலம் மட்டுமல்ல...தூங்கும் காலத்திலும் கூட...நம்மை நாமே மறந்திருக்கும் காலங்களில் கூட! அது தான் ஒழிவில் காலம்!

    தன்னை அறியாக் காலத்திலும், அவனை அறியுமாறு அவனுக்கு ஆட்பட்டுக் கொண்டே இருப்பது....வழுவிலா அன்புக்கு அடிமையாவது...அதை "ஓழிவில்" கால்மெல்லாம் செய்ய வேண்டும் என்பதே ஆழ்வாரின் உள்ளக் கிடக்கை!

    அலர்மேல் மங்கை மட்டும் தான் - அகலகில்லேன் என்று சொல்லுவாளா?
    ஒழிவில் காலம் எல்லாம் என்று அடியேனும் சொல்கிறேன் என்று தாயாருக்குப் போட்டியாக வருகுது இந்த மாறன் குழந்தை! :-)

    //திருவேங்கடத்து
    எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே//

    அப்பாவுக்கு அப்பாவுக்கு அப்பா! = முப்பாட்டன்!
    திருவேங்கடமுடையான் அவ்வளவு வயசானவனா? அவனுக்கா ஆண்டாள் என்னும் கட்டிளங்கன்னி மேகத்தைத் தூது விடுத்தாள்? அப்புறம் ஏன் ஆழ்வார் அப்படிச் சொல்கிறார்?

    குமரன்...கன்டினியூ ப்ளீஸ்! :-)

    ReplyDelete
  11. நம்மாழ்வார் திருவடிகளே சரணம்...

    குமரன்,

    பெரியவர்களான ஜிரா/கே.ஆர்.எஸ் பதிவுகளிடையே என் பதிவுக்கும் லின்க் கொடுத்து பீடத்தில் அமர்த்தியதற்கு நன்றி..

    சிலர் பீடத்தில் அமர நான் அருகதையற்றவன் என்கின்றனர்... நீங்க கேட்காம தந்ததுக்கு நன்றிஸ் :)

    ReplyDelete
  12. த்ராவிட சிசு என்று யார், யாரைச் சொல்லியிருக்காங்க தெரியுமா? :)

    ReplyDelete
  13. தமிழ்மறைமுனிக்கு இன்று,
    கந்தனுக்கு இன்று,
    குமரனுக்கு என்று?
    அடியேனுக்கும் இன்று...:-)

    ReplyDelete
  14. ஜீவா. நீங்கள் பிறந்தது வைகாசி விசாகத்தன்றா? பிறந்த நாள் வாழ்த்துகள் ஜீவா.

    அடியேன் பிறந்தது பங்குனி உத்திரத்தன்று.

    ReplyDelete
  15. ஆகா, நல்ல பொருத்தம்!

    ReplyDelete
  16. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், ஜீவா!

    //தன்னை அறியாக் காலத்திலும், அவனை அறியுமாறு அவனுக்கு ஆட்பட்டுக் கொண்டே இருப்பது....வழுவிலா அன்புக்கு அடிமையாவது...//

    அருமையான விளக்கம்! குமரா, கண்ணா, முப்பாட்டனுக்குரிய விளக்கமும் விரைவில் தருமாறு பணிக்கிறேன்!

    ReplyDelete
  17. முருகனுக்கு என்ன பரிசுன்னு சிவக்கொழுந்து சொன்னாங்களா? :)

    முருகனருள் எல்லாருக்கும் உண்டு குமரன். நான் கொஞ்சம் உரிமை எடுத்துக்குவேன். அவ்வளவுதான். :)

    ReplyDelete
  18. யார் முதலில் இட்டால் என்ன இரவி, அடியேன் இட முடியாத மாதிரி ஆகிவிட்டதே என்பது தான் என் வரையில் குறை. :-) பதிவை நீங்கள் முதலில் பதித்திருந்தால் ஏன் இராகவனின் இடுகை உங்கள் இடுகைக்கு முன்னர் வருகிறது பதிவில்?

    நீங்கள் முருகனா? சரி தான். எல்லாமும் நீங்களே ஐயா. இதில் என்ன குறை? :-)

    உங்களுக்குக் கனியைத் தராமல் மூத்த பிள்ளைக்குத் தர நான் அம்மையப்பனும் இல்லை. இராகவப்பெருமாளுக்குத் தர நான் சபரியும் இல்லை. நீங்கள் இருவரும் உதிர்க்கும் இனிய கனிகளை பொறுக்கி ஊதி ஊதி உண்ணும் ஒளவை. :-)

    ReplyDelete
  19. இவ்வளவு விளக்கம் சொன்னவர் திருவேங்கடத்து ஆயன் எப்படி எந்தை தந்தை தந்தை ஆனான் என்றும் சொல்லியிருக்கலாமே இரவிசங்கர். விளக்கங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  20. //முருகனுக்கு என்ன பரிசுன்னு சிவக்கொழுந்து சொன்னாங்களா? :)//

    இதென்ன ப்ரயோகம் சிவக்கொழுந்து, மரிக்கொழுந்து மாதிரியில்ல இருக்கு? :))

    ReplyDelete
  21. எந்த பீடத்துல உங்களுக்கு இடமில்லைன்னு யாரு சொன்னாங்க மௌலி? நான் இன்னும் அதைப் படிக்கலைன்னு நினைக்கிறேன்.

    திராவிட சிசுன்னு யாரு யாரைச் சொல்லியிருக்காங்கன்னு நல்லாவே தெரியுமே. தமிழ்க்குழந்தை என்ற பொருள் தான் அந்த சொற்றொடருக்குன்னு சொன்னா கேட்டுக்காம அதைத் திரிச்சு ஆதிசங்கரர் சம்பந்தப் பெருமானை கேவலப்படுத்துறதுக்காக அப்படி திராவிட சிசுன்னு சொன்னாருன்னு அறிவார்ந்த பகுத்தறிவுவாதிகள் சொல்லிக்கிட்டு திரியிறதும் தெரியும். :-)

    ReplyDelete
  22. கவிநயா அக்கா. கண்ணபிரான் இரவிசங்கருக்குத் தான் தெரியும் அந்த விளக்கம். அடியேன் அறியேன்.

    ReplyDelete
  23. இராகவன்,

    ரெண்டு மூனு நாளா சன் தொலைக்காட்சி 'திருவிளையாடல்' தொடரில் குழந்தை குமரன் செய்யும் குறும்புகளைக் காட்டுகிறார்கள். உங்கள் பின்னூட்டம் பார்த்த பின்னர் நேற்று அவளிடம் கேட்டேன். ஒரு நொடி சிந்தித்துவிட்டு 'இப்போது எனக்கு முருகனை நினைத்தால் அந்த குறும்பு செய்யும் கெட்ட பையன் தான் நினைவுக்கு வருகிறான். கொஞ்ச நாள் கழித்து எனக்கு முருகனை நினைத்தால் அவன் நல்ல பையன் என்று தோன்றும். அப்போது சொல்கிறேன்' என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள். குறும்பு செய்த அந்த நண்பனுக்கு இப்போதைக்கு எந்த பரிசும் இல்லை என்று தான் நினைக்கிறேன். :-)

    ReplyDelete
  24. அதுவா மௌலி? இராகவனுக்கு என் மகளின் வடமொழிப் பெயரைச் சொல்ல வாயெழுவதில்லை. கொஞ்சம் கடினமாக இருக்கிறது என்று அவள் பெயரைச் சிவக்கொழுந்து ஆக்கிவிட்டார். அவ்வளவு தான். அவரும் அந்தப் பெயரைச் சொல்லியே கேட்பார். நானும் பதில் சொல்வேன். :-)

    ReplyDelete
  25. // கொஞ்சம் கடினமாக இருக்கிறது என்று அவள் பெயரைச் சிவக்கொழுந்து ஆக்கிவிட்டார்//

    அடப்பாவமே...அந்த அழகான பெயரையா சொல்ல வரல்ல....
    இது வேணுமின்னு செய்யறது \...ஒண்ணும் சொல்லறதுக்கில்ல.. :-)

    ReplyDelete
  26. //ஒரு நொடி சிந்தித்துவிட்டு 'இப்போது எனக்கு முருகனை நினைத்தால் அந்த குறும்பு செய்யும் கெட்ட பையன் தான் நினைவுக்கு வருகிறான். கொஞ்ச நாள் கழித்து எனக்கு முருகனை நினைத்தால் அவன் நல்ல பையன் என்று தோன்றும். அப்போது சொல்கிறேன்' //

    சுப்பரு.... பெயருக்கேற்ற மாதிரி ஒளியுடன் இருக்கான்னு தெரியுது...த்ருஷ்டி சுத்திப் போடச்சொல்லுங்க குமரன்...:-)

    ReplyDelete
  27. //எந்த பீடத்துல உங்களுக்கு இடமில்லைன்னு யாரு சொன்னாங்க மௌலி? நான் இன்னும் அதைப் படிக்கலைன்னு நினைக்கிறேன்.//

    இதை நீங்க எங்கும் படிக்க முடியாது குமரன்.... :)

    யாரோ சொன்னது போல 'புரிபவர்க்கு புரியும்'.. :-)))

    ReplyDelete
  28. ஆமா. குட்டிப் பொண்ணுக்குச் சுத்திப் போடுங்க. பாவம் (அந்தக்)குமரன். அருமையான பரிசு போச்சே! இதுக்குத்தான் சமர்த்தா இருக்கணும்கிறது :)

    ஔவைப் பாட்டி பாடம் நல்லாருந்தது, நேத்து :)

    ReplyDelete
  29. //இது வேணுமின்னு செய்யறது \...ஒண்ணும் சொல்லறதுக்கில்ல.. :-)//

    அவரு பெங்களூரு வராமலேயா போயிடுவார்?! அப்படி வர்றப்ப என் சார்பா நாலு சாத்து சாத்துங்க. :-)

    ReplyDelete
  30. மௌலி, நீங்க ரெண்டு பேரு சொன்ன மாதிரியே அவளைத் தூக்கிச் சுத்திப் போடறேன் கவிநயா அக்கா. தரையில போடவா மெத்தென்ற பஞ்ச சயனத்துல போடவா? அதையும் சொல்லிடுங்க. தம்பியைத் தூக்கி சுத்துறப்ப எல்லாம் அவளையும் தூக்கி சுத்தணும்ன்னு ஏற்கனவே வம்பு பண்ணிக்கிட்டு இருக்கா. :-)

    ReplyDelete
  31. அச்சோ! புள்ளயச் சுத்தி யாராச்சும் தரையில போடுவாங்களா? திருஷ்டிதானே சுத்தச் சொன்னோம்? அப்படியே அவளைச் சுத்தினாலும் பஞ்சணையிலதான் (ரொம்ம்ப மெதுவா) போடணும். இதுல கேள்வி வேறயா :)

    ReplyDelete
  32. பதற வேண்டாம் அக்கா. அப்படியே தரையில போட்டாலும் அடி படாது. இங்கே தான் தரையும் மெத்து மெத்துன்னு இருக்கே. :-)

    ReplyDelete
  33. //அவரு பெங்களூரு வராமலேயா போயிடுவார்?! அப்படி வர்றப்ப என் சார்பா நாலு சாத்து சாத்துங்க.//

    சொல்லிட்டீங்கல்ல, போட்டு தாக்கிடமாட்டோம்...ஆனா என்ன மனுஷன் ஏதோ ஜிம்முக்கெல்லாம் போறதா சொல்றாரு, அதான் கொஞ்சம் பயமாயிருக்கு :))

    ReplyDelete
  34. //அச்சோ! புள்ளயச் சுத்தி யாராச்சும் தரையில போடுவாங்களா? திருஷ்டிதானே சுத்தச் சொன்னோம்? அப்படியே அவளைச் சுத்தினாலும் பஞ்சணையிலதான் (ரொம்ம்ப மெதுவா) போடணும். இதுல கேள்வி வேறயா :)//

    ரீப்பிட்டே!!!!

    // தம்பியைத் தூக்கி சுத்துறப்ப எல்லாம் அவளையும் தூக்கி சுத்தணும்ன்னு ஏற்கனவே வம்பு பண்ணிக்கிட்டு இருக்கா.//

    ஹல்லோ அதவிட என்ன பெருசா உங்களூக்கு பிளாக்கற வேலை... குழந்தை கேட்டா பண்ணுவீங்களா...அத விட்டுப்புட்டு ஏதோ கதை எழுதிக்கிட்டிருக்காரு....

    :-)))

    ReplyDelete
  35. // மதுரையம்பதி said...

    // கொஞ்சம் கடினமாக இருக்கிறது என்று அவள் பெயரைச் சிவக்கொழுந்து ஆக்கிவிட்டார்//

    அடப்பாவமே...அந்த அழகான பெயரையா சொல்ல வரல்ல....
    இது வேணுமின்னு செய்யறது \...ஒண்ணும் சொல்லறதுக்கில்ல.. :-) //

    ஆமாங்க. வேணும்னுதான் செய்றது. குமரனின் நட்பும் கேள்மையும் வேணும்னுதான் செய்றது. :) அதுல ஒங்களுக்கு எதுவும் பிரச்சனை இருக்கா? :D

    ReplyDelete
  36. // குமரன் (Kumaran) said...

    //இது வேணுமின்னு செய்யறது \...ஒண்ணும் சொல்லறதுக்கில்ல.. :-)//

    அவரு பெங்களூரு வராமலேயா போயிடுவார்?! அப்படி வர்றப்ப என் சார்பா நாலு சாத்து சாத்துங்க. :-) //

    ஆகா... ஆகா.. என்ன கொடுப்பினை. கொடுப்பது குமரன் என்றால் எதையும் ஏற்பது எனக்கு உவப்பே :)

    ReplyDelete
  37. என்னடா தலைவர் ஒன்னும் சொல்லலையே இன்னும்ன்னு பாத்துக்கிட்டு இருந்தேன் இராகவன். நீங்க இப்படி வேணும்ன்னே செய்யிறதால தான் என் நட்பையும் கேள்மையையும் (அப்படின்னா என்னங்க?) உறுதிபடுத்திக்கிறதுக்காக நாலு சாத்து சாத்தச் சொன்னேன். :-)

    ReplyDelete
  38. //ஹல்லோ அதவிட என்ன பெருசா உங்களூக்கு பிளாக்கற வேலை... குழந்தை கேட்டா பண்ணுவீங்களா...அத விட்டுப்புட்டு ஏதோ கதை எழுதிக்கிட்டிருக்காரு....
    //

    மௌலி. இத நீங்க சொன்னீங்களா என்னோட தங்கமணி சொன்னாங்களான்னு தெரியலையே. அவங்க குரல்ல இது கேட்டுச்சே/கேக்குதே!!! :-)

    ReplyDelete
  39. //இத நீங்க சொன்னீங்களா என்னோட தங்கமணி சொன்னாங்களான்னு தெரியலையே. அவங்க குரல்ல இது கேட்டுச்சே/கேக்குதே!!! :-)//

    சூப்பரு...:-)

    அண்ணிக்கு என் வணக்கங்களை சொல்லிடுங்க.. :)

    ReplyDelete
  40. //ஆமாங்க. வேணும்னுதான் செய்றது. குமரனின் நட்பும் கேள்மையும் வேணும்னுதான் செய்றது. :) அதுல ஒங்களுக்கு எதுவும் பிரச்சனை இருக்கா?//

    எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல சாமி!!! :-)

    குமரன், எனக்கு ஒரு சந்தேகம்...உங்க நட்பு வேணுமுன்னா நீங்க வச்ச பெயரை மாற்றணுமுன்னு ஏதும் இருக்கா?...எனக்கு சொல்லலை?.


    கேள்மை விளக்கம் ப்ளிஸ்..

    ReplyDelete
  41. //ஆகா... ஆகா.. என்ன கொடுப்பினை. கொடுப்பது குமரன் என்றால் எதையும் ஏற்பது எனக்கு உவப்பே :)//

    ஹல்லோ!, கொடுக்கச் சொன்னதுதான் குமரன்....கொடுக்கப் போவது நான் அரெஞ்ச் பண்ணும் ஆட்கள்தான். எனவே வருமுன் சொல்லிவிட்டு வரவும்....ஆட்டோ/ஆள் எல்லாம் ஏற்பாடு பண்ணனும்...:-)

    ReplyDelete
  42. அதுவா மௌலி? நான் வச்ச பேரை மொழி பெயர்த்துச் சொன்னாலும் நான் ஏத்துக்கிடணும். அது தான் என்னோட நட்புக்கு ஒரு தேர்வு போல. நான் ஒன்னும் சொல்லாததால என் நட்பு உறுதியாகுது. புரியுதா? :-)

    கேள்மைன்னா என்னன்னு செஞ்சொற்வல்லவரே வந்து சொல்லுவார். நானும் இணைய அகராதியைப் பார்த்துட்டேன். என்னன்னு தெரியலை. அவர் தட்டுப்பிழை விட்டுருப்பார்னு நினைக்கிறேன். அப்படின்னா நட்புக்கு இன்னொரு சொல்லான கேண்மையை கேள்மைன்னு தட்டிட்டார். அம்புட்டுத் தான்.

    ReplyDelete
  43. 'சரி. முருகனுக்கு என்ன பரிசுன்னு முடிவு பண்ணியாச்சா?'

    'ம்ம்ம். என்னோட தோடு கொடுக்கலாமா?'

    'கொடுக்கலாமே. எந்தத் தோடு?'

    'சும்மா முருகனுக்குக் காமிக்கத் தானே?'

    'இல்லை. முருகன் எடுத்துக்கிட்டுப் போற மாதிரி ஒரு பரிசு குடுக்கணும்'

    'ம்ம்ம்ம். அம்மாவோட தோடு குடுக்கலாமா?'

    'குடுக்கலாம்.'

    'ம்ம்ம். பசங்க தோடு போடமாட்டாங்களே?'

    'முருகன் போடுவார். போட்டிருக்கார் பாரு'

    'அப்படின்னா புதுசா தோடு வாங்கி குடுக்கலாம். அம்மா தோடும் என் தோடும் பொண்ணுங்க தோடு. முருகனுக்கு வேணாம்'

    'சரி. இன்னைக்கு வாங்கிட்டு வரலாம்'

    ஆக முருகனுக்குப் பிறந்த நாள் பரிசு தோடுன்னு முடிவாகியாச்சு. தோடுடைய செவியனின் திருக்குமரனும் தோடுடைய செவியனே. :-)

    ReplyDelete
  44. ஆஹா. குமரன் சமர்த்தாயிட்டாப்ல :)

    //'சும்மா முருகனுக்குக் காமிக்கத் தானே?'//

    ச்சோ ச்வீட்! :)

    ReplyDelete
  45. இந்த இடுகையில இருக்கிற முருகன் படத்தைக் காமிச்சு கேட்டேன். இதுல ஞானப்பழம் போல இருக்காரு போல. அதான் நல்ல பையன் ஆயிட்டாரு. :-)

    படையலை (நைவேத்தியத்தை) சாமி முன்னாடி வச்சு காமிச்சுட்டு எடுத்துக்குறோம் இல்ல அந்த மாதிரின்னு நெனைச்சுட்டா போலிருக்கு. :-)

    ReplyDelete
  46. //அதுவா மௌலி? நான் வச்ச பேரை மொழி பெயர்த்துச் சொன்னாலும் நான் ஏத்துக்கிடணும். அது தான் என்னோட நட்புக்கு ஒரு தேர்வு போல. நான் ஒன்னும் சொல்லாததால என் நட்பு உறுதியாகுது. புரியுதா? :-) //

    ஓ சூப்பரா புரியுது.. :))

    ReplyDelete
  47. //நானும் இணைய அகராதியைப் பார்த்துட்டேன். என்னன்னு தெரியலை. அவர் தட்டுப்பிழை விட்டுருப்பார்னு நினைக்கிறேன். அப்படின்னா நட்புக்கு இன்னொரு சொல்லான கேண்மையை//

    ஓ அப்படியா?...ஆமாம் இணைய அகராதின்னதும் நினைவு வருது....கே.ஆர்.எஸ் கூட ஏதோ வடமொழி அகராதி லின்க் பத்தி சொன்னார்...எனக்கு அனுப்ப முடியுமா ரெண்டு லின்க்கும் ?

    ReplyDelete
  48. //படையலை (நைவேத்தியத்தை) சாமி முன்னாடி வச்சு காமிச்சுட்டு எடுத்துக்குறோம் இல்ல அந்த மாதிரின்னு நெனைச்சுட்டா போலிருக்கு. :-)//

    சூப்பர்......அப்படித்தான் நினைச்சுருக்கும் குழந்தை...இன்னும் கேட்டுப் பாருங்க...அவள் மொழியிலேயே அவள் அதைச் சொல்வாள்....அழகுதான்..

    ReplyDelete
  49. //ஆக முருகனுக்குப் பிறந்த நாள் பரிசு தோடுன்னு முடிவாகியாச்சு. தோடுடைய செவியனின் திருக்குமரனும் தோடுடைய செவியனே. :-)//

    ஆமாம்...உண்மைதானே...முருகன் பிறப்பின் அவசியத்தை உணரும் தேவர்கள், அப்போது சிவ அம்சமாக ஒருவர் வேண்டும் என வேண்டினராம்...

    ReplyDelete
  50. //'ம்ம்ம். என்னோட தோடு கொடுக்கலாமா?'

    'கொடுக்கலாமே. எந்தத் தோடு?'

    'சும்மா முருகனுக்குக் காமிக்கத் தானே?'

    'இல்லை. முருகன் எடுத்துக்கிட்டுப் போற மாதிரி ஒரு பரிசு குடுக்கணும்'

    'ம்ம்ம்ம். அம்மாவோட தோடு குடுக்கலாமா?'

    'குடுக்கலாம்.'

    'ம்ம்ம். பசங்க தோடு போடமாட்டாங்களே?'//

    என்ன அப்ஸர்வேஷன் பாருங்க...தன்னிடமிருந்து தர முதலில் ரெடி...அப்பறமா அம்மாவோடது, அப்பறம் புதியது....ஸ்டேஜ் பை ஸ்டேஜ் அந்த குழந்தையின் திங்க்கிங்..:)

    கவிநயாக்கா சொன்ன மாதிரி ச்சோ ச்வீட்...:)

    ReplyDelete
  51. அப்பாடி இன்னைக்கு குமரன் பதிவுல 51, மொய் எழுதியாச்சு :-)

    ReplyDelete
  52. //அப்பாடி இன்னைக்கு குமரன் பதிவுல 51, மொய் எழுதியாச்சு :-) //

    அப்ப நான் 52-க்கு எடுத்துட்டுப் போனா? 101 எழுதுவீங்களா? :)))

    ReplyDelete
  53. Sir

    Nammaazvaar's birthday falls on Vaikasi Visakam. Ok. Does Murugan's birthday too?

    In Tirchendur and other Murugan temples, this day is celebrated. But I dont think it is celebrated as his birthday.

    From Tiruchendur to the birth place of Nammaazvar, it is just a 45 minute-drive. On the same Vaikaasi Visakam day, in the azvaar's birth place (Azvaar Thirunagari and the temple where he got his revelation after a 14- year meditation as a child, i.e. in Srivaikuntam), a 10-day festival begins for this Azvaar.

    Could you verify whether Murugan, too, has his birthday on the same day? And, for what purpose, the Vaikaasi Visakam is celebrated in his temples in TN, if not for celebrating his birthday?

    As for reading the paasurams of any aazvaar reproduced by bloggers, I get bored. Because, they can be read in any anthology; and the meanings, too, (you have added just the plain meanings) can be read there, because, usually, the paasurams are printed along with the meaning opposite side for convenience.

    The best way to remember Aazvaars is to bring out some understanding at your personal level (One need not fear the wrath of any one else for doing that!). Take a paasuram; and tell us how you have understood it at your personal level.

    I am sure, an ocean of wealth is awaiting such a reader who is willing to read it and get a personal experience experience. Please remember, religion is a personal experience in the ultimate analysis!

    I am writing this, because I have been browsing many blogs maintained by the so-called aazvaars fans and found that all of them reproduce what we already know.

    Make a try, learned Sir.


    karikulam

    ReplyDelete
  54. திரு.கரிகுலம்,

    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள். இரு கருத்துகளை வைத்திருக்கிறீர்கள்.

    1. வைகாசி விசாகம் நம்மாழ்வாரின் பிறந்த நாள் தான். திருக்கோவில்களிலும் அப்படியே கொண்டாடப்படுகிறது. திருமுருகன் திருக்கோவில்களிலும் வைகாசி விசாகம் கொண்டாடப்பட்டாலும் அது முருகப்பெருமானின் பிறந்த நாள் தானா?

    வலைப்பதிவில் எழுத வருவதற்கு முன் வரை வைகாசி விசாகம் முருகப்பெருமானுக்கு உகந்த நாள் என்ற புரிதல் மட்டுமே இருந்தது. அது முருகப்பெருமானின் பிறந்த நாள் என்ற புரிதல் வலைப்பதிவுகளில் இருந்தே பெற்றேன். எங்கு எப்போது அந்தப் புரிதல் கிடைத்தது என்ற தெளிவில்லை. நன்கு தெளிவித்துக் கொள்ளாமல் இதனைச் சொன்னதற்கு மன்னிக்கவும். பிள்ளையார் சதுர்த்தியையும் பிள்ளையாரின் பிறந்த நாள் என்றொரு கருத்து நிலவுகிறது. அது சரி தானா? உங்கள் கருத்து என்ன?

    இந்த இடுகையைப் படிக்கும் வலையுலக நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் நம் இருவருக்கும் பதிலைத் தருவார்கள் என்று நம்புகிறேன்.

    2. ஆழ்வார்களின் அருளிச் செயல்களுக்கு மரபைச் சார்ந்த விளக்கங்களே தரப்படுகின்றன. பாசுரங்களைப் படிக்கும் போது தன்னளவான அனுபவங்கள் கிடைக்குமே; அவற்றைப் பேசலாமே? ஏன் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக இருக்க வேண்டும்?

    இதற்கு பல நிலைகளில் பதில்கள் தோன்றுகின்றன. ஒவ்வொன்றாகச் சொல்லி வருகிறேன்.

    என்னுடைய அறிமுகத்தை (ப்ரொபைலை) பார்த்தால் எனது மற்ற பதிவுகளையும் பார்க்கலாம். திருவாசகத்திற்கு ஒரு பதிவு இருக்கிறது. அதில் ஒவ்வொரு பாட்டையும் எடுத்துக் கொண்டு முதல் இடுகையாக மரபின் அடிப்படையிலான விளக்கத்தையும் அடுத்த இடுகையில் தன்னனுபவ விளக்கத்தையும் தந்து கொண்டிருக்கிறேன். (கொண்டிருந்தேன் என்று சொல்லவேண்டும். அந்தப் பதிவில் எழுதி வெகு நாட்களாகிவிட்டன). அங்கு எழுதுவது போன்றே திருப்பாவைக்கும் பெரியாழ்வார் பாசுரங்களுக்கும் எழுத எண்ணியே 'கோதை தமிழ்', 'விஷ்ணு சித்தன்' என்ற இரு பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். அங்கும் அவ்வளவாக அண்மையில் எழுதவில்லை. தங்கள் கருத்தை இறைவனின் நியமனமாகக் கொண்டு விரைவில் இம்மூன்று பதிவுகளிலும் எழுத வேண்டும்.

    அடுத்த நிலையிலான பதில்கள் இங்கே:

    1. தற்கால இளைஞர்களுக்கு பழந்தமிழ் இலக்கியங்கள் மீதோ சமய இலக்கியங்கள் மீதோ ஆர்வமும் பற்றும் அவ்வளவாக இல்லை. நிறைய பேர் கவிதை எழுதுகிறார்கள். ஆனால் அப்படி எழுதும் கவிதைகள் இன்னும் நிறைய படித்தால் மேம்படும் என்ற உணர்வு இல்லை. போரடிக்கும் என்ற முன்முடிவுகள் நிறைய இருக்கின்றன. அந்த வகையில் பாசுரங்களுக்கும் பழந்தமிழ் பாடல்களுக்கும் முதலில் அறிமுகம் தேவையாக இருக்கின்றன. அதனால் முதலில் நேரடிப் பொருளை எழுதி அதனையும் முடிந்த வரை எளிமையாக எழுதினால் அவர்களது ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமையும். நண்பர்களில் சிலர் அந்தத் தொண்டை மிக அருமையாகச் செய்து வருகிறார்கள்.

    2. ஆழ்வார் அருளிச்செயல்களுக்கு முன்னோர் செய்த வியாக்கியானங்கள் மிக மிக அருமையாக இருக்கின்றன. நாம் சொந்தமாக என்ன தான் புரிந்து அனுபவித்துக் கொள்ள முயன்றாலும் அவர்கள் அனுபவித்துச் சொன்ன அளவிற்கு ஆழமாகச் செல்ல முடியுமா என்பது ஐயமே. அந்த வகையில் மரபான விளக்கங்களைப் படிக்கும் போது அவற்றில் ஆழங்கால் பட்டு அவற்றை மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் பலமுறை விளக்கங்கள் எழுதப்படுகின்றன.

    3. அப்படியே தன்னளவிலான அனுபவங்களை எழுதுவதும் மறுக்கப்படவில்லை. அப்படி ஆழங்கால் பட்டு அனுபவித்து எழுதுவது ஊக்குவிக்கப்பட்டிருக்கிறது. அந்த அளவிற்கு மொழி அனுபவமும் இறை அனுபவமும் இருக்கிறதா என்பதே தயக்கத்திற்குக் காரணம். ஆனாலும் பாற்கடலை பருகத் துடிக்கும் பூனையாக இறங்கிவிட்டோம்.

    ReplyDelete
  55. I have read your reply. Am sorry to post a late response.

    It appears from your message that you take the interpretation of paasurams (viyakkiyanagakal or padis) as verbal inerrancies.

    It is like Koran of Muslims or the bible of Christians. The Muslim believe that the meaning of Koran should never be altered; that is called verbal inerrancy. For Christians, the Bible is gospel truth. Every word counts as a word of God.

    I dont think such rigidity or verbal inerrancy is accepted and followed by Hindus.

    Dont mistake me for saying that the padis (interpretations) of paasurams should be rejected; or treated lightly.

    Please bear always in mind: the paasurams of alvaars are no body's inalienable properties. The Brahmins may have such notions to themselves, perhaps. But it is a wrong notion.

    The alvaars never intended the paasurams to become the gospel of Vaishnava Tamils. They simply gave an outpouring of their feelings and emotions on their chosen God i.e Narayanan, in verses. After that, they left the world.

    I want to write more; but, on seeing a certain words of yours in Nammaalvaar's biography, I have to respond there and, in that response, my points will overlap the ones I am / and I will be making here, if I go on. So, I stop right now and go to your Nammaalvaar's biography.

    ReplyDelete
  56. கரிகுலம்/கரிக்குலம் ஐயா. (கரிகுலமா? கரிக்குலமா? கரிகுளம்/கரிக்குளமா? இது புனைபெயரா என்ற கேள்வியும் இருக்கிறது).

    உங்கள் பின்னூட்டங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் என் பதில்கள் தமிழில் இருப்பதில் உங்களுக்கு எந்த வித மறுப்பும் இருக்காது என்று எண்ணுகிறேன். நானும் ஆங்கிலத்தில் பதிலுரைத்தால் நல்லதெனில் சொல்லுங்கள். அப்படியே செய்கிறேன்.

    உங்கள் பின்னூட்டத்தைக் கண்ட பின்னர் மீண்டும் என் பதிலை ஒரு முறை படித்துப் பார்த்தேன். எங்கேயுமே முன்னோர் செய்த மரபு வழி விளக்கவுரையே (வியாக்கியானங்கள், படிகள்) முடிந்த முடிபான விளக்கங்கள் என்று சொன்னது போல் தெரியவில்லை. அப்படிப்பட்ட கருத்தும் எனக்கு இல்லை. முன்பே சொன்னது போல் தனிப்பட்ட அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன்; இனிமேலும் எழுதும் எண்ணம் கொண்டிருக்கிறேன். சொல்லவந்தது முன்னோர்கள் சென்ற ஆழத்திற்கு என்னாலும் செல்ல முடியுமா என்பது ஐயமே என்பது தான். ஆனால் முன்னோர்கள் சொன்னதே முடிந்த முடிபான விளக்கம் என்ற எண்ணம் சிறிதும் இல்லை. அப்படிப்பட்ட தோற்றத்தை என் பதில்கள் கொடுத்திருந்தால் மன்னிக்கவும்.

    மற்ற சமயத்தவர்களும் அவர்களது சமய நூற்களுக்குப் புதிய விளக்கங்களை (குறிப்பாக கிறிஸ்தவர்கள்/அமெரிக்கர்கள்) எடுத்து உரைப்பதைக் கண்டிருக்கிறேன். இந்திய சமய மரபில் (இந்து சமய மரபு என்றும் சொல்லப்படுவது) புதிய புதிய எண்ணங்களும் விளக்கங்களும் என்றென்றைக்கும் வந்து கொண்டே தான் இருக்கின்றன. இது தான் முடிந்த முடிபு; இதற்கு மேல் பேச முடியாது - என்று சொல்ல இயலாது. நானும் அந்த மாதிரி கருத்து கொண்டவனில்லை.

    படிகளை/வியாக்கியானங்களை/மரபு வழி விளக்கங்களைத் தள்ளிவிடவேண்டும் என்பது தங்கள் கருத்தாக இருந்து அதனை நீங்கள் சொன்னாலும் நான் தவறாக எடுத்துக் கொள்ள எதுவுமில்லை. தங்களளவில் அதற்குக் காரணங்கள் இருக்கலாம்/இருக்கும். நான் அறிந்த வரையில் (அது மிகவும் குறைவு) மரபு வழி விளக்கங்கள் புதிய கதவுகளைத் திறக்கின்றன. அதனால் அவற்றைத் தள்ளிவிட என்னால் இயலாது.

    ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் தனிப்பட்டவர்களின் சொத்து இல்லை என்பதில் ஐயமே இல்லை. பார்ப்பனர்களும் அவ்வாறு நினைப்பதாகத் தெரியவில்லை. ஆழ்வார்களுக்கு என்ன நோக்கம் இருந்தது என்பதைப் பற்றி தெரியாது. ஆனால் அவர்களின் பாசுரங்கள் வைணவத்திற்கு மட்டுமே உரியவை இல்லை; அந்த எல்லையையும் தாண்டிச் செல்லவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அது ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

    நம்மாழ்வாரின் திருக்கதையை எழுதியிருக்கும் இடுகையிலும் தங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். அங்கும் என் சொற்கள் தவறான தோற்றத்தைத் தந்திருந்தால் தங்கள் கருத்துகள் அந்தத் தோற்றத்தை மாற்ற எனக்கு ஒரு வாய்ப்பாக அமையும்.

    ReplyDelete
  57. கரிகுலம்/கரிக்குலம் ஐயா. (கரிகுலமா? கரிக்குலமா? கரிகுளம்/கரிக்குளமா? இது புனைபெயரா என்ற கேள்வியும் இருக்கிறது). //

    kuLam = pond. Not caste.
    jaathikaL emakku ila.

    உங்கள் பின்னூட்டங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் என் பதில்கள் தமிழில் இருப்பதில் உங்களுக்கு எந்த வித மறுப்பும் இருக்காது என்று எண்ணுகிறேன். நானும் ஆங்கிலத்தில் பதிலுரைத்தால் நல்லதெனில் சொல்லுங்கள். அப்படியே செய்கிறேன்.//

    Your Tamil is superb. About your English, I dont know. I have not come across it in your blog. I have problem in typing in Tamil. Hence, English. Please write only in Tamil.

    சொல்லவந்தது முன்னோர்கள் சென்ற ஆழத்திற்கு என்னாலும் செல்ல முடியுமா என்பது ஐயமே என்பது தான்//

    We need not compare ourselves with the past masters (the commentators). They are different. We are different. We can rely on them; accept them in toto; or seek their help in understanding the paasurams better. Yet, our look should be our own. This is my personal view. I don’t force it on anyone. Shakespeare did not write his plays imagining that one day, in future, his plays will be studied in Universities worldwide as part of PG syllabus. So also, the Aalvaars. They did not sing the paasurams imagining that one day, their verses will become part and parcel of each and every Tamil Vaishnavite home. It just happened!

    படிகளை/வியாக்கியானங்களை/மரபு வழி விளக்கங்களைத் தள்ளிவிடவேண்டும் என்பது தங்கள் கருத்தாக இருந்து அதனை நீங்கள் சொன்னாலும் நான் தவறாக எடுத்துக் கொள்ள எதுவுமில்லை. தங்களளவில் அதற்குக் காரணங்கள் இருக்கலாம்/இருக்கும். நான் அறிந்த வரையில் (அது மிகவும் குறைவு) மரபு வழி விளக்கங்கள் புதிய கதவுகளைத் திறக்கின்றன. அதனால் அவற்றைத் தள்ளிவிட என்னால் இயலாது.

    In explaining the aalvaar's paasurams, there are two ways being followed: general and, theological. Your commentaries or explanations in Tamils in Aalvaars' paasurams that you are posting in your blog, come under the general category; and here, I may suggest you follow what you feel, taking or relying on past commentators, as and how you like. I would never say, the past is to be rejected at all. The past is a good help. That is all!

    But, in theological interpretations, I am afraid, we can’t do anything. We have no right to interpret the paasurams theologically. The Vaishnava world of Tamils will protest it, as they did when the late writer Sujaatha was trying to interpret the paasruams theologically. At once, he stopped his act; and switched over to writing commentaries on them as literature only or general devotion.

    Such theological interpreations are meant for those devotees who worship only the Perumaal of Alvaars. They are pure Vaishvaites. They are a distinct people who follow the codes and modes as prescribed for them by their spiritual leader and guide Sri Ramaanujar. It was he who told them to make these paasurams compulsory for them in their daily worship at homes and temples. They, therefore, take these paasurams to be their sacred texts along with other texts which you know. Here, too, one sub-sect called Thenkalai gives primacy to the Naalaayiram over other texts. For these people, it is even wrong to treat the Naalaayiram as literature and feel elated over the language. In this aspect, they come closer to Muslims inasmuch as treating the paasruams as verbal inerrancies. For these pure Vaishnavite, your site will be an abhorrence to open and read, for you have equal reverence for and worship of many deities in Hindu pantheon. These Vaishnavaas are, as I have mentioned, supposed to reject all other gods and goddesses in the Hindu pantheon, about whom you are waxing eloquent. They can, however, take these gods and goddesses as secondary or assistants to Narayanan. The thenkalai even insists that the ThirumakaL is just a mediatrix between the Perumaal and the devotees. Not equal to Naarayanan!

    I dont think, you and I are like them. We are generalists; and we look it in a general way, although in a religious way, if not as literature.

    As regards your statement that the Bible is being interpreted by many people, it is correct. But the interpreators are trained pastors or evangelists who, the common Christians admire, respect and accept. Since there is a liberal culture among Christians, they don’t take anything seriously. But the same can’t be said about Muslims. There, misinterpretation or any interpretation is blasphemy; and fatwa for the head of the blasphemers will be issued!

    அவர்களின் பாசுரங்கள் வைணவத்திற்கு மட்டுமே உரியவை இல்லை; அந்த எல்லையையும் தாண்டிச் செல்லவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அது ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

    No doubt about it. The Naalaayiram is a rich heritage of Tamils worldwide. Any Tamil can say these paasurams are his own, just as Vaaluvars' or Sangam poets, and feel proud. As literature, a Tamil Muslim or a Tamil Christian can enjoy reading it, just as Justice M.M.Ismail read the Ramayanam. He became an erudite scholar in Kamba Ramayanam, as you know! Whether you know it or not, in your home city, there is a Christian by name Prof Joseph. He is in the Tamil department of MK University. His erudition of Aalvaars are so amazing that he was conferred on the title, ‘Vainavapperoli’ by no less a person than the Jeeyar of Srirangkam. His devotion to Aalvaars is so deep that he wanted to change his name. But the guru said, let your name be the same; and you continue to spread the words of Aalvaars. He married a fellow Christian, a teacher of Tamil in the same University. He married her only because her devotion to Alvaars matches his! They are Vaishnavites with Christian names! How wonderful!!

    As religious or devotional Hindu poetry, any Tamil speaking Hindu, can read them and feel as if it is his own. All Tamils are not strictly and purely Vaishnavites. They worship all Hindu gods and goddesses; some may concentrate on particular gods. Hindus are liberal.

    At the same time, we ought to remember that there is one sect of Tamil-speaking Hindus who are called Sri Vaishnavites in the sense they don’t accept any God other than Narayanan as the one and only God. To them, these paasurams are strictly religious texts. Because, they follow Aalvaars in rejecting all other gods and accepted only Narayanan. Aalvaars have condemned worship of other deities of Hinduism. I can quote a number of lines from them to corroborate my statement; but my message has already become too long.

    I hope you got the distinctions clear.

    நம்மாழ்வாரின் திருக்கதையை எழுதியிருக்கும் இடுகையிலும் தங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். அங்கும் என் சொற்கள் தவறான தோற்றத்தைத் தந்திருந்தால் தங்கள் கருத்துகள் அந்தத் தோற்றத்தை மாற்ற எனக்கு ஒரு வாய்ப்பாக அமையும்.

    That will be about Caste and Tamil society as obtained during their times in Tamilnadu. I hope to post after some time.

    Thank you, Sir, for giving the opportunity.

    ReplyDelete