Tuesday, May 20, 2008

தத்தியாடுதே தாவியாடுதே தத்தையோட நெஞ்சு....

தத்தியாடுதே தாவியாடுதே ஒரு தட்டார பூச்சி இன்று

சில்லல்லவா சில்லல்லவா காதல் நயகரா
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம் ...

தத்தியாடுதே தாவியாடுதே தத்தையோட நெஞ்சு
ஒரு தட்டார பூச்சி இன்று

தத்தியாடுதோ தாவியாடுதோ தத்தையோட நெஞ்சு
நான் டயல் செய்யும் நேரம் இன்று

இடஒதுக்கீடு உனக்காக இடை செய்தது
எந்தன் ஆடை நீயல்லவோ
இடஒதுக்கீடு எனக்காக இடைசெய்வது அந்த ராத்திரிப் பொழுதல்லவா
உன்னில் உருவான ஆசைகள் என் அன்பே
அந்த வெங்காய விலை போல இறங்காதது... (சில்ல்..)




புதிய ரத்தம் உதடு மொத்தம் பரவிட
இச் இச் என்றும் வழங்கவா
சொல் சொல் நீ சொல் அன்பே

விண்ணப்பம் நீ போடு இந்நாளிலே
கன்னங்கள் பதில் போடும் பின்னாளிலே

பதில் நான் வாங்க நாளாகுமா
அடி அம்மாடி ராசாங்கமா
என் ஆசைகள் எப்போது கைகூடும் யார் சொல்ல
காவேரி நீராகுமா (சில்ல்..)

3 comments:

  1. இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 28 ஏப்ரல் 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

    7 comments:

    கோவி.கண்ணன் said...
    அருமையான பாடல்கள்...என் விருப்பப் பாடல்களையே நீங்கள் மிகுதியாக வலை யேற்றுகிறீர்கள்.

    குமரன் நன்றி !

    Saturday, April 28, 2007 8:31:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    கண்ணன் அண்ணா. என் விருப்பப்பாடல்கள் உங்களுக்கும் விருப்பப்பாடல்கள் என்று அறிந்து மகிழ்ச்சி.

    (அப்பாடா. இதுலயாவது ஒத்துமை இருக்கே. :-) சும்மா என் மனத்தில் நினைத்தது. சீரியஸா எடுத்துக்காதீங்க. :-) )

    Saturday, April 28, 2007 9:12:00 AM
    --

    கோவி.கண்ணன் said...
    //கண்ணன் அண்ணா. என் விருப்பப்பாடல்கள் உங்களுக்கும் விருப்பப்பாடல்கள் என்று அறிந்து மகிழ்ச்சி.

    (அப்பாடா. இதுலயாவது ஒத்துமை இருக்கே. :-) சும்மா என் மனத்தில் நினைத்தது. சீரியஸா எடுத்துக்காதீங்க. :-) ) //

    என்னத்த சொல்றது.. இதே டிஸ்கியோட சொல்ல நினைத்தையே சொல்லிடிங்க
    :)

    சில ரசனைகள் ஒத்துப்போவது இயல்புதான் !

    Saturday, April 28, 2007 9:17:00 AM
    --

    மங்கை said...
    மனதை லேசாக்கும் பாடல்..

    நன்றி

    Saturday, April 28, 2007 10:08:00 AM
    --

    இராமநாதன் said...
    எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்கள்ல ஓண்ணு...

    ரொம்ப சியர்புல்லானது...

    ஹிந்தியிலயும் நல்லாருக்கும்.. கே சரா சரா.. புகார் படத்துல.. ஆகா அதுல மாதுரியோட ஆட்டம்...

    எங்கேயோ போயிட்டேனோ??? :)

    Saturday, April 28, 2007 10:43:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    என் மகளுக்கும் பிடித்த பாடல் மங்கை. :-)

    Saturday, April 28, 2007 11:11:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    இராம்ஸ். சினிமா பாட்டு போட்டா தான் பதிவு பக்கம் எல்லாம் வருவீங்களா? என்னமோ போங்க....

    சரி. சரி. வந்ததுக்கும் சொன்னதுக்கும் நன்றி. :-)

    Saturday, April 28, 2007 11:11:00 AM

    ReplyDelete
  2. நல்ல இசை என்று கேட்டிருக்கிறேன். இப்பிடியெல்லாம் தமிழில் வரிகள் இருக்கின்றதென்று தெரியாது. :-)

    ReplyDelete
  3. அட ஆமாம் கோகுலன். நீங்கள் சொன்ன பின்னர் தான் மீண்டும் பார்த்தேன். பொருள் விளக்கம் சொல்லுமளவிற்குத் தமிழ்ச் சொற்கள் இந்தப் பாடலில் இருக்கின்றன. குறைந்தது தத்தை, தட்டாரப் பூச்சி இவற்றிற்காவது விளக்கம் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. :-)

    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete