Wednesday, April 02, 2008

விவேக சிந்தாமணி - கடவுள் வணக்கம்


அல்லல் போம் வல்வினை போம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லை போம் போகாத் துயரம் போம் - நல்ல
குணமதிகமாம் அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக்
கணபதியைக் கைதொழுதக் கால்.

அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக் கணபதியைக் கை தொழுதக் கால் - அருணாசலம் என்னும் திருவண்ணாமலை கோபுர வாசலில் வீற்றிருக்கும் செல்வக் கணபதியை கை தொழுது கும்பிட்டால்

அல்லல் போம் - எல்லாவிதமான தடங்கல்களும் தொல்லைகளும் போகும்

வல்வினை போம் - என்ன செய்தாலும் பின் தொடர்ந்து தன் பயனைக் கொடுக்கும் நாம் செய்த நல்வினைத் தீவினைப் பயன்கள் அழிந்து போகும்

அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம் - பிறவிகள் எடுக்கக் காரணமான முன்வினைகளின் தொல்லை தீர்ந்து போகும்

போகாத் துயரம் போம் - என்றும் நீங்காமல் மனத்தில் நிற்கும் துயர நினைவுகள் எல்லாம் தெளிந்து போகும்

கெட்டவைகள் போகும். அது மட்டுமா

நல்ல குணம் அதிகமாம் - நல்ல குணங்கள் நம்மில் மேன்மேலும் பெருகும்.

அதனால் செல்வக் கணபதியை எந்நேரமும் வணங்குங்கள்.
****

விவேக சிந்தாமணி என்னும் இந்த நூல் அருமையாக இருக்கிறது. இதுவரை நான் படித்ததில்லை. ஞானவெட்டியான் ஐயா அவரது வலைப்பூவில் இந்த நூலில் உள்ளப் பாடல்கள் ஒவ்வொன்றாக எடுத்துப் பொருள் எழுதி வருகிறார். அவர் வலைப்பூவில் அந்தப் பாடல்கள் எல்லாவற்றையும் படித்த போது அவற்றை இன்னும் விளக்கமாகப் பொருள் கூறலாமே; சில பாடல்களை விளக்கும் போது கதையாகவும் சொல்லலாமே என்று ஒரு ஆசை எழுந்தது. ஐயாவிடம் அனுமதி கேட்டேன். 'நன்றாய் செய்யுங்கள். இதற்கு அனுமதி எதற்கு. அவற்றை நானும் படித்து அறிந்து கொள்கிறேன்' என்று அவருக்கே உரிய பெருந்தன்மையுடன் அனுமதி கொடுத்தார். இதோ செல்வகணபதியைக் கைதொழுது தொடங்குகிறேன். அவன் அருள் முன்னிற்கட்டும்.

***

இந்த இடுகை 'விவேக சிந்தாமணி' என்ற பதிவில் 22 பிப்ரவரி 2006 அன்று இடப்பட்டது. அப்புறம் தொடர்ந்து அந்தப் பதிவில் எந்த இடுகையும் இடவில்லை. இந்த ஒரே இடுகையை அங்கிருந்து கூடலுக்கு நகர்த்திவிட்டு அந்தப் பதிவை மூடிவிடுகிறேன்.

4 comments:

  1. இந்த இடுகை 'விவேக சிந்தாமணி' என்ற பதிவில் 22 பிப்ரவரி 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

    20 comments:

    சந்தோஷ் aka Santhosh said...
    நல்ல பதிவு குமரன்.நல்ல விளக்கமும் கூட.

    February 23, 2006 7:42 PM
    --

    சிவமுருகன் said...
    உங்கள் சாதனையின் மற்றொரு மைல் கல்.

    கனேசனின் அருள் என்றும் தொடரும் குமரனுக்கு.

    வாழ்த்துக்கள்.

    February 23, 2006 8:07 PM
    --

    johan -paris said...
    Inru kaalai veroru nanpar moolam Thanjai Peruvudaiyar tharsanam kidaithathu, saru pin ungal Sivakumaran GANESHAN thiruvuruvam kidaithathu; VELLI allava thiviya tharisanankal, manathi makilvikkirathu. thankal VEEVEAKA SINTHAMANI- kathaikalai avaludal ethir parkureen.
    Anpudan
    Johan-paris

    February 24, 2006 2:24 AM
    --

    ஞானவெட்டியான் said...
    அன்பு குமரன்,
    வாழ்க! வளர்க!!

    February 24, 2006 3:14 AM
    --

    Merkondar said...
    எனது தந்தை இந்த படிலையும் ஆற்றையும் நம்பலாம் சேலைகட்டிய மாந்தரை நம்ப கூடாது என்ற பாடலை அடிக்கடி பாடுவார்

    February 24, 2006 3:59 AM
    --

    குமரன் (Kumaran) said...
    நன்றி சந்தோஷ். பாடலே மிக எளிமை அதனால் விளக்கமும் எளிமையாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

    February 24, 2006 9:26 AM
    --

    குமரன் (Kumaran) said...
    வாழ்த்துக்களுக்கு நன்றி சிவமுருகன். அவன் அருளாலே எல்லாம் நடக்கிறது.

    February 24, 2006 9:26 AM
    ---

    குமரன் (Kumaran) said...
    ஜோகன். தஞ்சை பெருவுடையார் திருவுருவ புகைப் படங்களை அனுப்பியதற்கு மிக்க நன்றி. தங்களின் ஊக்குவிப்புக்கு நன்றி.

    February 24, 2006 9:29 AM
    --

    குமரன் (Kumaran) said...
    தங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆசிகளுக்கும் நன்றி ஐயா.

    February 24, 2006 9:29 AM
    --

    குமரன் (Kumaran) said...
    என்னார் ஐயா. அந்தப் பாடலை ஞானவெட்டியான் ஐயா பதிவில் படித்தேன்.

    February 24, 2006 9:30 AM
    --

    G.Ragavan said...
    நல்ல தொடக்கம் குமரன். இனிது நடக்கட்டும். சரி....ஆசிரியர் குறிப்பெல்லாம் குடுக்குறதில்லையா? விவேக சிந்தாமணியை எழுதியது யார்? இந்தப் பிண்ணனிகள்ளாம் சொல்றது...

    February 24, 2006 9:31 PM
    --

    G.Ragavan said...
    // சேலைகட்டிய மாந்தரை நம்ப கூடாது என்ற பாடலை அடிக்கடி பாடுவார் //

    என்னார் உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கக் கூடாதுதான். அதென்ன சேலைகட்டிய மாதரை? சுடிதார் போட்டால் நம்பலாமா? :-)

    February 24, 2006 9:32 PM
    --
    குமரன் (Kumaran) said...
    இராகவன். இதே கேள்விகளை இன்னொரு நண்பரும் கேட்டார். பதில்கள் எனக்குத் தெரியாது. ஞானவெட்டியான் ஐயா தான் சொல்லவேண்டும். அவரையே கேட்கிறேன்.

    February 25, 2006 4:52 AM
    --

    Anonymous said...
    Intha padalai Seergali Govindarajan avargal padi ketta gnabagam. Athu thana ithu endru theriyavillai.

    Kumaresh

    February 27, 2006 12:14 PM
    --

    குமரன் (Kumaran) said...
    இந்தப் பாடலை யாரும் பாடி இதுவரை நான் கேட்டதில்லை குமரேஷ். சீர்காழியார் பாடியிருக்கிறாரா தெரியவில்லை.

    February 27, 2006 6:33 PM
    --

    தி. ரா. ச.(T.R.C.) said...
    மிக நல்ல முயற்சி.தொடருங்கள். ஆனால் சில கருத்துக்கள் இப்போது நடைமுறைக்கு உத்துவருமா என்று தெரியவில்லை.அப்போதுஎவ் கருத்துக்களை கூறுகிறேன். தி. ரா. ச

    March 04, 2006 10:46 AM
    --

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் தி.ரா.ச. இதில் உள்ள பல கருத்துக்கள் இந்தக் காலத்திற்கு பொருந்தாதாகத் தான் எனக்கும் தோன்றியது. அவற்றையும் எழுதவா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றைப் பற்றி எழுதாமல் விட்டுவிடவும் வாய்ப்புண்டு.

    March 04, 2006 8:32 PM
    --

    தி. ரா. ச.(T.R.C.) said...
    குமரன்,
    கருத்துக்கள் கவியுனுடையது. நமக்கு அதை மாற்ற உரிமை கிடையாது. உள்ளது உள்ளபடியே கூறுங்கள்.போற்றுபவர்கள் போற்றட்டும். தூற்றுபவர்கள் தூற்றட்டும் போகட்டும் ஆசிரியருக்கே
    தி. ரா.ச

    March 05, 2006 3:58 AM
    --

    PositiveRAMA said...
    வணக்கம் குமரன் அய்யா அவர்களே இத்துணை நாட்கள் இந்த பொக்கிஷம் என் கண்ணில் படாது இருந்தது என் துர் அதிர்ஷ்டம் போலும்.

    அடியேன் நம்பிக்கை என்ற குழுமத்தை நடத்தி வருகிறேன். முத்தமிழ் குழுமத்தில் சிவமுருகன் வலைப்பூ மூலம் இங்கு வந்தேன். தங்கள் தொண்டு சிறக்கட்டும். நேரம் கிட்டுமெனில் எங்கள் நம்பிக்கைக்கு வந்து இறையமுதூட்ட அன்புடன் அழைக்கிறேன். positiverama@gmail.com
    http://groups-beta.google.com/group/nambikkai/

    May 25, 2006 4:31 AM
    --

    PositiveRAMA said...
    //என்னார் உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கக் கூடாதுதான். அதென்ன சேலைகட்டிய மாதரை? சுடிதார் போட்டால் நம்பலாமா? :-) //


    அதாவது சேல்(கண்) + அகட்டிய =>
    கண்களை அகட்டி சமிக்கை செய்யும் வேசியரை நம்பாதே என்பது பொருள்.

    May 25, 2006 4:36 AM

    ReplyDelete
  2. சேலை கட்டிய மாதர் என்ற தொடருக்கு நல்ல விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள் நம்பிக்கையாரே! நன்றிகள்.

    ReplyDelete