Friday, April 18, 2008

சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ?

தமிழ்மணம் சூடா இருக்கு; சூடா இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. அந்த சூடு தணிக்க என் பங்காக:

:-)

எந்த மனநிலையில் இருந்தாலும் இந்தப் பாடலைக் கேட்டால் மனம் அமைதி ஆகிவிடுகிறது. சிறந்த பாடல் வரிகள். நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

திரைப்படம்: என் சுவாசக் காற்றே
வெளிவந்த வருடம்: 1999
இயற்றியவர்: கவிப்பேரரசு வைரமுத்து
பாடியவர்: எம்.ஜி. ச்ரிகுமார்
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்

க்ளங்க் க்ளங்க் க்ளங்க் க்ளங்க்
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
க்ளங்க் க்ளங்க் க்ளங்க் க்ளங்க்
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி இரு துளி
சில துளி பல துளி
படபடபட தடதடதட சடசடசடவெனச் சிதறுது

சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ (சின்னச் சின்ன)

சக்கரவாகமோ மழையை அருந்துமாம் - நான்
சக்கரவாகப் பறவை ஆவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள்
இழுத்துப் பிடித்து விண்ணில் செல்வேனோ (சின்னச் சின்ன)




சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேன் துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்
பயிர் வேரினிலே விழுந்தால் நவ தானியமாய் விளைவாய்
என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்
அந்த இயற்கையன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது
அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது
இவள் கன்னியென்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது (சக்கரவாகமோ)

மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்புக்கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்
அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழ வந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடிக் கரையும் போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய்
கண்கள் மூடிக் கரையும் போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய்

ஓஹோஹோ ஓஹோ ஓஹோ ஓஹோஓஹோஹோ (3)

(சக்கரவாகமோ)

3 comments:

  1. இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 15 ஜூலை 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

    64 comments:

    கோவி.கண்ணன் said...
    நல்ல அருமையான புதுக் கவிதை நடை பாடல். வைரமுத்து எழுதியிருப்பார் என்று வரிகளை வைத்து ஊகிக்க முடிகிறது

    Saturday, July 15, 2006 2:14:00 AM
    --

    G.Ragavan said...
    பாடலை எழுதியவர் வைரமுத்துதான். நல்ல பாடல். ஸ்ரீகுமார் கொஞ்சம் மூக்கால் பாடியிருந்தாலும் சக்கரவாகமோ மழையை விரும்புமோ என்ற வரிகள் கேட்கையில் ஜிவ்வென்றிருக்கும். நல்ல பாடல்.

    Saturday, July 15, 2006 2:22:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    கோவி.கண்ணன் ஐயா. நீங்களும் இராகவனும் சொல்லியதாலும் எனக்கும் அப்படியே தோன்றுவதாலும் பாடலை இயற்றியவர் கவிப்பேரரசு என்று பதிவிலும் இட்டுவிட்டேன்.

    ஆமாம் ஐயா. அருமையான பாடல் வரிகள்.

    நடுவில் 'இவள் கன்னியென்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது'ங்கற வரி மட்டும் பாடலின் மற்ற வரிகளுடன் பொருந்தாத மாதிரி எனக்கு ஒரு உணர்வு.

    Saturday, July 15, 2006 2:29:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    என்ன இராகவன்? பாடுனதையே மூக்கால பாடுறதுன்னு சொன்னா உன்னிகிருஷ்ணன் பாடுறதை என்ன சொல்லுவீங்க? எனக்கு உன்னிகிருஷ்ணன் பாடல்கள் ரொம்பப் பிடிக்கும்; எங்க வீட்டுல அவர் மூக்கால பாடுறார்ன்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க. :-)

    Saturday, July 15, 2006 2:31:00 AM
    --

    கோவி.கண்ணன் said...
    //நடுவில் 'இவள் கன்னியென்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது'ங்கற வரி மட்டும் பாடலின் மற்ற வரிகளுடன் பொருந்தாத மாதிரி எனக்கு ஒரு உணர்வு. //

    நானும் இதை சுட்டிக்காட்டலாம் என்றிருந்தேன் ... பின்பு பார்வைக் கோளாறு என்று யாராவது சொல்லி விடப்போகிறார் களோ என்று தயங்கி விட்டுவிடேன். பரவாயில்லை நீங்கள் மனதில் பட்ட கெட்ட விசயங்களை பளிச் என்று சொல்கிறீர்கள். பாராட்டுக்கள்

    Saturday, July 15, 2006 2:34:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    கோவி.கண்ணன் ஐயா. இன்னைக்கு 'கட்டிப்புடி கட்டிப்புடிடா' பாட்டைத் தான் போடலாம்ன்னு இருந்தேன். ஆனா ஏற்கனவே தமிழ்மணம் சூடா இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்களே. நம்ம பங்குக்கு ஏன் இன்னும் சூட்டை ஏத்திவிடணும்ன்னு இந்தப் பாட்டைப் போட்டுட்டேன். ரெண்டுமே எனக்குப் பிடித்தப் பாடல்கள் தான். :-)

    இந்தப் பாடலில் நான் சுட்டிக்காட்டிய வரி பொருந்தவில்லை. ஆனால் கவிஞர் வேறு பாடலில் அந்த வரியை வைத்திருந்தால் நான் ஒன்றும் சொல்லியிருக்க மாட்டேன். இதில் தயங்குவதற்கு என்ன? போலி ஆன்மீகம்ன்னோ தப்பான பார்வைன்னோ பார்வைக்கோளாறுன்னோ யாராவது சொல்லிட்டுப் போறாங்க. நீங்க தானே இன்னைக்குச் சொன்னீங்க - போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே. நம்மைச் சொல்லலை. வேற யாரையோ சொல்றாங்கன்னு நெனைச்சுகிட்டா சூடு ஏறாது. இல்லீங்களா? :-)

    Saturday, July 15, 2006 2:39:00 AM
    --

    கோவி.கண்ணன் said...
    //போலி ஆன்மீகம்ன்னோ தப்பான பார்வைன்னோ பார்வைக்கோளாறுன்னோ யாராவது சொல்லிட்டுப் போறாங்க//
    நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் :))) உகு அல்ல

    Saturday, July 15, 2006 2:42:00 AM
    --

    கோவி.கண்ணன் said...
    மிட் நைட் மசாலா ?
    மணி என்ன ஆகிறது .... தூக்கம் வரவில்லையா ? இங்கு சிங்கையில் மாலை 3.40

    Saturday, July 15, 2006 2:44:00 AM
    --

    கோவி.கண்ணன் said...
    சூடுபட்டவங்களெல்லாம் ஒன்னும் சூட்டை தனிச்சிக்கிற மாதிரி தெரியல ... குளிர் காஞ்ச நம்பதான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். :)))

    Saturday, July 15, 2006 2:49:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    அதிகாலை 2:45 ஆகிறது. பதிவுகள் போட்டு நாலைந்து நாட்கள் ஆயிற்று. இன்றைக்கு இரண்டு பதிவுகளாவது போடவேண்டும் என்று 11 மணிக்கு உட்கார்ந்தேன். மற்றவர் பதிவுகளைப் படித்துவிட்டு இரண்டு பதிவுகளை இட்டுவிட்டு இதோ உறங்கப் போகிறேன்.

    தமிழ்மணம் இருக்க மிட்நைட் மசாலாவா?
    கரும்பு போன்ற தமிழ்மணத்தில் களிப்பதை விட்டுவிட்டு குரங்கு போன்ற மிட்நைட் மசாலா யாராவது பார்ப்பார்களா? :-)

    Saturday, July 15, 2006 2:50:00 AM
    --

    கோவி.கண்ணன் said...
    //மிட்நைட் மசாலா யாராவது //
    நானும் 'அந்த' மசாலவை சொல்லவில்லை ... தமிழ்மணத்தைத் தான் சொன்னேன் ... நான் கூட டிவி நியூஸ் கூட பார்பது குறைந்துவிட்டது :(((

    Saturday, July 15, 2006 2:52:00 AM
    --

    G.Ragavan said...
    இந்தப் படத்தில்

    கன்றும் உண்ணாது
    கலத்தினும் படாது
    நல்லான் தீம்பால்
    நிலத்து உக்காங்கு
    எனக்கும் ஆகாது
    என் ஐக்கும் உதவாது
    பசலை உணீஇயர் வேண்டும்
    திதலை என் மாமைக் கவினே

    என்ற சங்க வரிகள் இடம் பெற்றுள்ளன. மிகச் சிறப்பான கவிதையிது.

    Saturday, July 15, 2006 3:11:00 AM
    --

    G.Ragavan said...
    இந்தப் படத்தில்

    கன்றும் உண்ணாது
    கலத்தினும் படாது
    நல்லான் தீம்பால்
    நிலத்து உக்காங்கு
    எனக்கும் ஆகாது
    என் ஐக்கும் உதவாது
    பசலை உணீஇயர் வேண்டும்
    திதலை என் மாமைக் கவினே

    என்ற சங்க வரிகள் இடம் பெற்றுள்ளன. மிகச் சிறப்பான கவிதையிது.

    Saturday, July 15, 2006 3:11:00 AM
    --

    Vaa.Manikandan said...
    //க்ளங்க் க்ளங்க் க்ளங்க் க்ளங்க்//
    thala,
    what is this? ;)

    Saturday, July 15, 2006 5:00:00 AM
    --

    கோவி.கண்ணன் said...
    திரு குமரன் காலை வணக்கம்

    Saturday, July 15, 2006 9:43:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    நன்றி கோவி.கண்ணன். மாலை/இரவு வணக்கம் உங்களுக்கு. :-)

    Saturday, July 15, 2006 9:55:00 AM
    --

    இலவசக்கொத்தனார் said...
    //ஒரு கருப்புக்கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்//

    சூட்டைத் தணிக்கறேன் பேர்வழின்னு உங்க பங்குக்கு ஏத்தி விடறீங்களே. :)

    நல்ல பாடல். எனக்கும் பிடிக்கும்.

    Saturday, July 15, 2006 10:31:00 AM
    --

    பாலசந்தர் கணேசன். said...
    நன்றி குமரன் அவர்களே

    Saturday, July 15, 2006 11:07:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    இராகவன். நீங்க சொல்ற சங்ககாலப் பாடல்வரிகளை நானும் இந்தப் படத்தில் கேட்டிருக்கிறேன். சிறப்பான கவிதைன்னு சொல்லிட்டீங்க. ஆனால் பொருள் சொல்லலையே? நம்ம பின்னூட்ட விதி உங்களுக்குத் தெரியும் இல்லை. பழந்தமிழ் பாடல்வரிகளைப் பின்னூட்டத்தில் இட்டால் அதற்குப் பொருளும் சொல்லவேண்டும். :-)

    Saturday, July 15, 2006 12:17:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    வா.மணிகண்டன். வாங்க மணிகண்டன். என்ன யானை மேல உக்காந்துக்கிட்டு அமுக்குற எறும்புன்னு நெனைச்சுக்கிட்டீங்களா? இல்லைங்க. பாடலைக் கேட்டீங்களா? அதுல தொடக்கத்துல வரும்ங்க இது. ரொம்ப சன்னமா வர்றதால பலமுறை அது காதுல விழறதில்லை. கவனிச்சுக் கேட்டுப் பாருங்க.

    (ஒரு வேளை மணிகண்டன் கேட்டதுல எதாவது உ.கு. இருக்குமோ? யாருக்குத் தெரியும்? :-(((( )

    Saturday, July 15, 2006 12:19:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    கொத்ஸ். இதானே வேணாங்கறது. நானே சூடு தணிக்கப் பாட்டு போட்டா அதுல வேற விவகாரம் பண்றீங்களே. உங்களுக்கே நல்லா இருக்கா? இந்தப் பாட்டுல தான் தெளிவா கருப்புக் கொடின்னு சொல்லியிருக்காங்களே. இங்கே எங்ஙன கறுப்பு அண்ணன் வந்தாரு?

    Saturday, July 15, 2006 12:20:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    எப்போதும் நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள் பாலசந்தர் கணேசன். (அட You are always welcome தாங்க. வேற ஒன்னும் இல்லை) :-)

    Saturday, July 15, 2006 12:21:00 PM
    --

    G.Ragavan said...
    பின்னூட்ட விதியா? சதியா? ;-)


    கன்றும் உண்ண முடியாது
    கலத்திலும் தங்கியிருக்காது
    நல்ல தீம்பாலானது
    நிலத்தில் வீழ்ந்தது போல
    எனக்கும் பயனில்லாது
    (எங்கேயோ இருக்கும்)என் தலைவனுக்கும் உதவாது
    பசலை நோய் தீர்ந்திடுமோ
    என்னுடைய தொட்டால் ஒட்டிக் கொள்ளும் கவின் மிகு அழகே!

    போதுமா விளக்கம்?

    Saturday, July 15, 2006 12:30:00 PM
    --

    G.Ragavan said...
    // குமரன் (Kumaran) said...
    என்ன இராகவன்? பாடுனதையே மூக்கால பாடுறதுன்னு சொன்னா உன்னிகிருஷ்ணன் பாடுறதை என்ன சொல்லுவீங்க? எனக்கு உன்னிகிருஷ்ணன் பாடல்கள் ரொம்பப் பிடிக்கும்; எங்க வீட்டுல அவர் மூக்கால பாடுறார்ன்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க. :-) //

    உன்னி கிருஷ்ணனின் சில பாடல்கள் எனக்கும் பிடிக்கும் என்றாலும் அவரும் மூக்கு மோகனந்தான். அவரும் அவரது ரசிகர்களும் இப்படிச் சொன்னதற்கு மன்னிக்க.

    Saturday, July 15, 2006 12:31:00 PM
    --

    சிவமுருகன் said...
    அண்ணா,

    அருமையான தேர்வு,
    அருமையான பாடல் வரிகள்,
    அருமையான பாடல்.

    Saturday, July 15, 2006 12:31:00 PM
    --

    இலவசக்கொத்தனார் said...
    ////ஒரு கருப்புக்கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்////

    கருப்பாகிய ஒருவரின் கொடியைத் தூக்கிப் பிடித்து அவருக்கு ஆதரவு குடை பிடித்து அரசியல் பண்ண வேண்டாம்.

    இதுதான் மேட்டர். இதை நம்ம வலையுலக கண்ணோட்டத்தில் இதைப் பார்த்தால் ஒரு மாதிரி இருக்கும். இதையே தமிழக அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் வேறு பொருள் வரும். (எஸ்.கே., திட்டாதீங்க)

    இத சொல்லிட்டு என்னமோ ஒண்ணுந் தெரியாத மாதிரி இருக்கீங்களே.

    Saturday, July 15, 2006 2:37:00 PM
    --

    SK said...
    //நடுவில் 'இவள் கன்னியென்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது'ங்கற வரி மட்டும் பாடலின் மற்ற வரிகளுடன் பொருந்தாத மாதிரி எனக்கு ஒரு உணர்வு. //[Kumaran]

    //நானும் இதை சுட்டிக்காட்டலாம் என்றிருந்தேன் ... பின்பு பார்வைக் கோளாறு என்று யாராவது சொல்லி விடப்போகிறார் களோ என்று தயங்கி விட்டுவிடேன். பரவாயில்லை நீங்கள் மனதில் பட்ட கெட்ட விசயங்களை பளிச் என்று சொல்கிறீர்கள். பாராட்டுக்கள்// [kOviyaar]


    அதுதான் இந்தப் பாடலுக்கே மெருகு சேர்த்து இவர் கவியரசர்தான் என்பதைப் பறை சாற்றும் வரிகள்!
    அதைப் போய் பொருந்தவில்லை எனச் சொல்லிவிட்டீர்களே குமரன்?!
    அதையும் வழிமொழிந்தாரே, கோவியார்!
    முந்தைய சில வரிகளைப் படித்துப் பாருங்கள்!
    பிறகும் புரியவில்லையெனில் சொல்லுங்கள்!
    நான் வந்து விளக்குகிறேன்!

    :))

    Saturday, July 15, 2006 2:53:00 PM
    --

    SK said...
    //இதை நம்ம வலையுலக கண்ணோட்டத்தில் இதைப் பார்த்தால் ஒரு மாதிரி இருக்கும். இதையே தமிழக அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் வேறு பொருள் வரும். (எஸ்.கே., திட்டாதீங்க)//


    இப்பல்லாம் "ஆன்னா, ஊன்னா," எஸ்.கே.யை இழுக்கிறது ஒரு வழக்கமாப் போச்சு!
    அதுக்கு நானும் லபக்குன்னு வந்து மாட்டிக்கிறேன்!
    எல்லாம் நேரமடா சமி!
    உங்க பங்குக்கு கடமையை ஆற்றிட்டீங்க, இ.கொ.!!

    [just kidding!]:)

    Saturday, July 15, 2006 3:00:00 PM
    --

    இலவசக்கொத்தனார் said...
    எல்லாரும் இப்படி பிடிக்காத வரி சொல்லறீங்களே. சரி, நானும் சொல்லறேன்.

    //அந்த இயற்கையன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது//

    எதுக்கு இங்க ஆங்கில வார்த்தை? தமிழில் எழுத முடியலைன்னா சொல்லவேண்டியதுதானே. நாங்க எழுதிக் குடுப்போமில்ல.

    Saturday, July 15, 2006 3:42:00 PM
    --

    இலவசக்கொத்தனார் said...
    //உங்க பங்குக்கு கடமையை ஆற்றிட்டீங்க, இ.கொ.!!//

    எதோ. என்னாலானது!

    நாராயண! நாராயண!

    Saturday, July 15, 2006 3:43:00 PM
    --

    Venkataramani said...
    இனிமையான பாடல். எனக்கு பிடித்த ஒன்று. நன்றி குமரன்.

    Saturday, July 15, 2006 3:44:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    இதில் என்ன சதியைக் கண்டீர்கள் திரு.இராகவன். தெளிவாகச் சொல்லமுடியுமா உங்களால்? (தூங்கப் போயிட்டீங்க இல்லியா? அந்தத் தைரியத்துல தான் சத்தம் போட்டுக்கிட்டு இருக்கேன். :-) )

    விளக்கம் மிக நன்றாக இருக்கிறது இராகவன். கடைசி இரண்டு வரிகளை இன்னும் தெளிவாக ஒவ்வொரு சொல்லாக விளக்கமுடியுமா இராகவன்? ஒரு வேளை அடுத்த வார 'சொல் ஒரு சொல்'லுக்கு ஒரு சொல் கிடைக்கலாம் போலிருக்கிறது. :-)

    Saturday, July 15, 2006 5:44:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    மன்னித்தோம் இராகவன். அவரை, அவர் பாடியதை மூக்கு 'மோகனம்' என்று சொன்னதால். மோகனம் என்றால் மயக்குவது என்று பொருள். அவரது பாடலில் மயங்காத ஆளே இல்லை. ஆகையால் நீங்கள் செய்தது நிந்தாஸ்துதி என்று அறிந்தோம்.

    இராகவன், இதனை வஞ்சப் புகழ்ச்சி என்ன முடியவில்லை. வஞ்சப் புகழ்ச்சி என்றால் புகழ்வது போல் பழிப்பது; நிந்தாஸ்துதி என்றால் பழிப்பது போல் புகழ்வது. தமிழில் இந்த அணிக்கு என்ன பெயர்? இலக்கணம் அறியாததால் கேட்கிறேன். இராகவன் மட்டுமில்லாமல் அறிந்தவர் யாவரும் சொல்லலாம். :-)

    Saturday, July 15, 2006 5:47:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    சிவமுருகன். நன்றி. வரிக்கு வரி அருமை என்று சொல்லியிருக்கிறீர்களே. :-)

    Saturday, July 15, 2006 5:49:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    மதிப்பிற்குரிய இலவசக் கொத்தனார் அவர்களே, இந்த திரித்தல் வேலையை வேறெங்காவது வைத்துக் கொள்ளுங்கள். இங்கே வேண்டாம்.

    ஒரு கருப்புக் கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம் என்று கவிஞர் கூறுவது என்ன என்று உண்மையிலேயே உங்களுக்குத் தெரியவில்லையா என்ன? குடை என்பதை அருமையாக கருப்புக் கொடி என்று உருவகித்து மழை வரும் நேரம் குடைபிடிப்பது மழைக்குக் காட்டும் கருப்புக் கொடியைப் போல இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். எனக்குத் தமிழ் இலக்கணம் அவ்வளவாய் தெரியாது என்றாலும் இது 'ஏகதேச உருவக அணி' என்று சொல்வார்களே அது என்பது தெரியும். முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயலில் இறங்க வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.

    (ஹிஹி. உ.கு., வெ.கு., விதிகளைப் பத்தி ஒரு அண்ணன் எழுதியிருக்காரே. அவர் எழுதுனதுல ஒன்னு விட்டுப் போச்சு. யார் கருத்தையாவது நீங்கள் எதிர்க்கவேண்டும் என்றால் எல்லா இடத்துலயும் அவர் பெயருக்கு முன்னால தவறாமல் 'மதிப்பிற்குரிய' என்று போட வேண்டும். அதிலேயே 'எதிராளி' மயங்கி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைக் கவனிக்க மாட்டார். :-) )

    Saturday, July 15, 2006 5:56:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    மதிப்பிற்குரிய இலவசக் கொத்தனார்,

    //கருப்பாகிய ஒருவரின் கொடியைத் தூக்கிப் பிடித்து அவருக்கு ஆதரவு குடை பிடித்து அரசியல் பண்ண வேண்டாம்.
    //

    அரசியல் என்ற சொல் அந்தப் பாடல் வரியில் எங்கே வந்தது என்று தயவு செய்து சொல்லமுடியுமா? உங்களுக்கு ஞானக் கண் இருக்கிறது என்று தெரியும். அதற்காக இப்படியா? அநியாயத்திற்கு ஞானக் கண் இருக்கும் போலிருக்கிறதே?!!!

    அது சரி. எஸ்.கே. கொடி பிடிக்கிற நடிகர் மட்டுமா கருப்பு. மற்ற கட்சித் தலைவர்கள் எல்லாம் சிவப்பா என்ன? என்னய்யா சொல்கிறீர்?

    Saturday, July 15, 2006 5:58:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    மதிப்பிற்குரிய இலவசக் கொத்தனார்.

    //இத சொல்லிட்டு என்னமோ ஒண்ணுந் தெரியாத மாதிரி இருக்கீங்களே. //

    ஒண்ணும் தெரியாத மாதிரி இருக்கேனா? ஒன்னும் தெரியாத மாதிரி இருக்கேனா?

    ஒன்று என்ற சொல் பேச்சு வழக்கில் ஒன்னு என்று தானே ஆகும்? ஒண்ணு என்று ஆகுமா?

    Saturday, July 15, 2006 6:00:00 PM
    --

    வெற்றி said...
    குமரன்,
    நல்ல ஒரு பாடலை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

    Saturday, July 15, 2006 6:29:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    எஸ்.கே. நான் கவிஞனும் இல்லை. நல்ல ரசிகனும் இல்லை. காதலெனும் ஆசையில்லா பொம்மையுமில்லை.

    பாம்பின் கால் பாம்பறியும். கவிப்பேரரசர் ஏன் அந்த வரியை அங்கே வைத்தார் என்று இன்னொரு கவியரசராகிய உங்களால் தானே சொல்ல முடியும். எனக்குப் புரியவில்லை எஸ்.கே. தயை செய்து மனம் உவந்து நன்கு விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இராகவன் வருவதற்குள் வந்து சொல்லிவிடுங்கள். இல்லை விளக்குமாறு என்பதை வைத்து சிலேடைக் கவி பாடிவிடுவார்.

    :-)

    Saturday, July 15, 2006 6:38:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    அதானே எஸ்.கே. எதுக்கெடுத்தாலும் எஸ்.கே.யைப் போயி பாம்பு, விஷம்ன்னுகிட்டு. பாவம் நீங்க.

    ஆனா ஒன்னு கவனிச்சீங்களா. கொத்ஸு யார் யாரை வம்புக்கு இழுக்குறார்ன்னு பாத்தாத் தெளிவாத் தெரியும் - யார் யார் வந்து லபக்குன்னு மாட்டிக்குவாங்களோ அவங்களை மட்டும் தான் இழுப்பாரு.

    எல்லாம் அவன் செயல். நாராயண நாராயண.

    Saturday, July 15, 2006 6:40:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    //தமிழில் எழுத முடியலைன்னா சொல்லவேண்டியதுதானே. நாங்க எழுதிக் குடுப்போமில்ல.
    //

    ஆகா. என்ன ஒரு வார்த்தை சொன்னீர்கள் மதிப்பிற்குரிய இலவசக் கொத்தனார். யாரைப் பார்த்து என்ன சொன்னீர்கள்? சிங்கத்தைப் பார்த்து சிறுநரி ஊளையிடலாமா? கவிப்பேரரசர் எங்கே கவிதை என்றாலே காத தூரம் ஓடும் நீங்கள் எங்கே? இடமறிந்து பேசுங்கள். வீணாக வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். சே. இப்படியா சொ.செ.சூ.வைத்துக் கொள்வார்கள்? ஹும்.

    Saturday, July 15, 2006 6:43:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    நன்றி வெங்கடரமணி. உங்க புதுக் கருவியை என்னோட வலைப்பூக்கள் இரண்டுல போட்டுட்டேன். மத்த வலைப்பூக்களிலும் விரைவில் போட்டுவிடுவேன். உங்களுக்கு நன்றி சொல்லி நன்றி சொல்லியே என் நேரமெல்லாம் போய்விடும் போல் இருக்கிறது. இப்படி புதிது புதிதாக சிறந்த கருவிகளைக் கொண்டு வந்து கொண்டிருந்தால் என்ன செய்வது? ஸ்டாண்டிங் ஆர்டர்னு சொல்வாங்களே. அது போல ஸ்டாண்டிங் நன்றிகளைச் சொல்லி வச்சிர்றேன். அப்போதைக்கிப்போதே சொல்லிவைத்தேன். எப்ப எப்ப நீங்க புதுக் கருவிகளை வெளியிடுறீங்களோ அப்ப எல்லாம் அதுல இருந்து கொஞ்சம் நன்றிகளை எடுத்துக்கோங்க. :-) அப்ப அப்ப வந்து நன்றிகளை நிரப்பி வைக்கிறேன். :-)

    Saturday, July 15, 2006 6:46:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    பாடலைக் கேட்டு ரசித்ததற்கு நன்றி வெற்றி.

    Saturday, July 15, 2006 6:47:00 PM
    --

    மலைநாடான் said...
    சக்கரவாகமோ மழையை விரும்புமோ என்ற வரிகள் கேட்கையில் ஜிவ்வென்றிருக்கும்

    வணக்கம் குமரன்!

    ராகவன் சொல்லும் அந்த ஜிவ்வு எனக்கும் ரொம்ம்ம்ப பிடிக்கும். நன்றிங்க :-)

    Saturday, July 15, 2006 7:38:00 PM
    --

    பினாத்தல் சுரேஷ் said...
    அலோ!

    வைரமுத்து பத்தி இவ்ளோ டிஸ்கஷன் தேவைதானா? அவர் பாட்டிலே எங்கயாவது ஒரு இடத்திலாவது அவர் அறிவை(?) நிரூபிக்கும் போலித்தனமான வரிகள் இல்லாவிட்டால்தான் ஆச்சரியம்!

    Saturday, July 15, 2006 9:49:00 PM
    --

    தி. ரா. ச.(T.R.C.) said...
    கொத்ஸ் குமரன் நல்லபாட்டைப் போட்டுஇருக்கிறார் ரசிக்காமல்,கறுப்பைப்பற்றி அவர் சொல்லாததைச்சொல்லுகிறீர்களே. இது நியாயமா? இது பின்னுட்டமா? இல்லை குமரனை பின்னி எடுக்கிற ஓட்டமா? எதோ நான் சிங்கை வந்து இருப்பதால் குமரனை விட்டுக்கொடுப்பேன் என்று நினைத்தீர்களா ? தி ரா ச

    Saturday, July 15, 2006 10:15:00 PM
    --

    G.Ragavan said...
    // இலவசக்கொத்தனார் said...
    எல்லாரும் இப்படி பிடிக்காத வரி சொல்லறீங்களே. சரி, நானும் சொல்லறேன்.

    //அந்த இயற்கையன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது//

    எதுக்கு இங்க ஆங்கில வார்த்தை? தமிழில் எழுத முடியலைன்னா சொல்லவேண்டியதுதானே. நாங்க எழுதிக் குடுப்போமில்ல. //

    கொத்சின் ஆதங்கத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன். பெரிய ஷவர் என்ற கற்பனை நன்றாக இருந்தாலும் கொஞ்சம் நெருடல்தான். ஓலைக்கொழுக்கட்டை சாப்பிடும் பொழுது உள்ளே சாக்லேட் இருந்தாற்போல. நிச்சயமாக இதற்கு வேறொரு வரியை கொத்சால் எழுத முடியும் என்றே நம்புகிறேன்.

    இன்னொரு விஷயம். நான் கவியரசர் என்று ஒத்துக் கொண்டது ஒருவரை மட்டுந்தான்.

    Sunday, July 16, 2006 12:27:00 AM
    --

    G.Ragavan said...
    // குமரன் (Kumaran) said...
    இதில் என்ன சதியைக் கண்டீர்கள் திரு.இராகவன். தெளிவாகச் சொல்லமுடியுமா உங்களால்? (தூங்கப் போயிட்டீங்க இல்லியா? அந்தத் தைரியத்துல தான் சத்தம் போட்டுக்கிட்டு இருக்கேன். :-) ) //

    போடுங்கள்...போடுங்கள்....உறங்கி எழுந்து வந்து விட்டேன்.

    // விளக்கம் மிக நன்றாக இருக்கிறது இராகவன். கடைசி இரண்டு வரிகளை இன்னும் தெளிவாக ஒவ்வொரு சொல்லாக விளக்கமுடியுமா இராகவன்? ஒரு வேளை அடுத்த வார 'சொல் ஒரு சொல்'லுக்கு ஒரு சொல் கிடைக்கலாம் போலிருக்கிறது. :-) //

    அந்தப் பணியை உங்களுக்கு ஒதுக்குகிறேன் குமரன். அதான். அந்த ஈற்றிரண்டடிகளுக்கு விளக்கம் சொல்வது.

    // மன்னித்தோம் இராகவன். அவரை, அவர் பாடியதை மூக்கு 'மோகனம்' என்று சொன்னதால். மோகனம் என்றால் மயக்குவது என்று பொருள். அவரது பாடலில் மயங்காத ஆளே இல்லை. ஆகையால் நீங்கள் செய்தது நிந்தாஸ்துதி என்று அறிந்தோம். //

    நான் நிந்தையும் செய்யவில்லை. ஸ்துதியும் செய்யவில்லை.

    // இராகவன், இதனை வஞ்சப் புகழ்ச்சி என்ன முடியவில்லை. வஞ்சப் புகழ்ச்சி என்றால் புகழ்வது போல் பழிப்பது; நிந்தாஸ்துதி என்றால் பழிப்பது போல் புகழ்வது. தமிழில் இந்த அணிக்கு என்ன பெயர்? இலக்கணம் அறியாததால் கேட்கிறேன். இராகவன் மட்டுமில்லாமல் அறிந்தவர் யாவரும் சொல்லலாம். :-) //

    குமரன், இரண்டிற்குமே தமிழில் வஞ்சப்புகழ்ச்சிதான். உங்களது இந்தக் கேள்வி எனக்கு வியப்பளிக்கிறது. பூட்டுவில்லானால் என்ன? விற்பூட்டானால் என்ன? பொருளொன்றுதான். இதையும் என்னை விளக்கச் சொல்லாதீர்கள்.

    Sunday, July 16, 2006 12:32:00 AM
    --

    SK said...
    //சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேன் துளியாய் வருவாய்
    சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்
    பயிர் வேரினிலே விழுந்தால் நவ தானியமாய் விளைவாய்
    என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்
    அந்த இயற்கையன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது
    அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது
    இவள் கன்னியென்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது //

    முதல் 4 வரிகளில் ஒரு துளி நீர் விழுந்தால் ஆகும் பயன் பற்றிச் சொல்லியிருக்கிறார்.
    பூவில் விழுந்தால்... தேன் துளி.
    சிப்பிக்குள் விழுந்தால், முத்தாய் மாறும்
    பயிரின் வேரினில் விழுந்தால், தானியமாய் மாறும்.
    [என்] கன்விழியில் விழுந்தால், கவிதையகும்.

    5-வது வரியில், ஒரு பாராட்டு, இயற்கை அன்னைக்கு.

    6-வது வரியில், காலத்தைப் பற்றிய ஒரு குறிப்பு... நம்மையெல்லம் அச்சுறுத்த!

    நம் இளமையின் நில்லாமையை நினைவு படுத்த1

    7-வது வரியில், கவியரசர் வருகிறார்!!!

    மேலே குறிப்பிட்ட மற்றவை எல்லாம் [1 - 4], வாய் திறந்திருந்து, நீரை வாங்கி, அவையவை ஆயின!

    ஆனால், தலையில் வீழ்ந்து, மார்பு, நாபி வழியே 'கீழே' சென்று, இவள் கன்னி என்பதால், 'உள்ளே' செல்ல முடியமல், நில்த்தில் வீழ்ந்ததால்,
    இவளது கன்னித்தன்மையை இவன் அறிந்து கொண்டானாம்!!![line 7]

    Sunday, July 16, 2006 1:15:00 AM
    --

    இலவசக்கொத்தனார் said...
    நாந்தான் 50ஆ? சரி.

    என்ன திரச. நம்ம பக்கம் வரதேயில்லை. இங்க வந்தா நம்மளை விட்டுட்டு கும்ஸுக்கு சப்போர்ட்? என்ன ஆகுது? சிங்கை போய் ஆளே மாறிட்டீங்க?

    எஸ்.கே. என்னத்துக்கு விலாவாரியா விளக்கம்? இது என்ன சங்கப் பாடலா? திருப்புகழா? படிச்சா புரியற மாதிரித்தானே இருக்கு.

    கும்ஸ், கவிதை படிக்காமத்தான் ஓடுவோம். ஆனா எழுதத் தெரியாதுன்னு சொல்லலையே!

    ஜிரா, நம்ம பாயிண்டுக்கு சப்போர்ட் பண்ணியது நன்றி. நம்மால எழுத முடியும்ன்னு சொன்னதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. கவியரசர் அவர் ஒருவர்தான் ஜிரா.

    பெனாத்தல், முத்திரை வாங்கறதுன்னு முடிவே பண்ணியாச்சா?

    Sunday, July 16, 2006 9:02:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    மதிப்பிற்குரிய இலவசக் கொத்தனார் அவர்களே. மேலே உங்கள் பெயரில் 50வது பின்னூட்டமாக வந்திருப்பது உங்கள் பின்னூட்டம் தானா என்று பார்த்துச் சொல்லுங்கள். குறைந்தது ஆறு பின்னூட்டங்களுக்கு ஆன சரக்கை ஒரே பின்னூட்டத்தில் இட்டிருப்பதைப் பார்த்தால் அது உங்கள் பின்னூட்டம் தானா என்று ஐயமாக இருக்கிறது.

    பாண்டியன் சந்தேகத்தைத் தீர்க்க தருமி மண்டப்பத்தில் யாரோ எழுதிக் கொடுத்ததைக் கொண்டு வந்தாற் போல நீங்களும் வேறு யாரோ எழுதிக் கொடுத்தப் பின்னூட்டத்தை இங்கே இட்டுவிட்டீர்களோ? இந்தப் பாண்டியனின் ஐயத்தை யார் தீர்ப்பது?

    Sunday, July 16, 2006 9:06:00 AM
    --

    கோவி.கண்ணன் said...
    மருத்துவர் அவருடைய கோணத்தில் சொல்லியிருக்கிறார். கன்னி என்பதை கன்னித்தன்மையுடன் இணைத்து சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

    நான் புரிந்து கொண்டது 'இந்த வயது கடந்த' என்று இளமையைக் குறிப்பிட்டு, கன்னியைப் பற்றிக் குறிப்பிடுகிறார். கன்னிப் பெண்கள் காதலில் விழுவது இயற்கை. அந்த பெண் மழை மீது காதலில் விழுந்துவிடுகிறாள். அந்தப் பெண் மீது மழை விழும் போது அவளுடைய அங்கங்களின் மீது விழுந்து, (கண்டு), பின் மழை தன் ஸ்பரிசத்தல் உணர்ந்து (அறிந்து) கொண்டதை கவர்ச்சி வெளிப்பாடுகளை தன் ஈரத்தின் மூலம் வெளிப்படுத்துகிறது (சொல்கிறது) என்று நினைக்கமுடிகிறது.

    மழை ஈரத்தில் தெரிந்த கவர்ச்சி வெளிபாடுகளின் மூலம் அவள் 'கன்னி' (கை படாத ரோஜா) என்று அவன் அறிந்து கொண்டான் என்று பொருள்படுகிறது.

    கை படாத ரோஜா - இந்த வார்த்தையை விளக்குவதற்காக வேறு வழியின்றி பயன்படுத்தினேன். தவறாக நினத்தால் எடுத்துவிடுங்கள்

    Sunday, July 16, 2006 9:25:00 AM
    --

    தமிழ்ப்பிரியன் said...
    ரொம்ப நல்ல பாடல்..எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இது கண்டிப்பாய் உண்டு...இந்த பாடல் கேட்டு inspire
    ஆகி மழை என்ற என் கிருக்கல் ! your comments are welcome.

    Sunday, July 16, 2006 9:34:00 AM
    --

    SK said...
    யாரோ கேட்டாங்க சாமி, அதனால தான் சொன்னேன்!
    உங்களுக்குகெல்லாம் புரியும்னு எனக்குத் தெரியாதா என்ன, இ.கொத்தனாரே!?!!
    :))))

    Sunday, July 16, 2006 11:08:00 AM
    --

    johan -paris said...
    குமரா!
    இப்படம் பார்த்துள்ளேன். பாடல் வழமைபோல் ஓடவிட்டு விட்டேன்.தூறல் போல் நல்ல மென்மையான பாடல்.
    யோகன் பாரிஸ்

    Monday, July 17, 2006 6:38:00 AM
    --

    கோவி.கண்ணன் said...
    குமரன் அந்த பாடலை சற்று முன் சன் மியூசிக்கில் ஒளிபரப்பினார்கள். குறிப்பிட்ட வரிகள் நன்றாக கவர்ந்தது :))

    Monday, July 17, 2006 10:31:00 AM
    --

    செயபால் said...
    // அவர் பாட்டிலே எங்கயாவது ஒரு இடத்திலாவது அவர் அறிவை(?) நிரூபிக்கும் போலித்தனமான வரிகள் இல்லாவிட்டால்தான் ஆச்சரியம்! //

    100% உண்மை சுரேஸ்.
    அவரின் பாடல்களில் அலுப்படிக்கும் பாகம் இவை தான். பாமரருக்கு அறிவூட்டுகிறார் என்று பார்த்தாலும் அலுப்படிப்பது என்னவோ உண்மை தான். "உடம்பில் நரம்புகள் 6 லட்சம்" போன்றவை.

    ஆனால் இனிமையான இசை, சில வரிகள் தவிர்த்து இரசிக்கலாம்.

    Monday, July 17, 2006 2:39:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    விளக்கத்திற்கு நன்றி கோவி.கண்ணன் ஐயா.

    Wednesday, August 30, 2006 12:43:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    தமிழ்ப்பிரியன். உங்கள் பதிவுகளைப் பார்த்தேன். இனிமேல் படிக்கிறேன். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

    Wednesday, August 30, 2006 12:44:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் யோகன் ஐயா. நாங்களும் அப்படி செய்வதுண்டு. படம் பார்க்கும் போது பாடல்களை ஓடவிட்டுவிடுவோம். ஆனால் பாடல்களுக்கான தகடைத் தனியே வாங்கிப் பாடல்களை மட்டும் பார்ப்போம். :-)

    Wednesday, August 30, 2006 12:45:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    நன்றி ஜெயபால்.

    Wednesday, August 30, 2006 12:46:00 PM
    --

    தம்பி said...
    எனது விருப்பமான பாடல் இது.

    "சக்கரவாஹம்" இந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன?

    Wednesday, August 30, 2006 2:42:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    தம்பி ஐயா. சக்கரவாஹம் என்பது ஒரு பறவை. இலக்கியங்களில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அவை உண்மையிலேயே இருக்கின்றனவா என்று தெரியாது. அன்னப் பறவைகள் போல் இதுவும் இலக்கியங்களில் மட்டுமே இருக்கும் பறவையாக இருக்கலாம். சக்கரவாஹம் தரையில் விழுந்த நீரை அருந்தாதாம். அதற்கு உணவு நிலவின் கதிர்களும் மழைத்துளிகளும் மட்டும் தானாம்.

    Wednesday, August 30, 2006 4:45:00 PM
    --

    தம்பி said...
    நன்றி குமரன்

    Wednesday, August 30, 2006 5:06:00 PM

    ReplyDelete
  2. அருமையான பாட்டு. கேட்டால் அமைதி நிச்சயம்

    ReplyDelete
  3. உண்மை செயபால். நன்றிகள்.

    ReplyDelete