Monday, March 17, 2008

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்

அண்மையில் வந்த திரைப்படங்களிலிருந்தும் சில பிடித்தப் பாடல்கள் போடலாம் என்று பார்த்த போது வந்த பாடல் இது.

திரைப்படம்: டிஸ்யூம்
வெளிவந்த வருடம்: 2005
பாடகர்கள்: ஜயதேவ், ராஜலக்ஷ்மி
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி

ஹே நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே
நெற்றிப் பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டிப் போட்டு காதல் செய்கிறாய் - முதுகில்
கட்டெறும்பு போலே ஊர்கிறாய்

காதல் தானே இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிறுத்திவிட்டால்
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்
இன்னும் பூமுகம் மறக்கவில்லை (நெஞ்சாங்கூட்டில்)

ஹே விண்ணைத் துடைக்கின்ற முகிலை
வெள்ளி நிலவை மஞ்சள் நட்சத்திரத்தை
என்னைத் தேடி மண்ணில் வரவழைத்து
உன்னைக் காதலிப்பதை உரைத்தேன்

இன்று பிறக்கிற பூவுக்கும் சிறு புல்லுக்கும்
காதல் உரைத்து முடித்தேன்
உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும் இன்னும்
சொல்லவில்லையே இல்லையே

லட்சம் பல லட்சம் என்று தாய்மொழியில் சொல்லிருக்க
ஒத்தை சொல்லும் சிக்கவில்லை எதனாலே
பந்தி வச்ச வீட்டுக்காரி பாத்திரத்தை கழுவிட்டு
பட்டினியா கிடப்பாளே அது போலே (நெஞ்சாங்கூட்டில்)



சின்னச் சின்னச் செல்லக் குறும்பும் சீனிச் சிரிப்பும்
என்னை சீரழிக்குதே
விறுவிறு என வளரும் பழம்
எந்தன் விரதங்களை வெல்லுதே

உன்னைக் கரம் பற்றி இழுத்து வளை உடைத்து
காதல் சொல்லிடச் சொல்லுதே
வெட்கம் இருபக்கம் மீசை முளைத்து என்னைக்
குத்திக் குத்தியே கொல்லுதே

காதலெந்தன் வீதி வழி கையை வீசி வந்தபின்னும்
கால்கடுக்கக் காத்திருக்கேன் எதனாலே
பெப்ரவரி மாதத்திற்கு நாளு ஒன்னு கூடிவரும்
ஆண்டு நாலு காத்திருக்கும் அது போல (நெஞ்சாங்கூட்டில்)

இந்தப் பாட்டிற்கு விளக்கம் வேண்டுமா? சொல்லுங்கள். :-)

***

இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 17 மே 2006 அன்று இட்டது.

1 comment:

  1. இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 17 மே 2006 அன்று இட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

    61 comments:

    Sivabalan said...
    குமரன்,

    கலக்கிடீங்க!!

    ஏதோ பாதை மாறுவதுபோல் தோன்றுகிறது(?!)

    Wednesday, May 17, 2006 3:17:00 PM

    மலைநாடான் said...
    குமரன்!
    அண்மையில் வந்த பாடல்களில் இந்தப்பாடல் எனக்கும், பிடித்த இல்லையில்லை என் குடும்பத்துக்கே பிடித்த பாடல்.
    தமிழீழத்தின் இளைய கலைஞன் ஒருவனை இன்று பதிவு செய்திருக்கின்றேன். பாடல் உங்களுக்கும் ராகவனுக்கும் நிச்சயம் பிடிக்குமென்று நம்புகின்றேன் கேட்டுப் பதிவு செய்யுங்கள்
    நன்றி!

    Wednesday, May 17, 2006 3:17:00 PM

    theevu said...
    மிக அருமையான இசை..கவிஞர் யாரோ?

    Wednesday, May 17, 2006 3:21:00
    PM

    குமரன் (Kumaran) said...
    நன்றி சிவபாலன். பாதை எல்லாம் மாறவில்லை. நம்ம வழி எப்பவும் நடு வழி தான். ஜோதிடமும் அறிவியலும்ன்னு சொன்ன மாதிரி, காதலும் காவியும் நமக்கு சம தூரம் தான். :-)

    Wednesday, May 17, 2006 4:40:00 PM

    குமரன் (Kumaran) said...
    மலைநாடான். உங்கள் குடும்பத்திற்கே பிடித்த பாடலா? மிக்க மகிழ்ச்சி. எங்கள் வீட்டில் இது எனக்குப் பிடித்தப் பாடல். இதே படத்தில் வரும் 'டைலமா டைலமா' என்ற பொருளே புரியாத பாடல் தான் எங்க வீட்டில் மற்றவர்களுக்குப் பிடித்த பாடல். :-)

    உங்கள் பதிவைப் பார்த்தேன். படிக்கக் குறித்துவைத்திருக்கிறேன். மிக்க நன்றி.

    Wednesday, May 17, 2006 4:43:00 PM

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் தீவு. இசை, பாடல் வரிகள், பாடியவர் எல்லாமே நன்றாக இருக்கின்றன இந்தப் பாடலில். பாடலை எழுதியவர் 'கவிப்பேரரசு' வைரமுத்து என்று எண்ணுகிறேன். மற்ற விவரங்களை எல்லாம் தந்த வலைத்தளம் www.musicindiaonline.com இந்த விவரத்தை மட்டும் தரவில்லை.

    Wednesday, May 17, 2006 4:44:00 PM

    சிங். செயகுமார். said...
    நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்!

    Wednesday, May 17, 2006 5:35:00 PM

    Sivabalan said...
    // நம்ம வழி .....நடு வழி .. //


    சூப்பர் ஸ்டாரின் வரிகளை நியாபகப்படுத்துகிறது!

    Wednesday, May 17, 2006 5:37:00 PM

    Anonymous said...
    அண்ணாச்சி பாட்டு நல்லாயிருக்கு, ஆனா ஆரு எழுதுனதுனு போடவேயில்லையே ?

    பார்னி மற்றும் ஹைபைவ் பார்காத நேரங்களில் என் மகள் அனுமதிக்கும் பாட்டில் இது ஒண்ணு.

    ஆனா எனக்கு புடிச்சது பட்டயக் கெளப்பும் "டைலமு டைலமு" தான். ஆனா அதைப் போட்டா "பார்னீ பார்னீ பார்னீ" என்று அலறிக் கொண்டு என் மகள் டிவியை ஆப் செய்துவிடுவாள்.

    Wednesday, May 17, 2006 10:22:00 PM

    johan -paris said...
    பந்தி வச்ச வீட்டுக்காரி பாத்திரத்தை கழுவிட்டு
    பட்டினியா கிடப்பாளே அது போலே (நெஞ்சாங்கூட்டில்

    சீனிச் சிரிப்பும்
    மிக அழகான வார்த்தைத் தொகுப்பு ;உவமானம்; சக்கரைச் சிரிப்பு, கற்கண்டுச் சிரிப்பு- இது புதிய சீனிச் சிரிப்பு- செட்டான வார்த்தைகள் ;அமெரிக்க மெரினா இணைய வானொலி போட்டுக் கலக்கும் பாடல்;
    நமக்கும் பிடித்த பாடல்; இப்படிப் பாடல் நா.முத்துக்குமார் கூட எழுதுவார். கட்டாயம் அதைத் தேடி யாராவது சொல்லவும்.
    யோகன்
    பாரிஸ்

    Thursday, May 18, 2006 5:23:00 AM

    தேவ் | Dev said...
    வாலிப உள்ளங்களைச் சுண்டி இழுக்கும் பாடல் வரிகளூக்கு வலைப் பின்னி அழகுச் சேர்த்த ஆருயிர் அன்பின் குமரனுக்கு நன்றி.
    :)))

    Thursday, May 18, 2006 5:32:00 AM

    பொன்ஸ்~~Poorna said...
    இந்தப் பாட்டு எனக்கும் பிடிக்கும் குமரன்.. அதிலும் படமாக்கியவிதமும் கேரள அழகும் சூப்பர்.. இது மாதிரி இந்தக் காலத்துப் பாட்டா போட்டா எங்க சங்கத்தின் ஆதரவு இந்த வலைப்பதிவுக்கு நிச்சயம் உண்டு..

    என்ன ஒண்ணு, கொத்ஸ் மாதிரி வயசான ஆளுங்களின் ஆதரவை நீங்க இழக்க வேண்டி வரலாம் :)))

    Thursday, May 18, 2006 6:07:00 AM

    தேவ் | Dev said...
    பொன்ஸ் அக்கா குமரன் நம்ம ஆளு... யூத்க்கு பெரும் மதிப்பு கொடுக்கும் நம்மவர் அவர்...
    ஆமா கொத்ஸ்க்கு அப்படி என்ன வயசு ஆயிடுச்சு.. அடுத்த ஆவணி வந்தா தான் அவருக்கு 16 வயசு பொறக்குதாம்.:)

    Thursday, May 18, 2006 7:11:00 AM

    சிவமுருகன் said...
    பாடல் கொஞ்சம் புரியவில்லை இருந்தாலும் நல்லா இருக்கு.

    2002க்கு பிறகு நான் படம் பார்ப்பதை விட்டு விட்டேன் (சந்திரமுகியை தவிற). 2003லிருந்து டிவியும் விட்டாச்சு. அதனால் இந்த பாடல் முதன் முதலாய் இப்போதுதான் கேட்கிறேன் / பார்க்கிறேன் / கேள்விபடுகிறேன்.

    Thursday, May 18, 2006 7:45:00 AM

    கார்திக்வேலு said...
    //விறுவிறு என வளரும் பழம்
    எந்தன் விரதங்களை வெல்லுதே//

    //பந்தி வச்ச வீட்டுக்காரி பாத்திரத்தை கழுவிட்டு
    பட்டினியா கிடப்பாளே அது போலே //

    நல்ல வரிகள், நல்ல இசையமைப்பு , கொஞ்சம் காதல்,what else do we need :-)

    நன்றி குமரன்

    Thursday, May 18, 2006 8:14:00 AM

    கார்திக்வேலு said...
    sivamurugan,
    just curious why did u stopped watching movies and TV

    Thursday, May 18, 2006 9:21:00 AM

    ramachandranusha said...
    தலைப்புக்கும், பதிவுக்கும் சம்மந்தம் இராது என்று போனது என் தவறுதாங்க ;-) குமரன் மன்னிச்சுடுங்க.
    "ஒரு மாலை இளவெய்யில் நேரம்" - இதுக்கு பிறகு முனுமுணுக்க வைத்த பாடல் இது.
    "பந்தி வெச்ச வீட்டுக்காரி" வரிகள் பிடித்தது என்று சொன்ன அந்த இரு உள்ளங்கள் வாழ்க! நா. முத்துகுமார் தானே பாடல் ஆசிரியர். ஆபாசம் இல்லாமல், திரைப்படத்தில் பாடல் எழுத முடியும் என்று இவரும் தாமரையும் நீரூபிப்பதுப் போல இருக்கே? நான் சொன்னது சரியா?

    Thursday, May 18, 2006 10:13:00 AM

    குமரன் (Kumaran) said...
    நன்றி செயகுமார்.

    Thursday, May 18, 2006 4:50:00 PM

    குமரன் (Kumaran) said...
    சிவபாலன் சினிமா சூப்பர் ஸ்டார் சொன்னது 'நம்ம வழி தனி வழி' அ.உ.ஆ.சூ.கு. சொன்னது 'நம்ம வழி நடு வழி' புத்தர் சொன்ன மாதிரி.

    அ.உ.ஆ.சூ.கு. என்றால் என்ன என்று தெரியவேண்டுமென்றால் செல்வனைக் கேளுங்கள்; சொல்வார். :-)

    Thursday, May 18, 2006 4:52:00 PM

    Sivabalan said...
    செல்வன் சார்,

    குமரன் அய்யா, உங்களை கேட்க சொல்லிட்டார்.

    உதவவும்.. அ.உ.ஆ.சூ.கு?

    Thursday, May 18, 2006 5:57:00 PM

    குமரன் (Kumaran) said...
    அனானிமஸ் அண்ணாச்சி. அதான் மேலே பின்னூட்டத்துல எழுதினவர் வைரமுத்துன்னு சொல்லியிருக்கேனே. இன்னொரு வலைத்தளத்திலும் வைரமுத்து என்று தான் சொல்லியிருந்தார்கள். ஆனால் யோகன் ஐயாவும் உஷாவும் இது முத்துகுமார் எழுதியது என்கிறார்கள். சரியாகத் தெரியவில்லை. உஷா ஏறக்குறைய உறுதியாகச் சொல்லுவதால் இது முத்துகுமார் எழுதியதாக இருக்கலாம். 'லட்சம் பல லட்சம் என்று தாய்மொழியில் சொல்லிருக்க ஒத்தச் சொல்லும் சிக்கவில்லை எதனாலே' என்ற வரி இது வைரமுத்துவாக இருக்கலாம் என்று என்னை எண்ணவைத்தது. அப்படி இருக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஒரே மாதிரி கற்பனையும் வரிகளும் பல கவிஞர்களுக்கும் வரலாம்.

    டைலமோ பாட்டு உங்களுக்கும் பிடிக்குமா? அப்படியென்றால் கஷ்டப்பட்டாவது அந்த வரிகளைப் புரிந்து கொண்டு பதிவிடப் பார்க்கிறேன். :-) நல்ல வேளை. எங்கள் வீட்டில் பார்னியை தாண்டி வந்தாயிற்று. இப்போதெல்லாம் டோரா தான் எப்போதும் தொலைக்காட்சியில் ஒடுகிறது. :-)

    Thursday, May 18, 2006 11:04:00 PM

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் யோகன் ஐயா. என் மனதைக் கவரும் பாடல்கள் என்றால் இந்த கவிநயங்கள் கண்டிப்பாய் இருக்க வேண்டும். இசையை விட கவிதையை என் மனம் மிகவும் ரசிக்கிறது; கவிதையை அடுத்து பாடகரின் குரல்; அப்புறம் தான் இசை. :-)

    நா. முத்துகுமாரின் பாடல்கள் என்று தெரியாமலேயே அவருடைய பாடல்களை ரசித்திருப்பேன் என்று எண்ணுகிறேன். யாராவது இது முத்துகுமாரின் பாடல் தான் என்று உறுதிபடுத்தினால் நன்றாக இருக்கும்.

    Thursday, May 18, 2006 11:06:00 PM

    கார்திக்வேலு said...
    Looks like quite few people were involved in the lyrics muthukumar/vairamuthu/Kuzhai .Ma .Pugazhendi


    kumaran could u pls post the
    "poo meethu yaanai" song i havent heard it yet

    http://www.ayngaran.com/MusicReviewDetail10.jsp

    Thursday, May 18, 2006 11:31:00 PM

    Anonymous said...
    அண்ணாச்சி,
    "டைலமோ"வுக்கு வரிகள கண்டுபுடிச்சி போட்டுராதீய. சில பாட்டுக சும்மா கேக்கத்தா லாயக்கி. நேரம் கெடச்சா "தம்பி" படத்துல வர "சும்மா கெடந்த சிட்டுக் குருவி"ங்ற பாட்ட போடுங்க. அது சூப்பரப்பூ.

    Friday, May 19, 2006 2:03:00 AM

    தி. ரா. ச.(T.R.C.) said...
    சூப்பர் பாட்டு குமரன். கொஞ்சம் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டா தந்து விட்டீர்கள் தி.ரா.ச

    Friday, May 19, 2006 9:16:00 AM

    Merkondar said...
    இந்த படலை நான் கேட்கவில்லை எனக்குபிடித்தெல்லாம் ஓல்டு படல்கள் தான்.

    Friday, May 19, 2006 9:36:00 AM

    johan -paris said...
    அன்பு என் ஆர்!
    புதுசாகவும் ;அப்பப்போ கேட்கக்கூடிய பாடல் வருகிறது. கல்லுக்குள் அரிசிபோல்.
    யோகன்
    பாரிஸ்

    Friday, May 19, 2006 9:47:00 AM

    குமரன் (Kumaran) said...
    என்ன தேவ். தேர்தல் தான் முடிஞ்சாச்சே. இன்னும் ஆருயிர் அன்பின் எல்லாம் பேச்சுல இருந்து போகலை போலிருக்கு? :-) உங்கள் நன்றிக்கு நன்றி. வாலிப உள்ளங்களைச் சுண்டி இழுக்கும்ன்னு சொல்றதுக்குப் பதிலா இந்தப் பாடல் வரிகள் யார் யாரைச் சுண்டி இழுக்குதோ அவர்களுக்கு எல்லாம் வாலிப உள்ளம் இருக்கிறது என்று சொல்லலாமோ? :-)

    Friday, May 19, 2006 11:03:00 AM

    குமரன் (Kumaran) said...
    உங்களுக்கு இந்தப் பாடல் பிடிப்பதில் எந்த வியப்பும் இல்லை பொன்ஸ். பிடிக்கவில்லை என்றால் தான் வியப்பு. :-) பாடலை ஒரே ஒரு முறை தான் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். அதனால் கேரள அழகைக் கவனிக்கவில்லை. நீங்கள் கேரள அழகு என்று சொல்வது இயற்கை அழகைத் தானே? :-)

    எல்லாருடைய ஆதரவும் வேண்டும் என்பதால் எல்லாவிதமான பாடல்களும் இங்கு பதிக்கலாம் என்று இருக்கிறேன். வந்து பாத்துட்டு உங்களுக்குப் பிடித்தப் பாடலாய் இருந்தால் சொல்லிட்டுப் போங்க.

    கொத்ஸ் வயசான ஆளா? என்ன அம்முணி சொல்றீங்க? நம்ம எல்லாரையும் விட சின்னப் பையன் (பையன் தானே?) என்று நினைத்துக் கொண்டிருந்தேனே? கொத்ஸ் கால்கரி வலைப்பதிவர் மாநாட்டிற்குச் சென்றிருப்பதால் நீங்கள் தப்பித்தீர்கள். :-)

    Friday, May 19, 2006 11:08:00 AM

    குமரன் (Kumaran) said...
    //யூத்க்கு பெரும் மதிப்பு கொடுக்கும் நம்மவர் அவர்...
    //

    சரியாச் சொன்னீங்க தேவ். நமக்கு நாமே மதிப்பு கொடுக்காட்டி வேற யாரு மதிப்பாங்க? சரியா?

    எனக்கும் கொத்ஸுக்கும் ஒரே வயசுன்னு யாரோ சொன்னாங்களே. இல்லியா?

    Friday, May 19, 2006 11:09:00 AM

    குமரன் (Kumaran) said...
    இந்தப் பாடலைக் கேட்டீர்களா சிவமுருகன். உங்கள் கணினியில் கேட்கமுடியாது என்று சொன்ன மாதிரி இருந்ததே? பாடலில் எது புரியவில்லை என்று சொல்லிங்கள். நன்றாய் புளி போட்டு விளக்கிவிடுகிறேன். :-)

    படமும் பார்ப்பதில்லை; தொலைக்காட்சியும் பார்ப்பதில்லையா? சரியாப் போச்சு அதனால் தான் 150 பதிவை நோக்கி இவ்வளவு வேக நடை போடுகிறீர்கள். :-)

    Friday, May 19, 2006 11:13:00 AM

    குமரன் (Kumaran) said...
    கார்திக்வேலு. கொஞ்சம் காதலா? இதை விட அதிகமா என்னங்க எதிர்பார்க்கிறீங்க? அருமையா காதலை சொல்லியிருக்காங்க இந்த பாட்டுல. நீங்க ரெண்டு வரியை மட்டும் எடுத்துப் போட்டிருக்கீங்களே. என்ன பொருளுங்க?

    Friday, May 19, 2006 11:15:00 AM

    குமரன் (Kumaran) said...
    உஷா, எத்தனை தடவை சொல்றது? என் பேரைப் பாத்தவுடனே ஓடாதீங்கன்னு. என்னோட விண்மீன் வாரத்துல இருந்து சொல்லிக்கிட்டு இருக்கேன். ஆனால் நீங்க கேக்கற மாதிரி இல்லை. அப்புறம் நானும் உங்க பேரைப் பாத்தாலே ஓடிடுவேன். ஆமா... :-)

    தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இராதுன்னு சொல்றீங்களே. நான் பதிவுக்குப் பொருத்தமாத் தான் தலைப்பு போடணும்ன்னு ரொம்ப மெனக்கிடுவேனே. என்னங்க சொல்றீங்க?

    'ஒரு மாலை இளவெயில் நேரம்'மும் நல்ல பாடல் தான். கொஞ்ச நாள் கழித்து அதனையும் இந்தப் பதிவில் போட்டுவிடலாம்.

    மூன்று உள்ளங்கள் வாழ்கன்னு சொல்லுங்க. என்னையும் சேர்த்து. இல்லாட்டி இந்தப் பாட்டையே போட்டிருக்க மாட்டேனே. :-)

    தாமரை யாருங்க? அவங்க எழுதுன பாட்டு ரெண்டு மூனு சொல்லுங்க.

    Friday, May 19, 2006 11:19:00 AM

    ramachandranusha said...
    குமரன்! அதுவா, "நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்" என்று எம் பெருமான் முருகனை அழைக்கிறீர் என்று தவறாய் புரிந்துக் கொண்டேன். தப்புதாங்க, கன்னத்துல போட்டுக்கிறேன்
    :-)))))))))))))))))
    தாமரை எழுதிய பாடல்கள். "வசீகரா என் நெஞ்சினிக்க" மற்றும்" "என்னைக் கொஞ்சம் மாற்றி, என் நெஞ்சில் உன்னை ஊற்றி" ஆகிய இரண்டும் எனக்கு தெரிந்தவை. சினிமா பாடல்களுக்கும் எனக்கும் உள்ள தூரம் மிக அதிகம்.

    Friday, May 19, 2006 12:34:00 PM

    Lakshmi said...
    kalakteengha kumaran!!!
    ippo latestaa vandha paadal "paartha mudalnaale" paatum podungha!!!!

    appadiye dappanguthu paatum konjam sidela podungha :-)

    Friday, May 19, 2006 1:30:00 PM

    கார்திக்வேலு said...
    Kumuran,
    Looks like your scope is ever expanding ,with all this lyrics request :-)

    I won't be surprised if u soon join siva and sundar.

    Friday, May 19, 2006 2:03:00 PM

    Sivabalan said...
    குமரன்,

    இங்கு வந்த ஆதரவை ஏற்று, இனி இதுபோன்று பாடல்களுக்கு என்று தனி தொடர் உங்களிடமிருந்து வரும் என நம்புகிறேன்!!

    (also பாதை மாறுவதை ஏற்று.. (just kidding)..)

    Friday, May 19, 2006 2:37:00 PM

    குமரன் (Kumaran) said...
    கார்திக்வேலு, நானும் இந்த 'பூ மீது யானை' பாடலைக் கேட்டதில்லை. கேட்டுப்பார்த்துப் பிடித்திருந்தால் இங்கு இடுகிறேன்.

    Saturday, May 20, 2006 7:04:00 AM

    குமரன் (Kumaran) said...
    உங்களுக்கும் பிடித்ததா தி.ரா.ச. மிக்க மகிழ்ச்சி. :-)

    Saturday, May 20, 2006 7:12:00 AM

    குமரன் (Kumaran) said...
    அனானிமஸ் அண்ணாச்சி, ஏன் அனானிமஸாவே போடறீங்க உங்க பின்னூட்டத்தை. Other பின்னூட்டம் போட்டால் உங்கள் பெயரையும் எழுதலாமே. டைலமோவுக்கு நானே நினைத்தாலும் வரிகள் கண்டுபுடிச்சி எழுத முடியாது போலிருக்கு. அது பிடிக்கும்ன்னு சொல்றவங்களும் (நீங்களும் எங்க வீட்டிலும்) வரிகள் எல்லாம் வேணாம்; கேக்கத் தான் இது நல்லா இருக்குன்றீங்க. அதனால் அந்த முயற்சி தள்ளப்படுகிறது. :)

    தம்பி படப்பாடல்கள் கேட்டதில்லை. கேட்டுப் பார்த்துப் பிடித்திருந்தால் இங்கு தருகிறேன். :-)

    Saturday, May 20, 2006 7:14:00 AM

    குமரன் (Kumaran) said...
    என்னார் ஐயா. யோகன் ஐயா சொன்னது போல் புதுப்பாடல்களிலும் கேட்கக்கூடிய பாடல்கள் வருகின்றன. சிவமுருகன் சொன்னதைப் போல 'old is gold; new is silver'. :-)

    Saturday, May 20, 2006 7:15:00 AM

    குமரன் (Kumaran) said...
    சரியாச் சொன்னீங்க யோகன் ஐயா. கல்லுக்குள் அரிசி போல்ன்னு. ஆனா அவரவர் காலத்தில் வரும் பாடல்கள் அவரவர்களுக்குப் பிடிக்கிறது என்று எண்ணுகிறேன். அதனால் தேவ், பொன்ஸ் போன்ற 'இளைய' தலைமுறையினர் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். :-)

    Saturday, May 20, 2006 7:16:00 AM

    குமரன் (Kumaran) said...
    உஷா, நீங்க நெனைச்சதுலே தப்பு இல்லை. ஆனா அப்படி செய்றது பெரும்பாலும் இராகவனாத் தான் இருக்கும்; நான் அப்படி செஞ்சதில்லை. ஓஓ... 'எனக்குப் பிடித்தப் பாடல்கள்'ன்னு விண்மீன் வாரத்துல போட்டேனே ஒரு பதிவு; அதுல பட்ட சூடா? :-) சூடு பட்ட பூனை மாதிரி ஆயிட்டீங்களா? :-)

    ரொம்ப கன்னத்துல போட்டுக்காதீங்க. வீங்கிடப் போகுது. அப்புறம் உங்க வீட்டு ஐயாவை எல்லாரும் தப்பா நினைச்சுக்கப் போறாங்க. :-) அது எப்படி? அவர் கன்னம் வீங்கினாத் தான் என்னைத் தப்பா நினைப்பாங்கன்னு சொல்றீங்களா? இருக்கும் இருக்கும். வீட்டுக்கு வீடு அதே கதை தானே. :-)

    தாமரை எழுதுன பாடல்கள்ன்னு நீங்க குடுத்த ரெண்டு பாடல்களும் எனக்கும் பிடிக்கும். விரைவில் பதிக்கிறேன். உங்களுக்கும் திரைப்பாடல்களுக்கும் வெகு தூரம்ன்னு சொல்றீங்க; ஆனா அது எனக்கும் அதற்கும் உள்ள தூரத்தை விட குறைவாகத் தானே இருக்கிறது? :-)

    Saturday, May 20, 2006 7:25:00 AM

    குமரன் (Kumaran) said...
    நன்றி லக்ஷ்மி. 'பார்த்த முதல் நாளே' பாட்டு எந்தப் படத்துல வந்தது? கேட்டுப் பார்த்துப் பிடித்திருந்தால் இங்கே இடுகிறேன். டப்பாங்குத்துப் பாடலாயிருந்தாலும் பிடித்திருந்தால் இங்கே போட வேண்டியது தான். சைட்ல என்ன மெயின்லயே போட்டுலலாம். :-)

    Saturday, May 20, 2006 7:27:00 AM

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் கார்திக்வேலு. எல்லோரும் அவரவர்களுக்குப் பிடித்தப் பாடல்களைப் பற்றி சொல்கிறார்கள். அவை எனக்கும் பிடித்தால் நிச்சயம் போட வேண்டியது தான். :) நான் ஏற்கனவே சிவா, சுந்தர் இவர்களுடன் சேர்ந்துவிட்டேன் என்றல்லவா நினைத்தேன். இல்லையா? இனிமேல் தான் சேரவேண்டுமா? :-(

    பி.கு. சிவா இங்கே என்னுடன் ஒரே அலுவலகத்தில் தான் பணிபுரிகிறார். என்னை வலையுலகிற்கு இழுத்துவந்ததே அவர் தான். நான் தொடக்கத்தில் எழுதிய பதிவுகள் அவர் சிவபுராணம் வலைப்பூவில் தான் வந்தன. சுந்தரும் நானும் நேரில் பார்த்ததில்லை என்றாலும் மதுரையிலோ அவர் சொந்த ஊரான வத்திராயிருப்பிலோ கட்டாயம் ஒருவரை ஒருவர் பார்த்திருப்போம் என்று எண்ணுகிறேன். நான் படிக்கும் போது வத்திராயிருப்பில் இரு வருடம் தங்கியிருக்கிறேன்.

    Saturday, May 20, 2006 7:31:00 AM

    குமரன் (Kumaran) said...
    இல்லை சிவபாலன். பாடல்களுக்கு இந்த வலைப்பூ மட்டும் தான். ஏற்கனவே நிறைய வலைப்பூக்கள் இருக்கின்றன. அவற்றிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். அதனால் புதுப் பாடல்களுக்கு என்று தனி வலைப்பூ இல்லை. வேண்டுமானால் இந்த நேயர் விருப்பங்களை எல்லாம் சிவா, சுந்தர், கீதாவிற்கு அனுப்பலாம். யாராவது ஒருவர் போடலாம். பாடல்களைக் கேட்டுப் பார்க்கிறேன். எனக்கும் பிடித்திருந்தால் நானே போடுகிறேன்.

    நான் முதலில் சொன்னது தான் பாதை மாறுவதற்கு பதில். எப்பவுமே என் வழி நடு வழி தான். ஆன்மிகம் பேசுவோம்; ஆட்டுக்கறி தின்போம்; காதலைப் பேசுவோம்; காவியும் பேசுவோம்; அறிவியலும் பேசுவோம்; அனைத்தும் பேசுவோம். :-)

    Saturday, May 20, 2006 7:35:00 AM

    ramachandranusha said...
    குமரன், "ஒன்றா இரண்டா ஆசைகள்" என்று ஆரம்பிக்குமே அந்த பாடல், அதுதாங்க "கலாப காதலா" பாடல்
    தாமரை எழுதியது. இன்னும் சரியாய் விவரம் தெரிந்தால் நானும் தெளிவேன்.
    .

    Saturday, May 20, 2006 8:27:00 AM

    கார்திக்வேலு said...
    குமரன்,
    உங்களுக்கு தக்க "பின்பலம்" இருப்பதை இப்பொது அறிந்து
    கொண்டேன் :-)
    //நான் முதலில் சொன்னது தான் பாதை மாறுவதற்கு பதில். எப்பவுமே என் வழி நடு வழி தான். ஆன்மிகம் பேசுவோம்; ஆட்டுக்கறி தின்போம்; காதலைப் பேசுவோம்; காவியும் பேசுவோம்; அறிவியலும் பேசுவோம்; அனைத்தும் பேசுவோம். :-) ///


    "தின்று விளையாடி இன்புற்று இருப்போமே துன்பமெல்லாம் போம் திரும்ப வாரா"


    :-)))

    Saturday, May 20, 2006 9:35:00 AM

    Anonymous said...
    방가요 ~

    Saturday, May 20, 2006 11:23:00 AM

    தி. ரா. ச.(T.R.C.) said...
    அது என்ன குமரன் 'உங்களுக்கும்'. இழிவு சிறப்பு உம்மையா? அல்லது உயர்வு நவிற்சியா? 100 தாண்டுவது என்று முடிவு எடுத்தாச்சு. தாண்டிடவேண்டியதுதான். தி.ரா.ச

    Saturday, May 20, 2006 11:57:00 AM

    குமரன் (Kumaran) said...
    உஷா. ஒன்றா இரண்டா பாடலும் அருமையான பாடல். விரைவில் அந்தப் பாடலையும் இங்கே அரங்கேற்றிவிடலாம்.

    Saturday, May 20, 2006 12:11:00 PM

    குமரன் (Kumaran) said...
    பின்பலம்ன்னு எதைச் சொல்றீங்க கார்திக்வேலு?

    உண்மை. அந்த பாரதியின் வார்த்தைகளில் எனக்கு மிக்க ஈடுபாடு உண்டு. :-)

    தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வோம்;
    தீமையெலாம் அழிந்து போம்; திரும்பி வாரா;

    Saturday, May 20, 2006 12:13:00 PM

    குமரன் (Kumaran) said...
    அனானிமஸ் ஐயா. ஏதோ சொல்ல வந்திருக்கிறீர்கள். ஆனால் அது சரியா வரவில்லையே. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள். திட்டவில்லை என்று நம்புகிறேன். :-)

    Saturday, May 20, 2006 12:14:00 PM

    குமரன் (Kumaran) said...
    தி.ரா.ச. தப்பா எதுவும் சொல்லலை. உங்களுக்கு அப்புறம் வந்து என்னார் ஐயா எனக்கு பழைய பாடல்கள் தான் பிடிக்கும் என்று சொன்னாரே; அது போல் நீங்களும் சொல்லுவீர்களோ என்று எண்ணியிருந்தேன். ஆனால் நீங்கள் சூப்பர் பாட்டுன்னு சொன்னீங்களா? அதில் வந்த வியப்பு தான் அந்த 'உங்களுக்கும்'. :-)

    ஆஹா, நீங்கள் 100 என்று சொல்லிவிட்டீர்களே. நான் அதற்கு மேலும் போகுமோ என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். :)

    Saturday, May 20, 2006 12:17:00 PM

    கார்திக்வேலு said...
    Kumaran ,
    i was referring to the fact that you alread know Siva and Sundar.

    This is what anony has to say
    as per google translator from
    Korean -- to English .(Beta version though)

    "Singing loudly bedspread ~".

    If you want to thank him you can say

    감사합니다

    இந்தப் பாடலின் /பதிவின் புகழ் கொரியா வரை எட்டியுள்ளதா :-)

    Saturday, May 20, 2006 12:59:00 PM

    குமரன் (Kumaran) said...
    இப்போது புரிந்தது பின்புலம் என்று எதைச் சொன்னீர்கள் என்று கார்திக்வேலு. :-) நன்றி.

    நீங்கள் சொன்னது சரி. இந்தப் பாடலின் புகழ் கொரியா வரை பரவியிருக்கும் போல் தான் தெரிகிறது. :-)

    Saturday, May 20, 2006 3:10:00 PM

    வெற்றி said...
    குமரன்,
    நல்ல ஓர் புதிய பாடலை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள். நான் வழமையாக பழைய பாடல்கள்தான் கேட்பது வழக்கம். அதனால் இப்பாடலையும் நீங்கள் அறிமுகம் செய்யும் வரை கேட்கவில்லை. இப் பாடலை ஜெயதேவ் எனும் பாடகர் பாடியுள்ளதாக musicindiaonline.com சொல்கிறது. இப் பாடகரை நான் இது வரை கேள்விப்படவில்லை.இவரின் குரல் மிகவும் மென்மையாகவும் இனிமையாகவும் உள்ளது. நன்றிகள்.

    Saturday, May 20, 2006 5:37:00 PM

    Venkataramani said...
    என்ன குமரன், சகலகலாவல்லவனா இருப்பீங்க போலிருக்கு. இந்த பாட்டை முன்னாடி கேக்கும்போதே நினைச்சேன் நல்ல இசைன்னு. இன்னிக்கு உங்க லிங்க்லே ரெண்டு தடவை கேட்டேன். புது இசையமைப்பாளரா? பாடகரும் இனிமையா பாடியிருக்கிறார். இப்படி மெலடிகளை நிறைய கொடுங்க. உங்க மத்த பதிவுகளை தான் பொறுமையா படிக்கமுடியல.. நம்ம புத்திக்கு கோளறுபதிகமெல்லாம் கோளாறுபதிகமா தெரியுது. என்ன செய்றது..

    Saturday, May 20, 2006 7:43:00 PM

    குமரன் (Kumaran) said...
    வெற்றி, நானும் இந்தப் பாடகரைப் பற்றி இதுவரைக் கேள்விப்பட்டதில்லை. ஆமாம் இவர் குரல் நன்றாக இருக்கிறது.

    Tuesday, May 23, 2006 11:54:00 AM

    குமரன் (Kumaran) said...
    வாங்க வாங்க வெங்கடரமணி. உங்கள் பதிவுகள் ஒன்றே ஒன்றை மட்டும் அண்மையில் நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் படித்தேன். விரைவில் அந்தப் பதிவில் பின்னூட்டம் இடுகிறேன். உங்களின் மற்றப்பதிவுகளையும் படிக்கிறேன். உங்களிடம் இருந்து அந்த மென்பொருளையும் வாங்கலாம் என்று இருக்கிறேன். அதனால் தான் ஒரு டெஸ்ட் பின்னூட்டமும் போட்டேன். :-)

    சகலகலாவல்லவன் எல்லாம் இல்லிங்க. கொஞ்சம் அளப்பரை விடற ஆளுன்னு வச்சுக்கோங்களேன். ஒரே வலைப்பூவுல எல்லாத்தையும் எழுதலாம் தான். ஆனா எப்படியோ இப்படி ஒவ்வொரு விதயத்துக்கும் ஒரு வலைப்பூன்னு தொடங்கி அது கணக்கில்லாம போய்க்கிட்டு இருக்கு. :-)

    இந்தப் பாட்டோட பாடகர் இசையமைப்பாளர் இரண்டுபேருமே புதுசு போல இருக்குங்க. ஆனா நல்ல பாட்டு. கோளறு பதிகம் உங்களுக்கு கோளாறு பதிகமா இருக்குன்னு சொன்னா நான் நம்பிடுவேனா? நீங்க தானே சொன்னீங்க உங்க படிப்பறையில திருமூலரும் இன்னும் சிலரும் இருக்காங்கன்னு. திருமூலரைப் படிக்கிறவருக்குக் கோளறு பதிகம் புரியாதா? :-)

    Tuesday, May 23, 2006 12:00:00 PM

    சிவமுருகன் said...
    குமரன் அண்ணா,

    இப்ப தான் இந்த பதிலை பார்த்தேன்.
    //
    இந்தப் பாடலைக் கேட்டீர்களா சிவமுருகன். உங்கள் கணினியில் கேட்கமுடியாது என்று சொன்ன மாதிரி இருந்ததே?//

    அச்சமயத்தில் மே மாதாதில் 13(சனி), 14 (ஞாயிறு)ல் சித்திரை திருவிழா பதிவிற்க்காக வீட்டருகில் உள்ள cafeல் போய் பதித்து வந்தேன் அச்சமயத்தில் கேட்ட பாடல்.

    // பாடலில் எது புரியவில்லை என்று சொல்லுங்கள். நன்றாய் புளி போட்டு விளக்கிவிடுகிறேன். :-) //

    ரொம்ப முக்கியம் :))))))

    //படமும் பார்ப்பதில்லை; தொலைக்காட்சியும் பார்ப்பதில்லையா? சரியாப் போச்சு அதனால் தான் 150 பதிவை நோக்கி இவ்வளவு வேக நடை போடுகிறீர்கள். :-)
    //

    மிகச்சரியாக சொன்னீர்கள். அட அடுத்த பதிவு 149 ஆ! ஆ! ஆ!. இப்ப தான் எனக்கே ஞாபகத்திற்க்கு வந்தது.

    Friday, May 26, 2006 5:19:00 AM

    ReplyDelete