Thursday, August 02, 2007

மினியாபொலிஸில் முக்கிய மேம்பாலம் தானே விழுந்தது - 7 பேர் பலி, பலர் காயம்

நேற்று மாலை 6:05 மணிக்கு மினியாபோலிஸ் அருகில் 35W நெடுஞ்சாலையில் மிசிசிப்பி ஆற்றின் மேலே அமைந்திருக்கும் பாலம் தானாக நொறுங்கி விழுந்தது. ஏறக்குறைய 50 வாகனங்கள் நொறுங்கிய பாலத்துடன் ஆற்றில் விழுந்தன. இது வரை குறைந்தது 7 பேர் இறந்ததாகவும் 60 பேர் காயமடைந்ததாகவும் 20 பேர் காணவில்லை என்றும் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த கொடிய விபத்தைப் பற்றி மேலும் அறிய இந்த செய்தி வலைத்தளங்களைப் பாருங்கள்.

http://www.cnn.com/
http://www.startribune.com/
http://www.twincities.com/

***

இப்போது எங்கள் வீடு வேறு திசையில் இருப்பதால் இந்தப் பாலத்தில் அவ்வளவாகப் பயணிப்பதில்லை. ஆனால் போன வருடம் வரை நான்கு வருடங்களாக இந்தப் பாலத்தின் வழியே தான் அலுவலகத்திற்குத் தினமும் சென்று வந்து கொண்டிருந்தேன். இந்த விபத்து நடந்த போது நெரிசல் மிகுந்த நேரம் என்பதால் பாலம் நொறுங்கிய பகுதியில் பல வண்டிகள் இருந்திருக்கின்றன. அதனால் சேதமும் அதிகமாக இருந்திருக்கிறது.

37 comments:

  1. குமரன்,

    நேற்று செய்தியை ட்டி.வியில் பார்த்தவுடன், உடனே மனசில் கொஞ்சம் கலக்கமிருந்தது.

    நல்ல வேளை எனக்கு தெரிந்தவர்கள் யாரும் 35W எடுப்பதில்லை (உங்களையும் சேர்த்துத்தான்) என்பதனை அறிந்ததும், relaxed. சேதம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. தெகா. நல்லவேளை உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. எனக்கு இன்னும் கலக்கமாகத் தான் இருக்கிறது. இதுவரை எனக்குத் தெரிந்தவர்கள் யாருமே (அலுவலகத்திலும் வேறு இடங்களிலும்) பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் எந்த நேரம் யார் வந்து என்ன சொல்லுவார்களோ என்ற எண்ணமே இருக்கிறது. :-(

    ReplyDelete
  3. Structutal Failure?!

    Poor Desiners..mmm..

    ReplyDelete
  4. In our term, We accept construction failures. Bcoz, it is not sole responsibilty of engineers. But, Structural failures are wrost part of engineers. It is really bad.

    Design engineers should kept behind bars! Shame on them!

    ReplyDelete
  5. ஓ! ஒங்க ஊர்லயும் இதெல்லாம் நடக்குதா! இந்தியால மட்டுந்தான் இப்பிடியோன்னு நெனச்சேன். ஒலகம் பூரா இதே நெலமைதான் போல. இங்க ஒரு நா இடி இடிச்சி ஒரு மெட்ரோ ரயில்வே பாலம் சேதமாயிருச்சு. அந்தப் பாலத்தைச் சரி செய்ய ரெண்டு மாசம். ஆகஸ்டு 25ம் தேதிதான் அந்தப் பாலம் வழியாப் போற மெட்ரோக்களை விடுவாங்களாம். ஆனா சொன்ன தேதிக்குச் செஞ்சுர்ராங்க இங்க.

    ReplyDelete
  6. ஆமாம் இராகவன். எல்லா ஊருலயும் நடக்குது. நம்ம ஊருல நடந்தா செய்திகளில் ஒரு ஓரத்தில் வந்து போய்விடும் - பாலம் இடிந்து 10 பேர் பலி. அவ்வளவு தான். அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவோம்.

    அங்கவாவது இடி இடிச்சு சேதமாச்சு. இங்க என்ன காரணம்ன்னே இன்னும் தெரியலையே?!

    ReplyDelete
  7. டிஸைன் 1967ல சரியாக இருந்திருக்கும் சிவபாலன். அப்புறம் மக்கள் தொகைப் பெருக்கம், நகர வளர்ச்சி என்று பல காரணங்களுக்காக அது சரியில்லாமல் போயிருக்கும். ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்து தான் வந்திருக்கிறார்கள். எதுவும் பெரிதாகப் பிரச்சனை தென்படவில்லை.

    இங்கே இந்த ஆற்றில் பல பெரிய படகுகள் போய்க்கொண்டிருக்கும். சில ஆலைகளும் இருக்கின்றன - அவை இந்த நீர்வழியைப் பயன்படுத்தும். அவற்றிற்குத் தொந்தரவில்லாத வகையில் இந்தப் பாலம் ஆற்றின் நடுவில் எந்தத் தூணும் இல்லாமல் கட்டப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதி அப்படியே நீரில் விழுந்துவிட்டது. அந்தப் பகுதியைத் தொட்டுக் கொண்டிருந்த பகுதிகள் நிலத்தில் விழுந்திருக்கின்றன.

    ReplyDelete
  8. காலையில இருந்து எல்லாப் பொட்டிகளும் அலறு செய்தியாகிப் போச்சுங்க

    ////பாலம் நொறுங்கிய பகுதியில் பல வண்டிகள் இருந்திருக்கின்றன. //
    62ஆம்

    ReplyDelete
  9. குமரா!
    இங்கு செய்தியில் காட்டினார்கள். அறிந்தவர் எவருக்கும் பாதிக்கப்படவில்லை.மகிழ்வே
    அறியாத பாதிக்கப்பட்டோருக்காகப் பிராத்திப்போம்.
    எவ்வளவு தொழில் நுட்பம் வளர்ந்த போதும், இவற்றை எங்கும் தவிர்க்க முடியவில்லை.

    ReplyDelete
  10. //அறியாத பாதிக்கப்பட்டோருக்காகப் பிராத்திப்போம்.
    //

    உண்மை ஐயா.

    ReplyDelete
  11. ஆமாம் இளா. நேற்றிரவிலிருந்து இதே செய்தி தான் எல்லாத் தொலைக்காட்சிகளிலும். வீட்டில் குழந்தைகள் பயந்து போகிறார்கள்.

    ReplyDelete
  12. this looks like an old bridge(at least 50yrs) if it is structural failure it would have failed long time ago...

    ReplyDelete
  13. if a bridge like this collapsed in india atleast 300 people would have died.....

    ReplyDelete
  14. குமரன், வணக்கம்! நானும் மின்னசோட்டாவில்தான் இருக்கேன் (Burnsville). சம்பவம் நடந்த அன்னிக்கு, அப்போதான் வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டு இருந்தேன். ஆனா வீடு வந்தபிறகுதான் பாலம் விசயம் தெரியும். என்னோட கியூபிலேருந்து பாத்தா அந்த பாலம் தெரியும்! இன்னிக்கு எல்லோரும் வந்து வந்து அந்த பாலத்தைப் பாத்துட்டு இருந்தாங்க. ரொம்பக் கொடுமை. எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் பாதிக்கப்படலைனாலும், முகம் தெரியா அந்த சக மனிதர்களுக்கு நம்முடைய இரங்கல்.

    நீங்க எங்கே இருக்கீங்க? இணையத்துல சந்திப்பதில் ரொம்ப மகிழ்ச்சி!

    ReplyDelete
  15. உண்மை தான் சோம்பேறி என்ற பெயரில் எழுதும் நண்பரே.

    ReplyDelete
  16. வணக்கம் தஞ்சாவூரரே! நான் நேற்று வீட்டிலிருந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். நண்பர் ஒருவர் தொலைபேசி சொன்ன போது தான் தெரியும். அப்புறம் தான் சன் தொலைக்காட்சியிலிருந்து இந்த ஊர் தொலைக்காட்சிகளுக்கு மாறி செய்தியை அறிந்து கொண்டேன்.

    உங்க கியூபிலிருந்து பாத்தா அந்த பாலம் தெரியும் என்றால் எங்கே வேலை பார்க்கிறீர்கள்? என் புரொபைல் பார்த்து எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். நான் எங்கே இருக்கிறேன் என்று சொல்கிறேன். நீங்களும் நானும் ஒரே இடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.

    ReplyDelete
  17. நேத்து டிவியிலே ஃப்ளாஷ் நியூஸ்ன்னு காமிச்சதும், ஊரைப் பார்த்துட்டு உங்க
    நினைவுதான் வந்துச்சு.

    கடவுளே எல்லாரையும் காப்பாத்துன்னு வேண்டிக்கிறதை விட்டுறமாட்டேன்.

    விபத்தில் உயிர் இழந்தவர்களை நினைச்சால் மனம் கலங்குது(-:

    ReplyDelete
  18. குமரன்
    யாஹூவில் படங்கள் மற்றும் செய்திகளை பார்த்த போது..
    இரண்டு விஷயங்கள் கண்ணில் பட்டது.
    மத்திய பாகம் முதலில் (?)உடைந்திருக்கிறது,பிறகு 3 துண்டுகளாக போய்யிருக்கிறது,அதே சமயத்தில் ஏதோ மேம்பாட்டு வேலைகள் நடந்தாகக்கூட சொல்கிறார்கள்.
    Str. Failure இந்த மேம்பாட்டால் கூட இருக்க வாய்புள்ளது.அதை செயல்படுத்துவதற்கு முன்பு பாலத்தின் Design சரி பார்த்திருப்பார்கள்.இதில் ஏதோ தவறு நடந்திருக்கலாம்.
    இரண்டாவது ,அதை தாங்கிப்பிடித்திருக்கும் ஸ்டீல் பீம்கள் முக்கியமான இடத்தில் துறுபிடித்து இளகியிருக்கும்,அது கைவிட்டவுடன் மீதி எல்லாம் பாளம் பாளமாக விழுத்திருக்கும்.
    இன்னும் கொஞ்ச நாளிம் ரிப்போர்ட் தான் பொது ஜன பார்வைக்கு வந்திடுமே!உங்கூரில்.
    இரண்டு பக்கங்களில் ஒரு பக்கத்தில் உள்ள ஒரு லாரி அந்த இறக்கத்திலும் பிரேக் போட்டு நிப்பாட்டி இருப்பது அதிசியம் தான்,ஏனென்றால் இந்த மாதிரி நேரங்களில் மனிதர்களின் இயக்கம் வெகுவாக பாதிக்கப்படும்.

    ReplyDelete
  19. குமரன்,
    இச் செய்தியை அறிந்ததும் உங்களின் ஞாபகம்தான் வந்தது. இந்தப் பாலம் எப்போது கட்டப்பட்டது? இது என்ன காரணத்தால் உடைந்தது எனக் கண்டு பிடித்து விட்டார்களா? Structural failures ? !

    ReplyDelete
  20. குமரனருளும் தமிழன்னையும் உங்கள் அருகிருந்து காப்பார்கள்,கவலையற்க !

    விபத்தில் நாமறிந்தவர் பாதிக்கப்படவில்லையெனினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நமது அனுதாபங்கள்.

    ReplyDelete
  21. //எல்லா ஊருலயும் நடக்குது. நம்ம ஊருல நடந்தா செய்திகளில் ஒரு ஓரத்தில் வந்து போய்விடும் - பாலம் இடிந்து 10 பேர் பலி. அவ்வளவு தான். அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவோம்//

    உண்மை தான் குமரன். அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவோம். ஆனா...இந்த ஊரில் அடுத்த வேலை பெரும்பாலும் மற்ற பாலங்கள் பற்றியதாகவே இருக்கும்!

    நகராட்சி, தேர்தல், மீட்டிங்குகள் என்று எல்லா இடத்தையும் இது பிடித்துக் கொள்ளும். மீடியாவும் சில நாள் வரை இதை விடாது! மறக்காமல் அடுத்த ஆண்டு நினைவஞ்சலி உண்டு...சிறிய இழப்புகளாய் இருந்தாலும் கூட!

    ReplyDelete
  22. நன்றி துளசிக்கா. விபத்தில் உயிரிழந்தவர்களுக்காகவும் காயம் அடைந்தவர்களுக்காவும் வேண்டிக் கொண்டே என்னால முடிஞ்சதைச் செஞ்சுக்கிட்டு இருக்கேன் அக்கா.

    ReplyDelete
  23. வெற்றி. நன்றி.

    காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டார்களா தெரியவில்லை. இன்றைய செய்தித்தாளைப் பார்க்கவேண்டும்.

    1967ல் கட்டிய பாலம் இது. சரியாக 40 ஆண்டுகள்.

    ReplyDelete
  24. குமார். பால மேம்பாட்டு வேலை வெறும் மேல்பூச்சு தான் என்று சொல்கிறார்கள். Strutural Repair எதுவும் செய்யவில்லையாம். அதனால் அது காரணமாக இருக்கும் என்று தோன்றவில்லை.

    ஆற்றில் படகுப் போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாமல் இருப்பதற்காக ஆற்றில் எந்த தூணும் இல்லாமல் கட்டியிருக்கிறார்கள். அது முக்கியக் காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. நீங்க சொன்ன மாதிரி இரும்புத் தூண்கள் துருப்பிடித்து இளகிப் போயிருப்பதற்கும் வாய்ப்புண்டு. ஆண்டில் நான்கு மாதங்களைத் தவிர மற்ற மாதங்களில் குளிரும் வெண்பனியும் இருக்கும் ஊர் எங்க ஊர். அதனால துருபிடிக்க வாய்ப்புகள் நிறைய உண்டு. ஆனால் ஸ்டீல் துருபிடிக்காது என்று சொல்வார்களே?

    ஒரே நேரத்தில் அந்தப் பாலத்தின் மீது அப்போது ஐந்து லாரிகள் முழுப் பளுவுடன் இருந்ததாகவும் ஒரு இடத்தில் படித்தேன் குமார். அதனாலும் ஏற்கனவே பழுதாக இருந்த ஏதோ ஒன்று முறிந்து போயிருக்குமோ என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  25. நன்றி மணியன் ஐயா.

    ReplyDelete
  26. உண்மை இரவிசங்கர். அதில் நன்மையும் உண்டு. சிறிய அளவில் தீமையும் உண்டு. நன்மையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை - விபத்தின் காரணத்தை அறிந்து அமெரிக்காவில் இருக்கும் எல்லா ஊர்களிலும் மீண்டும் இது நடக்காமல் என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்ந்து அதனைச் செயல்படுத்த முயல்வார்கள். தீமை - மீண்டும் மீண்டும் இந்த விபத்தைத் திரையில் காண்பித்து குழந்தைகள் மனத்தில் பெரும்பயத்தை விளைவிக்கிறார்கள். அன்றிரவு செய்திகளைப் பார்த்துவிட்டு மீண்டும் மீண்டும் பல கோணங்களில் காட்டப்பட்டப் படங்களைப் பார்த்துவிட்டு எத்தனைக் கேள்விகள் கேட்டாள் எங்கள் மகள். 'இதுவும் அந்தப் பாலம் தானா? எத்தனை பாலம் உடைந்தது? இதுவும் மினியாபொலிஸ் தானா? அப்பா அந்த வழியா போவீங்களா? ஸ்கூல் பஸ்ன்னு சொல்றாங்களே - குழந்தைங்க செத்துப்போயிட்டாங்களா? குழந்தைங்க செத்துப்போகலையில்லை? பேபீஸ் இருந்தாங்களா? பாரண்ட்ஸ் இருந்தாங்களா? 7 பேரு செத்துப்போனாங்கன்னு சொல்றாங்க - குழந்தைங்க செத்துப் போயிட்டாங்களா?' அப்பப்பா எத்தனைக் கேள்விகள் எத்தனைக் கேள்விகள். நேற்று இரவு சன் தொலைக்காட்சியில் அதனைக் காட்டியவுடன் 'இந்தியாவுலயும் அது நடந்துவிட்டதா?' என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.

    ReplyDelete
  27. குமரன்: அதிர்ச்சியாக இருக்கிறது. No news is good news என்று இருப்பவன். பாருங்கள் சேதி என்று பார்க்கப்போகும் போது இப்படி நிகழ்ந்து விடுகிறது. நீங்கள் செல்லும் வழியா அது? குழந்தையாக இருக்கும் போது அக்காவின் பிரிய குமரன் பேசும் வாக்கியமாக: வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை, யாமுண்டு அச்சமில்லை - என்று இருக்கும். அச்சமில்லை. அவன் அருள் போற்றுவோம். மறைந்த மனிதர்தம் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்வோம்.

    ReplyDelete
  28. உண்மை தான் கண்ணன் ஐயா.

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
    யாமிருக்க பயமேன் என்பவன் தாள் தொழுது இருக்கும் வரை இன்பமாக இருப்போம்.

    ReplyDelete
  29. குமரன்

    நேரம் கிடைக்கும் போது படித்துப் பாடுங்க! எதோ எனக்கு தெரிந்ததை பகிர்ந்துகொண்டுள்ளேன்!

    http://sivabalanblog.blogspot.com/2007/08/blog-post.html

    நன்றி

    ReplyDelete
  30. ஆற்றில் படகுப் போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாமல் இருப்பதற்காக ஆற்றில் எந்த தூணும் இல்லாமல் கட்டியிருக்கிறார்கள். அது முக்கியக் காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
    வாய்பில்லை குமரன். 40 வருடமாக தாக்கு பிடித்தது திடிரென்று விழ சில காரணங்கள் மட்டுமே இருக்கும்.
    சற்று முன் இங்கு செய்திகளில் தெருவில் உள்ள பாதுகாப்பு கேமரா எடுத்த படத்தை போட்டார்கள்.
    ஸ்டீல் என்றாலும் அதை தகுந்த முறையில் பாதுகாக்கவிட்டால் துரு பிடிக்கும்.
    இன்னும் கொஞ்ச நாளில் எல்லாம் வெளிசத்துக்கு வரும்.
    உயிரிழப்பு இதற்கு மேல் ஏறாமல் இருந்தால் நல்லது.

    ReplyDelete
  31. குமரன்,
    பதட்டமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். நண்பர்கள் எவரும் விபத்தில் சிக்கவில்லை என்பதையறிந்து ஆறுதலாக இருக்கிறது.

    ReplyDelete
  32. தெளிவுறுத்தியமைக்கு நன்றி குமார். என் ஐயத்திற்கு கட்டுமானத் துறையில் இருக்கும் நீங்கள் சொன்ன விளக்கத்திற்கு நன்றி.

    ReplyDelete
  33. கோவி.கண்ணன், பதட்டம் அன்றைய மாலையிலும் மறுநாள் காலையிலும் இருந்தது. அறிந்தவர் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தெரியவில்லை. அதனால் பதட்டம் குறைந்துவிட்டது. சிவபாலன் பதிவைப் பார்க்கும் வரை. :-) பார்த்தவுடன் மீண்டும் வேறு வகைப் பதட்டம் வந்தது. நல்லவேளை ஒருவர் பேசுவதற்காக வந்துவிட்டார். அவருடன் பணியைப் பற்றி பேசியதில் அந்தப் பதட்டமும் குறைந்தது. பதட்டம் குறைந்த பின் அவர் இடுகைக்குப் பின்னூட்டம் இட்டேன். :-)

    ReplyDelete
  34. என்னங்க குமரன், ஞாயித்துக்கிழம செல்லுல மெசேஜ் விட்டுருந்தேன். பிசியா இருகீங்க போல..

    ReplyDelete
  35. ஆமாம் தஞ்சாவூரரே. கொஞ்சம் பிசியாத் தான் வாழ்க்கை போயிக்கிட்டு இருக்கு. விரைவில் தொலைபேசுவோம்.

    ReplyDelete
  36. சுட்டிக்கு நன்றி பாலா. உடனே போய் படித்துவிட்டேன்.

    ReplyDelete