வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திருநாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!
அறம் வளர்ந்திடுக! மறம் அடிவுறுக!
சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக!
நம் தேயத்தினர் நாள் தொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
***
விடுதலை! விடுதலை! விடுதலை!
பறைய ருக்கும் இங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை
பரவ ரோடு குறவருக்கும்
மறவ ருக்கும் விடுதலை!
திறமை கொண்டதீமை யற்ற
தொழில் புரங்ந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)
ஏழை யென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தி யாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர் கர்ச
மானமாக வாழ்வமே! (விடுதலை)
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை யைக்கொ ளுத்துவோம்
வைய வாழ்வு தன்னில் எந்த
வகையி னும்ந மக்குள்ளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்க ளோடு பெண்களும்
சரிநி கர்ச மான மாக
வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)
***
ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று (ஆடு)
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை
ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடு)
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத்
தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே. (ஆடு)
எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே - பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே - இனி
நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்ட
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே. (ஆடு)
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம் - வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம். (ஆடு)
நாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம் - இது
நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம் - இந்தப்
பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம் - பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம். (ஆடு)
இனிய விடுதலை நாள் வாழ்த்துக்கள் குமரன்!
ReplyDeleteசீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
ReplyDeletehttp://sivabalanblog.blogspot.com/2007/08/blog-post_14.html
குமரன்,
ReplyDeleteஉங்கள் அனைவருக்கும் 60வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள் குமரன்.
ReplyDeleteஇனிய சுதந்திர வாழ்த்துகள் தந்தேன்
ReplyDeleteநனிசிறக்கும் என்றும்நம் நாடு
இரவிசங்கர், சிவபாலன், வெற்றி, செல்வன், ஓகை ஐயா - அனைவருக்கும் நன்றி கலந்த இனிய விடுதலை நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஇடுகையில் பாரதியாரின் பாடல்கள் இரண்டு இணைக்கப்பட்டிருக்கிறது.
ReplyDeleteநன்றி குமரன் ,
ReplyDeleteவாழ்த்துகள்!
பாரத் தாயின் புதல்வர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇங்கும் தொலைக்காட்சி விசேட நிகழ்சிகள் இட்டது.
யோகன் ஐயா & வவ்வால். நன்றிகள்.
ReplyDelete