நண்பர்கள் பலரும் ஏற்கனவே அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லிவிட்டார்கள். எல்லோரும் விரும்பும் வண்ணம் அவரின் குண நலன்களும் பழகும் விதமும் இருப்பது எல்லோருக்கும் தெரியும். அவரைப் பற்றித் தவறாகப் பேசியவர்களும் எண்ணியவர்களும் உண்டு. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று உணர்ந்த நண்பர்கள் அவரின் கருத்துகளுக்கு எதிர்கருத்துகள் இருந்தாலும் அவரைச் சந்தித்துத் தங்கள் இயல்பான நற்குணத்தைக் காட்டிக் கொண்டனர். ஐயா அவர்களின் பிறந்த நாளைப் பற்றிச் சொன்ன அண்ணன் கோவி.கண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி.
கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் பிறந்த நாளான இன்று 'என் எஸ்.கே' அவர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள் கூறி பெருமகிழ்ச்சியடைகிறேன்.
அவருக்கு அடியேனின் பிறந்த நாள் பரிசு கீழே இருக்கிறது.
கண்ணனின் விளையாட்டைத் தொடர்ந்து குமரனும் ஆட்டம் காண்பித்து என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி இருக்கிறீர்கள்.
ReplyDeleteஇப்படிப்பட்ட நண்பர்களைப் பெற,
"என்ன தவம் செய்து விட்டேன் யான்!"
மிக்க நன்றி, திரு. குமரன்.
// அண்ணன் கோவி.கண்ணன் //
ReplyDeleteஆகா ஆனந்தம் ! உறவு முறை மாறி இருக்கிறது ! நன்றி குமரன்
N(am) எஸ்கே ஐயாவுக்கு !
வாழ்த்துக்கள் !
கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பைக் கண்டீர்களா எஸ்.கே.? :-)
ReplyDeleteகுமரன், நல்ல வேளை பிழைத்தேன். என் பிறந்தநாள் என்று என்று சொல்லவில்லை :-))))))))))))))
ReplyDeleteஅதுவும் கண்ணன் தயவால்!
ReplyDeleteஅலுவலில் சொதப்பியதில் அவர் உதவி நாட,
அண்ணலின் அருட்சிரிப்பு கண்டேன்!
மனமுவகை கொண்டேன்!
சிறந்த பரிசுக்கு மிக்க நன்றி!
பின்னே நாலே வயசு மூத்தவரா நீங்க இருக்கிறப்ப ஐயான்னு கூப்புட்டா நல்லாவா இருக்கு கண்ணன் அண்ணன்? :-)
ReplyDeleteநீங்க சொல்லாட்டி என்ன உஷா. உங்களுக்கு என்னிக்குமே பிறந்தநாள்னு சொல்லி என்றென்றும் வாழ்கன்னு வாழ்த்திட மாட்டோம்? :-)
ReplyDeleteஅது சரி. என்னால இந்தப் பதிவை இன்னும் தமிழ்மணத்துக்கு அனுப்ப முடியலை. நீங்க எந்த வழியா வந்தீங்க? தேன்கூட்டுல தெரியுதோ?
N(am) எஸ்கே ஐயாவுக்கு
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
"ஆத்திகம்" அன்பருக்கு
அழகான வாழ்த்துக்கள்!
"கசடறக்" கற்றவர்க்கு
கவின்மிகு வாழ்த்துக்கள்!
என் எஸ்கே வை, N(am) எஸ்கே என்று மாற்றிக் காட்டிய சிங்கையின் சிங்கம் கோவி.கண்ணனார்க்கு நன்றி!
SK அவர்களுக்கு என் மனம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteபதிவளித்த குமரனுக்கும் நன்றி
SK அய்யாவிற்கு பிறந்த தின வாழ்த்துக்கள்..
ReplyDeleteபதிவிட்ட குமரன் சாருக்கு நன்றிகள்
நானும் கும்பலோட சேர்ந்து ஒரு கோவிந்தா போட்டுக்கறேன். :)
ReplyDelete//குமரன் (Kumaran) said...
ReplyDeleteபின்னே நாலே வயசு மூத்தவரா நீங்க இருக்கிறப்ப ஐயான்னு கூப்புட்டா நல்லாவா இருக்கு கண்ணன் அண்ணன்? :-)
//
குமரன்...!
நீங்களாகத்தான் ஐயான்னு கூப்பிடிங்க, இப்ப அண்ணா என்கிறீர்கள். இப்போ ஒருவரை ஒருவர் ஓரளவுக்கு தெரிந்திருக்கிறோம், அதனால் என்னை 'அடேய்' என்றால் கூட ஏற்றுக் கொள்வேன் !
:))
கண்ணன் அண்ணன் - ம் நல்லா இருக்கு !
:)
எஸ்.கே. ஐயா. ஒன்றை மறந்துவிட்டேனே. நம்ம நண்பர் மயிலை மன்னாருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து விடுங்கள். :-)
ReplyDeleteஒரே "K" மயமாக இருக்'கே'
ReplyDeleteSK
GK (கோவி.கண்ணன்)
K (குமரன்)
KRS (கண்ணபிரான்)
IK (இலவச கொத்தனார்)
ok ok.
அன்புக் குமரா!
ReplyDeleteஅடியேன் ரியூப் லைட் உடன் புரியவில்லை. புரிந்ததும்
ஓ என்......எஸ்.கே அண்ணாக்கா!! வாழ்த்துகிறேன் நானும். நவீன சிலேடை..;
யோகன் பாரிஸ்
happy birth day to Sri S K and also for Sri. Sriram (Ampi blog). Best Wishes.
ReplyDeleteகலைவாணர் என்று அழகாய்த் தமிழில் சொல்ல வேண்டியதுதானே குமரன். பெயரைத் தமிழ்லில் முதலெழுத்தை ஆங்கிலத்திலும் வைக்கும் பழக்கத்தை நாம் மாற்ற வேண்டும்.
ReplyDelete// சிவமுருகன் said...
ஒரே "K" மயமாக இருக்'கே'
SK
GK (கோவி.கண்ணன்)
K (குமரன்)
KRS (கண்ணபிரான்)
IK (இலவச கொத்தனார்)
ok ok. //
சிவமுருகன்...வருத்தம் வேண்டாம். ராவா ஜிரா வந்தாச்சு ;-)
யோகன் ஐயா. புகழனைத்தும் நாமக்கல் சிபிக்கே. கோவி.கண்ணன் அண்ணனின் பதிவில் சிபி இட்டிருந்த ஒரு பின்னூட்டத்தைப் படிக்கும் போது தான் இந்த எண்ணம் தோன்றியது. :-) அவர் எஸ்.கே.யின் பிறந்த நாள் என்.எஸ்.கே.யின் பிறந்த நாளும் என்று சொல்லியிருந்தார். அதனைப் படிக்கும் போது அதில் இருந்த அழகு கவர்ந்தது. அதனையே தலைப்பாய் இட்டேன். :-)
ReplyDeleteஇராகவன்.
ReplyDeleteகலைவாணர் என்று அழகாய் தமிழில் சொல்லியிருக்கிறேனே. நீங்கள் பதிவைச் சரியாகப் படிக்கவில்லையோ? தலைப்பில் என்.எஸ்.கே. என்று குறிப்பிட்டது கலைவாணரை இல்லை. :-)
//பெயரைத் தமிழ்லில் முதலெழுத்தை ஆங்கிலத்திலும் வைக்கும் பழக்கத்தை நாம் மாற்ற வேண்டும்.
//
Please note this point your honor...I mean..SK. :-)
//அடியேன் ரியூப் லைட் உடன் புரியவில்லை.//
ReplyDeleteயோகனின் நிலையில் தான் யானும். எண்டாலும், காலம் கடந்தாலும் எஸ்கே ஐயாவுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
வருகைக்கு நன்றி கனக்ஸ்.
ReplyDelete