அம்பிகா தனயா கஜானனா - அம்பிகை மகனே யானைமுகனே
கஜவதனா கணநாத கஜானன - யானைமுகனே கணங்களின் தலைவனே யானைமுகனே
சாயி கணேசா விநாயகா - சாயி கணேசனே விநாயகனே
த்ரிபுவன பாலக - மூவுலகையும் காப்பவனே
மங்கள தாயக - மங்களங்கள் அருள்பவனே
வித்யா புத்தி சித்தி ப்ரதாயக - கல்வி, அறிவு, செயல்திறம் நிலையாகத் தருபவனே
சாயி கணேசா விநாயகா - சாயி கணேசனே விநாயகனே
//சாயி கணேசா விநாயகா//
ReplyDeleteசாயி என்றால் அம்மா என்று பொருளா, குமரன்?
நல்ல ஒளிப்படம்; நம் குட்டி கணேசன் சிரிப்பே சிரிப்பு!
இது சாயி பஜனில் ஒரு பாடல் இரவி. சாயி பாபா என்றால் தெய்வீக தாய் தந்தை என்று பொருள்.
ReplyDeleteஇங்கே சாயி கணேசா என்பதற்கு சாயி உருவத்தில் இருக்கும் கணேசா என்று பொருள் கொள்ளலாம்.