நம் தேசப்பிதா மகாத்மாவை மகாகவி போற்றி பாடிய பாடல் காந்திஜியின் நினைவு நாளுக்காக....
வாழ்க நீ எம்மான்! இந்த
வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டு
பாழ்பட்டு நின்ற தாமோர்
பாரத தேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
மகாத்ம! நீ வாழ்க! வாழ்க!
வாழ்க நீ எம்மான் - எங்கள் தலைவனே ! நீ வாழ்க
இந்த வையத்து நாட்டில் எல்லாம் - இந்த உலகத்தில் உள்ள நாடுகளில் எல்லாம்
தாழ்வுற்று - கீழான நிலைமை அடைந்து
வறுமை மிஞ்சி - வறுமை மிகுந்து
விடுதலை தவறி - விடுதலை இழந்து அடிமையுற்று
கெட்டு பாழ்பட்டு
நின்ற தாம் ஒர்
பாரத தேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகாத்ம!
நீ வாழ்க! வாழ்க!
Mahatmavin ninaivu naal enbathai maranthu vitten. Nandri.
ReplyDeleteKumaresh
நன்றி குமரேஷ்.
ReplyDeleteஇதுக்கு முன்னாடி இந்த பாட்டை படிச்ச பொழுது என்னடா இவர் காந்தியை எம்மான் அப்படிங்கிறாறே சரி கவரி மானைதான் இப்படி செல்றார் போல இருக்குன்னு நினைச்சிகிட்டேன். நல்ல விளக்கம்.
ReplyDeleteநன்றி சந்தோஷ்.
ReplyDeleteபாரதிக்கே விலக்கம் தேவைப்படுகிரதென்பது ஜீரணிக்கமுடியவில்லை..
ReplyDeleteஅருஞ்சொற்பொருள் எழுஞ்சொர்பொருளாகிவிட்டதா?
உங்கள் தமிழ்ப் பணி தொடரட்டும் குமரன்.
சிறில் அலெக்ஸ்,
ReplyDeleteமுக்கால் வாசி பாரதிக்கு விளக்கம் தேவையில்லை தான். ஆனால் அவரின் கவிதைகளுக்கும் சில நேரங்களில் விளக்கம் தேவையாய் இருக்கிறது. எனது 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' வலைப்பூவைப் பார்த்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.
நன்றி சிறில் அலெக்ஸ்.
மீதி முழு பாட்டையும் போட்டிருந்தாலென்ன குமரன்
ReplyDeleteஎனக்கு பிடிச்சது
'படிமிசைத் தலைமையெய்தும்
படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்
முடிவிலா கீர்த்தி பெற்றாய்
புவிக்குள்ளே முதன்மையுற்றாய்'
எப்போது எழுதியது பார்த்தீர்களா
புவியில் முத்ன்மைபெற்ற மனிதர் மகாத்மாகாந்தி
இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதராய் தேர்ந்தெடுக்கப்பட்டதை அப்போதே எழுதி வைத்த பாரதியும் வாழ்வான்
அடுத்த முறை முழுப் பாட்டும் போடறேன் அக்கா. ஆமாம். நீங்கள் சொன்ன மாதிரி பாரதி பல விஷயங்களில் தீர்க்க தரிசியாகத் தான் இருந்திருக்கிறார்.
ReplyDeleteவாழ்க நீ மகாகவி!
ReplyDeleteவாழ்க நீ எம்மான்னு பாரதியார் பாடினா வாழ்க நீ மகாகவின்னு நீங்க பாடறீங்க. நல்லா இருக்கு ஜோ. :-)
ReplyDeleteகுமரன், இப்பொழுது எங்கிருக்கிறீர்கள்?
ReplyDelete