Sunday, January 29, 2006

138: *நட்சத்திரம்* - முன்னாள் விண்மீன் ஆகிறேன்

ரொம்ப சந்தோசமா இருக்குங்க. விண்மீன் வாரம் ரொம்ப நல்லா இருந்தது. என் எல்லா வலைப்பூக்களிலும் இந்த வாரம் இட்டப் பதிவுகள் இந்தப் பதிவோடு சேர்த்து 18 பதிவுகள். ஏற்கனவே மற்றப் பதிவுகளை எழுதி வைத்திருந்ததால் அவற்றை இந்த வாரம் வரிசையாக இடுவது கடினமாக இல்லை. இந்தப் பதிவை இப்போது தான் எழுதுகிறேன். என்ன எழுதுறதுன்னு தெரியலை. அதனால் முன்னாள் நட்சத்திரங்களோட நட்சத்திர வாரக் கடைசிப் பதிவுகளைப் பார்த்து இந்தப் பதிவை எழுதுறேன். :-)

'ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரத்தின் சிறப்பையும் அடையாளங் காண்பதற்காக தமிழ்மண வானில் ஒவ்வொரு வாரத்தையும் நட்சத்திர வாரமாக ஆக்கி, ஒரு நட்சத்திரத்தைப் பிடித்திழுத்து துருவ நட்சத்திரமாகவும் ஆக்கி, 'அட பளிச்சுன்னு தனியா தெரியுதே என்னன்னு பாப்போம்' என்று பார்ப்போர் கவனத்தைக் கவர வைத்து, அந்நட்சத்திரத்தின் எழுத்துத் திறனை அனைவரும் பார்க்கும்படியாக வைக்க மேடை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் காசி, மதி மற்றும் குழு நண்பர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். இது மிக நல்ல முயற்சி என்று வாயால் சொல்லுவதைவிட அனுபவித்தே பார்த்துவிட்டேன். ' (நன்றி சுந்தர்).

இந்த வாரம் பின்னூட்டங்களுக்கும் குறைவில்லாமல் இருந்தது. முதல் பதிவுக்கு வந்த பின்னூட்ட எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருந்தாலும் மற்றப் பதிவுகளுக்கு எதிர்பார்த்த அளவு பின்னூட்டங்கள் இருந்தன. நன்றி மறக்காதவர்கள் தமிழ்மண அன்பர்கள் என்று உறுதி செய்து விட்டார்கள் :-) மிக்க நன்றி.

1. வாழ்வினிலே ஓர் நாள் திருநாள் - 181 பின்னூட்டங்கள்.
2. என் வலைப்பூக்கள் ஓர் அறிமுகம் - 32 பின்னூட்டங்கள்
3. முருகன் அருள் முன்னிற்கும் - 47 பின்னூட்டங்கள்
4. எனக்குப் பிடித்தப் பாடல்கள் - 50 பின்னூட்டங்கள்
5. பொருநைத் துறைவன் - 25 பின்னூட்டங்கள் 6. ஜன கன மன - 36 பின்னூட்டங்கள்
7. இயற்கை குணம்? - 27 பின்னூட்டங்கள்
8. தமிழ் இறைவனுக்கும் முன்னால் - 29 பின்னூட்டங்கள்
9. தமிழா ஆரியமா? - 21 பின்னூட்டங்கள்
10: வெண்மதியே வெண்மதியே நில்லு... - 10 பின்னூட்டங்கள்

இங்கு நட்சத்திரப் பதிவு பக்கத்தில் தெரிந்த பதிவுகளுக்கு மட்டுமே பின்னூட்ட எண்ணிக்கையைக் கொடுத்திருக்கிறேன். மற்ற வலைப்பூக்களில் வந்த பதிவுகளுக்கு என்றும் கிடைக்கும் அளவுக்கு பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன.

வாரத்தின் பின்பாதியில் இட்டப் பதிவுகளுக்கு இன்னும் பின்னூட்டங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த எண்ணிக்கைகள் இந்தப் பதிவை எழுதும் போது இருக்கும் நிலவரம். :-)

(பின்னூட்ட எண்ணிக்கையைத் தரும் ஐடியா உதவி: ஜோசஃப் சார். அவருக்கு நன்றி)

உலகம் சுற்றும் வாலிபன் ஜோ அவர்கள் தன் விண்மீன் வார இறுதியில் பின்னூட்டம் கொடுத்த எல்லோரையும் அடைமொழியுடன் தனித்தனியே 'அவர்களே' என்று விளித்து நன்றி சொல்லியிருந்தார். அப்படியே நானும் செய்யலாம் என்று எழுதத் தொடங்கினேன். பட்டியல் நீண்டு கொண்டே போவதால், போன வார நட்சத்திரம் முத்துக்குமரன் அவர்கள் செய்த மாதிரி பின்னூட்டம் இட்ட எல்லோருடைய பெயரையும் சொல்லி மொத்தமாக நன்றி சொல்லிவிடுகிறேன். அதான் ஏற்கனவே ஒவ்வொரு பதிவிலும் தனித்தனியாய் அவர்களுக்கு நன்றி சொல்லியாச்சே. :-)

நடராஜன், செல்வன், இராகவன், ஜோ, முத்துக்குமரன், ஞானவெட்டியான் ஐயா, சிவா, பொன்னம்பலம், தருமி ஐயா, ஆனந்த், நாமக்கல் சிபி, பரஞ்சோதி, துளசி அக்கா, இளவஞ்சி, சதீஷ், தேசிகன், ராமசந்திரன் உஷா, இலவசக் கொத்தனார், சதயம், ஜோசஃப் சார், மூர்த்தி, மணியன், இராமநாதன், தாணு அக்கா, என்னார் ஐயா, சிங். செயகுமார், தேன் துளி, கயல்விழி, நடேசன் சார், அப்டிபோடு அக்கா, சோம்பேறிப் பையன், தி.ரா.ச. சார், முகமூடி, கீதா, முத்து (தமிழினி), குமரேஷ், ஜாபர் அலி, கிறுக்கன், chameleon - பச்சோந்தி, மோகன் தாஸ், நிலா, நாதோபாஸனா, பதி ஐயா, கார்த்திக் (கே.எஸ்), ஜோகன் - பாரிஸ், சந்தோஷ், சாம், சிறில் அலெக்ஸ், கார்த்திக் ஜெயந்த், சமுத்ரா, சுந்தர், கைப்புள்ள, டோண்டு சார், கொழுவி, APJK எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னும் வருங்காலத்தில் இந்தப் பதிவுகளையும் என் எதிர்காலப் பதிவுகளையும் படித்துப் பின்னூட்டம் இடப் போகும் எல்லாருக்கும் மிக்க நன்றி. பின்னூட்டம் இடாமல் ஆனால் படித்து ரசித்த அன்பர்களுக்கும் மிக்க நன்றி.

சரி அடுத்து என்ன? முத்துக்குமரன் தன் பதிவுக்கு வந்து போனவர்கள் எண்ணிக்கையை counter மூலம் பார்த்துச் சொல்லியிருந்தார். நானும் சொல்கிறேன்.

Counter ஏறக்குறைய 2200 தடவை இந்த வாரத்தில் 'கூடல்' வலைப்பூ பார்க்கப் பட்டிருக்கிறது என்று சொல்கிறது. ஆனால் அந்த எண்ணிக்கையில் நானே பார்த்தது எத்தனை தடவை என்றும், பின்னூட்டம் இட்டவர்கள் என் மறுமொழியைப் பார்ப்பதற்கும் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்பதற்கும் வந்து பார்த்தது எத்தனை தடவை என்றும் சொல்ல முடியாது ஆகையால் இந்த எண்ணிக்கையை ஐந்தால் வகுத்து அதனையே சரியான எண்ணிக்கையாய் எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். அப்படிப் பார்த்தால் அந்த எண்ணிக்கை 440. இதுவும் அதிகமாகத் தான் தோன்றுகிறது.

'நட்சத்திரப் பதிவு' பக்கத்துக்காக நான் எழுதிய என் அறிமுகக் கவிதைக்கு அழகாக பொருள் சொன்ன இராகவனுக்கும் மயிலாருக்கும் என் சிறப்பு நன்றிகள். அதனை கிண்டல் செய்து ஒரு பதிவு போட்ட சின்னவருக்கும் இளவஞ்சிக்கும் நன்றிகள். இந்த மாதிரிக் கிண்டல் பதிவுகள் தான் இந்த வாரம் வந்தது. சங்கடப்படுத்தும் பின்னூட்டங்களோ பரபரப்பூட்டும் விமர்சனங்களோ வரவில்லை. அதற்கும் மிக்க நன்றி. இந்த வாரத்தில் படித்துப் பின்னூட்டம் இட வேறு சூடான தலைப்புகள் கிடைத்தும் என் பதிவுக்கு வந்து படித்தும் பின்னூட்டம் இட்டும் ஊக்கமளித்த எல்லா அன்பு நெஞ்சங்களுக்கு சிறப்பு நன்றிகள். :-)

நிலாவும் ராமச்சந்திரன் உஷாவும் நான் ஆன்மிகத்தைப் பற்றித் தான் அதிகம் எழுதுகிறேன் என்பதால் எனது ஆன்மிகம் அல்லாதப் பதிவுகளையும் அப்படியே நினைத்துக் கடைசி நிமிடத்தில் கண்டுகொண்டு படித்தோம் என்று சொல்லிப் பின்னூட்டம் இட்டிருக்காங்க. அப்படி நிறைய பேர் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். 'கூடல்', 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' & 'இந்தியக் கனவு 2020' இந்த வலைப்பூக்களில் ஆன்மிகம் அவ்வளவாய் வராது. அதனால் தைரியமாக இந்த வலைப்பூக்களை நீங்கள் படிக்கலாம். ஆன்மிகக் கடலில் கண்டெடுக்கும் முத்துக்கள் மற்ற வலைப்பூக்களில் இருக்கும். இந்த வலைப்பூக்களில் வேறு கடல்களில் கண்டெடுக்கும் முத்துக்களும் இயற்கைச் செல்வங்களும் இருக்கும் என்று சொல்லிக் கொள்கிறேன். :-)

இந்த வாய்ப்பினைக் கொடுத்து புதிய நண்பர்கள் இணைய உலகில் எனக்கு அறிமுகமாக உதவிய மதி அவர்களுக்கும் காசி அவர்களுக்கும் மற்றும் தமிழ்மண நிர்வாகக் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இது வரை என் வண்டி அதிவேகவமாய் ஓடி இதோ நாலு மாதங்கள் முடியும் முன்னரே 138 பதிவுகள் இட்டாயிற்று. நண்பர்கள் பலரின் கருத்துக்கு இணங்க இனிமேல் வண்டியின் வேகத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். தமிழ்மணம் ஒரு அடிக்சன் ஆகிவிட்டதால் எத்தனை தூரம் வேகத்தைக் குறைத்துக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

அடடா. ஏறக்குறைய மறந்தே போய்விட்டேன். நான் முதல் பதிவில் சொன்னது போல தமிழ்மணத்தில் இருக்கும் எல்லாப் பதிவாளர்களுக்கும் இந்த நட்சத்திர வாரம் என்னும் வாய்ப்பு நிச்சயமாகக் கிடைக்கும். உங்களுக்கு அது விரைவில் கிடைக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன். வரும் வாரங்களுக்காக விண்மீன்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பார்கள். அப்படிப் பட்டவர்களுக்கு என் சிறப்பான வாழ்த்துகள். வாங்க. வந்து கலக்குங்க.

இந்த வாரம் எப்படி இருந்தது? நிறைகள் எவை? குறைகள் எவை? எது பிடித்தது? எது பிடிக்கவில்லை? இந்த வாரத்தை நான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேனா? போன்றவைகளுக்கு உங்கள் கருத்துக்களை மறக்காமல் எனக்குத் தெரியப் படுத்துங்கள். அது எனக்கு மட்டும் இல்லாமல் இனிவரும் எல்லா விண்மீன்களுக்கும் உதவியாக இருக்கும்.

அப்புறம்... இந்த வாரம் முழுவதும் '*நட்சத்திரம்*' என்று பதிவுகளின் தலைப்பில் இட்டேன். இனி வரும் பதிவுகளில் '*முன்னாள் நட்சத்திரம்*' என்று போட்டு பதிவுகள் போடலாமா என்று கொஞ்சம் சொல்லுங்களேன்?! :-)

66 comments:

  1. குமரன் அசத்திட்டிங்க.

    உங்க எல்லா பதிவையும் படிக்கவேணுமென்கிற ஆவல் இருந்தாலும்.. படிக்க முடியவில்லை. எனக்கு ஆச்சரியமாக இருக்கும் இவருக்கு எப்படி இவ்வ்வ்வளவு பொறுமை இருக்கிறது என்று. படிக்கவே எனக்கு அவ்வளவு பொறுமை இல்லை.. ம்ம்.. எனினும் என்னால் இயன்ற வரையிலும் உங்கள் நட்சத்திரப் பதிவுகளை படித்தேன் ரசித்தேன்.. அனைத்தும் அருமை. சில ஆன்மீக கட்டுரைகளை படித்தேன்.. ஆனாலும் பின்னூட்டமிடுமளவுக்கு நமக்கு ஞானம்(ஆன்மிக) பத்தாது. :)

    ரொம்ப சிறப்பா இருந்தது. நட்சத்திரங்கள் எழுதின பதிப்புகளில் உங்களுடையதுதான் நான் அதிகம் படித்தது. நமக்கு எப்பவும் கவிதைதான் சரி :).

    "அப்புறம்... இந்த வாரம் முழுவதும் '*நட்சத்திரம்*' என்று பதிவுகளின் தலைப்பில் இட்டேன். இனி வரும் பதிவுகளில் '*முன்னாள் நட்சத்திரம்*' என்று போட்டு பதிவுகள் போடலாமா என்று கொஞ்சம் சொல்லுங்களேன்"

    அதுக்கென்ன சேர்த்துக்கங்க. ஆனால் பதிவின் தலைப்பில் இல்லாம '**முன்னாள் நட்சத்திரம்** குமரன்' என்று பெயரை மாற்றிவிட்டால் யாரும் கேட்கமாட்டங்கல்ல

    என்ன நான் சொல்றது :))

    வாழ்த்துக்கள்

    அன்புடன்
    கீதா

    ReplyDelete
  2. குமரன், பதிவுகளின் பொருள் எனக்கு பிடித்ததா இல்லையா என்ற கேள்வியை விட்டு விட்டுப் பார்த்தால், உங்கள் உழைப்பும்,ஆன்மிகத்தின் பால் உங்களுக்கு உள்ள ஈடுபாடு நன்றாக தெரிந்தது. நட்சத்திர வாரம் முடிந்ததும்,
    எல்லாரையும் போல, நீண்ட விடுப்பில் போகாமல் தொடர்ந்து எழுதுங்க.

    ReplyDelete
  3. Kumaran,

    Must have been a busy week. Take rest:-)

    Please add ~1000 more page views in http://www.thamizmanam.com/star_post.php page!

    Thanks,
    -Kasi

    (excuse me for english)

    ReplyDelete
  4. நல்ல வாரம் சூப்பு.

    மு.ந ன்னு போட்டுக்க வேற ஆசையா? நடக்கட்டும் நடக்கட்டும்.

    பதினெட்டு பதிவுகள் யாருமே போட்டிருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். அந்த ரெக்கார்ட உடைக்க உங்கள விட பொறுமைசாலி இனிமே பொறந்துதான் வரணும். அதனால அ.ப.போ.மு.ந.சூப்பு ன்னு முன்னுரை எல்லா பதிவுக்கும் போட்டுடுங்க.

    ReplyDelete
  5. "Counter ஏறக்குறைய 2200 தடவை இந்த வாரத்தில் 'கூடல்' வலைப்பூ பார்க்கப் பட்டிருக்கிறது என்று சொல்கிறது. ஆனால் அந்த எண்ணிக்கையில் நானே பார்த்தது எத்தனை தடவை என்றும், பின்னூட்டம் இட்டவர்கள் என் மறுமொழியைப் பார்ப்பதற்கும் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்பதற்கும் வந்து பார்த்தது எத்தனை தடவை என்றும் சொல்ல முடியாது ஆகையால் இந்த எண்ணிக்கையை ஐந்தால் வகுத்து அதனையே சரியான எண்ணிக்கையாய் எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். அப்படிப் பார்த்தால் அந்த எண்ணிக்கை 440. இதுவும் அதிகமாகத் தான் தோன்றுகிறது."

    நீங்கள் கூறுவது போல இல்லை. என்னுடைய கவுண்டர் நான் விசிட் செய்யும்போது எண்ணிக்கையைக் கூட்டுவது இல்லை. அதுவே சாதாரணமாக எல்லாவித கவுண்டர்களுக்கும் பொது விதியாகும் என்றுதான் நினைக்கிறேன். ஆகவே நீங்கள் ஐந்தினால் எல்லாம் வகுக்க வேண்டாம்.

    மட்டுறுத்தல் கலாட்டாவில் உங்கள் பதிவுகள் பக்கம் அதிகம் வர கைவரவில்லை.

    இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடையத் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க http://dondu.blogspot.com/2005/12/2.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. குமரன்,
    உங்கள் பதிவுகள் அனைத்துமே நன்றாக இருந்தது. இடையிடையே சூடான பின்னூட்டமிட முடியாவிட்டாலும் எல்லா பதிவுகளையும் படித்தேன். ஆனாலும் நட்சத்திரத்தின் மேல் என்ன அவ்வளவு மோகம்? ஆஸ்தான வித்வான் மாதிரி `தமிழ்மணத்தின் நிரந்தர நட்சத்திரம்’ன்னு பட்டம் கொடுக்க ஏதாவது வாய்ப்பிருக்கான்னு மதியிடம் கேட்டுப் பார்க்கலாம்.

    ReplyDelete
  7. குமரன்,
    இந்த வாரம் இனிய வாரமாய் கழிந்தது. உங்கள் பதிவிடும் வேகத்திற்கு என்னால் படிக்க முடியவில்லை. அதிலும் ஆன்மீகப் பதிவுகள் ஆற அமர படித்து இன்புறவேண்டியவை.

    'முன்னாள்' என்பதைவிட "நிரந்தர" என்று போட்டுக் கொள்ளலாம்.

    ReplyDelete
  8. குமரன்
    எல்லா பதிவுகளையும் படித்தேன். எளிமையாக எழுதி இருந்தீர்கள். சில பதிவுகளில் (கருமையான பெரிய விலங்கு) ராமனாதனுடன் உங்கள் விவாதத்தை ரசித்தேன். இம்பர் வாழ் எல்லை ராமனையே பாடி என் கொணர்ந்தாய் பாணா நீ என்ற பாடலில் கைம்மா என்பதற்கு கருமை நிறமுள்ள யானை என்று பொருள் வரும் என்பதை சொல்லி விவாதத்தை வளர்த்த விரும்பினாலும் அது எருமையையோ யானையையோ குறிக்காமல் பெரிய விலங்கு என்பதை மட்டுமே சொல்லும் என்பதால் பேசாமல் இருந்துவிட்டேன். தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  9. குமரன்,

    பதிவுகளைத் தொடர்ச்சியாக வாசிக்காவிட்டாலும் (எங்க போயிடப்போவுது?) "பார்த்துக் கொண்டேயிருந்தேன்" பின்னூட்டமெல்லாம் இப்போது இட்டால்தான் என்பதில்லையே! :)

    பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

    // இனி வரும் பதிவுகளில் '*முன்னாள் நட்சத்திரம்*' என்று போட்டு பதிவுகள் போடலாமா என்று கொஞ்சம் சொல்லுங்களேன்?! :-)//

    நட்சத்திரங்கள் எந்நாளும் நட்சத்திரங்களே! "முன்னாள்" என்றால் உதிர்ந்து கரைந்து காணாமல் போனவை. அந்த வகையில் நீங்கள் சேர்ந்துவிடக் கூடிய நபர் இல்லை - என்றும் தமிழிணைய வானில் பிரகாசிக்கக் கூடிய நட்சத்திரமாகவே மின்னுங்கள். வாழ்த்துகள்.

    அன்புடன்
    சுந்தர்.

    ReplyDelete
  10. நண்பரே நட்சத்திரகுமரன் ஆரவாரமான வாரம் நட்சத்திர முதல் நாள் பின்னூட்டம் யார் கண் பட்டதோ கமெண்ட் மாடரேஷன் வந்து விட்டது. நட்சத்திரம் என்றும் ஒளிரும். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. இந்த நட்சத்திர வாரத்தில் உங்கள் பதிவுகள் எல்லாமே ரசிக்கும்படியாக இருந்தன.

    [எப்போதும் போலவே :) ]

    வாழ்த்துக்கள்.

    நன்றி,

    ReplyDelete
  12. Hi
    Enjoyed your writings. Will be regularly visiting your blogs.
    Thanks
    Sam

    ReplyDelete
  13. நல்ல வாரம் தம்பி., சலசலப்பான கருத்தை எழுதினாலும்., இங்க சலம்பலில்ல பாருங்க.

    இந்தப் 'போலி' கலாட்டாவால் இங்கு கடைசி இரு நாட்கள் பதிவிற்கு தாமதமாகவே வர நேர்ந்தது.

    நல்லதொரு வாரம் தந்ததற்கு நன்றி.

    ReplyDelete
  14. // இனி வரும் பதிவுகளில் '*முன்னாள் நட்சத்திரம்*' என்று போட்டு பதிவுகள் போடலாமா என்று கொஞ்சம் சொல்லுங்களேன்?! :-)//

    இது உங்கள் விருப்பம் குமரன். ஆனால் எங்கள் உள்ளத்தில் குமரன் என்றென்றும் பிரகாசிக்கும் ஓர் நட்சத்திரமே.

    ReplyDelete
  15. kumaran you are our aanmiika super star.So you are always a star in our hearts.Thanks for the treat you gave us for the whole week.


    "Once more.."

    ReplyDelete
  16. வாழ்த்துகள் குமரன். நட்சத்திர வாரத்தை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டமைக்கு.

    இந்த வாரம் நான் ஊரில் இல்லாததால் சரியாகப் பின்னூட்டங்கள் இடமுடியவில்லை. இன்றும் நாளையும் நேரம் கிடைக்கையில் உட்கார்ந்து படித்துப் பின்னூட்டம் இடுகிறேன்.

    இன்று போல் என்றுமே நன்று வாழ்க.

    அன்புடன்,
    கோ.இராகவன்

    ReplyDelete
  17. Thanks for your postings Kumaran.
    You really did a good job.

    Mikka Nandri.

    Anbudan,
    Natarajan

    ReplyDelete
  18. ரொம்ப நல்லாயிருந்தது உங்க வாரம். நடுவில் வெண்மதி பாட்டுக்கு விளக்கம் சொல்லி முடியில்லாம் பிக்க வைத்தாலும் நல்லாவே இருந்தது இந்த வாரம். பிச்சுக்க வைக்கறது உங்க ஸ்டைல்தானே.

    அடுத்த பதிவில் எங்களையெல்லாம் (மற்றொருவர் செய்தது போல்) திட்டாமல் இருந்தால் சரி. :) (ஸ்மைலி போட்டுட்டேங்க.)

    ReplyDelete
  19. //பதினெட்டு பதிவுகள் யாருமே போட்டிருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்//.

    ராம்ஸ்., நம்ம வசந்தன் 25 பதிவுகள் தன் நட்சித்திர வாரத்தில் இட்டார்.

    ReplyDelete
  20. பாராட்டுகள் குமரன்,

    அருமையான நட்சத்திர வாரம், பல்சுவையான பதிவுகள் கொடுத்து மகிழ வைத்து விட்டீங்க.

    உங்க மொத்த நட்சத்திர பதிவையும் பிடிஎப் கோப்பாக சேமிக்க போகிறேன்.

    ReplyDelete
  21. இனிமையானதொரு நட்சத்திர வாரம் குமரன். ஆன்மீகம், சமூகம், மொழி என்று சிறப்பாகவே கொண்டு சென்றீர்கள்.

    மீண்டுமொருமுறை உங்களை நட்சத்திரமாக சந்திக்க ஆவல். நிச்சயம் அது நடக்கும். அதற்கு என் முன்கூடிய வாழ்த்துகள்

    ReplyDelete
  22. ரொம்ப நன்றி கீதா. நேரம் கிடைக்கும் போது எல்லாப் பதிவுகளையும் படித்துவிடுங்கள். நீங்கள் அண்மையில் இட்ட கவிதைப் பதிவுகளையும் படித்திருக்கிறேன். ஆனால் உங்கள் பதிவில் பின்னூட்டம் இடுவதென்றால் ப்ளாக்கர் கணக்கின் விவரத்தை வெட்டி ஒட்டிப் பின்னர் தான் பின்னூட்டம் இட முடிகிறது. அதற்குச் சோம்பல் பட்டு பின்னூட்டம் இடாமல் வந்திருக்கிறேன். இதோ இந்த வாரத்தில் இருந்து சோம்பல் படாமல் இருக்க முயல்கிறேன். உங்கள் பாடல்கள் வலைப்பூவும் எனக்குப் பிடிக்கும். அதில் நிறைய பின்னூட்டம் இட்டிருக்கிறேன்.

    முன்னாள் நட்சத்திரம்ங்கறதப் பத்தி நீங்க அருமையா ஒரு ஐடியா சொல்லிட்டீங்க. ஆனா சொல்ல வேண்டியவங்க எதுவும் சொல்லலியே. அதனால அடுத்த முறை நட்சத்திரமா வாய்ப்பு கிடைக்கிற வரைக்கும் அதைப் பத்தியே யோசிக்கப் போறதில்ல. :-)

    ReplyDelete
  23. உஷா, என்னுடைய பதிவுகளின் பொருள் எல்லோருக்கும் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது நன்றாகத் தெரிந்ததே. ஆனாலும் இந்தப் பொருளில் தான் எழுதியிருப்பேன் என்று முடிவு செய்து என் பதிவுகள் எதனையும் படிக்காமல் விட்டுவிடாதீர்கள். உள்ளே வந்துப் பார்த்துவிட்டு அது உங்களுக்குப் பிடித்ததாய் இருந்தால் தொடர்ந்து படியுங்கள். நான் அப்படித்தான் செய்கிறேன் உங்கள் வலைப்பூவில். இல்லாவிட்டால் நீங்கள் எழுதியதில் பலவற்றை நான் படிக்காமல் விட்டிருப்பேன். :-)

    நிச்சயமா நீண்ட விடுப்பில் போவதாக எண்ணம் இல்லை. பதிவில் சொன்ன மாதிரி வண்டியின் வேகத்தைக் குறைத்துக் கொள்ளலாம் என்று தான் ஒரு எண்ணம் இருக்கிறது. :-)

    உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  24. நன்றி காசி அண்ணா. ஆமாம். ரொம்ப பிஸியான வாரமாகத் தான் இருந்தது. ஏற்கனவே பதிவுகளை எழுதி வைத்திருந்தாலும், பின்னூட்டங்களுக்குப் பதில் கொடுப்பதில் நேரம் சரியாக இருந்தது. அவசியம் ஓய்வு எடுக்க வேண்டும்.

    'நட்சத்திரப் பதிவு' பக்கத்திற்கு வந்த ~ 1000 பார்வைகளையும் என் கணக்கில் சேர்த்துக் கொண்டேன். மிக்க நன்றி. :-)

    ReplyDelete
  25. நன்றி இராமநாதன். அப்டிப் போடு அக்கா, வசந்தன் 25 பதிவுகள் தன்னோட விண்மீன் வாரத்தில் இட்டார்ன்னு சொல்லியிருக்காங்க. எனக்குத் தெரிந்து சுந்தர் 21 பதிவுகள் போட்டார். அதனால இந்தச் சாதனை என் கணக்குல சேரலை.

    அதனால என்ன? மத்த சாதனைகள் நிறைய செஞ்சுட்டோமில்ல. என்ன சொல்றீங்க? :-)

    அப்புறம் அ.ப.போ.மு.ந.சூப்பு. ல மு.ந.சூப்பு.ன்னா என்னன்னு புரியுது. அ.ப.போ.ன்னா என்னான்னு 'புரியலையே'? கொஞ்சம் 'விளக்கம்' சொல்றீங்களா?

    ReplyDelete
  26. டோண்டு ராகவன் சார். என் Counter நான் ஒவ்வொரு முறை அந்தப் பக்கத்திற்குப் போகும் போதும் எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்கிறது. அதனால் தான் ஐந்தால் வகுத்துக் கொண்டேன். அது சரியாகத் தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. சதயத்தோட வலைப்பூவுல வெட்டிவேலைன்னு ஒருத்தர் மெனக்கெட்டு உக்காந்து திரும்பத் திரும்ப அவர் வலைப்பூ பக்கத்தை ரெப்ரெஷ் செய்து எண்ணிக்கையைக் கன்னா பின்னான்னு ஏத்திவிட்டுட்டார். எனக்கும் அந்த மாதிரி வெட்டி வேலை செஞ்சிருக்க மாட்டார்ன்னு நம்பறேன். :-)

    ReplyDelete
  27. புதிய நட்சத்திரம் தாணு அக்கா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். நீங்க நட்சத்திர வாரத்துக்கும் ரெடியாகிக்கிட்டு இருந்திருப்பீங்க. அதனால பின்னூட்டம் இட முடியாம போயிருக்கும். உங்க நட்சத்திர வாரமும் முடிஞ்ச பின்னாடி மெதுவா பின்னூட்டம் இடுங்க. :-)

    மதியை பாருங்க. ஆமான்னும் சொல்ல மாட்டேங்கறாங்க. இல்லைன்னும் சொல்ல மாட்டேங்கறாங்க. என்ன பண்றது சொல்லுங்க. அதனால் முன்னாள் நட்சத்திரத்தையும் சரி நிரந்தர நட்சத்திரத்தையும் சரி மறந்துட வேண்டியது தான். :-)

    ReplyDelete
  28. மணியன், உங்கள் அன்பிற்கு நன்றி. மெதுவா அவசரமே இல்லாம ஆற அமர்ந்து படித்துப் பின்னூட்டம் இடுங்கள். இனி மேல் வேகம் குறைந்து விடும். உங்களுக்கும் படிப்பதற்கு வசதியாக இருக்கும். :-)

    ReplyDelete
  29. எல்லாப் பதிவுகளையும் படித்ததற்கு மிக்க நன்றி தேன் துளி. நீங்களும் அந்த 'கார் மா மிசை' விவாதத்தில் கலந்து கொண்டிருக்கலாம். இராகவன் ஊரில் இல்லாததாலே இராமநாதனை நான் மட்டுமே ஓட்டிக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. நீங்களும் அந்த விவாதத்தில் கலந்து கொண்டிருந்தால் இராமநாதனை இன்னும் கொஞ்சம் வெறுப்பேற்றியிருக்கலாம். :-)

    ஆமாம். நீங்கள் சொன்ன மாதிரி நானும் 'கைம்மா' பற்றிப் படித்திருக்கிறேன். அதனால் மா என்பதற்கு பெரிய என்ற பொருள் தான் பொருத்தம்.

    இராகவனுக்கு 'கைம்மா' என்றவுடன் எது நினைவிற்கு வருகிறதோ? எனக்கு எங்க ஊருல கொத்துக் கறின்னு ஒன்னு செய்வாங்க. அதை கைம்மான்னும் சொல்லுவாங்க. அது தான் நினைவிற்கு வருகிறது. :-)

    ReplyDelete
  30. ஆமாம் சுந்தர். எங்க போயிடப் போகுது பதிவுகள். மெதுவாகப் படித்துப் பின்னூட்டம் இடத் தகுதியாய் இருந்தால் இடுங்கள். :-)

    பாராட்டுகளுக்கு நன்றி.

    உண்மை தான். முன்னாள் என்றால் உதிர்ந்து கரைந்து போன என்ற ஒரு பொருளும் வருகிறது. அதனால் எதுவுமே சொல்லாமல் தமிழிணைய வானில் பிரகாசிப்பதாக முடிவு செய்து விட்டேன். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. :-)

    ReplyDelete
  31. என்ன சிங். நட்சத்திரக் குமரன்னே பேர் குடுத்தாச்சா? ரொம்ப நன்றி. :-) ஆரவாரமான வாரம்ன்னா நல்லா இருந்துச்சுன்னு சொல்றீங்களா; இல்லை வெட்டி பந்தா நிறைய இருந்துச்சுன்னு சொல்றீங்களா? :-) வாழ்த்துகளுக்கு நன்றி.

    ReplyDelete
  32. பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி Chameleon - பச்சோந்தி. தொடர்ந்து படித்து முடிந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

    ReplyDelete
  33. நன்றி சாம். தொடர்ந்து படியுங்கள். நான் பத்து வலைப்பூக்கள் வைத்திருப்பதால் ஏதாவது பதிவு இட்டால் படிக்க விருப்பமுள்ளவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாய்த் தெரியப் படுத்துவேன். உங்களுக்கும் அப்படித் தெரியப் படுத்த வேண்டுமென்றால் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். மிக்க நன்றி.

    ReplyDelete
  34. பாராட்டுக்கு நன்றி அப்டிபோடு அக்கா.

    //சலசலப்பான கருத்தை எழுதினாலும்., இங்க சலம்பலில்ல பாருங்க.
    //

    இது புரியலையே? நான் சலம்பலைன்னு சொல்றீங்களா இல்லை மத்தவங்க சலம்பலைன்னு சொல்றீங்களா?

    ReplyDelete
  35. உங்கள் அன்பிற்கும் தொடர்ந்துப் படித்து அளித்த ஆதரவுக்கும் மிக்க நன்றி நாமக்கல் சிபி.

    ReplyDelete
  36. செல்வன். ஒன்ஸ் மோரெல்லாம் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. அப்புறம் நீங்க எல்லாம் நட்சத்திரம் ஆக வேண்டாமா? :-)

    உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  37. அன்புக்கும் ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி இராகவன். நேரம் கிடைக்கும் போது பதிவுகளை மட்டும் இல்லாமல் பின்னூட்டங்களையும் படித்துப் பாருங்கள். ஆங்காங்கே உங்களை வம்புக்கு இழுத்திருப்பேன். :-)

    ReplyDelete
  38. பாராட்டுகளுக்கு நன்றி நடராஜன்.

    ReplyDelete
  39. பாராட்டுக்கு நன்றி இலவசக் கொத்தனார்.

    //பிச்சுக்க வைக்கறது உங்க ஸ்டைல்தானே. //

    அதானே. அந்த வேலையைத் தான் ரொம்ப நல்லா செஞ்சுக்கிட்டு வர்றோமே. இதோ இராமநாதனும் தன்னோட பங்குக்கு அதை செய்யக் கெளம்பிட்டார். தமிழ்மண மக்கள் தொலைஞ்சாங்க டோய். :-)

    யாருங்க உங்களையெல்லாம் திட்டுனது? எனக்குத் தெரியலையே. சபையில சொல்ல மனசில்லன்னா தனிமடல் அனுப்புங்க.

    ReplyDelete
  40. பாராட்டுகளுக்கு நன்றி பரஞ்சோதி. பிடிஎப் கோப்பாக மாற்றிய பிறகு எனக்கும் ஒரு நகல் மின்னஞ்சலில் அனுப்புகிறீர்களா? மிக்க நன்றி.

    ReplyDelete
  41. அட முருகா,
    இது என்ன சோதனை?

    //நான் மட்டுமே ஓட்டிக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. நீங்களும் அந்த விவாதத்தில் கலந்து கொண்டிருந்தால் இராமநாதனை இன்னும் கொஞ்சம் வெறுப்பேற்றியிருக்கலாம். //

    இதுதான் மேட்டர்னு தெரிஞ்சிருந்தா அந்த ஆட்டத்துக்கே வந்திருக்க மாட்டேனே. இனிமே இராகவன பக்கத்துல வச்சுக்காம எந்த விளக்கமும் கொடுக்ககூடாதப்பா! :(

    ReplyDelete
  42. பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி முத்துகுமரன். மீண்டுமொரு முறை நட்சத்திரமா? கொஞ்ச நாள் போகட்டும். தமிழ்மண மக்கள் தொடர்ந்து வேதனை அனுபவிக்கவேண்டாம். என்ன சொல்கிறீர்கள்? :-)

    ReplyDelete
  43. குமரன் கவலையேபடாதீங்க, என்னோட பதிவுல பார்த்தீங்கன்னா, எனக்கு பிடித்த லிங்க்ஸ் எதுவும் தந்திடவில்லை. காரணம் நேரம் கிடைக்கும்பொழுது கண்ணில் படுவதை பார்த்து விடுவதுதான். புரிகிறதோ இல்லையோ ஞானவெட்டியாரின் கடினமான நடையில் இருந்து நேற்று வந்த புதுபிள்ளைகள் வரை படித்துவிடுவது. ஆனால் எல்லாவற்றிற்கும் விதிவிலக்கு இருப்பதுப் போல
    சில பதிவுகளைப் படிக்காமல் இருப்பது மனதுக்கு, பிறகு உடலுக்கும் நல்லது என்று சைடு வாங்கிவிடுவது.
    நீங்கள், ராகவன், ரஷ்யரூ ஆன்மீக பதிவு போட்டா எட்டிப்பார்த்துவிட்டு ஓடிடுவேன் :-) சமீப செல்வனையும் சேர்த்துக்குங்க ( அவுரூ தானே மகாலஷ்மீய சைட் அடிச்ச பசங்க லிஸ்ட போட்டவரூ? :-))))))

    ReplyDelete
  44. குமரன் நட்சத்திர வாரத்தை மிகவும் நன்றாக கொண்டு சென்றீர்கள். உங்கள் வழக்கமான ஆன்மீகத்தோடு, நிறைய வித்தியாசம் காட்டினீர்கள். அடுத்த சுற்று வந்து, மீண்டும் கலக்க, வாழ்த்துக்கள். 'பின்னூட்ட கிங்' என்றும் ஒரு பட்டம் வைத்துக்கொள்ளுங்கள். :-)

    ReplyDelete
  45. குமரன் நல்லா இருந்துச்சு உங்களோட நட்சத்திர வாரம். எனக்கு கூட சௌடிராஷ்டிரா வகையறாவைச்சேர்ந்த ஒரு டீச்சர் 8வதுல பாடம் எடுத்தாங்க. அந்த ஞாபகத்தையெல்லாம் வரவழைச்சிட்டீங்க.

    ReplyDelete
  46. மொதல்ல ஒரு பாட்டு பதிவுதாம்மா போட்டாரு! சரி போனா போகுதுன்னு படிச்சேன்! அப்பறமா "என் ஃப்ரொபைலை வந்து பாருடா"ன்னு சொன்னதால அங்க போனேன். சும்மா பதிவுகளா போட்டு தாக்கறதுக்குன்னே 10ம்மேல பதியற இடங்க... இந்த வாரம் நட்சத்திர வாரம் வேறயா.. போட்டு பின்னீட்டாரு... சரி போனாபோகுதுன்னு அத்தனையும் படிச்சேன்! அதோட விட்டாரா? "மாப்ள ராகவன்! இங்கன ஒரு அள்ளக்கை மாட்டியிருகாண்டா..அவனுக்கு உன் விளக்கத்தைவிடு"ன்னு சொன்னாப்புல!! அவரு சும்மா 10 லைனு பாட்டுக்கு 4 பக்கத்துக்கு விளக்கமா போட்டுத்தாக்கிட்டாப்புல!!! சரி போனாப்போகுதுன்னு நானும் படிச்சுட்டேன்! ஏன் படிச்சேன்னு கேக்கறீங்களா? "எத்தனை பதிவுக போட்டாலும் படிக்கறேன்னு சொல்லியிருக்கான்டா.. இவன் ரொம்ப நல்ல்ல்ல்லவன்ன்ன்"னு குமரன் ஒரு வார்த்தை சொல்லீட்டாப்புல!!

    ஆனா நானும் எத்தனை பதிவுகளைத்தான் புரிஞ்சு படிச்சமாதிரியே நடிக்கறது?! அதனால எல்லாப்பதிவுகளுக்கும் இத்தனை நாளா ஒரு + விட்டுட்டு ஓடிடுறது!!!!!!


    குமரன், சும்மா தமாசு.. கோச்சுக்காதிங்க!! :) என்னோட லெவலு அவ்வளவுதான்!!! வந்தேன்.. படித்தேன்!! முடிந்த (புரிந்த..) அளவு நல்ல கருத்துக்களை மண்டைல ஏத்திக்கிட்டேன்!! அம்புட்டுத்தேன்!!!

    :)

    ReplyDelete
  47. தனி மடலெல்லாம் எதுக்கு. நான் சொன்னது இதைத்தான்.

    http://muthukumaran1980.blogspot.com
    /2006/01/blog-post_22.html

    //சிலர் மட்டும், மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே சிறப்பாக இயங்குகிறார்கள். மற்றவர்கள் எல்லாம் தங்களை உயர்த்திபிடிக்க, முற்போக்கு சிந்தானாவாதிகளாகவும், சமாதான புறாக்களாகவும், தங்கள் நம்பிக்கைகளுக்கு மாறானவைகளாக இருந்தாலும் சரி, அதனால் தனக்கு பயனும், புகழும் வருகிறதென்றே பொருந்தாத அரிதாரங்களை எல்லாம் பூசிக்கொண்டு கோமாளிகளாக வந்து நிற்பதை காணும் போது நகைப்புக்குரியதாக இருக்கிறது.//

    சிறப்பாக இயங்குகிறேனோ, சிரிப்பாக இயங்குகிறேனோ தெரியலையேப்பா...

    ReplyDelete
  48. No Comments Ilavasakoththanaar :-) All my comments were already given in Muthukumaran's post.

    ReplyDelete
  49. 'கனமான' நம்ம ஊரு ஆளு...கனத்துக்குள்ள தலய விடாட்டாலும் பின்னூட்டங்கள் நிறைய சொல்லுது..ஊர்க்காரன் என்ற முறையில் எனக்கும் பெருமைதான்.

    சந்தோஷம்...

    ReplyDelete
  50. // எல்லாப் பதிவுகளையும் படித்ததற்கு மிக்க நன்றி தேன் துளி. நீங்களும் அந்த 'கார் மா மிசை' விவாதத்தில் கலந்து கொண்டிருக்கலாம். இராகவன் ஊரில் இல்லாததாலே இராமநாதனை நான் மட்டுமே ஓட்டிக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. நீங்களும் அந்த விவாதத்தில் கலந்து கொண்டிருந்தால் இராமநாதனை இன்னும் கொஞ்சம் வெறுப்பேற்றியிருக்கலாம். :-) //

    அதென்ன கார் மா மிசை...விளக்கமாச் சொல்லுங்களேன்.

    // இராகவனுக்கு 'கைம்மா' என்றவுடன் எது நினைவிற்கு வருகிறதோ? எனக்கு எங்க ஊருல கொத்துக் கறின்னு ஒன்னு செய்வாங்க. அதை கைம்மான்னும் சொல்லுவாங்க. அது தான் நினைவிற்கு வருகிறது. :-) //

    எனக்கு மட்டும் வேறென்ன நினைவுக்கு வரும். இந்த ஊருல கீமா கீமாங்குறான். ஆனாலும் நம்மூருல கொத்துக்கறிதான. லலிதாஸ் பராத்தா பாயிண்ட்டுல நல்ல கீமா பராத்தாக்கள் கிடைக்குது.

    ReplyDelete
  51. // இதுதான் மேட்டர்னு தெரிஞ்சிருந்தா அந்த ஆட்டத்துக்கே வந்திருக்க மாட்டேனே. இனிமே இராகவன பக்கத்துல வச்சுக்காம எந்த விளக்கமும் கொடுக்ககூடாதப்பா! :( //

    இராமநாதா....என்னாச்சு....நீங்களாவது வெளக்கமாச் சொல்லக்கூடாதா?

    // நீங்கள், ராகவன், ரஷ்யரூ ஆன்மீக பதிவு போட்டா எட்டிப்பார்த்துவிட்டு ஓடிடுவேன் :-) சமீப செல்வனையும் சேர்த்துக்குங்க ( அவுரூ தானே மகாலஷ்மீய சைட் அடிச்ச பசங்க லிஸ்ட போட்டவரூ? :-)))))) //

    ஆகா உஷா நீங்க படிக்கிறீங்களா. ரொம்ப நன்றி.

    ReplyDelete
  52. இராகவன்,
    என் சைவத்தலைவா... நீர் அருகில் இல்லாமல், என் போன்ற சிறுவனைக் கொண்டு நம் முருகனை இந்த வைணவப் பெருந்தலைகள் கிண்டலடித்த பாவத்தையும் கண்டு இலீரோ???

    http://nadanagopalanayaki.blogspot.com/2006/01/128.html

    ReplyDelete
  53. Jsri,

    வாரம் முழுக்க எல்லாப் பதிவுகளையும் படித்ததற்கு மிக்க நன்றி. முதலில் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை முடிக்கிறேன். கோதை தமிழும் விஷ்ணு சித்தனும் தொடாமல் ரொம்ப நாளாய் அப்படியே இருக்கிறது. ஆழ்வார் அருளிச்செயல்கள் முடித்தப் பின் மற்றவைகளைப் பார்க்கலாம்.

    தேசிகப் பிரபந்தம் அவ்வளவாகப் படித்ததில்லை. நீங்கள் சொல்லும் பாடலைப் படித்துப் பார்க்கிறேன்.

    'தேசிக பிரபந்தம்' என்று கூகுளில் தேடியதில் இது கிடைத்தது.
    http://www.tamilnation.org/sathyam/east/pirapantam/mp013.htm

    ReplyDelete
  54. உஷா அக்கா, கண்ணில படற எல்லாத்தையும் எங்கள் பதிவுகள் முதற்கொண்டு எல்லாத்தையும் படிக்கிறதுக்கு ரொம்ப நன்றி.

    ReplyDelete
  55. பாராட்டுகளுக்கு நன்றி சிவா. அப்பாடா நீங்களாவது சொன்னீங்களே வித்தியாசம் இருந்ததுன்னு. சந்தோசம். அடுத்த சுற்று அவ்வளவு சீக்கிரம் கிடைக்குங்கறீங்க. நீங்க எல்லாம் வந்து கலக்கிட்டுப் போங்க. அப்புறம் நானே மதிகிட்ட கெஞ்சிக் கூத்தாடி வாங்குறேன். :-)

    பின்னூட்ட கிங்கா. வேணாமப்பா. சின்னவன் பாத்தாருன்னா அதுக்கு ஒரு பதிவு போட்டுறுவார். வம்பு எதுக்கு.

    ReplyDelete
  56. நன்றி மோகன் தாஸ். நீங்க எந்த ஊரு? சௌராஷ்ட்ரா டீச்சர் பாடம் எடுத்தாங்கன்னு சொல்றீங்களே, அதான் கேட்டேன்.

    ReplyDelete
  57. இளவஞ்சி, உங்கள் பின்னூட்டத்தை மிகவும் ரசித்தேன். அதிலும் 'இவன் ரொம்ப நல்ல்ல்ல்ல்ல்லவன்' பார்ட் ரொம்ப நல்லா இருக்கு. :-) + போட்டதற்கு மிக்க நன்றி. வந்து படித்துப் புரிந்து கொண்டதற்கும் நன்றி. தொடர்ந்து வாங்க.

    இராகவன். பாத்தீங்களா நான் சொல்லலை. இளவஞ்சி ரொம்ப நல்லவர். :-)

    ReplyDelete
  58. //'கனமான' நம்ம ஊரு ஆளு//

    தருமி ஐயா. நான் குண்டாயிருக்கிறதைச் சொல்றீங்களா இல்லை மண்டைகனம் இருக்குன்னு சொல்றீங்களா :) புரிய மாட்டேங்குதே. ஊர்க்காரன்னு பெருமைப் படறதால திட்டலைன்னு நினைக்கிறேன். :-)

    ரொம்ப நன்றி தருமி ஐயா.

    ReplyDelete
  59. சதயம். முதல் பதிவுன்னு எதைச் சொல்றீங்க? முருகன் அருள் முன்னிற்கும் பதிவா? அதுல மட்டும் தானே நம்ம ஊர் திருப்பரங்குன்றத்தைப் பத்தி எழுதியிருக்கேன். அது தானா?

    எந்த ஊர் என்றாலும் நம்ம ஊரைப் போல வருமா? எல்லாரும் அவங்கவங்க ஊரைப் பத்தித் தானே நட்சத்திர வாரத்துல பேசறாங்க. நாம கொஞ்சம் வித்தியாசமா எல்லாத்தையும் பேசலாம்ன்னு நினைச்சேன்.

    நம்ம ஊர் ஏரியா பத்தித் தான் தல புராணம் நம்ம தருமி ஐயா எழுதுறாரே. நானும் எழுதணுமான்னு நெனைச்சேன். இப்ப என்ன? மறவர் சாவடி, டி.எம். கோர்ட், பெருமாள் கோவில், கீழ மாசி வீதி, மேல மாசி வீதி, தெற்கு மாசி வீதி, தெற்கு வாசல், நாயக்கர் மகால், கீழ வாசல், பத்துத் தூண் சந்து, மஞ்சனக் காரத் தெரு, சின்னக்கடைத் தெரு, தெப்பக் குளம் எல்லாத்தைப் பத்தியும் இனிமேல கதை கதையா எழுதுனாப் போச்சு.

    இன்னும் 'விளக்கமாய்'த் தொடர வாழ்த்தியமைக்கு நன்றி கூறி அமைகிறேன்.

    பின்னூட்டம் இட்ட எல்லாத் தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  60. நட்சத்திர வலைப்பதிவு மூலமாக "துருவ" நட்சத்திரமாக திகழும் தங்களின் எல்லா பதிவுகளையும் பார்த்து பின்னுட்டங்களையும் இட்டேன்.ஒரு வாரம் போனதே தெரியவில்லை.தி. ரா. ச.

    ReplyDelete
  61. மிக்க நன்றி தி.ரா.ச & சதீஷ்.

    ReplyDelete
  62. ஊரிலில்லாததால்,ஊரிலிருந்து வந்த பிறகு படித்து பின்னூட்டமிடப்போகும் மதுமிதா அக்காவுக்கு நன்றி என்றில்லாததால் இனி பின்னூட்டமிடப் போவதில்லை:-)

    ReplyDelete
  63. ஐயோ....கோவிச்சுக்காதீங்க அக்கா... உங்களை மறப்பேனா? மறக்கவில்லை. ஆனால் இங்கே போடாம விட்டுட்டேன். கோவிச்சுக்காம மத்த பதிவுகளும் படிச்சு கருத்து சொல்லுங்க.

    ReplyDelete
  64. munnal natchathiram nallathan irukku. aanal kumaran munnal natchathiram enaral innal muzhu nilava? eppothu sooriyanaga pragasikka pogireergal?ethirparkum sivan malai.

    ReplyDelete
  65. வாங்க சிவன்மலை. இப்போது தான் வலைப் பதிக்கத் தொடங்கியிருக்கீங்க போல. தங்கள் வரவு நல்வரவாகுக. வந்த கொஞ்ச நாளிலேயே என் வலைப்பதிவில் பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி. உங்கள் வாழ்த்துக்களும் ஆதரவும் இருந்தால் நிச்சயமாக இந்நாள் முழு நிலவாகவும் வருங்கால கதிரவனாகவும் நிச்சயம் ஜொலிக்க முடியும். :-)

    ReplyDelete
  66. //ஆனா நானும் எத்தனை பதிவுகளைத்தான் புரிஞ்சு படிச்சமாதிரியே நடிக்கறது?! அதனால எல்லாப்பதிவுகளுக்கும் இத்தனை நாளா ஒரு + விட்டுட்டு ஓடிடுறது!!!!!!//


    வ.ப.வா.சங்கத்தின், தலைவர் தன்மானச் சிங்கம், வைகைப் புயல், 2011ல் தமிழ்மணத்தின் விடி வெள்ளி, 2016ல் தமிழ்மணத்தின் விடி சனி.. எங்கள் பாசமிகு அண்ணன் கைப்புவை நக்கல் மற்றும் நையாண்டி செய்யும் விதமாக
    பின்னூட்ட அறிக்கை விட்ட இளவஞ்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.


    (இதன் நகல்:
    http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

    ReplyDelete