Thursday, February 02, 2006

140: அதிக பின்னூட்டம் பெறுவது எப்படி?

இந்த நட்சத்திர வாரம் முடிந்த பிறகு ஏன் எல்லோரும் நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டு போகிறார்கள் என்பது இப்போது தான் எனக்குப் புரிகிறது. எல்லாம் இந்த post-star-week-blues தான் காரணம். எல்லா excitementம் அடங்கி கொஞ்ச நாள் எது பற்றியும் எழுதாமல் அடுத்தவங்க எழுதுறதைப் படிப்போம் என்று தோன்ற வைத்துவிடுகிறது இந்த நட்சத்திர வாரம்.

அப்பாடா...எப்படியோ இந்த மன-அழுத்தத்தில் இருந்து மீண்டு வர இராமநாதன் 'பின்னூட்டம் பெறுவது எப்படி?' என்று இலவசக் கொத்தனாரின் அண்மைப் பதிவில் எழுதியிருந்தது மிக்க உதவியாக இருந்தது. அவர் சொன்ன எல்லாவற்றையும் ஏறக்குறைய நான் செய்திருக்கிறேன் என்பதால் அதனை அவரின் அனுமதி பெற்று ஒரு தனிப் பதிவாகவே போட்டுவிடுகிறேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். :-)

1. உங்க பதிவுக்கு வந்து தப்பித்தவறி யாராவது ஒருத்தர் பின்னூட்டம் போட்டாலும், அவருக்கு தனியா நன்றி சொல்லணும்.

2. அது வெளிநாட்டு துரைங்களா இருந்தாலும் சரி. மொதல்ல word verification-அ தூக்கணும். ஆனா பாருங்க பின்னூட்ட மட்டுறுத்தல் வந்தப்புறம் துரைங்க வர்றதெல்லாம் குறைஞ்சு போச்சு. இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகல. அவங்க கமெண்ட பப்ளிஷ் பண்ணிட்டு அழிச்சிடலாம் (Remove Forever பண்றவங்க இதுக்கு மேல இதப் படிக்கறது வேஸ்ட்).

3. பின்னூட்டமே வரலேன்னா என்ன செய்யறது? இருக்கவே இருக்கு, நமக்கு நாமே திட்டம். இதுல ரெண்டு வழி இருக்கு. முதலாவது ரொம்ப சுலபம். test, பின்னூட்டம் வேலை செய்யலேன்னு மயில் மூலம் பல்லாயிரக்கணக்கான நண்பர்கள் சொன்னதை பரிசோதிக்க சோதனைப் பின்னூட்டம் அப்படின்னு அடிச்சு வுடலாம். இதுல சோதனை போடறதுக்கு தனித் திறமை வேணும். இந்தியா நேரம் காலை ஆறு மணிக்கு பதிவு போட்டு ஒருத்தரும் பின்னூட்டம் போடலேன்னா, அந்த டைம்-கேப்பில யாரும் உங்க பதிவ படிக்க இல்லென்ன்னு புரிஞ்சுக்கணும். ஆறு மணி நேரம் கழிச்சு சோதனை முயற்சி செஞ்சு பாக்கலாம். புரியுதா?

(கொத்தனாரின் இலவசப் பாடம்: 3. ஆமாம். இப்போ புதுசா சுயமா புதுப்பிக்கறா மாதிரி வேற பண்ணிட்டாங்களா. அதனால பதிவு போட்ட உடனே நாமளே ஒரு பின்னூட்டம் போட்டோம்ன்னா அது சீக்கிரம் அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் பகுதியில வந்துடும். my 2 cents .)

4. பின்னூட்டமே வரல. யாருமே நம்மள கண்டுக்க மாட்டேங்கறாங்கன்னா.. வெட்கமேயில்லாம விளம்பரம் கொடுக்கலாம். நிறைய அடி (ஹிட்) வாங்கற பதிவுகளுக்கு போய் உங்களோட கருத்துகளையும் (சம்பந்தமிருக்கோ இல்லியோ) பின்னூட்டமா போட்டுட்டு அதுலேயே உங்க பதிவுக்கும் விளம்பரம் கொடுத்துடலாம்.

4.1 மேல சொன்னபடி அடுத்தவங்க பதிவுக்கு போனீங்கன்னா, இன்னொரு ராடிகல் டெக்னிக் இருக்கு. அந்தப் பதிவாளர் சொல்றது தப்போ ரைட்டோ, நார் நாரா கிழிச்சு, இன்னா மேன் எழுதற நீயெல்லாம்னு மரியாதையா கேட்டீங்கன்னா.. கண்டிப்பா அந்தப் பதிவ படிக்கற எல்லாரும் உங்க விளம்பரம் மூலமா உங்க பக்கம் வருவாங்க. ஆனா, இது கொஞ்சம் ரிஸ்கி. ஏன்னா, பதிவாளர் விஷயம் தெரிஞ்சவரா இருந்து பதிலடி கொடுத்திட்டா. அப்படியும் கவலையில்லை. அம்பது சதவிகிதமாவது பாவப்பட்டு உங்க பக்கம் வருவாங்க.

(கொத்தனாரின் இலவசப் பாடம்: 4.1 இதுக்கு ஒரு ஐடியா. நாமளே இரண்டு பேர்ல பதிவுகள் போட்டு, மாறி மாறி திட்டிக் கிட்டா என்ன?)

5. இது ஒரு அடிப்படை விதி. உங்க பதிவுக்கு முப்பது பின்னூட்டம் வந்தா இருபதாவது உங்களுதா இருக்கணும். ஒருத்தருக்கு பதில் சொல்லும்போது, எல்லாத்தையும் சொல்லிடக் கூடாது. பாதி எழுதிட்டு, அஞ்சு நிமிஷம் கழிச்சு, ஆங் சொல்ல மறந்துட்டேனேன்னு அடுத்த பார்ட்-ஐயும் போடணும்.

6. நிறைய பேர் எழுதுனாலும், எல்லாருக்கும் நன்றின்னு எழுதுனா அதுக்கு மேல யாரும் வரமாட்டாங்க. சில பேர் அப்படி செய்வாங்க. அவங்க ரேஞ்சே வேற. நாம அப்படியா? அதனால தனித்தனியாத் தான் பதில் போடணும். மறந்துடக் கூடாதுங்கறதுக்காக இன்னொரு தடவை சொல்றேன்.

7. இன்னொரு விஷயம் நினைவில் வச்சுக்கணும். ரிபீட் ஆடியன்ஸ் தான் வெற்றியின் ரகசியம். சூப்பர் ஸ்டாரிலிருந்து எலெக்ஷன்ல ஓட்டுப் போடறவங்க வரைக்கும் எல்லாருக்கும் இது பொருத்தம்.ஒருத்தர் வந்து பின்னூட்டம் போடறார்னு வச்சுக்கங்க. அவர் மறுபடியும் ஒரு மணியிலோ அடுத்த நாளோ நீங்க அவர் சொன்னதுக்கு ஏதாவது கருத்து சொல்லிருக்கீங்களான்னு கண்டிப்பா பார்ப்பார். நம்புங்க. நீங்க பெரிசா ஒண்ணும் சொல்லலேனா, சத்தமில்லாம போயிடுவாரு. அதனால, நாம பதில் போடும்போது நன்றியோட நிறுத்தாம அவர வம்புக்கு இழுத்தோ, ஜாலியா கிண்டல் செஞ்சோ போட்டோமுன்னா, கண்டிப்பா அதுக்கும் ஒரு பதில் போடணுமின்னு அவருக்கு தோணும். அவர் போட, நீங்க போட, அந்தப் பதிலுக்கு அவர் போட.. இப்ப ஓடுதே இதே மாதிரி ஓட்டிடலாம். :))

8. உங்க பேர்லேயே விளம்பரமோ டெஸ்ட் பின்னூட்டமோ கொடுக்க வெட்கமாயிருந்தா (இதுக்கெல்லாம் வெட்கப்பட்டா முடியுமா?).. தனியா அந்நியன் மாதிரி ஒரு புது ப்ளாக்கர் கணக்கு தொடங்கி, அம்பி, ரெமோ, அந்நியன் மாத்ரி உங்களுக்குள்ளேயே பேசிக்கலாம்.

(கொத்தனாரின் இலவசப் பாடம்: 8. நமக்கு வெட்கமெல்லாம் கிடையாதுங்க. எருமைத்தேலுன்னு அம்மா அடிக்கடி திட்டுவாங்க. அப்படியே கொஞ்ச நஞ்ச உணர்ச்சி இருந்தாக் கூட அனானியா போடலாமே.)

7. addendumவரவர்க்கு கொக்கிப் போடணும்னு சொன்னோமா? கேள்வியும் கேக்கலாம்? இல்லேனா, அறியத்தந்தமைக்கு நன்றி, சுட்டி ஏதேனும் கொடுக்க முடியுமா?னு கேட்கலாம். அவரும் கண்டிப்பா சுட்டி கொடுப்பாரு. அதுக்கு ஒரு நன்றி. அதுல ஒரு கேள்வி. improv பண்ணனும். இதெல்லாம் பழகப் பழகத்தானா வரும்.

9. மிகவும் முக்கியமானது இது. பதிவோட தலைப்பு. சும்மா மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான், தமிழ்நாட்டு அரசியல், கில்லி- திரைப்பட விமர்சனம். இப்படியெல்லாம் வச்சா ஒருத்தரும் வரமாட்டாங்க. அதுக்கு பதிலா, 'நீ ஒரு குரங்கு', 'வெட்கம், மானம் சூடு சொரணை இருக்கிறதா', கில்லி ஒரு பல்லி' னு அப்படின்னு யோசிச்சு வக்கணும்.

10. இதுவும் ரொம்ப முக்கியமானது. அடிப்படை விதி. 4.1ன் கண்ணியமான மாற்றம். விளம்பரம் போடாம, சகட்டுமேனிக்கு எல்லார் பதிவிலேயும் பின்னூட்டம் போடணும். ஒரு சனி, ஞாயிறு இதுக்காக ஒதுக்கினீங்கன்னா போதும். கொஞ்சமே பின்னூட்டங்கள் வந்து தத்தளிக்கற பதிவுகள தூக்கி விட்டீங்கன்னா, அவங்களும் நன்றிக்கடன் திருப்பிச் செலுத்த உங்க பக்கம் வந்து தூக்கி விடுவாங்க.

11. இதுவும் ரொம்ப முக்கியமானது. பின்னூட்டப் பேராசைப்பட்டு சர்ச்சைக்குரிய விஷயங்கள் பத்தியெல்லாம் பேசக்கூடாது. பேசினா ப்ராண்ட் குத்தி ஓரமா ஒக்கார வச்சுடுவாங்க. நீங்க புது ஐடில வந்தாலும், ப்ராக்ஸி வச்சு கண்டுபிடிச்சுடுவாங்க.விஷய அறிவோட எழுதறவங்களுக்கு இது பொருந்தாது.

12. இதுவே கடைசின்னு நினைக்கிறேன். இன்னும் ஏதுனா தோணுனா மெதுவா சொல்றேன். (trade secret எல்லாத்தியும் சொல்லிட்டா எப்படி). உங்கள மாதிரியே வெட்டியா இருக்கற ஒரு பிரண்ட பிடிங்க. யாஹூ சாட்க்கு பதில் இங்கேயே சாட் பண்ணலாம்.

எல்லாத்தையும் சொல்லிட்டேன்பா. இனிமே நீங்களும் இதையெல்லாம் ஃபாலோ பண்ணி பின்னூட்டம் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க. :-)

வாழ்க வளமுடன். பின்னூட்ட வளத்தைச் சொன்னேனப்பா.

143 comments:

  1. You forgot to say that writing an intersting article like this will attract more replies

    ReplyDelete
  2. கோனார் நோட்ஸ் மாதிரி இருக்கு

    இதுக்குமா :-)))

    ReplyDelete
  3. ரசித்து படித்தேன் (படிச்சமா போனமான்னு இல்லாம வேலை மெனக்கெட்டு எதுக்கு அத எழுதறேன்னு உங்களுக்கு சொல்லணுமா என்ன? அதேதான்...)

    ReplyDelete
  4. >>>>>6. நிறைய பேர் எழுதுனாலும், எல்லாருக்கும் நன்றின்னு எழுதுனா அதுக்கு மேல யாரும் வரமாட்டாங்க. சில பேர் அப்படி செய்வாங்க. அவங்க ரேஞ்சே வேற. நாம அப்படியா? அதனால தனித்தனியாத் தான் பதில் போடணும். மறந்துடக் கூடாதுங்கறதுக்காக இன்னொரு தடவை சொல்றேன்>>>>>

    வணக்கம்.
    அட கவிதை மரபிலயே இருகட்டும்.
    பேச்சுத் தமிழைப் புகுத்த என்ன தயக்கம்?

    அப்போ " ___பாணி" எண்டு ஆரோ சொன்னது உங்களைத்தானா?
    ஆனா நீங்கள்கூட அந்தப்பாணி பற்றி அறிய ஆவலாயிருந்த மாதிரிக்கிடந்ததே?

    ****************************
    நல்ல பதிவு. அருமையான விளக்கங்கள்........, ........., ........, ...........
    பின்னூட்டங்கள் வராமல் அதிகம் கஸ்டப்பட்டிருப்பீர்கள் போலுள்ளது. இவ்வளவு ஆராய்ச்சி செய்வதற்குரிய காரணம் வேண்டுமே?

    ReplyDelete
  5. இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் போடவா வேணாவா?

    //இன்னா மேன் எழுதற நீயெல்லாம்னு மரியாதையா கேட்டீங்கன்னா.. //
    :)
    போட்டுத் தாக்குங்க குமரன். நான் பின்னூட்டங்களைவிட ஹிட் கவுண்டை நம்ப ஆரம்பிச்சுட்டேன். பின்னூட்டங்கள் கம்மியாயிட்டதால..ஹி..ஹி.

    உங்க கோனார் வழி காட்டிக்கு நன்றி

    ReplyDelete
  6. அன்பு குமரன்,

    சரி. பின்னூட்டங்கள் நிறைய வந்துவிட்டன.

    1.அதை வைத்து என்ன செய்யப் போகிறோம்?
    2.அதையெல்லாம் படித்துப் பதில் எழுத எவ்வளவு கால விரயம் ஆகிறது?
    3.இதனால் நம் அகம்+காரம்(அகங்காரம்) எவ்வளவு அதிகமாகிறது?

    இதுபோன்ற விடயங்களை அலசி, ஒரு தனி இடுகை இடுங்களேன். இட்டபின் நீங்களும் எண்ணிப் பாருங்களேன்.

    ReplyDelete
  7. உண்மைதான் செல்வன். சிந்தனையைத் தூண்டும் ஆழமிக்கப் பதிவுகள் எழுதினால் நிச்சயம் நிறைய பின்னூட்டங்கள் கிடைக்கும். எனக்கும் அந்த அனுபவம் உண்டு என்று மிக்கத் 'தாழ்மை'யுடன் சொல்லிக் கொள்கிறேன். :-)

    ஆனால் இந்தப் பதிவையும் interesting article என்று சொல்லிவிட்டீர்களே. நீங்கள் வாழ்க! வளர்க!!

    அது சரி. உங்களுக்கும் நிறைய பின்னூட்டங்களும் + வாக்குகளும் வருகிறதே. அதன் ரகசியத்தையும் எங்களோடு பகிர்ந்து கொள்ள மாட்டீர்களா? :-)

    ReplyDelete
  8. test செய்து பார்த்த கூடல் மாநகரம் தந்த மாணிக்கம் நட்பையும் அன்பையுமே என்றும் விரும்பும் எங்கள் அன்பு அண்ணன் (சரி தம்பி) முத்துகுமரன் வாழ்க! வாழ்க!

    முத்து...அப்படியே இன்னொரு பின்னூட்டமும் போடறது?

    ReplyDelete
  9. கார்த்திக் ஜெயந்த். இது இராமநாதன் போட்ட கோனார் நோட்ஸ்...இல்லை இல்லை...கொத்தனார் நோட்ஸ். நானும் இன்னும் சில Points எழுத வேண்டியிருக்கிறது. அது வரை இதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    உங்களைப் போன்ற அன்பு உள்ளங்கள் வேண்டிக் கேட்டுக் கொண்டால் என்னுடைய அடிசனல் Pointsகளை எழுதுகிறேன். என்ன சொல்கிறீர்கள்?

    ReplyDelete
  10. முகமூடி அண்ணா. நீங்க எதுக்குப் ரசித்து படித்தேன்னு ஒற்று மிகாமப் பின்னூட்டம் போட்டிருக்கீங்கன்னு எனக்குத் தெரியாதா? அடுத்தப் பின்னூட்டமாவது சரியா எங்க எங்க ஒற்று மிகும்ன்னு பார்த்துப் போடுங்க. இல்லாட்டி பட்டையடிக்கவும் பட்டையடிச்சவங்களைக் கேள்வி கேக்கவும் தான் நீங்க லாயக்குன்னு தமிழ்மண தமிழ் அறிஞர்கள் நெனைச்சுக்குவாங்க. சொல்லிட்டேன்.

    அப்புறம் இந்த டிப்ஸ் எல்லாம் தர்றது உங்க கட்சிக் காரர் தானே. அவருக்கு சீக்கிரம் பதவி உயர்வு கொடுங்க. போற இடத்துல எல்லாம் புலம்பிக்கிட்டு இருக்காரு.

    ReplyDelete
  11. ஆன்மீக குமரன் எப்போ லேனா தமிழ்வானன் பினாமியா மாறுனாரு?

    ReplyDelete
  12. வசந்தன், வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. இவை எல்லாம் நான் எழுதியவை அல்ல. நம் நண்பர் இராமநாதன் எழுதியவை. ஒவ்வொன்றாய் அவரும் நண்பர்களும் ஆராய்ந்துத் தெரிந்து கொண்டவை. அவ்வப்போது நானும் இராமநாதனிடம் கேட்டு இந்த முறைகளை நல்ல முறையில் பயன் படுத்திக் கொண்டேன். அதனால் அவர் இந்த முறைகளைப் பட்டியல் இட்டதும் நம் நண்பர்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அடக்க முடியாத ஆசை. அது பதிவாக வந்து விட்டது.

    ஆமாம். நீங்கள் அவ்வளவாக என் பதிவுகளில் பின்னூட்டம் இடுவதில்லையே. ஆனால் நீங்கள் என் பதிவுகளைப் படிப்பீர்கள் என்று தான் எண்ணுகிறேன். ஏன் பின்னூட்டம் இடுவதில்லை?

    ReplyDelete
  13. சிறில் அலெக்ஸ். பின்னூட்டமும் சரி ஹிட் கவுண்டும் சரி இரண்டையும் நம்ப முடியாது. அதனால ஒழுங்கு மரியாதையா இங்க சொன்ன வழிமுறைகளைப் பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான பின்னூட்டங்கள் பெற்று பெருவாழ்வு வாழும் வழியைப் பாருங்கள். சரியா? :-)

    ReplyDelete
  14. ஞானவெட்டியான் ஐயா. நீங்கள் ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமாகச் சொல்பவர். இங்கோ மூன்று வாசகங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு மூன்று பின்னோட்டங்களாகப் பதில் போடலாம் என்று எண்ணுகிறேன்.

    1. பின்னூட்டங்களே வராவிட்டால் நாம் எழுதுவதை யாராவது படிக்கிறார்களா என்றே தெரிவதில்லை. நீங்கள் இதனை மறுக்காமல் ஏற்றுக் கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன். நாம் மேன்மேலும் எழுதுவதற்கு ஒரு நிலை வரை பெரும்பாலோனோருக்கு பின்னூட்டம் மிக மிக அவசியமாக இருக்கிறது. அது தான் பின்னூட்டம் பெறுவதன் பயன். பின்னூட்டத்தை வைத்துக் கொண்டு வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை.

    ReplyDelete
  15. 2. உண்மை தான் ஐயா. பின்னூட்டங்களைப் படித்துப் பதில் எழுத நிறைய கால விரயம் ஏற்படத் தான் செய்கிறது. ஆனால் அந்தக் காலத்தை வேறு எதிலும் நல்ல வழியில் பயன்படுத்துவேனா என்று தெரியவில்லை. அதனால் இணைய நண்பர்களுடன் இனிதாகப் பொழுது கழிந்தது என்று எண்ணிக் கொள்வேன்; அப்படி எண்ணிக் கொண்டால் இது கால விரயமாகத் தோன்றுவதில்லை. கால விரயம் என்று எண்ணிக் கொண்டால் நாம் எழுதுவது அனைத்துமே காலவிரயமாகக் கொள்ளலாம். அப்படி நினைக்கத் தொடங்கினால் எழுதுவதை நிறுத்திக் கொண்டு தனிவழியே செல்லவேண்டியது தான். அது தான் கால விரயம் ஆகாமல் இருக்கும் வழி.

    ReplyDelete
  16. 3. பின்னூட்டங்கள் நிறைய வந்தால் அகம் காரம் அதிகமாகும் என்பது நூறில் ஒரு வார்த்தை. ஆனால் பின்னூட்டங்கள் மட்டுமன்று. அகம்காரம் அதிகமாக இந்த உலகில் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அகம்காரம் வேண்டாம் என்று எண்ணுபவன் அந்த வழிகளையும் பின்னூட்டங்களையும் வெறுத்து ஒதுக்குவான். அதுவரை என்னைப் போன்றவர்கள் பின்னூட்டங்களைப் பெற்று கொஞ்சம் ஆனந்தப் பட்டுக் கொள்கிறோமே. உங்களை மாதிரி ஆசான்கள் அவ்வப்போது வந்து தலையைத் தட்டினால் அகங்காரம் தானாய் அடி பணிகிறது.

    ReplyDelete
  17. இவை போன்ற விஷயங்களை அலசித் தனிப் பதிவாய் இடாமல் இங்கேயே சுருக்கமாய்ப் பின்னூட்டமாய்க் கொடுத்துவிட்டேன். இனி எண்ணிப் பார்க்கிறேன். கோவிச்சுக்காதீங்க. நான் சொன்னது பின்னூட்ட எண்ணிக்கையை எண்ணிப் பார்க்கிறேன் என்று. :-)

    ReplyDelete
  18. சிங். லேனா தமிழ்வாணன் பினாமி இல்லப்பா. இராமநாதன் பினாமி. :-)

    உங்கப் பதிவுகளைப் படித்தேன் சிங். அங்க வந்து பின்னூட்டம் போடறேன்.

    ReplyDelete
  19. //இராமநாதன் :
    11. இதுவும் ரொம்ப முக்கியமானது. பின்னூட்டப் பேராசைப்பட்டு சர்ச்சைக்குரிய விஷயங்கள் பத்தியெல்லாம் பேசக்கூடாது. பேசினா ப்ராண்ட் குத்தி ஓரமா ஒக்கார வச்சுடுவாங்க. நீங்க புது ஐடில வந்தாலும், ப்ராக்ஸி வச்சு கண்டுபிடிச்சுடுவாங்க.

    விஷய அறிவோட எழுதறவங்களுக்கு இது பொருந்தாது.

    கொத்தனார்:

    11. விஷய அறிவுன்னா என்னங்க? ஆமாம். பேராசை பெரு நட்டம். ஒரு பதிவுக்கு நிறைய திட்டு வரும் அப்புறம் போலி டோண்டு கூட வரமாட்டார். Why kill a golden goose? சரிதானுங்க்களே.
    (இப்படி அவங்க சொன்னதையே திருப்பி சொல்லறதும் ஒரு விதிதானுங்களே?)

    இராமநாதன்:
    இப்படி அவங்க சொன்னதையே திருப்பி சொல்லறதும் ஒரு விதிதானுங்களே?)
    அதே அதே. நல்லா பிக்-அப் பண்ணிக்கிறீங்க. :)) //

    இந்த விதியை விட்டுட்டீங்களே.

    ReplyDelete
  20. //இராமநாதன் :
    11. இதுவும் ரொம்ப முக்கியமானது. பின்னூட்டப் பேராசைப்பட்டு சர்ச்சைக்குரிய விஷயங்கள் பத்தியெல்லாம் பேசக்கூடாது. பேசினா ப்ராண்ட் குத்தி ஓரமா ஒக்கார வச்சுடுவாங்க. நீங்க புது ஐடில வந்தாலும், ப்ராக்ஸி வச்சு கண்டுபிடிச்சுடுவாங்க.

    விஷய அறிவோட எழுதறவங்களுக்கு இது பொருந்தாது.

    கொத்தனார்:

    11. விஷய அறிவுன்னா என்னங்க? ஆமாம். பேராசை பெரு நட்டம். ஒரு பதிவுக்கு நிறைய திட்டு வரும் அப்புறம் போலி டோண்டு கூட வரமாட்டார். Why kill a golden goose? சரிதானுங்க்களே.
    (இப்படி அவங்க சொன்னதையே திருப்பி சொல்லறதும் ஒரு விதிதானுங்களே?)

    இராமநாதன்:
    இப்படி அவங்க சொன்னதையே திருப்பி சொல்லறதும் ஒரு விதிதானுங்களே?)
    அதே அதே. நல்லா பிக்-அப் பண்ணிக்கிறீங்க. :)) //

    இந்த விதியை விட்டுட்டீங்களே.

    ReplyDelete
  21. என் கடமைய செஞ்சுட்டேன்.உங்க கடமைய செய்வீங்கண்ணு நம்புறேன்

    ReplyDelete
  22. கால விரயம் எனக் குறித்தது, அந்த நேரத்தில் இன்னும் பல பயனுள்ள பக்தி மார்க்கப் பாடகளுக்குப் பொருள் எழுதி மற்றவர்களை ஆற்றுப்படுத்தலாமே! என்றுதான்.

    நம்மிடம் இருக்கும் கருவூலத்தை இறக்கி வைக்கும் இடமாகவே வலைப்பூவைக் கருதுகிறேன். பின்னர் வரும் இளைய தலைமுறைக்கு விட்டுச் செல்லவே இந்த ஏற்பாடு.

    அறிவுறுத்துதல் எமது நோக்கமல்ல.

    ReplyDelete
  23. குமரன்,

    இந்த கோனார் நோட்ஸ்ஸ PDF fa போட்டு மண்டபதுல (thamizmanam) போட idea இருக்கா ?

    ReplyDelete
  24. ஆமாம் இலவசக் கொத்தனார், அதனை விட்டுவிட்டேன். சேர்த்துவிட்டதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  25. என்ன ஜோ. இப்படி சொல்லிட்டீங்க. தொடர்ந்து எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டாச்சே. இதோ வந்துகிட்டே இருக்கேன். :-)

    ReplyDelete
  26. மிக்க நன்றி ஞானவெட்டியான் ஐயா.

    இப்போதைக்கு இராமநாதன், நீங்கள், இராகவன், இன்னும் அனேகர் எழுதும் பதிவுகளுக்குப் பின்னூட்டம் இடுவதில் கவனம் செலுத்துகிறேன். அடுத்த வாரம் பக்தி மார்க்கப் பதிவுகள் எழுதுகிறேன்.

    ReplyDelete
  27. கார்த்திக் ஜெயந்த், மண்டபத்துல தான் கேட்டுப் பார்க்கணும். காசி அண்ணா என்ன சொல்றாரோ? நீங்களே ஒரு வார்த்தை கேட்டுப் பார்த்துருங்களே?!

    ReplyDelete
  28. குமரன்,

    நான் மண்டபதுல கூட்டாளி இல்ல. கூட்டாளி இல்லாத நீ எப்படி கேக்கலாமுன்னு சொல்லிட்டா

    ReplyDelete
  29. கார்த்திக் ஜெயந்த்,

    தெரியாதா உங்களுக்கு? இது கோனார் நோட்ஸ்தான். இதை அருளிய இராம்ஸுக்கு ஏற்கனவே 'தமிழ்மணக் கோனார்' அப்படின்னு பட்டம் கொடுத்தாச்சே.
    http://podhuppaattu.blogspot.com
    /2006/02/8.html
    இந்த பதிவின் பின்னூட்டங்களைப் பாருங்க

    ReplyDelete
  30. பின்னூட்டங்கள் அதிகம் எப்படி பெறுவது என்பது மிக உபயோகமானப் பதிவு. நானும் பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.

    இப்பின்னூட்டம் உண்மையான டோண்டுதான் போடுகிறான் என்பதைப் பார்க்க மூன்று சோதனைகள் உண்டு. அவை:
    1. ப்ளாக்கர் எண் எலிக்குட்டி சோதனையில் (mouseover) இடது பக்கம் திரையின் கீழே தெரிய வேண்டும். (என்னுடைய சரியான பதிவாளர் எண் 4800161).
    2. அவ்வாறு தெரிந்தால் மட்டும் போதாது. பின்னூட்டம் இடும் பக்கத்தில் என் போட்டோவும் தெரிய வேண்டும்.
    3. அத்துடன் முக்கியமாக இப்பின்னூட்டம் நான் குறிப்பிடும் என் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு நான் இங்கு குறிப்பிடும் பதிவு இதோ.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  31. குமரன்,

    ஜாலியான பதிவு. ஆனால் இதிலிருந்து வெளியே வந்துவிடுங்கள், வாரத்திருக்கு ஒரு நல்ல பதிவு போடுங்கள் அது போதும். பின்னூட்டம் பத்தி ரொம்ப கவலை படாதீர்கள் :-)

    ReplyDelete
  32. குமரன்,
    உங்கள் பதிவுகளை வாசிப்பேனே, அதுவும் இப்படியான பதிவுகளை - ஆனால் முழுப்பதிவுகளையுமல்ல.

    நீங்கள் என் பதிவில் ஒருமுறை வந்து கூறிச்சென்றபின் பார்த்தேன், பதினெட்டுப் (இதுசும்மா ஒரு கணக்கு) பதிவுகளை வைத்திருக்கிறீர்கள். ஆன்மீகம் நமக்குச் சரிவராது. நான் பொழுதேதும் போகாவிட்டால் மட்டுமே அவற்றை வாசிக்க முயல்வேன்.

    நிற்க, ஏன் பின்னூட்டமிடுவதில்லை என்று கேட்பது சரியாகப்படவில்லை. அதற்கு, எனக்குக் காரணமும் தெரியவில்லை. பொதுவாக ஆன்மீகம், மதம் சம்பந்தமானவற்றை விட என் கண்ணிற்படும் எல்லாப் பதிவுகளையும் படிப்பேன். (என்னால் தமிழ்மணத்திரட்டியுடன் தொடர்பின்றி ஒருநாள் கூட இருக்கமுடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.) ஆனால் எல்லாவற்றிலும் பின்னூட்டங்களிடுவதில்லை. எனக்கே ஏனென்று தெரியாது. சிலவேளை உப்புச்சப்பற்றவற்றுக்கு ஏதாவது எழுதினாலும் நல்ல பதிவுகளுக்கு எதுவும் எழுதாமலே இருந்திருக்கிறேன். ஒருவேளை பின்னூட்டங்கள் பெரும்பாலும் குழு மனப்பான்மையோடு இடப்படுகிறதென்று நான் நினைப்பது உண்மையாக இருக்கலாம்.

    ஆனால் வாசிப்பதற்கு இன்னார் எழுதின பதிவுகள்தான் என்ற நிலை எனக்கு இன்னும் வரவில்லை. வாசிப்பதற்குப் பதிவுகளைத் தெரிவுசெய்வதற்காக அலுப்போ நேரப்பிரச்சினையோ இதுவரை வரவில்லை. ஆனால் காலப்போக்கில் வந்துவிடும் என்றுதான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  33. குமரன்,

    //பின்னூட்டங்களே வராவிட்டால் நாம் எழுதுவதை யாராவது படிக்கிறார்களா என்றே தெரிவதில்லை.//

    பின்னூட்டம் இல்லைன்னாலும் http://www.statscounter.com போன்ற வலைத்தள வருகையாளர் கணக்கிடும் தளங்கள் மூலமாக யாராவது படிக்கறாங்களான்னு தெரிஞ்சிக்கலாமுங்க.

    ஆனா யார் படிக்கறாங்கன்னு தெரியனும்னா பின்னூட்டம் அவசியம்.

    ReplyDelete
  34. அது சரி. உங்களுக்கும் நிறைய பின்னூட்டங்களும் + வாக்குகளும் வருகிறதே. அதன் ரகசியத்தையும் எங்களோடு பகிர்ந்து கொள்ள மாட்டீர்களா? :-)
    ///


    உங்கள் ரசிகர் மன்ற பொருளாளர் ஆன யோகம் தான் இதற்கெல்லாம் காரணம்

    ReplyDelete
  35. துளசி டீச்சர் மட்டும் இந்தப் பதிவைப் பாக்கனும். அவ்வளவுதான்.....தான் பெற்ற கலையைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்து விடும் உங்க நல்ல பணிக்கு சந்தோஷப் படுவாங்க.

    இதுல நான் எத பின்பற்றுறது. வர்ரவங்களுக்கெல்லாம் ஒரு நன்றி சொல்வேன். அதத்தான் ஒழுங்கா பின்பற்றுறேன். மத்ததுக்கெல்லாம் ரொம்பவே தில்லு வேணும்.

    ReplyDelete
  36. http://akkinikunchu.blogspot.com/2005/05/blog-post.html

    ReplyDelete
  37. கார்த்திக் ஜெயந்த், கூட்டாளியா இருக்கணும்ன்னு எல்லாம் தேவையில்லை. சும்மா 'இதைப் படிச்சேன். ரொம்ப நல்லாக் கீது. கொஞ்சம் பிடிஎப் ஆ போட்டுக் குடுக்க முடியுமா'ன்னு கேட்டுப் பாருங்க. காசி அண்ணா என்னா சொல்லப் போறார்ன்னு எனக்கு ஏற்கனவே தெரியும். அதை நீங்க கேட்டாத் தான் சொல்றதா இருக்கேன். :-)

    ReplyDelete
  38. குமரன்,
    அப்பப்ப இப்படி ஜாலி பதிவுகளும் போடுங்க சாமி:-)

    ReplyDelete
  39. பின்னூட்டங்கள் பெறுவதற்கு இத்தனை ஆசையா?

    அதான், நம்ம பதிவைப் படிச்சு, அவங்க அங்க போய் பதிவு போடறாங்க - அவுக பதிவ படிச்சு, நாம இங்க பதிவு போடறம் - போதாதா?

    அப்படியே போய் - இப்ப நிறைய பின்னூட்டங்கள் போடறதுக்குப் பதிலா நிறைய பதிவுகள்னு ஆயிப் போச்சு பாத்தீகளா?

    ReplyDelete
  40. //முத்து...அப்படியே இன்னொரு பின்னூட்டமும் போடறது?//
    போட்டுட்டா போச்சு:-)))))))))

    ReplyDelete
  41. இ.கொத்தனார்,
    குமரன் said //இது இராமநாதன் போட்ட கோனார் நோட்ஸ்...இல்லை இல்லை...கொத்தனார் நோட்ஸ்//

    இ.கொத்தனார் said //இதை அருளிய இராம்ஸுக்கு ஏற்கனவே 'தமிழ்மணக் கோனார்' அப்படின்னு//

    என்னமோ பெரியவங மாத்தி மாத்தி பட்டம் குடுக்குரெங.

    குமரன்,

    //காசி அண்ணா என்னா சொல்லப் போறார்ன்னு எனக்கு ஏற்கனவே தெரியும். அதை நீங்க கேட்டாத் தான் சொல்றதா இருக்கேன். :-)//

    என்னமோ மண்டபதுல நம்மல பத்தி நல்லவிதமா பேசிகிட்ட சரிதான்..

    அப்படியே இஙக வந்துஇருக்குர பெரியவங எல்லாம் என்னொட blog கும் வந்து உங்க கருத்துகளை போடுமாரு கேட்டுகிரென்.

    அனந்த் - ஆராய்ச்சி - பரபரப்பான உண்மைகள். http://karthikjayanth.blogspot.com/2006/02/blog-post.html

    இலவசம் - உஙகள் பதிவுக்கு ++ ஒட்டு + comments இருக்கு.

    ReplyDelete
  42. குமரன்,
    அடடா நான் எழுதலாம் அப்படின்னு நினைச்சிட்டு இருந்தேன், இந்த தடவை நீங்க முந்திவிட்டீர்கள். சிறு விளம்பர இடைவேளைக்கு பிறகு பின்னுட்டம் தொடரும்.....
    நல்ல புதுப்படம் பார்க்க வாருங்கள் தமிழ் மணத்தின் ஒரே தியேட்டர் http://biascope.blogspot.com , கருத்தில்லாத பிதற்றல்களை படிக்க ஏற்ற இடம் http://santhoshpakkangal.blogspot.com, ஏதோ ஒரு தள்ளுபடியாக தங்களின் ஒவ்வொரு கருத்துக்கும் ஒரு பதில் இருக்கும். கல்லாவில் செல்லிட்டு போனிங்கன்னா 2 பதில் கூட கிடைக்கும்.
    பின்னுட்டம் தொடர்கிறது......
    சரி விடுங்க உங்க அறிவுரைகளை அப்படியே பாலோ பண்ண அரம்பித்து விட்டேன் :))

    ReplyDelete
  43. இலவசக் கொத்தனார். ரொம்ப நன்றி.

    தமிழ்மணக் கோனார் திருவாளர் இராமநாதன் வாழ்க வாழ்க!!!!

    ReplyDelete
  44. வருகைக்கு மிக்க நன்றி டோண்டு சார். உங்களுக்கும் உபயோகமாற மாதிரி எல்லாம் நமக்கு பதிவு போட வருதா? ரொம்ப சந்தோசம். எல்லாப் பெருமையும் இராமநாதனுக்கும் இலவசக் கொத்தனாருக்கும்.

    ReplyDelete
  45. அப்புறம் நண்பர்களே. டோண்டு சார் பின்னூட்டத்தைப் பாருங்கள். அவரும் சில முறைகளைச் சொல்லியிருக்கிறார். அவர் சொல்லியிருக்கும் முறைகளில் நீங்கள் எல்லாருடைய பதிவுக்கும் சென்று பின்னூட்டம் இடலாம். முக்கியமாக எந்தப்பதிவில் புது முகங்கள் எல்லாம் பின்னூட்டம் இடுகிறார்கள் என்று பார்த்து அங்கு போய் நீங்களும் இப்படி பாயிண்ட் பாயிண்டாக எடுத்து வைத்துப் பின்னூட்டம் இட்டால் மிகவும் நல்லது. எல்லாப் புது முகங்களும் உங்கள் பதிவுக்கு உடனே படையெடுப்பார்கள். குறைந்தது உங்கள் பெயராவது அறிமுகமாகும்.

    ReplyDelete
  46. நன்றி தேசிகன். நீங்கள் சொன்ன மாதிரி இது ஒரு ஜாலி பதிவு தான். நிச்சயமாக இதிலிருந்து வெளியே வந்து விடுவேன். இல்லாவிட்டால் என்னை இழுத்துக் கொண்டு வெளியே வர நிறைய நண்பர்களும் அன்பர்களும் இருக்கிறார்கள். ஏற்கனவே தனிமடலிலும் இங்கு பின்னூட்டத்திலும் அவர்கள் என்னைத் திட்டத் தொடங்கிவிட்டார்கள். கண்ட கண்ட மாதிரி திட்டுகிறார்கள். அதனால் சீக்கிரம் வெளியே வந்து ஒழுங்கு மரியாதையா இது வரைக்கும் போட்டுக்கிட்டு இருந்த மாதிரியான பதிவுகளே போடலாம்ன்னு இருக்கேன். :-)

    ReplyDelete
  47. அப்பாடா. தேசிகனுக்கு இப்படி பதில் பின்னூட்டம் போட்டுட்டதால இனிமே யாருமே திட்ட மாட்டாங்கன்னு நெனைக்கிறேன். பார்க்கலாம்.

    ReplyDelete
  48. //பதினெட்டுப் (இதுசும்மா ஒரு கணக்கு) பதிவுகளை வைத்திருக்கிறீர்கள்.//

    வசந்தன், இன்னும் உங்கள் கணக்குப் படி பதினெட்டு வலைப்பூக்கள் ஆகவில்லை. இன்னும் நான்கு தொடங்கவேண்டும். விரைவில் தொடங்கி உங்கள் ஆசைப் படி பதினென்கீழ் கணக்காய் ஆகிவிடுகிறேன் :-)

    என் சின்னக் கேள்விக்கு விளக்கமாய்ப் பின்னூட்டம் போட்டதற்கு மிக்க நன்றி. இதனை நீங்கள் மூன்று பின்னூட்டங்களாய்ப் போட்டிருக்கலாம். (சும்மா) :-)

    நீங்கள் சொல்லும் விளக்கம் இங்கு நிறைய பேருக்குப் (என்னையும் உட்கொண்டு) பொருந்தும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  49. கோபி. நீங்க சொல்றது உண்மை. யாராவது வருகிறார்களா என்று பார்க்க Counter போதும் தான். ஆனால் யார் யார் படிக்கிறார்கள் என்று தெரிய பின்னூட்டம் அவசியம். அது மட்டும் இல்லாமல் வெறும் Counter எண்ணைப் பார்க்கிறதை விட பின்னூட்டத்தைப் பார்ப்பதில் அதிக சந்தோசம் என்பதை ஒத்துக்கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன். :-)

    ReplyDelete
  50. செல்வன். பொருளாளர் ஆகும் முன்னாடியே உங்களுக்கு இந்த யோகம் இருப்பதைப் பார்த்திருக்கிறேனே... ஏன் இரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?

    ReplyDelete
  51. இராகவன்,

    துளசி அக்காவையும் இந்தப் பின்னூட்டக் கலையையும் ஒரே நேரத்துல பேசாதீங்க. ஏற்கனவே அக்கா என் மேல கோபமா இருக்காங்க. அவங்க ஊருக்குப் போயிட்டு வந்த பிறகு என் மேல இன்னும் கோபப்படப் போறாங்க. :-)

    எல்லாத்தையும் பின் பற்றுங்க இராகவன். தில்லு எல்லாம் தேவையில்லை. அப்படியே தேவைன்னாலும் நம்மகிட்ட இல்லாத தில்லா?

    ReplyDelete
  52. செல்வன். பொருளாளர் ஆகும் முன்னாடியே உங்களுக்கு இந்த யோகம் இருப்பதைப் பார்த்திருக்கிறேனே... ஏன் இரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?///

    ---------------------------
    7. இன்னொரு விஷயம் நினைவில் வச்சுக்கணும். ரிபீட் ஆடியன்ஸ் தான் வெற்றியின் ரகசியம். சூப்பர் ஸ்டாரிலிருந்து எலெக்ஷன்ல ஓட்டுப் போடறவங்க வரைக்கும் எல்லாருக்கும் இது பொருத்தம்.ஒருத்தர் வந்து பின்னூட்டம் போடறார்னு வச்சுக்கங்க. அவர் மறுபடியும் ஒரு மணியிலோ அடுத்த நாளோ நீங்க அவர் சொன்னதுக்கு ஏதாவது கருத்து சொல்லிருக்கீங்களான்னு கண்டிப்பா பார்ப்பார். நம்புங்க. நீங்க பெரிசா ஒண்ணும் சொல்லலேனா, சத்தமில்லாம போயிடுவாரு. அதனால, நாம பதில் போடும்போது நன்றியோட நிறுத்தாம அவர வம்புக்கு இழுத்தோ, ஜாலியா கிண்டல் செஞ்சோ போட்டோமுன்னா, கண்டிப்பா அதுக்கும் ஒரு பதில் போடணுமின்னு அவருக்கு தோணும். அவர் போட, நீங்க போட, அந்தப் பதிலுக்கு அவர் போட.. இப்ப ஓடுதே இதே மாதிரி ஓட்டிடலாம். :))

    --------------------------

    sonnathai seyalpatuththum kumaran vaazka.:-))))))))

    ReplyDelete
  53. பின்னூட்டங்கள்ள ஒரு ஆராய்ச்சியே செய்திருப்பீர்கள் போல.

    விரைவில் நாமக்கல் பல்கலைகழகத்திலிருந்து ஒரு முனைவர் பட்டத்திற்கும் ஏற்பாடு செய்கிறேன்.

    ReplyDelete
  54. என்ன செல்வன். சொன்னதைச் செய்கிறேன் என்று என்னை வாழ்த்திவிட்டுக் கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தப்பிக்கப் பார்க்கிறீர்களே? இரகசியத்தைச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  55. ரொம்ப சந்தோசம் சிபி. சீக்கிரம் அந்த நல்ல விஷயத்தைச் சொல்லுங்கள். நாமக்கல் பல்கலைக் கழகத்தில் உங்களை விட்டால் வேறு யாராவது இருக்கிறார்களா?

    ReplyDelete
  56. என்ன செல்வன். சொன்னதைச் செய்கிறேன் என்று என்னை வாழ்த்திவிட்டுக் கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தப்பிக்கப் பார்க்கிறீர்களே? இரகசியத்தைச் சொல்லுங்கள்.//

    நான் என்னத்தை சாதித்தேன் என்று என்னிடம் வெற்றியின் ரகசியம் கேட்கிறீர்கள்?:-))))

    இன்னும் ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் நிஜம்.இனிதான் எதாவது செய்ய வேண்டும்.மிகவும் போட்டிகள் நிறைந்த உலகம் தமிழ்மணம்.1000 வலைபதிவுகள்.போட்டி போட்டு ஓட வேண்டாமா?தமிழ்மணத்தில் இப்போதுதான் தவழ்ந்து கொண்டிருக்கிறேன்.எழுந்து நடந்து ஓடும் காலம் வெகு தொலைவில்.

    ReplyDelete
  57. செல்வன், நீங்கள் தவழும் போதே இந்தப் போடு போட்டீர்களென்றால் இன்னும் ஓடத் தொடங்கினால் இன்னும் என்ன என்ன செய்வீர்கள்? நீங்கள் படிப்பதில் தோன்றும் ஐடியாக்களை எல்லாம் தமிழ்மணத்தில் நன்றாய் சோதனை செய்து பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். நீங்கள் படிக்கும் சப்ஜெக்ட் எனக்கும் மிகவும் பிடிக்கும். இரண்டு மூன்று புத்தகங்கள் அந்தத் தலைப்பில் படித்திருக்கிறேன். இன்னும் நிறைய நீங்கள் சாதிக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  58. நன்றி குமரன்,

    தமிழ்மணத்தில் எழுத துவங்கியதில் கிடைத்த பெரும்பேறாக கருதுவது இங்கு கிடைத்த உங்களை போன்ற நண்பர்களை தான்.அருமையான நட்பு கிடைத்தால் நாம் வாழும் வாழ்வு வீணல்ல.

    ReplyDelete
  59. //வெறும் Counter எண்ணைப் பார்க்கிறதை விட பின்னூட்டத்தைப் பார்ப்பதில் அதிக சந்தோசம் என்பதை ஒத்துக்கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன்//

    உண்மை.. உண்மை... (இன்னொரு பின்னூட்டம் ஆச்சிங்க..)

    :-))))

    ReplyDelete
  60. செல்வன், எப்படியோ ஒரு பெரும் போடாப் போட்டீங்க. நல்லது. என்னை நண்பன்னு சொல்லி அருமையான நட்புன்னு வேற சொல்லிட்டீங்க. என்னை விட அருமையான நட்புக்கள் உங்களுக்கு இங்கு கிடைக்கட்டும்.

    ReplyDelete
  61. கோபி, ரொம்ப நன்றி. உங்கள் பின்னூட்டம் பார்த்ததில் எனக்கு அபார மகிழ்ச்சி ஏற்பட்டது :-)

    ReplyDelete
  62. குமரன்,

    என் பின்னூட்டத்திற்க்கான உங்கள் பதில் பின்னூட்டத்தைப் பார்த்த பின் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன் என்பதை இங்கே சொல்லிக் கொள்வதன் மூலம் பெருமை கொள்கிறேன் என்றால் அது மிகையாகாது என்பதை 'எண்ணிப்' பார்க்கின்ற போது அதனையே வலையுலகத்திலுள்ள அனைவரும் அறிவர் என்பது தெள்ளத் தெளிவாய் விளங்கும் உண்மை

    :-)

    ReplyDelete
  63. கோபி, நீங்க நல்லாத் தான் 'எண்ணி'ப் பாத்தீங்க போங்க. :-)
    உங்கப் பதிவுக்கு வந்து நானும் 'எண்ணி'ப் பார்க்குற வரைக்கும் விட மாட்டீங்க போல இருக்கு? :-)

    ReplyDelete
  64. குமரன், இதுவரை யாருக்கு மிக அதிகமான பின்னேட்டங்கள் கிடைத்திருக்கிறது என்று தெரியுமா?

    யார் என்ன சொன்னாலும், உங்க 'cut and paste' பதிவு நல்லாத்தான் இருக்கு ;-)

    ReplyDelete
  65. யார் இதுவரை அதிகப் பின்னூட்டம் பெற்றிருக்கிறார் என்று தெரியவில்லை ஹரிஹரன்ஸ். எனக்குத் தெரிந்து இராமநாதனுடைய ஒரு பதிவுக்கு 300+ பின்னூட்டங்கள் வந்தன. இப்போது இலவசக் கொத்தனாருடைய பதிவுக்கு 200+ பின்னூட்டங்கள் வந்து, மேலும் வந்து கொண்டு இருக்கின்றன.

    உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  66. இட்லி வடைக்கு கூட ஒரு பதிவிற்கு 320 பின்னூட்டங்கள் வந்ததாகக் கேள்வி. இராமனாதன் கிட்டத்தட்ட 360 வாங்கினார். இது தவிர வேறு இருந்தால் யாராவது சொல்லுங்களேன்.

    உங்க எல்லோருடைய தயவிலும் நானும் இந்த 300+ கிளப்பில் சேர முயல்கிறேன். :)

    ReplyDelete
  67. குமரன், என்னது இந்த மாதிரி டீச்சர் வேலை எல்லாம் பண்ணிட்டுருக்கிங்கீங்க, ஏதோ ந்ங்க பக்தகோடியா இருப்பது புண்ணியம்னு பார்த்தா, என்னது இது? ஆனா நல்லா எல்லா டெக்னிக்யும் சொல்லி கொடுத்தீட்டீங்களே!

    ReplyDelete
  68. பின்னூட்டம் முக்கியமல்ல கருத்துதான்

    ReplyDelete
  69. இதாவது பராவாயில்லை. இட்லிவடையில் நடந்த கூத்தைக் கேட்கவே வேண்டாம்.
    இப்போதைக்கு டோண்டுதான் பின்னூட்டங்கள் அதிகம் பெற்ற பதிவர் (ஒரே பதிவில் 500 ஐத்தாண்டி இப்போது அடுத்த பதிவும் தொடங்கிவிட்டார்.) ஆனால் அதில் முக்கால்வாசி அவர்மட்டுமே எழுதின பின்னூட்டங்கள்.
    மற்றவர்கள் இட்ட பின்னூட்டங்களென்று பார்த்து ஒரு விருது கொடுக்கலாம். நிச்சயமாக இப்போதைய நிலையில் நீங்கள் ஐந்துக்குள் வருவதே கடினம்தான்.

    ReplyDelete
  70. 300+ கிளப்பில் சீக்கிரம் சேர்ந்து வாழ்வாங்கு வாழுங்கள் இலவசக் கொத்தனார். :-)

    ReplyDelete
  71. வெளிகண்ட நாதர். இதில் எல்லா டெக்னிக்கையும் பயன்படுத்தணும் என்று இல்லை. ஏதோ இரண்டு மூன்று பயன்படுத்தினாலே போதும். நம் மனம் நிறையும் அளவுக்கு பின்னூட்ட மழை கொட்டும். அதுக்கு நான் கியாரண்டி. :-)

    ReplyDelete
  72. உண்மைதான் என்னார் ஐயா. கருத்துள்ள பின்னூட்டம் பத்து வந்தாலும் போதும். கருத்தே இல்லாமல் 100 வருவதை விட அது மேல் தான்.

    ReplyDelete
  73. வசந்தன், டோண்டு சார் பதிவை கணக்கில் எடுத்துக் கொள்ளலாமா என்று தெரியவில்லை. ஏனென்றால் அதில் நீங்கள் சொன்ன மாதிரி முக்கால் வாசியென்ன அதற்கும் மேலே அவர் மற்றவர் வலைப்பதிவில் இட்ட பின்னூட்டங்களின் பிரதிகள் தான். அதனால் அதிகம் பின்னூட்டம் இட்ட வலைப்பதிவர் ஆக வேண்டுமானால் டோண்டு சாரைச் சொல்லலாம்; ஆனால் அதிகம் பின்னூட்டம் பெற்றவர்ன்னு சொன்னா அவரே ஒத்துக்க மாட்டார்.

    நான் ஐந்துக்குள்ளா? ஐம்பதுக்குள்ளேயே வருவேனா என்பது சந்தேகமே. :-)

    ReplyDelete
  74. குமரன்
    50 ஆவது பதிவில் பின்னூட்டத்தில் இத ஆரம்பிச்சீங்க.
    104 பதிவாயிடுச்சு
    பின்னூட்ட விஷயம் போதும் தானே குமரன்.

    போகிற போக்கில தமிழ்மண கலாச்சாரம்-னு ரஜினி ராம்கி
    சொல்லிட்டு போயிட்டாரு.
    என்னுடைய எந்தப் பதிவுன்னு இப்ப நினைவிலில்லை.
    அதுக்கு அர்த்தம் இது வரைக்கும் தெரியல.
    நட்பினை வளர்க்கும் பின்னூட்டங்கள்,பதிவுகள் வாழ்க.

    ReplyDelete
  75. குமரன்,

    நான் 300 பெற வாழ்த்துக்கள்ன்னு இங்கயே போட்டுக்கிட்டா எப்படி? நம்ம பதிவுல வந்து போடுங்க. இல்லைன்னா எப்படி? அஸ்கு புஸ்கு. அழுகுண்ணி ஆட்டம்.

    ReplyDelete
  76. மதுமிதா அக்கா. 104ஆ? 140க்கும் மேல போயாச்சே அக்கா.

    இப்போதெல்லாம் இதில் கூறியுள்ளவற்றைப் பயன்படுத்துவதில்லை. நீங்கள் சொன்னது போல் தேவையான அளவுக்குப் பின்னூட்டங்கள் வரத் தொடங்கிவிட்டன. இரண்டு பின்னூட்டங்கள் வந்தாலும் போது தான்.

    இப்போதெல்லாம் மற்றவர் பதிவுகளுக்குச் சென்று பின்னூட்டம் இடுவதே அவர்கள் எழுதுவதை ஊக்குவிக்க வேண்டும் என்பதால் தான். ஆரம்பத்தில் எனக்கு அந்த ஊக்கம் தேவைப்பட்டது. அது போல் எல்லோருக்கும் தேவைப் படலாம் அல்லவா? அவர்களுக்குத் தேவையில்லாமல் இருந்தாலும் பின்னூட்டம் இடுவதால் எதுவும் தவறில்லையே.

    இது ஜாலிப் பதிவு. புதிதாய் வந்தவர்கள் கொஞ்சம் கற்றுக் கொள்ளட்டுமே என்ற ஒரு 'நல்லெண்ணத்தில்' இட்டப் பதிவு :-)


    அப்புறம்...என்னோட நட்சத்திர வாரத்துல நீங்க ஊருக்குப் போயிட்டீங்க. அதனால மறக்காம நேரம் கிடைக்கிறப்ப எல்லாம் என்னோட நட்சத்திரப் பதிவுகளைப் படிச்சுப் பாருங்க. எல்லாமே 'கூடல்' வலைப் பூவுல இருக்கு.

    ReplyDelete
  77. இலவசக் கொத்தனார், அது தான இன்னொரு டெக்னிக். யாராவது வந்து அவங்க பதிவைப் பத்தி நம்ம பதிவுல வந்து விளம்பரம் போட்டா அவங்களுக்கு வாழ்த்துகள் நம்ம பதிவுலயே போட்டுக்கணும். அப்பத் தான் நம்ம பதிவுல பின்னூட்ட எண்ணிக்கை கூடும். பைத்தியக் காரன் தான் விளம்பரம் போட்டவர் பதிவுல மட்டும் போய் பின்னூட்டம் போடுவான். இது நான் டோண்டு சார் கிட்ட கத்துக்கிட்டது. :-)

    சரி சரி உங்க பதிவுக்கும் வந்து வாழ்த்துக்கள் சொல்றேன். அழாதீங்க.

    ReplyDelete
  78. அதான் நான் உங்க பதிவிற்கு வந்து போட்டுட்டேனே. இப்போ உங்க turn.

    ReplyDelete
  79. குமரன் இதுதான் கை ஸ்லிப்பா
    140 க்கு
    104 என்று விழுந்திருக்கிறது
    குமரன்.

    சரி சரி எல்லாம் பார்த்து விட்டு எழுதறேன் குமரன்

    ReplyDelete
  80. //நாமக்கல் பல்கலைக் கழகத்தில் உங்களை விட்டால் வேறு யாராவது இருக்கிறார்களா?//

    இப் பல்கலைக் கழகத்தில் வேந்தர், துணை வேந்தர், முதல்வர், புரொஃபசர்,
    மாண்பு மிகு மாணவன் எல்லாமே...
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .

    நான்தான்.

    ("இங்கு எல்லாமே நீர்தானா" என்று மதுரை தமிழ்ச்சங்கத்தில் நக்கீரரைப் பார்த்து தருமி கேட்பது நினைவுக்கு வருகிறது)

    ReplyDelete
  81. நன்றாய் முயற்சி செய்து வெற்றியடையுங்கள் ஆர்த்தி. :-)

    ReplyDelete
  82. நன்றி மதுமிதா அக்கா. அவசரமில்லை. நேரம் கிடைக்கும்போது படித்தால் போதும்.

    ReplyDelete
  83. அங்கு எல்லாமே நீர்தானா சிபி? முனைவர் பட்டம் என்னாச்சுன்னு இன்னும் சொல்லலியே சிபி?

    ReplyDelete
  84. சதயம். அருமையான கேள்வி. அருமையான பதில். விளம்பரம் போட்டதற்கும் பின்னூட்ட எண்ணிக்கையைக் கூட்டியதற்கும் நன்றி.

    ReplyDelete
  85. முனைவர் பட்டம் கொடுக்கப்பட்டு விட்டது. தங்களுக்கு இன்னும் தகவல் வந்து சேரவில்லையென நினைக்கிறேன்.

    பின்னூட்ட மேலாண்மையில் (Comments Management)தங்களுக்கு முனைவர் பட்டம் வழங்கப் பட்டிருக்கிறது.

    ReplyDelete
  86. மிக்க நன்றி சிபி. இனிமேல் எல்லாரும் முனைவர்ன்னு தான் கூப்பிடணும்ன்னு சொல்லிடுங்க. முனிவர் இல்லை முனைவர்ன்னு தெளிவாச் சொல்லிப் போடுங்க என்ன? :-)

    ReplyDelete
  87. //முனிவர் இல்லை முனைவர்ன்னு தெளிவாச் சொல்லிப் போடுங்க என்ன//

    நியாயமான பயம்தான். காரணம் உங்க பதிவுகள் அப்படி.

    முனிவர் மன்னிக்கவும் முனைவர் குமரன் ஐயா வாழ்க!

    ReplyDelete
  88. காதலர் தினமாமே! படித்தீர்களா? குமரன் ஐயா?

    (அநேகமாய் நீங்கள் விளக்கம் கொடுக்க விரும்புவீர்கள் என்று நினைக்கிறேன்)


    http://thozhikkaga.blogspot.com/2006/02/blog-post.html

    ReplyDelete
  89. காதலர் தினக் கவிதையைப் படித்தேன் சிபி. ரொம்ப நல்லா எளிமையா இருக்கிறது. அதற்கு விளக்கம் எல்லாம் தேவையில்லை.

    எப்படி தப்பிச்சேன் பாருங்க.

    ReplyDelete
  90. வாழ்த்திற்கு மிக்க நன்றி சிபி.

    இப்படிக்கு
    முனிவர்...சேச்சே...முனைவர் குமரன்.

    ReplyDelete
  91. அட கும்ஸ்,
    ரெண்டாவது செஞ்சுரி அடிக்கற ஆசையா? அதுக்காக இதெல்லாம் டூ மச்! சொல்லிபுட்டேன்.

    ReplyDelete
  92. நான் எங்க இராமநாதன் ஆசைப் படறேன். தானா வருது. அவ்வளவு தான்.

    ReplyDelete
  93. இரண்டாவது செஞ்சுரியா? இப்போதானே முதல்?

    ஓ. career statisticsஆ?

    ஓக்கே. ஓக்கே.

    ReplyDelete
  94. இப்படி தானா வந்து குவியற உங்களையெல்லாம் பார்த்தா பொறாமையா இருக்கு. :)

    ReplyDelete
  95. 100வது.

    வாழ்த்துக்கள் குமரன்.

    என் பதிவில் சொன்ன வாக்கை காப்பாத்திட்டேன். சரிதானே.

    ReplyDelete
  96. ஆமாம் இலவசக் கொத்தனார். இராமநாதன் என் வலைப்பதிவு-வாழ்க்கைப் புள்ளிவிவரம் தான் சொல்கிறார் என்று நினைக்கிறேன். என் முதல் நட்சத்திரப் பதிவுக்கும் இந்தப் பதிவுக்கும் தவிர வேறு எந்தப் பதிவுக்கும் 100+ பின்னூட்டம் வந்ததாய் நினைவில்லை.

    ReplyDelete
  97. 100வது பின்னூட்டம் போட்டதற்கு மிக்க நன்றி இலவசம். உங்கள் பதிவிலிருந்து நான் ஹைஜாக் பண்ணி இந்தப் பதிவைப் போட்டுட்டேன்னு இராம்ஸ் ரொம்ப கோபமா இருந்தார். அதனால தான் இந்தப் பதிவுக்கு அவ்வளவா பின்னூட்டமும் போடாமா இருந்தார். ஆனாலும் பாருங்க. உங்க பதிவுக்கு 300+ பின்னூட்டம் வந்தாச்சு. இந்தப் பதிவுக்கும் 100+ பின்னூட்டம் வந்தாச்சு. ரெண்டையும் நீங்களே வச்சுக்கோங்க. 400+ கிளப்பில் நீங்க சேர்ந்தாச்சு. வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  98. Kumaran,
    102 pinnoottangal - ellathayum padikka konjam neram agum (nan oru somberinnu ungalukku theriyatha). Okay, vishayathukku varren.

    "Blogging" enbathu nam karuthukkalai matravargaludan pagirnthu kolvathu illava? Athil en naam pinnoottangalai ethir parkka vendum? Pinnoottam illainna yarum padikkalainnu ayiduma? Ippa ennaye eduthukkanga, nan blogs padikkiren, but feedback podrathu somba kammi.

    Unga karuthu enna?

    Oru periya discussion chain arambichuttennu nenekkiren.

    Kumaresh

    ReplyDelete
  99. குமரேஷ், எல்லாப் பின்னூட்டங்களையும் படிங்க. நல்லா பொழுது போகும்.

    நீங்க சொல்வது போல் வலைப்பூவில் எழுதுவது நம் கருத்துக்களை மற்றவர்களுக்குச் சொல்வது தான். அதில் ஏன் பின்னூட்டங்களை எதிர்பார்க்கவேண்டும் என்று கேட்கிறீர்கள். நாம் இருவரும் நண்பர்கள் தான். லேட்டா வந்தாலும் என்னோட எல்லாப் பதிவுகளையும் நீங்கள் படிக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் பின்னூட்டம் இடாவிட்டால் எந்தப் பதிவைப் படித்திருக்கிறீர்கள், எந்தப் பதிவைப் படிக்கவில்லை என்று எப்படி எனக்குத் தெரியும். அதே போல் நான் சொன்ன கருத்தை படித்தவர்கள் ஒத்துக் கொள்கிறார்களா இல்லையா என்பதையும் பின்னூட்டம் இல்லாமல் எப்படித் தெரிந்து கொள்வது? சில பின்னூட்டங்களால் நான் எழுதிய கருத்தை ஒட்டிய தகவல்களும் பரிமாறிக் கொள்ளப் படுமே.

    பின்னூட்டம் இல்லாவிட்டால் படிக்கலைன்னு ஆகாது. ஆனால் படிக்கிறார்களா இல்லையா என்ற சந்தேகமும் தீராது. பின்னூட்டம் வந்தால் படிக்கிறார்கள் என்பது நிச்சயமாகத் தெரிவதால் இன்னும் எழுத ஊக்கம் கிடைக்கும்.

    ReplyDelete
  100. குமரன்!

    இந்த பரீட்சையில் நான் ஓரளாவாவது தேறியிருக்கிரேனா?

    http://pithatralgal.blogspot.com/2006/02/43-9.html

    (இதன் நகல் :
    http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

    ReplyDelete
  101. ஹாஹாஹா! Enjoyed Reading this!

    எனக்கு சுத்தமா பிடிக்காத விஷயம் - பாதிகும் மேல இந்த authors's comment-ஏ இருக்கறது தான்!

    ReplyDelete
  102. நன்றி கே.எஸ். பதிவிட்டவரின் பின்னூட்டங்களே பாதிக்கு மேல் இருப்பது தானே அதிக பின்னூட்டங்களின் அடிப்படை விதி. அது பிடிக்காது என்று சொன்னால் எப்படி? :-)

    ReplyDelete
  103. //பதிவிட்டவரின் பின்னூட்டங்களே பாதிக்கு மேல் இருப்பது தானே அதிக பின்னூட்டங்களின் அடிப்படை விதி//

    அதானே.

    ReplyDelete
  104. //இனி எண்ணிப் பார்க்கிறேன். கோவிச்சுக்காதீங்க. நான் சொன்னது பின்னூட்ட எண்ணிக்கையை எண்ணிப் பார்க்கிறேன் என்று. :-) //

    சரியான குசும்பு உங்களுக்கு குமரன்.
    (குமட்டுலயே குத்துவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்)

    (இதன் நகல்:
    http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

    ReplyDelete
  105. பார்த்து ரெம்ப நாளாச்சே...

    நலமா குமரன்....

    ReplyDelete
  106. ஐயா நாரதரே,

    இதுதானே குசும்பு. நம்ம பதிவு நல்லா யிருக்குன்னு இவருக்கு பின்னூட்டமா?

    ஆமா எந்தப் பதிவு இவ்வளவு நல்லாயிருந்துது?

    நீங்கள் ஒரு படமெடுத்து நமக்கு சான்ஸ் குடுத்தா வேண்டாம்னா சொல்லப்போறோம்?

    ReplyDelete
  107. நன்றி,நீங்க சொல்ல சொன்னத சொல்லிட்டேன்.

    ReplyDelete
  108. குமரன்,

    நீங்க டிஸ்னிலாண்டில் இருக்கிறீர்கள் என நினைத்துக்கொண்டிருந்தேன்.இப்போது பார்த்தால் தமிழ்மணத்தில் இருக்கிறீர்கள்.:-))

    சரி சுற்றுப்பயணம் முடிஞ்சு எப்ப மறுபடி வருகிறீர்கள்?

    ReplyDelete
  109. குமட்டுல குத்துறீங்களா சிபி. என்ன நாகேஷ்ன்னு நினைப்பா? :-)

    ReplyDelete
  110. நலமே முத்துகுமரன். இரண்டு வாரங்கள் விடுமுறையில் சென்றிருந்தேன். இந்த வாரம் தான் திரும்பி வந்தேன். உங்கள் பதிவுகளை அவ்வப்போது வந்து பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். எனக்குப் பிடிக்கும் என்று நீங்கள் ஏதாவது பதிவைப் பற்றி எண்ணினால் எனக்கு தனிமடலில் சொல்லுங்கள்.

    ReplyDelete
  111. நாரதரும் கொத்ஸும் ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கறாங்க. இதுல நான் சொல்ல என்ன இருக்கு? :-)

    ReplyDelete
  112. சாமி. நான் என்ன சொல்லச் சொன்னேன்? நீங்க என்ன சொல்லிட்டீங்க? ஒன்னும் புரியலையே. கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்க.

    ReplyDelete
  113. கைத்தல நிறைகனி பாட்டு நாரதருக்குப் பிடிக்காமல் இருக்குமா? நீங்கள் தொடங்கிய கலகம் தானே எங்களுக்கு நன்மையாக முடிந்தது - இல்லையென்றால் பழனி என்னும் திவ்விய திருத்தலம் கிடைத்திருக்குமா? :-)

    என் மற்றப் பதிவுகளையும் படித்து உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். உங்கள் பாராட்டிற்கு நன்றி.

    கைத்தல நிறைகனி பாடல் கொஞ்சம் கடினமாகத் தோன்றினாலும் எளிய பாடல் தான். ஆனால் திருப்புகழ் பாடல்களுக்குப் பொருள் சொல்கிறேன் என்று ஏற்கனவே Jayashree சொல்லியிருக்கிறார். அவரிடம் கேட்டுப்பார்க்கிறேன் இந்தப் பாடலுக்குப் பொருள் சொல்ல முடியுமா என்று. அவர் சொல்வதற்கு சிறிது தாமதம் ஆனால், எனக்குத் தெரிந்த வரை உங்களுக்குப் பொருளை ஒரு தனி மடலில் அனுப்புகிறேன். உங்கள் மின்னஞ்சல் முகவரி என்ன?

    ReplyDelete
  114. செல்வன். மார்ச் 22 கலிஃபோர்னியாவில் தான் இருந்தேன். சுற்றுலா முடிந்து ஞாயிறு தான் வந்தோம். முடிந்த வரை வந்த பின்னூட்டங்களை அனுமதித்துக் கொண்டிருந்தேன். அவ்வளவு தான். இந்த வாரம் தான் பின்னூட்டங்களுக்குப் பதிலளித்துக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  115. ஹி...ஹி...உங்ககிட்டேயே ஆரம்பிக்குறேன் (ஒன்னுமே போடலியேன்னு கவலை படாதீங்க...இது உங்க rule 4)

    ReplyDelete
  116. ஒரே பதிவை இரண்டு மாதத்திற்கு அப்புறமும் உயிரோட வைப்பது எப்படிய்யா?

    சொல்லுங்கய்யா..

    ReplyDelete
  117. குமரன்,

    எங்கு எத்தனை பேர் என்னைத் தவறாக புரிந்து கொண்டார்கள் என்பது எனக்குத் தெரியாது.

    நான் சொல்ல வருவது என்னவெனில் ஒரு சுகாதாரமான கருத்து பரிமாறல் இங்கு நிலவ வேண்டுமென்பதே.

    உ.தா: நல்ல நல்ல ஆங்கிலப் பதிவுகளில் சில சமூகம் சார்ந்தே அல்லது ஆன்மா புரிதலின் பொருட்டோ கேள்விகளை முன்வைக்கும் பொருட்டு அங்கு கலந்து கொள்ளும் அனைவரும் தனது கண்ணோட்டத்தை புரிதல்களை பகிர்ந்து கொள்கிறார்கள், அதில் எத்தனை விதமான மனித கோணங்கள் ஒரே விசயத்தை மற்றொருவர் பார்க்கும் விதம் அதனை அங்கு வைக்கும் பொழுது புதிய சிந்தனைவோட்டம் இப்படி....

    ஆனால் அது இங்கு நடை பெறுகிறதா என்பதுதான் எனது ஐயப்பாடே...

    நிறைய பின்னூட்டங்கள் பெறுவதில் என்ன நன்மை இருக்கிறது? பின்னூட்டமிட்டுச் செல்வதினால் என்ன நன்மை என்பதனை பொருத்து வேண்டுமானால் ஒரு தனிப் பதிவு போடலாம். எனக்கு வேண்டியது கருத்து பரிமாற்றம்.

    அதில் எந்த விதமான இடையூறுகளும் வேண்டாமே என்பதுதான். இதில் உங்களுக்கு ஏதாவது கருத்து வேறுபாடு இருக்கிறதா?
    பதிவுகள் எதற்காக பதியப் படுகிறது?

    ஒருவரின் புரிதலின் பொருட்டு அவர் கையாளும் விசயத்தை இங்கு அவரின் பார்வையின்யூடே செலுத்தி முன் வைக்கும் பொழுது அவரின் புரிதல்கள் சில நேரம் தவறாகக் கூட இருக்கலாமல்லவா?
    அப்படி இருக்கும் பட்சத்தில் அவர் சொல்லாமல் தனக்கு உதவி தேவை என்பதனை இங்கு கொணரும் பட்சத்தில் நம்மிடையே வெளிப் படுத்துகிறார் என்பதனை நாம் புரிந்து கொள்ள தவற விட்டுவிடக் கூடாது.

    அனுபவமும், உலக அறிவும் நாமே தேடிச் சென்று பெற்றிந்தாலும் அதனை நமக்குள்ளே தேக்கி வைப்பதனைக் காட்டிலும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பிரேயோசனமாகிப் போகிவிடுகிறது அல்லவா?

    அது பின்னூட்டங்களின் மூலமாக எட்ட முடியாதா? பின்னூட்டங்களின் எண்ணிக்கை????

    தயவு செய்து என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்து கொள்ள முயற்சிங்கள்... நன்றி உங்களின் பாரட்டுக்கு

    தெகா.

    ReplyDelete
  118. சீனு. இது இரண்டு மாதங்களுக்கு முன்னால் எழுதியது. அண்மையில் எழுதிய பதிவுகளில் வந்து பின்னூட்டம் இடுங்கள். விளம்பரமும் கொடுங்கள். தொடக்கத்தில் நீங்கள் ஐந்து பின்னூட்டங்களாவது கொடுக்கவேண்டும். பின்னர் தான் அந்த வலைப்பதிவர் உங்களைக் கண்டுகொண்டு உங்களுக்கு வந்து பின்னூட்டம் இடுவார். என் கணக்கில் இன்னும் நான்கு பின்னூட்டங்கள் வேண்டும். :-)

    ReplyDelete
  119. முத்து. அது என்ன பெரிய வேலையா? ரொம்ப எளிது. எழுதும் போது என்றென்றும் இளமையான விடயத்தைப் பற்றி எழுதினால் அந்தப் பதிவு என்றும் உயிரோடு இருக்கும். :-)

    ReplyDelete
  120. தெகா. நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்று புரிகிறது. மிக்க நன்றி. :-)

    ReplyDelete
  121. இதோ... எண்ணிப் பார்க்கக் கொத்தனார் வந்துவிட்டார். :-) கவலை வேண்டாம் கொத்ஸ். இந்தப் பதிவு மெதுமெதுவாக 150ஐ நோக்கி நடந்து கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  122. குமரன்,
    இதையும் அதிக பின்னூட்டம் பெற ஒரு வழியாக போட்டு இருக்கலாமே
    :-)

    (யாராவது நம்ம முன்னமே போட்டிருந்த பதிவுகள் சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்தால், நம்ம பதிவின் லிங்க்கை கொடுப்பது :-))

    ReplyDelete
  123. கும்ஸ்,

    என்ன இருந்தாலும் பழைய பதிவுக்கு உயிர் கொடுக்க உங்களை விட்டா ஆள் கிடையாது. கொஞ்சம் ட்ரை பண்ணுங்க. 140க்கு கட்டாயம் 140 வரும்.

    :)

    ReplyDelete
  124. ரொம்ம்ம்ம்ம்ப நாளா இந்த பதிவைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன் குமரன்...

    அதாவது நான் முதல் முதலில் வலைப்பதிவு ஆரம்பிக்க இன்ஸ்பிரேஷன் இந்த பதிவு - மற்றும் இதில் இழையோடும் நகைச்சுவை ( இதை படிக்கும்போது பின்னூட்டம் என்றாலே என்ன என்று தெரியாது )

    கூகுளில் எதேச்சையாக மாட்டியது உங்கள் பதிவு...அட தமிழ்லே எழுதறாங்கப்பா என்று படிக்க ஆரம்பித்து - அது இப்போ இந்த அளவில் வந்து நிக்குது (!?)...

    அப்பிடி பாத்தா நீங்க தான் தொழில் சொல்லிக்குடுத்த குரு...ஹி ஹி...

    பாஸ் பாஸ் எங்க ஓடறீங்க...இவங்க இப்படித்தான் அடிச்சிக்கிட்டு இருப்பாங்க..இதையெல்லாம் பார்த்தா தொழில்பன்ன முடியுமா? வாங்ககக பாஸ்...

    :))

    ரொம்ப நன்றி குமரன்...

    ReplyDelete
  125. சரியா சொன்னீங்க வெட்டிப்பயல் பாலாஜி. அதையும் சேத்துட வேண்டியது தான். :-)

    ReplyDelete
  126. ஊருக்கு உபதேசம் செய்யாமல், அதனை நடைமுறையில் செய்து காட்டி செயல் விளக்கம் தந்ததற்கு பாராட்டுகள்.....(134)

    ReplyDelete
  127. எண்ணிப் பார்த்து விட்டேன். அதில் உங்களுடைய பின்னூட்டம் மட்டும் 61 உள்ளது.....(135)

    ReplyDelete
  128. சொல்லித்த‌ராமல் செயலில் காட்டியது:
    பதிவு இட்டு ஆறு மாதத்திற்குப்
    பிறகும் சொந்த‌மாக ஒரு பின்னூட்டமிட்டு மீண்டும் தமிழ் மணத்தில்
    'அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்' பகுதியில் தெரிய வைப்பது.....(136)

    ReplyDelete
  129. ஏதோ என் பங்குக்கு கொஞ்சம் scoreஐ ஏற்றி விட்டாயிற்று, அதுவும் நீங்கள் சொல்லிக் கொடுத்த முறையில்....(137)

    ReplyDelete
  130. இதுக்கு உங்க commentஐ உடனே சொல்லுவீங்களா, நாலஞ்சு மாசம் கழித்துதானா?.....(138)

    ReplyDelete
  131. இந்த கோனார் உரைய படிக்காமயே
    போயிட்டனே.

    இதுல சொல்லியிருக்கிற விஷயங்களை சிலத செஞ்சிருந்தாலும். பலத செய்யவேயில்ல. நல்ல வேளை இப்பவாச்சும் படிச்சேன். இனிமேல் கவனமா இருக்கணும். மொக்கை பதிவுக்கும் பின்னூட்டம் பலமா வாங்கறத்துக்கு இப்படிக்கூட வழியிருக்கு...

    நீங்க நல்லா இருப்பிங்க..

    ReplyDelete
  132. கொத்ஸ். 140வது பின்னூட்டத்துல தான் உங்களுக்குப் பதில் சொல்லணும்ன்னு இருந்தேன். மதியண்ணாவோட தயவால இவ்வளவு விரைவிலேயே அது முடிந்தது. :-)

    ReplyDelete
  133. கொத்ஸ். பழைய பதிவுன்னாலும் என்றும் பயனுள்ள பதிவா இருக்கே. அதான் அப்பப்ப வந்து இந்தப் பதிவுக்கு உயிர் கொடுத்துக்கிட்டு இருக்கேன். :-) புதுசா வந்தங்களும் படிச்சுப் பயன் பெறட்டுமே. என்ன தான் இருந்தாலும் உங்க அளவுக்கு பின்னூட்டம் கட்டாயம் வாங்க முடியாது. :-)

    ReplyDelete
  134. நன்றிக்கு நன்றி செந்தழல் ரவி.

    ஆகா நீங்க இந்தப் பதிவைப் பாத்துட்டுத் தான் எழுதத் தொடங்கினீங்களா? ஐயையோ. வம்பாப் போச்சே... :-)) சூப்பரா தொழில் பண்றீங்க ரவி. அசத்துங்க. :-)

    ReplyDelete
  135. மதி. எப்பவுமே நாம சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம். நம்மக்கிட்ட தான் தலைவரே இந்த வசனத்தைக் கத்துக்கிட்டாரு. :-)

    ReplyDelete
  136. மதி. இவ்வளவு குறைவாகவாக என் பின்னூட்டங்கள் இருக்கின்றன? நான் எண்ணிப்பாக்காம விட்டுட்டேனே! 135ல் 61 தான் என்னோடதா? பாதிக்குப் பாதி என்னோடது இருக்கணுமே!

    இப்பத் தான் புரியுது ஏன் பின்னூட்டக் கயமைன்னு சொல்லிகிட்டு போலிஸ்காரர் இங்கே வரலைன்னு. :-)

    ReplyDelete
  137. மதி. புதுசா வந்த உங்களை மாதிரி உள்ளவங்க எல்லாம் படிக்க வேண்டாமா? அதனால தான் இது மீண்டும் வருகிறது. :-)

    (உண்மையான காரணம்: வழக்கமா யாராவது பின்னூட்டம் போட்ட கொஞ்ச நாளிலேயே, ஓரிரு நாளிலேயே பதில் சொல்லிவிடுவேன். இந்த முறை கொஞ்சம் வேலை அதிகம் இருப்பதால் பதிவுகளும் ஒரு மாதமாக போடவில்லை. பின்னூட்டங்கள் போடுவதிலும் தாமதம்).

    ReplyDelete
  138. பின்னூட்ட எண்ணிக்கையை ஏற்றி விட்டதற்கு மிக்க நன்றி மதி. உங்களுக்கு கற்பூர புத்தி. :-)

    ReplyDelete
  139. தம்பி ஐயா. இதுல சொல்லியிருக்கிறத எல்லாம் தப்பாம பயன்படுத்திப் பல்லாயிரக்கணக்கான பின்னூட்டம் வாங்கிப் பெருவாழ்வு வாழுங்க. :-)

    ReplyDelete
  140. இந்தப் பதிவில் ஒருத்தரைத் தேடி வந்தேன்! கிடைச்சிட்டாரு! :)
    ஏதோ தில்லு-ன்னு எல்லாம் திட்டினீங்களாமே... :)

    ReplyDelete
  141. இரவி,

    யார் தில்லுன்னு முதல்ல சொன்னாங்கங்கறதைப் பாருங்க. அப்புறம் அது 'திட்டறதா'ன்னும் பாருங்க. தில்லுன்னு தேடிப் பாத்ததுல அது திட்டுன்னு தோணலையே எனக்கு?! :-)

    ReplyDelete