Sunday, January 22, 2006

123: *நட்சத்திரம்* - என் வலைப்பூக்கள்: ஓர் அறிமுகம்

பெரும்பாலானோர் ஒன்றோ இரண்டோ வலைப்பூக்களைத் தான் வைத்திருக்கிறார்கள். நான் தான் தோன்றும் போதெல்லாம் ஒரு புதிய வலைப்பூவைத் தொடங்கி எழுத ஆரம்பித்துவிடுகிறேன். அதனால் என் எல்லா வலைப்பூக்களைப் பற்றியும் ஒரு சிறிய அறிமுகம் கொடுக்கலாம் என்று நினைத்தேன்.

அபிராமி பட்டர்: அபிராமி அந்தாதியின் 100 பாடல்களுக்கு சொற்பொருள் விளக்கம் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இதுவரை 15 பாடல்களுக்குப் பொருள் சொல்ல முடிந்திருக்கிறது.

விஷ்ணு சித்தன்: விஷ்ணு சித்தராகிய பெரியாழ்வாரின் பாசுரங்களுக்குப் சொற்பொருள் விளக்கம் சொல்லத் தொடங்கியது இந்த வலைப்பூ. விஷ்ணு சித்தரின் கதையைச் சொல்லிமுடித்து இருக்கிறேன். விரைவில் பாசுரங்களைப் பற்றி எழுதுவேன்.

கூடல்: இந்த வலைப்பூ ஒரு தனிப்பொருளைப் பற்றி இல்லாமல் தோன்றுவதை எல்லாம் எழுதுவதற்காகத் தொடங்கப் பட்டது. கதை, கவிதை, கட்டுரை என்று எல்லாமே இதில் வரும். வருகிறது.

மதுரையின் ஜோதி: மதுரையில் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்து சௌராஷ்ட்ர மொழியிலும் தமிழிலும் பல பக்திப் பாடல்கள் பாடிய மகான் ச்ரி நடன கோபால நாயகி சுவாமிகள். அவரது பாடல்களுக்குச் சொற்பொருள் விளக்கங்களை இந்த வலைப்பூவில் காணலாம்.

பஜ கோவிந்தம்: ஆதி சங்கரரின் பஜ கோவிந்தம் என்னும் வடமொழி நூலில் உள்ளப் பாடல்களுக்கு இங்கு சொற்பொருள் விளக்கம் எழுதுகிறேன்.

திருவாசகம் ஒரடொரியொ: இசைஞானி இளையராஜா இசையமைத்தத் திருவாசகப் பாடல்களுக்குச் சொல்பொருள் விளக்கம் இங்கே எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

பாட்டுக்கொரு புலவன் பாரதி: மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல்களை இங்கே கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆங்காங்கே தேவைப்பட்டால் விளக்கமும் கொடுக்கிறேன்.

கோதை தமிழ்: ஆண்டாளின் திருப்பாவைக்கு இங்கு சொற்பொருள் தரப்படும். தற்போது கோதையின் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

இந்தியக் கனவு 2020: நண்பர் சிவாவின் இந்தப் பதிவின் மூலம் இந்தியக் கனவு 2020 என்ற சிறு இயக்கத்தைப் பற்றிப் படித்திருப்பீர்கள். இந்த வலைப்பூவில் அந்த இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றியச் செய்திகள் வரும்.

சகலகலாவல்லி: குமரகுருபரர் பாடிய சகலகலாவல்லி மாலையின் பாடல்களுக்குச் சொற்பொருள் விளக்கத்தை இங்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறேன்.

இது போக இன்னும் ஒரு நான்கு ஆங்கில வலைப்பூக்களும் இருக்கின்றன. வலைப்பதிக்க தொடங்கிய போது அவற்றிலும் சில இடுகைகள் இட்டேன். அண்மையில் அவ்வளவாய் அவற்றில் எழுதவில்லை. அந்த ஆங்கில வலைப்பூக்களைப் பார்க்க இங்கே பாருங்கள்.

32 comments:

  1. இந்த இடுகையை நேற்றே Draftல் போட்டுவைத்திருந்ததால் இன்று பதிவிட்டவுடன் தமிழ்மணத்தின் முதல் பக்கத்தில் வரவில்லை. :-(

    ReplyDelete
  2. தமிழ் மணத்தின் முதல் பக்கத்தில் இப்போதைய ஏற்பாட்டின் படி தானாக பதிவுகள் வருவதில்லை குமரன். நீங்கள் தான் தமிழ்மணத்தின் முகப்பு பக்கத்தில் உங்கள் இடுகையை சேர்க்க வேண்டும்.

    ReplyDelete
  3. ஒண்ணு ரெண்ட வச்சு ஒப்பேத்தறதே பெரும்பாடா இருக்கு.... குமரன்....ம்.....ஸ்சப்பா....

    ReplyDelete
  4. ஜாபர் அலி, நீங்கள் சொன்ன மாதிரி என் இடுகையை நானாகச் சேர்த்துவிட்டேன். அப்படித் தான் பொங்கலுக்கு சற்று முன்னாலிலிருந்து செய்து வருகிறேன்.

    ஆனால் முதல் பக்கத்தில் பட்டியலில் வரும் போது அந்தப்பதிவு எந்த நேரத்தில் முதல் முதலாக ப்ளாக்கரில் சேமிக்கப் பட்டதோ அந்த நேர அடிப்படையில் தான் பட்டியலில் வருகிறது. இந்தப் பதிவை நான் நேற்றே எழுதிச் சேமித்துவிட்டதால் பதித்துவிட்டு தமிழ்மணத்திற்கு அனுப்பிய போது முதல் பக்கத்தில் வரவில்லை. இடுகைகள் பக்கத்தில் இருக்கிறது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜாபர்.

    ReplyDelete
  5. அப்டி போடு அக்கா. பட்டியலைப் பாத்தவுடனே மூச்சு வாங்குதா? இல்லை. எல்லாப் பதிவுகள் உள்ளேயும் போயி ஒரு பார்வை பாத்தீங்களா? :-)

    வேற ஒன்னும் இல்ல அக்கா. நீங்க எல்லாம் ஆழ உழறீங்க. நான் அகல் உழுதுட்டுப் போயிடறேன். அதான் நிறைய நிலத்தை உழ முடியுது. ஆனா உங்களுக்கேத் தெரியும் ஆழ உழறது நல்லதா அகல உழறது நல்லதான்னு :-)

    ReplyDelete
  6. பத்து பதிவு வச்சு மாரடிக்கறது கஷ்டங்கறத விட, தைரியம்னு தான் சொல்வேன். ஏன்னா, பத்து வெவ்வேறு விஷயங்கள குறித்து தனியாய் பதிக்கவெல்லாம் நமக்கு விஷய ஞானம்.. ஹி ஹி.. அதுனால தான் நம்மது pot-pourri! :))

    பின்னூட்டங்கள் டல்லாக இருப்பது போல் இருக்கிறதே..

    யாமிருக்க பயமேன் குமரன்.

    எவ்வளவு வேண்டும் என்று தெரிவித்துவிட்டால், நிறைவேற்றிவைக்க நானிருக்கிறேன். தெரியுந்தானே?? :))

    ReplyDelete
  7. இராமநாதன். பின்னூட்ட எண்ணிக்கையை கூட்டணும்னா நாளைக்குச் சொல்றேன். வழக்கமா வந்துப் படிச்சுப் பின்னூட்டம் போடறவங்க இன்னும் நிறைய பேர் வரணும். அதனால நாளைக்குத் இந்தப் பதிவோட நிலைமையக் கவனிக்கணும். :-)

    பின்னூட்டம் போடற அதே நேரத்துல தம்ஸ் அப்பையும் கை குலுக்கிவிட்டுட்டா ரொம்ப் நல்லது. :-)

    ReplyDelete
  8. ஒரு பதிவுக்கே இங்கே 'தாவு'தீர்ந்து போகுது.

    உங்களுக்கெல்லாம் மகா தைரியம்:-))))))

    ஜமாய்ங்க.

    ReplyDelete
  9. //ஜமாய்ங்க//

    இத எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே. ஓ நீங்க தான் என்னோட முந்தையப் பதிவுலயும் இதச் சொல்லியிருந்தீங்க.

    'நல்லா இருங்க' தானே உங்க ட்ரேட் மார்க். அதை எப்ப 'ஜமாய்ங்க'க்கு மாத்துனீங்க அக்கா? :-)

    எல்லாம் உங்களைப் பாத்து வர்ற தைரியம் தான். வேறென்ன?! :-)

    ReplyDelete
  10. இங்க பட்டியல் போட்டிருக்கிற என் வலைப்பதிவுகளைப் பார்த்து மூச்சு வாங்குனா, ஞானவெட்டியான் ஐயாவோட பதிவுகளைப் போய் பாருங்க. அவர் தான் எனக்கு குரு - பல விஷயங்களில், அதிக எண்ணிக்கையில் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் தனித்தனி வலைப்பூவா போடுறதிலும். :-)

    ReplyDelete
  11. As of my knowledge, Chandravathana is another exception. She writes around 10.. I guess

    ReplyDelete
  12. நீங்க சொல்றது சரி கிறுக்கன் சார். சந்திரவதனாவை எப்படியோ மறந்துட்டேன். :-)

    ReplyDelete
  13. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  14. தம்ஸ்-அப்பியாச்சு!

    Enjoy!!! நாளை நிலவரம் பார்த்துட்டு அப்புறமா வரேன்!!!

    நம்ம் பதிவையும் கண்டுக்கோங்க!!!

    ReplyDelete
  15. எங்கள் ஆன்மிக சூப்பர்ஸ்டாரின் ஒவ்வொரு பதிவையும் ஒவ்வொரு வார நட்சத்திரமாக அறிவிக்க வேண்டுகிறேன்.

    செல்வன்
    நிரந்தர பொருளாளர்
    ஆன்மிக சூப்பர்ஸ்டார் குமரன் ரசிகர் மன்றம்

    ReplyDelete
  16. என்ன இராமநாதன். தம்ஸ் அப்புறதுக்குப் பதிலா தம்ஸ் டவுனைக் குத்திட்டீங்க போலிருக்கு? 2/2 இருந்தது 1/3 ஆயிடுச்சே :-(

    முந்தைய தமிழ்மணத்தில் + இருந்த பக்கத்தில் இப்போது தம்ஸ் டவுன் இருக்கிறதால இந்தக் குழப்பம் வருதுன்னு நெனைக்கிறேன். :-) அடுத்தப் பதிவுக்கு தம்ஸ் அப்புறப்ப பார்த்து அப்புங்க.

    ReplyDelete
  17. என்ன நிரந்தரப் பொருளாளரே. இது உங்களுக்கே டூ மச்சாத் தெரியலை? :-) தமிழ்மணத்துல அறிவிக்காட்டியும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ அப்படி பண்ணியாச்சுன்னா போச்சு. என்ன சொல்றீங்க? :-)

    ReplyDelete
  18. நான் ப்ளஸ் தானே குத்தினேன்??

    என்ன பிரச்சனையோ தெரியவில்லை குமரன்! :(

    எப்படியாகினும், சின்னவர் மற்றும் குசும்பரின் நிலைகளை ஆராய்வோமெனின், - களே சாலச் சிறந்தது!

    ReplyDelete
  19. ஆன்மிக செம்மல்,மின்னெசோட்டா மின்னல்,சகலாவல்லவர்,மதுரை மாணிக்கம்,தன்மானத் தங்கம்,இனமான சிங்கம்,தமிழர் தளபதி,திராவிட போர்வாள்,வருங்கால முதலைமைச்சர்,வருங்கால அமெரிக்க சனாதிபதி, அண்ணன் டாக்டர் குமரன் அவர்களே,

    இன்று இது ரசிகர் மன்றம்.நாளை இது புரட்சி மன்றம்.ஆட்சியை பிடிக்கும் சட்ட மன்றம்.

    இன்று நான் பொருளாளர்.நாளை என்னன்னு யாருக்கு தெரியும்?(ரஜினி ஸ்டைலில் படிக்கவும்)

    ReplyDelete
  20. //ஆன்மிக செம்மல்,மின்னெசோட்டா மின்னல்,சகலாவல்லவர்,மதுரை மாணிக்கம்,தன்மானத் தங்கம்,இனமான சிங்கம்,தமிழர் தளபதி,திராவிட போர்வாள்,வருங்கால முதலைமைச்சர்,வருங்கால அமெரிக்க சனாதிபதி, அண்ணன் டாக்டர் குமரன் அவர்களே,

    இன்று இது ரசிகர் மன்றம்.நாளை இது புரட்சி மன்றம்.ஆட்சியை பிடிக்கும் சட்ட மன்றம்.

    இன்று நான் பொருளாளர்.நாளை என்னன்னு யாருக்கு தெரியும்?(ரஜினி ஸ்டைலில் படிக்கவும்)

    //

    ஏற்கனவே மினசோட்டாவுல பயங்கரமாக் குளுருது. இதுல நீங்க வேற. சும்மா இருங்க பொருளாளரே.

    ReplyDelete
  21. குமரன்,

    பதிவுகள் மாதிரி நீங்கள் வலைப்பூக்கள் வைத்திருக்கிறீர்கள். அசாத்திய திறமைதான். ஆனால் அதில் ஒரு நல்ல விசயம் இருக்கிறது. ஒன்றோடொன்று கலந்து போவதை விட ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக வைத்திருப்பது அதன் தரத்தை காப்பாதற்கு வசதியாக இருக்கும்.

    ஒரு மாதத்திற்கு முன்பு உங்கள் ஜிடாக் முகவரிக்கு ஒரு மடல் அனுப்பி இருந்தேன். அபிராமி அந்தாதி மின்நூல் இருக்கிறதா என்று. இருந்தால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு சிரமம் பாராது அனுப்பி வைங்களேன்.
    mmuthukkumaran@gmail.com

    ReplyDelete
  22. அடேங்கப்பா..

    என்னங்க வலைப்பூ மாலையா?

    எப்படிங்க முடியுது உங்களால..

    அந்த ரகசியத்த கொஞ்சம் சொல்லுங்க?

    ரெண்டு பதிவுல போடறதுக்குள்ளவே முழி பிதுங்குது..

    ReplyDelete
  23. தமிழின் மீதுள்ள உங்க ஆர்வத்தைத்தான் உங்கள் வலைப்பூக்களின் எண்ணிக்கை உணர்த்துகிறது.`செந்தமிழும் வலைப் பழக்கமாக வாழ்த்துக்கள். அன்புடன்,
    தாணு(சுசீந்தரத்தில் தாணுமாலையன் கோவில் உண்டு தெரிந்திருக்குமே இந்த ஆன்மீகவாதிக்கு, அதன் முதல் மூலம் `தாணு' -சிவன் என்று பொருள்- ஆனால் பெண்களில் இந்தப் பெயர் உள்ள ஒன்றிரண்டுபேரில் நானும் ஒருத்தி

    ReplyDelete
  24. அம்மாடியோவ், எம்புட்டு பதிவுகள் :)
    தினசரி முடியாவிட்டாலும் வாரம் ஒருமுறையேனும் உங்கள் பதிவுகளை வலம் வந்து விடுவேன்.
    தங்கள் தமிழ்ப் பணி மேலும் சிறக்கட்டும்.

    ReplyDelete
  25. முத்துக்குமரன். நீங்கள் சொல்வது சரிதான் ஒரு வகையில். தனித்தனி வலைப்பூவாய் வைத்திருப்பதால் எல்லாமே கலந்து இருப்பதைத் தடுக்க முடிகிறது. கலந்து இருந்தாலும் தரம் குறையாது என்பதால், கலந்தும் வைத்திருக்கலாம். ஆனால் படிப்பவர்களுக்கு ஒரே விஷயம் ஒன்றாய்த் தொகுத்து இருந்தால் மிக்க வசதி. சிலர் சேமிக்கவும் செய்கிறார்கள். அவர்களுக்கும் வசதி. இப்படிப் பலவற்றைச் சொல்லலாம்.

    உங்களிடம் இருந்து மின்னஞ்சல் வந்த மாதிரி நினைவு இல்லை. பார்க்கிறேன். Project Madurai வலைப்பக்கத்தில் அபிராமி அந்தாதி மின்னூல் பார்த்ததாய் நினைவு. அடுத்த வாரம் அதனைத் தேடி உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்.

    ReplyDelete
  26. ஜோசஃப் சார். நான் நிறைய வலைப்பூக்கள் வைத்திருந்தாலும் உங்கள் அளவுக்கு பதிப்பதில்லை. உங்க வேகத்துக்கும் ஞானவெட்டியான் ஐயா வேகத்துக்கும் ஈடு கொடுக்க முடியவில்லை. பலவற்றைப் படிக்காமல் தவறவிட்டுவிடுகிறேன்.

    ஞானவெட்டியான் ஐயா பதிக்கும் போதெல்லாம் எனக்கு மின்னஞ்சலில் தெரியப் படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டேன். அப்படியே அவரும் செய்கிறார். நீங்களும் நீங்கள் பதிக்கும் போதெல்லாம் எனக்கு மின்னஞ்சலில் அந்தப் பதிவின் சுட்டியை அனுப்புகிறீர்களா?

    இராகவனிடமும் கேட்டேன். அவர் அனுப்புவதில்லை. அவர் வாரம் ஒருமுறை பதிப்பதால் அவர் வலைப்பக்கத்திற்குச் சென்று படித்துவிட முடிகிறது. இல்லையேல் கடினம்.

    ReplyDelete
  27. தாணு அக்கா, மிக்க நன்றி. இப்போது அப்படித் தான் ஆகிவிட்டது. செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போய் செந்தமிழும் வலைப்பழக்கம் என்று தான் ஆகிவிட்டது. உண்மையைச் சொன்னால் சிவாவுடனோ நடராஜனுடனோ தமிழில் பேசும்போது வார்த்தைகள் உடனே வராமல் பல நேரங்கள் தடுமாறியிருக்கிறேன். வீட்டில் சௌராஷ்ட்ரம், அலுவலகத்தில் ஆங்கிலம் என்று தமிழில் பேசுவதே இங்கு வந்த பின் மிகவும் குறைந்துவிட்டது. நாப்பழக்கம் போய் வலைப்பழக்கம் தமிழ் தான் மிஞ்சியிருக்கிறது :-(

    சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலைப் பற்றி நன்றாகத் தெரியுமே. தாணுவாகிய சிவபெருமான், மாலாகிய திருமால், அயனாகிய பிரம்மன் என்று மூம்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்த மூர்த்தியின் கோவில் அல்லவா அது. ஆமாம் நீங்கள் சொன்ன மாதிரி தாணு என்று பெயர் பெற்ற பெண்மணிகள் மிகக் குறைவு.

    ReplyDelete
  28. மணியன்,

    வாரம் ஒரு முறையாவது வலம் வருவீர்களா. நான் அவ்வளவு சீக்கிரம் எல்லா வலைப்பூக்களிலும் பதிப்பதில்லையே. தினமும் ஒன்று என்றாலும் அண்மையில் ஒரு வாரத்திற்கு இரண்டு வலைப்பூ என்று பதிப்பது வழக்கமாகிவிட்டது. ஒரு மின்னஞ்சல் என் முகவரிக்கு (kumaran dot malli at gmail dot com) அனுப்புங்கள். நான் பதிக்கும் போதெல்லாம் உங்களுக்குத் தெரியப் படுத்துகிறேன். வாரம் ஒரு முறை அந்த மின்னஞ்சலில் உள்ளவற்றை மட்டும் படித்தால் போதும். :-)

    தங்கள் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  29. தங்களின் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  30. மிக்க நன்றி Chameleon - பச்சோந்தி.

    ReplyDelete
  31. குமரன் நீங்கள் கூந்தல் உள்ள சீமட்டி இடக்கொண்டையும் போடலாம் வலக்கொண்டையும் போடலாம். பின்னுட்டம் போடவிட்டால் என்னுடன் சண்டையும் போடலாம். நீங்கள் 100 பதிவு ஒரே சமயத்தில் போடும் ஆற்றல் உள்ளவர். என்ன ஜிரா நான் சொல்வது சரிதானே. தி. ரா. ச

    ReplyDelete
  32. தங்களின் அதிக பட்ச புகழ்ச்சிக்கு மிக்க நன்றி தி.ரா.ச :-)

    ReplyDelete