Sunday, January 22, 2006

121: *நட்சத்திரம்* - வாழ்வினிலே ஓர் நாள் திருநாள்

தலைப்பில் சொன்ன மாதிரி தான் தோன்றியது அந்த மின்னஞ்சலைப் பார்த்த போது. எனக்குத் தெரிந்த, நான் தொடர்ந்து படிக்கும் வலைப்பதிவர்கள் எல்லாம் தமிழ்மண விண்மீன்களாக ஆகி (ஆக்கப்பட்டு?!!) பெரும்புகழ் (?!!) எய்துவதைப் பார்த்தப் போது நமக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்ற ஆசை வந்தது. ஒரு வேளை பெரும்பாலும் ஆன்மிகம் பற்றியே எழுதுவதால் மதியின் பார்வையில் படாமல் போய்விடுவோமோ என்ற எண்ணமும் அவ்வப்போது வந்தது. அவர் நம் வலைப்பதிவுகளைப் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை; நாம் போய் பல பேருக்குப் பின்னூட்டம் இட்டால் நம் பெயர் அவர் பார்வையில் படலாம் அல்லவா? அதனால் எப்போதும் படித்துவிட்டு ஆனால் பின்னூட்டம் இடாமல் வரும் வலைப்பதிவுகளிலும் பின்னூட்டம் இடலாம் என்று முடிந்த வரை பின்னூட்டமும் இடத் தொடங்கினேன். அதெல்லாம் வீண் முயற்சி என்பது மதி அவர்களின் 'குமரன். தமிழ்மண நட்சத்திரமாய் இருக்கச் சம்மதமா?' என்று கேட்டு வந்த மின்னஞ்சலைப் பார்த்த போது தெரிந்தது.

அந்த மின்னஞ்சலைப் பார்த்த போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இதுக்காகத் தானே காத்திருந்தேன் என்று உடனே சரி என்று பதில் அனுப்பினேன். பின்னர் சில தடவை மின்னஞ்சலில் பேசிக்கொண்டோம். அப்போது தான் தெரிந்தது அவர் என் பதிவுகளையும் படித்திருக்கிறார் என்பது. பின்னூட்டம் இடாததால் எனக்கு அவர் படிக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை. என் பதிவுகளையே அவர் படித்திருப்பதால் இங்கு தமிழ் மணத்தில் வரும் எல்லாப் பதிவுகளையும் அவர் படித்திருப்பார்; படித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது. அபாரப் பொறுமை அவருக்கு. அதனால் எப்போது நமக்கு இந்த வாய்ப்பு கிட்டும் என்று காத்துக் கொண்டிருக்கும் வலைப் பதிவு நண்பர்களே! கவலை வேண்டாம். சீக்கிரம் இந்த வாய்ப்பு உங்களுக்கும் கிட்டும்.

தமிழ்மணம் பகலவன் போல என்று நான் சொல்வதுண்டு. பகலவன் எந்தச் செயலையும் இந்த உலகில் செய்யாவிட்டாலும் பகலவன் தான் எல்லாச் செயல்கள் நடப்பதற்கும் தூண்டுதல். இவ்வுலகில் வேண்டிய அளவு வலிமையை (எனர்ஜி) கதிரவன் தான் தன் கதிர்க் கரங்களால் வழங்குகிறான். அது போல் என்னையொத்த வலைப் பதிவர்களுக்கு தேவையான எனர்ஜியை, உந்துதலை, தூண்டுதலைத் தருவது தமிழ்மணம் தான். உண்மையைச் சொன்னால் தமிழ் மணம் இல்லாவிட்டால் நான் வலைப் பதியத் துவங்கியிருப்பேனா? நான்கு மாதங்களில் இவ்வளவு பதிவுகள் பதித்திருப்பேனா? என்பதே சந்தேகம். அதனால் வாய்ப்பு கிடைத்தப் போதெல்லாம் தமிழ்மணத்திற்கும் அதற்கு பின்பலமாக இருந்து வேண்டிய எல்லா வேலைகளைச் செய்யும் தமிழன்பர்களுக்கும் மீண்டும் மீண்டும் என் நன்றிகளைச் சொல்லியிருக்கிறேன். இந்த நட்சத்திர வாரத் தொடக்கத்திலும் மீண்டும் ஒரு முறை என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விண்மீன் வாரத்தின் முதல் பதிவில் என்னைப் பற்றிய அறிமுகம் செய்துகொள்ளவேண்டும் என்று சொன்னார்கள். ஏற்கனவே என்னைப் பற்றி பலமுறை என் பதிவுகளில் சொல்லியிருந்தாலும் முதன்முதலாக என் பதிவைப் பார்க்கும் நண்பர்கள் யாராவது இருக்கலாம் என்பதால் சுருக்கமாக என்னைப் பற்றிச் சொல்லிக் கொள்கிறேன்.

பிறந்தது சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த, சங்கம் இல்லாத நேரத்திலும் தமிழன்பர்கள் நிறைந்த மதுரை மாநகரில். படித்து முடித்தது முதுநிலைப் பொறியியல். வேலை செய்வது கணினி, மென்பொருள் சார்ந்த நிறுவனத்தில். கடந்த ஏழு வருடமாக வாழ்வது அமெரிக்காவில் மினசோட்டா மாநிலத்தில். திருமணம் ஆகி ஒரு மூன்று வயது பெண் குழந்தையும் உண்டு.

சிறு வயதிலிருந்தே தமிழிலும் ஆன்மிகத்திலும் ஆர்வம். பழைய நூல்களைத் தேடிப் படிப்பேன். பலவிதமான கருத்துகள் உடைய நூல்களைப் படித்திருக்கிறேன். களவும் கற்று மற என்று பெரியவர்கள் சொன்ன படி எதிர் மறையான கருத்துகள் உடைய நூல்கள் சிலவற்றையும் படித்திருக்கிறேன்.

எழுதத் தொடங்கிய போது எல்லோரையும் போல் நானும் கவிதை தான் எழுதத் தொடங்கினேன். முதலில் எழுதத் தொடங்கியது முழுவதும் மரபுக்கவிதைகள் போல் தோன்றும் கவிதைகளே. மரபுக்கவிதைகள் என்று சொல்லாமல் அவை போல் தோன்றும் என்று ஏன் சொல்கிறேன் என்றால் அவையெல்லாம் இலக்கணப்படி அமைந்ததா இல்லையா என்று இது வரை தெரியாது.

மற்றவர்களுக்காக (பின்னே நானே எழுதி நான் மட்டும் படித்துக் கொண்டிருந்தால் எப்படி?) புதுக் கவிதை என்று எழுதத் தொடங்கியது கல்லூரிக்கு வந்த போது. முதன்முதலாக எழுதியப் புதுக் கவிதை இப்போதும் நினைவில் இருக்கிறது.

கடவுளும் அவள் இடையும் ஒன்று
சிலர் உண்டென்பர்
சிலர் இல்லையென்பர்

அதைப் படித்து ரசித்தவர்களை விட கடவுளை அவள் இடையுடன் ஒப்பிட்டு கடவுளைக் கேவலப்படுத்திவிட்டாய் என்று சண்டைக்கு வந்தவர்கள் தான் அதிகம்.

அதன் பின் கல்லூரியில் (கல்லூரிகளில்) படித்தக் காலமெல்லாம் கதை, கட்டுரை, கவிதை என்று எழுதித் தள்ளுவதிலேயே நேரமெல்லாம் சென்றது. யாராவது படிக்கிறார்களா என்று கவலைப் பட்டது கிடையாது அந்தக் காலத்தில். எழுதுவதற்கு வேறு வகையான ஊக்கங்கள் கிடைத்தன; வாசகர்கள் இருக்கிறார்களா என்று தேடத் தேவையில்லாததாய் இருந்தது. இளநிலை பொறியியல் படித்த கல்லூரியில் கடைசி ஆண்டில் நடந்த கல்லூரி ஆண்டு விழாவில் கவிதைப் போட்டிக்கு ஒரே நடுவராய் என்னை நண்பர்கள் தேர்ந்தெடுத்த போது ஆஹா நம் கவிதைகளை இவர்களும் படித்திருப்பார்கள் போலிருக்கிறதே; அதனால் தான் நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று ஒரே மகிழ்ச்சியாக இருந்தது. அதற்குப் பின் தான் அது சர்க்கரை ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்னும் கதை என்பதும், அவர்கள் என் கவிதைகளைப் படிக்கவில்லை; மற்றவர்கள் 'இறுதியாண்டில் படிக்கும் கொஞ்சாமாவது கவிதை தெரிந்தவன் இவன் தான்' என்று சுட்டிக்காட்டியதால் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்பதும் தெரிந்தது தனிக் கதை.

வேலை பார்க்கத் தொடங்கிய பின் எழுதுவது குறைந்து பேசுவது அதிகம் ஆனது. பல இடங்களில் ஆன்மிகத் தலைப்புகளில் பேச வாய்ப்புகள் கிடைத்தன. அமெரிக்கா வந்த பின் மீண்டும் எழுதத் தொடங்கினேன். எழுதியவற்றை மின்னஞ்சலில் நண்பர்களுக்கு அனுப்புவேன். சில நேரங்களில் 'நன்றாய் இருக்கிறது' என்று மட்டும் சொல்லி பதில் வரும். அதனால் நிஜமாகவே யாராவது படிக்கிறார்களா என்ற சந்தேகம் வந்தது. இந்த வயதில் யாராவது படித்தால் எழுதலாம்; இல்லையேல் எழுதுவது வீண் என்ற எண்ணம் வந்தது. அதனால் அதிகம் எழுதவில்லை. அவ்வப்போது ஏதாவது எழுதுவது தான்.

இப்படியே சென்று கொண்டிருந்த போது இசைஞானி இளையராஜா திருவாசகத்தை ஓரடோரியோவாக இசைத்து இசைத் தட்டை வெளியிட்டார். நண்பர் சிவா என் குழுவில் வேலைப் பார்த்தவர் என்ற வகையில் மட்டுமே அதுவரை எனக்குத் தெரியும். அவர் இளையராஜாவின் இசைக்கு அடிமை என்பதால் திருவாசக இசைத் தட்டை விற்றுக் கொடுப்பதில் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்து கொண்டிருந்தார். அவரிடமிருந்து எனக்கு ஒரு இசைத் தட்டு கிடைத்தது. அப்போது நான் இதில் உள்ளப் பாடல்களுக்கு எல்லாம் பொருள் எழுதுகிறேன்; நீங்கள் படிப்பீர்களா என்று கேட்டேன். ஒருத்தர் தொடர்ந்து படித்தாலும் போதும்; நான் எழுதுகிறேன் என்ற நிலைமையில் தான் அன்று இருந்தேன். அவர் சரி என்றார். ஒரு நாளுக்கு ஒரு செய்யுள் என்று பொருள் எழுதி மின்னஞ்சலில் அனுப்பத் தொடங்கினேன். முதல் பாடல் முடிந்ததும் அவர் நான் ஆங்கிலத்தில் (தங்கிலீஷ்) எழுதியவற்றைத் தமிழில் எழுதி அவர் வலைப்பதிவில் போட்டார். அப்போது தான் தன் வலைப் பதிவையும் தமிழ் மணத்தையும் எனக்கு அறிமுகப் படுத்தினார். வந்ததையா நமக்கும் வலைப் பதிக்க ஆசை. தொடங்கினேன். எழுதிக்கொண்டு இருக்கிறேன். தொடர்ந்து ஆதரவு தாரீர். நன்றிகள்.

**********

இந்தப் பதிவை எழுதி முடித்தப் பிறகு, தமிழ்மணத்தின் 'நட்சத்திரப் பதிவு' பக்கத்தில் போடுவதற்காக ஒரு சிறு அறிமுகம் வேண்டும் என்று மதி சொல்லிவிட்டார். அதனால் அந்தச் சிறு அறிமுகத்தைக் கவிதை வடிவில் எழுதித் தந்தேன். அந்தக் கவிதையை அங்கு பாருங்கள்.

183 comments:

  1. all the best Kums....

    Anbudan,
    natarajan

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் குமரன்

    எங்கள் ஆன்மீக சூப்பர்ஸ்டார் குமரன் அவர்களை நட்சத்திரமாக தேர்ந்தெடுத்த அண்ணன் மதி கந்தசாமி அவர்களுக்கு குமரன் ரசிகர் மன்றம் சார்பாக எனது நன்றிகள்.

    செல்வன்
    பொருளாளர்
    அகில உலக ஆன்மிக சூப்பர்ஸ்டார் குமரன் ரசிகர் மன்றம்

    ReplyDelete
  3. இதுதான் அதுவா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ம்ம்ம்ம்ம்..என்னால கண்டுபிடிக்க முடியலையே!

    என்னுடைய உளமார்ந்த வாழ்த்துகள் குமரன். இந்த வாரமும் மிக இனிய வாரமாக அமைய எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. வாழ்த்துகளுக்கு நன்றி நடராஜன்.

    ReplyDelete
  5. வாழ்த்துகளுக்கு நன்றி செல்வன். இன்னொரு பட்டமா? வேண்டாமே செல்வன். ஏற்கனவே நிறைய பட்டம் கொடுத்துவிட்டார்கள். :-)

    மதி என்பவர் ஆணா பெண்ணா என்ற சந்தேகம் எனக்கும் நிறைய நாள் இருந்தது. அவருடைய முழுப்பெயர் சந்திரமதி கந்தசாமி. அதனால் அண்ணன் என்று சொல்லாமல் அக்கா மதி என்று சொல்லிவிடுங்கள். :-)

    இது உங்களுக்கே நியாயமாக இருக்கிறதா? ரசிகர் மன்றம் தொடங்கி அதற்கு பொருளாளர் பதவியையும் உண்டாக்கி அதனை நீங்களே எடுத்துக் கொண்டு விட்டீர்களே. போனால் போகட்டும். இந்த ரசிகர் மன்றத்துக்குப் பொருளாளர் என்றால் நீங்கள் தான் செலவு செய்யவேண்டும். உங்களுக்கு இதிலிருந்து எந்த விதமான வருமானமும் கிடைக்காது. :-)

    நீங்கள் செலவு செய்வீர்கள். பேரே செல்வன் என்று இருக்கிறதே. செல்வத்துக்கு என்ன குறைச்சல் இருக்கப் போகிறது? :-)

    ReplyDelete
  6. ஆமாம் இராகவன். இது தான் அது. :-) வாழ்த்துகளுக்கு நன்றி. இந்த வாரமும் இனிய வாரமாய் அமையவேண்டும் என்பதே என் வேண்டுதலும்.

    ReplyDelete
  7. ஆன்மீக மழையில் எம்மை நனைக்க வரும் அருமை நண்பர் 'ஆன்மீக' குமரன் அவர்களே வருக! வெல்க!!

    ReplyDelete
  8. ஜோ, வரவேறுப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள். வழக்கம்போல் ஆன்மிக மழை என்னுடைய மற்ற வலைப்பூக்களில் நடந்து கொண்டிருக்கும். இந்த வலைப்பூவில் மற்றவையும் பேசலாம் என்று இருக்கிறேன்.

    உங்கள் ஆன்மிக 'குமரன்' :-)

    ReplyDelete
  9. வாழ்த்துகள் குமரன்,

    மிகச் சிறப்பான வாரமாக அமைய வாழ்த்துகள். என் உள்மனதில் இந்த வார நட்சத்திரமாக நீங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கை இருந்தது. இன்றூ அது மெய்ப்பட்டிருக்கிறது.

    வாழ்க வளமுடன்

    அன்புடன்
    முத்துகுமரன்

    ReplyDelete
  10. // இந்த வலைப்பூவில் மற்றவையும் பேசலாம் என்று இருக்கிறேன். //
    வாவ்! மகிழ்ச்சி!கலந்து கட்டுங்க!

    ReplyDelete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  12. அன்பு குமரன்,
    தங்களின் எழுத்துக்கள் அங்கீகாரம் பெற்றுள்ளன என்பதற்கு இதைவிடச் சான்று தேவையா?

    ஆன்மிகம் ஒரு பாட்டை. அதில்தான் பயணிக்க வேண்டுமென்றில்லை. தங்களுக்குத் தெரிந்த எல்லாத் தலைப்புகளிலும் எழுதுங்கள்.

    வாழ்க! வளர்க!

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் குமரன்! ஏற்கனவே தினமும் இரண்டு மூன்று பதிவு போட்டு கலக்குவீங்க. இந்த வாரம் என்ன தினமும் ஐந்து பதிவா?. கலக்குங்க. படிக்க ஆவலாய் உள்ளோம்.

    அன்புடன்,
    சிவா.

    ReplyDelete
  14. அன்பு அண்ணே!,

    ரொம்பச்சந்தோஷமா இருக்கு. ஒங்க எழுத்துக்கள்ளல நெறைய ஆன்மிகம்(ஆன்மீகம்ன்னு எழுதுனா அண்ணன் திட்டுவார்) சம்பந்தமானது இருக்கு.
    படிப்பேன்.

    பாராட்டுகளைத் தெரிவிச்சுக்கிறேன்.

    கருத்து சோல்லத் தெரியாது!
    பொலம்பத்தான் தெரியும்.
    ம்.ம்.ம். என்ன செய்றது?

    ReplyDelete
  15. முத்துக்குமரன், உங்கள் மனதில் தோன்றியதா? உங்கள் மனதில் தோன்றியிருக்கும் என்று எனக்கும் தோன்றியது. அதனால் எங்கேயும் க்ளூ (இதற்கு தடயம் என்ற சொல் தான் உடனே நினைவிற்கு வருகிறது. வேறு ஏதேனும் சொல் உண்டா?) கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று மிக்க கவனத்துடன் இருந்தேன். கடைசியில் இராமநாதன் பதிவில் இட்ட பின்னூட்டத்தில் க்ளூ கொடுத்துவிட்டேன். :-)

    வாழ்த்துகளுக்கு நன்றி.

    என் எழுத்துக்கள் பிடிக்காவிட்டாலும் ஊர்க்காரர் என்பதால் இந்த வாரமாவது என் பதிவுகளைப் படித்துப் பின்னூட்டம் இடுங்கள் :-)

    ReplyDelete
  16. என்ன செல்வன்? என்னமோ சொல்லவந்திருக்கீங்க? அப்புறம் உங்க பின்னூட்டத்தை எடுத்திட்டீங்க? சொல்லவந்ததைத் தயங்காம சொல்லுங்க.

    ReplyDelete
  17. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஞானவெட்டியான் ஐயா. எல்லாம் தங்கள் ஆசிகள்.

    ReplyDelete
  18. வாழ்த்துகளுக்கு நன்றி சிவா. இந்த வாரமும் தினமும் இரண்டு மூன்றுப் பதிவுகளுக்கு மேல் போகாது என்று உத்தரவாதம் அளிக்கிறேன். :-) மொத்தமா எழுதுனா யாரு படிக்கிறது? அதனால தான். :-)

    ReplyDelete
  19. பொன்னம்பலம் அண்ணே. பதிவுகளைப் படிக்கிறதுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி. உங்க பொலம்பல்களையும் நான் படிச்சிருக்கேன். தொடர்ந்து பொலம்புங்க. எல்லாமே ஞானப் புலம்பல்கள். :-)

    நீங்க என்னை அண்ணேன்னு கூப்புடறீங்க. ஆனா எனக்கென்னவோ நீங்க என்னைவிட மூத்தவராத்தான் இருப்பீங்கன்னு தோணுது. இருந்தாலும் தருமி ஐயாவும் ஜோசஃப் சாரும் சொல்லிக்கிற மாதிரி ஒருத்தரை ஒருத்தர் அண்ணேன்னு கூப்புட்டுக்குவோம். என்ன சொல்றீங்க? :-)

    ReplyDelete
  20. இதுதான் அதுவா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ஆமாம் இராகவன். இது தான் அது. :-)//

    - என்னங்க இது உங்களுக்கும் ராகவனுக்கும் நடுவில?? சரியான ஆன்மீக ஆட்களா இருக்கீங்க! ஒண்ணும் புரியலை. சரி...நீங்க எழுதறதெல்லாம எனக்கு இதுவரை புரிஞ்சிருக்கா என்ன..?

    மதுரை முத்துக்குமரனுக்கு (இளவஞ்சி, சரிதானே?) அடுத்து மதுரை குமரனா?

    பயணம் நீண்டு தொடர அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. வாழ்த்து(க்)கள் !

    ReplyDelete
  22. குமரன் அவர்கள் ஏற்கனவே நட்சத்திரம் ஆகியிருப்பார் என்றுதான் நினைத்திருந்தேன்.

    வாழ்த்துக்கள் குமரன்.

    ஆன்மீகம் என்றாலும் மிக நன்றாகவே உள்ளது.

    ReplyDelete
  23. வாழ்த்துக்களுக்கு நன்றி தருமி ஐயா.

    அது ஒண்ணுமில்ல தருமி ஐயா. ஒரு முறை இராகவனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது இப்படி தினமும் இரண்டு மூன்று என்று பதித்துக் கொண்டிருந்தால் படிப்பதற்கு இயலவில்லை. 100க்கு மேல் எழுதிவிட்டீர்கள். தினமும் ஒன்று, ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒன்று என்று குறைத்துக் கொள்ளக் கூடாதா என்று கேட்டார். அப்போது இன்னொரு மைல்ஸ்டோன் இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில் அடைந்துவிடுவேன். அதற்குப் பின் பார்க்கிறேன் என்று சொன்னேன். அப்போது அவர் என்ன மைல்ஸ்டோன் என்று கேட்டதற்கு சீக்கிரம் தெரியும் என்று சொல்லிவிட்டேன். அதைத் தான் அவர் 'இது தானா அது' என்கிறார். விளக்கிவிட்டேன். புரிந்ததா?

    ஆமாங்க ஐயா. மதுரை முத்துக்குமரனுக்குப் பின் மதுரைக்குமரன். மத்த ஊர்க்காரங்க எல்லாம் சண்டைக்கு வரப்போறாங்க. :-)

    ஊர்க்காரவுக நீங்களே நான் எழுதுறது புரியலைன்னா என்ன அர்த்தம்? சிவாகிட்ட சொல்லிடுங்க. சும்மா விளக்கத்திலகம்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கார். மதுரைக்கார ஐயாவுக்குப் புரியுற மாதிரி விளக்கமா எழுதத்தெரியலைன்னா அப்புறம் என்ன விளக்கத் திலகம் விளக்கமாத்துத் திலகம்ன்னு பேரு? இல்லீங்களா? :-)

    ReplyDelete
  24. வாழ்த்து(க்)களுக்கு நன்றி ஆனந்த். நம்ம பதிவுல போடற மாதிரி ஏதாவது நீங்க எடுத்தப் படங்கள் இருந்தா குடுத்து உதவுறீங்களா? நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் எல்லாம் மிக அருமை.

    ReplyDelete
  25. இல்லீங்க நாமக்கல் (கோவை) சிபி. நானும் இப்பத்தான் ஒரு மூணரை மாதங்களுக்கு முன்னால் தான் எழுதத் தொடங்கினேன். வாழ்த்துகளுக்கு நன்றி.

    //ஆன்மீகம் என்றாலும் மிக நன்றாகவே உள்ளது//

    மிக்க நன்றி. என்னுடைய எழுத்துக்களின் முக்கிய நோக்கமே இது தான். ஆன்மிகம் என்றால் தலைதெறிக்க ஓடுபவர்களும் ஒரு முறை வாசித்துப் பார்க்கும் படி எழுத வேண்டும் என்ற ஆவல். எவ்வளவு தூரம் அது நடந்திருக்கிறது; நடக்கும் என்பதை காலம் நிர்ணயிக்கும்.

    ReplyDelete
  26. மதுரை மாமணியே! வாழ்த்துகள்.

    ReplyDelete
  27. சரி. இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. இனிமேல் பின்னூட்டம் இடும் நண்பர்களுக்கு காலையில் எழுந்தவுடன் பதில் தருகிறேன். நன்றிகள்.

    ReplyDelete
  28. பெருசா ஒண்ணுமில்லை ஆன்மிக சூப்பர்ஸ்டார் குமரன் அவர்களே.நீங்க பொருளாளர் பதவியில வரும்படி வராதுன்னு சொல்லிபுட்டீங்க.அதனால என்னோட ராஜினாமா கடிதத்தை எழுதி பதிவு போட்டேன்.அதை பாத்தவுடன் தொண்டர்கள் பலர் தீக்குளிப்போம் என சொல்ல அதை வாபஸ் பெற்று மீண்டும் பொருளாளராக தொடர தீர்மானம் செய்துள்ளேன்.:-))))

    ReplyDelete
  29. வாங்க குமரன்.

    பதினொரு பதிவுகளிலும் போட்டுத்தாக்குங்க.

    ஜனங்க திக்கு முக்காடிப்போயிருவோம்லெ.

    ஜமாய்ங்க.

    வாழ்த்து(க்)கள்

    ReplyDelete
  30. குமரன்,

    போட்டுத்தாக்குங்க...

    உங்க பதிவை ஆரம்பிச்சதுல இருந்தே நீங்க நட்சத்திரம்தான்!! தினம் ஒரு பதிவுன்னா சும்மாவா??

    :)

    ReplyDelete
  31. குமரன்,
    வாழ்த்துக்கள். நிறைய எதிர்பார்ப்புகளுடன்
    தேசிகன்
    http://www.desikan.com/blogcms/

    ReplyDelete
  32. வாங்க வாங்க! வெறும் ஆன்மீகமே போட்டு என்ன மாதிரி சிலரை பயமுறுத்தி, பின்னுட்டம் போடாம செஞ்சிடாதீங்க :-)

    ReplyDelete
  33. உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். அடுத்த முறை செல்வன் ராஜினாமா நாடகம் ஆடினாருனா, உண்மையிலேயே அவரை நீக்கிட்டு நம்மளை பதிவியில் போடுங்க. வரும்படிக்கு நான் ஏதாவது வழி பண்ணிக்கறேன்.

    ReplyDelete
  34. வாழ்த்துக்கள் குமரன், கலக்குங்க.

    ReplyDelete
  35. செல்வன்,

    அண்ணன் மதி கந்தசாமி அவர்களுக்கு குமரன் ரசிகர் மன்றம் சார்பாக எனது நன்றிகள்.//

    அவங்க அண்ணன் இல்லீங்க.. நானும் இப்படித்தான் அவங்க பேரை பார்த்துட்டு ஏமாந்தேன்..

    ReplyDelete
  36. ஆன்மீக எழுத்தாளரும் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவருமான இளவல் குமரன் அவர்களை வருக வருகவென வரவேற்கிறேன்.

    வாழ்த்துக்கள் குமரன்.

    ReplyDelete
  37. இனிய தமிழ்பாடல்களுக்கு எளிய விளக்கங்கள் வழங்கும் ஆலவாய் அண்ணலே, வருக வருக; நட்சத்திர வாரத்தில் தேனமுதை அள்ளித் தருக !!

    ReplyDelete
  38. நீங்க நேத்து சொல்லும்போதே நினைச்சேன்.

    நட்சத்திர குமரனுக்கு வாழ்த்துகள்.

    சாதாரணமாவே ஒரு நாளைக்கு ரெண்டு மூணு பதிவு போடறீங்க. இந்த வாரத்துல அதிக பதிவுகள் பதித்த நட்சத்திர பதிவாளர்னு பெயர் பெறவும் வாழ்த்துகள்!

    அதேபோல ஆன்மிகத்தோட சேர்த்து மற்ற தலைப்புகளிலும் போடுங்க.

    ReplyDelete
  39. நட்சத்திரமானதுக்கு

    ReplyDelete
  40. மனமார்ந்த

    ReplyDelete
  41. வாழ்த்துகள்.

    ReplyDelete
  42. குமரன்,
    உங்கள் அறிமுக எழுத்தே ரொம்ப ஜோர். ஒளிவு மறைவற்ற தன்மை அதை விட நன்றாக உள்ளது. எதிர்பார்ப்புகளைத் தூண்டிவிட்டீர்கள். ஜொலிக்கட்டும் இந்த நட்சத்திரம்!

    ReplyDelete
  43. நம்ம ஊரு காவல்காரன் மாதிரி ஒரு வாரம் உங்க பதிவுக்கு காவல் காக்குறேன். கருத்தும் சொல்றேன். போதுமா....

    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா:-))

    ReplyDelete
  44. ம்ம்ம்...நம்ம அதுதான் இது கதையச் சொல்லீட்டீங்களா.

    நானும் அந்த மைல் ஸ்டோன் என்னான்னு கண்டுபிடிக்க எவ்வளவோ நெனச்சேன்...ஆனா பாருங்க மறந்து போச்சு. ஹி ஹி. கடைசில பாத்தா இப்படி நட்சத்திரமா ஜொலிக்கிறாரு. அதுல கவிதை அறிமுகம் வேற. பிரமாதமோ பிரமாதம்.

    குமரன் உங்களுக்குப் பேரை மட்டுமா தந்தான்? தமிழையும் அள்ளித் தந்தான்.

    ReplyDelete
  45. //களவும் கற்று மற என்று பெரியவர்கள் சொன்ன படி//
    களவு வாழ்க்கை என்பது காதலிப்பது பிறகு கற்பு வாழ்க்கை என்பது திருமணம் செய்து கொள்வது.

    ReplyDelete
  46. சொல்ல மறந்தேன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  47. நான்மாட கூடலின் நண்பரே
    நற்குணமுள்ள குமரனே
    உனது கவி; கவித்துவம்.
    'ஆமாம் வயதைக்குறைக்க இதுதான் வழியோ மூவாறு பதினைந்து' புலவன் தான் பொய் சொல்வான்
    கவியே மெய் சொல்லல் நல்லதப்ப!!

    //மனைமுழுதும்
    மன்னன் மகள் அவளாட்சியாம்!//
    அதான் தெரியுமே மதுரையம் பதி
    பதிக்கு மனையாள் ஆட்சி யென
    அதை தங்கள் சொல்லவும் வேனுமோ?
    கவிஞரே
    என்ன? நானே மூன்று பின்னூட்டம் வி்ட்டேன் கவிதை படிக்கப்போனேனா பிறகு வந்தேன்.

    ReplyDelete
  48. "வாங்க வாங்க! வெறும் ஆன்மீகமே போட்டு என்ன மாதிரி சிலரை பயமுறுத்தி, பின்னுட்டம் போடாம செஞ்சிடாதீங்க :-)"

    ஆமா சொல்லிபுட்டேன்.

    கூடலில் மூனு கதை வருதாமே!

    ReplyDelete
  49. கூடிய மட்டும் எல்லா பதிவுகளையும் இந்த வாரம் உடனே படிக்க முயல்கிறேன். வாழ்த்துகள்

    ReplyDelete
  50. //பெருசா ஒண்ணுமில்லை ஆன்மிக சூப்பர்ஸ்டார் குமரன் அவர்களே.நீங்க பொருளாளர் பதவியில வரும்படி வராதுன்னு சொல்லிபுட்டீங்க.அதனால என்னோட ராஜினாமா கடிதத்தை எழுதி பதிவு போட்டேன்.அதை பாத்தவுடன் தொண்டர்கள் பலர் தீக்குளிப்போம் என சொல்ல அதை வாபஸ் பெற்று மீண்டும் பொருளாளராக தொடர தீர்மானம் செய்துள்ளேன்.:-))))

    //

    :-)))))

    ReplyDelete
  51. வாழ்த்துக்களுக்கு நன்றி துளசி அக்கா. இப்ப கைவசம் பத்து தமிழ் வலைப்பூக்கள் தான் இருக்கு அக்கா. இன்னொன்னு இந்த வாரம் தொடங்கிறலாம்னு சொல்றீங்களா? :-)

    ReplyDelete
  52. என்ன இளவஞ்சி. இப்பத் தான் உங்களுக்கு வழி தெரிஞ்சுதா? :-((

    சரி. சரி. சும்மா பொய்க்கோபம் தான். உங்கள் முதல் வருகைக்கும் முதல் கருத்துக்கும் உந்துதலுக்கும் மிக்க நன்றி. :-)

    ReplyDelete
  53. நன்றி சதீஷ். மாறுபட்ட இடுகைகள் இட முயற்சிக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  54. வாழ்த்துக்களுக்கு நன்றி தேசிகன். உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற மாதிரி பதிவுகள் இட்டேனா இல்லையான்னு வார இறுதியில் சொல்லுங்க.

    (இல்லை. இப்ப பின்னூட்டம் போட்ட நீங்க அடுத்து வார இறுதியில தான் வருவீங்கன்னு சொல்றேன் :-) அப்படி பண்ணாம ஒழுங்கு மரியாதையா எல்லாப் பதிவையும் படிச்சு உங்க கருத்தைச் சொல்லணும் ஆமா...) :-)

    ReplyDelete
  55. உஷா. 'நுனிப்புல்'ன்னு பேரைப் போட்டு ஆனா பதிவுகள்ல நீங்க பயமுறுத்துறதை விட நாங்க பயமுறுத்துறது கொஞ்சம் குறைவு தான்னு நினைக்கிறேன் :-) நுனிப்புல்லா மேயறீங்க? வேரும் வேரடி மண்ணும் சேத்துல்ல மேயறீங்க? (புகழ்றேங்க. தப்பா எடுத்துக்காதீங்க). :-)

    நம்ம core competency ஆன்மிகம் தானே. அதனால அதுவும் இந்த வாரத்துல இருக்கும். மற்றவையும் இருந்தாலும் அவை கூட ஆன்மிகம் சார்ந்ததாத் தான் இருக்குமோ தெரியலை. ஆனால் நீங்க பின்னூட்டம் போடற அளவுல இருக்கும். :-)

    ReplyDelete
  56. இலவசக் கொத்தனார், வரவேற்புக்கு நன்றி.

    நான் எங்கேங்க மன்றம் ஆரம்பிச்சேன்? செல்வனே தொடங்கி அவரே தன்னைப் பொருளாளர் ஆக்கிக்கிட்டு அவரே ராஜினாமா பண்ணி பிறகு அவரே திரும்பவும் அந்தப் பதவியை எடுத்துக்கிட்டார். இந்த அரசியல் எல்லாம் நமக்கு புரியாதுங்க. 'இட்லி வடை', 'மாயவரத்தான்', 'குழலி', இப்படி பெரிய பட்டியல் இருக்கு அரசியல் தெரிஞ்ச பதிவர்கள்ன்னு. அவங்ககிட்டத் தான் போய் ஆலோசனை கேக்கணும் போல இருக்கு உங்களை எல்லாம் சமாளிக்க. :-) சும்மா தமாஷு. கோவிச்சுக்காதீங்க. செல்வன் இருந்தா என்ன இலவசக் கொத்தனார் இருந்தா என்ன? நீங்களே வரும்படிக்கு வழி பண்ணிக்கிட்டு என்கிட்ட வராம இருந்தாச் சரி. :-)

    ReplyDelete
  57. வாழ்த்துக்களுக்கு நன்றி சதயம். ஊர்க்காரரே. எந்த ஊருக்குப் போயிருந்தீங்க? போன வாரம் நம்ம ஊர்க்காரர் முத்துக்குமரன் விண்மீனாய் இருந்தாரு. நீங்களும் இருந்திருந்தா பின்னூட்டங்கள் கொஞ்சம் இன்னும் களை கட்டியிருக்கும். :-)

    ஆமாம் நானும் பொறியல் தான். BE படிச்சது கலசலிங்கத்துல. ME படிச்சது CITல.

    ReplyDelete
  58. வாழ்த்துக்களுக்கு நன்றி ஜோசஃப் சார்.

    ReplyDelete
  59. மூர்த்தி அண்ணா. வாழ்த்துக்களுக்கு நன்றிகள். என்னைவிட மாசக்கணக்குல தான் பெரியவரா இருப்பீங்கன்னு நினைக்கிறேன். ஆனாலும் எப்போதும் பாசத்தோட இளவல்ன்னு சொல்லும் உங்க அன்பிற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  60. வரவேற்புக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி மணியன்.

    ReplyDelete
  61. இந்த வாரமும் ஒரு நாளைக்கு இரண்டு மூணு பதிவுகளுக்கு மேல போகாது இராமநாதன். அதனால நீங்க சொல்ற பேரு கிடைக்குதான்னு வார இறுதியில தான் பார்க்கணும்.

    ReplyDelete
  62. இராமநாதன்.

    கந்தனும் அலெக்சாந்தரும் - பதில் இந்த வாரமே போட்டுடலாம்னு நெனைச்சேன். ஆனால் எழுத முடியலை. வாரம் முடியறதுக்குள்ள எழுத முடியுமான்னும் தெரியல. அதனால் அன்னைக்குச் சொன்ன மாதிரி பிப்ரவரியிலயே அதனை எழுதுறேன்.

    ReplyDelete
  63. நட்சத்திரமானதுக்கு

    ReplyDelete
  64. வாழ்த்துக்களைச்

    ReplyDelete
  65. சொல்லியிருக்கிறீர்கள்

    ReplyDelete
  66. இராமநாதன். மிக்க நன்றி. :-)

    ReplyDelete
  67. வாங்க டாக்டரம்மா. உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. பொருந்தாத அரிதாரம் பூசிக்கக் கூடாதுன்னு நம்ம முத்துக்குமரன் சொல்லிட்டாருல்ல. அப்புறம் உள்ளத மறைச்சு எழுத முடியுமா? அதனால சுய முனைப்போடத் தான் இருக்கோம்ன்னு வெளிப்படையாச் சொல்லியாச்சு. :-)

    அது சரி உங்க பேரு தனுவா? தானுவா?

    ReplyDelete
  68. ரொம்ப நன்றி முத்துக்குமரன். அப்பப்ப உங்களை நேரடியா வாருவேன். கோவிச்சுக்காதீங்க. நம்ம ஊருங்கற உரிமைதான். :-)

    ReplyDelete
  69. கவிதை நல்லா இருந்துச்சா இராகவன்? ரொம்ப சந்தோசம். கொஞ்சம் அந்த கவிதைக்கு விளக்கம் சொல்லிடுங்களே?! நான் கவிதை எழுதுனா அதுக்கு நீங்க விளக்கம் சொன்னாத் தான் சரியா இருக்கும். என்ன சொல்றீங்க? :-)

    தமிழும் பேரும் மட்டுமா?! எல்லாத்தையும் அள்ளித் தந்தது அவன் தானே.

    ReplyDelete
  70. உண்மை என்னார் ஐயா. களவு என்றால் களவு வாழ்க்கை என்று நம் முன்னோர் சொன்ன காதல் வாழ்க்கையாய்த் தான் இருக்கவேண்டும். மிக்க நன்றி.

    ReplyDelete
  71. வாழ்த்துக்களுக்கு நன்றிகள் என்னார் ஐயா. முத்தமிழ் மன்றத்தில் எழுதிய அளவிற்கு வலைப்பூக்களில் நீங்கள் எழுதவில்லை போலிருக்கிறதே? ஏன்?

    ReplyDelete
  72. நட்சத்திரப்பதிவாளர் குமரனிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  73. என்னார் ஐயா.

    நான் என் வயதைச் சொல்லும் போது பொய் சொல்லவில்லை. மெய் தான் சொல்லியிருக்கிறேன்.

    மூவாறுப் பதினைந்து: 3*6 = 18 + 15 = 33. இது தான் என் வயது.

    மதுரைன்னா மனையாள் ஆட்சிதான். ஆனா இப்ப நாங்க மினசோட்டாவுல இருக்கிறதால எங்க வீட்டுல எங்க மகளின் ஆட்சிதான். அவளைத் தான் மன்னன் மகள் என்றேன். அப்ப மன்னன் யாருன்னு கேக்காதீங்க. இதுக்கு மேல வெளிப்படையா தற்புகழ்ச்சிப் பண்ணிக்கமுடியாது. :-)

    பின்னூட்ட எண்ணிக்கையைப் பார்க்காமல் அள்ளி அள்ளிப் பின்னூட்டம் இடுங்கள் ஐயா. :-)

    ReplyDelete
  74. சிங்கு. இப்போதைக்கு ரெண்டு கதை ரெடி. நேரம் இருந்தா மூணாவது கதையும் எழுதிடலாம். என்ன சொல்றீங்க?

    நான் எழுதாட்டி என்ன? நீங்க எழுத வேண்டியது தானே இளங்கவி சிங்காரக்குமரன்? :-)

    ReplyDelete
  75. மிக்க நன்றி தேன் துளி. எளிதில் படிக்கிற மாதிரி தான் இந்த வாரப் பதிவுகள் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  76. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கயல்விழி.

    ReplyDelete
  77. நல்ல நல்ல பாட்டுகளுக்கு நல்ல நல்ல விளக்கமா போடுறீங்க.. படிச்சுட்டு சும்மா இருந்துக்கறது...! விவரம் தெரியாம பேசக்கூடாது இல்லையா?!

    அதுபோக என் சோம்பேறித்தனம் இந்த தமிழ்வலையுலகிலே மிகப்பிரசித்தம் என்பதை நானே புகழ்ந்து கொள்ளக்கூடாது என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்!!! :)

    ReplyDelete
  78. பாண்டிய மன்னா நீவிர் வாழ்க
    மூவாறும் பதினைந்துமா?

    ReplyDelete
  79. என்ன குமரன்,
    இன்னும் பதினாறு தான். ம் னு ஒரு வார்த்தை சொல்லுங்க. நூறத் தொட்டுடுவோம். :))

    ReplyDelete
  80. இளவஞ்சி. நீங்க வந்து போனீங்கங்கறதுக்கு இனிமே ஏதாவது தடயம் விட்டுட்டுப்போங்க. என்ன?

    சோம்பேறிப் பையன் வந்தாலும் வந்தார். எல்லாரும் இந்த சோம்பேறித் தனத்துக்கு தனியுரிமை கொண்டாடறீங்க. :-) 'நமக்கு நாமே' திட்டம் தான் உங்களுக்குத் தெரியுமே. நம்மளப் பத்தி நாமளே சொல்லாட்டி மத்தவங்களுக்கு எப்படித் தெரியும்? அதனால தாராளமா உங்களை நீங்களே புகழ்ந்துகொள்ளலாம். உங்கப் பதிவுகள்ல புகழ்ந்துக்க பிடிக்கலைன்னா இங்க வந்து புகழ்ந்துக்கோங்க :-) இனம் இனத்தோடு சேரும்ன்னு யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க. :-)

    ReplyDelete
  81. ராஜ குருவாக இருந்து எனக்கு மன்னர் பட்டாபிஷேகம் செய்து ஆசிகள் தந்தருளிய என்னார் ஐயாவிற்கு மிக்க நன்றி :-)

    ReplyDelete
  82. இராமநாதன். ஒரு வார்த்தையும் சொல்லணுமா? 100ஐ தொட்டபிறகு தான் அடுத்தப் பதிவுன்னு முடிவு பண்ணியாச்சு. :-)

    ReplyDelete
  83. ஞ்

    அட நடேசன் குறுக்க வந்துட்டாரே.. பரவாயில்ல

    ReplyDelete
  84. வாழ்த்துக்கள் குமரன்.உங்களுக்கு சந்தேகம் ஏன் வந்தது என்றுத் தெரியவில்லை.நாங்கள் என்னையும் சேர்த்து இருபது பேர் படித்துக் கொண்டுதான் உள்ளோம்.தொடருங்கள் படைப்பினை எவ்வித சந்தேகமும் இல்லாமல்!

    ReplyDelete


  85. --

    ஆச்சு!!

    நூறு..

    சதமடித்த சகலகலா சத்வகுண பாரதி ஆயாச்சு! :)

    ReplyDelete
  86. வ்வ்வ்வ்வாங்கப்பு!!!. வாழ்த்து! (இந்த ஒற்றுப் பயத்தால..'கள்'ள விட்டுட்டேன்). என்ன்ன்ன்ன்னாது இது 87 பின்னூட்டமா?., தலை கிர்ன்னு சுத்தி உள்ள வந்து பார்த்தா.... எல்லாரும் விளாண்டு இருக்கிங்க?., குமரன் நான் முன்னாடியே ஒரு முறை சொன்ன மாதிரி மொத எலும்பும், சதையுமா இருக்கிற மனுசன் (பின்ன நம்ம வந்தா இப்படி பயமுருத்தல் எல்லாம் இருக்கணுமில்ல?) அப்புறம்தான் ஆண்டவன் சரியா...?. வார முழுவதும் மதுர வாசம் மணக்கணும். தப்பா நினைக்கக்கூடாது., இங்க நம்ம 'பவ்வு' (இது நல்ல பொருள்ள தானப்பா வரும்?., இப்படிச் சொல்லித்தான் பழக்கம்) மக்களைப் பத்தி அதிகம் நிறைய பேருக்குத் தெரியாது.... தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். ஒண்ணு ரெண்டு வார்த்தைகள் கத்துக்குடுங்க. இந்த வாரம் மிக நல்ல வாரமாக அமையும் என்பது என் நம்பிக்கையில்ல., ம்ம்ம்முடிவு!!!. (வீட்டுக்கு ஃபோன் வர்றதும்., வராததும் உங்கள் கையிலதான் இருக்கு தம்பி!!).

    ReplyDelete
  87. இதெல்லாம் நல்லாவா இருக்கு குமரன்:-)

    கவனிச்சுங்க மொய்ப்பதிவை போட்டிருப்பது நான்தான்

    ReplyDelete
  88. //'பவ்வு' (இது நல்ல பொருள்ள தானப்பா வரும்?., இப்படிச் சொல்லித்தான் பழக்கம்) மக்களைப் பத்தி அதிகம் நிறைய பேருக்குத் தெரியாது.... //

    வில்லாபுரத்தில ஒரு சிறிய பவ் சைவ ஹோட்டல் இருக்கு. அது எனக்கு மிகவும் பிடித்த உணவகம். குறிப்பா புரோட்டாவும் சைவக் குருமாவும், அப்படி ஒரு சுவை அது.
    கல்லூரியில் படித்த போது அனுப்பானடியில் இருந்து ஸ்ரீதர்ன்னு ஒருத்தன் படிச்சான். அநியாத்துக்கு அமைதியான பயன். உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவ பாவம்டா என்று அவனை கிண்டலடிப்போம். அப்பவும் அவன் அமைதியாகவே இருப்பான். அவனுக்கு முன்னாடி நரசிம்மராவ் எல்லாம் ரெம்ப சாதரணம். அவனை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.
    நன்றி

    குமரன், செளராஷ்டிரா மக்களின் சமூக வாழ்வியல் செய்திகளை தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    அப்புறம் மொய்ய எனக்கு முன்னாடி அப்படி போடு போட்டுட்டு போயிட்டாங்க:-)

    ReplyDelete
  89. குமரன் அண்ணே, 100 பின்னூட்டம் தொடனும் என்று இப்படி ஒவ்வொரு பின்னூட்டத்திலும் ஒரு சொல்லை போட்டு, எங்களுக்கெல்லாம் வழிகாட்டியதற்கு நன்றி :-)

    *****

    நட்சத்திர வாரத்தில் கலக்க வாழ்த்துகள் !!!!

    ReplyDelete
  90. //செல்வன்
    பொருளாளர்
    அகில உலக ஆன்மிக சூப்பர்ஸ்டார் குமரன் ரசிகர் மன்றம்
    //
    ரசிகர் மன்றத்தோட நிறுத்தீடாதீங்க செல்வன்,

    கொள்கை பரப்பு செயலாளரா நான் இருப்பேன்.

    ReplyDelete
  91. முதல் இன்னிங்ஸ்லயே செஞ்சுரி அடிச்சு கலக்கறீங்க குமரன்.

    பட்டையக் கிளப்புங்க.


    வெறுமனே நாமக்கல் சிபின்னு சொல்லுங்க, போதும். கோவைக்கு தற்போதுதான் வந்திருக்கிறேன்.

    ReplyDelete
  92. இராமநாதன் இது டூ மச். இல்லை 100 மச். ஒரு வார்த்தைன்னு சொன்னது ஒவ்வொரு வார்த்தையா பின்னூட்டம் போடுவீங்கன்னு நெனைச்சு. இப்படி ஒவ்வொரு எழுத்தாப் போட்டு மானத்தை வாங்குறீங்களே?!!! :-(

    ReplyDelete
  93. வாழ்த்துகளுக்கு நன்றி நடேசன் சார். நான் எழுதும் பதிவுகளைத் தொடர்ந்து படிக்கும் 20+ பேர்களை எனக்கு நன்றாகத் தெரியும் சார். அவர்கள் எல்லாப் பதிவுகளும் படிக்கிறார்கள். இன்னும் நிறைய பேர் விட்டுவிட்டுப் படித்தாலும் விரும்பிப் படிக்கிறார்கள் என்று தெரியும். நான் வருத்தப் பட்டது (சந்தேகப் பட்டது) வலைப்பதிக்கத் தொடங்கிய பின் அன்று. நான்கு மாதங்களாகத் தானே வலைப்பதிவில் எழுதுகிறேன். நான் சொன்னது அதற்கு முன் வருடக்கணக்காக இந்த அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு மின்னஞ்சலில் எழுதி அனுப்பியவற்றைப் பற்றி. அதனை யாராவது விரும்பிப்படிக்கிறார்களா என்றே தெரியவில்லை அப்போது.

    நீங்கள் சொன்ன 20+ தொடர்ந்து படிப்பது முக்கியக் காரணம் என்னால் தொடர்ந்து பதிக்க முடிவதற்கு. :-)

    ReplyDelete
  94. இராமநாதன். மதுமிதா அக்கா நல்லவேளை ஊருல இல்லை. இருந்திருந்தா இப்படி நீங்க அவங்க கொடுத்த பட்டத்துக்கு முன்னால இன்னொரு 'ச'வைச் சேர்த்ததுல வருத்தப் பட்டிருப்பாங்க. :-)

    பரவாயில்லை. அவங்க கொடுத்தப் பட்டத்துல இருந்து ஒரு 'ச'வை விழுங்கிட்டுத் தான் நீங்க ஒரு 'ச'வை சேத்துருக்கீங்க. :-)

    - சதமடித்த சகலகலா (சமரச) சத்வகுண பாரதி குமரன். :-)

    ReplyDelete
  95. வாழ்த்துக்கள் தி .ரா. ச

    ReplyDelete
  96. // ஒரு வார்த்தைன்னு சொன்னது ஒவ்வொரு வார்த்தையா பின்னூட்டம் போடுவீங்கன்னு நெனைச்சு.//
    சாதா நூறா இல்லாம, பின்னூட்டமும் புரட்சிகரமா இருக்கட்டும்னு தான். :))

    டெக்னிக் காப்பிரைட் க்ளெயிம் பண்ணிடவா?

    ReplyDelete
  97. அப்டிபோடு அக்கா. உங்க பயமுறுத்தலுக்கெல்லாம் பயந்துருவேனா? மதுரைக்காரனாச்சே?! :-)

    வாரம் முழுக்க மதுர வாசம் இருக்கோ இல்லியோ என்னோட வாசம் இருக்கும் :-)

    பவ்வு நல்ல பொருள்லதான் வரும். ஆனால் எல்லாரும் சொல்றப்ப நல்ல பொருள்லயா சொல்றீங்க? :-) பவ்வனுங்க வந்துட்டான்ங்கடான்னு தான சொல்றீங்க :-)

    பாபு (அப்பா, தம்பி) என்ற சொல் சௌராஷ்ட்ரத்தில் பபு என்று ஆகிறது. யாரைப் பார்த்தாலும் பபு பபுன்னு நாங்க சொல்றதால நீங்க எங்களை பவ்வுன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டீங்க.

    ReplyDelete
  98. பவ்வு மக்களைப் பத்தி எந்தப் பதிவும் இந்த வாரத்துல போடற மாதிரி திட்டம் இப்போதைக்கு இல்லை. எங்கயாவது சந்து கிடைச்சா சிந்து பாடறேன். ஓகேயா? :-)

    இந்த வாரம் நல்ல வாரமா அமையறது உங்களை மாதிரி நம்பிக்கையில்ல முடிவே செஞ்சிருக்கிறவங்க கையில தான் இருக்கு. இதோ பாருங்க. முதல் பதிவுக்கு எல்லாரும் வந்து வாழ்த்துக்கள் சொல்லிட்டாங்க. அடுத்து கடைசி பதிவுக்குத் தான் வருவாங்க போல இருக்கு. இந்தப் பதிவுக்கு அடுத்து 2 பதிவு போட்டுட்டேன். 10 பின்னூட்டம் தாண்டுறதுக்கே நொண்டுது. :-) எல்லா நட்சத்திரப்பதிவாளர்களுக்கும் இது தான் கதி போல. :-)

    ReplyDelete
  99. அப்டிபோடு அக்கா,

    பவ்வு மொழியில உங்களுக்கு என்ன என்ன வார்த்தைகள் தெரியணும்ன்னு சொல்லுங்க. அதை நான் சொல்லிக் கொடுக்கிறேன்.

    ReplyDelete
  100. குமரன், உங்கள் படைப்புக்களை படிப்பது வழக்கம்தான். ஆனால் தெரியாத விஷயங்களில் மூக்கை நுழைத்தால் நல்லா இருக்காது என்பதால் உங்கள் ஆன்மீக பதிவுகளில் பின்னூட்டம் எல்லாம் இடுவதில்லை. மற்றபடி இந்த வாரம் தினம் ஒரு பதிவு தாருங்கள் என்று கேட்பது அனாவசியம் ;) வித்தியாசமாக தாருங்கள் என்று கேட்பது எதிர்பார்ப்பு.(உங்கள் லெமூரியா கேள்வியை படித்த பின், இப்போது அதைப்பற்றி நோண்டிக்கொண்டிருக்கிறேன் என்பது ஒரு கொசுறு தகவல். தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு ஏதோ நம்மால் ஆன சோதனை)

    ReplyDelete
  101. நீங்களும் 200-க்கு குறி வைக்கறீங்களா? நம்மை தனியா கவனிச்சா நடக்குங்கிறேன்.

    ReplyDelete
  102. //இதெல்லாம் நல்லாவா இருக்கு குமரன்:-)

    கவனிச்சுங்க மொய்ப்பதிவை போட்டிருப்பது நான்தான்

    //

    எது நல்லா இருக்கான்னு கேக்கறீங்க முத்துக்குமரன். புரியலையே?

    மொய்ப்பதிவுன்னு சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா என்ன அர்த்தம்ன்னு தெரியலை. கொஞ்சம் விளக்குங்க.

    ReplyDelete
  103. பாத்து முத்துக்குமரன். நீங்க சொல்ற அநியாயத்துக்கும் அமைதியான எங்கேயாவது வலைப்பதிச்சுக்கிட்டு இருக்க போறார் :-) அவர் அமைதியா இருந்தா கல்யாணம் பண்ணிக்கிறவங்களுக்கு கொண்டாட்டமாத்தானே இருக்கப் போகுது? இதுல பாவம் என்ன இருக்கு? :-)

    மேல அப்டிபோடு அக்காவுக்குச் சொன்னது தான் உங்களுக்கும் பதில். சந்து கிடைச்சா சிந்து பாடறேன். இல்லாட்டி எதிர்காலத்துல தான் சௌராஷ்ட்ர மக்களின் சமூக வாழ்வியல் செய்திகளை எழுத முடியும். என்னடா எதிர்காலம் அப்படிங்கறானேன்னு பாக்குறீங்களா? மூணு மாசம் முன்னாடி நமக்கு அந்தக் காலம்ங்க. அந்த மாதிரி எதிர்காலம்ன்னா நாளைக்கே கூட எதிர்காலம் தான், அடுத்த வாரம் கூட எதிர்காலம் தான். நேயர் விருப்பம் சிவா மட்டும் தான் செய்வாரா. நாமளும் செஞ்சுட்டாப் போச்சு. :-)

    அப்டியே மொய்ன்னா என்னான்னு சொல்லிடுங்க. :-)

    ReplyDelete
  104. வாழ்த்துக்கள் குமரன்..

    நான் தான் கடைசி கடைசியா வாழ்த்துக்கள் சொல்றேனா?? என்ன பன்றது நமக்கு ஊர்சுத்தவே நேரம் சரியா போச்சு இந்த weekend.

    வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    கீதா

    ReplyDelete
  105. உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். அடுத்த முறை செல்வன் ராஜினாமா நாடகம் ஆடினாருனா, உண்மையிலேயே அவரை நீக்கிட்டு நம்மளை பதிவியில் போடுங்க. வரும்படிக்கு நான் ஏதாவது வழி பண்ணிக்கறேன்///

    கொத்தனார் அவர்களே,

    இதை நான் மிகவும் வன்மையாக ஆட்சேபிக்கிறேன்.அரசியல் வாழ்வில் ராஜினாமா செய்வதும்,தொண்டர்கள் தீக்குளித்த பின் மனம் மாறுவதும் சகஜம்.நடுவில் புகுந்து பதவியை கைப்பறலாம் என நினைப்பது தவறு.

    கொ.ப.சே மற்றும் நாமக்கல் மாவட்ட செயலாளரான சிபி அவர்களும் இக்கருத்தை ஆமோதிப்பதாக தகவல்.

    ReplyDelete
  106. சோம்பேறிப் பையன். வருகைக்கு நன்றி. வாழ்த்துகளுக்கும் நன்றி. முதல் பதிவைப் படிச்சுப் பின்னோட்டம் இடறதோட விடாம நம்ம மத்தப்பதிவுகளையும் தவறாம படிச்சுடுங்க.

    ஒரு சொல்லா? எங்கப்பா ஒரு சொல்லா போட்டிருக்கார் இராமநாதன்? ஒவ்வொரு எழுத்தா இல்லை போட்டிருக்கார்? உங்களுக்கெல்லாம் வழிகாட்டி அவர் தான்.

    ஹும். எத்தனைப் பேரு இப்படி பின்னூட்டம் ஒவ்வொரு எழுத்தா வந்ததைப் பார்த்து கடுப்பாகி பின்னூட்டம் போடாமப் போனாங்களோ தெரியலையே!!!

    ReplyDelete
  107. செல்வன்,
    //கொ.ப.சே மற்றும் நாமக்கல் மாவட்ட செயலாளரான சிபி அவர்களும் இக்கருத்தை ஆமோதிப்பதாக தகவல்.//
    அவர்கள் நம்ம படையெடுப்பையும் வரவேற்பதாக வம்பாநந்தா ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பி இருக்கிறார். அரசியல்ல இதெல்லாம் சகஜம் ராசா

    ReplyDelete
  108. கொ.ப.செ. நாமக்கல் சிபி வாழ்க.

    அது தான் சூப்பர் பதவி சிபி. அந்தப் பதவியில இருந்தா முதலமைச்சர் ஆயிடலாம். பொருளாளர் பதவி எல்லாம் ஜுஜுபி. :-)

    ReplyDelete
  109. //வெறுமனே நாமக்கல் சிபின்னு சொல்லுங்க, போதும். கோவைக்கு தற்போதுதான் வந்திருக்கிறேன்.
    //

    அப்படியே ஆகட்டும் நாமக்கல்லாரே.

    அப்புறம் அடுத்த முறை ஊருக்குப் போறப்ப நம்ம நாமக்கல் ஆஞ்சனேயர், நரசிம்மர், நாமக்கல் வல்லித் தாயார் (நாமவல்லித் தாயாரா சரியான பேர்?) எல்லாரையும் விசாரிச்சதாச் சொல்லுங்க. என்ன?

    ReplyDelete
  110. வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி தி.ரா.ச. நீங்கள் தானே எனக்கு உண்மையான தூண்டுதல். என்றாவது பதிக்காமல் விட்டால் என்னைத் திட்டித் திட்டி எழுத வைப்பது நீங்கள் தானே. மிக்க நன்றி. :-)

    ReplyDelete
  111. இராமநாதன். டெக்னிகல் காப்பிரைட் உங்களுக்கே உரியது. எனக்கு இதெல்லாம் வேண்டாம்ப்பா. காபிரைட் வாங்குறத்துக்கு இன்னும் எத்தனையோ சமாச்சாரம் இருக்கு. :-)

    ReplyDelete
  112. //மற்றபடி இந்த வாரம் தினம் ஒரு பதிவு தாருங்கள் என்று கேட்பது அனாவசியம் ;) வித்தியாசமாக தாருங்கள் என்று கேட்பது எதிர்பார்ப்பு//

    முகமூடி அண்ணா (அப்படித் தான் சொல்லணும்ன்னு நெனைக்கிறேன். ஆனா நீங்க அடிக்கிற லூட்டியப் பாத்தா தம்பியா இருப்பீங்களோ சந்தேகமா இருக்கு), உங்கள் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன். ஆனா, நான் நினைக்கிற வித்தியாசமும் நீங்க நினைக்கிற வித்தியாசமும் வித்தியாசமா இருந்துட்டா என்னால ஒண்ணும் பண்ண முடியாது :-)

    //உங்கள் லெமூரியா கேள்வியை படித்த பின், இப்போது அதைப்பற்றி நோண்டிக்கொண்டிருக்கிறேன் என்பது ஒரு கொசுறு தகவல். தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு ஏதோ நம்மால் ஆன சோதனை// நல்லா நோண்டுங்க. ஏதாவது அகப்பட்டுச்சுன்னா சொல்லுங்க.

    இதைச் சொல்லாம விட்டா நல்லா இருக்குமா? வருகைக்கும் முதல் கருத்துக்கும் நன்றி. (வழக்கமா போடற மாதிரி முதல் வருகைக்குன்னு வந்துருச்சு. அப்புறம் தான் நீங்களே சொல்லிட்டீங்களே என் பதிவுகளைப் படிப்பதுண்டுன்னு. அதனால வெறும் வருகைக்குன்னு மாத்தியாச்சு).

    ReplyDelete
  113. //நீங்களும் 200-க்கு குறி வைக்கறீங்களா? நம்மை தனியா கவனிச்சா நடக்குங்கிறேன்.

    //

    இலவசக் கொத்தனார். நான் 100க்கு குறி வச்சேன். ஆனால் தமிழ்மண அன்பர்கள் நூத்துக்கு மேல கொண்டு போயிட்டாங்க. எத்தனை வரை போகுதோ போகட்டும். நீங்க இராமநாதன் ஸ்டைல்ல ஏத்திவிடாதீங்க. :-)

    உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி.

    ReplyDelete
  114. வாழ்த்துகளுக்கு நன்றி கீதா. நீங்க கடைசி ஆள் இல்லை. இன்னும் நிறைய பேர எதிர்ப்பார்த்துக்கிட்டு இருக்கேன். தனி மடல் அனுப்பியிருக்கேன். இன்னும் அவங்களைக் காணோம். :-)

    அப்புறம் வார இறுதியில ஊர்சுத்தினீங்களா....எங்க எங்க போனீங்க? புதுமணத் தம்பதிகள். பொடிநடையா அமெரிக்காவை வலம் வர்றீங்களா என்ன? :-)

    ReplyDelete
  115. இவ்வளவு பேர் பின்னூட்டம் போட்டு வாழ்த்துனீங்க. ரொம்ப நன்றி. எல்லாருக்கும் ஒரு சின்ன விண்ணப்பம். இப்ப எல்லாம் நட்சத்திரப் பதிவாளர்களுக்கு இது வழக்கமான ஒரு அனுபவமாப் போச்சு. முதல் விண்மீன் பதிவைப் போட்டவுடனே வாழ்த்துகள் சொல்லி நிறைய பின்னூட்டம் வருது. ஆனா அதுக்கப்புறம் வார இறுதியில நன்றி/விடை பெறுகிறேன் பதிவுக்குத் தான் திரும்பி எல்லாரும் வர்றாங்க. அதனால் மத்தப் பதிவுகளை எல்லாம் மக்கள் படிக்கிறாங்களா இல்லையான்னே தெரிய மாட்டேங்குது. எனக்கும் அந்த மாதிரி தண்ணி காட்டாதீங்க என்பதே என் விண்ணப்பம். வேண்டுதல். நீங்கள் படித்துவிட்டு கருத்து சொல்ல எதுவும் இல்லாவிட்டால் 'படித்துவிட்டேன் குமரன்' என்றாவது ஒரு பின்னூட்டம் போட்டுவிடுங்கள். என்ன சரிங்களா? :-)

    ReplyDelete
  116. அப்படியே 'நட்சத்திரப் பதிவு' பக்கத்துல இருக்கிற கவிதை பத்தியும் எதாவது கமெண்ட் இருந்தா சொல்லுங்க. அது ரொம்ப கஷ்டமா இருந்தா இராகவன்கிட்ட சொல்லுங்க. அவர் விளக்கம் சொல்லுவார். சொல்ல மாட்டீங்களா இராகவன்? :-)

    ReplyDelete
  117. இன்னொரு விஷயம். நான் எழுதுன முதல் புதுக்கவிதைய இந்தப் பதிவுல குடுத்திருக்கேனே? யாருக்கும் பிடிக்கலையா? (அதனால தான நான் இப்ப எல்லாம் கவிதையே எழுதுறதில்ல). பின்னூட்டம் போட்டவங்கள்ல எத்தனைப் பேரு கவிஞர்களா இருக்கீங்க? யாருமே ஒண்ணும் சொல்லாம விட்டுட்டீங்களே? :-)

    ReplyDelete
  118. குமரன் இணையத்துக்கு நீங்க புதுசுன்றதால என் வயச பத்தி தெரியாம அண்ணான்னு சொல்லிட்டீங்க.. மன்னன் மகள் எனக்கு அக்கா என்றால் என் வயசு என்ன?

    *
    // கடவுளும் அவள் இடையும் ஒன்று
    சிலர் உண்டென்பர்
    சிலர் இல்லையென்பர் //

    கவிதை பற்றி போன தடவையே சொல்ல நினைத்தேன். ஆனா... சரி இப்ப சொல்லிடறேன்.

    அயல்நாட்டில் நான் ஆத்திகன்
    தமிழ்நாட்டிலோ நாத்திகன்


    மகளிர் பாதுகாப்பு குழு வருவதற்கு முன் விடு அப்பீட்டேய்...

    ReplyDelete
  119. ஆன்மிக சூப்பர்ஸ்டார் அவர்களே,

    உங்கள் கவிதை மிகவும் இனிமை.அனைத்தும் பரமாத்மா வடிவம் தான் என கீதை கூறுகிறது.அப்படி இருக்க பெண்ணின் இடை மட்டும் பரம்பொருள் இல்லையா என்ன?

    எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அன்னை ஆதி பராசக்தியை பெண்ணின் இடை ரூபத்தில் காணுவது என்ன தவறு?யோனி ரூபத்தில் சிவலிங்கத்தில் அன்னை பராசக்தியும்,லிங்க ரூபத்தில் ஆதிசிவனும் காட்சியளிப்பது இவர்களுக்கு தெரியாது போலும்.

    "வானத்தில் டெலெஸ்கோப்பை வைத்து பார்த்தேன்.கடவுள் இருக்கும் இடம் என எதுவும் இல்லை" என்றான் நாத்திகன்.

    அதே டெலெஸ்கோப்பை ஆத்திகன் வாங்கிப்பார்த்து விட்டு "கடவுள் இல்லாத இடமே இல்லையே.அனைத்தும் எனக்கு சக்தி ஸ்வரூபமாக தான் தெரிகிறது" என்றானாம்.

    ReplyDelete
  120. முகமூடி அண்ணா. நீங்க சொல்ற கவிதையெல்லாம் பாத்தா நீங்க என் மகளை அக்கான்னு சொல்றது ரொம்ப அதிகம். :-) பாத்து விளக்கத் திலகம் பதிவுல நீங்க போட்டப் பின்னூட்டத்தைப் பாத்துட்டு விளக்கமாத்துத் திலகங்கள் எல்லாம் வந்துகிட்டு இருக்காம். :-)

    ReplyDelete
  121. செல்வன். கலக்கிட்டீங்க. அருமையிலும் அருமை உங்கள் விளக்கம். அனைத்தும் கடவுள் என்பதால் பெண்ணின் இடையும் கடவுளாய்த் தான் இருக்கவேண்டும். சிவலிங்க தத்துவம் நிறைய பேருக்குத் தெரியாது தான். என்னிடம் அதைப் பற்றிக் கேட்டு நான் அதன் விளக்கம் சொன்னவுடன் நம்பமுடியாமல் திகைத்தவர்கள் மிக அதிகம். :-)

    ஆத்திகன், நாத்திகன் இவங்க சொல்றதையும் அருமையாச் சொல்லியிருக்கீங்க தனக்குவமை இல்லாதவரே. மிக்க நன்றி :-)

    ReplyDelete
  122. அப்புறம் ரசிகர் மன்றப் பொருளாளர் செல்வன், நீங்க அடுத்தவங்க வீட்டுக்குப் போயி அடாவடி பண்றதாத் தகவல் வந்திருக்கு. உண்மையா? கொஞ்சம் அடக்கியே வாசிங்க தலைவரே. நேத்து மொளச்ச காளான் அது இதுன்னு முகமூடியார் திட்டப் போறார் நம்மளை. :-)

    ReplyDelete
  123. //அது தான் சூப்பர் பதவி சிபி. அந்தப் பதவியில இருந்தா முதலமைச்சர் ஆயிடலாம்//

    நன்றி குமரன். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பது இதுதான்.

    கொ.ப.செ. பதவியோடு நாமக்கல் மாவட்ட செயலாளர் பதவியும் மனமுவந்து அளித்த செல்வனுக்கும் என் நன்றி.


    //அப்புறம் அடுத்த முறை ஊருக்குப் போறப்ப நம்ம நாமக்கல் ஆஞ்சனேயர், நரசிம்மர், நாமக்கல் வல்லித் தாயார் (நாமவல்லித் தாயாரா சரியான பேர்?) எல்லாரையும் விசாரிச்சதாச் சொல்லுங்க. என்ன? //

    நானே கொவிலுக்கு போனாக்கூடா "ஏண்டா கய்தே இன்னித்தினி நாளா வரலைன்னு" அவர்களே என்னை உதைக்கக் கூடும்.

    மார்கழி மாதத்தில் அரங்க நாதர் ஆலயத்தின் சுவர்களில் எதிரொலிக்க
    "எழுந்திரும் ஸ்ரீரெங்க நாதா நாதா, ஏன் பள்ளி கொண்டீரோ நாதா நாதா"

    என்று பாடும் அந்த சுகத்தை இழந்து வெகு நாட்களாகி விட்டது.

    ReplyDelete
  124. //அவர் அமைதியா இருந்தா கல்யாணம் பண்ணிக்கிறவங்களுக்கு கொண்டாட்டமாத்தானே இருக்கப் போகுது? இதுல பாவம் என்ன இருக்கு? :-) //

    இன்னொன்னும் சொன்னேன் கவனிக்கலையா. ஆள் நரசிம்மராவ் மாதிரி சிரிக்காவே செய்யாத ஆளு. உம்மனா மூஞ்சியா இருந்து அரசியல் நடத்தலாம். குடும்பம் நடத்த முடியுமா??:-)),
    அனுபவஸ்தங்கதான் சொல்லனும்:-)))))

    101 பதிவா (மொய்)பதிவை பதிந்து கொண்டு இருக்கும் போது அப்படிபோடு போட்டுதாகிட்டாங்க. 100 யை விட 101க்குதான மதிப்பு அதிகம்.

    ReplyDelete
  125. //100 யை விட 101க்குதான மதிப்பு அதிகம்//
    இருந்தாலும் 356க்கு மதிப்பு இன்னும் ஜாஸ்தி.

    ReplyDelete
  126. நாமக்கல் சிபி. ஒரே ஆள் இரண்டு பதவிகளில் இருக்கக் கூடாது என்பது நம் மன்றத்தின் சட்டம். தெரியாதா உங்களுக்கு? உடனே கொ.ப.செ. அல்லது நாமக்கல் மாவாட்ட (சரி சரி மாவட்டச்) செயலாளர் பதவியை விட்டு விலகுமாறு பேரன்புடன் பெருமகிழ்ச்சியுடனும் தாழ்மையுடனும் கேட்டுக் கொள்கிறேன். :-)

    இந்த தடவை ஊருக்குப் போனா கோவிலுக்கும் போங்க. நான் சொன்னேன்னு சொன்னா அவங்க கோவிச்சுக்க மாட்டாங்க. :-)

    ReplyDelete
  127. முத்துக்குமரன், மொய்ன்னா 101வது பின்னோட்டமா? இப்பப் புரியுது. :-) மொய்ப் பின்னோட்டத்துக்கு நன்றி (எண்ணம் ரொம்ப முக்கியம்).

    நரசிம்ம ராவ் காலத்துல தான் நம்ம நாட்டுல நிறைய நல்லது நடந்ததா பேசிக்கிட்டாங்க. அதனால எதுவுமே சொல்ல முடியாதுப்பு. எந்தப் புத்துல எந்த பாம்பு இருக்கோ? :-)

    ReplyDelete
  128. என்ன சிபி சார். ஒவ்வொரு நாளுக்கு ஒரு பின்னூட்டம் போட்டு இந்தப் பதிவுக்கு ஒரு வருசத்துக்குள்ள 356 பின்னூட்டம் போட்டுறதா முடிவு பண்ணிட்டீங்க போலிருக்கு. நடக்கட்டும் நடக்கட்டும். நான் ஏன் வேணாம்ன்னு சொல்றேன். :-)

    ReplyDelete
  129. குமரன்,

    சில நாட்களாக தமிழ்மணத்திற்கு வரமுடியவில்லை..நீங்கள் நட்சத்திரமானதிற்கு வாழ்த்துக்கள்..நானும் மதுரை மாப்பிள்ளைதான்.

    ReplyDelete
  130. வாழ்த்துக்களுக்கு நன்றி முத்து (தமிழினி). மதுரை மாப்பிள்ளைன்னா மதுரைப் பொண்ணை கல்யாணம் பண்ணியிருக்கீங்களா?

    ReplyDelete
  131. குமரன் சார்,

    356 க்கும் 365 க்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு. 356 ன்னு சொல்லி பாருங்க ஆட்சியில இருக்கறவங்க யாரா இருந்தாலும் ஆடிப் போய்டுவாங்க.

    ReplyDelete
  132. // அப்படியே 'நட்சத்திரப் பதிவு' பக்கத்துல இருக்கிற கவிதை பத்தியும் எதாவது கமெண்ட் இருந்தா சொல்லுங்க. அது ரொம்ப கஷ்டமா இருந்தா இராகவன்கிட்ட சொல்லுங்க. அவர் விளக்கம் சொல்லுவார். சொல்ல மாட்டீங்களா இராகவன்? :-) //

    சொல்லாமலா குமரன்! இப்பிடி ஒரு கேள்விய நீங்க கேட்டத நான் பார்க்கவேயில்லை. பின்னூட்டங்களோட எண்ணிக்கை அனுமாரு வாலு மாதிரி நீண்டுக்கிட்டே போனதுல பயந்து போயி இந்தப் பக்கம் வராம இருந்தேன். வந்து பாத்தா..இப்பிடி ஒரு நெலமை.

    நான் நெனைக்கிறேன். நீங்க இத கின்னஸ் புத்தகத்துக்கு எழுதிப் போடலாம். எனக்குத் தெரிஞ்சு வேறெந்த மொழியிலையும் இவ்வளவு பின்னூட்டம் வாங்கிய பிளாக் எதுவுமே இருக்காதுன்னு நெனைக்கிறேன்.

    கவிதைக்கு விளக்கம் சொல்லலாம். அத இங்கையே சொல்லவா? இல்ல தனிப்பதிவா போடவா?

    ReplyDelete
  133. ராகவன்,

    மத்தவங்க ஏதாவது பதிவு பண்ணினா நாம பின்னூட்டம் போடலாம். ஒரு பின்னூட்டமே பதிவை போட்டா....
    அதான் இத்தனை பின்னூட்டங்கள்.

    குமரன் சார்க்கு இந்த பின்னூட்டங்கள் குறைவு என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

    (அய்யயோ, இது கருத்து இல்லை...யாரவது கிளம்பீறப்போறீங்க)

    ReplyDelete
  134. குமரன் சாரே சொன்னதுக்கப்புறம் அதுக்கு அப்பீல் ஏது, நான் உடனடியா
    மாவட்டச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.

    ஓ.கே. குமரன் நாமக்கல் போகும்போது கட்டாயம் கோவில் சென்று வருகிறேன். (உங்களுக்காகவாவது)

    ReplyDelete
  135. அப்புறம் ரசிகர் மன்றப் பொருளாளர் செல்வன், நீங்க அடுத்தவங்க வீட்டுக்குப் போயி அடாவடி பண்றதாத் தகவல் வந்திருக்கு. உண்மையா? கொஞ்சம் அடக்கியே வாசிங்க தலைவரே. நேத்து மொளச்ச காளான் அது இதுன்னு முகமூடியார் திட்டப் போறார் நம்மளை. :-) ////



    ஆன்மிக சூப்பர்ஸ்டார் அவர்களே,

    முகமூடி அவர்கள் என் மேல் பொறாமை கொண்டு அவதூறு பரப்பி வருகிறார்.நமது ரஷிய மாவட்ட செயலாளர் ராமனாதனின் பதிவில் 300வது பின்னூட்டத்தை நான் இட்டதால் அவருக்கு என் மேல் பொறாமை.உடனடியாக அவரை கட்சியை விட்டு நீக்கும்படி லட்சோப லட்சம் உடன்பிறப்புக்கள் சார்பில் பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

    ReplyDelete
  136. செல்வன் அவர்களே,
    //நமது ரஷிய மாவட்ட செயலாளர் ராமனாதனின் பதிவில் 300வது பின்னூட்டத்தை நான் இட்டதால் அவருக்கு என் மேல் பொறாமை//

    பமகவின் சக்தியும் பலமும் வீர்யமும் அறியாமலும் அதன் தலைவரின் மேன்மையும், மகத்துவத்தையும், பொதுநலனிலிருக்கும் அக்கறையும் அறியாமலும் பிதற்றுவதை நிறுத்துமாறு அன்புடன் எச்சரிக்கிறேன்.

    பமக தொண்டன் என்ற வகையில், எளிதில் ஜனநாயக முறைப்படி உங்களின் மூன்னூறை அழித்துவிட்டு, தலைவருக்கு அதை விட்டுக்கொடுத்திருக்க முடியும். ஆனால், செய்யவில்லை என்பதிலிருந்தும் தலைவர் அதை மேலும் வலியுறுத்தவில்லை என்பதிலிருந்து உண்மை விளங்கவில்லையா? அல்லது திரையேதும் கண் முன் நின்று மறைக்கிறதா? தங்கள் சூப்பர்ஸ்டார் கூடிய விரைவில் 'தெரதீயகராதா' என்று உங்களின் குறுகிய பார்வையை பார்த்து பாட பத்தோடு பதினொன்றாக மற்றுமொரு பதிவைத் தொடங்கப்போவது தமிழ்நாட்டின் வரலாற்றில், இல்லை மினசோட்டா வரலாற்றில் அழிக்க முடியாத களங்கமாக அமையப் போகிறது என்பதனை அறிந்தே அடக்கி வாசிக்கிறோம்.

    அன்புடன்,
    செயிண்ட் பீட்டர் வட்டம்
    ரஷ்ய மாவட்டம் (?)
    பமக

    --
    இனியும் தலைவனை தாக்க்கும் தாழ்ந்த போக்கு தொடருமானால், தானே வெடித்துவிழாத மிக் ஜெட்கள் மூலம் தங்கள் மினசோட்டாவின் அந்த்ராக்ஸும் கஸ்மாலப்பொடியும் கலந்துகட்டி தூவப்படும் என்பதனை மறைமுக எச்சரிக்கையாக வைக்கிறேன்.

    ReplyDelete
  137. எதிர்கட்சி தலைவர் என்னை மிரட்டியதால் மின்னசோட்டா முழுவதும் நாளை கடையடைப்பும் பஸ்மறியலும் நடைபெறும் என்பதை பணிவன்புடன் செரிவித்துகொள்கிறேன்.

    ReplyDelete
  138. http://gragavan.blogspot.com/2006/01/blog-post_24.html

    ஒங்க சண்டையக் கொஞ்சம் நிப்பாட்டீட்டு மேல இருக்குற பதிவுக்குப் போங்க. குமரனோட செய்யுளுக்கு நானும் மயிலாரும் சேர்ந்து விளக்கம் சொல்லீருக்கோம். படிச்சிட்டு ஒங்க சண்டைய அங்க தொடருங்க.

    ReplyDelete
  139. நாமக்கல் சிபி. நீங்க 356ஆ சொன்னீங்க. நானென்னவோ 365ன்னு படிச்சு ஏதேதோ எழுதிட்டேன். ஹிஹிஹி. ஆட்சியில இருக்கிறவங்களையும் தெரியாது. இல்லாதவங்களையும் தெரியாது. 356ஐயும் தெரியாது.

    ReplyDelete
  140. என்ன இராகவன். நம்ம டோண்டு சாரையும் இராமநாதனையும் மறந்துட்டீங்களா. அவங்க இருக்கிறப்ப நாம எங்கே கின்னஸுக்குப் போறது. ஏதோ தமிழ்மணம் படிக்கும் தமிழன்பர்கள் நம்ம மேல இருக்கிற அன்பால பின்னூட்டம் போடறாங்க. எல்லாருக்கும் தனித்தனியா பதில் பின்னூட்டம் நான் போடறேன். அதனால அனுமார் வால் மாதிரி நீண்டுக்கிட்டே போகுது. இதோ 150ஐ தாண்டிடிச்சு. 200ஐ தாண்டுமோ இல்லியோ? பார்க்கலாம். :-)

    தனிப்பதிவாவே கவிதைக்கு விளக்கம் சொல்லிட்டீங்க போல இருக்கு. ரொம்ப நன்றி.

    ReplyDelete
  141. // இதோ 150ஐ தாண்டிடிச்சு. 200ஐ தாண்டுமோ இல்லியோ? பார்க்கலாம். :-)
    //
    ஆக மொத்தம், அப்படியொரு ஆசையும் இருக்கா????? :))))

    ReplyDelete
  142. //மத்தவங்க ஏதாவது பதிவு பண்ணினா நாம பின்னூட்டம் போடலாம். ஒரு பின்னூட்டமே பதிவை போட்டா....
    அதான் இத்தனை பின்னூட்டங்கள்.
    //

    புரியலீங்களே சிபி. கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க.

    //குமரன் சார்க்கு இந்த பின்னூட்டங்கள் குறைவு என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
    //

    உங்க 'கருத்தை'க் கேட்டவுடனே புல்லரிச்சுப் போய்ட்டேங்க. உங்க கருத்துப் படி இன்னும் நிறைய பின்னுட்டங்கள் போட்டுத் தள்ளுங்க. இங்க மட்டும் இல்லை. இனிவரும் எல்லாப் பதிவுகளிலும் :-)

    ReplyDelete
  143. அடாடா. இந்த மாதிரி சொன்னவுடனே கேக்கறவங்களைத் தான் மன்றத்துல சேர்த்துக்கணும். இங்கேயும் இருக்காரே ஒருத்தர். மன்றத்தையும் ஆரம்பிச்சு இன்னொரு கட்சியை தானே வலியப் போய் எதிர்த்து எதிர்க்கட்சியாக்கி ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்டு இருக்கார். சொன்னா கேக்க மாட்டேங்கறார். :-(

    கோவில் போயிட்டு வந்து அதுக்குத் தனியா ஒரு பதிவு போட்டுடுங்க சிபி.

    ReplyDelete
  144. செல்வன். இராமநாதன் என்னைக்கு உங்க மன்றத்துல சேர்ந்தார். அவரை நான் நீக்குவதற்கு. இது உங்கள் மன்றம். உங்கள் கட்சி. அவ்வளவு தான். அண்ணா பெயரை கட்சிப் பெயரில் வைத்திருப்பவர்கள் எல்லாம் அண்ணா சொன்னதைக் கேட்கிறார்களா என்ன? :-)

    ReplyDelete
  145. பாருங்க செல்வன். நான் சொல்லலை. இராமநாதன் என்னைக்குமே உங்க மன்றத்துல அங்கத்தினராய் இல்லையென்று. பாருங்க. பமக சார்பா வந்து வன்முறைவிதையைத் தூவிச் சென்றுள்ளார். நீங்களாச்சு. அவராச்சு. என்னை விட்டுருங்கப்பா. முடிஞ்சா உங்க வாய்ச் சவடால்களை எல்லாம் உங்கள் இருவர் வீட்டிலும் வைத்திருங்கள். என் வீட்டுக்கு வர்றவங்க எல்லாம் பயந்துக்கறாங்க. :-)

    ReplyDelete
  146. ஆமாம். இராகவன் சொல்லிட்டாருல்லை. முடிஞ்சா அங்க போயி சண்டைப் போட்டுக்கோங்க. :-)

    ReplyDelete
  147. இராமநாதன். ஆசையே அழிவிற்குக் காரணம்ன்னு சம்பந்தா சம்பந்தம் இல்லாம ஏதேதோ நினைவுக்கு வருதே...ஏன்? :-)

    ReplyDelete
  148. //புரியலீங்களே சிபி. கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க//

    பின்னூட்டத்தாலேயே பிரபலமானவர் நீங்க. உங்களுக்கு இல்லத பின்னூட்டங்களா?

    ReplyDelete
  149. சிபி, என்ன இப்படி சொல்லிட்டீங்க. இந்தப் பதிவுல தானுங்க பின்னூட்டம் பிச்சுக்கிட்டுப் போகுது. இதுக்கு முன்னாடி 20தை தாண்டுனா அதிக பட்சம். நீங்க என்னடான்னா பின்னூட்டத்தால பிரபலமானவர்ன்னு சொல்லிட்டீங்களே. அதுக்கு முன்னாடியே நமக்கு நெறைய பட்டம் குடுத்துட்டாங்கப்பா. :-)

    ReplyDelete
  150. //இந்தப் பதிவுல தானுங்க பின்னூட்டம் பிச்சுக்கிட்டுப் போகுது. இதுக்கு முன்னாடி 20தை தாண்டுனா அதிக பட்சம். நீங்க என்னடான்னா பின்னூட்டத்தால பிரபலமானவர்ன்னு சொல்லிட்டீங்களே.//


    குமரன் சார்,

    உங்களுக்கு வந்த பின்னூட்டங்கள் வேண்டுமானாலும் குறைவாக இருக்கலம். ஆனால் நீங்கள் எழுதிய பின்னூட்டங்கள் நிறைய அல்லவா, அதைத்தான் சொன்னேன்.


    சரி, நீங்கள் ஆன்மீகம் பற்றி எழுதுகிறீர்கள். நானோ அமானுஷ்யத்தொடர் எழுதுகிறேன். பயப்படாமல் படியுங்கள்.

    http://pithatralgal.blogspot.com/2006/01/1.html

    ReplyDelete
  151. என்ன குமரன் சார்,
    165 உடன் இன்றைய ஆட்டம் முடிந்ததா? நான் இன்னிக்கே 200 அடிப்பீங்கன்னு நினைச்சேன்.

    ReplyDelete
  152. நான் மாடக் கூடல்
    தந்த நல்லதொரு முத்து
    ஆன்மீகம் சொல்லிவரும்
    எங்கள் பெரும் சொத்து
    உன் எழுத்துக்களைப் படிப்பதிலே
    எந்தன் மனம் பித்து
    உன் எழுத்துக்களில் உள்ளதைய்யா
    ஏதோ ஒரு சத்து.

    ReplyDelete
  153. Kumaran, one week behind-the-schedulea irukken. Ippa thaan 'catch up' pannittu irukken.

    Vazhthukkal. Romba santhoshama irukku.

    Kumaresh

    ReplyDelete
  154. இருக்கலாம் சிபி. நிறைய பேருக்கு பின்னோட்டம் போட்டிருக்கேன். ஆனால் எல்லாருக்கும்னு சொல்ல முடியாது. நான் உள்ளேயே நுழையாத பதிவுகள் எத்தனையோ இருக்கு. உள்ள போய் பார்த்துட்டு, நமக்கு இது சரிப்படாதுன்னு பின்னோட்டம் போடாம வந்ததும் இருக்கு. இதையே தான் நிறைய பேரு நம்ம பதிவுகளுக்குச் செய்றாங்கன்னு தெரியும் :-)

    ReplyDelete
  155. சிபி. முந்தாநேத்து இரவு 11:50க்கு உங்க அமானுஷ்யத் தொடரோட முதல் பாகத்தைப் பார்த்தேன். நீங்களே அமானுஷ்யத் தொடர்ன்னு சொல்லிட்டதால திகிலா போச்சு. சரி நடுநிசியில இதப் படிச்சு பயப்பட வேண்டாம்; அப்புறம் படிக்கலாம்ன்னு மூடிட்டேன். அடுத்த வாரம் படிக்கிறேன். :-)

    ReplyDelete
  156. சிபி. நானா 165ஆ 200ஆ நிர்ணயம் பண்றது. எல்லாம் படிக்கிறவங்க பின்னூட்டம் போடறதப் பொறுத்தது. என்னால முடிஞ்சது ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் ஒரு பதில் போட்டு Countஐ டபுள் ஆக்குறது மட்டும் தான் :-)

    ReplyDelete
  157. //நான் மாடக் கூடல்
    தந்த நல்லதொரு முத்து
    ஆன்மீகம் சொல்லிவரும்
    எங்கள் பெரும் சொத்து
    உன் எழுத்துக்களைப் படிப்பதிலே
    எந்தன் மனம் பித்து
    உன் எழுத்துக்களில் உள்ளதைய்யா
    ஏதோ ஒரு சத்து.

    //

    நல்லா இருக்கு சிபி. இராகவன் ஊருக்குப் போயிட்டார். இல்லாட்டி இதுக்கும் ஒரு விளக்கம் மயிலார்கிட்ட கேட்டு ஒரு பதிவு போடுங்கன்னு வேண்டுதல் வச்சிருக்கலாம். :-) முடிஞ்சா நீங்களே விளக்கமா ஒரு பதிவு போட்டுடுங்களே?!

    ReplyDelete
  158. குமரேஷ். நினைச்சேன். என்னடா ஆளைக் காணமேன்னு. மெதுவா எப்ப நேரம் கிடைக்குதோ அப்ப படிச்சுப் பின்னூட்டம் போடுங்க. வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

    உங்களுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்குன்னா எனக்கு எவ்வளவு சந்தோசமா இருந்திருக்கும்? :-)

    ReplyDelete
  159. ஆன்மிக சூப்பர்ஸ்டார் அவர்களே,

    எதிர்கட்சி ரஷ்ய மாவட்ட செயலாளர் மிரட்டலை கண்டு நம் கழக கண்மணிகள் மனம் கலங்கி விடக்கூடாது.இதை எதிர்த்து பல கட்ட போராட்டம் நடத்தவிருக்கிறோம்.

    முதல்கட்டமாக காலவரையற்ற உண்ணாவிரதம் உங்கள் தலைமையில் நடத்துவதாக முடிவு செய்துள்ளோம்.நீங்கள் உண்ணாவிரதம் இருங்கள்.எந்த பிரச்சனை வந்தாலும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

    இந்த போராட்டத்துக்கு நிதி தேவைபடுவதால் தொண்டர்கள் உண்டியல்,ரசிது புத்தகம் முதலியவற்றை பொருளாளரிடம் பெற்றுக்கொண்டு வசுலாகும் பணத்தை தம்படி விடாமல் பொருளாளரிடம் சேர்க்குமாறு தலைமைகழகம் சார்பாகவும் அண்ணன் குமரன் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  160. செல்வன். விட மாட்டேங்கறீங்களே?

    ஒரு நாளுக்கு ஐந்து வேளை சாப்பிடுபவன் நான். என்னை எல்லாம் உண்ணாவிரதத்துக்குக் கூப்புடாதீங்க. உண்ணும் விரதம் இருந்தா சொல்லுங்க. பார்க்கலாம். :-)

    ReplyDelete
  161. வாழ்த்துக்கள் குமரன்

    APJK

    ReplyDelete
  162. மிக்க நன்றி APJK. உங்கள் பெயரைப் பார்த்தால் தெரிந்தவர் போல இருக்கிறது. ஆனால் யாரென்றுத் தெரியவில்லையே.

    ReplyDelete
  163. //சிபி. முந்தாநேத்து இரவு 11:50க்கு உங்க அமானுஷ்யத் தொடரோட முதல் பாகத்தைப் பார்த்தேன். நீங்களே அமானுஷ்யத் தொடர்ன்னு சொல்லிட்டதால திகிலா போச்சு. சரி நடுநிசியில இதப் படிச்சு பயப்பட வேண்டாம்; அப்புறம் படிக்கலாம்ன்னு மூடிட்டேன். அடுத்த வாரம் படிக்கிறேன். :-)//

    அவ்வளவு திகிலா எல்லாம் இருக்காது குமரன் சார், எழுத எழுததான் தானா வருத். பர்ப்போம் எந்த அளவுக்கு திகிலா போகுதுன்னு. இன்னும் எனக்கே தெரியாது அதை எப்படி கொண்டு செல்வது என்று.

    ReplyDelete
  164. //உண்ணா விரதம்//

    இந்த விஷயத்தில் நானும் உங்க கட்சி குமரன்.

    ReplyDelete
  165. அப்படியா. அவ்வளவு திகிலாக இருக்காதா. படிக்கிறேன் சிபி. எதற்கும் வெட்டவெளிச்சமாக இருக்கும் ஒரு பகல் பொழுதில் படிக்கிறேன். எதற்கு வம்பு? :-)

    ReplyDelete
  166. எனக்குத் தான் தெரியுமே சிபி நீங்கள் என் கட்சி என்று. உண்ணும் விரதத்தைத் சொன்னேன் சிபி. மற்றபடி கட்சி எல்லாம் நமக்குக் கட்டுப்படி ஆகாது. :-)

    ReplyDelete
  167. தாமதமா வாழ்த்து சொல்றேன்
    என்ன பின்னூட்ட விளையாட்டு நடக்கிறதா இங்கே?

    சரி ஒரு பின்னூட்டம் போட்டாச்சு
    எல்லா நாளும் திருநாளா இருக்கட்டும் குமரன்

    ReplyDelete
  168. நன்றி அக்கா. எல்லா நாளும் திருநாளா இருக்கட்டும்னு வாழ்த்தியிருக்கீங்க. ரொம்ப நன்றி அக்கா. இந்த பதிவுக்கு பின்னூட்ட மழை கொட்டியதென்னவோ உண்மை அக்கா. எல்லாம் நட்சத்திர வார மகிமை.

    ReplyDelete
  169. கவிதையை இங்கும் போட்டிருக்கலாம் இல்லயா? இப்போது நான் எப்படிப் படிப்பது :( ?

    ReplyDelete
  170. கல்லூரிக் காலத்தில் எழுதிய கவிதைகளைத் தேட வேண்டும் பொன்ஸ். அவை கிடைத்தால் அவ்வப்போது கூடலில் போடுகிறேன். நன்றி.

    ReplyDelete