Monday, January 16, 2006

118: தினமலருக்கு நன்றி!!!

ஆமாங்க. அதே தான். நம்ம வலைப்பூ பற்றி தினமலரில் வந்திருக்கு. நான் 50வது பதிவு போட்ட நேரத்தில் 'மதுரையின் ஜோதி' என்ற தலைப்பில் இருக்கும் என் வலைப்பூ பற்றி தினமலரில் செய்தி வந்தது. இப்போது 'இந்தியக் கனவு 2020' என்ற தலைப்பில் இருக்கும் வலைப்பூ பற்றி தினமலர் செய்தி வெளியிட்டிருக்கிறது.



இந்த 'இந்தியக் கனவு 2020' என்னும் வலைப்பூ அதே பெயரில் தற்போது இயங்கிவரும் ஒரு சிறு இயக்கத்தைப் பற்றிய செய்திகளை வெளியிட தொடங்கப் பட்டது. அந்த இயக்கம் தொடங்கி இன்றோடு (ஜனவரி 16) ஒரு வருடம் நிறைவு பெறுகிறது. தற்செயலாக தினமலர் இந்த வலைப்பூவைப் பற்றி செய்தி வெளியிட்டுள்ளது அந்த வருட நிறைவை வாழ்த்துவது போல் இருக்கிறது. அதனால் மகிழ்ச்சி இரு மடங்கானது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று எண்ணும் நம் எண்ணம் இதனால் வலுவடைகிறது. என் செயலாவது யாதொன்றுமில்லை இனித் தெய்வமே; நின் செயலே என்று உணர்ந்தோம்.

இந்தத் தகவலைச் சொல்லிய மாயவரத்தான் அவர்களுக்கும் தி.ரா.ச. அவர்களுக்கும் நன்றிகள்.

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திருநாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!

28 comments:

  1. குமரன், நல்லதை நினைத்து நல்ல வழியில் நல்லதைச் செய்யும் பொழுது நல்லதே நடக்கும். உங்கள் எண்ணம் சிறந்து வண்ணம் பெருகி நல்லன நடந்து மகிழ எனது வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அன்பு குமரன்,
    இதயங்கனிந்த வாழ்த்துகள்.
    தொடருட்டும் நுமது பணி.

    ReplyDelete
  3. மேலும் மேலும் சிறப்புற (பெற) வாழ்த்துகள் குமரன்.

    ReplyDelete
  4. அன்பு குமரன்,
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. குமரன் வாழ்த்துகள்.

    தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  6. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி இராகவன், ஞானவெட்டியான் ஐயா, சதயம், இராமநாதன், பரஞ்சோதி, முத்துகுமரன்.

    ReplyDelete
  7. வாழ்க குமரனின் தேசப்பணி
    100 இளைஞர்கள் கிடைத்தால் புது இந்தியாவை உருவாக்குவேன் என்றார் விவேகானந்தர்.அதில் முதல் இளைஞர் எங்கள் குமரன் தான்.

    ReplyDelete
  8. வாங்க செல்வன் (தனக்குவமை இல்லாதவரே). உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. நான் இளைஞன், நடுத்தர வயதினன் என்ற எல்லையில் இருக்கிறேன். நீங்கள் சொல்லும் இளைஞர்கள் இந்தியாவில் இருந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நான் சும்மா அவர்களைப் பற்றி எழுதப் போகிறேன். என்னால் முடிந்ததெல்லாம் அவர்களுக்கு ஆலோசனை கூறுதலும், அவர்கள் செய்யும் நல்ல செயல்களுக்கு என்னால் முடிந்த அளவு பொருள் உதவி செய்தலும் தான். விவேகானந்தர் கேட்ட இளைஞர்கள் இப்போது இருக்கிறார்கள் - அதனால் நம் இந்தியக் கனவு 2020 வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  9. நன்றி முத்து (தமிழினி)

    ReplyDelete
  10. குமரன் வாழ்த்துக்கள்
    திறமைக்கு கிடைத்த பரிசு
    வாழ்க வளர்க

    ReplyDelete
  11. குமரன் ,

    இதயங்கனிந்த வாழ்த்துகள்

    ReplyDelete
  12. பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி என்னார் ஐயா.

    ReplyDelete
  13. வாழ்த்துகளுக்கு நன்றி நிலவு நண்பன் (ஞானியார் ரசிகவ்)

    ReplyDelete
  14. வாழ்த்துகள்!. நன்றிய நம்ம 'நாகரத்தினம்' அவர்களுக்கும் சொல்லுங்கள். அவர்தான் இங்க படிச்சு., அங்க விளம்பரம் செய்கிறார்.

    ReplyDelete
  15. தினமலர் மூலம் இந்திய கனவு பலரை சென்றடைந்திருக்கும். அதில் மகிழ்ச்சியே.

    ReplyDelete
  16. அப்டிபோடு அக்கா. வாழ்த்துகளுக்கு நன்றி. ஆமாம் தினமலர் மூலமாக இந்தியக் கனவு நிறையப் பேரைச் சென்றடைந்திருக்கும் என்று தான் நினைக்கிறேன்.

    நம்ம நாகரத்தினமா? யாரு? கொஞ்சம் விவரமா சொல்லுங்க. அவர் வலைப் பதிக்கிறாரா? அப்படியென்றால் அவர் வலைப் பதிவு எது?

    நாகரத்தினம் அவர்களே. அனைத்துத் தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாகவும் என் வணக்கங்கள். நன்றிகள். என் சார்பாக இரட்டை நன்றிகள்.

    ReplyDelete
  17. குமரன் அவர்களே,
    உங்க மகிழ்ச்சியில நானும் பங்கெடுத்துக்கறேன். வாழ்த்துக்கள்.

    இன்னிக்கு என்னுடைய பிதற்றல்கள் என்கிற வலையும் தினமலரில் வந்திருக்கு.

    ReplyDelete
  18. பார்த்தேனே நாமக்கல் சிபி. பார்த்து வாழ்த்துகளும் சொன்னேனே. மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  19. Kumaran,

    Ungal nalla pani thodara vazhthukkal.

    Kumaresh

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் குமரன்.

    மேன்மேலும் புகழ் பெற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  21. வாழ்த்துகள் குமரன். நாகரத்தினம் வலைப்பதிக்கிறார், ஆனால் உங்க அளவுக்கு :-) தொடர்ந்து செய்வதில்லை.

    அவர் முகவரி: http://aidsindia.blogspot.com/

    ReplyDelete
  22. தங்கள் ஆசிகளுக்கு மிக்க நன்றி ஜோசஃப் சார்.

    ReplyDelete
  23. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி காசி அண்ணா. 8 வயசு பெரியவங்களா இருக்கீங்களே. அதனால் அண்ணான்னு போட்டாச்சு. கோவிச்சுக்க மாட்டீங்களே?! :-)

    நாகரத்தினம் அவர்களின் வலைப்பதிவு முகவரியைக் கொடுத்ததற்கு மிக்க நன்றி காசி. போய் பார்க்கிறேன்.

    நீங்கள் சொன்ன மாதிரி நான் தொடர்ந்து வலைப்பதிக்கத் தான் செய்கிறேன். ஆனால் முக்கால் வாசி அவை சிறிய பதிவுகள் தான். அதனால் பதிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. முடிந்த வரை தொடரலாம் என்று எண்ணியிருக்கிறேன். நன்றிகள்.

    ReplyDelete
  24. நான் கொஞ்சம் லேட் .வாழ்த்துக்கள் முதுபெரும் புலவரே!

    ReplyDelete
  25. நன்றி இளங்கவி சிங்காரகுமரன்.

    ஹும் 'இளங்கவி'ங்கற பட்டத்தை விட்டுக் கொடுத்ததற்கு பதில் மரியாதை இது தான் போல.

    இப்படிக்கு,
    முந்தைய இளங்கவி குமரன்
    இப்போது முதுபெரும் புலவன் என்று தவறாக அழைக்கப்படுபவன் (33 வயசெல்லாம் ஒரு வயசா என்ன?).

    ReplyDelete