பாரதியார் எழுதிய காற்று என்னும் வசனகவிதையின் ஐந்தாம் பாகத்தை இங்கே கொடுக்கிறேன். முதல் நான்கு பாகங்களுக்கு முந்தையப் பதிவுகளைப் பாருங்கள்.
----------
வீமனும் அனுமானும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும். உயிருடையனவெல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம். உயிர் தான் காற்று. உயிர் பொருள். காற்று அதன் செய்கை. பூமித்தாய் உயிரோடிருக்கிறாள். அவளுடைய மூச்சே பூமியிலுள்ள காற்று. காற்றே உயிர்.
அவன் உயிர்களை அழிப்பவன். காற்றே உயிர். எனவே உயிர்கள் அழிவதில்லை. சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறது. மரணமில்லை. அகிலவுலகமும் உயிர் நிலையே. தோன்றுதல், வளர்தல், மாறுதல், மறைதல் - எல்லாம் உயிர்ச் செயல். உயிரை வாழ்த்துகின்றோம்.
----------
எனது உரை: மரணமிலா நிலை என்பதற்கு ஒரு புதிய விளக்கம் இந்தப் பாடலில் பாரதியார் கொடுக்கிறார். காற்று என்றும் நிலையாக இருக்கிறது. உயிர் காற்றேயாதலால் உயிரும் நிலையானது. காற்று உயிர்களை அழிப்பது போல் தோன்றினாலும் உயிர்கள் அழிவதில்லை. சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறது. உலகில் ஏற்படும் எல்லா மாற்றங்களும் காற்றால் தான் ஏற்படுகிறது. அதனால் காற்றை உயிரை வாழ்த்துகிறோம்.
30 டிசம்பர் 2005 அன்று 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' என்ற எனது இன்னொரு பதிவில் இடப்பட்ட இந்த இடுகைக்கு வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete6 comments:
G.Ragavan said...
பாரதியாரின் வசனகவிதைகளைக் கொஞ்சமாகவே படித்திருக்கின்றேன். உங்களது இந்தப் பதிவு என்னை மேலும் படிக்கத் தூண்டுகின்றது. நேரம் அமைகையில் அதை ஒரு கை பார்க்கிறேன்.
December 31, 2005 8:38 AM
--
குமரன் (Kumaran) said...
சீக்கிரம் வசன கவிதைகளைப் படிங்க இராகவன்.
December 31, 2005 12:25 PM
--
சதயம் said...
அருமை...ஐயா சாமி! இப்படி உருப்படியான சமாச்சாரமெல்லாம் எடுத்டுப்போட எங்க இருந்து உங்களுக்கு நேரம் கிடைக்குது.நானும் நம்ம பார்த்தது படிச்சதுன்னு நெறய எழுதனும்னு நெனைக்கிறேன் முடியலை...அதை நீங்க செய்றத பாக்கும் போது சந்தோஷமா இருக்கு....தொடரட்டும் உங்கள் பணி...
புத்தாண்டு வாழ்த்துக்களுடன்
சதயம்
December 31, 2005 1:42 PM
--
குமரன் (Kumaran) said...
வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி சதயம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார், நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
January 01, 2006 5:53 PM
--
Anonymous said...
Arumayana kavithai - athai vida arumayana vilakkam.
Nandri,
Kumaresh
January 06, 2006 3:43 PM
--
குமரன் (Kumaran) said...
அருமையான கவிதை என்பது உண்மை குமரேஷ். அதனை விட நிச்சயமாக விளக்கம் அருமையாக இருக்கமுடியாது. என் மேல் உள்ள அன்பில் அப்படிக் கூறுகிறீர்கள் என்று எண்ணுகிறேன். நன்றி.
January 06, 2006 8:30 PM