பாரதியார் எழுதிய காற்று என்னும் வசனகவிதையின் நான்காம் பாகத்தை இங்கே கொடுக்கிறேன். முதல் மூன்று பாகங்களுக்கு முந்தையப் பதிவுகளைப் பாருங்கள்.
----------
பாலைவனம். மணல், மணல், மணல். பல யோஜனை தூரம் ஒரே மட்டமாக நான்கு திசையிலும் மணல்.
மாலை நேரம். அவ்வனத்தின் வழியே ஒட்டைகளின் மீதேறி ஒரு வியாபாரக் கூட்டத்தார் போகிறார்கள்.
வாயு சண்டனாகி வந்துவிட்டான். பாலைவனத்து மணல்களெல்லாம் இடைவானத்திலே சுழல்கின்றன. ஒரு க்ஷணம் யம வாதனை. வியாபாரக் கூட்டம் முழுதும் மணலிலே அழிந்து போகிறது. வாயு கொடியோன். அவன் ருத்ரன். அவனுடைய ஓசை அச்சந் தருவது. அவனுடைய செயல்கள் கொடியன. காற்றை வாழ்த்துகின்றோம்.
----------
அரும்சொற்பொருள்:
யோஜனை தூரம் - தூரத்தை அளக்க இன்று நாம் சொல்லும் கிலோமீட்டர், மைல் போல் அந்தக் கால அளவு.
ஒட்டைகள் - ஒட்டகங்கள்.
சண்டன் - வம்பன்.
----------
எனது உரை: இங்கு பாலைவனத்தில் நடக்கும் ஒரு அழிவைப் படம் பிடித்துக் காட்டுகிறார். ஒரு நொடியில் காற்றால் ஒரு கூட்டத்தையே அழித்துப் போட முடியும் என்பதைக் காட்டுகிறார். அப்படிச் செய்வதால் அவன் கொடியவன் என்றும் ருத்ர ரூபி என்றும் கூறுகிறார். அந்தக் கொடியவன் நமக்கு நல்லது செய்யட்டும் என்று அவனை வாழ்த்துகிறார்.
28 டிசம்பர் 2005 அன்று 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' என்ற எனது இன்னொரு பதிவில் இடப்பட்ட இந்த இடுகைக்கு வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete7 comments:
தி. ரா. ச.(T.R.C.) said...
வடமொழியில் உள்ள சாந்தி பஞ்சகத்திலிருந்து நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்ஷ்க்ம் என்ற வரியிலிருந்து பாரதியார் காற்றை தமிழாக்கம் செய்துள்ளார். இது ஒரு சிறப்பு படைப்பு.மற்று ம்
சென்னையில் புயல் அடித்தபோது அதையும் ரசித்து கவிதையாக படினார் காற்றடிக்குது கடல் குமுறுது கண்ணை விழிப்பாய் நாயகனே.தீனக் குழந்தைகள் துன்பப் படதிங்கு தேவி அருள் செய்ய வெண்டுகின்றோம். கற்றென் வந்தது கூற்றமிங்கே நம்மைக் கத்தது தெய்வ வலிமை யன்றோ அன்பன் தி. ரா. ச
December 29, 2005 10:38 AM
--
தி. ரா. ச.(T.R.C.) said...
வடமொழியில் உள்ள சாந்தி பஞ்சகத்திலிருந்து நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்ஷ்க்ம் என்ற வரியிலிருந்து பாரதியார் காற்றை தமிழாக்கம் செய்துள்ளார். இது ஒரு சிறப்பு படைப்பு.மற்று ம்
சென்னையில் புயல் அடித்தபோது அதையும் ரசித்து கவிதையாக படினார் காற்றடிக்குது கடல் குமுறுது கண்ணை விழிப்பாய் நாயகனே.தீனக் குழந்தைகள் துன்பப் படதிங்கு தேவி அருள் செய்ய வெண்டுகின்றோம். கற்றென் வந்தது கூற்றமிங்கே நம்மைக் கத்தது தெய்வ வலிமை யன்றோ அன்பன் தி. ரா. ச
December 29, 2005 10:39 AM
--
குமரன் (Kumaran) said...
தி.ரா.ச. நீங்கள் சொல்லும் அந்தப் பாடலை நானும் படித்திருக்கிறேன்.
சாந்தி பஞ்சகத்தில் வரும் 'நமஸ்தே வாயோ; த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி' என்பது தான் பாரதியார் இந்த வசனகவிதை எழுத தூண்டியது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அவர் அந்த சாந்தி பஞ்சகத்தைத் தமிழாக்கம் செய்தது தான் இந்த வசனகவிதை என்று எண்ண முடியவில்லை. இந்தக் கவிதை பாரதியின் சொந்தக் கற்பனையே என்பது என் எண்ணம். அதைத் தான் நீங்கள் சொன்னீர்களா? நான் தான் தவறாகப் புரிந்து கொண்டேனா?
December 29, 2005 12:55 PM
--
தி. ரா. ச.(T.R.C.) said...
Dear Kumaran
en karuthum athu than.mudikkum pothu namasthe vayovai thamizhakkam seythu mudithar.vilakkuavthil nertha thavarukku varunthukiren TRC
December 30, 2005 3:48 AM
--
குமரன் (Kumaran) said...
TRC. அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன். விளக்கத்திற்கு நன்றி. தவறுதலாகப் புரிந்துக்கொள்ளப்படுதல் சகஜம். மேலும் தவறாகக் புரிந்துகொண்டவன் நான். அதனால் நான் தான் மன்னிப்பு கேட்கவேண்டும்.
December 30, 2005 5:47 AM
--
Anonymous said...
Kumaran ... 'ottai' endral 'ottagam' endru therinthu konden, nandri.
Kumaresh
January 06, 2006 3:33 PM
--
குமரன் (Kumaran) said...
பின்னூட்டத்திற்கு நன்றி குமரேஷ்.
January 06, 2006 8:25 PM