பாட்டுக்கொரு புலவன் பாரதியடா - அவன்
பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா - அதைக்
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா - அந்த
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா
என்று ஒரு கவிஞன் அழகாகப் பாடி வைத்தான்.
பாட்டுக்கொரு புலவன் தான் நம் பாரதி. திருக்குறளைப் பற்றி ஒன்று சொல்வார்கள் - அதில் இல்லாத பொருளே இல்லை என்று. அது திருக்குறள் உலக மக்களுக்குத் தேவையான பல விஷயங்களைக் கூறுவதால் வந்தப் புகழ்ச்சி. அது போல பாரதியார் பல விஷயங்களைக் கூறியிருக்கிறார் தன் பாட்டில். அவர் தேசியப் பாடல்களை மட்டும் பாடிவிடவில்லை. பல சமூக பிரச்சனைகளைப் பற்றியும் பாடியிருக்கிறார். பல ஞானப்பாட்டுகளையும் பாடியுள்ளார். அதனால் அவரை தேசிய கவி என்பதை விட மகாகவி என்று சொல்வது தான் பொருத்தம்.
பாரதியின் பாடல்கள் மிக எளிமையானவை. எளிதில் பொருள் விளங்கும். அதனால் அவர் கவிதைகளுக்கு சொற்பொருள் கூறிவதைவிட அவர் கவிதைகள் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு அது எவ்வளவு அழகாக சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்டு இருக்கிறது என்று எழுதலாம் என்று இருக்கிறேன். உங்கள் தொடர்ந்த ஆதரவு வேண்டும்.
பாரதியைப் பாட்டுக்கொரு புலவன் என்று பாடிய கவிஞர் சொன்னது போல் பாரதி பாட்டைக் கேட்டு நான் கிறுகிறுங்கி ஏதாவது உளறினால் அதனைப் பொறுத்துக் கொண்டு, தவறுகளை சுட்டிக் காட்டித் திருத்துங்கள். நன்றிகள்.

10 comments:
ReplyDeleteAnand M E said...
Page is not viewable.
Is there any font to be downloaded.
Please inform us to anandhanathme@yahoo.co.in
Anand M E
November 04, 2005 6:35 AM
--
குமரன் (Kumaran) said...
Anand ME,
As far as I know there is no need to download any fonts to read/view this blog. Please check whether the menu settings on your browser are correct. Click View --> Encoding and see whether 'Unicode (UTF-8)' has been selected. If not, please select it. It may resolved the issue.
I sent an email also to the address provided.
November 06, 2005 6:13 AM
---
G.Ragavan said...
ஆகா அடுத்து பாரதியா! நடக்கட்டும் குமரன். நடக்கட்டும். தமிழ் தடங்கலின்றி கிடைக்கின்றது உங்களது வலைப்பூக்களில்.
November 07, 2005 4:10 AM
--
குமரன் (Kumaran) said...
நன்றி ராகவன். தொடர்ந்து படித்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். அப்படி வடமொழி பஜ கோவிந்தம் பற்றியும் சௌராஷ்ட்ர பாடல்களைப் பற்றியும் உள்ள என் மற்ற வலைப்பதிவுகளையும் படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.
November 07, 2005 9:29 AM
--
Go.Ganesh said...
குமரன் !! //தமிழ் தடங்கலின்றி கிடைக்கின்றது உங்களது வலைப்பூக்களில்.//
ராகவனுக்கும் எனக்கும் நிறைய கருத்துக்களில் ஒற்றுமை உண்டு. அதில் இதுவும் ஒன்று
November 08, 2005 3:15 AM
--
குமரன் (Kumaran) said...
நன்றி கணேஷ்...ராகவனின் கருத்துகளுடன் ஒத்துப் போகாதவர்கள் நம்மில் யார் உளர்?
November 08, 2005 2:35 PM
--
வல்லிசிம்ஹன் said...
பாரதி பாடலும் தொட்டுக்கக் குமரன் உரையுமா. கேட்கவே இனிக்கிறதே.
March 11, 2007 12:47 PM
--
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
குமரன்!
பாரதியின் எழுத்துக்களைப் பற்றி எழுதப் போகிறீர்களா?? உங்கள் வாழ்நாள் பூராக எழுத விடயம் உள்ளது. அவர் ஒரு வரியை நீங்கள் ஒரு பந்தியாக ஆய்ந்து எழுதுவீர்கள்;.இதை எல்லாம் படிக்க நேரம் தேடுவதுதான் என் தலையான சிக்கல்.
March 11, 2007 3:21 PM
--
குமரன் (Kumaran) said...
வல்லியம்மா. இது நவம்பர் மாதத்தில் இட்ட இடுகை. இது வரை 26 இடுகைகள் இந்தப் பதிவில் இட்டுவிட்டேன். எல்லாவற்றையும் படித்துப் பாருங்கள். இனிக்கிறதா என்று சொல்லுங்கள். :-)
March 11, 2007 9:09 PM
--
குமரன் (Kumaran) said...
நீங்கள் சொல்வது சரி தான் யோகன் ஐயா. இந்தப் பதிவில் சில இடுகைகளில் ஒரு வரியை ஒரு பத்தியாக விரித்து எழுதியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள். :-)
March 11, 2007 9:10 PM
'பாட்டுக்கொரு புலவன்' பதிவில் இருக்கும் இடுகைகளை இங்கே இடம் மாற்றுகிறேன். நன்றி.
ReplyDeleteஅன்பின் குமரன்
ReplyDeleteபாட்டுக்கொரு புலவன் பாரதியைப் பற்றிய இடுகையா - படித்தேன் - ரசித்தேன் - மகி்ழ்ந்தேன்
ஆயுதம் செய்வோம் - காகிதம் செய்வோம் - ஆலைகள் வைப்போம் - கல்விச் சாலைகள் வைப்போம் - ஓயுதல் செய்யோம் - தலை சாயுதல் செய்யோம் - என்றெல்லாம் பாரதி எண்ணி எண்ணி எதிர் காலத்தை வடித்தான். அவன் நெஞ்சக் குமுறல் இப்பொழுது இல்லையே ! அதை உணராது உரிமை நாட்டில் உலவுகின்றோமே ! எதிர் கால இந்தியாவை எப்படி எல்லாம் வடித்தான் என்பதை எண்ணுகையில் நெஞ்சம் வெடிக்கின்றதே - ஏழ்மை பாரதிக்கு எப்படி முடிந்தது ...... !!! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
உண்மை தான் சீனா ஐயா.
ReplyDeleteகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் வரிகள்...
ReplyDelete