Friday, February 05, 2010

தமிழிற்கு இல்லாத ஒரு தகுதி (தூய தமிழில் பேசுவோம்! )

தமிழ் செம்மொழி ஆனதற்கு ஆளுக்கு ஆள் எதிரணிகள் உள்பட, பலரும் பாராட்டு விழா நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பார்ப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் இடையே ஒரே குழப்பம்.

இந்தத் தலைப்பிற்குள் நுழைந்து அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால், செம்மொழி ஆன தமிழ், பதினோரு தகுதிகளுள் ஒன்றைப் பெற்றிருக்கவில்லை. அப்படியிருந்தும் நம்மவர்கள் போராடிச் செம்மொழி ஆக்கிவிட்டார்கள்.

1. தனித்தன்மை, 2. தொன்மை, 3. பிறமொழிக் கலப்பின்மை (?!), 4. இலக்கிய வளம், 5. உயர்ந்த பண்பு நலன், 6. பண்பாடு (அ) நாகரிகம், 7. பொதுமைப் பண்பு, 8. நடு நிலைமை, 9. தாய்மைத் தன்மை, 10. உயர்ந்த சிந்தனை, 11. மொழிக் கோட்பாடு.

இவைதாம் செம்மொழியின் சிறப்பு இயல்புகள். இவற்றுள் மூன்றாவது தகுதி தமிழிற்கு இல்லை.

தமிழகத்தை ஆண்ட பல்லவர்கள் தமிழில் வடமொழி கலக்க இடம் தந்துவிட்டனர். சாதவாகனர்களின் மகிழ்ச்சிக்காக இதைச் செய்தார்கள் என்கிறார்கள். களப்பிரர் படையெடுப்பால் கன்னடம் கலந்தது. முகம்மதியர் படையெடுப்பால் உருது, அரபு கலந்தன.

இவர்களை ஆட்சியிலிருந்து அகற்றிய விஜயநகரப் பேரரசு தெலுங்கு மொழி அதிகம் கலந்துவிடக் காரணமாக இருந்தது. ஆங்கிலேயரின் ஆட்சியோ சொல்லவே வேண்டாம். ஆங்கில ஆதிக்கம் தமிழர்களைப் பேயாட்டம் போட வைக்கிறது.

இப்படியே போனால் தொலைக்காட்சிகளும் வானொலிகளும் தமிழிற்குக் கிடைத்த செம்மொழித் தகுதியை இன்னும் ஐந்து ஆண்டுகளில் அழித்துவிடும் என்று அஞ்சுகிறார் தமிழறிஞர் நன்னன்.

எத்தகைய சூழலிலும் தாய்மொழியில் பேசியே அதை வாழ வைக்கும் சௌராஷ்டிரர் போல் நாமும் மாறினால் என்ன?

- லேனா தமிழ்வாணன் (8 - 11 - 2004 குமுதம் இதழில்)

15 comments:

  1. இன்றைக்கு மற்றெரு பிரச்சனையும் உருவாகி உள்ளது
    முதன்மையானது செம்மொழியா ?
    தமிழ் இன மா ?
    இரண்டையும் பாகு படுத்தி பார்தால்


    சந்தம் கோர்த்து செம்மையானது தமிழ் செம்மொழி ..

    சத்தம் சேர்க்க பட்டு சந்தையானது தமிழ் இனம் //
    இதற்கு ஒரே வழி

    தமிழன் என்று தலை நிமிர்ந்து நில்லடா "
    தமிழ் மொழியை பார் எங்கும் பரப்படா ...
    .. ..சித்ரம்

    ReplyDelete
  2. சிந்தனைக்குப் படைத்தது.... அருமை!

    ReplyDelete
  3. >>
    எத்தகைய சூழலிலும் தாய்மொழியில் பேசியே அதை வாழ வைக்கும் சௌராஷ்டிரர் போல் நாமும் மாறினால் என்ன?<<
    :-)

    ReplyDelete
  4. தமிழை எல்லா வகை பிரிவை சார்ந்த சிவ வைணவ அடியார்கள்'

    ஆலயங்களில் சாற்று முறை ஏற்று உள்ள அர்ச்சகர்கள்'
    கொங்கு நாட்டில் தமிழை மிக


    நளினமாக பேசி அதிக சதவீதம்

    பெற்ற மக்கள் '
    வெளிநாடு வாழ் இந்தியர்கள் ''
    இப்படி நிறைய பிரிவுகள் என்கிற


    தமிழ்தூண்கள் '' அடிகல் நட்டு (((( தமிழ் மொழி மண்டபம் ))) உருவாகி உள்ளது ;
    ;இது யாராலும் மறுக்க முடியாது ;;;சித்ரம்.//

    ReplyDelete
  5. Hai Mr. Kumaran.

    i seen ur blog. its too good. i think ur one of the best devotion blogger.

    last time u explain kooratazhwan its very nice. this blog u telling about tamizh this is also nice. but koodal.blogspot means enna concept use panreenga . only aanmeega padivugalaa! any concept.

    i think you know very well aanmeegam detail. i suggest one thing. u take any one concept & explain it. ex: u take tiruvaasagam & explain. any body wants tiruvaasagam come to your koodal site. its only example.not only tiruvaasagam . u take any concept whichever u like . i just said my opinion .

    but ur koodal site is there lot of devotional information thank you very much

    ramanujarin adimai
    rajesh narayanan

    ReplyDelete
  6. yes kumaran முடிய முதலே என் கருத்து..முடியும் எண்ணம் முன்னின்றே ......கீதம்
    .





    ..
    ..
    . .
    .

    முடிய முதலே என் கருத்து. Yes kumaran .முடியும்
    எண்ணம் முன்னின்றே .
    . . ...கீதம் இனிய குயிலே ..
    பதிவு இட கூவு வாய் குமரனை
    வலைபூ க்கள் சென்று ஊதாய் கோதூம்பீ
    கூடலில் பாடி நாம் பூ வல்லி கொய்யாமோ ,,
    தெங்குலவு சோலையில் பொன்னூசல் ஆடாமோ ,,
    பொருந்தும் இப் பதிவை நினைத்து அற்புதம் அறியேனே திறமை காட்டியே சென்னி மன்னி திகழு மே
    ,யான் இதற்கிலேன் ஓர் கைம்மாறே ,,
    அதுவும் உன் தன் விருப்பன்றே ,
    , சித்ரம் ..

    ReplyDelete
  7. அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  8. Thanks for your kind words Mr. Rajesh Narayanan.

    Koodal blog is for everything.

    I started many blogs - more than 30 blogs when I started writing - keeping one for each title. It was becoming very difficult for both myself and the visitors of the blogs to keep track of all those blogs. So, I combined all those blogs into Koodal (you could see that happening in Koodal in 2008) and closed those topic specific blogs.

    There is a way to find the posts related to certain topic; 'vagaikaL' on the right side where the 'labels' are listed can be used to do that. Thiruvaasagam posts only can be listed that way.

    ReplyDelete
  9. வணக்கம் குமரன்,
    முதன்முறையாக கூடலில் வந்திருக்கிறேன்.
    வந்தவுடன் எதிர்மறையான கருத்து.
    ----------------------------------------------------------
    சில வருடங்களுக்கு முன் நானும் லேனா அவர்களின் கட்டுரையைப் படித்து பெருமிதம் அடைந்தேன். அதை மொழியியலாளர் திரு.
    குபேந்திரன் அவர்களிடம் காட்டினேன்.
    மறுமொழியாக அவர் "நாம் பேசிப் பேசியே மொழியை அழித்துக்
    கொண்டிருக்கிறோம்" என்றார்.
    "உதாரணமாக தட்டரேஸ், கத்தரேஸ், புரிஞ்சரேஸ்,
    கண்டுபுடுச்சரேஸ்... என்று தமிழை முழுவதுமாக கலக்கி
    பேசுகிறோம்.
    பெரும்பாலான ஊர்களில் சௌராஷ்ட்ரர்கள் தமிழையே தங்கள்
    இல்லங்களிலும் பேசுகிறார்கள்.
    மதுரையிலும் இப்பழக்கம் மெல்ல மெல்ல வந்து கொண்டிருக்கிறது" என்றார்.

    ஏற்கனவே உலகமயமாக்கலால் உள்ளூரில் உள்ளோரெல்லாம்
    வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் பரவி விட்டனர்.
    இந்நிலையில் மொழியை எவ்வாறு வாழ வைப்பது?
    ----------------------------------------------------------------------------
    இப்போது சொல்லுங்கள் - தமிழுடன் ஒப்பிடத்தக்கதா
    சௌராஷ்ட்ரம்.

    ReplyDelete
  10. சிவகுமார்,

    கட்டாயம் தமிழுடன் ஒப்பிடத்தக்கது தான் சௌராஷ்ட்ரம்! :-) ஏன்னு சொல்றேன் கேளுங்க. அதுக்கு முன்னாடி இதைச் சொல்லணும்.

    தெட்டரேஸ், கத்தரேஸ், சௌர்யம்யா போன்ற சொற்களை நானும் புழங்குகிறேன். இவை சௌராஷ்ட்ரம் என்று நம்பிக்கொண்டு. நீங்கள் சொன்ன பின்னர் தான் தட்டு, கத்து, சௌகரியமா? போன்ற தமிழ்ச்சொற்களைத் தான் இப்படிப் புழங்குகிறேன் என்று புரிகிறது. புரிஞ்சரேஸ், கண்டுபுடிச்சரேஸ் இன்னும் என் புழக்கத்தில் வரவில்லை; இவர்பெடரேஸ், தெக்கிதெரரேஸ் (இது நேரடி மொழிபெயர்ப்பு தான்) போன்றவற்றைத் தான் புழங்குகிறேன். ஆனால் பல சௌராஷ்ட்ரர்கள் முட்டை அவுண்டி, அம்பட் தயிர் என்றெல்லாம் சொல்வதையும் கேட்டிருக்கிறேன். திரு. குபேந்திரன் சொல்வது சரி தான்.

    தமிழைக் கலந்து பேசுவதும் முழுக்க முழுக்கத் தமிழே பேசுவதும் சௌராஷ்ட்ரம் அழிவதற்குத் தான் வழி வகுக்கும். அது உண்மை தான்.

    தமிழுக்கும் இதே நிலை தான். உங்கள் தமிழ்ப்பின்னூட்டத்தில் ஒரே ஒரு வடசொல் (உதாரணமாக) மட்டுமே தென்படுகிறது - அதனைக் கண்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் வேறு மொழி கலவாமல் தமிழை எழுதுவதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் சௌராஷ்ட்ரர் என்பதால் என்னைப் போல் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து எழுதுகிறீர்கள் போலும். தமிழர்கள் பெரும்பாலும் தமிங்கிலர் ஆகிவிட்டனர். அவர்கள் எழுத்தில் இதனைக் காண முடியவில்லை. வடசொல் என்றே தெரியாமல் வடசொல் புழங்குவதும், வெகு இயல்பாக ஆங்கிலச் சொற்களைக் கலந்து புழங்குவதும் தமிழர் இயல்பாகிவிட்டது. இப்போது ஒத்துக் கொள்கிறீர்களா சௌராஷ்ட்ரத்தைத் தமிழுடன் ஒப்பிடலாம் என்று! இரண்டுமே வாழும் வகை தெரியாமல் அந்த அந்த மொழி பேசும் மக்களிடம் முழித்துக் கொண்டு இருக்கிறது! :-) :-(

    இயலும் போது 'சொல் ஒரு சொல்' என்ற வகைப்பாட்டில் இருக்கும் கூடல் இடுகைகளைப் பாருங்கள். அதிலும் முதன்மையாக 'சொல் ஒரு சொல் ஏன்' என்ற தலைப்பில் இருக்கும் இடுகை!

    ReplyDelete
  11. எந்த ஒரு மொழியையும் கலப்பில்லாமல் பேசுவதே அம்மொழிக்கு நாம் தருகின்ற மரியாதை.. தமிழ் அந்த நிலையைக் கடந்து வந்து தலைமுறைகள் ஆகிவிட்டது...

    சிலம்புத் தொடரின் தொய்வு நீங்கி வாரம் ஒருமுறையேனும் பதிவிட இருக்கிறேன் ... உங்கள் ஆர்வம் கருதி இதைத் தெரிவிக்க எண்ணினேன் ..

    ReplyDelete
  12. நன்றி பாசமலர். கவனித்தேன் (ரீடரில்). விரைவில் படிக்கிறேன்.

    ReplyDelete
  13. இனி நாம் தூயம் தமிழிலேயே பேசலாம் என்று உறுதியெடுத்துக் கொள்வோமாக!!!

    நன்றி, வணக்கம்...

    ReplyDelete
  14. good post about a unknown fact

    ReplyDelete
  15. Aril please read other posts too not just the ones referred in valaiccharam :)

    ReplyDelete