நாடித் தொழுபவர் இன்னலைப் போக்கும்
நாதனே சாயி நாதனே (நாடி) - இந்த
மண்ணில் உதித்த நவநிதியே
மனதோடு உனை நினைவார் வினை
களைவாய் மறுகணமே
சொல்லத் தித்திக்கும் உன் நாமமே - அதை
சொன்னால் விலகுது என் பாவமே (மனதோடு)
நின்றதோர் இடமெல்லாம் நெஞ்சமோ - அன்பர்
நெஞ்சமோ மலர் மஞ்சமோ
உந்தன் அருளுக்கு உண்டோ பஞ்சமோ
என் போல் புரியாத கசடன் மேல்
பரிதாபம் இல்லையோ
பார்புகழ் சுந்தர சாய்ராம் - எங்கு
பார்த்தாலும் உன் ரூபம் சாய்ராம் (பார்புகழ்)
சாயிராம் ஹரே சாயிராம் ஹரே
சாயிராம் ஹரே சாயிராம்
ஆர்க்கும் அலைகடல் வாசமோ - எந்தன்
துயர் தெரிந்தும் பரிஹாசமோ
கண்பார்த்திட துயர் தீரும் - நீ
கண்பார்த்திட துயர் தீரும்
கைபட்டிட பிணி தீரும்
சொல்லுவேன் உருகி சொல்லுவேன் - உந்தன்
நாமம் சொல்லி பகை கொல்லுவேன் (சொல்லுவேன்)
சாயிராம் ஹரே சாயிராம் சங்கர
சாயிராம் ஹரே சாயிராம் சத்ய
சாயிராம் ஹரே சாயிராம் ...
ஆர்க்கும் அலைகடல் வாசமோ 'எந்தன் துயர் தெரிந்தும் பரிஹாசமோ
ReplyDeleteசொல்லுவேன் உருகி சொல்லுவேன் -உந்தன் நாமம் சொல்லி பகை வெல்வேன்
..........ஆ குமரன்
வரிக ள் உங்கள் உள்ளங்கையிலிருந்தா ??இல்லைமற்றவர் பாட்டில் விளைந்ததா ? தூள்
பாடல் யார் எழுதியது என்று தெரியாதுங்க. என் தம்பி அவனுடைய ஆர்குட்டில் இதனைச் சேமித்து வைத்திருந்தான். பார்த்தேன். கேட்டேன். பிடித்தது. இங்கே இட்டேன்.
ReplyDelete