Monday, December 01, 2008

உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி!

எத்தனை எத்தனை நாடகங்கள்! இறைவனிடமே! அத்தனை நாடகங்களையும் தொடர்ந்து நாம் நடத்த அவனும் நடித்துக் கொண்டிருக்கிறான். அருளாளர்கள் இருவர் சொல்வதைப் பாருங்கள்.


கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்தே போக்கி
தெள்ளியனாகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்
உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்து அறிதி என்று
வெள்கினேன் வெள்கலோடும் விலாவிறச் சிரித்திட்டேனே

- திருநாவுக்கரசர்.

நான் ஒரு பொய்யன். பொய்த் தொண்டு செய்வதாய் காலத்தைக் வீணே கழித்தேன். அது தீர்ந்து தெளிவுற்றவனாகி ஒரு நிலையுடன் தேடினேன்; நாடினேன்; கண்டேன். நினைப்பவர்களின் உள்ளிருந்து / உடன் இருந்து அவர்கள் நினைப்பதை எல்லாம் நீ அறிவாய் என்று வெட்கம் கொண்டேன்; வெட்கத்தோடு என் பொய் நடிப்புகளை எண்ணி விலா புடைக்கச் சிரித்தேன்


உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வு ஒன்றில்லா
கள்ளத்தேன் நானும் தொண்டாய் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே

- தொண்டரடிப்பொடியாழ்வார்.

உள்ளத்தே உறையும் திருமாலை நினைக்கும் நினைப்பு சிறிதும் இல்லாத பொய்யனான நான் தொண்டு செய்கிறேன் என்று பொய்க்கோலம் பூண்டேன். நினைப்பவர் நினைப்பவை எல்லாம் உடன் இருந்து நீ அறிவாய் என்று வெட்கட்ப்பட்டு என்னுள்ளே நான் விலா அறும் படி சிரித்திட்டேனே.

22 comments:

  1. எப்படிச் சொல்லிவச்சுட்டு போயிருக்காங்க... சூப்பர்.

    இப்போதைக்கு அப்போதே சொல்லிவச்சுட்டாங்க போல :)

    ReplyDelete
  2. உண்மை தான் மௌலி. :-)

    ReplyDelete
  3. இதை உங்கள் சைட் பாரில் (பக்கப் பட்டையில்) பார்த்த போதே, வரிக்கு வரிக்கு படித்து மனனம் செய்து கொண்டேன் குமரன்!

    அப்பர் சுவாமிகளும், தொண்டர் அடிப் பொடியும் பணிவோ பணிவானவர்கள்! அடியார்கள் பாத தூளியை தங்கள் மேல் இட்டுக் கொண்ட "நிஜமாலுமே" பணிவு உள்ளங்கள்!

    அவர்களே இப்படிச் சொல்கின்றார்கள் என்றால் நம் கதியெல்லாம்...ச்சேச்சே...என் கதி எல்லாம் என்னாவது? :(

    நாடகத்தால் "உன் அடியார் போல் நடித்து" நான் நடுவே
    வீடகத்தே புகுந்திடுவான்
    - என்ற திருவாசகத்தைத் தான் இது வரை சொல்லி வந்திருக்கேன் குமரன்!
    இனி இந்தப் பதிகங்களையும் சேர்த்துக் கொள்வேன்!

    கள்ளனேன் கேஆரெஸ்!
    கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்தே போக்கினேன் கேஆரெஸ்!
    கள்ளத்தேன் நானும் தொண்டாய் தொண்டுக்கே கோலம் பூண்டேன் கேஆரெஸ்!
    தெள்ளியன் என்று ஆகுவையோ?

    ReplyDelete
  4. குமரன்,
    அப்பர் சுவாமிகளும், தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் சம காலத்தவரா?
    இல்லை ஒருவர் பனுவல்களை இன்னொருவர் வாசித்து இருப்பார்களா?

    வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல் ஒற்றுமையைப் பாருங்க, இரண்டு பாடல்களுக்கும்!

    //உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்து அறிதி// - அப்பர்
    //உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று// - ஆழ்வார்

    //வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே// - ஆழ்வார்
    //வெள்கினேன் வெள்கலோடும் விலவறச் சிரித்திட்டேனே// - அப்பர்

    ReplyDelete
  5. குமரன், பாடல்கள் இரண்டும் அற்புதம்!! அறியத் தந்தமைக்கு நன்றி.

    //நினைப்பவர்களின் உள்ளிருந்து / உடன் இருந்து அவர்கள் நினைப்பதை எல்லாம் நீ அறிவாய் என்று வெட்கம் கொண்டேன்; வெட்கத்தோடு என் பொய் நடிப்புகளை எண்ணி விலா புடைக்கச் சிரித்தேன்// அப்படி என்றால், அந்த வெட்கமும் கொள்ளாதவர்களை என்ன சொல்வது!

    ReplyDelete
  6. //வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல் ஒற்றுமையைப் பாருங்க, இரண்டு பாடல்களுக்கும்!//
    கே ஆரெஸ், நான் கூட அதைத் தான் நினைத்தேன். குமரன் நேராகச் சொல்லாமல், காலவரிசைப்படி முதலில் திருநாவுக்கரசர் (7ம் நூற்றாண்டு?), அப்புறம் தொண்டரடிப்பொடியாழ்வார் (8ம் நூற்றாண்டு?)னு போட்டதுலியே தெரியலையா?

    :-)))))))))))))))

    ReplyDelete
  7. அடேயப்பா. எவ்வளவு ஒற்றுமை இரு பாடல்களுக்கும். எப்படிப்பா இப்படித் தேடித் தரீங்க? இதே நினைப்புதான் நேத்து விவேகானந்தர் பற்றிய ஒரு குறிப்பைப் படிக்கும்போது எனக்கு ஏற்பட்டது. தெள்ளிய உள்ளத்தை, உள்ளத்தில் பணிவைத் தருவாய் தேவி.

    ReplyDelete
  8. //கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    கே ஆரெஸ், நான் கூட அதைத் தான் நினைத்தேன். குமரன் நேராகச் சொல்லாமல், காலவரிசைப்படி முதலில் திருநாவுக்கரசர் (7ம் நூற்றாண்டு?), அப்புறம் தொண்டரடிப்பொடியாழ்வார் (8ம் நூற்றாண்டு?)னு போட்டதுலியே தெரியலையா?//

    ஹா ஹா ஹா
    இதெயெல்லாம் நுணுக்கிப் பாக்கத் தான் ஒரு அக்கா வேணும்ங்கிறது :)
    சரிக்கா, குமரன் தான் கால வரிசையில் போட்டாரு! நீங்க எதுக்கு கொஸ்டின் மார்க் போட்டீங்க 7,8 நூற்றாண்டு பின்னாடி? :)

    ReplyDelete
  9. உண்மை தான் இரவி. சுவாமி தேசிகன் தன்னை அபராத சக்ரவர்த்தி என்று கூறிக் கொள்வார் என்னும் போதும் இதே எண்ணம் தான் தோன்றியது. இவர்களே இப்படி சொன்னால் நான் எல்லாம் எந்த மூலைக்கு என்று தோன்றும்.

    இந்த இடுகையை இடும் போது திருநாவுக்கரச நாயனார் தொண்டரடிப்பொடியாழ்வாரை விட காலத்தால் மூத்தவர் என்ற தோற்றம் மனத்தில் இருந்ததால் அந்த வரிசையில் இட்டேன். பக்கப்பட்டையில் இட்ட போதும் இதே வரிசையில் தான் இட்டேன்.

    இப்போது நீங்கள் இவர்கள் காலத்தைப் பற்றி கேட்ட பின்னர் கூகிளாரைக் கேட்டால் சரியான தகவல்களை அவர் கொடுக்க மாட்டேன் என்கிறார். அதனால் இவர்கள் காலத்தைப் பற்றிய தெளிவு இல்லை. இது வரை நான் கேள்விபட்ட தகவல்களை வைத்துப் பார்த்தால் இருவரும் சமகாலத்தவர்களாகவோ அப்பர் சுவாமிகள் விப்ரநாராயணரை விட சற்றே காலத்தால் முந்தியவராகவோ இருக்கலாம்.

    அப்பர் சுவாமிகள் மிக வயது முதிர்ந்த நிலையில் சம்பந்தப் பெருமானைச் சந்தித்தார் என்ற தகவல் அறிவோம். சம்பந்தப் பெருமானும் திருமங்கையாழ்வாரும் சந்தித்திருக்கிறார்கள் என்ற தகவலும் அறிவோம். திருமங்கையாழ்வார் திருவரங்க மதில் திருப்பணியைச் செய்த போது மதிற்பாதையில் தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாளிகையையும் திருநந்தவனத்தையும் வந்த போது அவற்றைச் சுற்றி மதில் அமைத்தார் என்ற தகவலும் அறிவோம். தொண்டரடிப்பொடியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் சந்தித்ததாக அறியவில்லை; தொண்டரடிப்பொடியாழ்வாரின் காலம் திருமங்கையாழ்வாரின் காலத்திற்கு முன்பு என்றே அறிந்திருக்கிறோம். இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது அப்பரும் தொண்டரடிப்பொடிகளாரும் ஒத்த காலத்தவராக இருக்க வாய்ப்பு அதிகம்.

    வரிக்கு வரி ஒற்றுமை இருப்பது உண்மை தான். அதனால் தான் அவ்விரண்டு பாடல்களையும் இங்கே இட்டேன். ஒருவர் எழுதியதை மற்றொருவர் படித்திருக்கவும் வாய்ப்புண்டு. இல்லையேல் இவ்வரிகள் இருவரும் படித்த இன்னொரு நூலில் இருந்திருக்கவும் வாய்ப்புண்டு. முன்னோர் சொன்ன கருத்துகளை மட்டுமின்றி வரிகளையும் அப்படியே எடுத்து எழுதும் மரபு தமிழில் நெடுங்காலமாக உண்டு. அப்படி செய்வது முன்னோர் சொல்லுக்குத் தரும் மரியாதையாகக் கருதப்படுகிறது.

    ReplyDelete
  10. கேபி அக்கா. வெட்கம் கொள்ளாதவர்களை ஒன்றுமே சொல்ல முடியாது என்று தான் சொல்லாமல் விட்டார்கள் போலும். :-)

    நீங்கள் சொன்னது போல் திருநாவுக்கரசர் 7ம் நூற்றாண்டு என்றும் தொண்டரடிப்பொடியாழ்வார் 8ம் நூற்றாண்டு என்றும் தோன்றியதால் தான் அந்த வரிசையில் இட்டேன். கண்டுபிடித்ததற்கு நன்றி. இன்னும் வேறு சில குறிப்புகளும் இருக்கின்றன. இரவிசங்கர் கண்டுபிடிப்பாரோ என்று நினைத்தேன். கண்டுபிடித்திருப்பார் - ஆனால் சொல்லாமல் விட்டுவிட்டார் என்று நினைக்கிறேன். :-)

    ReplyDelete
  11. வந்ததே ஆசிகள் தந்தது போல் கீதாம்மா. நன்றி.

    ReplyDelete
  12. நான் தேடித் தரலை கவிநயா அக்கா. எழுத்தாளர் ஜெயமோகனுக்கு ஜடாயு ஐயா எழுதிய கடித்தத்தை ஜெயமோகனின் வலைப்பக்கத்தில் படித்தேன். ஜடாயு ஐயா தான் இவ்விரு பாடல்களையும் ஒரு சேரத் தந்திருந்தார். அவற்றை அப்போது குறித்து வைத்துக் கொண்டேன். இப்போது தான் இடுகையாக இடும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் எல்லா புகழும் ஜடாயு ஐயாவிற்கே. :)

    ReplyDelete
  13. //இன்னும் வேறு சில குறிப்புகளும் இருக்கின்றன// அக்குறிப்புகளை என்னைப் போன்ற சிறியோர் அறியத் தருமாறு பெரியோர் குமரன்/கேயாரெஸ் இருவருக்கும் விண்ணப்பிக்கிறேன்!

    அந்த கேள்விக்குறிகள் காலவரிசை, வார்த்தை ஒத்துவருவது இவற்றைப் பார்த்தால், வைணவ அடியார் ஏன் காப்பி அடித்தாரோன்னு..... ஹிஹி. இதுக்கு யாராவது தப்பா எடுத்துக்கக் கூடாது. அடியார், காப்பி அடியார்.

    ReplyDelete
  14. //கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    அக்குறிப்புகளை என்னைப் போன்ற சிறியோர் அறியத் தருமாறு பெரியோர் குமரன்/கேயாரெஸ் இருவருக்கும்//

    யக்கா...
    பெரியோர் குமரன் மட்டுமே!
    அவர் தான் அடியேன் சிறிய ஞானத்தன்.
    அடியேன் வெறும் சிறியேன்!

    ReplyDelete
  15. //இரவிசங்கர் கண்டுபிடிப்பாரோ என்று நினைத்தேன். கண்டுபிடித்திருப்பார் - ஆனால் சொல்லாமல் விட்டுவிட்டார் என்று நினைக்கிறேன். :-)//

    அடப்பாவமே!
    நானே சிவனே-ன்னு இருக்கேன்! என்னை வம்புக்கு இழுக்கறீங்களே குமரன்!
    சொல்லுடைத்து பல்லுடையணுமா?

    //வைணவ அடியார் ஏன் காப்பி அடித்தாரோன்னு..... ஹிஹி. இதுக்கு யாராவது தப்பா எடுத்துக்கக் கூடாது. அடியார், காப்பி அடியார்//

    ஹா ஹா ஹா
    அடியார் காப்பி அடியார்!
    சூப்பருக்கா!
    வைணவ அடியார் காப்பி தான் அடியார்! ஆனா பிட் அடிப்பார்! :)

    இரவிசங்கர் கண்டுபிடிப்பாரோ என்று நினைத்தேன். கண்டுபிடித்திருப்பார் - ஆனால் சொல்லாமல் விட்டுவிட்டார் என்று நினைக்கிறேன். :-)

    அதுவும் திருமங்கை! நீங்களே பாருங்க! அப்பர் சுவாமிகள், தொண்டரடிப்பொடி, அதே வரிசையில் திருமங்கை!

    கள்ளனேன் ஆனேன் படிறு செய்திருப்பேன்
    கண்டவா திரிதந்தேன் ஏலும்,
    தெள்ளியேன் ஆனேன் செல்க திக்கு அமைந்தேன்
    சிக்கெனத் திருவருள் பெற்றேன்,
    ....
    நள்ளிருள் உளவும் பகலும் நானழைப்பன்
    நாராயணா என்னும் நாமம்

    கள்ளனேன், தெள்ளியன்-ன்னு அதே மாதிரி சொற்களைத் திருமங்கையும் போடறாரு! :))

    ReplyDelete
  16. கெபி அக்கா. தானா தெரிஞ்சா சரி; நானா என்ன குறிப்புகள்ன்னு சொல்லப் போறதில்லை. :-)

    காப்பி அடிக்கிறது தமிழ் மரபுன்னு முந்தி ரொம்ப விளக்கமா ஒரு இடுகையே போட்டேனே. பாக்கலையா? இல்லைன்னா 'படித்ததில் பிடித்தது' வகையில பாருங்க; அந்த இடுகை கிடைக்கும்.

    ReplyDelete
  17. என்ன இரவி? இன்னொரு வெள்ளாடு தான் பிரியாணி ஆயிடுவோம்ன்னு மறைஞ்சு மறைஞ்சு படிக்குதுன்னா இந்த வெள்ளாடுமா பிரியாணிக்கு பயப்படுது? எத்தனை முறை பிரியாணி செஞ்சாலும் திரும்பித் திரும்பி இந்த வெள்ளாட்டுக்குத் தான் உயிர் வந்துருமே. :-)

    திருமங்கையாழ்வார் தான் அருணகிரிநாதருக்கு முன்னோடின்னு சொல்ற அளவுக்கு புலம்பியிருக்காரே. கள்வனேன் பாசுரம் கூட அந்த வகை தான். :-)

    ReplyDelete
  18. //தானா தெரிஞ்சா சரி; நானா என்ன குறிப்புகள்ன்னு சொல்லப் போறதில்லை. :-) //

    அவ்வ்வ்வ்வ்வ்வ். ஏன்?

    ReplyDelete
  19. //குமரன் (Kumaran) said...
    என்ன இரவி? இன்னொரு வெள்ளாடு தான் பிரியாணி ஆயிடுவோம்ன்னு மறைஞ்சு மறைஞ்சு படிக்குதுன்னா இந்த வெள்ளாடுமா பிரியாணிக்கு பயப்படுது?//

    ஹா ஹா ஹா
    என் நண்பன் வெள்ளாடு அல்ல! வெள் மனத்து வேலாடு! :)

    //எத்தனை முறை பிரியாணி செஞ்சாலும் திரும்பித் திரும்பி இந்த வெள்ளாட்டுக்குத் தான் உயிர் வந்துருமே. :-)//

    :)
    நாராயணா!

    //திருமங்கையாழ்வார் தான் அருணகிரிநாதருக்கு முன்னோடின்னு சொல்ற அளவுக்கு//

    ஹைய்யோ! நான் வரலை இந்த விளையாட்டுக்கு! :)
    அடியவர் முக உல்லாசம், ஆண்டவன் முக உல்லாசத்தைக் காட்டிலும் பெரிதல்லவா?

    ஆடு-ன்னு உணர்ந்த பின்னர் அடியேனும் மந்தையை விட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகிடலாமா-ன்னு யோசிச்சிங்! :)

    //கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    அவ்வ்வ்வ்வ்வ்வ். ஏன்?//

    அக்கா, எனக்கான கேள்வி-ன்னா, பதில்:
    சும்மா இரு, சொல் அற என்றலுமே
    அம்-மாபொருள் ஒன்றும் அறிந்திலனே! :)

    ReplyDelete
  20. குமரன்,
    பாடல்களுக்கும் விளக்கத்திற்கும் மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  21. நன்றி வெற்றி. எங்கே உங்களை வெகு நாட்களாகக் காணவில்லை?

    ReplyDelete