Sunday, November 23, 2008

நானே சிவன்! நானே சிவம்! சிவோஹம்! சிவோஹம்!



இது ஆதிசங்கர பகவத்பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் (விடுதலை ஆறு). இன்று பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் பிறந்த நாள். முன்பொரு முறை புட்டபர்த்தியில் அவர் திருமுன்பு பாடப்பட்ட இந்தப் பாடலை பல நாட்களாக விளக்கத்துடன் எழுத வேண்டும் என்று ஆவல். சுவாமியின் பிறந்த நாள் அன்று அந்த ஆவல் நிறைவேறுகிறது.

இந்தப் பாடலின் நடுவிலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு வருகிறது. அது சுவையான சுகமான மொழிபெயர்ப்பு. இருந்தாலும் சொல்லுக்குச் சொல் விளக்கம் இருந்தால் நல்லது என்று எண்ணி தமிழில் இங்கே மொழிபெயர்த்து இடுகிறேன்.

ஓம் ஓம் ஓம்

சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் .....

மனோ புத்யஹங்கார சித்தா நினாஹம்
ந ச ச்ரோத்ர ஜிஹ்வே ந ச க்ராண நேத்ரே
ந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயு:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


மனோ புத்தி அஹங்கார சித்தா நின அஹம் - நான் மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் எதுவுமில்லை.

ந ச ச்ரோத்ர ஜிஹ்வே - நான் காதுகளும் இல்லை; நாவும் இல்லை

ந ச க்ராண நேர்த்ரே - நான் நாக்கும் இல்லை; கண்களும் இல்லை

ந ச வ்யோம பூமி: - நான் வானமும் இல்லை; பூமியும் இல்லை

ந தேஜோ ந வாயு: - நான் ஒளியும் இல்லை; காற்றும் இல்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.



ந ச ப்ராண சங்க்யோ நவை பஞ்சவாயு:
ந வா சப்த தாதுர் நவா பஞ்சகோச:
ந வா பாணி பாதம் ந சோபஸ்தபாயு:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


ந ச ப்ராண சங்க்யோ ந வை பஞ்ச வாயு: - நான் மூச்சால் கட்டுப்பட்டவன் இல்லை; நான் ஐந்துவிதமான காற்றுகளும் இல்லை (ப்ராணன் - உள்ளிழுக்கும் மூச்சு; அபானன் - உடல் அழுக்குகளை வெளியேற்றும் காற்று; சமானன் - உண்டதைச் செரிக்கும் காற்று; உதானன் - உறுப்புகளை நடத்தும் காற்று; வ்யானன் - உடல் செய்கைகளை நடத்தும் காற்று)

ந வா சப்த தாதுர் ந வா பஞ்ச கோச: - நான் ஏழுவிதமான உடற்பொருட்களும் இல்லை (ரசம், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, விந்து/முட்டை); நான் ஐந்துவிதமான போர்வைகளும் இல்லை (அன்னமய கோசம் - உணவால் ஆன போர்வை; ப்ராண மய கோசம் - உயிர்காற்றுகளால் ஆன போர்வை; மனோ மய கோசம் - மனத்தால் ஆன போர்வை; விஞ்ஞான மய கோசம் - அனுபவங்களால் ஆன போர்வை; ஆனந்த மய கோசம் - இன்பத்தால் ஆன போர்வை)

ந வா பாணி பாதம் ந ச உபஸ்த பாயு: - நான் கைகால்களும் இல்லை; நான் மற்ற உறுப்புகளும் இல்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

ந மே த்வேஷ ராகௌ ந மே லோப மோஹௌ
மதோ நைவ மேநைவ மாத்ஸர்ய பாவ:
ந தர்மோ ந ச அர்த்தோ ந காமோ ந மோக்ஷ:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


ந மே த்வேஷ ராகௌ - எனக்கு வெறுப்பும் விருப்பும் இல்லை

ந மே லோப மோஹௌ - எனக்கு பற்றுதலும் மயங்குதலும் இல்லை

மதோ ந ஏவ மே ந ஏவ மாத்ஸர்ய பாவ: - எனக்கு கருவமும் இல்லை; பொறாமையும் இல்லை

ந தர்ம: - நான் அறமும் இல்லை

ந ச அர்த்த: - நான் பொருளும் இல்லை

ந காம: - நான் இன்பமும் இல்லை

ந மோக்ஷ: - நான் வீட்டுப்பேறும் இல்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

ந புண்யம் ந பாபம் ந சௌக்யம் ந துக்கம்
ந மந்த்ரோ ந தீர்த்தம் ந வேதா ந யக்ஞ:
அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


ந புண்யம் ந பாபம் - நான் புண்ணியமும் இல்லை பாவமும் இல்லை

ந சௌக்யம் ந துக்கம் - நான் இன்பமும் இல்லை துன்பமும் இல்லை

ந மந்த்ரோ ந தீர்த்தம் - நான் மந்திரமும் இல்லை புண்ணிய தீர்த்தமும் இல்லை

ந வேதா ந யக்ஞ: - நான் வேதமும் இல்லை யாகங்களும் இல்லை

அஹம் போஜனம் ந ஏவ போஜ்யம் ந போக்தா - நான் உணவும் இல்லை உண்ணும் காரியமும் இல்லை உண்டு அனுபவிப்பவனும் இல்லை (நான் புலனுக்குட்படும் பொருட்களும் இல்லை; புலன்களின் வழி அனுபவிக்கும் செயல்களும் இல்லை; புலன்களின் வழி அனுபவிப்பவனும் இல்லை)

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

ந ம்ருத்யுர் ந சங்கா ந மே சாதிபேத:
பிதா நைவ மே நைவ மாதா ச ஜன்மா
ந பந்துர் ந மித்ரம் குருர் நைவ சிஷ்யா:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


ந ம்ருத்யுர் ந சங்கா - எனக்கு மரணம் இல்லை; எனக்கு பற்றுதல் இல்லை

ந மே சாதி பேத: - எனக்கு சாதி பேதங்கள் இல்லை

பிதா ந ஏவ மே ந ஏவ மாதா ச ஜன்மா - எனக்கு தாய் தந்தையர் இல்லை; எனக்கு பிறப்பும் இல்லை

ந பந்துர் ந மித்ரம் - எனக்கு உறவுகள் இல்லை; நட்புகள் இல்லை

குருர் ந ஏவ சிஷ்யா - நான் குருவும் இல்லை சிஷ்யனும் இல்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

அஹம் நிர்விகல்போ நிராகாரரூபோ
விபுத்வாச்ஸ சர்வத்ர சர்வேந்த்ரியானாம்
ந ச சங்கடம் நைவ முக்திர் ந மே யா
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


அஹம் நிர்விகல்ப - நான் மாற்றம் இல்லாதவன்

நிராகாரரூப: - உருவம் இல்லாதவன்

விபுத்வா ச - எங்கும் நிறைந்தவன்

சர்வத்ர - எல்லாம் ஆனவன்

சர்வேந்த்ரியானாம் - எல்லா உடல்களிலும் வசிப்பவன்

ந ச சங்கடம் - எனக்கு கட்டுப்பாடுகள் இல்லை

ந ஏவ முக்தி: ந மே யா - அதனால் எப்போதும் எனக்கு விடுதலை என்பதும் தேவையில்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

25 comments:

  1. 2 தினங்கள் முன் நானும் இதை எழுத நினைத்தேன்...வேறு எதையோ படிக்கையில் இதை எழுதத் தோன்றியது :)

    அழகாக வந்திருக்கிறது....மீண்டும் படித்துவிட்டு வருகிறேன். :)

    ReplyDelete
  2. ஸ்தோத்ர மாலாவிலோ ஆசார்ய ஹ்ருதயத்திலோ எழுதுங்கள் மௌலி.

    ReplyDelete
  3. ரொம்ப நல்லாருக்கு. வழக்கம்போல எளிமையான விளக்கம். கூடவே பஞ்ச வாயு, பஞ்ச கோசம், இதைப் போன்றவற்றுக்கும் விளக்கம் தந்ததுக்கும் நன்றி. திரும்பத் திரும்பப் படிக்கணும்.

    ReplyDelete
  4. தமிழில் தந்தமைக்கு நன்றிகள் குமரன்!
    தொடர்புடைய இன்னொன்று:
    மனிஷ் வியாஸ் என்பவரின் அசைபடம்:
    http://www.youtube.com/watch?v=wYaK2BGGoIw
    (Inspired by Sivoham)

    ReplyDelete
  5. ஒவ்வொரு "சிவோஹம்" போதும் மனசு சுண்டி இழுக்கப் படுகிறது.
    மிக்க நன்றியுடன்..

    ReplyDelete
  6. Dear Kumaran, My son, an athesist, started listening to this after his mother told him the meaning

    ReplyDelete
  7. ஸ்ரீ சத்ய சாயி பாபாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :)

    தமிழாக்கம் அழகா வந்திருக்கு குமரன்!

    //சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்//
    //அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்//

    அது என்ன சிவோஹம் என்பதை ஒரு முறை சிவம் நான் என்றும், அடுத்த முறை சிவன் நான் என்றும் சொல்லி உள்ளீர்கள்? :)

    ReplyDelete
  8. நிர்வாண ஷடகம் பற்றிய பல குறிப்புகள், ஸ்ரீ பாஷ்யத்தில் அபேத ஸ்ருதி முன்னுரையில் வரும்!

    நேதி நேதி - அதுவும் இல்லை! இதுவும் இல்லை!
    இந்த அபேத ஸ்ருதியை மையமாகக் கொண்ட அருமையான நூல் இது! சந்தவோசை துள்ளும்! ஆதி சங்கரர் வடமொழி ஓசைமுனி அல்லவா! :)

    இதைப் பலகாலம் வாசித்து மகிழ்ந்து இருக்கிறேன்! இன்று சொல் ஒரு சொல் பொருளாகப் படிப்பதும் இன்பம் தான்! நன்றி குமரன்!

    நன்றியை வெறுமனே பின்னூட்டமாகச் சொல்லாமல்...உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை அனுப்பி இருக்கேன்! மின்னஞ்சல் பெட்டியைத் திறந்து பார்க்கவும்! :)

    ReplyDelete
  9. நன்றி கவிநயா அக்கா. மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும்.

    ReplyDelete
  10. நன்றி ஜீவா. மனிஷ் வியாஸின் பாடலையும் பார்த்தேன்/கேட்டேன். நன்றி.

    ReplyDelete
  11. உண்மை தான் ஜீவி ஐயா. பாடலும் அப்படிப்பட்டது. பாடியவரும் மிக நன்றாகப் பாடியிருக்கிறார். இவர் சிவோஹம் என்ற ஒன்றையே அதிகாலை, மத்தியானம், மாலை மூன்று நேரங்களில் பாடும் படி முவ்வேறு இராகங்களில் பாடியிருக்கிறார். வேண்டுமென்றால் சுட்டியைத் தருகிறேன்.

    ReplyDelete
  12. சிவா அண்ணா. ரொம்ப மகிழ்ச்சி. நல்லதொரு பயிற்சியைத் தரும் பாடல் இது.

    ReplyDelete
  13. சிவம் என்று ஒரு முறையும் சிவன் என்று ஒரு முறையும் வந்தது எழுத்துப்பிழை என்று சொன்னால் யார் நம்பப் போகிறார்கள் இரவிசங்கர்?! :-)

    மின்னஞ்சலைப் பார்த்தேன் இரவி. விரைவில் அந்த இன்ப அதிர்ச்சியை பலருக்கும் தர வழி செய்யுங்கள்.

    ReplyDelete
  14. இரவு பதினொன்றரை போல எழுதத் தொடங்கி மடமடவென்று புரிந்த வரை பொருள் சொல்லியிருக்கிறேன். ஏதேனும் சொற்குற்றமோ பொருட்குற்றமோ விளக்கக் குற்றமோ இருந்தால் தயங்காமல் சொல்லுங்கள். மாற்றுகிறேன்.

    ReplyDelete
  15. அப்படியா?.. நிரம்ப மகிழ்ச்சி.
    தாருங்கள், குமரன்!
    நாங்களும் பாடிப் பார்க்கிறோம்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  16. "சிவம் நான்; சிவன் நான்" என்று குறிப்பிட்டிருப்பது அப்படியே இருக்கட்டும். அதிலும் ஓர் அழகும்,
    பொருளும் மனசுக்குப் புரிகிறது.

    ReplyDelete
  17. http://www.saibhajans.net/DisplaySongs.asp?CatID=19

    ஜீவி ஐயா. இந்தப் பக்கத்திற்குச் சென்று பாருங்கள். அந்தப் பாடல்களைத் தரவிறக்கிக் கொள்ளலாம். ஒரு புதிய கணக்கைத் தொடங்க வேண்டியிருக்கலாம்.

    ReplyDelete
  18. உண்மை தான் ஜீவி ஐயா. அது எழுத்துப்பிழை இல்லை. அப்படியே இருக்க வேண்டும் தான்.

    ReplyDelete
  19. இந்தாங்க குமரன்! உங்களுக்கான இன்ப அதிர்ச்சிப் பரிசு! :)

    http://madhavipanthal.blogspot.com/2008/11/blog-post_24.html

    ReplyDelete
  20. நன்றி இரவிசங்கர்.

    ReplyDelete
  21. பொருத்தமான தினத்தில் பொருத்தமான பதிவு இட்டுள்ளீர்கள். மிக்க நன்றி.

    ReplyDelete
  22. நன்றி கபீரன்பரே.

    ReplyDelete
  23. Similar meaning sloka Bhavanyashtakam.

    http://hindudailyprayers.blogspot.com/2008/01/bhavanyashtakam.html

    Please translate and publish in Tamil.

    http://www.esnips.com/web/SanskritDevotional

    ReplyDelete
  24. நன்றி சூப்பர்சுப்ரா. வருங்காலத்தில் மொழிபெயர்த்து இடுகிறேன்.

    ReplyDelete