பதிவுலகில் எனக்கிருக்கும் மிகச்சில அருமை நண்பர்களில் இவரும் ஒருவர். ஆனால் அண்மைக்காலமாக என் பதிவுகளுக்கு அவர் வருவதில்லை. எப்போது கேட்டாலும் வேலை மிகுதி என்று காரணம் சொல்கிறார். ஆனால் வேறு இடங்களில் பின்னூட்ட கும்மியும் மின்னரட்டையும் அடித்துக் கொண்டிருக்கிறார். என் மேல் கடுஞ்சினம் இருந்தால் ஒழிய அவர் இப்படியெல்லாம் நடந்து கொள்ள மாட்டார் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை. அதனால் அவருடைய கடுஞ்சினம் தீர்ந்து என் பதிவுகளுக்கு வந்து அவருடைய பொன்னான கருத்துகளைச் சொல்ல வேண்டும் என்று எல்லாம் வல்ல பெருமாளை (விஷ்ணுவைன்னு விதப்பா சொல்லுன்னு அவர் சொல்லுவார் - ஆனாலும் வழக்கமா சொல்ற மாதிரி பெருமாளைன்னே சொல்லிட்டேன்) அழகனை தேசனை வணங்கிக் கொள்கிறேன். :-)
சௌராஷ்ட்ரத்தில் ராக் என்றால் சினம்; அவி என்றால் வந்து. என்னருமை நண்பரின் பெயரில் இரண்டுமே சேர்ந்து இருப்பதால் அவரை அப்பெயர் கொண்டு நான் அழைப்பதால் பெயரின் பொருளுக்கேற்ப சினம் வந்து இங்கே எட்டிப்பார்ப்பதில்லை போலும். :-)
அவரது சினம் தீர என்ன வழி என்று சிந்தித்ததில் அவர் எப்போதோ கேட்ட கேள்விகளுக்கு இன்னும் விடை சொல்லவில்லை என்று நினைவிற்கு வந்தது. சரி அவர் கேட்ட கேள்விகளுக்கு விடை சொன்னாலாவது வந்து பார்க்கிறாரா பார்ப்போம் என்று எழுதுகிறேன்.
அவர் கேட்ட கேள்விகளும் அதற்குரிய பதில்களும்:
குமரனிடம் கேள்விகளா? என்ன கேக்குறது? (என்ன கேக்குறதுன்னு என்னையே கேட்டா எப்படிங்க? அதான் டக்கு டக்குன்னு கேள்விகளா கொட்டியிருக்கே). :-)
1. உங்கள் கருத்துப்படி கோழிக்கறியில் எந்தப் பகுதி மிகவும் சுவையானது?
தொடைப்பகுதி. என் மக்களுக்கு கோழிக்கால் பிடிக்கும். :-)
2. ஆட்டாத கறியை ஏன் ஆட்டுக்கறி என்கிறார்கள்?
எனக்கு ஆட்டாத கறியை விட நுண்மையா அடிச்ச கறி பிடிக்கும். கைம்மான்னும் கொத்துக்கறின்னும் சொல்லுவாங்க. கொத்துக்கறி பாக்குறதுக்கு ஆட்டுன கறி மாதிரி இருக்குறதால ஆட்டுக்கறிங்கறாங்களோ என்னமோ? :-)
3. அமெரிக்கா இந்தியா தவிர்த்த ஏதாவது ஒரு நாட்டில்தான் இனிமேல் வாழவேண்டும் என்ற நிலை வந்தால் எந்த நாட்டிற்குச் செல்ல விரும்புவீர்கள்?
சிங்கப்பூர். அப்படித் தான் சொல்லணும்ன்னு மேலிடத்துக் கட்டளை. :-)
மேலிடம் யாருன்னா கேக்குறீங்க? அதெல்லாம் சொல்லிக்கிட்டேவா இருப்பாங்க? ;-)
4. தங்கள் வாழ்க்கையைத் தீர்மானித்துக்கொள்ளும் உரிமை உங்கள் குழந்தைகளுக்குக்குக் கொடுக்கப்படுமா?
கட்டாயமா. இதுக்கு மேல ஏதாவது சொல்லி மாட்டிக்குவேனா என்ன? :-)
5. சின்னவீடு வைத்துக் கொள்வதைக் குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?
குமரன்னு பேரு இருக்குறதால தானே இதைக் கேக்குறீங்க. உங்க பெயரை வச்சு உங்ககிட்ட அதைக் கேக்க முடியாதுன்னு ரொம்பவே துணிச்சல் தான். :-)
வீட்டில் நாங்கள் இப்போதெல்லாம் அடிக்கடி பேசுவது இது. இப்போதிருக்கிற நிலைமையில் ஒரு சின்ன வீடும் வைத்துக்கொண்டால் வசதியாக இருக்கும் என்று. என் பொண்ணு தான் 'அப்ப இந்த பெரியவீட்டை வாடகைக்கு விட்டுட்டு நாம சின்னவீட்டுக்குப் போயிருவோமா அப்பா?'ன்னு கவலைப்படறா. :-)
தொலைக்காட்சியில என்னமோ பாட்டு வருதே. என்ன நீங்களும் பாக்கணுமா? இதோ பாருங்க.
சினமா? எனக்கா? என்ன கொடுமை குமரன் இது! இப்பொழுதெல்லாம் பதிவுகள் பக்கமே வருவதில்லையே. ஆகையால்தான் உங்கள் பதிவுகளையும்.....ஹி ஹி மன்னித்துவிடுங்கள். :)
ReplyDelete// குமரனிடம் கேள்விகளா? என்ன கேக்குறது? (என்ன கேக்குறதுன்னு என்னையே கேட்டா எப்படிங்க? அதான் டக்கு டக்குன்னு கேள்விகளா கொட்டியிருக்கே). :-) //
ReplyDeleteஹா ஹா ஹா ஆமாமா கேள்விகள் கொட்டியிருக்குல்ல.... கேள்விகள் கொட்டியிருந்தா நல்லதுதான். குளவிகள்தான் கொட்டியிருக்கக் கூடாது. :D
// 1. உங்கள் கருத்துப்படி கோழிக்கறியில் எந்தப் பகுதி மிகவும் சுவையானது?
ReplyDeleteதொடைப்பகுதி. என் மக்களுக்கு கோழிக்கால் பிடிக்கும். :-) //
ஆகா ஆகா அப்படிப் போடுங்க... எங்கூர்ப்பக்கம் சப்பைன்னு சொல்வாங்க. எங்க தாத்தா பாட்டி இருந்தப்ப கோழிக் கொழம்பு வெச்சிக் குடுப்பாங்க எங்க பாட்டி. அதுல சப்பையை எனக்குன்னு எடுத்துக் குடுப்பாங்க :)
சிவக்கொழுந்துக்கும் கோழிக்கால்னா பிரியமா...நல்லது. நல்லது.
ஆனா என்னையக் கேட்டா.. கோழிக்கழுத்துதான் ரொம்ப ருசி. :D
அசைவமான கேள்வி பதிலாப் போச்சே!!
ReplyDeleteஇல்லையே கொத்ஸ். மூனாவதும் நான்காவதும் அசைவக் கேள்வி பதில் இல்லையே.
ReplyDelete//ராக் என்றால் சினம்; அவி என்றால் வந்து//
ReplyDeleteஅலோ...என்ன குமரன் இது? எங்க ராகவனை, ராக்+அவி ஆக்கிட்டீங்க!
ஓ நோ! :))))
//சின்னவீடு வைத்துக் கொள்வதைக் குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?//
ReplyDelete//உங்க பெயரை வச்சு உங்ககிட்ட அதைக் கேக்க முடியாதுன்னு ரொம்பவே துணிச்சல் தான். :-)//
அதெல்லாம் அடுத்த அவ"தார"த்துல, பாத்துப்பாரு! :)
சின்ன வீடுகள் சேவடி போற்றி
எனை எடுத்தாளும் என்றென துள்ளம்
மேவிய வடிவோள் பாவனா போற்றி!
இடுப்பா யுதளே இலியானா போற்றி!
ன்னு கவசமே பாடுவாரு எங்க நண்பரு! :))
//ஆட்டாத கறியை ஏன் ஆட்டுக்கறி என்கிறார்கள்?//
ReplyDeleteஎலே! ராகவனா இப்பிடி கேள்விய கேக்குறது?
சுட்ட கறியா? சுடாத கறியா-ன்னுல்ல கேக்கோணம்? :)
அது ஆட்டு கறியோ, ஆட்டாத கறியோ,
அந்த எலும்புத் துண்டைத் தரையில் தட்டி, மஜ்ஜையை உறிஞ்சும் சுகம் இருக்கே...சரியா வரலீன்னா வீட்டுல ஆயா, அம்மா தட்டிக் கொடுப்பாங்க!
உஷ்ஷ்ஷ்ஷ்...
அந்த நாள் ஞாபகம்! ச்சே நான் ஏன் சைவன் ஆனேன்? :(((
//நுண்மையா அடிச்ச கறி பிடிக்கும். கைம்மான்னும் கொத்துக்கறின்னும் சொல்லுவாங்க//
இங்கிட்டு அஞ்சப்பர்-ல வெஜிட்டபள் கொத்துக்கறி இப்போ இஷ்டார்ட் பண்ணியிருக்காங்க குமரன்! :)
ஹூஸ் அப்பா இஸ் நாட் இன் த பேரல்?ன்னு யாரும் கேக்கமாட்டோம்:-)
ReplyDeleteஎங்க பதிவுக்கெல்லாம் கூட அவர் வந்து நாளாச்சு. நாங்கெல்லாம்.... அவருக்கு ஆணி நிறையன்னு நம்பும் அப்பாவிக்கூட்டம்!
என்னப்பா கே ஆர் எஸ்,
பாயா எடுக்க ஆயா எதுக்கு?
மஜ்ஜைக்குன்னு ஒரு கருவி வந்துருக்கே.
அது தெரியாதா?
அதுவும் எவர்சில்வர்லே:-))))
ச்சீச்சீ. இந்த கறி கசக்குது. ஜிராவுக்கு மட்டும் வணக்கம், வருகன்னு சொல்லிக்கிறேன் :)
ReplyDeleteசிங்கைக்கு வர ஆசையா? மேலிடத்துக்கு
ReplyDeleteவாங்க வாங்க..
வருகைப் பதிவு!!!!
ReplyDeleteஉங்க மேலிடம் சொல்வது போல சிங்கப்பூர்-ல செட்டிலாவது பற்றி பல அ.வாழ் நண்பர்கள் சொல்ல கேட்டிருக்கேன்...இந்தியாவுக்கு கிட்டத்துல, அதே சமயம் அழகிய நாடு அப்படின்னுவாங்க..
ReplyDeleteமற்றவை இராக் இல்லா ராகவனுக்கு :)
கறி பதிவு கரிகுருவிய ஞாபகபடுத்திருச்சி! :-)
ReplyDelete//3. அமெரிக்கா இந்தியா தவிர்த்த ஏதாவது ஒரு நாட்டில்தான் இனிமேல் வாழவேண்டும் என்ற நிலை வந்தால் எந்த நாட்டிற்குச் செல்ல விரும்புவீர்கள்?
சிங்கப்பூர். //
ஆனால் உங்களுக்கு அதைவிட அருகில் இருக்கும் நாடு தான் பிடிக்கும் என்கிறார் உங்கள் நட்பு வட்டம்! (மாவட்டம் கிடையாது).
//அப்படித் தான் சொல்லணும்ன்னு மேலிடத்துக் கட்டளை. :-) //
ஓ மேலிடத்து உத்தரவா! :-).
கே.ஆர்.எஸ்.,
ReplyDelete//அலோ...என்ன குமரன் இது? எங்க ராகவனை, ராக்+அவி ஆக்கிட்டீங்க!//
அவி என்பது வந்து என்று பொருள்
அவன் என்றால் வருவார் என்று பொருள்.
இப்போ நீங்களே புரிஞ்சிக்கோங்க. :-)
அசைவ கேள்வி நல்ல இருந்துச்சு! சின்ன வீடு போற்றி எழுதிய பதிவுலக ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்!
ReplyDeleteஅதெப்படி இராகவன் உங்களைக் கூப்புட்டவுடனே வந்துட்டீங்க? கூவி அழைத்தால் குரல் கொடுப்பவன் குமரன் மட்டுமில்லை இராகவனும்ன்னு காட்டுறீங்களா? :-)
ReplyDeleteபதிவுகள் பக்கமே வர்றதில்லைன்னு பொய் சொல்லக்கூடாது இராகவன். நீங்கள் வேறு இடங்களில் இடும் ஒவ்வொரு பின்னூட்டமும் எனக்கு வந்து கொண்டிருக்கின்றன. அதை உணர்ந்து தான் நீங்கள் மன்னிக்கச் சொன்னீர்கள் போலும். மன்னித்துவிட்டேன். :-)
ReplyDelete//கேள்விகள் கொட்டியிருந்தா நல்லதுதான். குளவிகள்தான் கொட்டியிருக்கக் கூடாது. //
ReplyDeleteஅது சரி. என் கிட்ட இதுவரைக்கும் குளவியா கொட்டுனது இல்லை. மத்த இடங்கள்ல கொட்டுனதா பேசிக்கிறாங்க. என் கிட்ட கொட்ட மாட்டீங்கள்ல? :-)
// குமரன் (Kumaran) said...
ReplyDeleteஅதெப்படி இராகவன் உங்களைக் கூப்புட்டவுடனே வந்துட்டீங்க? கூவி அழைத்தால் குரல் கொடுப்பவன் குமரன் மட்டுமில்லை இராகவனும்ன்னு காட்டுறீங்களா? :-) //
ஏன் இராகவன்னு சொல்றீங்க? இராகவனோட அடையாளமே முருகனடியவங்குறதுதான். ஆகக் குரல் கொடுத்தவன்..கொடுப்பவன்..கொடுக்கப் போவனும் முருகனடியவனே. :)
// குமரன் (Kumaran) said...
ReplyDelete//கேள்விகள் கொட்டியிருந்தா நல்லதுதான். குளவிகள்தான் கொட்டியிருக்கக் கூடாது. //
அது சரி. என் கிட்ட இதுவரைக்கும் குளவியா கொட்டுனது இல்லை. மத்த இடங்கள்ல கொட்டுனதா பேசிக்கிறாங்க. என் கிட்ட கொட்ட மாட்டீங்கள்ல? :-) //
ஹா ஹா ஹா
கொட்டுதல் யார்க்க்கும் எளியவாம் அரியவாம்
கொட்டிய வண்ணம் பெறல்
இது எனக்குத் தெரியாதா? ;)
அது சரி...நான் வேற எடத்துல கொட்டுனத்துக்கு கொட்டிய வண்ணம் பெறல் செய்வது நீங்களா இருக்க மாட்டீங்கதானே ;)
//சிவக்கொழுந்துக்கும் கோழிக்கால்னா பிரியமா...//
ReplyDeleteஎன் மக்களுக்கு கோழிக்கால் பிடிக்கும்ன்னு சொன்னேன். மகளுக்கு மட்டும் என்று நினைத்துவிட்டீர்களா? :-)
நம்ம ஊருல இருக்கிற வரைக்கும் கோழிக்கறி வாங்குறப்ப எல்லா பகுதியும் வரும்ங்கறதால கோழிக்கழுத்தும் தின்னிருக்கேன். இங்கே முழுக்கோழியும் வாங்குறதில்லை. பகுதி பகுதியா விக்குறாங்க. அதனால தொடைக்கறியோ காலோ தான் வாங்குறோம். கோழிக்கழுத்துச் சுவை மறந்து போச்சு. :-)
சரி. இப்ப 'மால் ஆஃப் அமெரிக்கா' போறோம். போயிட்டு வந்து மிச்ச பின்னூட்டத்தைப் படிக்கிறேன். :-)
ReplyDeleteஇரவி. நான் வந்து விளக்கம் சொல்றதுக்குள்ள சிவமுருகன் சொல்லிட்டார். ராக் + அவன் என்றாலும் ஏறக்குறைய அதே பொருள் தான். :-)
ReplyDeleteஅஞ்சப்பர்ல எதுக்கு சைவக் கொத்துக்கறியெல்லாம் கிடைக்குது இரவிசங்கர்? புரியலையே. சரவண பவன்ல அப்படி வருதுன்னா அதுல பொருள் இருக்கு. :-)
வரவேற்புக்கு நன்றி வடுவூர் குமார். சும்மா வந்து போகும் வாய்ப்பாவது என்றைக்குக் கிடைக்கப் போகிறதோ? :-)
ReplyDeleteபரவாயில்லையே கீதாம்மா. வருகைப் பதிவெல்லாம் கூட போடத்தொடங்கிட்டீங்களே? வந்து சத்தமில்லாம படிச்சுட்டு போறீங்கன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். :-)
ReplyDeleteஆமாம் மௌலி. நீங்க சொல்றது சரி தான். மேலிடத்துக்கு அங்கே போய் நிரந்தரமா இருக்குறதை விட சுற்றுலாவா போயிட்டு வரணும்ன்னு தான் ரொம்ப நாளா ஆசை. :-)
ReplyDeleteஇரவிக்கு விளக்கம் சொன்னதுக்கு நன்றி சிவமுருகன். திருவிளையாடல் புராணத்தைத் தொடர்ந்து எழுதிவருவதற்கு நன்றிகள்.
ReplyDeleteநண்பர்களே. சிவமுருகன் எழுதிவரும் தொடர் கதையைப் படிக்க அவரது பதிவிற்குச் செல்லுங்கள்.
நல்லாவே குரல் கொடுக்குறீங்க இராகவன். :-)
ReplyDeleteஅதான் குறள் தெளிவா சொல்லிட்டீங்களே. நான் தப்பித் தவறி கொட்டினாலும் கண்டுக்காதீங்க. :-)
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//ஆட்டாத கறியை ஏன் ஆட்டுக்கறி என்கிறார்கள்?//
எலே! ராகவனா இப்பிடி கேள்விய கேக்குறது?
சுட்ட கறியா? சுடாத கறியா-ன்னுல்ல கேக்கோணம்? :) //
ஹா ஹா ஹா நமக்கெல்லாம் சுட்டாத்தான் கறி. இங்க டச்சுக்காரங்க சுடாத கறியையும் பதம் பாக்குறாங்க. ஆனாலும் நமக்குச் சுட்ட கறியே போதும். :)
// அது ஆட்டு கறியோ, ஆட்டாத கறியோ,
அந்த எலும்புத் துண்டைத் தரையில் தட்டி, மஜ்ஜையை உறிஞ்சும் சுகம் இருக்கே...சரியா வரலீன்னா வீட்டுல ஆயா, அம்மா தட்டிக் கொடுப்பாங்க!
உஷ்ஷ்ஷ்ஷ்...
அந்த நாள் ஞாபகம்! ச்சே நான் ஏன் சைவன் ஆனேன்? :((( //
போற்றுவார் போற்றலும்
தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் ராகவனுக்கே
ஸ்பூன் ஃபோர்க் எழுக :)
// //நுண்மையா அடிச்ச கறி பிடிக்கும். கைம்மான்னும் கொத்துக்கறின்னும் சொல்லுவாங்க//
இங்கிட்டு அஞ்சப்பர்-ல வெஜிட்டபள் கொத்துக்கறி இப்போ இஷ்டார்ட் பண்ணியிருக்காங்க குமரன்! :) //
வெஜிடபிள்-ல ஏது கொத்துக்கறி? கொத்துக்காய்னு வேணும்னா சொல்லுங்க. :) கொத்துக்கறியும் சுவைக்கும் நாளும் வரலாம்...யார் கண்டார்! அவனே கண்டான்.
// துளசி கோபால் said...
ReplyDeleteஹூஸ் அப்பா இஸ் நாட் இன் த பேரல்?ன்னு யாரும் கேக்கமாட்டோம்:-) //
ஹா ஹா ஹா ஆயிரம் பதிவர்கள் வந்தாலும் டீச்சர் டீச்சர்தான்.
// எங்க பதிவுக்கெல்லாம் கூட அவர் வந்து நாளாச்சு. நாங்கெல்லாம்.... அவருக்கு ஆணி நிறையன்னு நம்பும் அப்பாவிக்கூட்டம்!//
அதையே நம்புங்க டீச்சர். அதுதான் உண்மை. :)
// என்னப்பா கே ஆர் எஸ்,
பாயா எடுக்க ஆயா எதுக்கு?
மஜ்ஜைக்குன்னு ஒரு கருவி வந்துருக்கே.
அது தெரியாதா?
அதுவும் எவர்சில்வர்லே:-)))) //
அடா அடா அடா... அதப் போட்டோ பிடிச்சிப் போடக்கூடாதா! கண்டுக்கிறுவோம்ல! கே.ஆர்.எஸ்சும் வாங்கிப் பயன்பெறுவார்ல. :)
// கவிநயா said...
ReplyDeleteச்சீச்சீ. இந்த கறி கசக்குது. ஜிராவுக்கு மட்டும் வணக்கம், வருகன்னு சொல்லிக்கிறேன் :) //
வணக்கம் கவிநயா :)
// Blogger கீதா சாம்பசிவம் said...
வருகைப் பதிவு!!!! //
நன்றி கீதாம்மா.
//
ReplyDelete3. அமெரிக்கா இந்தியா தவிர்த்த ஏதாவது ஒரு நாட்டில்தான் இனிமேல் வாழவேண்டும் என்ற நிலை வந்தால் எந்த நாட்டிற்குச் செல்ல விரும்புவீர்கள்?
சிங்கப்பூர். அப்படித் தான் சொல்லணும்ன்னு மேலிடத்துக் கட்டளை. :-)
மேலிடம் யாருன்னா கேக்குறீங்க? அதெல்லாம் சொல்லிக்கிட்டேவா இருப்பாங்க? ;-) //
ஹா ஹா வீட்டுக்குப் பக்கத்துலயே இருக்கலாம்னு பாக்குறாங்க போல. நல்ல நாடுங்க. சுத்திப்பாக்கப் போயிருக்கேன். நல்லாருந்துச்சு ஊரு. நமக்குதான் ஊர் சுத்தப் பிடிக்குமே. நல்லா சுத்திப் பாத்தாச்சு அந்த ஊரை. சின்ன ஊருதான்..ஆனா பிரமாதமா வெச்சிருக்காங்க. அங்க தாய்லாந்து எளநி கெடைக்க்குது பாருங்க... அடடா! அடடா!