Thursday, July 03, 2008

இங்கேயும் ஒரு யசோதை

'நாலாயிரம் கற்போம்ன்னு எழுதத் தொடங்கினேன். ஆனா வாரத்துக்கு ஒரு பாசுரம் கூட எழுத முடியலையே. இன்னைக்காவது அடுத்த பாசுரத்தைப் பாக்கணும்'

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்


'பெரியாழ்வார் இந்தப் பாசுரத்துல என்ன சொல்றார்? படுக்க வச்சா தொட்டில் கிழிந்து போகிற மாதிரி உதைக்கிறான். எடுத்து வச்சிக்கலாம்ன்னா இடுப்பை முறிக்கிறான். நல்லா இறுக்கிக் கட்டிப் பிடிச்சா வயித்தில பாயுறான். இதை எல்லாம் தாங்குறதுக்கு எனக்கு பலம் இல்லை. அதனால நான் மெலிஞ்சு போனேன்னு யசோதை சொல்ற மாதிரி பாடியிருக்காரா?

இதெல்லாம் சின்ன குழந்தைங்க செய்றது தானே? இதைக் கூடவா ஒரு அம்மாவால தாங்க முடியாது. அதைப் போயி இன்னொருத்தர் கிட்ட முறையிடுவாங்களா? உண்மையிலேயே இதைத் தான் யசோதா சொல்றதா பெரியாழ்வார் எழுதியிருக்காரா? கண்ணா புரியலையே'

"என்ன பண்றீங்க? எப்பவும் தமிழ்மணம் தானா? குடும்பத்து மேல கொஞ்சம் கூட அக்கறையில்லையா?"

"இப்ப என்ன ஆச்சு? ஏன் திரும்பவும் இந்தப் பல்லவியைத் தொடங்குற?"

"பின்ன? பையனைப் பத்தி கொஞ்சமாவது கவலை இருக்கா?"

"அவனைப் பத்தி என்ன கவலை? அவன் பாட்டுக்கு விளையாடிக்கிட்டு இருக்கான்"

"ஆமாம். அவன் பாட்டுக்கு ஆடிக்கிட்டு தான் இருக்கான். நீங்க அவனோட கொஞ்சம் ஆடுனா என்ன?"

"என்ன சொல்ற நீ? என்னம்மோ நான் அவன் கூட விளையாட்றதே இல்லைங்கற மாதிரியில்ல சொல்ற?"

"அவனோட விளையாண்டா அவன் என்ன என்ன பண்றான்னு தெரியுமே. சொல்லுங்க அவன் என்ன என்ன பண்றான்?"

"அவன் பாட்டுக்கு அவன் விளையாடிக்கிட்டு இருக்கான். அவ்வளவு தானே?"

"அவ்வளவு தானா? எப்பப் பாரு காலை சுத்திக்கிட்டே இருக்கான். தூக்கி வச்சுக்கணுமாம். தூக்கி இடுப்புல வச்சிக்கிட்டாலோ இந்தப் பக்கமும் அந்தப்பக்கமும் தாவிக் குதிக்கிறான். இடுப்பு முறிஞ்சிரும் போல இருக்கு"

"அதனால என்ன? குழந்தைங்கன்னா அப்படித் தான் இருப்பாங்க"

"படுக்குறதுன்னா அவன் கூடவே நாமளும் படுத்துக்கணும். பக்கத்துல படுத்திருக்கிறவங்களை உதைச்சு உதைச்சே வயிரு வலி வந்துறும்"

"இதெல்லாம் குழந்தைங்க செய்றது தானேம்மா. இதை எல்லாமா குறையா சொல்லுவாங்க?"

"இதெல்லாம் செய்யட்டுங்க. வேணாங்கலை. ஆனா ஒழுங்கா சாப்புடணுமே. ஒன்னுமே சாப்புடறதில்லை. அப்புறம் எப்படி உடம்புல பலம் இருக்கும். பலமே இல்லாம இப்படி எல்லாம் பண்றானேன்னு தான் கவலை. அவன் சாப்புட்றானா இல்லைன்னு கூட நீங்க பாக்குறதில்லை"

'ஓ இது தான் மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேனுக்கு அருத்தமா? கண்ணனுக்கு மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன்னு புலம்புறாங்களா யசோதை. ம்'

18 comments:

  1. அச்சோ! ச்சோ ச்வீட்! எவ்வளவு ச்செல்லமா இருக்கு குட்டிக் கண்ணனை நினைக்கும்போது! எனக்கே புரியற மாதிரி எழுதித் தந்த குமரா, நீவிர் வாழ்க!

    ReplyDelete
  2. இது புரிஞ்சிருச்சா?! பரவாயில்லையே. :-)))) ச்ச்சும்மா. கோவிச்சுக்காதீங்க கவிநயா அக்கா. :-)

    ReplyDelete
  3. குமரா!!!

    க்ர்ர்ர்ர்ர்ர்ர்!!! (நன்றி கீதாம்மா!)

    (ரொம்ப முயற்சிக்கிறேன் கோச்சுக்காம இருக்க :)

    ReplyDelete
  4. என்ன தைரியம் உமக்கு?
    பாவம் அண்ணியார் இம்புட்டுக் கஷ்டப்பட்டுச் சொன்னா, அதையும் பதிவாக்கி பின்னூட்டம் பாக்கும் உம்மை என்ன செஞ்சா தகும்?

    அண்ணீ, பூரிக்கட்டை ப்ளீஸ்!
    குழந்தைக்குப் பாவம் மிடுக்கு கொறையுதேன்னு நீங்க ஏன் மெலியறீங்க?
    யாரை மெலியச் சொல்லணுமோ, அவரை மெலியச் சொல்லுங்க!

    பூரிக்கட்டையால் மெலிய வைக்கும் கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு ஒன்னு இருக்குல்ல! அதைச் செய்யுங்க! மெலிவும் மிடுக்கும் தானா வரும்! :-)))

    ReplyDelete
  5. இது எங்கள் வீட்டுக்கதை என்று உங்களுக்கு யார் சொன்னது இரவிசங்கர்? :-)

    ReplyDelete
  6. மிகவும் அருமையான வ்யாக்யானம் நன்றி
    குமரன்

    ReplyDelete
  7. வீட்டில் நடப்பது எல்லாம் நல்லாப் புரியற மாதிரி எழுதும் குமரனுக்கு வாழ்த்துகள்! :P

    ReplyDelete
  8. //க்ர்ர்ர்ர்ர்ர்ர்!!! (நன்றி கீதாம்மா!)//

    ராயல்டி எங்கே??/ அமெரிக்க டாலர் வேண்டாம், இந்தியப் பணமே போதும்!!!

    ReplyDelete
  9. பெரியாழ்வாருக்கு பதில் சொல்லப் பார்க்கிறேன், சிந்தியல் வெண்பாவில்:

    தஞ்சம் அடைந்தாரை அஞ்சேல் எனக்காத்த
    கொஞ்சு மொழியான் பிதற்றலைக் கேட்டாலே
    கிட்டாதோ நாளும் மிடுக்கு?

    ReplyDelete
  10. அடடா. உங்களுக்கும் புரிஞ்சிருச்சா? பரவாயில்லையே கீதாம்மா. :-)))

    ReplyDelete
  11. தஞ்சம் அடைந்தாரை அஞ்சேல் எனக்காக்கும்
    கொஞ்சு மொழியான் பிதற்றலைக் கேட்டாலே
    கிட்டுமே நாளும் மிடுக்கு!

    நன்றி ஜீவா. :-)

    ReplyDelete
  12. அழகிய பாடலை அழகிய விளக்கத்துடன் வழங்கியுள்ளீர் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. //ராயல்டி எங்கே?? அமெரிக்க டாலர் வேண்டாம், இந்தியப் பணமே போதும்!!!//

    ஊருக்கு வரும்போது ஞாபகமா கேளுங்க கீதாம்மா - குமரன்கிட்ட :))

    ReplyDelete
  14. :)

    ஆனலும் உங்க பசங்களுக்கு எம்புட்டுக் கதை கிடைக்குது. என் பசங்க எல்லாம் பாவம்.....

    ReplyDelete
  15. நன்றி செல்வநம்பி ஐயா.

    ReplyDelete
  16. நன்றி அகரம். அமுதா

    ReplyDelete
  17. உங்க பசங்களுக்கும் என்ன குறை கொத்ஸ். புதிர் போட சின்ன வயசுலயே கத்துக்குவாங்களே. கருநாடக இசையும் கத்துக்குவாங்க. :-)

    ReplyDelete
  18. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete