திருமதி. நாகி நாராயணன் அவர்கள் ஒரு தேர்ந்த கருநாடக இன்னிசைப் பாடகி. இவர் இரவிசங்கர் கண்ணபிரான் எழுதிய பாடலை தனது தோழி திருவரங்கப்ரியா ஷைலஜா அவர்களுடன் இணைந்து பாடியதை
இந்த இடுகையில் கேட்கலாம்.
இனி அவரது வாழ்த்துச்செய்தி:
அன்புள்ள திரு.கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களுக்கு, கண்ணன் பாட்டு
எண்ணிக்கை நூறு ஆனதில் மட்டற்ற மகிழ்ச்சி.
அதைத் தெரிவித்துக் கொள்ள ஒரு சிறு கவிதை முயற்சி !!!
கண்ணனின் அற்புத லீலைகளும் - மணி
வண்ணனின் திவ்யப் பண்களும்
கண்ணன் பாட்டுப் பதிவகத்தில்
எண்ணிக்கை நூறை எட்டியதில்
மண்ணெங்கும் பரவசமடைந்து
விண்ணை எட்டும் குரலில்
உண்மையாக உரைப்போம்
வாழ்க உம் பணி, வளர்க உங்கள் தொண்டு !!!!
- வாழ்த்துக்களுடன்,
நாகி நாராயணன்.
பாடிக்கொடுத்த கோதையே வருக! வாழ்த்துக்கு மிக்க நன்றி!
ReplyDeleteஷைலஜா
எங்க மைபாக்காவுடன் சேர்ந்து அருமையாகப் பாடி நூறாவது பதிவை சிறப்பித்துக் கொடுத்த தங்களுக்கும் மிகுந்த நன்றிகள். பாடல் மிகவும் பெருமை பெற்றது, பாடகியரால்... :)
ReplyDeleteபாடிக் கொடுத்த படர்கோதை
ReplyDeleteநாகி அக்காவுக்கு நன்றிகள் பல! :-)
அடியேன் பெயரை முன்னிட்டு மெயில் அனுப்பினாலும், நாகி வாழ்த்த வந்தது கண்ணன் பாட்டு குழுவைத் தான்!
ReplyDelete* தி. ரா. ச.(T.R.C.)
* வெட்டிப்பயல்
* மடல்காரன்
* மலைநாடான்
* Raghavan
* "முருகனருள்" கோ.இராகவன்
* dubukudisciple
* குமரன் (Kumaran)
* ஷைலஜா
* kannabiran, RAVI SHANKAR (KRS)