Wednesday, June 04, 2008

நீ சாமியா பூதமா ஒன்னும் புரியலை ரெண்டும் புரியலையே

கோலிகுண்டு கண்ணு கோவைப்பழ உதடு
பாலைப்போல பல்லு படிய வச்ச வகிடு
ஆளைத்தின்னும் கன்னம் அலட்டிக்காத கையி
சோளத்தட்டைக் காலு சொக்கவைக்கும் வாயி
தேளு தொட்ட ஒன்னை தேடி வந்தேன் தாயி

ஏய்...நீ எதுக்குப் பொறந்தியோ என் உசிர வாங்குற
ஜே...நீ எதுக்கு வளந்தியோ என் வயச தாங்குற

ஏய்... நா உனக்குப் பொறந்தவ ஏன் பாஞ்சி பதுங்குற
வா... நா உனக்கு வளந்தவ ஏன் காஞ்சி வெதும்பற

(கோலிகுண்டு)

வேப்பிலை கூட இப்ப தித்திக்குது தேனா
பால்பனி பாதி கொடுத்தா
கேக்கலை சோறு தண்ணி கேட்டுக்க நீ மாமா
உன் பேச்சை யாரு எடுத்தா?
அருகம் புல்லுன்னா ஆடாக வேணுமா?
இலவம் பஞ்சுன்னா இடிபாடு ஆகுமா?
நீ சாமியா பூதமா ஒன்னும் புரியலை ரெண்டும் புரியலையே

(ஏய்...கோலிகுண்டு...)



பத்தாய நெல் போல நின்னாயே முன்னால
வம்பு வளக்குது வம்பு வளக்குது அந்த சிரிப்பு
வெள்ளாவி கண்ணால சுட்டாயே தன்னால
கொள்ளையடிக்குது கொள்ளையடிக்குது கள்ள நெருப்பு
கண்ணுக்குள்ள கொட்டிக்கிட்ட சீயக்காய போல
ஐயோ நீ உறுத்துறியே
தண்ணீல சிந்திவிட்ட சீமை எண்ணெய் போல
என்னை நீ ஒதுக்குறியே
ஏடி நீ சகடையா எதுக்கென்னை உருட்டுற
மாசக்கடைசியா ஏன் என்னை விரட்டுற
நீ வசதியா வறுமையா அங்க குறையுது இங்க நிறையுது ஏன்

(ஏய்...கோலிகுண்டு)

திரைப்படம்: எம் மகன்
பாடியவர்கள்: கல்யாணி, கார்த்திக்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
இயற்றியவர்: ??

எதுகை மோனைகள் மட்டுமின்றி மிகப் பொருத்தமான உவமைகளுடன் மிகுந்த அணி நயத்துடன் வந்த அண்மைக்காலப் பாடல் (2006) இது.

3 comments:

  1. இந்த இடுகை 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 13 செப்டம்பர் 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

    8 comments: வடுவூர் குமார் said...
    இந்த படம் பார்க்கும் போது அப்படியே உறைந்து போய்விட்டதால் பாடல்களில் அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை.
    பல நிகழ்வுகள் என் ஆரம்பகால வாழ்கையை பிரதிபளித்தது இப் படத்தில்.

    Thursday, September 13, 2007 8:01:00 PM
    குமரன் (Kumaran) said...
    ஆமாம் குமார். ரொம்ப நல்ல படம் இது.

    இந்தப் பாடல் அதை விட நல்லா இருக்கு.

    Friday, September 14, 2007 7:34:00 PM
    துளசி கோபால் said...
    பொதுவா பாட்டு & சண்டைக் காட்சிகளை ஒரே ஓட்டா ஓட்டிடும் பழக்கம். முக்கியமா புதுப்படங்களில் பாட்டுக்கள் ஒண்ணும் மனசுலெ நிக்கறதே இல்லை, எல்லாம் ஒரே மாதிரி (காட்டுக்கத்தல்) இருக்குன்னு மனசுலே ஒரு தோணல்.

    அதனால் இதைக் கவனிக்கலை(-:

    Saturday, September 15, 2007 4:56:00 PM
    குமரன் (Kumaran) said...
    நீங்க சொல்றது என்னவோ உண்மை தான் துளசியக்கா. நாங்களும் பாட்டையும் சண்டைக்காட்சியையும் ஓட்டிடுவோம். இந்தப் பாட்டை சன் டிவியில கேட்டு பிடிச்சதால மனசுல நின்னிருச்சு.

    Saturday, September 15, 2007 7:17:00 PM
    cheena (சீனா) said...
    சரி சரி குமரன் - multi facetted personality - i envy u

    Friday, November 09, 2007 1:05:00 PM
    யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    குமரா!!
    நானும் துளசி அக்கா போல் தான்,
    பின்பே சில பாடல்களை ரசித்துக் கேட்பேன்.
    இப்போ சிவாஜி...காவிரி..கைக்குத்தரிசி..பிடித்துள்ளது.(கைக்குத்தரிசி எனக்கு மிகப்பிடிக்கும்)

    Friday, November 09, 2007 6:48:00 PM
    குமரன் (Kumaran) said...
    நீங்கள் சொல்வது எந்தப் பாடல்கள் என்று தெரியவில்லையே யோகன் ஐயா. அண்மையில் வந்த ரஜினி நடித்த சிவாஜி படப் பாடல்களா?

    Saturday, November 10, 2007 8:45:00 PM
    குமரன் (Kumaran) said...
    No envy சீனா ஐயா. உங்கள் இடுகைகளின் ஆழத்தையும் நீங்கள் மற்றவர் இடுகைகளைப் படித்து இடும் பின்னூட்டங்களின் கருத்து வளத்தையும் பார்த்து நான் தான் மலைக்கிறேன்.

    Saturday, November 10, 2007 8:48:00 PM

    ReplyDelete
  2. எனக்குமே புதுப் பாடல்களுடன் ஒட்டுதல் இல்லை. ஆனால் இந்தப் பாடல் பிடிக்கும். ஒரு வேளை கிராமமும் தாவணியும் பிடிக்கும்கிறதாலயோ என்னவோ :))

    ReplyDelete
  3. இருக்கலாம் அக்கா. பாட்டு மட்டுமில்லாம படமும் பிடிச்சிருக்குமே. அப்படின்னா சன் தொலைக்காட்சியில இந்த சனிக்கிழமை மாலை 5 மணிக்குத் தவறாம பார்த்துடுங்க. (இராம.கி. ஐயா சொன்ன சிறு பொழுதுகளின் படி இதை எற்பாடு 5 மணின்னு தானே சொல்லணும்?)

    ReplyDelete