உலகில் நான்குவிதமான பக்தர்கள் இருப்பதாக கண்ணன் கீதையில் சொல்லியிருக்கிறார் - ஆர்த்தி, அர்த்தார்த்தி, ஜிக்ஞாஸு, ஞானி என்று அவர்களைப் பற்றி சொல்வார். ஆர்த்தி என்பவர்கள் தங்கள் குறைகளைக் கூறி துன்பங்களில் இருந்து விடுபடவேண்டும் என்று வணங்குபவர்கள். அர்த்தார்த்தி என்பவர்கள் பொருளை விரும்பி வேண்டி வணங்குபவர்கள். ஜிக்ஞாஸு என்பவர்கள் உண்மை நிலையை உணர்ந்து உலகப் பந்தங்களில் இருந்து விடுதலை பெற வேண்டி வணங்குபவர்கள். ஞானி என்பவர்கள் உண்மை நிலையை உணர்ந்து உலகப் பந்தங்களில் இருந்து விடுபட்டு உண்மை நிலையில் உருவமான இறைவனை வணங்குபவர்கள். தற்போது நம் கண்களுக்குத் தெரியும் பக்தர்களில் முதலில் சொல்லியிருக்கும் இரண்டுவிதமான பக்தர்களையே அதிகம் காண்கிறோம் இல்லையா? அப்படி இருக்கும் போது 'குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா' என்ற பாடலைக் கேட்கும் போது வித்தியாசமாக இல்லை?
மூதறிஞர் இராஜாஜி எழுதி இசையரசி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் பாடிய இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். இந்தப் பாடலைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவு இட்டிருக்கிறேன். அதனையும் பாருங்கள். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். என் தம்பியும் நானும் என் திருமணத்திற்கு முன்பு அடிக்கடி இந்தப் பாடலைச் சேர்ந்து இசைத்திருக்கிறோம். இப்போதும் என் தம்பியிடம் இந்தப் பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டு ரசிப்பவர்கள் இருக்கிறார்கள்.
இந்த இடுகை 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 17 ஜூன் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete79 comments:
பொன்ஸ்~~Poorna said...
:-) குறை ஒன்றும் இல்லை :)
Saturday, June 17, 2006 11:16:00 PM
--
Sivabalan said...
குமரன்,
அருமையான பாடல்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
இப்பாடல் சுதா ரகுநாதன் பாட கேட்கவும் அருமையாக இருக்கும்.
நன்றி.
Saturday, June 17, 2006 11:35:00 PM
வெற்றி said...
குமரன்,
ஆகா, என்ன அருமையான பாடல். கேட்டாலே மனதில் ஓர் இனம்புரியாத இன்பம். சரி இப் பாடலை கத்ரி கோபால்நாத் அவர்களின் Saxophone ல் கேட்டு மகிழ இம் முகவரிக்குச் செல்லுங்கள்.
http://www.musicindiaonline.com/p/x/VJO02eAp3t.As1NMvHdW/
நன்றி.
Saturday, June 17, 2006 11:58:00 PM
குமரன் (Kumaran) said...
ஆமாம் பொன்ஸ். குறை ஒன்றும் இல்லை. இந்தப் பதிவைப் பார்த்தபின் ஒரு முறை பாடினீர்களா இந்தப் பாட்டை? :-)
Sunday, June 18, 2006 7:56:00 AM
குமரன் (Kumaran) said...
நன்றி சிவபாலன். எத்தனை முறை கேட்டாலும் மனதை உருக்கும் பாடல் இது. சுதா ரகுநாதனும் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறாரா? நான் கேட்டதில்லையே. musicindiaonlineலும் தேடிப்பார்த்தேன்; கிடைக்கவில்லை. உங்களிடம் சுட்டி இருந்தால் தாருங்கள்.
Sunday, June 18, 2006 8:01:00 AM
குமரன் (Kumaran) said...
நன்றி வெற்றி. கதிரி கோபால்நாதின் இசையைக் கேட்டேன். அப்படியே இந்தப் பாடலை குழலில் சிக்கில் மாலா சந்திரசேகர் இசைத்ததையும் கேட்டேன். நீங்களும் கேட்டுப் பாருங்கள்.
http://www.musicindiaonline.com/p/x/.4K0tGu5K9.As1NMvHdW/
Sunday, June 18, 2006 8:02:00 AM
நாகை சிவா said...
வேண்டியதை தந்திட வேங்கடேசன் நின்று இருக்க
வேண்டியது வேற் இல்லை மறைமூர்த்தி கண்ணா.
நித்தமும் கேட்கின்றேன் நண்பரே!
சந்தோஷம் என்றாலும் இந்த பாடல் தான், சோகமாக(மன ஊளச்சல்வுடன்) இருந்தாலும் இந்த பாடல் தான். தினமும் பொழுதை ஆரம்பிப்பதே இந்த பாடல்வுடன் தான்.
Sunday, June 18, 2006 8:40:00 AM
ramachandranusha said...
என் தம்பியும் நானும் என் திருமணத்திற்கு முன்பு அடிக்கடி இந்தப் பாடலைச் சேர்ந்து இசைத்திருக்கிறோம்//
அது என்ன திருமணத்திற்கு முன்பு "குறையொன்றுமில்லை" பாடலைப் பாடுவது ????? நோட் திஸ் பாயிண்ட் மிஸஸ். குமரன்....
Sunday, June 18, 2006 8:51:00 AM
குமரன் (Kumaran) said...
உஷா. மாட்டிவிடாதீங்க. விளக்கமா சொல்லிடறேன். :-) திருமணத்திற்குப் பிறகு நான் அமெரிக்கா வந்துவிட்டேன். அதனால் தம்பியும் நானும் சேர்ந்து பாட வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அதைத் தான் சொல்ல நினைத்தேன். இப்போதும் குறை ஒன்றும் இல்லை பாடிக் கொண்டு தான் இருக்கிறேன். திருமதி.குமரனாவது காது கொடுத்துக் கேட்பார். குமரனின் மகளுக்கோ டைலமோ டைலமோ தான் பிடிக்கிறது. :-)
Sunday, June 18, 2006 9:10:00 AM
குமரன் (Kumaran) said...
உண்மை தான் நாகை சிவா. மகிழ்ச்சியோ துக்கமோ இந்தப் பாடலைக் கேட்டால் மிக நன்றாக இருக்கும். தொடர்ந்து காலம் காலமாக இந்தப் பாடலை தினமும் தொடர்ந்து கேளுங்கள்.
Sunday, June 18, 2006 9:12:00 AM
enRenRum-anbudan.BALA said...
குமரன்,
மிகவும் அற்புதமான ஒரு பாடல் ! MS அவர்களின் குரலில், சுகானுபவம்!
Sunday, June 18, 2006 10:56:00 AM
வெற்றி said...
குமரன்,
//மூதறிஞர் இராஜாஜி எழுதி இசையரசி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் பாடிய இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். //
இப் பாடலை இராஜாஜி அவர்களா எழுதியிருந்தார்? இவ்வளவு காலமும் இப் பாடலை பாபநாசம் சிவன் அவர்கள் தான் எழுதியிருந்தார் என எண்ணியிருந்தேன். தகவலுக்கு நன்றிகள்.
நன்றி
Sunday, June 18, 2006 10:56:00 AM
johan-paris said...
அன்புக் குமரனுக்கு!
மீண்டும் ஓர் இனிய தெரிவு. கச்சேரிகளில் சிலசமயம் துக்கடாவில் இடம் பிடித்தாலும்;தூக்கலான பாடல்; அழகிய ராகமாலிகை!!!!,துண்டனுப்பிக் கேட்கும் பாடல்; பாரிசில் நித்தியசிரி வந்த போது மிக உருக்கமாகப் பாடக்கேட்டேன். இப்பாடல் சுப்புலெக்சுமி அம்மா; முதல் தடவையாக அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையில் பாடச் செல்லும்;போது திரு. ராஜாஜியிடம் கேட்டெழுதி வாங்கியதெனப் படித்துள்ளேன்.
யோகன் பாரிஸ்
Sunday, June 18, 2006 11:31:00 AM
குமரன் (Kumaran) said...
படித்துப் பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி என்றென்றும்-அன்புடன்.பாலா. இந்த சுகானுபவத்தை எத்தனைத் தடவை அனுபவித்தாலும் தகும். தித்திக்கும் தேன்பாகு. திகட்டாத தெள்ளமுதம்.
Sunday, June 18, 2006 1:35:00 PM
குமரன் (Kumaran) said...
ஆமாம் வெற்றி. இந்தப் பாடல் இராஜாஜி அவர்கள் எழுதியது தான்.
Sunday, June 18, 2006 1:36:00 PM
குமரன் (Kumaran) said...
நன்றி யோகன் ஐயா. நீங்கள் சொல்லும் பாடல் வேறு பாடல் என்று எண்ணுகிறேன். சுப்புலக்ஷ்மி அம்மா ஐக்கிய நாடுகள் சபையில் பாடுவதற்காகப் எழுதிக் கொடுத்தப் பாடல் வடமொழிப் பாடலான 'மைத்ரீம் பஜத' எழுதியவர் காஞ்சிப் பரமாச்சாரியார் சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி சுவாமிகள். இந்தப் பாடலும் ஐக்கிய நாடுகள் சபையில் பாடப்பட்டதாய் நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. இருக்கலாம். அப்படியானால் இது எனக்கு செய்தி. சொன்னதற்கு மிக்க நன்றி.
http://koodal1.blogspot.com/2005/10/blog-post_112882554482724624.html
Sunday, June 18, 2006 1:40:00 PM
ramachandranusha said...
குமரன், சக்தி மசாலா விளம்பரத்தில் ஊனமுற்றோர்கள் வேலை செய்யும் பொழுது, பிண்ணனியில் இப்பாட்டு ஒலிக்கும்.பார்த்திருக்கிறீர்களா?
Sunday, June 18, 2006 1:44:00 PM
குமரன் (Kumaran) said...
உஷா. சக்தி மசாலா விளம்பரத்தை நிறைய முறை பார்த்திருக்கிறோமே. எங்கள் மகளும் அந்த சம்திங் ஸ்பெஷல் என்று வரும் விளம்பர வாசகங்களைச் சொல்லிக் கொண்டே இருப்பாளே. ஆனால் நீங்கள் சொன்னதை இதுவரை கவனித்ததில்லை. இனிமேல் கவனிக்கவேண்டும்.
Sunday, June 18, 2006 2:51:00 PM
துளசி கோபால் said...
இந்தப் பாட்டை சுதாவும் பாடி இருக்காரா? சுட்டி இருந்தால் தாங்க.
நம்ம கிட்டே எம்.எஸ். அம்மா பாடுனதுதான் கேக்கறோம்.
'குறை ஒன்றும் இல்லை ( கோபாலா)கோவிந்தா'
Sunday, June 18, 2006 4:24:00 PM
rnateshan. said...
என்றும் எப்போதும் கேட்ககூடிய அற்புதமான பாடல்!!
நன்றி குமரன்!!
Sunday, June 18, 2006 7:42:00 PM
சிவமுருகன் said...
அண்ணா,
மிக அருமையான பாடல். இரண்டாவது (நேற்றும், இன்றும்) தடவையாக கேட்டேன்.
குழலினுது, கேட்டாச்சு அப்படியே யாராவது யாழும் மழலையும் போட்டுட்டா இன்னும் ரொம்ப நல்லா இருக்கும்.
Monday, June 19, 2006 6:28:00 AM
ரங்கா - Ranga said...
குமரன்,
அருமையான பாடல் இது. மூதறிஞரின் பாட்டில் முக்கியமான ஒரு கருத்து, அதிலுள்ள நினைப்பின் தன்மை - பாசிட்டிவாக - நடப்பதெல்லாம் நன்மைக்கே என்னும் விதமாக எழுதியிருக்கும் இந்த எளிமையான (அதே சமயத்தில் மிக ஆழமான) பாடல் என்னைக் கவர்ந்த பாடல்.
ரங்கா.
Monday, June 19, 2006 10:07:00 AM
Sivabalan said...
Kumaran,
This is link for the song by sudha ragunathan.
Please go to www.coolgoose.com and signup with an username and pw
click on the music icon after logged in.
Then at the bottom of the screen, pl. click on tamil and then carnatic.
You will be able to find the song in the thrid page.
Thanks
//http://music.cooltoad.com/music/category.php?id=10366&page=3&order=title //
and //http://music.cooltoad.com/music/download.php?id=197834//
Monday, June 19, 2006 1:03:00 PM
Suka said...
வாரம் இரண்டு மூன்று முறையாவது கேட்கும் பாடல்களில் ஒன்று... எம்.எஸ் ஸின் காந்தக் குரலினிமை ஒர் அற்புதம்.. இன்னும் கொஞ்சம் நீளாத என ஏங்க வைக்கும் பாடல்..
வாழ்த்துக்கள் குமரன் !
சுகா
Monday, June 19, 2006 1:18:00 PM
குமரன் (Kumaran) said...
துளசி அக்கா. நானும் சுதா பாடுனது கேட்டதில்லை. சிவபாலன் கூல்கூஸில் இருக்கிறது என்று சொல்லி சுட்டியைக் கொடுத்திருக்கிறார். அந்தப் பாடலை தரவிறக்கி இந்தப் பதிவில் தர முயல்கிறேன்.
Monday, June 19, 2006 2:05:00 PM
குமரன் (Kumaran) said...
நன்றி நடேசன் ஐயா.
Monday, June 19, 2006 2:06:00 PM
குமரன் (Kumaran) said...
சிவமுருகன். யாழ் வேண்டுமென்றால் வீணை காயத்ரி இந்தப் பாடலை இசைத்திருந்தால் போட்டுவிடலாம். ஆனால் மழலை வேண்டுமென்றால் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள். வள்ளுவர் என்ன சொன்னார் என்பதனைக் கவனித்துப் பார்த்தால் நான் என்ன சொல்கிறேன் என்று புரியும். :-)
குழல் இனிது யாழ் இனிது என்ப 'தம்' மக்கள்
மழலைச் சொல் கேளாதவர். :-)
Monday, June 19, 2006 2:07:00 PM
குமரன் (Kumaran) said...
ஆமாம் ரங்கா அண்ணா.
யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
இந்த வரிகளும் அதனை அழுத்தமாகக் கூறுகின்றன.
Monday, June 19, 2006 2:09:00 PM
குமரன் (Kumaran) said...
சுட்டிக்கு நன்றி சிவபாலன். இன்று மாலை வீட்டிற்குச் சென்ற பின் தரவிறக்கிக் கேட்டுப் பார்க்கிறேன்.
Monday, June 19, 2006 2:10:00 PM
குமரன் (Kumaran) said...
சுகா. நீங்கள் வாரம் இரண்டு மூன்று முறை இந்தப் பாடலைக் கேட்பீர்களா? நாகை சிவா தன்னுடைய தொடைதட்டியின் (laptop) உள்நுழைந்தவுடன் இந்தப் பாடலைக் கேட்கும் படி அமைத்திருக்கிறாராம். ஹும். அப்போது நான் தான் எப்போதாவது ஒரு முறை இந்தப் பாடலைக் கேட்கிறேனா? இனிமேல் நானும் அடிக்கடி கேட்க முயலவேண்டும்.
ஆமாம். நீங்கள் சொல்வது போல் ஒவ்வொரு முறை கேட்டு முடித்தப் பின்னும் இவ்வளவு விரைவில் இந்தப் பாடல் முடிந்துவிட்டதா என்று தோன்றும் பாடல் இது.
Monday, June 19, 2006 2:12:00 PM
வெற்றி said...
குமரன்,
மன்னிக்கவும். இப் பின்னூட்டம் தங்களின் பதிவு பற்றியதல்ல.
ஒரு சின்ன விளக்கம் கேட்க.
//தொடைதட்டியின் (laptop) //
Laptop = தொடைதட்டி ?
இது நீங்கள் தற்போது அறிமுகப்படுத்தும் சொல்லா அல்லது ஏற்கனவே புழக்கத்தில் உள்ளதா?
நன்றி.
Monday, June 19, 2006 2:30:00 PM
குமரன் (Kumaran) said...
வெற்றி, அதை நாகை சிவாவிடம் தான் கேட்கவேண்டும். அவர் பொன்ஸின் பதிவில் இந்தத் 'தொடைத்தட்டி' என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தார். நான் தான் அதனை லேப்டாப் என்று பொருள் கொண்டு இந்தப் பின்னூட்டத்தில் அப்படி சொன்னேன். அவர் வந்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். :-)
Monday, June 19, 2006 2:44:00 PM
பொன்ஸ்~~Poorna said...
லாப்டாப்பை மடிக் கணினி என்று தான் சொல்வது..
நம்ம சங்கத்துச் சிங்கங்க, அப்படித் திரிச்சிட்டாக.. என்னத்தச் சொல்ல?!!:(.. எல்லாம் ஜொள்ளு பாண்டியால வந்த வினை!! :)
Monday, June 19, 2006 5:45:00 PM
Arumugam said...
எத்தனை முறைக் கேட்டாலும் தெவிட்டாத பாடலிது. என்னதான் இருந்தாலும் தமிழில் கர்னாடக இசையைக் கேட்கும் போது அதன் சுவையே தனி....
அற்புதமான சேவை....
Monday, June 19, 2006 6:53:00 PM
தி. ரா. ச.(T.R.C.) said...
யார்பாடினாலும் நன்றாக இருக்கும் படல்களில் இதுவும் ஒன்று. திருமதி.அருணா சாய்ராம்கூட இதைப் பாடியிருக்கிறார்கள் தி ரா ச
Tuesday, June 20, 2006 12:20:00 PM
வெற்றி said...
பொன்ஸ்,
//லாப்டாப்பை மடிக் கணினி என்று தான் சொல்வது..//
மிக்க நன்றி. தொடைத்தட்டி என்பதை விட மடிக் கணனி என்பது பொருத்தமான சொல்போல் தான் தெரிகிறது [make sense]. நீங்கள் தமிழறிஞை(?) [நேரம் கிடைக்கும் போது அறிஞருக்குப் பெண்பால் என்னவென்று தயவு செய்து
சொல்லமுடியுமா?] சொன்னால் சரியாகத்தான் இருக்கும். பொன்ஸ் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்.
Tuesday, June 20, 2006 1:03:00 PM
SK said...
//லாப்டாப்பை மடிக் கணினி என்று தான் சொல்வது..//
மடிமேற் கணினி என்பது இன்னும் பொருத்தமாக இருக்குமில்லையா?
என்ன சொல்றீங்க, பொன்ஸ்?!!
அறிஞர் என்பது பொதுச்சொல், இருபாலருக்கும் பொருந்தும் ஒரே சொல் என நினைக்கிறேன்.
நடுவர், நடத்துனர், ஓட்டுனர் போல.
அறிவில் மிக்கவர், அறிஞர்.
எ.சொ.,பொ?!!
Tuesday, June 20, 2006 1:30:00 PM
வெற்றி said...
குமரன்,
என்னய்யா, நீங்கள் பொன்ஸையும் SK அய்யாவையும் மோத விடுவதற்கென்றே பதிவுகள் போடுகிறீர்களா? :)) இப்ப பாருங்கள். இருவரும் Laptop பற்றி சூடாக விவாதிக்கப் போகிறார்கள். இருவரின் விவாதத்தில் இருந்து நாம் தமிழ் கற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
//மடிமேற் கணினி என்பது இன்னும் பொருத்தமாக இருக்குமில்லையா?
என்ன சொல்றீங்க, பொன்ஸ்?!!//
SK அய்யா, நீங்கள் சொல்வது சரிபோல் தான் எனக்குத் தெரிகிறது. சரி, தமிழ்மணத்தின் "ஒளவையார்" பொன்ஸ் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
//அறிஞர் என்பது பொதுச்சொல், இருபாலருக்கும் பொருந்தும் ஒரே சொல் என நினைக்கிறேன்.
நடுவர், நடத்துனர், ஓட்டுனர் போல.//
SK அய்யா, மிக்க நன்றிகள்.
//எ.சொ.,பொ?!! //
எ.சொ.பொ = என்ன சொல்கிறீர்கள் பொன்ஸ்?
அய்யா, சரியா?
//
Tuesday, June 20, 2006 2:15:00 PM
பொன்ஸ்~~Poorna said...
பொன்ஸை விட, பொன்ஸின் யானைக்குப் பெருங்கோபம்!! வெற்றி மீது.. அவ்வையார் என்று வயதானவராக்கி விட்டாரே!!! :(
மடிமேல் கணினி என்றால் அந்த சொல்லைப் பயன்படுத்தும் ஒன்றிரண்டு பேரும் பி.ப.ப.ஓ. விடுவார்கள்.
மடியின் மேல் கணினி என்பது தான் மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கி, மடிக் கணினி ஆகிறது.. முருகனுக்குச் சம்மதமான்னு தெரியலையே..
Tuesday, June 20, 2006 3:04:00 PM
வெற்றி said...
பொன்ஸ்,
//
பொன்ஸை விட, பொன்ஸின் யானைக்குப் பெருங்கோபம்!! வெற்றி மீது.. அவ்வையார் என்று வயதானவராக்கி விட்டாரே!!! //
அய்யய்யோ, நான் உங்களின் வயதை வைத்து உங்களை அவ்வையார் என்று சொல்லவில்லை. தங்களின் தமிழறிவை வைத்துத் தான் அப்படிச் சொன்னேன்.:)
//ஒன்றிரண்டு பேரும் பி.ப.ப.ஓ. விடுவார்கள். //
அய்யோ, பொன்ஸ், நீங்களுமா? ஏற்கனவே SK அய்யா, இப்படிச் சொற்சுருக்கங்களைப் போட்டு என்னைக் குழப்பிக்கொண்டிருக்கிறார்!
//மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் //
SK அய்யா இதற்கான பதிலுடன் வருவார் என எதிர்பார்க்கிறேன்.
Tuesday, June 20, 2006 3:37:00 PM
பொன்ஸ்~~Poorna said...
வெற்றி,
////ஒன்றிரண்டு பேரும் பி.ப.ப.ஓ. விடுவார்கள். //
அய்யோ, பொன்ஸ், நீங்களுமா? ஏற்கனவே ஸ்K அய்யா, இப்படிச் சொற்சுருக்கங்களைப் போட்டு என்னைக் குழப்பிக்கொண்டிருக்கிறார்!//
நீங்க இந்தச் சொற் சுருக்கங்களை விரிச்சி, உங்க வலைப்பூவில் புதுப் பதிவு போடலாம்ல? அதுக்குத் தான் நாங்க இப்படிச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறோம் ;)
பி.பி.ப. ஓ = பின்னங்கால் பிடறியில் பட ஓடுவது ( நன்றி சிபி :))
எப்படி? :)
Tuesday, June 20, 2006 5:10:00 PM
SK said...
ஔவையாருக்கும் , யானைக்கும்[விநாயகருக்கும்] நிறையவே சம்பந்தம் உண்டு!
எனவே, நீங்கள் ஔவையார் என பொன்ஸை அழைத்தது குறித்து தவறாக நினைக்க வேண்டாம்.
பொன்ஸும் கோபம் கொள்ள வேண்டாம்!
மேலும், கதைப்படி, ஒரு சில காரணங்களுக்காக, ஔவையாரே கேட்டு வாங்கிக் கொண்ட உருவமே அது, மற்றபடி அவர் 'இளமையானவர்' தான் என்றும் சொல்வார்கள்!
நிற்க, இந்த 'உருபும் பயனும் தொக்கி வந்த' என்றெல்லாம் பெரிய சொற்களைப் போட்டு பயமுறுத்த வேண்டாம்!
இதற்கும் கூட, பி.பி.ப. ஓ!
{வெற்றி, இந்த விளையாட்டை ஆரம்பித்ததே இவர்கள்தான், அதுவும் இந்த பி.பி.ப.ஓ மூலம்தான்!}
அப்போ, வழிப் பணம், வழித்துணை என்பதெல்லாம் கூட இதுதான் என்று சொல்றிங்களா, பொன்ஸ்?
3-ம் வேற்றுமை உருபு இல், இடம், கண்!
அதைத்தான், நான் 'மடியில்' என்பதைத் தொக்கி 'மடி' என்று குறுக்கினேன்.
தவிரவும், 'லாப்' என்றாலே 'மடி' எனவும் கொள்ளலாம்.
ஆனால், 'டாப்' என்பதை எப்படிக் குறுக்க முடியும்.?
'கணினி' என்றால் கம்ப்யூட்டர்.
அதனால்தான், 'மடியில் மேல் கணினி' என்பதை, 'மடிமேற் கணினி' என்று சொன்னேன்.
பி.பி.ப ஓ. என்பதெல்லாம் சரிதான்! ஒத்துக்கறேன்.
ஆனால், எது சரியான பெயர் என்பது குறித்துதான் இங்கு பேசுகிறோம்.
எப்படி ஓடவைப்பது என்பது பற்றியல்ல. !!
Tuesday, June 20, 2006 5:10:00 PM
வல்லிசிம்ஹன் said...
குமரன்,எம்.எஸ் அம்மாவின் குரலும்மூதறிஞரின் பாடலும் என்னவொரு பொருத்தம்!மிகுந்த வருத்தம் வரும்போது இந்தப் பாடலை அம்மா குரலில் கேட்டால்
விழிப்பு வரும்.துன்பம் குறையும். நின்ங்கள் டி.கே.சி அய்யா,கல்கி,திரு ராஜாஜி இவர்கள் எழுதிக்கொண்ட கடிதங்களைப் படித்திருக்கிறீர்களா/அதில் அம்மாவைப் பற்றீயும் அவர்கள் குரல் தரும் நிம்மதி பற்றியும் எழுதியிருப்பார்கள்.நீங்களும் இந்தப் பாடலைத் தந்ததின் மூலம் அந்தக் கருத்தைப் புதிப்பித்து விட்டீர்கள்.நன்றி.
Tuesday, June 20, 2006 6:31:00 PM
பொன்ஸ்~~Poorna said...
//ஔவையாருக்கும் , யானைக்கும்[விநாயகருக்கும்] நிறையவே சம்பந்தம் உண்டு!
எனவே, நீங்கள் ஔவையார் என பொன்ஸை அழைத்தது குறித்து தவறாக நினைக்க வேண்டாம்.
பொன்ஸும் கோபம் கொள்ள வேண்டாம்!//
இப்படின்னு தெரிஞ்சிருந்தா நல்ல பூனை படமா போட்டிருப்பேன்..
இருந்தாலும் அவ்வையார் என்பது ரொம்ப ஓல்டா இருக்கு..
ஆற்றலரசியை
அவ்வையார்
ஆக்கிப் பார்ப்பதில் என்ன
ஆசையோ..
ம்ஹும்
வழிப் பணம் = வழிக்கு ஆன பணம்.
வழித் துணை = வழிக்குத் துணை.. நான்காம் வேற்றுமைத் தொகையன்றோ?!!
கலைச்சொல்லாக்கத்துல நம்ம நாட்டுக்கு ஏத்தமாதிரி தமிழாக்க வேண்டாமா?
லாப்டாப் கம்ப்யூட்டர் என்பதே, லாப்டாப் என்று சுருங்கி, கம்ப்யூட்டருக்கு ஆகுபெயராகிறது. இந்தூர்க்காரங்க, மடி மேல வெறும் கணிணி மட்டும் தான் வைப்பாங்க.. அதுனால சரிதான்...
நாமோ, "அத்தை மடி மெத்தையடி"ன்னு மழலைலேர்ந்து பூனை, நாய் எல்லாந்தான் தூக்கிச் சுமக்கிறோம். எனவே, மடிமேல் கணிணி என்பதில், நம்மைப் பொருத்தவரை, மேல் என்பது தொகைந்தால் தான் புரியும் பெயராகும்.. மடிக் கணிணி..
சுருக்கமா சொன்னா, மடிமேல என்ன வேணா இருக்கலாம்.. ஆனா, மடிக் கணிணி, மடிமேல் தான் இருக்கும்.. முடிஞ்சிதா?
Tuesday, June 20, 2006 6:57:00 PM
Venkataramani said...
//வழிப் பணம் = வழிக்கு ஆன பணம்.
வழித் துணை = வழிக்குத் துணை.. நான்காம் வேற்றுமைத் தொகையன்றோ?!!//
சில சமயம் என் அன்புத்தங்கை பொன்ஸ் இப்படி இலக்கோணத்துல போட்டுத்தாக்கும்போதும் இல்லாட்டி மென்பொருள் மேட்டர்ல கலக்கும்போதும், நான் அப்படியே மெய்சிலிர்த்துப்போயிடறேன். எப்படிம்மா இப்படி கலக்குறீங்க. உங்களைப்போய் ஔவையார்ங்கிறாங்களே..
Tuesday, June 20, 2006 7:44:00 PM
குமரன் (Kumaran) said...
என்ன வெங்கடரமணி. இப்படி சொல்லிட்டீங்க. இப்படி கலக்குறதாலத் தான் அவங்க ஒளவையார்.
Tuesday, June 20, 2006 7:47:00 PM
பொன்ஸ்~~Poorna said...
Oldmen club-ல என்னைத் தள்றதுல என்ன சந்தோசம் குமரனுக்கு..
ரமணியண்ணே... இதுக்கெல்லாம் பீலாவாதீங்க.. எஸ்கே வந்து நாலாவது வேற்றுமையாவதுன்னு தூள் பண்ணுவாரு பாருங்க.. நானே கொஞ்சம் நடுங்கிக்கிட்டு தான் உட்கார்ந்திருக்கேன்.. ரெண்டு நாளா அவர் பதிவை உண்டு இல்லைன்னு ஆக்கியாச்சு :)
Tuesday, June 20, 2006 7:58:00 PM
SK said...
இங்க பாருங்க!
நான் தமிழாக்கத்தை மட்டும்தான் பேசினேன்!
நம்மூருக்கு ஏத்த மாதிரி கலைச்சொல் அப்படீங்கற விளையாட்டுக்கு வரல்லை.
தமிழாக்கத்துக்கு நான் சொன்னது சரி.
நம்மூருக்கு ஏத்த தமிழாக்கத்துக்கு நீங்க சொன்னது சரி.
சரியா??!!
:)))
மடி மேல என்ன வேணா இருக்கலாம்.!!:))
ஆனா, மடிக்கணினியை எங்க வேணா வெச்சுக்கலாம்.
'மடிமேற்கணினி'யை மடிமேலத்தான் வெச்சுக் கொஞ்சணும்!
சரியா?!!
Tuesday, June 20, 2006 8:17:00 PM
பொன்ஸ்~~Poorna said...
எஸ்கே,
ஆங்கிலப் பழமொழியெல்லாம் ரசிக்கிற வெற்றிக்குத் தமிழாக்கிக்கத் தெரியாதா என்ன?
தமிழ்ல எப்படிச் சொன்னா நல்லா இருக்கும்னு சொல்வது தானே முறை?
எப்படியும் சமரசத்துக்கு வந்ததால.. வெற்றி, போதுமா? எஸ்கேவை விட்டுருவோமா? ;)
Tuesday, June 20, 2006 8:41:00 PM
நாகை சிவா said...
This post has been removed by a blog administrator.
Wednesday, June 21, 2006 1:12:00 AM
நாகை சிவா said...
அப்பு, என்ன அப்பு, இப்படி கிளம்பிட்டிங்க.......
ஒரு வார்த்தை சொல்ல கூடாதே, அதை பிரிச்சு மேஞ்சுட்டு தான் மறுவேளை பார்ப்பீர்க்கள் போல.......
தொடைத்தட்டி என்பது LAPTOP தான்.
LAPTOP Computer யாரும் சொல்வது இல்லை. அதனால் தான் நாங்களும் தொடைத்தட்டி கணினி என்று சொல்லாமல் தொடைத்தட்டி என்று கூறுகின்றோம். இப்படி அழைப்பதற்கான காரணம் பெரும்பாலும் அதை தொடையில் வைத்து தட்டிக் கொண்டு இருப்பதால் அவ்வாறு அழைக்கின்றோம். நீங்களும் இவ்வாறு அழைக்க விரும்பினால் சங்கத்துக்கு எந்த ஒரு ராய்லடியும் தராமல் பயன்படுத்தி கொள்ளலாம். பிடிக்கவில்லையா பரவாயில்லை. அதுக்காக இப்படி எல்லாம் வம்படி பண்ணாதீங்க சாமிகளா. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Wednesday, June 21, 2006 5:27:00 AM
குமரன் (Kumaran) said...
பொன்ஸ் & எஸ்.கே. ஒரு அடிப்படைக் கேள்வி. லாப்டாப் கம்ப்யூட்டரைத் தானே மடிக்கணினி என்றோ மடிமேற்கணினி என்றோ சொல்லவேண்டும். தற்போது வழக்கத்தில் லாப்டாப் கம்ப்யூட்டர் என்று யாரும் சொல்வதில்லை; வெறும் 'லாப்டாப்' என்று தான் சொல்கிறோம். அதனால் தமிழிலும் நாம் 'மடி' என்றோ 'மடிமேல்' என்றோ சொன்னால் போதுமோ? :-)
Friday, June 23, 2006 10:48:00 PM
குமரன் (Kumaran) said...
உண்மை தான் ஆறுமுகம். கர்னாடக இசையில் தமிழ்ப்பாடல்களைக் கேட்கும் போது அவற்றின் சுவையே தனி தான். எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டிருக்கலாம். பாடலைக் கேட்டுப் பின்னூட்டமும் இட்டதற்கு நன்றி.
Friday, June 23, 2006 10:50:00 PM
குமரன் (Kumaran) said...
தி.ரா.ச.
'யார் பாடினாலும்' என்று அழுத்திச் சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். இல்லையேல் நான் பாடி இது நன்றாக இருந்தது என்று யாராவது சொல்வார்களா? :-)
பொன்ஸ்... தி.ரா.ச. என்ன சொல்லியிருக்கிறார் என்று கவனிக்கவும். இனிமேல் நீங்கள் தைரியமாக மற்றவர் இருக்கும் போதும் இந்தப் பாடலைப் பாடலாம். 'யார் பாடினாலும்' நன்றாக இருக்கும் இந்தப் பாடல் நீங்கள் பாடும் போதும் அருமையாக இருக்கும். அதனால் தனியாக இருக்கும் போது மட்டும் பாடவேண்டிய கட்டாயம் இல்லை. :-)
அருணா சாய்ராம் பாடியதையும் கேட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன் தி.ரா.ச.
Friday, June 23, 2006 10:52:00 PM
குமரன் (Kumaran) said...
அறிஞருக்குப் பெண்பால் அறிஞை. நன்றாக இருக்கிறது. இனிமேல் அதனையே எல்லோரும் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். :-)
Friday, June 23, 2006 10:54:00 PM
குமரன் (Kumaran) said...
எஸ்.கே. நடுவர், நடத்துனர், ஓட்டுனர் போல அறிஞர் என்ற சொல்லும் இருபாலரையும் குறிக்கலாம் தான். இன்னும் அவை ஆண்பால் பெயராகவே தோன்றினால் அம்மா என்பதைச் சேர்த்துக் கொண்டு அறிஞர் அம்மா என்று சொல்லலாமோ? :-)
Friday, June 23, 2006 10:55:00 PM
குமரன் (Kumaran) said...
வெற்றி. நீங்கள் சொன்னது சரி. பொன்ஸும் எஸ்.கே.யும் விவாதிப்பதில் பலவற்றை நாம் கற்றுக் கொள்ளலாம். சில நேரம் இப்படி எதையாவது போட்டுவிடுவது தான். எல்லா நேரமும் பற்றிக் கொள்வதில்லை. இந்த முறை பற்றிக் கொண்டது. :-) இன்னொன்று கவனித்தீர்களா. இவர்கள் இருவரும் விவாதிக்கத் தொடங்கிவிட்டால் நான் என் வாயை மூடிக்கொண்டு அவர்கள் பேசுவதைக் கவனிக்கத் தொடங்கிவிடுவேன். அப்போது மட்டும் எனக்கு வள்ளுவர் சொன்ன 'செவிக்குணவு' பற்றி நினைவிற்கு வந்துவிடுகிறது. :-)
Friday, June 23, 2006 10:58:00 PM
குமரன் (Kumaran) said...
பொன்ஸ்... நீங்களுமா? அவ்வையார் என்று சொல்கிறீர்களே? ஏன் ஒள என்பதில் என்ற எழுத்தின் மீது ஏதாவது சினமா? இனிமேல் கவனித்துப் பார்க்கவேண்டும்; எங்காவது அய்யா என்று சொல்லியிருக்கிறீர்களா என்று. இப்படி எல்லோரும் புழங்கத் தொடங்கினால் கூடிய விரைவில் 'உயிரெழுத்துகள் பத்து' என்று மாற்ற வேண்டி வரும் என்று நினைக்கிறேன். ஐயும் ஒளவும் தேவையில்லையே?! :-)
Friday, June 23, 2006 11:01:00 PM
குமரன் (Kumaran) said...
வெற்றி. எப்படி பொன்ஸ் ஒளவையாரோ அது போல எஸ்.கே. திருவள்ளுவர். இருவருமே சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறார்கள். இனிமேல் பொன்ஸை ஒளவையார் என்றும் எஸ்.கே.வை வள்ளுவர் என்றும் அழைக்கலாமா? :-)
Friday, June 23, 2006 11:03:00 PM
குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி வல்லி அம்மா. இல்லை. நான் டி.கே.சி ஐயா, கல்கி, இராஜாஜி இவர்கள் எழுதிக் கொண்ட மடல்களைப் படித்ததில்லை. தகவலைச் சொன்னதற்கு மிக்க நன்றி.
Friday, June 23, 2006 11:05:00 PM
குமரன் (Kumaran) said...
என்ன நாகை சிவா. பின்னூட்டம் போட்டுட்டு அப்புறம் அதனை அழித்துவிட்டீர்களே? ஏன்? நீங்க சொன்னதை வச்சு பொன்ஸும் எஸ்.கே.யும் கபடி ஆடிட்டாங்கன்னு வருத்தமா? வருத்தமெல்லாம் படாதீங்க. இப்படி ஏதாவது ஒன்னு கிடைச்சா அவங்க ரெண்டு பேரும் இப்படித் தான். என்ன 'நெல்லுக்கிறைத்த நீர்' இந்தக் குமரனென்னும் 'புல்லுக்கும் ஆனதே'. அதுவரை மகிழ்ச்சி தான்.
Friday, June 23, 2006 11:09:00 PM
பொன்ஸ்~~Poorna said...
//பொன்ஸ் & எஸ்.கே. ஒரு அடிப்படைக் கேள்வி. லாப்டாப் கம்ப்யூட்டரைத் தானே மடிக்கணினி என்றோ மடிமேற்கணினி என்றோ சொல்லவேண்டும். தற்போது வழக்கத்தில் லாப்டாப் கம்ப்யூட்டர் என்று யாரும் சொல்வதில்லை; வெறும் 'லாப்டாப்' என்று தான் சொல்கிறோம். அதனால் தமிழிலும் நாம் 'மடி' என்றோ 'மடிமேல்' என்றோ சொன்னால் போதுமோ? :-)
//
பதில் ஏற்கனவே சொல்லி இருக்கேனே குமரன்!!
///லாப்டாப் கம்ப்யூட்டர் என்பதே, லாப்டாப் என்று சுருங்கி, கம்ப்யூட்டருக்கு ஆகுபெயராகிறது. இந்தூர்க்காரங்க, மடி மேல வெறும் கணிணி மட்டும் தான் வைப்பாங்க.. அதுனால சரிதான்...
நாமோ, "அத்தை மடி மெத்தையடி"ன்னு மழலைலேர்ந்து பூனை, நாய் எல்லாந்தான் தூக்கிச் சுமக்கிறோம். எனவே, மடிமேல் கணிணி என்பதில், நம்மைப் பொருத்தவரை, மேல் என்பது தொகைந்தால் தான் புரியும் பெயராகும்.. மடிக் கணிணி..
//
//தனியாக இருக்கும் போது மட்டும் பாடவேண்டிய கட்டாயம் இல்லை.//
எல்லாருக்குமா நான் பாடறதில்லை.. அதுக்குத் தான் சுதா, அருணா சாய்ராம் எல்லாரும் இருக்காங்களே :) அதான் காரணம்.. மத்தபடி பாட்டு நல்லாத் தான் இருக்கும்.. நான் பாடினாலும் :)
//அறிஞர் அம்மா, அறிஞை//
???!! எதுக்கு வேற சொல் தேவை என்பது எனக்குப் புரியவில்லை.. எஸ்கே சொல்வது போல், நடத்துனர் அம்மா, ஓட்டுனர் அம்மான்னு எங்கேனும் புழங்குகிறோமா என்ன?
Friday, June 23, 2006 11:31:00 PM
குமரன் (Kumaran) said...
என்ன பொன்ஸ் இப்படி? மூன்று பின்னூட்டங்கள்ல போட வேண்டியதை ஒரே பின்னூட்டத்துல முடிச்சிட்டீங்க? :-(
Friday, June 23, 2006 11:39:00 PM
குமரன் (Kumaran) said...
நடத்துனர் அம்மா, இயக்குனர் அம்மா என்றெல்லாம் நான் மற்றவர் சொல்லக் கேட்டிருக்கிறேன் பொன்ஸ்.
Friday, June 23, 2006 11:41:00 PM
மலைநாடான் said...
குமரன்!
இந்தப்பதிவை நீங்கள் எழுதியபோது நான் தொழில் நிமித்தம் வெளியிலிருந்தேன். ஆனாலும் திரும்பியபின் எழுதவேண்டுமென எண்ணணியபோதும், எப்படியோ தப்பிவிட்டது. சரி, இப்போது வந்தாயிற்றே.
இந்தப்பாடலை முதன்முதலில் சப்தஸ்வரம் நிகழ்ச்சியில் ஏ.வி.ரமணன் பாடியபோதே எனக்குப்பரிச்சயமானது. அன்றிலிருந்து இப்பாடல் என்னுள் உறைந்துவிட்டது. அதற்கு ரமணன் பாடிய அந்த நிகழ்ச்சியும் ஒரு காரணம்எனச் சொல்லலாம். அன்றைய சப்தஸ்வரங்கள் விழிப்புலன் இழந்தவர்களை வைத்த நடத்தப்பட்ட நிகழ்ச்சி.
இப்பதிவின் மூலம் அதை மீளவும் உருப்படுத்தியுள்ளீர்கள்.
நன்றி.
Wednesday, June 28, 2006 2:15:00 PM
செயபால் said...
மலைநாடானின் அதே அனுபவம் தான் எனக்கும். அதைப் பற்றி என் வலைப்பூவில் எழுதியுள்ளேன். விரும்பினால் சென்று பாருங்கள்.
Wednesday, June 28, 2006 2:44:00 PM
குமரன் (Kumaran) said...
ஜெயபால். உங்கள் பதிவை நீங்கள் எழுதிய அன்றே தாள்ப்பிரதி எடுத்துப் படித்துவிட்டேனே. பின்னூட்டம் தான் இடவில்லை இன்னும். விரைவில் வந்து பின்னூட்டம் இடுகிறேன்.
Wednesday, June 28, 2006 3:15:00 PM
செயபால் said...
சொன்னபடி வந்து பின்னூட்டும் இட்டுள்ளீர்கள். நன்றி
Thursday, June 29, 2006 9:15:00 PM
கோவி.கண்ணன் said...
திரு குமரன்,
குறையென்றும் மில்லை என்ற ஒரு கவிதையை நான் இன்று இடுகையில் போட்டவுடனே ... மறுமொழி இடுகையில் உங்கள் 'குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்திக் கண்ணா' என்ற பதிவு வருகிறது ... எதிர்பாராத தற்செயல் என்று நினைக்கிறேன்
Thursday, June 29, 2006 9:38:00 PM
குமரன் (Kumaran) said...
மலைநாடான். நீங்களும் ஜெயபாலும் சொல்லும் அந்த நிகழ்ச்சியின் ஒளிநாடா கிடைத்தால் பார்க்கவேண்டும். இல்லை எப்போதாவது மறுஒளிபரப்பு செய்வார்கள் என்று நம்பியிருக்கலாம்.
இந்தப் பாடல் மிகவும் உருக்கமான பாடல் என்பது இங்கு பின்னூட்டம் இட்ட அனைவரும் சொல்லியிருப்பது. அது உண்மையிலும் உண்மை.
Thursday, June 29, 2006 9:44:00 PM
குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன். ஜெயபாலின் பின்னூட்டத்தை அனுமதித்துவிட்டுத் தமிழ்மணத்திற்கு வந்து பார்த்த போது உங்கள் பதிவையும் பார்த்தேன். உள்ளே வந்தும் பார்த்தேன். கவிதை கொஞ்சம் நீளமாய் இருப்பது போல் தெரியவே பின்னர் படித்துக் கொள்ளலாம் என்று வெளியே வந்துவிட்டேன். பின்னர் உங்களின் பின்னூட்டம் வருகிறது. எதிர்பாராத தற்செயல் என்றும் சொல்லலாம்; கண்ணன் அருள் என்றும் சொல்லலாம். :-)
Thursday, June 29, 2006 9:46:00 PM
மலைநாடான் said...
குமரன்!
ஜெயபாலின் பதிவில் உங்களுக்கு ஒரு பதிலிட்டுள்ளேன்
Thursday, June 29, 2006 9:50:00 PM
குமரன் (Kumaran) said...
மலைநாடான். இன்னும் உங்கள் பின்னூட்டம் ஜெயபால் பதிவில் வெளியிடப்படவில்லை. அது பதியப்பட்டதும் பார்த்து மறுமொழி சொல்கிறேன்.
Thursday, June 29, 2006 9:53:00 PM
johan-pariS said...
அன்புக் குமரா!
இப்பாடல் you tube; கர்நாடக இசைப் பகுதியில் MSS -video; மிக அருமையாக உள்ளது. முடிந்தால் தொடுப்புக் கொடுத்துவிடவும்.
யோகன் பாரிஸ்
Thursday, November 23, 2006 2:09:00 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
குமரன்
எம்.எஸ் அம்மாவின் நினைவு நாள் டிசம்பரில் வருகிறது; அப்போது youtube videoவின் தொடுப்பும், இந்தப் பாடலின் ராஜாஜி பின்புலக் குறிப்பும் கொடுக்கலாம் என்று எண்ணியுள்ளேன்!
youtube video பார்த்தீர்களா? மிக அருமை!
Thursday, November 23, 2006 5:42:00 PM
குமரன் (Kumaran) said...
ஆமாம் யோகன் ஐயா. நானும் பார்த்தேன். சுட்டியைச் சேமித்து வைத்துக் கொண்டேன். இரவிசங்கர் ஒரு திட்டத்தோடு இருக்கிறார். அதனால் நான் அந்தச் சுட்டியைக் கொடுக்கப் போவதில்லை.
Tuesday, November 28, 2006 11:33:00 AM
குமரன் (Kumaran) said...
பார்த்தேன் இரவிசங்கர். மிக நன்றாக இருக்கிறது.
Tuesday, November 28, 2006 11:34:00 AM
nagai.s.balamurali said...
ஆஹா!
Sunday, April 22, 2007 8:40:00 AM
குமரன் (Kumaran) said...
ஆஹா என்று சொல்லிப் பாராட்டியதற்கு நன்றி பாலமுரளி.
Thursday, May 03, 2007 6:32:00 AM
மிக அருமையான பாடலும், வரிகளும்.
ReplyDeleteஎம்.எஸ் பக்கத்துல இன்னொரு லேடி வாயசைக்கராங்களே, அது எதுக்கு?
எனக்கு மிக மிகப் பிடித்த, மனதை உருக்கும் பாடல்களில் ஒன்று. நன்றி, குமரா!
ReplyDeleteஅவங்க எம்.எஸ். அம்மாவோட சொந்தக்காரங்க (மகள் இராதா என்று நினைக்கிறேன்). இப்படி பக்கத்துல உட்கார்ந்து இன்னொருத்தரும் பாடுறது வழக்கம் தான். இவங்களும் அதைத் தான் பண்றாங்க சர்வேசரே.
ReplyDeleteஆமாங்க கவிநயா அக்கா. நிறைய பேருக்குப் பிடிக்கும்.
ReplyDelete