என்ன தைரியம் இருந்தால் இப்படி ஒரு காரியம் (செயல்) செய்திருப்பாய் ? இதைச் செய்ய தைரியம் வேண்டும்... பொதுவாக பயன்பாட்டில் உள்ள சொல் ... வீரம் அல்லது துணிவு குறித்துச் சொல்ல பயன்படுத்தும் ஒரு சொல்.
முதன் முதலில் வீட்டுக்கு தெரியாமல் திரைப்படம் ... தைரியம் வந்து சென்றோமா ? ம் அந்த தைரியத்தில் பெற்றோர்களை ஏமாற்றும் துணிவும் கூடவே வந்திருக்கும். பின்பு தைரியமாக இரவு காட்சி பார்த்துவிட்டு ஒலியின்றி(சத்தமில்லாது) பூனைப் போல் படுத்து உறங்கி இருப்போம். இருட்டை குறித்த அச்சத்தை(பயம்) வென்ற துணிவு அது.
தன்னுடைய (சொந்த) வியாபாரம் தைரியாமாக ஆரம்பிப்பது, பெற்றோர்கள் உதவி இல்லாமல் தன் (சொந்த) காலில் நிற்கும் தைரியம் எல்லாமே ஒரு துணிவுதான்.
துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை, துணிந்தவனுக்கு துக்கமில்லை, துணிந்து நில் தொடர்ந்து சொல் என துணிவு என்பது அன்றாடம் பயன்படுத்தும் ஒரு தமிழ்ச் சொல். இருந்தாலும் துணிந்தோ, துணியாமலோ அன்றாடம் பேச்சுவழக்கிலும், எழுத்திலும் சரளமாக 'தைரியத்தை' தான் பயன்படுத்திக் (உபயோகம்) கொண்டு இருக்கிறோம்.
துணிவுடன் முடிவெடுத்து தைரியத்துக்கு பதில் அந்த இடங்களிலெல்லாம் துணிவின் துணை நாடலாம்.
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு ( குறள் 688 )
துணிவு, துணை , தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானது.
உங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் திரு. கோவி.கண்ணன் அவர்களால் 9 பிப்ரவரி 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete28 கருத்துக்கள்: SP.VR.சுப்பையா said...
//துணிவு, துணை , தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானது.//
தூதுவர்க்கு மட்டும்தானா?
அனைவருக்கும் என்று சேர்த்து விடுங்கள்!
February 09, 2007 4:16 AM
Tulsi said...
இந்தத் தலைப்பு ஒரு காலத்துலே
'தமிழ்வாணன்' வச்சிருந்தாரு அவரோட கொள்கையா.
February 09, 2007 4:27 AM
சிவமுருகன் said...
துணிவே துணை!
இதற்க்கு இல்லை இணை
இனி எல்லாம் துணிவே!
அதுவே மக்கட்க்கு இனிதே!
February 09, 2007 5:28 AM
சுல்தான் said...
சில இடங்களில் 'துணிபு' என்றும் படித்திருக்கிறேன். சரியான சொல்லா?
February 09, 2007 6:47 AM
G.Ragavan said...
ரொம்ப அருமையான சொல் கோவி. இதுல பாருங்க...துணிவுங்குற சொல் ரொம்பச் சுவாரசியமானது.
எண்ணித் துணிக கருமம். அதாவது எண்ணிய பிறகு செய்ய வேண்டும் கருமம். ஆக இங்கு செய்கை துணிவாகிறது. எதையும் செய்வதற்கு துணிவு வேண்டும் பாருங்கள். என்ன நயம்!
என்ன துணிச்சல் ஒனக்குன்னு கேக்குறது நல்லாருக்கும். இனிமே எல்லாரும் அப்படியே கேக்கனும்னு கேட்டுக்கிறேன்.
February 09, 2007 6:51 AM
நியோ / neo said...
அருமையான விடயம்! அருமையான குறள்! தொடரட்டும் உங்கள் நற்பணி!! :)
ஒரு சிறிய அய்யப்பாடு - "குறிச் சொற்கள்" / குறிசொற்கள் - இரண்டில் எது சரி?
பிறகு - 'தனித்தமிழ்ச் சொற்கள்' -ஆ அல்லது 'தனித்தமிழ் சொற்கள் -ஆ?
February 09, 2007 12:57 PM
நியோ / neo said...
ஓ! இது கோவி. கண்ணன் எழுதிய பதிவா? நான் தவறுதலாக ஜிரா என்று நினைத்துவிட்டேன். பதிவுக்கு நன்றி கண்ணன்!.
February 09, 2007 1:17 PM
G.Ragavan said...
// நியோ / neo said...
ஒரு சிறிய அய்யப்பாடு - "குறிச் சொற்கள்" / குறிசொற்கள் - இரண்டில் எது சரி? //
குறிச்சொற்கள் என்பதுதான் சரி. ஒற்று வரும்.
// பிறகு - 'தனித்தமிழ்ச் சொற்கள்' -ஆ அல்லது 'தனித்தமிழ் சொற்கள் -ஆ? //
தமிழ்ப் பூவில் வரும் ஒற்று தமிழ்ச் சொல்லிலும் வரும் நியோ. தனித்தமிழ்ச் சொற்கள் எனச் சொல்வதே சரி.
February 10, 2007 7:56 AM
G.Ragavan said...
// நியோ / neo said...
ஓ! இது கோவி. கண்ணன் எழுதிய பதிவா? நான் தவறுதலாக ஜிரா என்று நினைத்துவிட்டேன். பதிவுக்கு நன்றி கண்ணன்!. //
நியோ, கோவியும் சொல்லொரு சொல்லில் ஒரு அங்கம். சொற்களைக் கற்களைப் போல அடுக்கிக் கோட்டை கட்டி மின்னும் தமிழ்த் தங்கம்.
February 10, 2007 7:58 AM
SK said...
துணிவே துணை எனச் சொல்லவும் ஒரு தைரியம் வேண்டும்!
அதைச் சொன்ன கோவியாருக்கு ஒரு பெரிய "ஓஓ"
:))
February 11, 2007 12:24 AM
அருட்பெருங்கோ said...
எங்கள் கிராமங்களில் இன்னும் "துணுஞ்சு செய்யனும்" என்பது போல துணிவுதான் வழக்கத்தில் இருக்கிறது!
அவர்களுக்கு இன்னும் 'தைரியம்' வரவில்லை ;-)
February 11, 2007 7:21 AM
வல்லிசிம்ஹன் said...
தூய ஒழுக்கம் துணை இருந்தால் வரும் துணிவு மட்டுமே நல்ல துணிவு என்று நினைக்கிறேன்.
நன்றி கண்ணன்.
February 11, 2007 8:19 AM
நாமக்கல் சிபி said...
//
துணிவு, துணை , தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானது
//
அ.பெ.கோ விற்கு சொல்கிறீர்களா இராகவன்?
February 11, 2007 10:21 AM
குறும்பன் said...
துணிவே துணைக்கு வருவது தைரியம் துணைக்கு வராது, ஆகையால் கோவியாரின் பரிந்துரைப்படி இனிமே துணிவு கொண்டு துணிவை பயன்படுத்துவோம்.
February 14, 2007 10:02 AM
கால்கரி சிவா said...
//துணிவு, துணை , தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானது.
//
எந்த தூதுவர்?
February 14, 2007 4:01 PM
கோவி.கண்ணன் [GK] said...
// SP.VR.சுப்பையா said...
தூதுவர்க்கு மட்டும்தானா?
அனைவருக்கும் என்று சேர்த்து விடுங்கள்! //
ஐயா,
திருவள்ளுவர் தூது என்ற அதிகாரத்தின் கீழ் இதனை எழுதியுள்ளார்.
February 15, 2007 10:33 PM
கோவி.கண்ணன் [GK] said...
//Tulsi said...
இந்தத் தலைப்பு ஒரு காலத்துலே
'தமிழ்வாணன்' வச்சிருந்தாரு அவரோட கொள்கையா.
//
துளசி அம்மா,
செய்தி அறிந்து கொண்டேன். நன்றி !
February 15, 2007 10:33 PM
கோவி.கண்ணன் [GK] said...
//சிவமுருகன் said...
துணிவே துணை!
இதற்க்கு இல்லை இணை
இனி எல்லாம் துணிவே!
அதுவே மக்கட்க்கு இனிதே!
//
சிவமுருகன் நன்று சொன்னீர்கள். நன்றி
February 15, 2007 10:34 PM
கோவி.கண்ணன் [GK] said...
//சுல்தான் said...
சில இடங்களில் 'துணிபு' என்றும் படித்திருக்கிறேன். சரியான சொல்லா?
//
துணிவு என்பது தனியாக சொல்லும் போது வினைச் சொல்.
துணிபு என்று எழுதினால் பண்புப் பெயர். பெயர் சொல்லுடன் சேர்ந்து வரும்.
February 15, 2007 10:36 PM
கோவி.கண்ணன் [GK] said...
// G.Ragavan said...
ரொம்ப அருமையான சொல் கோவி. இதுல பாருங்க...துணிவுங்குற சொல் ரொம்பச் சுவாரசியமானது.
எண்ணித் துணிக கருமம். அதாவது எண்ணிய பிறகு செய்ய வேண்டும் கருமம். ஆக இங்கு செய்கை துணிவாகிறது. எதையும் செய்வதற்கு துணிவு வேண்டும் பாருங்கள். என்ன நயம்!
என்ன துணிச்சல் ஒனக்குன்னு கேக்குறது நல்லாருக்கும். இனிமே எல்லாரும் அப்படியே கேக்கனும்னு கேட்டுக்கிறேன்.
//
ஜிரா,
அருமையாக விளக்கி துணிவை சிறப்பித்தற்கு நன்றி ! வழிமொழிகிறேன்.
February 15, 2007 10:38 PM
கோவி.கண்ணன் [GK] said...
//நியோ / neo said...
அருமையான விடயம்! அருமையான குறள்! தொடரட்டும் உங்கள் நற்பணி!! :)
ஒரு சிறிய அய்யப்பாடு - "குறிச் சொற்கள்" / குறிசொற்கள் - இரண்டில் எது சரி?
பிறகு - 'தனித்தமிழ்ச் சொற்கள்' -ஆ அல்லது 'தனித்தமிழ் சொற்கள் -ஆ?
//
நன்றி நியோ,
தனித்தமிழ்ச் சொற்கள் தான் சரி என்று நினைக்கிறேன். (புணர்ச்சி விதி படிக்கனும் .. சரியான்னு சரி பார்த்து மீண்டும் சொல்கிறேன்.)
குறி சொற்கள் தான் சரி.
வல்லின மெய் ஈற்றில் (கசடதபற) வறுமொழியும் வல்லின மெய்யாக இருந்தால் ஒற்று வராது என்று படித்த ஞாபகம் !
February 15, 2007 10:42 PM
கோவி.கண்ணன் [GK] said...
//நியோ / neo said...
ஓ! இது கோவி. கண்ணன் எழுதிய பதிவா? நான் தவறுதலாக ஜிரா என்று நினைத்துவிட்டேன். பதிவுக்கு நன்றி கண்ணன்!.
//
நியோ,
ம் நாங்கெளெல்லாம் (மூவர் கூட்டணி) ஒண்ணுக்குள் ஒண்ணு !
:)
February 15, 2007 10:43 PM
கோவி.கண்ணன் [GK] said...
// SK said...
துணிவே துணை எனச் சொல்லவும் ஒரு தைரியம் வேண்டும்!
அதைச் சொன்ன கோவியாருக்கு ஒரு பெரிய "ஓஓ"
:))
//
எஸ்கே ஐயா,
தைரியம் என்ற சொல் தேவை இல்லை என்று துணிவுடன் சொல்லி இருக்கிறேன் என்கிறீகள். நன்றி !
:)
February 15, 2007 10:44 PM
கோவி.கண்ணன் [GK] said...
// G.Ragavan said... நியோ, கோவியும் சொல்லொரு சொல்லில் ஒரு அங்கம். சொற்களைக் கற்களைப் போல அடுக்கிக் கோட்டை கட்டி மின்னும் தமிழ்த் தங்கம்.//
ஜிரா,
:)))))))
நன்றி
February 15, 2007 10:45 PM
கோவி.கண்ணன் [GK] said...
//அருட்பெருங்கோ said...
எங்கள் கிராமங்களில் இன்னும் "துணுஞ்சு செய்யனும்" என்பது போல துணிவுதான் வழக்கத்தில் இருக்கிறது!
அவர்களுக்கு இன்னும் 'தைரியம்' வரவில்லை ;-)
//
அருட்பெருங்கோ,
தூணிஞ்சவங்க அவங்க... அவங்கெளுக்கெல்லாம் தைரியம் வராது என்று சொல்வதைவிட தேவை இல்லை எனவே விட்டுவிட்டார்கள் என்று சொல்வது பொருத்தம் !
:)
கருத்துக்கு நன்றி
February 15, 2007 10:47 PM
கோவி.கண்ணன் [GK] said...
//வல்லிசிம்ஹன் said...
தூய ஒழுக்கம் துணை இருந்தால் வரும் துணிவு மட்டுமே நல்ல துணிவு என்று நினைக்கிறேன்.
நன்றி கண்ணன்.
//
வல்லியம்மா,
கண்ணன் படத்துடன் நல்வாக்கு உங்கள் வாக்கு !
நன்றி !
February 15, 2007 10:48 PM
கோவி.கண்ணன் [GK] said...
//நாமக்கல் சிபி said...
அ.பெ.கோ விற்கு சொல்கிறீர்களா இராகவன்?
//
சிபி,
இது என்ன பக்கத்து இலைக்கு பாயாசமா ?
:))
February 15, 2007 10:49 PM
கோவி.கண்ணன் [GK] said...
//கால்கரி சிவா said...
//துணிவு, துணை , தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானது.
//
எந்த தூதுவர்?
//
சிவா,
தூது என்ற தலைப்பின் கீழ் திருவள்ளுவர் எழுதிய பத்துக் குறளில் அது ஒன்று. வாத்தியார் ஐயா சொன்னது போல் மற்றோருக்கும் பொருந்தும்.
February 15, 2007 10:50 PM
துணிபுன்னா வேற பொருள்னு நினைச்சேன். உதாரணம் சொல்லுங்க?
ReplyDelete