நண்பர்களே.
இது வரை அன்னையின் அருளால் அபிராமி அந்தாதியின் 97வது பாடல் வரை பொருள் சொல்லிவிட்டேன். 98ம் பாடலுக்குப் பொருள் சொல்ல முயலும் போது இந்தப் பாடல் அவ்வளவாகப் புரியவில்லை. முதலில் வரும் தைவந்து என்ற சொற்றொடருக்குப் பொருள் என்ன? கைவந்த தீயும் தலை வந்த ஆறும் ஏன் மறைந்தது? எப்போது மறைந்தது? இந்தக் கதை யாருக்காவது தெரியுமா? மீனாட்சித் திருக்கல்யாணத்தின் போது சுடலையாண்டி சுந்தரேஸ்வரராக மாறி வந்தார் என்று படித்திருக்கிறேன். அதனைத் தான் பட்டர் இங்கே சொல்கிறாரா? ஆனால் அப்போது கையிலிருக்கும் தீ மறைந்திருக்கலாம்; தலையில் கங்கையையும் மறைத்துக் கொண்டா வந்தார்? அது தெரியவில்லை. வாமனாவதாரத்தில் பிரம்மச்சாரியாக வரும் போது மார்பில் நிலையாக இருப்பவளை குறுக்கு ஆடையால் மறைத்துக் கொண்டு கள்ளன் வந்தது போல இவரும் வந்தாரா? தெரிந்தவர் தயை செய்து சொல்லுங்கள்.
தை வந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு
கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்ததெங்கே
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒரு காலும் விரகர் தங்கள்
பொய் வந்த நெஞ்சில் புகல் அறியா மடப்பூங்குயிலே
அண்ணா!
ReplyDeleteஎனக்கு தெரிந்த வரை சொல்கிறேன்
இங்கே தை என்பது அன்னையின் ஒரு அம்சமான சங்கராந்தியை குறிப்பது! (சங்கராந்தி அம்மோ என்று நம்மவர்கள் சொல்வார்களே! தைமாதத்தில் முதல் நாளில் வருவாள் என்பதால் இவரை இந்த பெயர்கொண்டு அழைத்திருக்கலாம்!)
அம்மா அபிராமி எப்படி உன்னை கண்ட பொழுதில் சங்கரனின் தலையிலிருக்கும் ஆகாய கங்கையும் கையிலிருக்கும் தீயும் மறைந்து ஒளிந்து கொண்டது. அது போல் மெய்யான உன் திருநாமத்தை கொண்ட என்நெஞ்சில் என்றும் பொய் வாராதிருக்க அருள்வாய்.(கயவர்கள் உன் தொண்டனின் தோழனாகாமல் இருக்க அருள்வாய்.)
இப்பாடலை தொடர்ந்து பாராயணம் செய்ய : சூதுவாதில்லா நணபர்கள் கிடைக்க பெறுவர்!
//கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்ததெங்கே//
ReplyDeleteகை வந்த தீயும்=மாப்பிள்ளை கையில் பூச்செண்டு இருக்கணும்! தீச்செண்டு இருக்கலாமோ? அதான் தீ மறைந்து கொண்டது!
தலை வந்த ஆறு! = ஈசனை வம்பில் மாட்டி விடுவதில் உங்களுக்கு என்ன அம்புட்டு குஷி குமரன்?
கை வந்த தீ கூட மறைக்காமல் வர முடியும்!
தலை வந்த கங்கை ஆற்றை மறைக்காமல் வந்தால் தலை வலி அல்லவா! :-)))
பொண்ணு கொடுப்பீங்களா மருதைக்காரவுங்க!
அடிச்சி விரட்ட மாட்டீங்க! :-)))
//தைவந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு//
ReplyDeleteதை=அலங்காரம், அழகு, ஒன்றாய்ச் சேர்ப்பது! தையல் என்று பெண்ணைக் குறிப்பதில்லையா?
தையலிடம் அழகாய் வந்து, அவள் அம்மி மிதித்த திருவடியைச் சூடிய சங்கரனுக்கு!
//கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்ததெங்கே//
கையில் உள்ள தீ மணக் கோலத்துக்காக மறைந்தது!
தலையில் உள்ள கங்கையும் அதே மணக் கோலத்துக்காக மறைந்தது!
திருமண வேள்விக்கு நெருப்பும், மற்ற கும்பச் சடங்குகளுக்கு நீரும், மணம் நடத்தும் வீட்டார் அல்லவா கொடுக்க வேண்டும்!
இறைவன் அவற்றை அந்த "வாமனக் கள்ளனைப்" போல் மறைத்து வரவில்லை!
அவை தானாய் மறைந்தன! ஒளிந்து கொண்டன!
அதனால் தான், கரந்தனன் எங்கே என்று கேட்காது, கரந்தது எங்கே என்று கேட்கிறார்! :-)
இவை இரண்டும் மறைஞ்சது சரி!
ReplyDeleteஆனாப் பாருங்க!
தலையில் சந்திரன் மறையவில்லை! கங்கை மட்டும் மறைகிறது!
கையில் மான் மறையவில்லை! தீ மட்டும் மறைகிறது!
ஏன்? ஏன்? ஏன்?
படத்திலும் பாருங்க!
http://www.indiantemples.com/Tamilnadu/Madurai/meenakshi.jpg
சந்த்ர மெளலீஸ்வரா! நீயே சொல்லப்பா!
சந்த்ர சேகரரே, நீங்க சொன்னாலும் சரியே! :-)
பாடலுக்கு மின்னஞ்சலிலும், பின்னூட்டங்களிலும், தொலைபேசியிலும் விளக்கம் சொன்ன நண்பர்களுக்கு நன்றிகள். விரைவில் இந்தப் பாடலுக்கு விளக்கத்தை 'அபிராமி அந்தாதி' பதிவில் இடுகிறேன். நன்றி.
ReplyDeleteஎன் கிட்டே திரு கி.வா. ஜகந்நாதன் அவர்களின் உரையுடன் கூடிய புத்தகம் இருந்தது. தேடிட்டு இருக்கேன், கிடைச்சதும் உங்களுக்கு மெயிலறேன்!!!
ReplyDeleteஇங்கே இவங்க சொல்ற விளக்கத்துக்கும், திரு கி.வா.ஜ அவர்களின் விளக்கத்துக்கும் எவ்வளவு வேறுபாடு?? ம்ம்ம்ம் தை என்பதன் அர்த்தமே வேறேயா இல்லை வருது!!! நானும் முதலில் "தை" தப்போனு நினைச்சேன், பதிகம் சொல்லிட்டு இருந்தாலும், ப்ரிண்டிங் பிழையோனு ஒரு யோசனை, அதுதான் சரினு இப்போப் புரியுது!
ReplyDeleteவிளக்கத்திற்கு நன்றி சிவமுருகன்.
ReplyDeleteவிளக்கங்களுக்கு நன்றி இரவிசங்கர்.
ReplyDeleteமின்னஞ்சலில் சொன்னதற்கு நன்றி கீதாம்மா.
ReplyDeleteஐயா, நான் அறிந்த வகையில் ;
ReplyDelete"தை வந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்குகை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்ததெங்கேமெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒரு காலும் விரகர் தங்கள்பொய் வந்த நெஞ்சில் புகல் அறியா மடப்பூங்குயிலே"
பெண்ணே உன் காலில் இருந்த தாமரை தலையில் சூடிய சங்கரர்க்கு கையில் இருந்த தீபமும் தலையில் இருந்து பிறந்த காவேரியும் எங்கே போனதோ !! உண்மை உரைப்போரை தவிர மற்ற விரகர் நெஞ்சில் குடி கொள்ளாத பூங்குயிலானவளே..!
மிகத் தாமதமாகச் சொல்கிறேன். ஆனாலும் இங்கே இதுவரை ‘தைவந்து’ என்று சொல்லுக்குச் சரியான பொருளை யாரும் தராததாகத் தோன்றுவதால் சொல்லத் துணிகிறேன்.
ReplyDelete‘தைவருதல்’ என்றால் தொடுதல், தடவுதல். ”தைவந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு” என்றால் “உனது பாதமாகிய தாமரையைத் தொட்டு வருடித் தன் தலைமீது சூடிக்கொண்ட சங்கரருக்கு” என்பது பொருள்.
மதுரபாரதி
நன்றி மதுரபாரதி ஐயா. தைவருதல் என்றால் தொடுதல், தடவுதல் என்ற பொருளை இது வரை இங்கே யாரும் சொல்லவில்லை. சொன்னதற்கு மீண்டும் நன்றி.
ReplyDeleteகி.வா.ஜகந்நாதன் நூல்கள்
ReplyDeleteஅபிராமி அந்தாதி
http://www.thamizhagam.net/nationalized%20books/Ki%20Va%20Jagannathan.html
கி.வா.ஜகந்நாதன் நூல்கள்
ReplyDeleteஅபிராமி அந்தாதி
http://www.thamizhagam.net/nationalized%20books/Ki%20Va%20Jagannathan.html
நன்றி ramsam!
ReplyDelete