Friday, June 13, 2008
உலகின் புதிய கடவுளுக்கு வணக்கம்! (கேள்வி பதில் 1)
உலகின் புதிய கடவுளாம் நமது செல்வன் கேட்ட கேள்விகளுக்கு பதில்கள் இங்கே.
***
என்னங்க முனைவர். செல்வன்? முதல் கேள்வியைன்னு ஒற்றையில் சொல்லிட்டு மொத்தம் ஐந்து கேள்விகள் கேட்டிருக்கீங்க? சரி. சரி. நெற்றிக்கண்ணைத் திறக்காதீங்க. ஐந்துக்கும் பதில்கள் சொல்றேன். :-)
1) கல்லூரியில் படிக்கும்போது ஜாலியாக சராசரி பசங்களை போல் இருந்தீர்களா அல்லது ரொம்ப நல்ல பையனாக இருந்தீர்களா?
அப்ப சராசரி பசங்கன்னா நல்ல பசங்க இல்லைன்னு சொல்றீங்களா? எந்த அம்மா அப்பாகிட்ட கேட்டாலும் அவங்க அவங்க பசங்க நல்ல பசங்க தான். கூட இருக்கிற பசங்க தான் கெடுத்துவுட்டுர்றாங்க. இல்லியா? :-)
சராசரி பசங்கன்னா தம், தண்ணி இதெல்லாம்ன்னா இன்னைக்கும் இதெல்லாம் கிடையாது. ஒரு தடவை இந்தியாவுக்கு விமானத்துல வர்றப்ப சுவைச்சுப் பார்க்கலாம்ன்னு பீர் கேன் வாங்கி குடிச்சுப் பார்த்தேன். பாதிக்கு மேல எறங்கலை. திருப்பிக் குடுத்தா அந்த விருந்தோம்பி அக்கா வாங்கிக்க மாட்டேன்னுட்டாங்க 'யூ கேன் டூ இட் மேன்'ன்னுட்டு போயிட்டாங்க. ரெண்டு மூனு தடவை குடுத்தும் இதே கதை தான். மூக்கைப் பிடிச்சுக்கிட்டு 'யூ கேன், ஐ கேன், பீர் கேன்'ன்னு சொல்லிக்கிட்டே குடிச்சு முடிச்சேன். அன்றும் இன்றும் என்றும் நாள்தோறும் (திங்கள் - எங்க முருகனுக்கும் சிவனுக்கும் உரிய நாள் தவிர) கோழி, ஆடு, மீன், எறா, அப்பப்ப மாடு, அப்பப்ப பன்னின்னு தின்னுக்கிட்டு தான் இருக்கேன்.
பள்ளிக்கூடத்துல படிக்கிறப்பவே செக்ஸ் மாத இதழ்கள் எல்லாம் வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். கல்லூரியில படிக்கிறப்ப கொஞ்சம் முன்னேறி 'மனைவியை மகிழ்விப்பது எப்படி'ங்கற லேனா தமிழ்வாணனோட புத்தகம் படிச்சேன். இப்ப அப்பப்ப தொலைக்காட்சியிலயும் இணையத்திலயும் பாக்குற திரைப்படங்கள், நகர்படங்கள்ன்னு தொடருது.
இப்ப நீங்களே சொல்லுங்க. நான் நல்ல பையனா இருந்திருக்கேனா/இருக்கேனா இல்லையா? உங்க வரையறைபடி ஜாலியா இருந்திருக்கேனா இல்லையா? :-)
2) ஆன்மிகம் உங்கள் பர்சனல் வாழ்க்கையில் என்ன பங்காற்றுகிறது?
ஆன்மிகம்ன்னாலே தனிப்பட்டது தான்னு ஒரு வரையறையை இப்ப நெறைய பேரு சொல்லத் தொடங்கிட்டாங்க. எனக்கு அது சரி தானான்னு தெரியலை. 'கூடியிருந்து குளிர்ந்து'ன்னு எங்க அக்கா கோதை சொன்னதைத் தான் சரின்னு நெனைச்சுகிட்டு கூட்டத்துல கோவிந்தா போட்டுகிட்டு இருக்கேன். நல்லவங்க கூட்டத்து நடுவுல ஒரு கெட்டவன் நல்லவனைப் போல வேடம் கட்டிக்கிட்டு இருந்தா அவனையும் நல்லவன்னு சொல்லிடுவாய்ங்க இல்ல அது மாதிரி இருக்கேன். ஆனா இந்தக் கூட்டத்து நடுவுலயும் ஒவ்வொருத்தர் உள்ளேயும் ஒரு பெருங்கள்வன் இருந்துக்கிட்டு எவன் நல்லவன் எவன் கெட்டவன்னு தெரிஞ்சுக்கிறான்னும் தெரியும். ஆனா ஏமாத்துறது நடந்துக்கிட்டு தான் இருக்கு.
பர்சனல் வாழ்க்கையை இரு பிரிவா பிரிச்சுக்கிறேன். ஒன்னு என்னளவுல தனிப்பட்ட தனிமனித வாழ்க்கை. அதுல 100% ஆன்மிகம் தான் பங்காற்றுது. அப்படி மொத்தமா பொய் சொல்லக்கூடாதுன்னு தடுத்தீங்கன்னா 85, 90%ன்னு சொல்லுவேன். அதுவும் பொய் தான்னு சொல்றீங்களா? உங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வந்தேன் பாருங்க. என்னை புதூச்செருப்பால தான் அடிக்கணும். :-)
குடும்ப வாழ்க்கையின்னு சொல்ல வந்தா 30% தான். தெனமும் காலையில எந்திருச்சு சாமி கும்புடறது கூட கிடையாது. அவக்கர அவக்கரமா (அவசர அவசரமா) எழுந்து 1 மணி நேரம் பிளாக்கிவிட்டு அவக்கர அவக்கரமா குளிச்சு பணியாலயத்துக்குப் போறதுக்கே சரியா இருக்கு. செய்யும் தொழிலே தெய்வம் இல்லியா? :-)
மனைவியும் மகளும் ஆன்மிகவாதிகளும் இல்லை; பக்தியாளர்களும் இல்லை; இன்னும் என்ன என்ன இல்லைன்னு சொல்லலாமோ அதெல்லாம் இல்லை. மகனைப் பத்தி இனி மேல தான் தெரியும். இப்ப என்னைக் கொஞ்சம் காப்பியடிக்கிறான். ஆ, ஊன்னா கையைத் தூக்கி கும்புடறான். சன் தொலைக்காட்சி திருவிளையாடல் வர்றப்ப தலைப்புப்பாடல் முடியுற வரைக்கும் அவனும் சரி; நானும் சரி கைகளை கும்புட்ட மேனிக்காவே வச்சுக்கணும். இல்லாட்டி இழுத்து புடிச்சு வச்சிருவான். அவன் என்னைப் போல வந்திருவானோன்னு வீட்டுல ஒரே கவலை. :-) அப்படியெல்லாம் ஆகாதுன்னு ஆதரவா நாலு வார்த்தை சொல்லிக்கிட்டு இருக்கேன். :-)
3) $4.10 காலன் பெட்ரோல் உங்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை கொண்டுவந்துள்ளது?
திரும்புன பக்கம் எல்லாம் இதே தான் பேச்சு. பெட்ரோல் விலையேறிப்போச்சு உணவு விலை ஏறிப்போச்சுன்னு. அடிவாங்குறவங்க எல்லாம் பாவம் தான் இல்லை? :-(
என்னைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இதுவரைக்கும் வரலை. சேமிச்சு வக்கிறது கொஞ்சம் குறையுதோ என்னவோ கவனிக்கணும். அம்புட்டுத் தான்.
4) இதுவரை சுற்றி பார்த்ததில் மறக்க முடியாத சுற்றுலா தளம் எது?
இன்னா கேள்விய்யா இது? ஒன்னா ரெண்டா? எத்தனையோ சுற்றுலா தளங்களும் தலங்களும் இருக்கின்றனவே. எதை என்று சொல்வது? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதில் வருமே. சரி. இன்றைக்குத் தோன்றும் இடம் 'கருநாடகத்தில் இருக்கும் தருமஸ்தலா'. ஏன் என்று கேட்காததால் அதை சொல்லப் போவதில்லை. :-)
5) இத்தனை கடவுள்களை பற்றி எழுதுகிறீர்களே..இதில் உங்கள் ஃபேவரைட் யார்? ஏன்? (ஒருத்தர் பேரை தான் சொல்லவேண்டும்)
கடவுள்களா? நானா? எழுதவில்லையே. ஒரே கடவுளைப் பற்றித் தானே எழுதுகிறேன்?! ஒருத்தர் பெயரை மட்டுமே சொல்லணும்ன்னு சொன்னதால அந்த ஒருத்தரின் பெயர்களைச் சொல்றேன். சொல்லி முடியாது அந்த பெயர்கள். ஆயிரக்கணக்கில உண்டு. நானோ கணக்கில் சிறுவயசுல (அதாவது கல்லூரியில் படிக்கும் வரை) பலமா இருந்தேன். இப்போதோ கணக்குடன் எனக்குப் பிணக்கு. முடிஞ்சவரைக்கும் சொல்றேன்.
கண்ணன், கேசவன், மாதவன், கோவிந்தன், சிவன், சந்திரமௌலி, ஏழைப்பங்காளன், பசுபதி, முருகன், கந்தன், வள்ளி மணாளன், தேவசேனாபதி, பிள்ளையார், கணபதி, சித்திவிநாயகன், ஐங்கரன், கொற்றவை, குமரி, சிவசங்கரி, கருணாகரி,..... இப்படி நிறைய பெயர்கள் அந்த ஒருத்தருக்கு உண்டு. என்னால் சொல்லி முடியாது.
(1)அத்வைதம் / வசிஷ்டாத்வைதம் / துவைதம் ஆகிய மூன்றில் எதை நீங்க உங்களுக்கு ஏற்றதாக நினைக்கிறீங்க? [ஏதேனும் ஒன்றை மட்டும் சொல்லவும்] (2)ஏன் அது உங்களுக்கு ஏற்றதுன்னு நினைக்கிறீங்க?
ReplyDelete//இப்ப நீங்களே சொல்லுங்க. நான் நல்ல பையனா இருந்திருக்கேனா / இருக்கேனா இல்லையா? உங்க வரையறைபடி ஜாலியா இருந்திருக்கேனா இல்லையா? :-)//
ReplyDeleteசெல்வன் என்னா சொல்றது?
நான் சொல்றேன் நீங்க நல்ல பையனே தான்!
ஜாலி பையன் இல்லவே இல்ல!
பின்ன பீர் (அதுவும் ஒரே ஒரு கேன்) அடிச்சத சொன்னீங்க! சைட் அடிச்சதைச் சொன்னீங்களா?
//பள்ளிக்கூடத்துல படிக்கிறப்பவே செக்ஸ் மாத இதழ்கள் எல்லாம் வாங்கிப் படிக்கத் தொடங்கினேன்//
we want names! :-))
//கல்லூரியில படிக்கிறப்ப கொஞ்சம் முன்னேறி 'மனைவியை மகிழ்விப்பது எப்படி'ங்கற லேனா தமிழ்வாணனோட புத்தகம் படிச்சேன்//
அடச்சே!
லேனாவெல்லாம் ஒரு படம் கூட இருக்காது! இதெல்லாம் ஒரு புத்தகமா? :-))
கல்லூரியில் "அந்த"ப் படத்துக்கு எல்லாம் போக மாட்டீங்களா?
பள்ளியிலேயே போவுறானுங்க வாழைப்பந்தல் பசங்க! :-))
This comment has been removed by the author.
ReplyDelete//ஆன்மிகம்ன்னாலே தனிப்பட்டது தான்னு ஒரு வரையறையை இப்ப நெறைய பேரு சொல்லத் தொடங்கிட்டாங்க//
ReplyDeleteஎவன் சொன்னான்?
அப்படின்னா லவ்வு கூடத் தனிப்பட்டது தான்!
ஆனா அதுக்கு கதை எழுதி, கவுஜ எழுதி, படம் போட்டு, பதிவு போட்டு, மொக்கை போட்டு, இன்னும் என்னென்னமோ போட்டு...
கூடி இருந்து குளிர்ந்தேலோ-ன்னு ஜொள்ளல? அது மாதிரி தான் இதுவும்!
"அது" தான் "இது"!
"இது" தான் "அது"!
:-))
//மனைவியும் மகளும் ஆன்மிகவாதிகளும் இல்லை; பக்தியாளர்களும் இல்லை//
ReplyDeleteசூப்பர்! அண்ணி இஸ் கலக்கிங்ஸ்!:-)
சிவக்கொழுந்து இஸ் கலக்கோ கலக்கிங்ஸ்! :-)
//ஆ, ஊன்னா கையைத் தூக்கி கும்புடறான். சன் தொலைக்காட்சி திருவிளையாடல் வர்றப்ப தலைப்புப்பாடல் முடியுற வரைக்கும் அவனும் சரி; நானும் சரி கைகளை கும்புட்ட மேனிக்காவே வச்சுக்கணும்//
அச்சச்சோ!
நோ நோ ராசா! இப்பிடி எல்லாம் அப்பாரு மாதிரி இருக்காத!
இதுக்குத் தான் சொல்லுறது! திருவிளையாடல் எல்லாம் போட்டுக் காட்டினா இப்பிடித் தான்!
நோ திருவிளையாடல்! நோ ராமாயணம்!
ஒன்லி கண்ணன்-கோபிகை கதை!
ஸ்ரீ கிருஷ்ணா சீரியல் மொதல்ல போடுங்க!
அப்பறம் பாருங்க அண்ணியார் எப்படி சந்தோசப் படுறாங்க-ன்னு!
உங்க தெருவிலே (ட்ரைவிலே) பெண்களுக்கு ஓயாத தொல்லை - தீராத விளையாட்டுப் பிள்ளை!
//இதுவரை சுற்றி பார்த்ததில் மறக்க முடியாத சுற்றுலா தளம் எது//
ReplyDeleteஇந்தக் கேள்வியில இருக்குற நுண்ணரசியல் தெரியாம என்ன குமரன் நீங்களும் பதில் சொல்லிக்கிட்டு!
அவரு டிஸ்னிலாண்டு-ன்னு சர்வே எடுக்கத் தான் இந்தக் கேள்வியே!
செல்வா...ஏமிரா இது? நூக்கே பாக உந்தியா? :-)
//இப்படி நிறைய பெயர்கள் அந்த ஒருத்தருக்கு உண்டு. என்னால் சொல்லி முடியாது//
ReplyDeleteதோடா!
அது செல்வனுக்கும் தெரியும்! எங்களுக்கும் தெரியும்!
நிறைய பெயர்கள் "அந்த" ஒருத்தருக்கு உண்டு!
அதுல...எந்தப் பெயர் புடிக்கும்-னு தான் கேள்வியே!
அந்த ஒரே ஆளோட அத்தினி பேருல, ஒரு பேரைச் சொல்லுங்க குமரன் சொல்லுங்க!
நீங்க என்ன எங்க பாவனா-வா? இல்லை எங்க நயனா? "எந்த டைரக்டர் புடிக்கும்"-னு கேட்டா மழுப்பி அழகாச் சிரிக்கறதுக்கு?
நாங்க கேக்குறது ஒரே டைரக்டரின் பல பட்டப் பேருல, எந்தப் பட்டப் பேரு புடிக்கும்?
சும்மா இந்த உல்லல்லாலாயீ எல்லாம் வேணாம் சொல்லிட்டேன்! :-)
முத்திரை, ஸ்டாம்புக்கு எல்லாம் பயப்படாதீங்க! அதெல்லாம் ஒங்களுக்கு ஏற்கனவே குத்தியாச்சி! :-))
ReplyDeleteவேணும்னா எக்ஸ்ட்ரா லெக் பீசுக்கு அம்பி, மெளலி அண்ணா, ஜிரா, இப்போ லேட்டஸ்ட்டா ஸ்ரீதரை அனுப்பி வைக்க்கிறேன்! :-))
ரொம்ப வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteவெளிப்படையாக இருப்பவர்களுக்குத் தான் கோவம் அதிகமாக வருகிறது...எனக்கும் வரும் !
ஏன் ?
நேர்மையாக இருக்கிறோம் என்ற கர்வம் தான் நெருக்கமானவர்களிடம் கூட கோபமாக மாறிவிடுகிறதென்றே நினைக்கிறேன்.
:)
என்ன சொல்றிங்க ?
ரொம்ப நேர்மையா பதில் சொல்லி இருக்கீங்க :)
ReplyDelete//சும்மா இந்த உல்லல்லாலாயீ எல்லாம் வேணாம் சொல்லிட்டேன்! :-)//
அதே அதே!
அந்த ஒருத்தருக்கு பல பேரும் பல உருவங்களும் இருக்கே. அதுல எந்த பேர்/உருவம் பிடிக்கும் உங்களுக்கு?
உங்க பையன் உங்களை மாதிரி இருப்பதில் கவலைப்படுவது நீங்களா? அல்லது மனைவியா?
ReplyDeleteமனைவியாக இருந்தால் நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கனும். :-))
This comment has been removed by the author.
ReplyDeleteபதில்களுக்கு நன்றி குமரன்..
ReplyDelete//இப்ப நீங்களே சொல்லுங்க. நான் நல்ல பையனா இருந்திருக்கேனா/இருக்கேனா இல்லையா? உங்க வரையறைபடி ஜாலியா இருந்திருக்கேனா இல்லையா? :-) //
ரொம்ப நல்ல பையனாத்தான் இருந்திருக்கீங்க / இருக்கீங்க..:-)
ரொம்ப பெரிய கேள்வியைக் கேட்டுட்டீங்க மௌலி. பதில் பொதுவுல சொல்லணுமா தனிமடல்ல சொன்னா போதுமா? :-)
ReplyDeleteசைட் அடிச்சதைப் பத்தி சொல்றதுக்கு இன்னொரு கேள்வி இருக்கு இரவிசங்கர். அதுக்குப் பதில் சொல்றப்ப அதைப் பத்தி சொல்றேன். அவக்கரம் வேண்டாம்.
ReplyDeleteநான் படிச்ச புத்தகங்களோட பெயர்கள் எல்லாம் மறந்து போச்சு. உங்களுக்கு நினைவிருந்தா சொல்லுங்க. அது தான் நானும் படிச்சேனான்னு சொல்றேன்.
நானும் பள்ளிக்கூடத்துல படிக்கிறப்பவே சாமி படங்களுக்கு எல்லாம் போயிருக்கேன். எங்க ஊர் சிடி சினிமாவும் தீபா தியேட்டரும் அதுக்கு பேமஸ்.
அது தான் இது. இது தான் அது. நல்ல விளக்கம் இரவிசங்கர். நன்றிகள்.
ReplyDeleteஎனக்கும் நினைவிருக்கு இரவிசங்கர். வேணும்னே டிஸ்னிலாண்ட்னு சொல்லாம விட்டேன். :-)
ReplyDeleteஊரறிஞ்ச இரகசியத்தைச் சொல்லு சொல்லுன்னா எப்படி இரவிசங்கர். நானும் கோடு போட்டிருக்கேன். நீங்க அதை வச்சு ரோடு போடாம ஒரு பெயர் ஒரே ஒரு பெயர்ன்னு கதறுனா நான் என்ன தான் பண்றது? சரி நானே என்னுடைய நுண்ணரசியலைப் போட்டுடைக்கிறேன். பெயர்கள் சொல்லப்பட்ட வரிசையைக் கவனிக்கவும்.
ReplyDeleteஇதை நான் சொல்லிட்டதால அந்தப் பெயர் வரிசையில இன்னும் சில நுண்ணரசியல்கள் இருக்கு. அதையெல்லாம் நீங்க தான் கண்டுபிடிச்சு சொல்லணும். குறைந்த பட்சம் கவிநயா அக்காவுக்கு மட்டுமாவது. அவங்களும் நம்ம அரசியலையெல்லாம் கொஞ்சம் தெரிஞ்சுக்கட்டுமே. :-)
முத்திரை எல்லாம் கண்ணனே குத்தியாச்சு. இனிமே புதுசா வந்து யாரும் குத்தத் தேவையில்லை. சரி தானே கோவியாரே?! :-)
ReplyDeleteஎக்ஸ்ட்ரா லெக்பீஸ் குடுக்கிற பட்டியல்ல இராகவனை சேர்த்தது சரியில்லை. அவரு சாப்புடாம வேற யாருக்காவது லெக்பீசைக் குடுப்பாரா? அனியாயமா இருக்கே?!
ஸ்ரீதரை பத்தி தெரியலை. ஆனா மத்தவங்க எல்லாம் லெக்பீசை கேக்காமலேயே கொடுத்துருவாங்கன்னு நினைக்கிறேன். :-)
பாராட்டுகளுக்கு நன்றி கோவியாரே. பேரு மட்டும் தான் பெத்த பேரு கோவியாருன்னு ஆனா நிறைய கோவிச்சுகுவீங்கன்னா சொல்றீங்க? சரி தான். :-)
ReplyDeleteபதில் சொல்லிட்டேன் கவிநயா அக்கா. என்ன பதில் சொன்னேன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம். :-)
ReplyDeleteவடுவூராரே. ஜாக்கிரதையா இருக்கத் தான் முயல்கிறேன். அதுக்குத் தான் ஆன்மிகம் 30%. இல்லாட்டி அது கூட இருக்கும். :-)
ReplyDeleteநன்றி செல்வன்.
ReplyDelete//கண்ணன், கேசவன், மாதவன், கோவிந்தன், சிவன், சந்திரமௌலி, ஏழைப்பங்காளன், பசுபதி, முருகன், கந்தன், வள்ளி மணாளன், தேவசேனாபதி, பிள்ளையார், கணபதி, சித்திவிநாயகன், ஐங்கரன், கொற்றவை, குமரி, சிவசங்கரி, கருணாகரி,..... //
ReplyDeleteஏசு சாமி, அல்லா சாமி, இவங்கெல்லாம் கடவுள்ஸ் இல்லியா?
இல்ல, அவங்களை உங்களுக்குப் பிடிக்காதா? :)
ஜூனியர்,
ReplyDeleteநேர்மையான, மிகச் சிறப்பான மனதைத் தொட்ட பதில்களுக்கு சீனியரின் பாராட்டுகள் :)
வாழ்க, வளர்க !
எ.அ.பாலா
சர்வேசன்,
ReplyDeleteஏன் ஏசு, அல்லா இவங்களை மட்டும் பட்டியல்ல போட்டிருக்கீங்க? கருப்பண்ண சாமி, மாரியம்மன், ஐயனார் இவங்களை எல்லாம் விட்டுட்டீங்க?
நான் தான் தெள்ளத் தெளிவா எல்லா பேரையும் சொல்லி முடியாதுன்னு சொல்லியிருக்கேனே? எதுக்கு வம்புக்கு இழுக்கிறீங்க?
எனக்கு ஏசு, அல்லாவைப் பிடிக்காதுன்னா உங்களுக்கு கருப்பண்ண சாமி, மாரியம்மன், ஐயனார் சாமிகளைப் பிடிக்காதுன்னு பொருளா?
:-)
நன்றி சீனியர் ஐயா.
ReplyDelete//பதில் சொல்லிட்டேன் கவிநயா அக்கா. என்ன பதில் சொன்னேன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம். :-) //
ReplyDeleteமுதல்லயே லேசா பொறி தட்டிச்சு... :)
மாலவன் தானே?
இப்படி கேட்டா சொல்லமாட்டேன்னு தெரியாதா அக்கா? :-)
ReplyDeleteமௌலி,
ReplyDeleteஉங்கள் கேள்விக்கு ஒரு மாற்றுக் கேள்வி. அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் இவற்றில் எனக்கு எதில் ஈடுபாடு அதிகம் என்று உங்களுக்குத் தோன்றுகிறது? ஏன்? இந்தக் கேள்விகளுக்குப் பதில்கள் இங்கேயே சொல்லலாம் (அ) தனிமடலில் அனுப்பலாம். :-)
//இத்தனை கடவுள்களை பற்றி எழுதுகிறீர்களே..இதில் உங்கள் ஃபேவரைட் யார்? ஏன்? (ஒருத்தர் பேரை தான் சொல்லவேண்டும்)//
ReplyDeleteமுருகன் சன்னதியில போயி கும்படரச்சே எங்க வீட்ல சின்ன வயசில சொல்லி கொடுத்தது நியாபகம் வருது."சுவாமிநாதா,சரவண்பவா,ஷன்முகவேலா,வேலாயுதனே,வடிவேலவனே,வைய்யாபுரியா,முருகைய்யா,ஆறுமுகனே,பன்னிருகைய்யா,வள்ளிமணாளா,தேவ சேனாபதே சுப்ரமண்யா.".....அப்படின்னு முடிச்சிருவோம்
இப்படி சொல்லுவீங்கன்னு நினைச்சேன்!!:):)
//ரொம்ப பெரிய கேள்வியைக் கேட்டுட்டீங்க மௌலி. பதில் பொதுவுல சொல்லணுமா தனிமடல்ல சொன்னா போதுமா? :-)//
ReplyDelete//அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் இவற்றில் எனக்கு எதில் ஈடுபாடு அதிகம் என்று உங்களுக்குத் தோன்றுகிறது? ஏன்? இந்தக் கேள்விகளுக்குப் பதில்கள் இங்கேயே சொல்லலாம் (அ) தனிமடலில் அனுப்பலாம். :-)//
ஏதேது சொந்த செலவில் சூன்யம் வச்சுக்கிட்டேன் போல? :-)
உங்களூக்கு அத்வைத சார்பு அதிகம் இருக்குமுன்னு தோணுது...
நீங்க எனக்கு தனிமடல்ல பதில் சொன்னாலும் சரியே!!!
//சரி நானே என்னுடைய நுண்ணரசியலைப் போட்டுடைக்கிறேன்.
ReplyDeleteபெயர்கள் சொல்லப்பட்ட வரிசையைக் கவனிக்கவும்.//
கவ-நிக்கவும்! கவ-நிக்கவும்!
எல்லாரும் நில்லுங்கப்பு!
சரி எல்லாரும் கவனிச்சாச்சா?
இப்போ சொல்லுங்க மக்கா!
குமரன் ஃபேவரிட்டின் ஒரே ஒரு பேரு என்னா? என்னா? என்னா?
:-)
(அடுத்த புதிரா புனிதமாவுக்கு ஒரு கேள்வியும் ரெடி ஆயிரிச்சி என்பதையும் ஜொள்ளீக் கொள்கிறேன், குமரன்)
இராதாம்மா. நீங்க சொன்ன மாதிரி எங்க வீட்டுல சொல்லிக் குடுந்தாங்களான்னு நினைவில்லை. எங்க அம்மா சொல்லிக் குடுத்திருக்க வாய்ப்புண்டு. ஆனா எனக்கு மறந்திருக்கும். நல்லதை எல்லாம் விரைவா மறந்துர்றது தானே எனக்கு வழக்கமா போச்சு.
ReplyDeleteமௌலி,
ReplyDeleteஎல்லோருமே அவங்க அவங்க பார்வையிலே இருந்து தான் மத்தவங்களைப் பார்க்குறாங்கன்னு நீங்க உறுதிபடுத்திட்டீங்க. நான் மாத்தி சொன்னா அதிர்ச்சி ஆக மாட்டீங்க தானே?! :-)
கவிநயா அக்கா உங்க கேள்விக்கும் பதில் பொதுவுல வரணும்ன்னு சொல்லிட்டாங்க. அதனால பொதுவுலயே சொல்றேன்.
ஊரறிஞ்ச இரகசியத்தை வச்சு புதிரா புனிதமாவா? நடத்துங்க இரவிசங்கர். எப்ப வரும் அந்தக் கேள்வி?
ReplyDelete