என் சுவாசக் காற்றே! சுவாசக் காற்றே! நீயடி!
உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி?!
நான் பாடும் பாட்டே! பன்னீர் ஊற்றே! நீயடி!
முதல் முதல் வந்த காதல் மயக்கம்
மூச்சுக்குழல்களில் வாசல் அடைக்கும்
கைகள் தீண்டுமா? கண்கள் காணுமா?
காதல் தோன்றுமா? (என் சுவாசக் காற்றே)
இதயத்தைத் திருடிக் கொண்டேன் - என்
உயிரினைத் தொலைத்துவிட்டேன்
தொலைத்ததை அடையவே
மறுமுறை காண்பேனா நான்?
என் சுவாசக் காற்றே! சுவாசக் காற்றே! நீயடி!
உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி?!
நான் பாடும் பாட்டே! பன்னீர் ஊற்றே! நீயடி!
முதல் முதல் வந்த காதல் மயக்கம்
மூச்சுக்குழல்களில் வாசல் அடைக்கும்
கைகள் தீண்டுமா? கண்கள் காணுமா?
காதல் தோன்றுமா? (என் சுவாசக் காற்றே)
திரைப்படம்: என் சுவாசக் காற்றே
வெளிவந்த வருடம்: 1999
பாடியவர்கள்: எம்.ஜி. ஸ்ரீகுமார், சித்ரா
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்
இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 10 டிசம்பர் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete4 comments:
செந்தில் குமரன் said...
இந்தப் படத்தில் வரும் வேறு சில பாட்டுக்கள் மிகவும் பிடித்திருந்ததால் இந்தப் பாட்டை அதிகம் கேட்டதில்லை. பாடல் வரிகள் நன்றாக இருக்கிறது. வீடியோ எக்ஸ்ட்ரா போனஸ். :-))).
Tuesday, December 12, 2006 11:13:00 PM
--
குமரன் (Kumaran) said...
செந்தில் குமரன். இந்தப் படத்தில் வரும் மற்ற பாடல்களும் எனக்குப் பிடிக்கும். ஒவ்வொன்றாக இடுகிறேன்.
வீடியோ தான் யூ ட்யூபில் கிடைக்கிறதே. இலவசம். :-)
Wednesday, December 13, 2006 9:25:00 AM
--
சிவபாலன் said...
குமரன் சார்,
நல்ல பாடல்.
பகிர்வுக்கு நன்றி
Thursday, February 22, 2007 8:15:00 PM
--
குமரன் (Kumaran) said...
நன்றி சிவபாலன்.
Friday, February 23, 2007 6:27:00 AM