Saturday, May 10, 2008

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே!

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்
கேரள நாட்டுக் கிளியே சொல்லு வசியம் வைத்தாயோ
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே (சென்னை)

நேந்திரம்பழமே நெய்மீனே நதியே மிளகுக் கொடியே
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்

சகீ உன்னிடம்...
சகீ உன்னிடம் செம்பருத்தி பூ நிறம்
சாலையில் நீ நடந்தால் விபத்துகள் ஆயிரம்
உன்னைக் காணவே நிலவு தோன்றிடும்
இத்தனை அழகா என்று தேய்ந்திடும் (சென்னை)

காதல் கதகளீ ...
காதல் கதகளி கண்களில் பார்க்கிறேன்
திருவோணம் திருவிழா இதயத்தில் பார்க்கிறேன்
பாக்கு மரங்களைக் கழுத்தில் பார்க்கிறேன்
பேசும் ரோஜா உதட்டில் பார்க்கிறேன் (சென்னை)




திரைப்படம்: M. குமரன் S/O மகாலக்ஷ்மி
வெளிவந்த வருடம்: 2004
பாடகர்: ஹரீஷ் இராகவேந்தர்
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
இயற்றியவர்: நா. முத்துகுமார்

1 comment:

  1. இந்த இடுகை 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 23 நவம்பர் 2006 அன்று இட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

    22 comments:

    முத்துகுமரன் said...
    இந்தப்பாடல்எனக்கு சமீபத்தில் வந்த பாடல்களில் பிடித்த ஒன்று. குறிப்பாக அசின் :-) குளோசப் காட்சிகளில் மிகவும் அழகாக இருப்பார்

    Thursday, November 23, 2006 7:20:00 AM
    --

    Vajra said...
    மஹா கணபதிம் மனசாஸ்மராமி...
    வசிஷ்டவாமதேவாதி வந்தித மஹா கணபதிம்...


    பாட்டு கிடைக்கவில்லையா ? :D

    ரெண்டும் ஒரேமாதிரிதான் கேக்குதே!!

    Thursday, November 23, 2006 7:26:00 AM
    --

    கோவி.கண்ணன் [GK] said...
    குமரன்,

    பாடலும் காட்சியும் அருமை !

    நன்றி !

    Thursday, November 23, 2006 8:53:00 AM
    --

    SK said...
    இயற்றியவர்...????
    எனப் போட்டிருக்கிறீர்கள்.
    கோவிகண்ணன் வேறு வந்து அருமை எனச் சொல்லிவிட்டு போயிருக்கிறார்!
    அவர் வீட்டில் ஒரு புத்தகம் படித்தேன் சென்ற வாரம்!
    அதில், பாடலாசிரியர் இந்தப் பாடலின் களம் குறித்து ஒரு 3 பக்கங்கள் எழுதியிருக்கிறார்!
    ஒழுங்கு மரியாதையாக கோவியார் அதைப் படித்துவிட்டு, இந்தப் பாடலாசிரியர் யார் என்பதைச் சொல்ல வேண்டுமாய் கண்டிப்புடன் கேட்டுக் கொள்கிறேன்!!
    :))))
    இல்லையெனில் நான் சொல்ல வேண்டி வரும்!

    ஓரிரவு முழுதும் கண் விழித்துப் படித்த புத்த்கம் அது!!

    Thursday, November 23, 2006 11:15:00 AM
    --

    இலவசக்கொத்தனார் said...
    வஜ்ரா, இந்த பாட்டு 'நாட்டை' என்ற ராகத்தில்தான் போடப்பட்டுள்ளது. அதனால்தான் அந்த மஹா கணபதிம் வாசனை.

    அந்நியன் படத்தில் வரும் 'ஐயங்காரு வீட்டு அழகே' பாட்டு கூட இந்த ராகம்தான்.

    கொஞ்சம் பழைய பாட்டு வேணுமானால் 'சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்'!

    இதுக்கு மேல விபரம் வேணுமானால் ஓவர் டு சிமுலேஷன்.

    Thursday, November 23, 2006 11:57:00 AM
    --

    kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //நேந்திரம்பழமே நெய்மீனே நதியே மிளகுக் கொடியே
    சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்//

    கொடுக்கல் வாங்கல் நல்லாத் தான் இருக்கு குமரன்!
    "நெய்மீனே" என்று சொல்கிறாரே கவிஞர்!! நெய்யினால் மீன் வறுப்பார்களா? உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்களேன் :-)))))

    நாட்டை ராகப் பாட்டு
    எழுதியவர் யார்? யார்?? யார்???
    கோவியார் எங்கே? எங்கே?? எங்கே???

    SK ஐயா,
    மீள் நல்வரவு! அதாங்க, Welcome back!

    Thursday, November 23, 2006 1:13:00 PM
    --

    கால்கரி சிவா said...
    கொத்தனார், நாட்டை ராட்டை எல்லாம் சர். எம் கேள்விகளுக்கு பதிலை பிரீப்பேர் செய்யவும்

    Thursday, November 23, 2006 1:34:00 PM
    --

    கோவி.கண்ணன் [GK] said...
    //ஓரிரவு முழுதும் கண் விழித்துப் படித்த புத்த்கம் அது!! //

    எஸ்கே ஐயா !

    பா.விஜய் இல்லை இல்லை !
    :)

    இளங்கவிஞர் நா.முத்துக்குமார் !

    Thursday, November 23, 2006 7:03:00 PM
    --

    அரை பிளேடு said...
    இன்னாது.. சென்னை செந்தமிழ் மறந்து பூட்சா... அப்பப்போ நம்ப பேஜுக்கு வந்து பட்சிக்கோப்பா... :)

    Thursday, November 23, 2006 7:24:00 PM
    --

    G.Ragavan said...
    நல்ல பாட்டு. ஆனா ஒற்று விட்டுப் போயிருக்குது. சென்னைச் செந்தமிழ்னு இருக்கனும். :-)

    // கொடுக்கல் வாங்கல் நல்லாத் தான் இருக்கு குமரன்!
    "நெய்மீனே" என்று சொல்கிறாரே கவிஞர்!! நெய்யினால் மீன் வறுப்பார்களா? உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்களேன் :-))))) //

    ஓ ரவி சைவமா! :-) நெய்மீன் அப்படீன்னா சீலான்னு தூத்துக்குடிப் பக்கமும் வஞ்சிரம்னு சென்னைப் பக்கமும் அழைக்கப்டுகிற seer fish. கடல் மீன் இது. பெருசா இருக்கு. நடுமுள்ளு ஒன்னுதான். வெட்டித் துண்டம் போட்டுப் பொறிச்சா.....அடடா! அடடடா!

    Friday, November 24, 2006 11:23:00 PM
    --

    முத்துகுமரன் said...
    //அடடா! அடடடா! //
    கோ.ரா. இரண்டு பார்சல் :-)

    Saturday, November 25, 2006 7:35:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    உண்மை தான் முத்துகுமரன். அசினும் அழகு. பாடல் காட்சியமைப்பும் அழகு. பாடல் வரிகள், சுற்றுப்புறம், நடன அமைப்பு என்று எல்லாமே அழகு இந்தப் பாடலில். :-)

    Sunday, November 26, 2006 4:38:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    வஜ்ரா. நீங்கள் சொன்னப்பிறகு தான் நானும் கவனித்தேன். விரைவில் மஹாகணபதிம் பாடலும் இடுகிறேன்.

    Sunday, November 26, 2006 4:44:00 PM
    --

    Anonymous said...
    அன்புக் குமரா!
    கேட்ட நாள்முதல் இப்பாடலில் "மகா கணபதி" சாயல் அடித்ததாலும்; கதகளி போன்ற நடன அமைப்புக்காகவும். கேட்பேன் ஆனாலும் சிறீகாந் தேவா!! ஏனைய பாடல்கலில் தகரத்தைத் தட்டுவதை நிறுத்தி,,,,மெலடிக்குள் வரவேண்டுமென்பது என் அன்பான வேண்டுகோள்; .
    யோகன் பாரிஸ்

    Monday, November 27, 2006 5:07:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    நன்றி கோவி.கண்ணன்.

    Tuesday, November 28, 2006 5:24:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    எஸ்.கே. நீங்கள் இவ்வளவு தூரம் விவரித்துச் சொல்லியிருப்பதைப் பார்த்ததுமே நினைத்தேன் பா.விஜயோ என்று. இல்லை என்று கோவி.கண்ணன் சொல்கிறாரே.

    Tuesday, November 28, 2006 5:25:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    ரொம்ப நன்றி கொத்ஸ். விவரமாகச் சொன்னதற்கு. நாட்டை இராகமா இது. நன்றி.

    Tuesday, November 28, 2006 5:26:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    இரவிசங்கர், உங்க நெய்மீனைப் பற்றிய கேள்விக்கு இராகவன் பதில் சொல்லிவிட்டார் பாருங்கள். அவர் வந்து சொல்லட்டும் என்றே நான் பதில் சொல்லாமல் இருந்தேன். பாருங்கள் அவரை. சப்பு கொட்டிக் கொண்டு இருக்கிறார். :-)

    நெய் மீனை உண்டவர்களுக்குத் தெரியும் ஏன் கவிஞர் தன் காதலியை நெய்மீன் என்கிறார் என்று. ;-)

    Tuesday, November 28, 2006 5:27:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    நன்றி கோவி.கண்ணன். நீங்கள் சொன்ன தகவலை பதிவிலும் இட்டுவிட்டேன்.

    Tuesday, November 28, 2006 5:28:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    அரை பிளேடு. மறந்தால் தானே நினைப்பது என்று சொல்வார்கள். எனக்கு சென்னை செந்தமிழ் கற்றிருந்தால் தானே மறப்பதற்கு. :-) இனிமே உங்க பதிவுக்கு வந்து தான் கத்துக்கணும்.

    Tuesday, November 28, 2006 5:29:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    அரைபிளேடு எடுத்துக் கொண்ட பொருளில் எடுத்துக் கொள்வதானால் நீங்கள் சொன்ன மாதிரி ஒற்றுடன் எழுதியிருக்க வேண்டும் இராகவன். பாடல் எழுதியவர் சென்னையும் செந்தமிழும் மறந்துவிட்டன என்று எழுதியிருக்கிறார் போல. திராவிட தமிழர்கள், முத்து குமரன் போன்றது இதுவும். மேல் விளக்கம் திராவிட தமிழர்களோ, முத்துகுமரனோ சொல்வார்கள். :-)

    அப்படியே நீங்கள் சென்னைச் செந்தமிழ் தான் சரியென்றால் அது ஒரு Oxymoran என்பதை மறந்துவிடாதீர்கள். :-)

    போன ஞாயிறு தான் வீட்டில் நெய்மீன் எண்ணையில் வறுத்துத் தின்றோம் இராகவன். Just for your information. :-)

    Tuesday, November 28, 2006 5:32:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    நன்றி யோகன் ஐயா. இந்த இசையமைப்பாளரின் பாடல்கள் அவ்வளவாகக் கேட்டதில்லை என்று நினைக்கிறேன். அதனால் தகரத்தைத் தட்டுவது என்று நீங்கள் சொல்லும் போது எனக்குப் புரியவில்லை.

    Tuesday, November 28, 2006 5:33:00 AM

    ReplyDelete