Thursday, May 01, 2008

உயிரெழுத்துகள் பத்தா? பன்னிரண்டா?

உயிரெழுத்துகள் எத்தனை என்று கேட்டு முன்பு ஒரு பதிவு போட்டிருந்தேன். அந்தப் பதிவில் வந்த பின்னூட்டங்களில் எழுந்த கேள்வி இது. நம்மில் பலர் ஐ, ஒள போன்ற உயிரெழுத்துகள் பயின்று வரும் சொற்களை அய் என்றும் அவ் என்று எழுதுகிறார்கள்.

சில எடுத்துக்காட்டுகள்:

ஐந்து - அய்ந்து
ஐயனார் - அய்யனார்
ஐயப்பன் - அய்யப்பன்
ஐயா - அய்யா
ஐயம் - அய்யம்
ஐ.நா - அய்.நா
வைரம் - வயிரம்
ஒளவையார் - அவ்வையார்
கௌதாரி - கவுதாரி
கௌசிகன் - கவுசிகன்
மௌலி - மவுலி
பௌர்ணமி - பவுர்ணமி
பௌவம் - பவ்வம்
ரௌத்திரம் - ரவுத்திரம்
வௌவால் - வவ்வால்

இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் சில சொற்களை இப்படி மாற்றி எழுதுவதில்லை.

கைதி - கய்தி
கைம்பெண் - கய்ம்பெண்
கைத்தலம் - கய்த்தலம்
சைதை - சயிதை
தை - தய்
பை - பய்
பைய - பய்ய
பையன் - பய்யன்
மை - மய் (மையம் - மய்யம் என்று எழுதுவதுண்டு)
லைலா - லய்லா
வை - வய்

ஏன் இந்தச் சொற்களை மாற்றி எழுதுவதில்லை? இப்படி சில சொற்களை மாற்றி எழுதியும் சில சொற்களை மாற்றாமல் விடுவதற்கும் ஏதாவது புதிய இலக்கணம் வந்துவிட்டதா? இல்லை சொல்லிலக்கணம் அறியாமல் போனதால் வந்த விளைவா இது? தெரிந்தவர்கள் சொன்னால் அறிந்து கொள்வேன்.

மேலே எடுத்துக்காட்டுகளில் சொன்னபடி எழுதுவது சரி; தற்போது அது நடைமுறைக்கு வந்துவிட்டது என்று சொல்பவர்கள் அப்படியே விரைவில் உயிரெழுத்துகள் பத்து தான்; ஐயும் ஒளவும் தேவையில்லை என்பதனையும் தெளிவாகச் சொல்லிவிட்டால் ஒரு அரசாணையின் மூலம் அதனைச் செயல்படுத்த பரிந்துரையும் செய்யலாம். என்ன சொல்கிறீர்கள்? :-)

டிஸ்கி: தலைப்பைப் பார்த்து சில பேர் உணர்ச்சி வசப்படுவதாகப் பின்னூட்டங்களிலிருந்து தெரிகிறது. அந்தத் தலைப்பு உங்களை இந்தப் பதிவிற்கு அழைத்துவருவதற்காக வைக்கப்பட்டத் தலைப்பேயன்றி வேறில்லை. அனைவருக்கும் 'உயிரெழுத்துகள் 12' என்பதில் எந்த வித ஐயமும் இல்லை என்பது தெரியும்.

8 comments:

  1. இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் 27 ஜூன் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

    121 கருத்துக்கள்:

    வசந்தன்(Vasanthan) said...
    அவ்விரண்டு உயிர்களையும் நெடுங்கணக்கிலிருந்து விலத்தி வைப்பதற்கு நான் எதிர்ப்பு. ஐயாவை அய்யா என்று எழுதுவதற்கு இலக்கணத்தில் இடமுள்ளதாகவே நினைக்கிறேன். (ஆனால் அப்படி எழுதுவதை நான் வரவேற்கவில்லை)

    உயிரொலிகள் என்றால் ஐந்து என்றே அடக்கிவிடலாம். அ, இ, உ, எ, ஒ என்பவையே.
    ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்பவை அவற்றின் காலநீட்சி.
    அ,இ என்பவற்றின் இணைப்பே ஐ.
    அ, உ என்பவற்றின் இணைப்பே ஒள.

    June 27, 2006 9:07 PM
    --

    குறும்பன் said...
    //ஐந்து - அய்ந்து, ஐ.நா - அய்.நா, வைரம் - வயிரம், மௌலி - மவுலி//
    இந்த மாதிரி எழுதி நான் பார்த்ததில்லை.

    //வௌவால் - வவ்வால் // 'வௌவால்' வெ ள வால் ஆகாம இருப்பதற்காக வவ்வாலாக மாறினாரோ?
    வவ்வால் ஏன் இப்படி எழுதறார்ன்னு சொன்னா நல்லாயிருக்கும்.

    'ஒளவையார்' - ஒ ள வையார் - என்ற குழப்பம் இருப்பதால் அவ்வையார் என்று எழுதுகிறார்களோ? (இப்ப குழப்பம் இல்லை பாருங்க)
    ஒரு முறை 'ரௌடி' என்பதை ரெ ள டி என்று படித்து பொருள் தெரியாமல் விழித்து அப்புறம் ஒருவர் 'ரௌடி' என்று படித்ததும் ச்ச என்று மண்டை காய்ந்தது நினைவுக்கு வருது.

    June 27, 2006 9:46 PM
    --

    குமரன் (Kumaran) said...
    தமிழைப் பத்திப் பேசினா சரியா வருகை புரிகிறீர்களே வசந்தன். மிக்க மகிழ்ச்சி.

    அவ்விரண்டு உயிர்களையும் நெடுங்கணக்கிலிருந்து விலக்கி வைப்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை. ஆனால் அவ்விரண்டு உயிர்களையும் வேண்டுமென்றே புழங்காமல் புறக்கணித்தால் என்ன நேரிடலாம் என்பதைச் சுட்டவே அப்படிச் சொன்னேன்.

    இங்கே நீங்கள் 'அவ்விரண்டு'. இந்த இடத்தில் 'அவ்' என்பது சரியான புழக்கம். அந்த இரண்டு என்பது இலக்கணப்படி 'அவ்விரண்டு' என்றாகிறது. இதனை 'ஒளவிரண்டு' என்று சொன்னால் எப்படி இருக்கிறதோ அது போலத் தான் இருக்கிறது ஒளவிற்கு பதிலாக அவ் என்று புழங்கினாலும்.

    June 27, 2006 10:04 PM
    --

    குமரன் (Kumaran) said...
    வசந்தன். ஐயாவை அய்யா என்று எழுதுவதற்கு இலக்கணத்தில் இடம் இருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். முடிந்தால் (நேரம் இருந்தால் என்ற பொருளில் சொல்கிறேன்) அதனைக் கொஞ்சம் விளக்கிக் கூறுகிறீர்களா?

    உயிரொலிகளைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு ஏற்றுக் கொள்ள வேண்டியக் கருத்து.

    June 27, 2006 10:06 PM
    --

    குமரன் (Kumaran) said...
    குறும்பன். நீங்களும் அப்படித் தான். தமிழ் என்று சொன்னவுடனே அங்கே நீங்கள் இருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. :-) (இதனால் நான் உங்களுக்குச் சொல்வது என்னவென்றால் என்னுடைய வேறு இடுகைகளையும் படித்தால் இன்னும் அதிகமாக மகிழ்வேன் என்பது) :-)

    அய்ந்து:

    http://www.google.com/search?hl=en&lr=&q=%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81

    அய்.நா:

    http://www.google.com/search?hl=en&lr=&q=%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D.%E0%AE%A8%E0%AE%BE&btnG=Search

    வயிரம்:

    http://www.google.com/search?hl=en&lr=&q=%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&btnG=Search

    மவுலி:

    http://www.google.com/search?hl=en&lr=&q=%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF&btnG=Search

    கூகுளாண்டவரைக் கேட்டு அவர் சொன்னதை மேலே சொல்லியிருக்கிறேன். பாருங்கள்.

    June 27, 2006 10:11 PM
    --

    குமரன் (Kumaran) said...
    குறும்பன். நீங்கள் சொல்லும் ஒள - ஒ ள குழப்பம் எல்லோருக்கும் வருவது தான். ஆனால் கொஞ்சம் எழுத்துப் பழக்கம் வந்துவிட்டால் அந்தக் குழப்பம் நீங்கிவிடுகின்றதன்றோ? அப்படியிருக்க எதற்கு அவ் என்று எழுத வேண்டும்?

    June 27, 2006 10:12 PM
    --

    நாமக்கல் சிபி said...
    //இங்கே நீங்கள் 'அவ்விரண்டு'. இந்த இடத்தில் 'அவ்' என்பது சரியான புழக்கம். அந்த இரண்டு என்பது இலக்கணப்படி 'அவ்விரண்டு' என்றாகிறது. இதனை 'ஒளவிரண்டு' என்று சொன்னால் எப்படி இருக்கிறதோ அது போலத் தான் இருக்கிறது ஒளவிற்கு பதிலாக அவ் என்று புழங்கினாலும்.
    //

    இதேதாங்க நம்ம எண்ணமும். சில இடங்களில் ஐ, ஔ போன்றவற்றை தவிர்த்து அய், அவ் என்று எழுதினாலும் பல இடங்களில் தவிர்க்க முடியாது.

    ஆக உயிரெழுத்துக்கள் மொத்தம் 12 என்பதுதான் என் கருத்து.

    June 27, 2006 10:22 PM
    --

    இலவசக்கொத்தனார் said...
    என்னது? ரெண்டு உயிரை என்கவுண்டரில் போடப் போறீங்களா?

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

    June 27, 2006 10:34 PM
    --

    இலவசக்கொத்தனார் said...
    அதே மாதிரி இன்னுமொரு தப்பு (நானும் அடிக்கடி செய்வது) ஐகாரத்துக்கு அப்புறம் ஒரு ய் போடுவது. அதாவது ஐய்யா, ஐய்யப்பன், ஐய்யப்படுதல் என எழுதுவது. இவை எதிலுமே ஐகாரத்தைத் தொடர்ந்து வரும் ய் என்ற மெய்யெழுத்து தேவையில்லை அல்லவா?

    June 27, 2006 10:38 PM
    --

    வசந்தன்(Vasanthan) said...
    //இங்கே நீங்கள் 'அவ்விரண்டு'. இந்த இடத்தில் 'அவ்' என்பது சரியான புழக்கம். அந்த இரண்டு என்பது இலக்கணப்படி 'அவ்விரண்டு' என்றாகிறது. இதனை 'ஒளவிரண்டு' என்று சொன்னால் எப்படி இருக்கிறதோ அது போலத் தான் இருக்கிறது ஒளவிற்கு பதிலாக அவ் என்று புழங்கினாலும். //

    சரியான பதில். ;-)

    'ஐயா' என்பதை 'அய்யா' என்று எழுதுவதைத் தவறென்று சொல்லாமல், ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவமாகவே இலக்கணம் எனக்குக் கற்பிக்கப்பட்டது. (போலி என்ற வகைக்குள் அடக்குகிறார்களோ?) இராம.கி ஐயாவும் இந்த வடிவில் எழுதுகிறார். ஆனால் 'ஒள' காரத்துக்கு அப்படி விலக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை.

    'ஒள'காரக் குழப்பத்துக்குத் தீர்வு கண்டே ஆகவேண்டும். 'ஒ' மற்றும் 'ள' என்பற்றைச் சேர்த்து அவ்வெழுத்து வரக்கூடாது என்பது என் கருத்து. இந்த மாற்றம் பற்றியும் 'தமிழ்வரிவடிவத்தில் தேவைப்படும் மாற்றங்கள்' என்ற பதிவில் எழுதியிருக்கிறேன். (இந்த 'ஒள' சிக்கலை மட்டும் படிக்கவும். மற்றவை கொஞ்சம் அதிகப்படியானவை.;-))

    இந்தப்படத்தில் ஏழாவதாக இருக்கும் வசனத்தில் 'ஒள'கார மாற்றத்தைப் பாருங்கள்.
    அப்படி ஏதாவது முறையில் 'ஒள'காரத்துக்குத் தனியான வரிவடித்தைக் (இப்போதுள்ளதிலிருந்து அதிகம் மாற்றமில்லாத) கொண்டுவந்தால் நன்று.

    June 27, 2006 10:42 PM
    --

    SK said...
    வசதிக்காக மாற்றி எழுதுபவரைக் கண்டு,
    வாகாக தமிழெழுத்தில் இரண்டினைக்
    குறைப்பது முறையல்ல, குமரனாரே!

    ஐயமின்றி, ரௌத்ரம் பழக வேண்டி வரும்!!
    :))

    June 27, 2006 10:44 PM
    --

    Kuppusamy Chellamuthu said...
    சுவையான அலசல்.. வவ்வால் மட்டும் கோபித்துக் கொண்டது போலத் தெரிகிறது.

    June 28, 2006 7:43 AM
    --

    G.Ragavan said...
    மிகவும் தவறான கேள்வி குமரன். நீங்கள் குறிப்பிட்ட அனைத்து எடுத்துக்காட்டுகளுமே மிகத்தவறானவை.

    அவ்வைப்பாட்டி அவ் வைப்பாட்டியாக வேண்டுமா என்ன?

    அவ்விற்கும் ஔவிற்கும் உச்சரிப்பு வேறுபாடு உண்டு. அஃதே ஐயைப் பொருத்தும்.

    தவறான முடிவு. தவறான கருத்து என்று மட்டும் என்றால் சொல்ல முடியும். கொஞ்சம் இலக்கணம் பக்கமும் எட்டிப் பாருங்கள்.

    June 28, 2006 10:29 AM
    --

    குமரன் (Kumaran) said...
    இராகவன். நீங்கள் என் பதிவைச் சரியாகத் தான் படித்தீர்களா? தெளிவாகத் தெரிகிறது நீங்கள் நான் சொல்ல வந்ததைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்று. இல்லையேல் இவ்வளவு சூடாக எழுதியிருக்க மாட்டீர்கள்.

    June 28, 2006 10:50 AM
    --

    இலவசக்கொத்தனார் said...
    //அப்படியே விரைவில் உயிரெழுத்துகள் பத்து தான்; ஐயும் ஒளவும் தேவையில்லை என்பதனையும் தெளிவாகச் சொல்லிவிட்டால் ஒரு அரசாணையின் மூலம் அதனைச் செயல்படுத்த பரிந்துரையும் செய்யலாம். என்ன சொல்கிறீர்கள்? :-)
    //

    இதனால்தான் ஜிரா கொஞ்சம் கோபமாகி விட்டாரென நினைக்கிறேன். கருத்தைச் சொல்லிய அனைவருமே உயிரெழுத்துகள் 12தான் என்பதில் எந்த விதமான குழப்பமும் இல்லாது இருப்பதாகவே தெரிகிறது.

    June 28, 2006 11:00 AM
    --

    கோவி.கண்ணன் said...
    தய் மாதம் பொய்கய் போல் இருக்கும் என்று நினய்த்து வய்கய்க்கு சென்று கய் வய்த்தேன், வய்கய் பொய்கய் அல்ல புதய் மணல் என்பதல் கய் வகய்யாய் சிக்கிக்கொண்டது. என்ன செய்கய் செய்தும் கய்பிடித்துக் காப்பாற்ற எந்த கய்யும் வரவில்லை என்பதால் நம்பிக்கய் போனது, பொய்கய் ஒன்றய்ச் புனய்யச் செய்து செயற்கய் கய் ஆக்கிக்கொண்டேன்.

    June 28, 2006 11:04 AM
    --

    அழகு said...
    அ,இ,உ,எ,ஒ ஆகிய எழுத்துகள் ஒரு மாத்திரை மட்டுமே நீண்டொலிக்கும் குறில்கள்.

    ஆ,ஈ,ஊ,ஓ ஆகிய நான்கும் இரண்டு மாத்திரை நீண்டொலிக்கும் நெடில்கள்.

    ஐ மற்றும் ஒள ஆகிய இரண்டும் ஒன்றரை மாத்திரைக்குரியன.

    இராகவன் அவர்கள் கூறியதுபோல் ஐ/அய் ஒள/அவ் (சரியாக) ஒலித்துப் பார்த்தால் வேறுபாட்டை உணரலாம்.

    எழுத்திலக்கணம் பயில்வதும்/புதுப்பித்துக் கொள்வதும் நல்லதுதானே!

    பதிவுக்கு நன்றி!

    June 28, 2006 11:21 AM
    --

    குமரன் (Kumaran) said...
    சிபி. உயிரெழுத்துகள் மொத்தம் 12 தான். அதில் ஐயமே இல்லை. ஆனால் நிறைய பேர் ஐ - அய், ஒள - அவ் என்று மாற்றி எழுதுகிறார்களே; அதனால் அந்த ஐயம் வந்துவிடும் போல் இருக்கிறது. அதனைத் தான் சொல்லியிருக்கிறேன். :-)

    அடுத்த முறை உங்கள் தலைவர் அழும்போது அவ்வ்வ்வ்வ்வ் என்று அழாமல் ஒளவ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்று அழுவாரா என்று கேட்டுச் சொல்லுங்கள் ;-)

    June 28, 2006 12:44 PM
    --

    குமரன் (Kumaran) said...
    கொத்ஸ். என்கவுண்டர்ல நான் போடப்போறதில்லை. ஆனா போறப் போக்கைப் பாத்தா அப்படி பண்ணிடுவாங்களோன்னு தோணுது. அதான். :-(

    இப்பத் தான் சிபி கிட்ட கேட்டேன். உங்க கிட்டேயும் அதே கேள்வி. இனிமேல் அவ்வ்வ்வ்வ்வ் என்று அழாமல் ஒளவ்வ்வ்வ்வ்வ்வ் என்று அழுவீர்களா? :-)

    June 28, 2006 12:46 PM
    --

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் கொத்ஸ். ஐகாரத்திற்கு பின்னர் ஒரு ய் தேவையில்லை தான். ஆனால் உச்சரிக்கும் போது கொஞ்சம் அழுத்தம் கொடுத்து உச்சரிப்பதால் அப்படி எழுதிவிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அதே போல் தான் முயற்ச்சி, பயிற்ச்சி என்று எழுதுவதும். ற் க்குப் பிறகு க் தேவையில்லை. ஆனால் நிறைய பேர் அந்தத் தவறை செய்கிறார்கள்.

    June 28, 2006 12:48 PM
    --

    குமரன் (Kumaran) said...
    வசந்தன். இராம.கி. ஐயாவும் அய்யா என்று எழுதுகிறாரா? அப்படி என்றால் அதற்கு இலக்கணத்தில் வழுவமைதி என்பது போல் ஏதாவது இருக்கலாம். கேட்டுப் பார்க்கிறேன். இலக்கணத்தில் கற்றுக் கொள்ள எத்தனையோ இருக்கிறது.

    நீங்கள் தந்த சுட்டிகளைப் பார்த்தேன். நீங்கள் சொன்ன மாதிரி 'ள'வை 'ஒ'விற்கு பக்கத்தில் எழுதாமல் ஒளகாரத்திற்கு அதிக மாற்றமும் இல்லாமல் ஆனால் வேறுபாடு தோன்றும் விதமாக ஒரு எழுத்து வடிவம் வந்தால் ஒளவையார் ஒ ள வையார் ஆக மாட்டார்.

    June 28, 2006 12:51 PM
    --

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் எஸ்.கே. வசதிக்காக மாற்றி எழுதுபவர்களைக் கண்டு தமிழெழுத்தில் இரண்டினைக் குறைப்பது முறையன்று தான். ஆனால் அரசாணையிட்டு நடப்பதெல்லாம் முறையானவை தானா? பெரும்பான்மை புழக்கம் எப்படி இருக்கிறதோ அது தானே அரசாணைக்கு அடிப்படை. தமிழறிஞர்கள் பலர் இப்படி ஐகாரததையும் ஒளகாரத்தையும் ஒதுக்கிவிட்டு எழுதத் தொடங்கினால் அவர்களைப் பார்த்து மற்றவர்களும் எழுதுவார்கள். தற்போது தவறு என்று சொல்லுகின்றவர்கள் அது சரி என்று அவர்களின் எழுத்துகளை எடுத்துக் காட்டுவார்கள். பின்னர் அதுவே பெரும்பான்மையாகிவிடும். அப்புறம் இலக்கணத்தை மாற்ற வேண்டியது தானே. அது அரசாணை மூலமாக நடந்தால் என்ன? வேறு வகையில் நடந்தால் என்ன? :-)

    மாற்ற வேண்டும் என்பது என் கருத்து இல்லை. ஆனால் இவ்வகையில் எழுதுபவர்கள் பெருகினால் என்ன நடக்கும் என்பதைச் சுட்டவே அப்படிச் சொன்னேன். அதனைப் பல பேர் என் முடிவு, கருத்து என்று எண்ணிவிட்டதாகத் தோன்றுகிறது. அப்படிப் பொருள் படும் படி எழுதியது என் தவறு தான்.

    June 28, 2006 12:57 PM
    --

    குமரன் (Kumaran) said...
    குப்புசாமி செல்லமுத்து, வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் நன்றி. வவ்வால் அவரின் கருத்தினை ஏற்கனவே 'உயிரெழுத்துகள் எத்தனை?' என்ற பதிவில் பின்னூட்டமாக இட்டுவிட்டார். அதனால் இங்கு ஒன்றும் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். அது மட்டும் இல்லாமல் அண்மையில் அவருடைய பதிவுகளையோ பின்னூட்டங்களையோ பார்த்ததாக நினைவில்லை. வேலைச்சுமையோ என்னவோ?

    June 28, 2006 12:58 PM
    --

    குமரன் (Kumaran) said...
    //ஐ மற்றும் ஒள ஆகிய இரண்டும் ஒன்றரை மாத்திரைக்குரியன.
    //

    அழகு, ஐகாரமும் ஒளகாரமும் இரண்டு மாத்திரை அளவு ஒலிப்பவை என்றல்லவா எண்ணியிருந்தேன்? தொல்காப்பியமும் இவற்றை நெடிலில் அல்லவா சேர்க்கிறது? நீங்கள் இவை ஒன்றரை மாத்திரை என்கிறீர்கள். இதுவரை நான் கேள்விப்படாதது.

    June 28, 2006 1:03 PM
    --

    குமரன் (Kumaran) said...
    //இராகவன் அவர்கள் கூறியதுபோல் ஐ/அய் ஒள/அவ் (சரியாக) ஒலித்துப் பார்த்தால் வேறுபாட்டை உணரலாம்.

    எழுத்திலக்கணம் பயில்வதும்/புதுப்பித்துக் கொள்வதும் நல்லதுதானே!
    //

    அழகு. நானும் அதையே தான் சொல்கிறேன். ஒலித்துப் பார்க்கும் போது அவற்றின் வேறுபாடு தெரியும். ஆனால் ஐ என்பதை அய் என்றும் ஒள என்பதை அவ் என்றும் எழுதுகிறார்களே. அவர்கள் அல்லவா இலக்கணம் இன்றி எழுதுகிறார்கள்? நான் அவர்கள் இலக்கணம் தவறி எழுதுகிறார்கள் என்று சொல்வதை விட, அவர்கள் எழுதுவதற்கு ஏதாவது இலக்கணச் சான்று இருக்கிறதா என்று கேட்கிறேன். கற்றது கைம்மண் அளவு; அதனால் அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள நான் தயார்.

    June 28, 2006 1:06 PM
    --

    Iyappan Krishnan said...
    குமரன் :

    இதற்கு எழுத்துப் போலி என்று பெயர்

    தொல்காப்பியத்தில் இருந்து :


    54- அகரம் இகரம் ஐகாரம் ஆகும்

    அ மற்றும் இ சேர்ந்து ஐ ஆக மாரும்

    வைரம் என்பதை வயிரம் என்று எழுதுவது போல

    55 - அகரம் உகரம் ஔகாரம் ஆகும்

    அ மாற்றும் உ சேர்ந்து ஔ ஆகும்

    கௌண்டர் = கவுண்டர்

    55 - அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
    ஐ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்

    அ உடன் யகரமெய் (ய்) வரும்போது அது ஐ என்றே ஒலிக்கும்

    ஐந்து = அய்ந்து
    ஐவர் - அய்வர்
    ஐயங்கார் - அய்யங்கார்

    ***

    அன்புடன்
    ஐயப்பன்

    June 28, 2006 1:08 PM
    --

    குமரன் (Kumaran) said...
    //ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும்
    அப்பால் ஏழும்
    ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப



    ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும் ஏழு எழுத்துக்களும் இரண்டு மாத்திரையில் ஒலிப்பவைகள் நெடில் எழுத்துக்கள் எனப்படும்.
    //

    அழகு. இதோ நான் சொன்ன தொல்காப்பிய அடிகளும் அவற்றின் விளக்கமும்.

    June 28, 2006 1:10 PM
    --

    வவ்வால் said...
    அய்யா குறும்பன் ,மற்றும் குப்புசாமி செல்லமுத்து நமக்கு என்ன நட்டம் ,அல்லது வருத்தம் இந்த பதிவைப்பார்க்கவில்லை அல்லது பழைய பதிவு என இருந்துவிட்டேன்.

    குறும்பன் நான் ஏன் வவ்வால் என எழுதுகிறேன் என்பதை ஏற்கனவே அய்யம் திரிபுற எடுத்து விளக்கிவிட்டேன் முந்தைய உயிர் எழுத்துக்கள் எத்தனை என்ற பதிவில் ,மீண்டும் குமரன் உயிர் எழுத்துகள் எத்தனை என்று கிளறுவதைப்பார்த்தால் ,அவர் ஏதோ பின்னூட்ட விளையாட்டுக்கு அடிபோடுகிறார்ப்போல் தான் தெரிகிறது.

    இதில் மேற்கொண்டு பேசுவதற்கு ஏதும் இருப்பதாக தெரியவில்லை. அப்படியே கூற வேண்டும் என்றாலும் கொஞ்சம் பொருத்தால் அடுத்த சுற்றில் குமரன் உயிர் எழுத்துக்கள் 8 அல்லது 10 ஆ எனக்கேட்பார் அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம்:-))

    //ஆனால் சில சொற்களை இப்படி மாற்றி எழுதுவதில்லை.

    கைதி - கய்தி
    கைம்பெண் - கய்ம்பெண்
    கைத்தலம் - கய்த்தலம்
    சைதை - சயிதை
    தை - தய்
    பை - பய்
    பைய - பய்ய
    பையன் - பய்யன்
    மை - மய் (மையம் - மய்யம் என்று எழுதுவதுண்டு)
    லைலா - லய்லா
    வை - வய்//

    ஐ,ஒள, இரண்டும் உயிர் எழுத்துக்கள் ,இங்கே குறிப்பிட்ட வார்த்தைகளில் முதல் எழுத்தாக வருவது உயிர் மெய் எழுத்தாயிற்றே குமரன், தெரிந்தும் தெரியாதது போல் கேட்பது ஏனோ?( அடிக்கடி ஏதாவது எழுதி ஒரு 100 அடிக்க வேண்டும் (பின்னூட்டம்) என்ற உந்துதலுக்கு நீங்களும் ஆளாகிவிட்டீர்களா?)

    மேலும் இந்த உயிர் எழுத்துகள் எத்தனை என்று கேட்பதை கடைசியில் வாழைப்பழம் ஜோக் ஆக்கிவிட்டீர்களே :-))

    கருணாநிதிஅவர்களின் உபயத்தில் இரு துணுக்கு சொல்லி முடிப்போம்.
    விதவை என்ற சொல்லில் கூட பொட்டில்லையே பார்த்தீர்களா என கருணாநிதி அவர்களைக் கேட்டப்போது . விதவை வட மொழி ,தமிழில் "கைம்பெண்" என்று சொல்லிப்பாருங்கள் ஒரு பொட்டிற்கு இரு பொட்டு இருக்கும் என சமயோசிதமாக சொல்லி இருப்பார்.(இது அவர் பங்கு பெற்ற பட்டி மன்றத்தில் சொன்னது இதெல்லாம் இப்படி நீ கேளு நான் அப்படி பதில் சொல்லி அசத்துகிறேன் என பேசி வைத்துக்கொள்வதா?)

    June 28, 2006 1:13 PM
    --

    குமரன் (Kumaran) said...
    தொல்காப்பிய அடிகளை எடுத்து இட்டதற்கு மிக்க நன்றி ஐயப்பன்.

    நீங்கள் தந்துள்ள எதுவுமே ஐ என்பதை அய் என்று எழுதுவதற்கும் ஒள என்பதை அவ் என்று எழுதுவதற்கும் அனுமதி அளித்ததாக எனக்குத் தோன்றவில்லை. என் விளக்கம் சரியா பாருங்கள்.

    54. அகரம் இகரம் ஐகாரம் ஆகும் - சரி. இதனை மேலே வசந்தனும் சொல்லியிருந்தார். அகரமும் இகரமும் சேர்ந்து ஐகாரம் ஆகும். ஆனால் அது ஐகாரம் அகரமும் யகர மெய்யும் ஆகும் என்று இல்லையே. வைரம் என்பதனை வயிரம் என்று எழுதுவதும் அ+இ என்பதை ஐ என்று எழுதுவதும் நேரெதிர் புணர்ச்சிகள் ஆயிற்றே?!

    55.அகரம் உகரம் ஔகாரம் ஆகும்

    மேலே ஐகாரத்திற்குச் சொன்ன விளக்கம் இதற்கும் ஆகும்.

    55 - அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
    ஐ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்

    அகரத்துடன் யகர மெய் (ய்) வரும்போது ஐ என்பது 'போல்' ஒலிக்கும் என்று தான் சொல்கிறாரே ஒழிய ஐ என்பதும் அய் என்பதும் ஒன்றே தான் என்றோ ஐ என்று இருக்கும் இடங்களில் அய் என்று சொல்லலாம் என்றோ சொல்லவில்லையே? அதனால் இந்த விதியை ஐவர் என்பதனை அய்வர் என்று எழுதுவதற்குச் சான்றாகச் சொல்ல முடியுமா?

    June 28, 2006 1:19 PM
    --

    வவ்வால் said...
    அய்யப்பன் கிருஷ்ணன் நல்ல விளக்கம் அளித்துள்ளார். நன்றி. ஆனால் இந்த எழுத்துப்போலி வேறுவகையில் தான் அதிகம் உதாரணம் காட்டப்படும் எனப்படித்க்ட நியாபகம்.அது எப்படி என்ன என்று மறந்து விட்டது தேடிப்பார்க்கிறேன் ஆனால் இது போன்று , வருவதும் எழுத்துபோலி வகைத்தான் படும் எனச்சொல்கிறார் சரியாக இருக்கும் எனத்தான் தோன்றுகிறது

    June 28, 2006 1:20 PM
    --

    குமரன் (Kumaran) said...
    //அய்யம் திரிபுற //

    :-) வவ்வால். வாங்க. வாங்க. வர்றப்பவே ஐயத்தை அய்யம் ஆக்கிவிட்டு வருகிறீர்கள். நன்றி. :-)

    //மீண்டும் குமரன் உயிர் எழுத்துகள் எத்தனை என்று கிளறுவதைப்பார்த்தால் ,அவர் ஏதோ பின்னூட்ட விளையாட்டுக்கு அடிபோடுகிறார்ப்போல் தான் தெரிகிறது.
    //

    ஐயா. உயிர் எழுத்துகள் எத்தனை என்று கிளறுவது கேட்டுத் தெரிந்து கொள்ளத் தான். சில பதிவுகளில் பின்னூட்டங்கள் அதிகம் வரும். அதற்காக அந்தப் பதிவுகள் எல்லாம் பின்னூட்ட விளையாட்டிற்காக எழுதப்பட்டவை என்று சொல்வீர்களா? இந்த விதயத்தை நாம் பின்னூட்டங்களில் பேசினோம். ஆனால் எத்தனை பேர் கவனம் அதில் வந்தது என்று தெரியாதல்லவா? மீண்டும் அதனைப் பேசுவது பதிவில் வந்தால் இன்னும் நிறைய பேர் படிப்பார்கள்; அதன் மூலம் நமக்கும் நிறைய தெரிந்து கொள்ளலாம் என்பதால். இப்போது பாருங்கள் ஐயப்பன் தொல்காப்பிய வரிகளை எடுத்துக் கொடுத்திருக்கிறார். இதனைத் தனிப்பதிவாக இட்டதால் தானே அவர் கொடுத்தார்? அது மட்டும் இல்லாமல் வசந்தன், அழகு போன்றவர்களும் அவர்களின் கருத்துகளைச் சொல்ல இது ஒரு வாய்ப்பு ஆகிறதே? அதனால் இந்தப் பதிவை பின்னூட்ட விளையாட்டிற்காக எழுதப்பட்டது என்று சொல்லி இதனைச் சிறுமைப் படுத்த வேண்டாம்.

    June 28, 2006 1:26 PM
    --

    வவ்வால் said...
    வைரம் , வயிரம் என்பதெல்லாம் ஐ,ஒள க்கு மாற்று பயன்படுத்துவதன் அதீத ஈடுபாட்டின் விளைவே , அதில் முன்னரே சொன்னார் போல் வை என்பது உயிர் எழுத்து அல்ல ,எனவே அதனை ஐயா என்பதற்கு அய்யா சொன்னார்களே என ஒப்பிட வேண்டாம். இப்படியே தோண்டிக்கொண்டு தான் போகவேண்டும்."ALUMINIUM ".என்பதும் "ALUMINUM" மேலும் "COLOUR" என்பதும் " COLOR" எனச்சொல்வதும் ஒரே போல ஆங்கிலத்தில் பாவிக்கவேண்டுமென முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டு அகராதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது அது போல தான் அய்யா,ஐயா என்பதும்.எனவே தனி தனி எழுத்தாக புணர்ச்சிவிதி பார்க்க தேவையில்லை.

    June 28, 2006 1:28 PM
    --

    குமரன் (Kumaran) said...
    //இதில் மேற்கொண்டு பேசுவதற்கு ஏதும் இருப்பதாக தெரியவில்லை. அப்படியே கூற வேண்டும் என்றாலும் கொஞ்சம் பொருத்தால் அடுத்த சுற்றில் குமரன் உயிர் எழுத்துக்கள் 8 அல்லது 10 ஆ எனக்கேட்பார் அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம்:-))
    //

    உங்களுக்கு அப்படித் தோன்றலாம். ஆனால் மேற்கொண்டு பேச இருப்பதாக நினைப்பவர்கள் (என்னைப் போன்றவர்கள்) பேசிப் போகட்டுமே. ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ளத் தானே வலைப்பதிக்கிறோம். பின்னூட்ட விளையாட்டு ஆட தமிழ் தான் எனக்குத் தேவையா? அதற்கு வேறு எத்தனையோ எழுதலாம்.

    June 28, 2006 1:31 PM
    --

    குமரன் (Kumaran) said...
    அடுத்தச் சுற்றில் எட்டா பத்தா என்று கேட்பேன் என்று சொன்னதை கிண்டல் என்று பொருட்படுத்தாமல் விடுகிறேன். :-)

    June 28, 2006 1:31 PM
    --

    குமரன் (Kumaran) said...
    ////ஆனால் சில சொற்களை இப்படி மாற்றி எழுதுவதில்லை.

    கைதி - கய்தி
    கைம்பெண் - கய்ம்பெண்
    கைத்தலம் - கய்த்தலம்
    சைதை - சயிதை
    தை - தய்
    பை - பய்
    பைய - பய்ய
    பையன் - பய்யன்
    மை - மய் (மையம் - மய்யம் என்று எழுதுவதுண்டு)
    லைலா - லய்லா
    வை - வய்//

    ஐ,ஒள, இரண்டும் உயிர் எழுத்துக்கள் ,இங்கே குறிப்பிட்ட வார்த்தைகளில் முதல் எழுத்தாக வருவது உயிர் மெய் எழுத்தாயிற்றே குமரன், தெரிந்தும் தெரியாதது போல் கேட்பது ஏனோ?( //

    சரி. இவை உயிர்மெய் எழுத்துகள். உயிர் எழுத்துகளை மட்டும் மாற்றி எழுதலாம்; உயிர்மெய் எழுத்துகளை மாற்றி எழுதக்கூடாது என்று இலக்கனம் இருக்கிறதா? அதனைச் சொல்லுங்கள். தெரிந்தும் தெரியாதது போல் கேட்கவில்லை. தெரியாமல் தான் கேட்கிறேன்.

    June 28, 2006 1:33 PM
    --

    குமரன் (Kumaran) said...
    // அடிக்கடி ஏதாவது எழுதி ஒரு 100 அடிக்க வேண்டும் (பின்னூட்டம்) என்ற உந்துதலுக்கு நீங்களும் ஆளாகிவிட்டீர்களா?)
    //

    இதற்கு ஏற்கனவே விடை சொல்லிவிட்டேன். 'ஏதாவது' எழுதவில்லை. பொருள் உள்ளது என்று எனக்குத் தோன்றுவதைத் தான் எழுதுகிறேன். அதற்கு 100 பின்னூட்டங்கள் வந்தால் மகிழ்ச்சி. நான் சொல்வது பொருளுள்ளது என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள் என்று மகிழ்வேன்.

    June 28, 2006 1:34 PM
    --

    குமரன் (Kumaran) said...
    //மேலும் இந்த உயிர் எழுத்துகள் எத்தனை என்று கேட்பதை கடைசியில் வாழைப்பழம் ஜோக் ஆக்கிவிட்டீர்களே :-))
    //

    அப்படியா?

    June 28, 2006 1:35 PM
    --

    குமரன் (Kumaran) said...
    //கருணாநிதிஅவர்களின் உபயத்தில் இரு துணுக்கு சொல்லி முடிப்போம்.
    விதவை என்ற சொல்லில் கூட பொட்டில்லையே பார்த்தீர்களா என கருணாநிதி அவர்களைக் கேட்டப்போது . விதவை வட மொழி ,தமிழில் "கைம்பெண்" என்று சொல்லிப்பாருங்கள் ஒரு பொட்டிற்கு இரு பொட்டு இருக்கும் என சமயோசிதமாக சொல்லி இருப்பார்.(இது அவர் பங்கு பெற்ற பட்டி மன்றத்தில் சொன்னது இதெல்லாம் இப்படி நீ கேளு நான் அப்படி பதில் சொல்லி அசத்துகிறேன் என பேசி வைத்துக்கொள்வதா?) //

    நல்ல துணுக்கு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. ஆனால் அதனை இங்கே ஏன் சொன்னீர்கள்? ஏன் சொல்ல வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றியது? என்பது புரியவில்லை.

    June 28, 2006 1:36 PM
    --

    வவ்வால் said...
    குமரன். உங்களது எண்ணத்தை சிறுமைப்படுத்த வேணும் என்று சொல்ல வரவில்லை. ஐ, ஒள என்ற எழுத்துகள் என்பது எப்போதும் இருப்பது அதில் மாற்றம் எல்லாம் ஏற்ப்படுத்த யாரும் சொல்லவில்லை. சில வார்த்தைகளைமட்டும் மாற்றி பொருள் மாறாமல் அதே ஒலியுடன் புழங்கலாம் என முன்னரே உங்கள் பதிவில் விவாதம் செய்தாகி விட்டது. மீண்டும் எண்ணிக்கையில் குழப்பம் இருப்பது போல் பதிவின் தலைப்பை வைத்துள்ளது தான் அவ்வாறு நினைக்க வைத்தது.இங்கே பேசுவோர் கூட யாரும் மாற்றாக பயன்படுத்துவது குறித்து தான் சரியா இல்லையா எனப்பேசுகிறார்கள் , எனவே ஏன் மீண்டும் மீண்டும் எண்ணிகையில் கைவைப்பதாக நீங்கள் பதிவு போடுவதால் தான் அப்படி கேட்டேன்.

    இப்பொழுது நாம் ட்ரில்லையன் என்று சொல்கிறோம் எத்தனை சுன்னம்( பூஜ்யம்) என எண்ணி யாரும் பொதுவாக எழுதுவதில்லை அறிவியல் பத்திரிக்கைகள் தவிர எனவே எல்லாரும் எழுத்தால் எழுதுவதால் அந்த எண் இருக்கிறதா இல்லையா எனக் கேட்பீர்களா?

    June 28, 2006 1:41 PM
    --

    குமரன் (Kumaran) said...
    அப்படி எழுதுவது சரி என்று எண்ணுபவர்கள் இறுதியில் உயிரெழுத்துகளில் தான் கைவைக்க முடியும் என்பதனைச் சுட்டவே அப்படி தலைப்பில் வைத்தேன் வவ்வால். தற்போது எண்ணிக்கையில் குழப்பம் இல்லை; ஆனால் இப்படியே எல்லோரும் எழுதத் தொடங்கினால் குழப்பம் வரலாம் என்பதனைச் சுட்டிக் காட்டவே அப்படிப்பட்டத் தலைப்பு. அது பின்னூட்டத்திற்காக என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நான் அது 'இந்தப் பதிவை நிறைய பேர் படித்துத் தங்கள் கருத்தினைக் கூற வேண்டும். அதற்காக சுண்டியிழுக்கும் தலைப்பாக இது இருக்கும்' என்று எண்ணியதாகவும் வைத்துக் கொள்ளலாம் அல்லவா? நோக்கம் 100 பின்னூட்டம் பெறுவதன்று. நோக்கம் அதிகம் பேர் படித்துத் தங்கள் கருத்தினைக் கூறவைக்க என்ன செய்வது என்பது.

    June 28, 2006 1:55 PM
    --

    வவ்வால் said...
    //சரி. இவை உயிர்மெய் எழுத்துகள். உயிர் எழுத்துகளை மட்டும் மாற்றி எழுதலாம்; உயிர்மெய் எழுத்துகளை மாற்றி எழுதக்கூடாது என்று இலக்கனம் இருக்கிறதா?//

    ரொம்ப எளிது குமரன் இலக்கணம் எல்லாம் பார்க்க வேண்டாம் ,ஐ,ஒள மாற்றி எழுதுவதால் சொற்கள் விகாரப்படவில்லை ஆனால் இந்த உயிர்மை வரும் இடத்து மாற்றி எழுதும் போது எப்படி விகாரப்படுகிறது. மொழிக்கு இலக்கணம் முக்கியம் அதே போல அழகும் தான் .

    வார்த்தைகளின் அழகும்,ஒலி நயமும் மொழியின் சாமுத்திரிகா லட்சணங்கள் போல எனவே அது கெடவில்லை என்னில் மாற்றம் கொண்டு வரலாம்.

    June 28, 2006 1:55 PM
    --

    Iyappan Krishnan said...
    ///அகரத்துடன் யகர மெய் (ய்) வரும்போது ஐ என்பது 'போல்' ஒலிக்கும் என்று தான் சொல்கிறாரே ஒழிய ஐ என்பதும் அய் என்பதும் ஒன்றே தான் என்றோ ஐ என்று இருக்கும் இடங்களில் அய் என்று சொல்லலாம் என்றோ சொல்லவில்லையே? அதனால் இந்த விதியை ஐவர் என்பதனை அய்வர் என்று எழுதுவதற்குச் சான்றாகச் சொல்ல முடியுமா?///


    :) வ் + ஐ = வை
    வ் +அ இ = வ யி வஇரம் என்று சொல்லும்போதே யகரத்திற்கான ஓசை அங்கே சேர்கிறது.
    அது போலத்தான் ஔகாரமும்

    தமிழ் எழுத்துகள் ஒலிவடிவத்தினமைந்தவை. அதனால் இது எழுத்துப் போலியைச் சாரும். இது என் கருத்து

    அன்புடன்
    ஐயப்பன்

    June 28, 2006 2:08 PM
    --

    அழகு said...
    இப்பதிவைப் பின்னூட்டப் போதைக்காக எழுதப்பட்டது என்று என்னால் எண்ண முடியவில்லை. அறிவு தேடும் ஆவலால் பதியப் பட்டதென்றே கொள்கிறேன்.

    போகட்டும்.

    ஐ/அய் ஒள/அவ் குறித்துத் தமிழ் விரும்பிகள் அனைவராலும் மதிக்கப் படும் இராம.கி அவர்களின் விளக்கம் கிடைத்தால் கூடுதல் தெளிவு பெறலாம் என்று நம்புகிறேன்.

    தனிமயிலைத் தூது விடுங்களேன்.

    June 28, 2006 2:43 PM
    --

    அழகு said...
    குன்றா நெடில் மற்றும் குன்றிய நெடில் என்பது குறித்து விளக்கம் வேண்டுகிறேன்.

    நன்றி!

    June 28, 2006 2:46 PM
    --

    இலவசக்கொத்தனார் said...
    //இதற்கு எழுத்துப் போலி என்று பெயர்//

    //அதனால் இது எழுத்துப் போலியைச் சாரும்.//

    இங்கயுமா போலித் தொல்லை? இனிமே ஐகாரத்திற்கும், ஔகாரத்திற்கும் புலிக்குட்டி சோதனை எலிக்குட்டி சோதனை எல்லாம் வரப் போகுதா?

    என்னடா இது மதுரை(காரரு)க்கு வந்த சோதனை!

    June 28, 2006 3:13 PM
    --

    Venkataramani said...
    பயங்கரமான ஆராய்ச்சி நடந்திருக்கு போலிருக்கு. எனக்கு இதைப்பற்றி கருத்து சொல்லும் அளவுக்கு தமிழ்ப்புலமை இல்லை.
    //அவ்வ்வ்வ்வ்வ் என்று அழாமல் ஒளவ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்று அழுவாரா //
    ரசித்தேன் :)

    June 28, 2006 3:20 PM
    --

    வவ்வால் said...
    குமரன்,

    இப்போது டிஸ்கி வேறு போட்டாச்சா(உணர்ச்சிவசப்பட்டு) அப்படியே உங்கள் முந்தையபதிவான உயிரெழுத்துகள் எத்தனைக்கும் ஒரு லின்க் போட்டு விடுங்கள்!

    ஒரு சிலர் பின்னர் இவ்வாறு கூறலாம் என்ன இரண்டு பதிவிலும் ஒரே போல தானே விவாதித்து இருக்கிறீர்கள்,இதில் என்ன புதிதாக விவாதித்து விட்டீர்கள் என சில மாற்றங்களை தவிர இதில் நிறைய ரிபீட் ஆவதாக சொல்லலாம் அப்போது எனது தீர்க்க தரிசனத்தை மறக்காமல் நினைவு கூறவும் :-))

    June 28, 2006 3:37 PM
    --

    பொன்ஸ்~~Poorna said...
    //தமிழ் எழுத்துகள் ஒலிவடிவத்தினமைந்தவை. அதனால் இது எழுத்துப் போலியைச் சாரும். இது என் கருத்து
    //
    சரி தான். இவை எழுத்துப் போலி தான்.

    ஆனால், இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எத்தனையோ பேர் இப்போது தண்ணகரத்துக்குப் பதிலாக றன்னகரத்தை வழக்கமாகவே புழங்க ஆரம்பித்துவிட்டார்கள்.
    சிறப்பு ழகரத்தையும் எப்போதோ பொது ளகரம் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டது.. சுட்டிக் காட்டும் போது எரிச்சல் மட்டும் தான் மிஞ்சுகிறது..

    இதனால் எல்லாம் இந்த இரண்டு எழுத்துக்களும் அழிந்து விடப் போகிறதா என்ன?

    மற்றபடி, வவ்வால் சொன்னதை நான் வழி மொழிகிறேன். பின்னூட்டம் முக்கியமில்லை, மற்றவர் கருத்து தான் முக்கியம் என்றால், வவ்வால் போட்ட ஒற்றைப் பின்னூட்டத்துக்கு உடைத்து உடைத்துப் பதில் சொல்வானேன்?!!

    அதிக பின்னூட்டம் வேண்டும் என்னும் எண்ணம் தவறானது என்று நான் சொல்லவில்லை. அந்த மாதிரி சொல்லி கேலி செய்தவர்களிடமே போய் இதைச் சொல்லி இருக்கிறேன். ஆனால், பின்னூட்ட விளையாட்டு தான் என்று நேராகச் சொல்லிவிட்டுச் செய்வது தான் எனக்குச் சரியாகப்படுகிறது.

    June 28, 2006 3:39 PM
    --

    குமரன் (Kumaran) said...
    பொன்ஸ். நல்ல கேள்வி. நான் வவ்வால் அவர்களின் பின்னூட்டத்திற்குத் தனித்தனியாகப் பதில் சொல்லும்போதே நினைத்தேன் இதனைப் பற்றி. அதனால் உங்கள் கேள்விக்குப் பதில் அப்போதே சிந்திக்கப் பட்டுவிட்டது. ஒரே பின்னூட்டத்தில் பல கருத்துகள் சொல்லியிருந்தால் அவற்றைத் தனித்தனியாக எடுத்துப் பதில் அளிப்பது எடுத்துக் கொண்ட பொருளுக்குச் செய்யும் மரியாதையாக நான் நினைக்கிறேன். அவர் பின்னூட்டத்திற்கு நான் சொன்ன பதில்களைப் பார்த்தாலே தெரியும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிப்பொருளைப் பற்றிப் பேசுகிறது என்று. சில நேரங்களில் சொல்லவந்தவற்றில் ஏதாவது விட்டுப் போவதுண்டு. அந்த நேரங்களில் அதனை மட்டும் அதற்கடுத்தப் பின்னூட்டமாக இடுவதுண்டு. ஒரே பொருளுக்கான பின்னூட்டமாய் இருந்தால் அதற்கு ஒரே பதில் தான் சொல்கிறேன். அதற்கு எடுத்துக்காட்டு ஐயப்பன் அவர்களின் பின்னூட்டத்திற்கு இட்ட பதில்.

    இப்போது சொல்லுங்கள் இது 'மற்றவர்' கருத்துக்காக இடப்பட்டப் பதிவா இல்லை பின்னூட்ட விளையாட்டிற்காக இடப்பட்டப் பதிவா? பின்னூட்டத்திற்காக இடப்படும் பதிவுகளில் அதனை நேரே சொல்லிவிட்டுத் தான் செய்திருக்கிறேன்.

    June 28, 2006 3:47 PM
    --

    குமரன் (Kumaran) said...
    //(உணர்ச்சிவசப்பட்டு) //

    :-))))

    அலுவலகத்துல உக்காந்துகிட்டு பின்னூட்டங்களுக்குப் பதில் சொன்னா உணர்ச்சிவசப்படுறது தான் நடக்குது. வீட்டுக்கு போய் நிதானமா இன்னொரு தடவை பதிவையும் வந்திருக்கிற பின்னூட்டங்களையும் மெதுவா சாவகாசமா படிச்சு அப்புறம் தான் பதில் சொல்லணும் போல இருக்கு. :-)

    June 28, 2006 3:55 PM
    --

    மலைநாடான் said...
    /தய் மாதம் பொய்கய் போல் இருக்கும் என்று நினய்த்து வய்கய்க்கு சென்று கய் வய்த்தேன், வய்கய் பொய்கய் அல்ல புதய் மணல் என்பதல் கய் வகய்யாய் சிக்கிக்கொண்டது. என்ன செய்கய் செய்தும் கய்பிடித்துக் காப்பாற்ற எந்த கய்யும் வரவில்லை என்பதால் நம்பிக்கய் போனது, பொய்கய் ஒன்றய்ச் புனய்யச் செய்து செயற்கய் கய் ஆக்கிக்கொண்டேன்/

    குமரன்!
    பின்னூட்டங்களை இன்னமும் முழுதாக வாசிக்கவில்லை. அதற்க்குள் கோவி.கண்ணனின் பின்னூட்டம் வாய்விட்டுச்சிரிக்கவைத்தது.
    மனைவி பிள்ளைகள் என்னவென்று ஆர்வப்படுமளவிற்கு வாய்விட்டுச்சிரித்து விட்டேன். நல்லதொரு விதயம். மிகுதியும் வாசிக்க வேண்டும்.
    கோவி.கண்ணனன்!
    ரொம்ப நகைச்சுவைதான் போங்க.
    /எந்த கய்யும் வரவில்லை /
    ஆனாலும் இந்த இடத்தில் கோட்டைவிட்டுட்டீங்க

    June 28, 2006 3:55 PM
    --

    வவ்வால் said...
    வாங்க பொன்ஸ்,

    எங்கே இன்னும் கையில் பிரம்போட வரலையேனு பார்த்தேன் :-)) (யாரவது ஒருத்தராவது கண்டிக்கனுங்க எல்லாம் ஆகா அபாரம்னு சொன்ன என்ன பலன்)
    உண்மையில் உங்கள பாராட்டனும் நட்புக்காக முகஸ்துதி பண்ணாம சொல்றிங்க,ஆனால் இப்படி இருந்தால் காலம் தள்ளுறது கஷ்டம்னு ஒரு அனுவ ஞானி சொல்கிறார்(வேறு யார் அடியேன் தான்).

    நான் கூட ஆரம்பத்துல இந்த பதிவை பழையப்பதிவே மீண்டும் வருதுனு கவனிக்கலை .புதிய பதிவுல பழையப்பதிவின் வவ்வால் வாசம் அடிக்கிறதால தான் இப்போ தான் பேசி முடிஞ்ச ஒரு தலைப்பயிற்றே என்று தான் இது கூட கேட்டேன்.மற்றபடி குமரனை கேலிப்பண்ணும் என்னத்தில் அல்ல.

    June 28, 2006 4:13 PM
    --

    வவ்வால் said...
    குமரன்,

    //'இந்தப் பதிவை நிறைய பேர் படித்துத் தங்கள் கருத்தினைக் கூற வேண்டும். அதற்காக சுண்டியிழுக்கும் தலைப்பாக இது இருக்கும்' என்று எண்ணியதாகவும் வைத்துக் கொள்ளலாம் அல்லவா//

    புள்ளி ராஜாவுக்கு என்ற ரேஞ்சில் சுண்டி இழுத்துடிங்க உங்க தலைப்பை வைத்து :-))

    //ஆனால் இப்படியே எல்லோரும் எழுதத் தொடங்கினால் குழப்பம் வரலாம் என்பதனைச் சுட்டிக் காட்டவே அப்படிப்பட்டத் தலைப்பு//

    அப்படி எழுத தொடங்கினால் எந்த குழப்பமும் வராது என்பதே எனது கருத்து ,அதனையே பொன்ஸ்யும் சொல்லியுள்ளார்கள். நான் கொஞ்சம் முன்கூட்டியே யோசிக்கிறேன் போல இருக்கு நீங்க இப்படி பதில் சொல்றதுக்கு முன்னரே ட்ரில்லியன் உதாரணம் தந்துவிட்டேன்

    //இப்பொழுது நாம் ட்ரில்லையன் என்று சொல்கிறோம் எத்தனை சுன்னம்( பூஜ்யம்) என எண்ணி யாரும் பொதுவாக எழுதுவதில்லை அறிவியல் பத்திரிக்கைகள் தவிர எனவே எல்லாரும் எழுத்தால் எழுதுவதால் அந்த எண் இருக்கிறதா இல்லையா எனக் கேட்பீர்களா? //

    ட்ரில்லியனுக்கு 1 போட்டு பக்கத் தில் 12 பூஜ்யம் போட வேண்டும் எல்லாம் அப்படி எண்ணில் சொல்லாமல் பெரும்பாலும் எழுத்தில் எழுதுவதால் அந்த எண் வழக்கொழிந்தா போய்விடும். அதே போல ஐ, ஒள எல்லாம் சாஸ்வதமாக இருக்கும்!

    June 28, 2006 5:48 PM
    --

    வவ்வால் said...
    அம்மா பொன்ஸ்,

    //அப்படி ஒரு கேலி ரெண்டு நாள் முந்தி வேற பதிவில் நடந்தது. உங்க கண்ணுக்குச் சிக்காம எப்படிப் போச்சுன்னு தெரியலை. பாருங்க, கிடைக்கும்.. //

    தமிழ்மணத்தில் தான் சத்தியமூர்த்தி பவன் ரேஞ்சுக்கு கையில மாட்டினவங்கள எல்லாம் கேலி பண்றாங்களே எந்த பதிவுனு தெளிவா சொன்னா நானும் என் பங்குக்கு கொஞ்சம் புழுதி கிளப்புவேன் :-))
    ( வெளிப்படையா சொன்னா அப்புறம் கொம்பு சீவுராங்கனு வேற சொல்வாங்க ,என்ன தாங்க பண்றது அப்புறம் ?)

    June 28, 2006 5:53 PM
    --

    பொன்ஸ்~~Poorna said...
    திரும்பி படிக்கும்போது, ரொம்ப கோபமான தொனி தெரியுது இந்தப் பின்னூட்டத்தில். அப்படி எழுதவில்லை.. எனவே மொத்தமாக அழித்து விட்டு ஒரு பகுதியை மட்டும் போடுகிறேன்:

    குமரன்,
    //இப்போது சொல்லுங்கள் இது 'மற்றவர்' கருத்துக்காக இடப்பட்டப் பதிவா இல்லை பின்னூட்ட விளையாட்டிற்காக இடப்பட்டப் பதிவா? //
    கருத்து சொல்லும் ஒவ்வொருவருக்கும் தனித் தனிப் பின்னூட்டத்தில் பதில், அப்போது தான் மரியாதை செய்த மாதிரின்னும் ஒரு ரூல் கேள்விப்பட்டேன்; சொல்லப்பட்ட கருத்துக்கும் ஒரு தனிப் பின்னூட்ட மரியாதை; ஆனால், நம்ம பின்னூட்ட விளையாட்டு விளையாடவில்லை. இது உங்கள் கருத்தாக இருந்தால், நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை குமரன்.

    //எங்கே இன்னும் கையில் பிரம்போட வரலையேனு பார்த்தேன் :-)) (யாரவது ஒருத்தராவது கண்டிக்கனுங்க எல்லாம் ஆகா அபாரம்னு சொன்ன என்ன பலன்) //
    வவ்வால், "ஆகா அபாரம்"னு நான் சொல்வதே இல்லீங்க. ஆனா, இப்போவெல்லாம் இந்த மாதிரி பிரம்பு எடுக்கிறதைக் குறைச்சிகிட்டு இருக்கேன். தேவையில்லாத இடங்களில் எல்லாம் என் பெயர் இதனால வருகிறது என்று ஒரு எண்ணம். :)

    //ஆனால் இப்படி இருந்தால் காலம் தள்ளுறது கஷ்டம்னு ஒரு அனுவ ஞானி சொல்கிறார்(வேறு யார் அடியேன் தான்).//
    ரொம்பச் சரிதான் :)

    // நான் கூட ஆரம்பத்துல இந்த பதிவை பழையப்பதிவே மீண்டும் வருதுனு கவனிக்கலை.//
    நான் கவனிச்சேன். கொஞ்சம் பொறுத்திருந்து பதில் சொல்லலாம்னு விட்டுட்டேன். அதோட என்னைப் பொறுத்தவரை இந்தப் பதிவு தேவை இல்லை. முன்னேயே சொன்னது போல், சிலர் சில இடங்களில் பயன்படுத்துவதால் எழுத்து அழியும் அபாயம் நிச்சயம் இல்லை.

    //குமரனை கேலிப்பண்ணும் என்னத்தில் அல்ல. //
    உங்களைக் கேலி செய்யறீங்கன்னு சொல்லலை வவ்வால். அப்படி ஒரு கேலி ரெண்டு நாள் முந்தி வேற பதிவில் நடந்தது. உங்க கண்ணுக்குச் சிக்காம எப்படிப் போச்சுன்னு தெரியலை. பாருங்க, கிடைக்கும்..

    June 28, 2006 5:54 PM
    --

    FloraiPuyal said...
    //
    அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும்.
    இ ஈ எ ஏ ஐ என இசைக்கும்
    அப் பால் ஐந்தும் அவற்று ஓரன்ன
    அவைதாம்,
    அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய.
    உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும்
    அப் பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும்.
    //
    அ மற்றும் ஆ ஆகிய இரு எழுத்துக்கள் உதடுகளை விரித்து வைத்து உச்சரிக்கப் படுபவை. இ, ஈ, எ, ஏ, ஐ ஆகியன அண்பல்லிலிருந்தும் நா விளிம்பிலிருந்தும் உச்சரிக்கப் படுபவை. உ, ஊ, ஒ, ஓ மற்றும் ஒள ஆகியன உதடுகளைக் குவித்து உச்சரிக்கப் படுபவை. ஐ மற்றும் ஒள இரண்டும் பொதுவாக இரண்டு மாத்திரை அளவும், குறுகி வரும்பொழுது ஒன்றரை மாத்திரை அளவும் பெறும். சங்க காலத்தில் இவ்வெழுத்துக்களை எப்படி எழுதினர் என்பது நமக்கு தெரியவில்லை. இடைப்பட்ட காலத்தில் ஐ மற்றும் ஒள ஆகிய எழுத்துக்களை அய் மற்றும் அவ் எனச்சிலர் எழுதியதாகத் தெரிகிறது. இக்காலத்தில் பயன்படுத்தப்படும் ஐ சுமார் பன்னிரு நூற்றாண்டுகளுக்கு முன்பும், ஒள மிகச் சமீப காலத்தில் இருந்தும் வழக்கத்தில் இருக்கின்றன.

    எனவே குறுகாத ஐ மற்றும் ஒள ஆகிய எழுத்துக்களை அய் என்றோ அவ் என்றோ எழுதுவது தவறே. குறுகும் பொழுது அய், அவ் என ஒன்றரை மாத்திரை அளவில் எழுதுவது தவறில்லை.

    June 28, 2006 6:46 PM
    --

    இலவசக்கொத்தனார் said...
    ஃப்ளோரிபுயல்,

    ரொம்ப நாள் ஆச்சே வந்து. நல்லா இருக்கீங்களா? சமீபத்தில் வந்த வெண்பா பதிவுகளில் கூட உங்களைக் காணுமே...

    June 28, 2006 8:00 PM
    --

    குறும்பன் said...
    //(இதனால் நான் உங்களுக்குச் சொல்வது என்னவென்றால் என்னுடைய வேறு இடுகைகளையும் படித்தால் இன்னும் அதிகமாக மகிழ்வேன் என்பது) :-)
    //
    அவற்றில் பின்னூட்டம் இடாததால் படிக்கவில்லை என்று நினைக்காதீர்கள். :-)


    நிறைய பேர் ஐ & ஔ போன்றவற்றை தமிழில் தட்டத்தெரியாமல் அய், அவ் என்று எழுதியிறுப்பார்கள் என்று எண்ணுகிறேன். இதற்கு காரணம் இவ்வெழுத்துக்கள் குறைவான இடத்தில் புழங்கப்படுவது என்று நினைக்கிறேன். நானும் ஔ ரௌ மௌ வௌ தட்ட சுரதாவின் பக்கம் சென்று உதவிநாடினேன். பல பேர் தப்பு பண்ணுனா அது சரியாகாது, கூகுலாண்டவருக்கு தப்பு சரி எல்லாம் தெரியாது எல்லாம் அவருக்கு ஒன்றே :-)) ( ஆண்டவனுக்கு எல்லாம் ஒன்றே :-) )

    //அதே போல் தான் முயற்ச்சி, பயிற்ச்சி என்று எழுதுவதும். ற் க்குப் பிறகு க் தேவையில்லை. ஆனால் நிறைய பேர் அந்தத் தவறை செய்கிறார்கள். //
    "ற்" அடுத்து மெய்யெழுத்து வரக்கூடாது, வந்தா தமிழ் ஆசிரியர் அதன் மேல் சுழித்துவிட்டு மதிப்பெண்ணை குறைத்துவிடுவார். ஆகையால் எனக்கு நன்றாக தெரிந்த இலக்கண விதி இது :-)


    //குறும்பன் நான் ஏன் வவ்வால் என எழுதுகிறேன் என்பதை ஏற்கனவே அய்யம் திரிபுற எடுத்து விளக்கிவிட்டேன் //
    இப்பொழுது தான் படித்தேன் வவ்வால். நான் அறிந்த வரையில் யாரும் ஔ -வை அவ் என்றோ வௌ - வை வவ் என்றோ சீர்திருத்தியதாக தெரியவில்லை. நீங்கள் தற்கால பெரியார் :-)

    //'ஒள'காரக் குழப்பத்துக்குத் தீர்வு கண்டே ஆகவேண்டும். 'ஒ' மற்றும் 'ள' என்பற்றைச் சேர்த்து அவ்வெழுத்து வரக்கூடாது என்பது என் கருத்து. இந்த மாற்றம் பற்றியும் 'தமிழ்வரிவடிவத்தில் தேவைப்படும் மாற்றங்கள்' என்ற பதிவில் எழுதியிருக்கிறேன். (இந்த 'ஒள' சிக்கலை மட்டும் படிக்கவும். மற்றவை கொஞ்சம் அதிகப்படியானவை.;-))
    //
    உண்மை எனது வாக்கு "ஔ" க்கு மட்டும், மற்றதெல்லாம் தலைய சுத்த வைக்குதப்பா....

    June 28, 2006 8:48 PM
    --

    வசந்தன்(Vasanthan) said...
    ஐயப்பன் சொன்ன இலக்கணப்பகுதியே நானும் சொல்லிச் சென்றது. பாடசாலையிலேயே இப்பகுதி கற்பிக்கப்படுகிறது. 'ஐயர் -அய்யர்', 'ஐந்து - அய்ந்து' என்ற எடுத்துக்காட்டுக்களோடு சொல்லப்படுவதாக இன்னும் ஞாபகத்தில் உள்ளது.
    அதாவது அப்படி எழுதுவது தவறன்று, ஏற்றுக்கொள்ளத்தக்கதே என்ற பொருளோடுதான் கற்பிக்கப்படுகிறது. ஆனால் எந்தெந்த இடங்களில் ஏற்றுக்கொள்ளலாம், எந்தெந்த இடங்களில் ஏற்றுக்கொள்ள முடியாதென்பது தெரியவில்லை. புயல் சொல்வதைப்போல் 'ஐ'காரக் குறுக்கம் வருமிடங்கள் முக்கியத்துவம் பெறும். 'ஒள' என்பதற்கு மாற்று ஏதும் சொல்லப்பட்டதாகவும் தெரியவில்லை. அப்படிப் படித்த ஞாபகமும் இல்லை.

    ஆம். இராம.கி. ஐயாவும் அப்படித்தான் எழுதுகிறார்.
    *********************************

    June 28, 2006 9:26 PM
    --

    குமரன் (Kumaran) said...
    நண்பர்களின் அறிவுரையின் படி இராம.கி. ஐயா அவர்களை வந்து இந்தப் பதிவைப் படித்துக் கருத்து சொல்லும் படி வேண்டிக் கொண்டு ஒரு பின்னூட்டம் இட்டிருக்கிறேன். அவருடைய மின்னஞ்சல் முகவரி என்னிடம் இல்லை. யாரிடமாவது இருந்தால் அதனை எனக்கு மின்னஞ்சல் செய்தால் நான் அவருக்கு மின்னஞ்சல் செய்தும் கேட்டுக் கொள்கிறேன். என் மின்னஞ்சல் முகவரி: kumaran dot malli at gmail dot com

    June 28, 2006 9:43 PM
    --

    சிவமுருகன் said...
    அண்ணா,

    இதுல இவ்ளோ விஷயமிருக்கா?

    சௌராஷ்ட்ர மொழிகளில் கூட இது போல ஒரு குழப்பம் வந்தது அப்போது இசை - இலக்கியம் சம்பந்தமாக எழுதப்படும் போது உள்ளது உள்ள படியும் (ஐ,ஔ), மற்றபடி கடித போக்குவரத்து, எழுத்து பேச்சு போன்ற நடைமுறையில் சீர்திருத்தப்பட்ட எழுத்துக்களை (அய், அவ்) கையாள்வது என்று தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

    மற்றபடி எழுத பழகும் போது ஐ, ஔ,அம்,அஹ போன்ற எழுத்துக்களை புறக்கணிக்கவில்லை.

    June 29, 2006 12:00 AM
    --

    கோவி.கண்ணன் said...
    //ஆனாலும் இந்த இடத்தில் கோட்டைவிட்டுட்டீங்க
    By மலைநாடான், at June 28, 2006 3:55 PM //
    ஆமாம் கோட்டய் விட்டுவிட்டேன்

    June 29, 2006 12:15 AM
    --

    குமரன் (Kumaran) said...
    சிபி, நீங்க சொன்னதை இன்னொரு தரம் படித்ததில் நீங்க என்ன சொல்லவர்றீங்கன்னு புரிஞ்சது. சில இடங்களில் ஐ, ஒள போன்றவற்றைத் தவிர்த்து அய், அவ் என்று எழுதினாலும் பல இடங்களில் அப்படிச் செய்ய முடியாது. அதனால் உயிரெழுத்துகளில் இருந்து ஐ, ஒள இவற்றை நீக்க வருங்காலத்தில் அரசாணையிட்டாலும் நடக்காது. அதனால் என்றுமே உயிரெழுத்துகள் 12 ஆகத் தான் இருக்கும் என்று சொல்கிறீர்கள். அப்படித்தானே. காலையில் அலுவலகத்தில் படித்ததில் இதெல்லாம் மண்டையில் ஏறலை. இப்பத் தான் நீங்க என்ன சொல்லவர்றீங்கன்னு ஏறுது. :-)

    June 29, 2006 12:39 AM
    --

    குமரன் (Kumaran) said...
    //கருத்தைச் சொல்லிய அனைவருமே உயிரெழுத்துகள் 12தான் என்பதில் எந்த விதமான குழப்பமும் இல்லாது இருப்பதாகவே தெரிகிறது. //

    கொத்ஸ். எனக்கும் அந்தக் குழப்பம் இல்லை. அது என் பதிவை இரண்டாவது முறை படித்தாலே தெரியும். ஏனய்யா இப்படியே இலக்கணத்திற்குப் புறம்பாய் எழுதிக் கொண்டே போனால் விட்டால் அரசாணையிட்டு உயிரெழுத்து 10 தான் என்று சொல்லிவிடுவீர்கள் போலிருக்கிறதே என்ற தொனியில் எழுதப்பட்டது தான் இந்தப் பதிவு.

    June 29, 2006 12:44 AM
    --

    குமரன் (Kumaran) said...
    கோவி.கண்ணன் ஐயா. வழக்கம் போல் பதிவில் பேசப்படும் பொருளைக் கொண்டே நகைச்சுவையாகப் பின்னூட்டம் இட்டுவிட்டீர்கள். நன்றாக எழுதியிருக்கிறீர்கள். படித்து ரசித்துச் சிரித்தேன்.

    June 29, 2006 12:46 AM
    --

    குமரன் (Kumaran) said...
    //வைரம் , வயிரம் என்பதெல்லாம் ஐ,ஒள க்கு மாற்று பயன்படுத்துவதன் அதீத ஈடுபாட்டின் விளைவே , அதில் முன்னரே சொன்னார் போல் வை என்பது உயிர் எழுத்து அல்ல ,எனவே அதனை ஐயா என்பதற்கு அய்யா சொன்னார்களே என ஒப்பிட வேண்டாம். இப்படியே தோண்டிக்கொண்டு தான் போகவேண்டும்."ALUMINIUM ".என்பதும் "ALUMINUM" மேலும் "COLOUR" என்பதும் " COLOR" எனச்சொல்வதும் ஒரே போல ஆங்கிலத்தில் பாவிக்கவேண்டுமென முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டு அகராதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது அது போல தான் அய்யா,ஐயா என்பதும்.எனவே தனி தனி எழுத்தாக புணர்ச்சிவிதி பார்க்க தேவையில்லை.//

    இப்படித்தானே ஒவ்வொன்றாக மாறுகிறது வவ்வால். இன்று ஐயா = அய்யா என்று கூறி அதனை அகராதியில் சேர்த்துவிடலாம். பின்னர் வைரம் = வயிரம் என்று கூறி அதனையும் அகராதியில் சேர்த்துவிடலாம். இப்படியே அதீத ஈடுபாட்டுடன் பய்யன் என்றும் எழுதத் தொடங்கினால் பையல் = பய்யல் என்று கூறி அகராதியில் சேர்க்க என்ன தடை? இப்படியே காலப்போக்கில் ஐகாரமும் ஒளகாரமும் வேண்டாம் என்றாகிவிடலாம் அல்லவா?

    ஆனால் ஒன்று. இலக்கியத்திற்குப் பின்னால் தான் இலக்கணம் வருகிறது. இந்த மாதிரி ஐ அய் ஆவதும் ஒள அவ் ஆவதும் மொழியியலில் இயற்கையாக நடக்கும் ஒரு செயலாக இருந்தால் அது நடந்தே தீரும். பின்னர் அதற்காக புதிய இலக்கண விதியும் வரும்.

    June 29, 2006 12:52 AM
    --

    குமரன் (Kumaran) said...
    //இங்கே பேசுவோர் கூட யாரும் மாற்றாக பயன்படுத்துவது குறித்து தான் சரியா இல்லையா எனப்பேசுகிறார்கள் //

    வவ்வால். நானும் அதனையே இந்தப் பதிவின் முக்கிய விவாதப் பொருளாக வைத்திருக்கிறேன். அதனாலேயே எல்லோரும் அதனைப் பற்றியே பேசுகிறார்கள். தலைப்பும் கடைசிப் பத்தியும் ஏன் அப்படிச் சொல்கின்றன என்று ஏற்கனவே பல முறை சொல்லிவிட்டேன்.

    (தங்களை நான் வவ்வால் என்றே விளித்துக் கொண்டிருக்கிறேன். ஏன் வௌவால் என்று விளிக்கவில்லை என்று யாராவது கேட்க நினைத்தால் அவர்களுக்கு ஆன பதில் இது: வவ்வால் அவர்கள் தனது பெயர் என்று இதனை வைத்துக் கொண்டுள்ளார். அதனை மாற்றிச் சொல்ல நான் விரும்பவில்லை).

    June 29, 2006 12:57 AM
    --

    குமரன் (Kumaran) said...
    //இப்பொழுது நாம் ட்ரில்லையன் என்று சொல்கிறோம் எத்தனை சுன்னம்( பூஜ்யம்) என எண்ணி யாரும் பொதுவாக எழுதுவதில்லை அறிவியல் பத்திரிக்கைகள் தவிர எனவே எல்லாரும் எழுத்தால் எழுதுவதால் அந்த எண் இருக்கிறதா இல்லையா எனக் கேட்பீர்களா?
    //

    இல்லை. நான் கேட்க மாட்டேன். ஏனெனில் ஒன்று எழுத்தில் எழுதுவது; இன்னொன்று எண்ணில் எழுதுவது. ஐ என்று எழுதுவதும் அய் என்று எழுதுவதும் இரண்டுமே எழுத்தில் எழுதுவது தான்; எண்ணில் எழுதுவது இதில் ஒன்றும் இல்லை. அதனால் உவமை ஒத்துப் போகவில்லை.

    யாரும் புழங்காததால் எண் மறையுமா என்று 'புழக்கத்தை' வைத்து உவமிக்கிறீர்கள் என்றால் அதற்கு விடை. எல்லோரும் எழுத்தில் எழுதினாலும் எண்ணில் அதனைக் குறிப்பதற்கு என்று ஒரு வழி இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் எல்லோரும் அவ் என்றோ அய் என்றோ புழங்கத் தொடங்கினால் நாளாவட்டத்தில் அவ்வாறு எழுதுவதே சரி; ஐ என்றும் ஒள என்றும் அந்த இடங்களில் புழங்குவது தவறு என்ற எண்ணம் ஏற்படும் அல்லவா? அப்போதும் நெடுங்கணக்கில் ஐயும் ஒளவும் இருக்கிறது என்ற தெளிவு இருக்கும்; ஆனால் அவை ஆய்தம் போல் புழக்கம் இன்றிப் போகும்.

    June 29, 2006 1:01 AM
    --

    குமரன் (Kumaran) said...
    //ரொம்ப எளிது குமரன் இலக்கணம் எல்லாம் பார்க்க வேண்டாம் ,ஐ,ஒள மாற்றி எழுதுவதால் சொற்கள் விகாரப்படவில்லை ஆனால் இந்த உயிர்மை வரும் இடத்து மாற்றி எழுதும் போது எப்படி விகாரப்படுகிறது. மொழிக்கு இலக்கணம் முக்கியம் அதே போல அழகும் தான் .

    வார்த்தைகளின் அழகும்,ஒலி நயமும் மொழியின் சாமுத்திரிகா லட்சணங்கள் போல எனவே அது கெடவில்லை என்னில் மாற்றம் கொண்டு வரலாம். //

    இந்த வாதம் எனக்குப் புரியவில்லை வவ்வால். நான் உயிர்மெய்யிலும் இப்படி எழுதப்படும் சொற்களை எடுத்துக்காட்டியிருக்கிறேன். வயிரம், கவுதாரி, கவுசிகன், மவுலி, பவுர்ணமி, பவ்வம், ரவுத்திரம், வவ்வால் - இவை எல்லாமே உயிர்மெய்யில் வரும் ஐ மாற்றி எழுதப்பட்டவை தான். ஆனால் அழகு கெடவில்லையே? இப்படி எழுதப்பட்டவற்றைப் பார்த்ததால் அவை அழகு கெடாதவையாகத் தெரிகின்றன. நாளையே ஒருவர் கய்தி, கய்ம்பெண், வய் என்று எழுதத் தொடங்கி அது சில காலம் எந்த வித எதிர்ப்பும் இன்றி சென்றுவிட்டால் அவையும் அழகுடன் தோன்றும். அப்போது அதுவும் சரி என்று சொல்வீர்களா?

    June 29, 2006 1:09 AM
    --

    குமரன் (Kumaran) said...
    //தமிழ் எழுத்துகள் ஒலிவடிவத்தினமைந்தவை. அதனால் இது எழுத்துப் போலியைச் சாரும். இது என் கருத்து
    //

    ஐயப்பன். தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி. நான் உங்கள் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளத் தயார். ஆனால் இராம.கி. ஐயா வந்து அவர் கருத்தையும் சொல்லிவிட்டால் பின்னர் நிரந்தரமாக ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்வேன்.

    June 29, 2006 1:10 AM
    --

    குமரன் (Kumaran) said...
    தங்களின் நம்பிக்கைக்கு மின்ன நன்றி அழகு. ஆமாம். எத்தனை பேர் இந்தப் பதிவு பின்னூட்டங்களுக்காகப் போடப்பட்டது என்று சொன்னாலும் சரி; என் மனதிற்குத் தெரியும் இந்தப் பதிவின் நோக்கம்.

    இராம.கி. ஐயாவிற்குப் பின்னூட்டம் இட்டிருக்கிறேன். என்னிடம் அவருடைய மின்னஞ்சல் முகவரி இல்லை; அதனால் தனிமடல் இடவில்லை.

    June 29, 2006 1:12 AM
    --

    குமரன் (Kumaran) said...
    //குன்றா நெடில் மற்றும் குன்றிய நெடில் என்பது குறித்து விளக்கம் வேண்டுகிறேன்.
    //

    எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர் சொல்லுங்கள்.

    June 29, 2006 1:13 AM
    --

    குமரன் (Kumaran) said...
    //இங்கயுமா போலித் தொல்லை? இனிமே ஐகாரத்திற்கும், ஔகாரத்திற்கும் புலிக்குட்டி சோதனை எலிக்குட்டி சோதனை எல்லாம் வரப் போகுதா?

    என்னடா இது மதுரை(காரரு)க்கு வந்த சோதனை!

    //

    கொத்ஸ். படித்தேன். ரசித்தேன். சிரித்தேன். எல்லாமே தேன். :-)

    June 29, 2006 1:13 AM
    --

    குமரன் (Kumaran) said...
    வந்து முழுசாப் படிச்சுப் பின்னூட்டமும் போட்டதற்கு நன்றி வெங்கட்ரமணி.

    June 29, 2006 1:14 AM
    --

    குமரன் (Kumaran) said...
    //இப்போது டிஸ்கி வேறு போட்டாச்சா(உணர்ச்சிவசப்பட்டு) அப்படியே உங்கள் முந்தையபதிவான உயிரெழுத்துகள் எத்தனைக்கும் ஒரு லின்க் போட்டு விடுங்கள்!
    //
    முந்தையப் பதிவின் சுட்டி தான் இந்தப் பதிவின் வலப்பக்கமாகவே இருக்கிறதே. அதனால் தனியாகக் கொடுக்கவில்லை வவ்வால்.

    //ஒரு சிலர் பின்னர் இவ்வாறு கூறலாம் என்ன இரண்டு பதிவிலும் ஒரே போல தானே விவாதித்து இருக்கிறீர்கள்,இதில் என்ன புதிதாக விவாதித்து விட்டீர்கள் என சில மாற்றங்களை தவிர இதில் நிறைய ரிபீட் ஆவதாக சொல்லலாம் அப்போது எனது தீர்க்க தரிசனத்தை மறக்காமல் நினைவு கூறவும் :-))
    //

    என்னுடைய வாதங்களில் எந்த மாற்றங்களும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஏற்கனவே சொன்ன மாதிரி பின்னூட்டங்களில் பேசியதைத் தனியாகப் பதிவாகப் போட்டதால் இன்னும் நிறைய பேர் படித்துப் தங்கள் கருத்துகளைச் சொல்ல வழியேற்பட்டது.

    (பொன்ஸிற்காக இரண்டு பின்னூட்டங்களாக வரவேண்டிய இந்தப் பின்னூட்டம் ஒரே பின்னூட்டமாக இடப்படுகிறது. :-) மரியாதை கெட்டவன் என்று திட்டப் போகிறார். :-)

    June 29, 2006 1:18 AM
    --

    குமரன் (Kumaran) said...
    //ஆனால், இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. //

    //இதனால் எல்லாம் இந்த இரண்டு எழுத்துக்களும் அழிந்து விடப் போகிறதா என்ன?
    //

    உங்கள் கருத்துகளுக்கு நன்றி பொன்ஸ்.

    June 29, 2006 1:20 AM
    --

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் மலைநாடான். நானும் கோவி.கண்ணனின் நகைச்சுவையை நன்றாக ரசித்தேன். :-) மிகுதியையும் வாசித்துவிட்டுத் தங்கள் கருத்தினைச் சொல்லுங்கள்.

    June 29, 2006 1:21 AM
    --

    குமரன் (Kumaran) said...
    //புள்ளி ராஜாவுக்கு என்ற ரேஞ்சில் சுண்டி இழுத்துடிங்க உங்க தலைப்பை வைத்து :-))
    //

    :-))

    //முன்னரே ட்ரில்லியன் உதாரணம் தந்துவிட்டேன்
    //

    அதற்கு நான் பதில் சொல்லியிருக்கிறேன் பாருங்கள்.

    June 29, 2006 1:23 AM
    --

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் பொன்ஸ். சினத்தொனி நிரம்பவே தென்பட்டது அந்தப் பின்னூட்டத்தில். ஏன் உங்களுக்கும் இவ்வளவு சினம் என்று எனக்கு மிக வியப்பாய் போனது உண்மை. இப்போது நீங்கள் அந்தப் பின்னூட்டத்தை அழித்து எழுதிவிட்டீர்கள். அதனால் அதில் இருந்ததைப் பற்றிப் பேசப் போவதில்லை. :-)

    //கருத்து சொல்லும் ஒவ்வொருவருக்கும் தனித் தனிப் பின்னூட்டத்தில் பதில், அப்போது தான் மரியாதை செய்த மாதிரின்னும் ஒரு ரூல் கேள்விப்பட்டேன்; சொல்லப்பட்ட கருத்துக்கும் ஒரு தனிப் பின்னூட்ட மரியாதை; ஆனால், நம்ம பின்னூட்ட விளையாட்டு விளையாடவில்லை. இது உங்கள் கருத்தாக இருந்தால், நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை குமரன்.
    //

    மிக்க நன்றி. என் பதிவில் மட்டும் இல்லாமல் மற்றவர் பதிவிலும் நான் இதனையே செய்கிறேன். என் பாணி என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

    June 29, 2006 1:25 AM
    --

    வவ்வால் said...
    குமரன்,

    //இந்த வாதம் எனக்குப் புரியவில்லை வவ்வால். நான் உயிர்மெய்யிலும் இப்படி எழுதப்படும் சொற்களை எடுத்துக்காட்டியிருக்கிறேன். வயிரம், கவுதாரி, கவுசிகன், மவுலி, பவுர்ணமி, பவ்வம், ரவுத்திரம், வவ்வால் - இவை எல்லாமே உயிர்மெய்யில் வரும் ஐ மாற்றி எழுதப்பட்டவை தான். ஆனால் அழகு கெடவில்லையே? இப்படி எழுதப்பட்டவற்றைப் பார்த்ததால் அவை அழகு கெடாதவையாகத் தெரிகின்றன.//

    நீங்கள் உங்கள் பதிவில் சுட்டும் போது இது போன்ற(வயிரம்,கவுதாரி..) வார்த்தைகளை சொல்லாமல் தேடி எடுத்து சில படிக்கும் போது ஒலிநயத்துடன் இல்லாத வார்த்தைகளை மட்டும் பட்டியல் இட்டுள்ளீர்கள் ,
    அதனால் இப்படி எழுதுவது என்பது அசிங்கமாக போய்விடும் என நிலை நிறுத்த முயன்றது போல் எனக்கு தெரிந்ததால் தான் இந்த மொழியின் அழகியல் உணர்வை சொன்னேன்.

    //நாளையே ஒருவர் கய்தி, கய்ம்பெண், வய் என்று எழுதத் தொடங்கி அது சில காலம் எந்த வித எதிர்ப்பும் இன்றி சென்றுவிட்டால் அவையும் அழகுடன் தோன்றும். அப்போது அதுவும் சரி என்று சொல்வீர்களா? //

    யாரோ ஒருவர் செய்தால் அது எல்லாம் மொழிசீர் திருத்தமாக போய்விடுமா, தமிழின் மீதும் பற்றும் ஆழ்ந்த பின் புலமும் இல்லாமல் யார் சொன்னாலும் அதை விவாதிக்க கூட யாரும் முன்வர மாட்டார்கள்,எனவே யாரோ ஒருவர் பற்றிய பயம் எல்லாம் வேண்டாம்.இந்த மொழி சீர் திருத்தம் கூட பெரியார் போன்ற ஒரு ஆளுமை உள்ளவர்களால் பல காலம் சொன்ன பிறகே செயல் பாட்டிற்கு வந்தது அதுவே இன்னும் முழுதும் வரவில்லை என்பதற்கு சான்று உங்கள் பதிவே!

    கம்பர் பாடல் எழுதும் போது இமிதம் ,என்பதற்கு மோனையாக துமிதம் என்று ஒரு வார்த்தைபோட்டு பாடிவிட்டார் துமிதம் என்றால் சிறிய துளி என்று பொருளும் கூறினார் ,ஒட்டக்கூத்தர் அப்படி ஒரு வார்த்தையே இல்லை என சவால் விட்டதினால், கம்பருக்கு ஆதரவாக சரஸ்வதியே தயிர் கடையும் ஆயர்குலப்பெண் வேடத்தில் வந்து துமிதம் என்ற சொல் வழக்கில் உள்ளது என நிருபித்ததாக ஒரு தகவல் உண்டு.

    இதனை எதற்கு சொல்கிரேன் என்றால் யாரோ ஒருவர் சொல்வது எல்லாம் தமிழை மாற்றிவிடாது.
    அகராதியில் சேர்ப்பதும் அத்தனை எளிது அல்ல அதற்கு என்று அறிஞர் கூட்டம் எல்லாம் கூடி தான் தீர்மானிக்கும். எனவே அவ்வளவு சீக்கிரம் தமிழ் உருக்குலைந்து விடாது என்பதே எனது எண்ணம்.

    எந்த ஒரு விஷயத்தையும் மீண்டும் மீண்டும் பேச புதிய தகவல்கள் ,கருத்துகள் வந்து கொண்டு தான் இருக்கும்.எனவே புதிய கருத்திற்காக என்றால் பல பழைய பதிவுகளையும் தூசு தட்டி தாங்கள் மீண்டும் போடலாம் .

    June 29, 2006 8:49 AM
    --

    பொன்ஸ்~~Poorna said...
    //எந்த ஒரு விஷயத்தையும் மீண்டும் மீண்டும் பேச புதிய தகவல்கள் ,கருத்துகள் வந்து கொண்டு தான் இருக்கும்.எனவே புதிய கருத்திற்காக என்றால் பல பழைய பதிவுகளையும் தூசு தட்டி தாங்கள் மீண்டும் போடலாம் . //

    வவ்வால், நீங்க சொன்னதைத் திரும்பிச் சொல்லத் தோணுது..

    .. உண்மையில் உங்கள பாராட்டனும் நட்புக்காக முகஸ்துதி பண்ணாம சொல்றிங்க...

    June 29, 2006 11:27 AM
    --

    குமரன் (Kumaran) said...
    //எந்த ஒரு விஷயத்தையும் மீண்டும் மீண்டும் பேச புதிய தகவல்கள் ,கருத்துகள் வந்து கொண்டு தான் இருக்கும்.எனவே புதிய கருத்திற்காக என்றால் பல பழைய பதிவுகளையும் தூசு தட்டி தாங்கள் மீண்டும் போடலாம் . //

    வவ்வால் என் மனதில் இருப்பதை அப்படியே சொல்லிவிட்டீர்கள். உங்களுக்கு மனதைப் படிக்கும் சக்தி உண்மையிலேயே இருக்கிறது. நான் இரண்டு மாதங்களாக இதைப் பற்றி நினைத்துக் கொண்டு தான் இருக்கிறேன். என் பழைய பதிவுகளில் கருத்துகளை வேண்டி இட்டப் பதிவுகள் உண்டு. அப்போது எத்தனை பேர் படித்தார்கள் என்று தெரியவில்லை. இப்போது அவற்றை மீண்டும் எடுத்து இட்டால் மேலும் கருத்துகள் கிடைக்குமே என்று எண்ணிக் கொண்டே இருக்கிறேன். புதிதாக எழுதுவதற்கும் சங்கதி இருந்ததால் அந்த எண்ணம் பின்னாலேயே தங்கிவிட்டது. விரைவில் ஒவ்வொன்றாக என் பழைய பதிவுகளிலிருந்தும் மீள்பதிவு செய்கிறேன். தவறாமல் வந்து நீங்களும் பொன்ஸும் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். நட்பிற்காக முகஸ்துதி பண்ணாத உங்களையும் பொன்ஸையும் இராகவனையும் இன்னும் ஏனைய நண்பர்களையும் பாராட்டணும். நான் கற்றுக் கொள்ள வேண்டிய குணம். :-)

    June 29, 2006 12:05 PM
    --

    ஓகை said...
    குமரன்,

    இது நம்மளவில் தீர்க்கப்படவேண்டுமானல் ராகவன் அவர்களுடைய பதிலே போதுமானது. ஐ வேறு அய் வேறுதான். ஐ என்று சொல்லும்போது மெய்யொலிக்கு வரும் முற்றொலி வருவதில்லை. உ-ம்: "ஐ! குமரன் நன்றாக எழுதுகிறாரே!". (அய் இல்லை ஐ தான்). "அய்யெ இன்னாத்த பெர்சா எழுதுராரு?"(ஐயே - இல்லை அய்யெ தான்). அதேப் போல ஔடதம் அல்லது ஔஷதத்தை அவ்டதம் என்றோ அல்லது அவ்ஷதம் என்றோ எழுத முடியாது. இவ்வளவு சிறிதான ஐயத்திற்கு அரசாணை என்று அவ்வளவிற்கு (ஔவளவு - இல்லை) சென்றது சிலருக்கு சினம் கொள்ள ஏதுவான ஒரு வாதமாக தோன்றக்கூடியதுதான். எனக்கு வரவில்லை. ஆனாலும் இன்னும் இளவயதிலோ அல்லது தவறான ஒரு தருணத்திலோ மனதில் சிறு சங்கடம் தோன்றியிருக்குமோ என்ற ஐயம் வருகிறது. ஒரு சிரிப்பான் போட்டிருக்கிறீர்கள். செய்திக்குத் தகுந்தவாறு சிரிப்பான்களும் செயலிழக்கும் என்பதற்கு இப்பதிவு ஒரு சிறந்த உதாரணம். உங்கள் தலைப்பு மிகவும் மறுக்கத்தக்க ஒன்றாகும்.

    சிலர் அவ்வாறு எழுதுவது ஏனென்று புரிவதில்லை. அவர்கள் தமிழறிஞர்களாக இருக்கும்போது அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்வதுதான் சிறந்த வழி. திரு இராம கி ஐயா அவர்கள் நிச்சயம் பதிலளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

    கோவி.கண்ணன் அருமையாக எழுதியிருகிறீர்கள். நகைச்சுவைக்கு நகைச்சுவை அதே நேரம் செய்திக்கு செய்தி.

    June 29, 2006 12:10 PM
    --

    நாமக்கல் சிபி said...
    குமரன்,
    -----------------------------------
    தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கை 247. அவை முதல், சார்பு என இரு வகைப்படும். முதல் எழுத்துக்கள் 30. சார்பு எழுத்துக்கள் 217.

    முதல் எழுத்துக்கள் உயிர் என்றும் மெய் என்றும் இரு வகைப்படும்.
    உயிர் எழுத்துக்கள் 12. மெய் எழுத்துக்கள் 18.

    உயிர் எழுத்துக்கள் குறில், நெடில் என இருவகைப்படும்.

    அ,இ,உ,எ,ஒ என்னும் ஐந்தும் உயிர்க்குறில்.
    ஆ,ஈ,ஊ,ஏ,ஐ, ஓ,ஔ என்னும் ஏழும் உயிர் நெடில்.

    க் - முதல் ன் - வர்ரையிலான 18 மெய் எழுத்துக்களும் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று வகைப் படும்.

    க்,ச்,ட்,த்,ப்,ற் என்னும் ஆறும் வல்லின மெய்கள் எனப்படும்.
    ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் என்னும் ஆறும் மெல்லின மெய்கள் எனப்படும்.
    ய்,ர்,ல்,வ்,ழ்,ள் என்னும் ஆறும் இடையின மெய்கள் எனப்படும்.
    -----------------------------------
    9ம் வகுப்பு தமில் துணைப்பாட நூலில் இருந்து - நாமக்கல் சிபி.

    July 03, 2006 12:36 AM
    --

    குமரன் (Kumaran) said...
    நான் இதுவரை அறிந்திராத செய்திகளைச் சொல்லியிருக்கிறீர்கள் ப்ளோரைப்புயல். இந்த மாதிரி இலக்கண விளக்கங்களை எதிர்பார்த்துத் தான் நான் இந்தப் பதிவை இட்டேன். வசந்தன், குறும்பன், அழகு, ஐயப்பன் கிருஷ்ணன், நீங்கள், ஓகை நடராஜன் என சிலர் இட்டப் பின்னூட்டங்களே இந்தப் பதிவின் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டது. மிக்க நன்றி.

    //எனவே குறுகாத ஐ மற்றும் ஒள ஆகிய எழுத்துக்களை அய் என்றோ அவ் என்றோ எழுதுவது தவறே. குறுகும் பொழுது அய், அவ் என ஒன்றரை மாத்திரை அளவில் எழுதுவது தவறில்லை. //

    மாத்திரை அளவில் வைத்து தவறில்லை என்று சொல்கிறீர்களா இல்லை இதற்கும் ஏதாவது இலக்கணச் சான்று இருக்கிறதா? சவால் இல்லை; தெரிந்து கொள்ளத் தான் கேட்கிறேன்.

    July 03, 2006 1:47 PM
    --

    குமரன் (Kumaran) said...
    //அவற்றில் பின்னூட்டம் இடாததால் படிக்கவில்லை என்று நினைக்காதீர்கள். :-)
    //

    தெரியும் குறும்பன். முடிந்தவரை படிக்கிறீர்கள் என்று. சும்மா கலாய்த்தேன். :-)

    ஐ, ஒள என்பதைத் தட்டச்சத் தெரியாமல் அய், அவ் என்று தட்டியிருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு குறும்பன். நீங்கள் சொல்வதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அச்சு ஊடகங்களிலும் அப்படி எழுதுவதைப் பார்த்திருக்கிறேனே. அதான் கேட்கிறேன்.

    July 03, 2006 1:50 PM
    --

    குமரன் (Kumaran) said...
    வசந்தன். இராம.கி. ஐயாவிடம் கேட்டிருக்கிறேன். அவர் வந்து விடை சொல்லுவார் என்று நம்புகிறேன்.

    July 03, 2006 1:52 PM
    --

    குமரன் (Kumaran) said...
    சிவமுருகன். புதிய செய்தியைச் சொல்கிறீர்கள். ஐ, ஒள பற்றி சௌராஷ்ட்ரத்தில் குழப்பம் வந்ததா? எனக்குத் தெரிந்தவரை சௌராஷ்ட்ரத்தைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டோ நாகரி எழுத்துக்களைக் கொண்டோ எழுதுபவர் யாருமே அய், அவ் என்று எழுதிப் பார்த்ததில்லையே. ஒரு வேளை ராமராய் அவர்கள் மீட்டெடுத்த சௌராஷ்ட்ர எழுத்துகளில் அந்தக் குழப்பம் வந்ததோ? எனக்கு அந்த எழுத்துகள் தெரியாது என்பதால் நான் அந்தக் குழப்பத்தைக் கவனிக்கவில்லையோ?

    ஐகாரத்தை அய் என்று எழுதுவதும் ஒளகாரத்தை அவ் என்று எழுதுவதும் சீர்திருத்த எழுத்துகள் என்று வேறு சொல்லியிருக்கிறீர்கள்? தமிழிலா சௌராஷ்ட்ரத்திலா? யார் இந்த சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது? :-)

    July 03, 2006 1:56 PM
    --

    குமரன் (Kumaran) said...
    ஓகை நடராஜன் ஐயா. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. என்னுடைய எந்தப் பதிவும் இந்த அளவுக்குத் தவறான புரிதலுக்கு உட்பட்டதில்லை. எண்ணிக்கையை மனதில் கொண்டு எண்ணிப்பார்க்காமல் இட்ட பதிவு என்று ஒரு கருத்து கூறப்பட்டது. 200வது பதிவு வரையே நான் எண்களை இட்டு வந்தேன். அதன் பின் எத்தனையோ பதிவுகள் எழுதிவிட்டேன் எண்களைப் போடாமலேயே. அதனால் இதுவரை எண்ணிக்கையை ஏற்றுவதற்காக அவசரப்பதிவுகள் போடுகிறேன் என்று குற்றம் சொல்ல வகையிருந்திருந்தாலும் இப்போது அதனைச் சொல்ல முடியாது. பதிவுகளின் எண்ணிக்கையை ஏற்றுவதற்காக நான் எப்போதும் பதிவுகள் இட்டதில்லை. 50, 100, 108, 150, 200 என்று சில பதிவுகளைச் சிறப்புப் பதிவுகளாகத் தர முயன்றுள்ளேன். அதனால் எண்ணிக்கையை மனதில் கொண்டு இட்டப் பதிவாகவோ பின்னூட்ட விளையாட்டிற்காக இட்டப் பதிவாகவோ இந்தப் பதிவைப் பார்த்தால் என்ன சொல்வது என்று தெரியவில்லை. சரி. அவரவர் கருத்து அவரவர்க்கு என்று விட்டுவிட வேண்டியது தான்.

    //உங்கள் தலைப்பு மிகவும் மறுக்கத்தக்க ஒன்றாகும்.
    //

    இனிமேல் கவனமாக இருக்கிறேன்.

    ஆனால் உங்களைப் போல் எல்லா நண்பர்களும் நான் சொல்லவந்ததைப் புரிந்து கொள்ள முயன்றிருக்கலாமே என்ற வருத்தம் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் இந்த மாதிரி தலைப்பையும் வைத்து ஒரே ஒரு சிரிப்பானை மட்டும் போட்டுவிட்டு அதனை எல்லோரும் புரிந்து கொள்வார்கள் என்று நம்பியது தவறே. என் மேல் தவறிருக்க மற்றவரை நொந்து என் செய? :-)

    July 03, 2006 2:08 PM
    --

    குமரன் (Kumaran) said...
    சிபி. நான் 9ம் வகுப்பு படிக்கவில்லையே. இரட்டை வகுப்புயர்பு கொடுத்து 10வது நேரடியாகத் தள்ளிவிட்டார்கள். அதனால் தான் 9ம் வகுப்பு தமிழ் (தமில்?? நீங்களுமா சிபி?) துணைப்பாட நூலைப் படிக்கும் வாய்ப்பு இழந்துவிட்டேனோ? ஒரு வேளை அந்த துணைப்பாட நூலைப் படித்திருந்தால் இந்தத் தலைப்பே வைத்திருக்க மாட்டேனோ? :-) :-) :-)

    உங்க இலக்கணப் பாடத்திற்கு நன்றி. :-)

    July 03, 2006 2:10 PM
    --

    நாமக்கல் சிபி said...
    //சிபி. நான் 9ம் வகுப்பு படிக்கவில்லையே. இரட்டை வகுப்புயர்பு கொடுத்து 10வது நேரடியாகத் தள்ளிவிட்டார்கள்.//

    என்ன? ஒன்பதாம் வகுப்பு படிக்க வில்லையா? புரிகிறது. பள்ளியின் தேர்ச்சியை அதிக அளவில் காட்ட ஒன்பதாம் வகுப்பிலேயே 10 வகுப்பு பாடங்களை நடத்தியிருப்பார்கள் போலும். :)

    நானும் துணைப்பாடம் மற்றும் இலக்கணம் ஆகியவற்றை இப்போது தமிழில் இருக்கும் ஆர்வத்தில் படிக்கவில்லைதான். அப்போதெல்லாம் மொழிப்பாடங்கள் என்பவை வெறும் மதிப்பெண்களுக்காக மட்டுமே என்று அல்லவா எண்ணிக் கொண்டிருந்தோம்.

    //(தமில்?? நீங்களுமா சிபி?)//

    ஒன்பது பத்தாம் வகுப்புகளில் கூட இவ்வறு சரியாகப் படிக்காததால்தான் இப்படியெல்லாம் பிழையோடு எழுதுகிறோம் என்பதைச் சுட்டிக் காட்டவே அவ்வாறு எழுதினோம்.

    (தவறுதலாக பிழை நேர்ந்துவிட்டது. இருப்பினும் மண் ஒட்டலாகுமா?)
    :)

    //உங்க இலக்கணப் பாடத்திற்கு நன்றி//

    :))

    July 03, 2006 2:28 PM
    --

    நாமக்கல் சிபி said...
    //சிபி. நான் 9ம் வகுப்பு படிக்கவில்லையே. இரட்டை வகுப்புயர்பு கொடுத்து 10வது நேரடியாகத் தள்ளிவிட்டார்கள்//

    குமரன் மேலும் 9 வகுப்பு படித்தது 89/90ம் வருடம். இப்போது தகவல் பெற பயன்படுத்திய நூல் 1996 ஆம் வருடத்திய பதிப்பு. அதற்குள் கல்வித்திட்டங்கள் மாறியிருக்க வாய்ப்பும் உண்டு.

    July 03, 2006 2:32 PM
    --

    குமரன் (Kumaran) said...
    சிபி. சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். 9ம் வகுப்பு படிச்சேன். 9ம் வகுப்புல தான் வளர்சிதைமாற்றங்களோட தாக்கம் தெரியத் தொடங்குனதே. அதனால 9ம் வகுப்பில் படித்தக் காலம் மிகப் பசுமையா நினைவில இருக்கு. :-)

    July 03, 2006 2:38 PM
    --

    நாமக்கல் சிபி said...
    //9ம் வகுப்புல தான் வளர்சிதைமாற்றங்களோட தாக்கம் தெரியத் தொடங்குனதே. //

    புரிகிறது குமரன். 9ம் வகுப்பில் என்ன படித்தீர்கள் என்று!

    :-))

    July 03, 2006 2:57 PM
    --

    குமரன் (Kumaran) said...
    சிபி. என்ன இது? நான் பசுமையாத் தான் நினைவிருக்குன்னு சொன்னேன். நீங்க பச்சையா இப்படி சொல்லிட்டீங்களேஏஏ.... இது உங்களுக்கே நல்லா இருக்கா? (நம்ம சிம்மக்குரலோன் பாணியில படிங்க) :-)

    பொன்ஸுக்கு ஒரு குறிப்பு: பொன்ஸ். இப்போது பின்னூட்ட விளையாட்டு தொடங்கியது. இன்னும் சற்று நேரத்தில் முடியலாம். யார் யார் வந்து விளையாடுகிறார்கள் என்பதைப் பொறுத்து. :-)

    July 03, 2006 3:18 PM
    --

    நாமக்கல் சிபி said...
    //நான் பசுமையாத் தான் நினைவிருக்குன்னு சொன்னேன். நீங்க பச்சையா இப்படி சொல்லிட்டீங்களேஏஏ//

    பச்சை என்றாலும் பசுமை என்றாலும் ஒன்றுதானே குமரன்!


    (பொன்ஸ் வந்து பகுபத உறுப்பிலக்கண வகுப்பெடுத்து இரண்டிற்கும் உள்ள வேறுமை என்னவென்று சொல்லித்தருவார்)

    July 03, 2006 3:42 PM
    --

    நாமக்கல் சிபி said...
    //நான் பசுமையாத் தான் நினைவிருக்குன்னு சொன்னேன். நீங்க பச்சையா இப்படி சொல்லிட்டீங்களேஏஏ//

    என்ன குமரன்! மொழிப் பாடத்தைத் தவிர மற்ற பாடங்களில் அக்கறை செலுத்திப் படித்தீர்கள் என்று புரிந்து கொண்டேன் என்றேன்!

    July 03, 2006 3:51 PM
    --

    நாமக்கல் சிபி said...
    எமது ஆறாம் திணைக்கு வருகை புரியுமாறு தங்களை அன்போடு அழைக்கிறேன்.

    July 03, 2006 3:53 PM
    --

    வெற்றி said...
    குமரன்,
    இதுவரை நீங்கள் இலக்கணம் பற்றிய பதிவுகள் போட்டால் , ஓர் ஓரமாக நின்று படித்துவிட்டுச் செல்வதுதான் வழக்கம். காரணம், எனக்குத் தமிழ் இலக்கணம் தெரியாது. கடந்த வாரம் எனது நண்பர் சென்னையில் இருந்து இரண்டு இலக்கணப் புத்தகங்கள் வாங்கி அனுப்பியுள்ளார். அப் புத்தகத்தில் இருந்து நீங்கள் கேட்ட கேள்விக்கு உதவியாக இருக்குமென சிலவற்றைப் பதிகிறேன். பயன்படுகிறதா பாருங்கள்.
    ===============================
    சில சொற்களை இருவகையாக எழுதலாம். அவை:

    1] ஏற்கெனவே <==> ஏற்கனவே
    2] ஒளவையார் <==> அவ்வையார்
    3] கோவில் <==> கோயில்
    4] நாள்தோறும் <==> நாள்தொறும்
    <==> நாடோறும்
    <==> நாடொறும்
    5]வியர்வை <==> வேர்வை

    [வரதமணி, அடிப்படை இலக்கணம், பக்.44]

    August 05, 2006 6:42 PM
    --

    குமரன் (Kumaran) said...
    நல்ல எடுத்துக்காட்டுகளைத் தந்திருக்கிறீர்கள் வெற்றி. இலக்கியங்களில் இருந்து தானே இலக்கணமும் பிறக்கிறது. அதனால் பெரும்பான்மையோர் எப்படி எழுதுகிறார்களோ அதனை வைத்தே இலக்கணங்களும் புதுப்பிக்கப் படுகின்றன போலும். நீங்கள் எடுத்துக் கொடுத்திருப்பவற்றில் பலவற்றை நானும் அந்த வேறுபட்ட உருவுகளில் புழங்கியுள்ளேன். அடிக்கடி மாற்றி மாற்றிப் புழங்கியது கோயில், கோவில் என்பவற்றை.

    ஒளவையார் அவ்வையார் ஆனது டாக்டரய்யா, மருத்துவரய்யா என்பவற்றைப் போல் என்று எண்ணுகிறேன்.

    August 06, 2006 8:53 PM
    --

    சிவமுருகன் said...
    //சிவமுருகன். புதிய செய்தியைச் சொல்கிறீர்கள். ஐ, ஒள பற்றி சௌராஷ்ட்ரத்தில் குழப்பம் வந்ததா? //

    மண்ணிக்கனும் இப்போதான் பின்னூட்டத்தை பார்கிறேன், கூகுளில் ஏதோ தேட இப்பதிவு கிடைத்தது.

    //எனக்குத் தெரிந்தவரை சௌராஷ்ட்ரத்தைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டோ நாகரி எழுத்துக்களைக் கொண்டோ எழுதுபவர் யாருமே அய், அவ் என்று எழுதிப் பார்த்ததில்லையே.//
    நாகரி எழுத்தில் பிரச்சனை இல்லை, சௌராஷ்ட்ர எழுத்து எழுதுபவர்கள் அய் அவ் போன்ற எழுத்துகளை பயன் படுத்த ஆரம்பித்து விட்டனர்.

    // ஒரு வேளை ராமராய் அவர்கள் மீட்டெடுத்த சௌராஷ்ட்ர எழுத்துகளில் அந்தக் குழப்பம் வந்ததோ? எனக்கு அந்த எழுத்துகள் தெரியாது என்பதால் நான் அந்தக் குழப்பத்தைக் கவனிக்கவில்லையோ?

    ஐகாரத்தை அய் என்று எழுதுவதும் ஒளகாரத்தை அவ் என்று எழுதுவதும் சீர்திருத்த எழுத்துகள் என்று வேறு சொல்லியிருக்கிறீர்கள்? தமிழிலா சௌராஷ்ட்ரத்திலா? //

    சௌராஸ்க்ட்ர எழுத்துகளில்

    //யார் இந்த சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது? :-) //
    "சௌராஷ்ட்ர கம்பர்" கவிஞர் தாடா சுப்ரமண்யம்.

    August 11, 2006 1:45 AM
    --

    குமரன் (Kumaran) said...
    தாடா. சுப்ரமணியம் அவர்கள் சௌராஷ்ட்ரக் கம்பரா? ஏன் அந்தப் பெயரை அவருக்குக் கொடுத்தார்கள் சிவமுருகன்? அவர் பட்டிமன்றங்களில் வெளுத்துவாங்குவார் என்று தெரியும். ஆனால் சௌராஷ்ட்ரக் கம்பர் என்ற பெயரும் உடையவர் என்று தெரியாது.

    August 12, 2006 10:06 PM
    --

    சிவமுருகன் said...
    //தாடா. சுப்ரமணியம் அவர்கள் சௌராஷ்ட்ரக் கம்பரா? ஏன் அந்தப் பெயரை அவருக்குக் கொடுத்தார்கள் சிவமுருகன்? அவர் பட்டிமன்றங்களில் வெளுத்துவாங்குவார் என்று தெரியும். ஆனால் சௌராஷ்ட்ரக் கம்பர் என்ற பெயரும் உடையவர் என்று தெரியாது. //

    நீங்க தா.கு.வையும் தாடா. வையும் குழப்பிகொள்கிறீர்கள். தாடா. சுப்ரமணியன் அவர்கள் சௌராஷ்ட்ர மொழியில் 2000-ல் ராமயணம் எழுதினார். அச்சமயத்தில் நடந்த ஒரு முப்பெரும் விழாவில், "சௌராஷ்ட்ர ராமாயணு", "சௌராஷ்ட்ரா திருக்குறள்", "மாய் பாஷா பக்தி" என்ற மூன்று தாய் மொழி களஞ்சியங்கள் வெளியானது.
    அப்போதைய சபாநாயகர் பழனிவேல் ராஜன் அவர்கள் வெளியிட்டார்.

    August 14, 2006 2:02 AM
    --

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் சிவமுருகன். நான் தா.கு.சுப்ரமணியனையும் தாடா. சுப்ரமணியனையும் குழப்பிக் கொண்டேன். மேல் விவரங்கள் தந்ததற்கு நன்றி.

    August 22, 2006 10:41 AM

    ReplyDelete
  2. //: தலைப்பைப் பார்த்து சில பேர் உணர்ச்சி வசப்படுவதாகப் பின்னூட்டங்களிலிருந்து தெரிகிறது. அந்தத் தலைப்பு உங்களை இந்தப் பதிவிற்கு அழைத்துவருவதற்காக வைக்கப்பட்டத் தலைப்பேயன்றி வேறில்லை. அனைவருக்கும் 'உயிரெழுத்துகள் 12' என்பதில் எந்த வித ஐயமும் இல்லை என்பது தெரியும்.//

    அவ்வ்வ்வ்.. என்னமா யோசிக்கறாங்கய்யா:)))))

    தமிழ்சொற் விளக்கத்திற்கு நன்றிகள்:)

    ReplyDelete
  3. இடுகையை மட்டும் படித்தேன் குமரன்...பின்னூட்டங்களின் எண்ணிக்கையை பார்த்தவுடன் அயர்ச்சி தோன்றியது...:)

    ReplyDelete
  4. நண்பர் குமரன்,

    "அய்" என்ற பயன்பாடு தவிர்க்கப் படவேண்டியது.
    "ஐ" இழக்கக் கூடாதது. "ஐ" யில் இருந்து "அய்" க்கு மாறி மீண்டும் "ஐ" க்கே வந்துவிட்டேன். நேரம் வாய்க்கும்போது விரிவாக எழுதுகிறேன். மலையை மலய் என்றெல்லாம் இன்று எழுதிக் கெடுத்து வருகிறார்கள்.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
  5. இது தொடர்புள்ள எனது கட்டுரை.

    http://nayanam.blogspot.com/2008/05/blog-post.html

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
  6. நிறைய பின்னூட்டங்கள் தான் மௌலி. நானும் 'சொல் ஒரு சொல்'லில் இருந்து எடுத்து இடும் போது வெகு நேரம் பின்னூட்டங்களைப் படிப்பதிலேயே செலவழித்தேன். :-)

    ReplyDelete
  7. உங்கள் கட்டுரையைப் படிப்பதற்காகச் சேமித்து வைத்திருக்கிறேன் இளங்கோவன் ஐயா. படித்த பின்னர் வந்து பின்னூட்டம் இடுகிறேன். நன்றி.

    ReplyDelete
  8. நன்றி இரசிகன். நீங்கள் ஒளவ்வ்வ்வ்வ்வ் என்று சொல்லாமல் அவ்வ்வ்வ்வ்வ்வ் என்றதால் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது மிக மிகத் தெளிவாகப் புரிந்துவிட்டது. :-))))

    ReplyDelete