இது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் இது எப்படி நடந்திருக்கும் என்று யாரேனும் எண்ணிப் பார்த்ததுண்டா? இல்லை என்றால் இங்கே பாருங்கள்.
***
எறும்புகள் உலகத்தில் எதற்கு விளம்பரம் கொடுத்தாலும் சர்க்கரைக்கு விளம்பரம் கொடுக்க வேண்டுமா? வண்டுகள் உலகத்தில் எதற்கு விளம்பரம் செய்தாலும் மணமிகு மலர்களுக்கு விளம்பரம் தேவையா? தேனீக்களின் உலகத்தில் எதற்கு விளம்பரம் தேவைப்பட்டாலும் தேன் நிறைந்த மலர்களுக்குத் தேவையா? அது போல் தமிழ்ச்சுவை நாடிப் பதிவுகள் படிக்கும் தமிழ்மண நேயர்கள் உலகில் இராகவனின் எழுத்துக்களுக்கு அறிமுகம் தேவையில்லை. ஆனால் அடியேன் தமிழ்மணத்திற்கு வந்த புதிதில் அவரின் எந்தப் பதிவைப் படித்து மனம் கிறங்கினேனோ அந்தப் பதிவை நம் நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதனால் இந்த அறிமுகம். அண்மையில் அவர் எழுத்துக்களைப் படிக்கத் தொடங்கியவர்கள் இந்தப் பதிவைப் படித்திருக்க மாட்டார்கள். படித்துப் பாருங்கள். அவருடைய தமிழ்ச் சொல்வீச்சு புரியும். அதில் மயங்கி பின்னூட்டம் இட மறந்து விடாதீர்கள் - அங்கும் இங்கும். :-)
***
இந்த இடுகை 30 ஏப்ரல் 2006 அன்று 'படித்ததில் பிடித்தது' பதிவில் இட்டது.
இந்த இடுகை 30 ஏப்ரல் 2006 அன்று 'படித்ததில் பிடித்தது' பதிவில் இட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete10 Comments:
nalla pathivai arimukam seythirkal. nanri.
By Anonymous, at May 04, 2006 9:49 AM
குமரன் இந்த நல்ல பதிவு போட்டதால் உங்கள் பதிவும் பொலிவு பெற்றது. உங்கள் இருவருக்குமே நன்றி.
By manu, at May 04, 2006 11:22 PM
ஆகா.....மிகவும் பழைய பதிவு அது....மீண்டும் அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி. இந்த மாதிரி ரொம்ப நாளா எழுதலைங்குறது இப்பத்தான் புரியுது....எழுதனும். கண்டிப்பா எழுதனும்.
By G.Ragavan, at May 04, 2006 11:50 PM
முல்லை மலருக்கு முக்காடிட்டு மறைத்தாலும் வண்டறியாமலிருக்குமா?
By Merkondar, at May 05, 2006 2:37 AM
முதலில் இந்தப் பதிவைப் படித்து இராகவனின் பதிவையும் படித்துப் பின்னூட்டம் இட்ட அனானிமஸ் நண்பரே நன்றிகள்.
By குமரன் (Kumaran), at May 05, 2006 5:45 PM
உண்மைதான் மனு. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சும்மாவா சொன்னார்கள். :-)
By குமரன் (Kumaran), at May 05, 2006 5:45 PM
இந்த மாதிரி ரொம்ப நாளா எழுதலையா இராகவன்? அப்படியா? ஒவ்வொரு பதிவும் அருமையாக இருக்கின்றன என்றல்லவா எண்ணிக் கொண்டிருக்கிறேன். இன்னும் நன்றாக எழுதினால் மிக மிக அருமையாக அன்றோ இருக்கும்.... எழுதுங்கள் எழுதுங்கள். :-)
By குமரன் (Kumaran), at May 05, 2006 5:46 PM
ஆமாம் என்னார் ஐயா. என்ன தான் மறைத்தாலும் வெளியே வராமல் இருக்காது.
By குமரன் (Kumaran), at May 05, 2006 5:47 PM
அங்குமிட்டு இங்குமிடுகிறேன்! தமிழறிஞர்களின் அரங்கம் சென்று தமிழ் பருக பாக்கியம் அமைத்துக்கொடுக்கும் குமரா, நீயே மிகப்பெரிய தமிழமுதம்,நீ படைக்கும் அமுதத்தையும் பருகமால் விடுவேனோ?
By வெளிகண்ட நாதர், at May 07, 2006 2:01 PM
அங்குமிட்டு இங்குமிட்டு பாராட்டுகளும் கொடுத்த வெளிகண்ட நாதர் ஐயா. மிக்க நன்றி. :-)
By குமரன் (Kumaran), at May 08, 2006 7:45 AM
என்ன குமரன்... கதைய திரும்பப் படிச்சீங்களா? :) பதிவாகவே போட்டுட்டீங்க. இது இன்னும் நெறையப் பேருக்கு அந்தப் பதிவை அறிமுகப் படுத்தியிருக்கு.
ReplyDeleteகுமரன்,
ReplyDeleteமிக்க நன்றி. நீங்கள் தந்த சுட்டியின் மூலம் இராகவனின் பதிவினைப் படித்தேன். தீந்தமிழில் திளைத்தேன். ஆனால் பதிவை படித்ததும் மனதில் ஒரு வித சோகமும் படர்ந்து கொண்டது. எமக்குக் கிடைத்திருக்க வேண்டிய எத்தனை பாடல்கள்/நூல்கள் எம் கைக்குக் கிடைக்காமல் போனதோ என எண்ணும் போது. :-))
குமரன் - சுட்டியைத்தொடர்ந்தேன் - சுவைத்தேன் - தமிழமுதம் - ராகவனுக்கு தமிழன்னையின் கருணை எப்பொழுதும் உண்டு. எதுகை மோனை - புதிய சொற்கள் - நடை - அடடா - கொடுத்து வைக்க வேண்டும் இப்பதிவினைப் படிக்க.
ReplyDeleteஅங்கு விரிவான் ( ??) மறு மொழியும் இங்கு சுருக்கமான மறு மொழியும்
நன்றி குமரன்
இராகவன். என்ன இப்படி கேட்டுட்டீங்க? கதையை இன்னொரு தடவை படிக்கணுமா என்ன? அதான் முந்தியே பல தடவை படிச்சு ஒவ்வொரு வரியும் அப்படியே மனசுல இருக்கே (என் அகச்சான்று (மனசாட்சி): இந்த தடவை படிக்கலைன்னு உண்மையைச் சொல்ல முடியுமா என்ன? அதான் இப்படி அடிச்சு விடறான் இவன்).
ReplyDeleteஏற்கனவே 'படித்ததில் பிடித்தது' பதிவுல போட்டது தான். 'எல்லோருக்கும் ஒரு செய்தி'ன்னு ஒரு இடுகை போட்டு சொன்னேனே... பல பதிவுகள்ல இருந்தும் எடுத்து கூடல்ல போட்டுட்டு அந்தப் பதிவுகளைத் தூக்கப் போறேன்னு. அது தான் செஞ்சுக்கிட்டு வர்றேன். அதுல் இந்த இடுகை 'தற்செயலா' அமைஞ்சுப் போச்சு. (என் அகச்சான்று: முந்தி இந்த இடுகையைப் போட்டப்ப இப்படியா தலைப்பைப் போட்டான்? இந்தத் தடவை போட்டிருக்கிற தலைப்பைப் பாரு. எல்லாம் விளம்பர மோகம். என்ன செய்யுறது? ஹும்)
சரியான நேரத்துல மீள்பதிவு அமைஞ்சதால நிறைய பேருக்கு அறிமுகம் செஞ்ச மாதிரியும் ஆயிருச்சு. :-)
எல்லாம் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்ங்கற நம்ம கொள்கையின் செயற்பாடு தான் வெற்றி. வேற ஒண்ணுமில்லை. (அகச்சான்று: அட்றா அட்றா. இது தான் சான்ஸுன்னு அடிச்சு விட்றான் பாரு).
ReplyDeleteகரையான் அரித்து அழிந்த பாடல்கள் நிறைய இருக்கும் என்று தான் தோன்றுகிறது வெற்றி. அன்றைக்கு கரையான் அரித்து அழிந்து போனது இலக்கியங்கள். இன்றைக்கு? கொட்டிக் கிடக்கிறது. கொள்வாரில்லை. எல்லோருக்கும் ஆயிரம் வேலை. கொள்வாரில்லாமல் 'கடைவிரித்தேன். கொள்வாரில்லை' என்று இலக்கியம் பேசுபவர்கள் எல்லாம் விலகிச் செல்வதாலும் பல இலக்கியங்கள் அழிந்து போகின்றன. பழைய நிகழ்வுகளை நினைவில் வைத்துக் கொண்டு இனி மேலாவது இலக்கியங்கள் அழிந்து போகாமல் இருக்க ஆவன செய்ய வேண்டும். வெறும் அரசியல் கூடாது. திட்டிக் கொண்டே இருப்பதால் பயனில்லை. நீங்கள் திட்டவில்லை. திட்டுபவர்களைச் சொல்கிறேன். (அகச்சான்று: அப்பாடா. மனசுல இருக்கிறதைப் பேசத் தொடங்கிட்டான். இனிமே நாம பேசவேண்டியதில்லை).
இரசிகமணி நீங்கள் சொன்னால் அதில் எதிர்கருத்து உண்டா சீனா ஐயா. இடுகையில் சொன்னது போல் எறும்புகளுக்கு சர்க்கரையை விளம்பரம் செய்ய வேண்டியதில்லை. ஆனால் அந்த இனிப்பை இராகவன் தொடர்ந்து கொடுத்து வந்தால் நம்மைப் போன்றவர்களுக்கு தெரியும். இப்போதெல்லாம் இந்த மாதிரி இனிப்பைக் கொடுப்பதை நிறுத்திவிட்டார் இராகவன். அதான் எறும்புகளையும் சர்க்கரையும் சந்திக்க வைக்க இப்படி ஒரு விளம்பரம். :-)
ReplyDeleteஅங்கே நீங்க இட்ட விரிவான மறுமொழியை இனிமே தான் பாக்கணும்.