எனக்கு அடிக்கடி இந்தக் கேள்வி வருவதுண்டு. பாடுவது என்று முடிவு செய்த பின் எந்தக் கடவுளைப் பாடினால் என்ன? முருகனையும், கண்ணனையும், அம்மனையும் மட்டும் தான் பாடவேண்டுமா? சிவனையும் பாடினால் என்ன? இந்தக் கேள்விகளை அப்படியே விட்டுவிடாமல் இந்த வருட சிவராத்திரியை முன்னிட்டு 'நமச்சிவாய வாழ்க' என்ற தலைப்பில் சிவபெருமான் பாடல்களை இட ஒரு குழுப்பதிவு தொடங்கியாச்சு. முருகனைப் பாடும் 'முருகனருள்', கண்ணனைப் பாடும் 'கண்ணன் பாட்டு', அம்மனைப் பாடும் 'கற்பூர நாயகியே கனகவல்லி' என்ற குழுப்பதிவுகளின் வரிசையில் இதோ சிவனைப் பாடும் 'நமச்சிவாய வாழ்க' குழுப்பதிவு. வழக்கம் போல் எல்லோரும் தொடர்ந்த ஆதரவு நல்க வேண்டும். இந்தக் குழுப்பதிவில் இணைந்து சிவபெருமான் புகழ் பாட விரும்புவோர்கள் ஏற்கனவே இருக்கும் குழுப்பதிவர்களில் ஒருவரிடம் சொல்லுங்கள்.
மூன்று இடுகைகளை இட்டு, தமிழ்மண பட்டையின் நிரலையும் இட்டு, தமிழ்மண அனுமதிக்காக இந்தக் குழுப்பதிவு இப்போது காத்துக் கொண்டிருக்கிறது. அதனால் இந்தக் குழுப்பதிவிற்கு சிவராத்திரி அன்றே அறிமுகம் தரவேண்டும் என்று இங்கே இந்த அறிமுகம் தந்தேன்.
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
தப்பே இல்லையே!!!
ReplyDelete"vaLLalai paadum vaayaal aruthalai piLLaiyai paaduveno
vaLLalai paadum vaayaal aruthalai piLLaiyai paaduveno
veLLi malai vaLLalai paadum vaayaal aruthalai piLLaiyai paaduveno
enthan swaamiyai paadum vaayaal thagappan saamiyai paaduveno
enthan swaamiyai paadum vaayaal thagappan saamiyai paaduveno
appanai paadum vaayaal aaNdi suppanai paaduveno en
ammai appanai paadum vaayaal pazhani aaNdi suppanai paaduveno
vaLLiyin kaN valai veesilai vedan kaLLanai paaduveno
vaLLiyin kaN valai veesilai vedan kaLLanai paaduveno
ambigai baagan enum ambigai baagan enum akaNda suyambuvai paadum vaayaal
ambigai baagan enum enum akaNda suyambuvai
thumbikkaiyaan dhayavaal maNam perum thambiyai paaduveno
thumbikkaiyaan dhayavaal maNam perum thambiyai paaduveno""
:):) ஜமாய்ங்க.!!
வாங்க ராதாம்மா. நீங்க சொல்ற பாட்டை ஏற்கனவே 'முருகனருள்' பதிவில போட்டாச்சுங்களே. அது சிவன் பாட்டா முருகன் பாட்டா? :-)
ReplyDeleteஎனக்கு மிகப் பிடித்த பாடல், நன்றி குமரன்.
ReplyDeleteமௌலி. அங்கே போட்ட பின்னூட்டத்தை இங்கேயும் போட்டு விட்டீர்கள் போலிருக்கிறது. :-)
ReplyDeleteஇது சிவன் பாட்டுதாங்க குமரன், நிஜமாத்தான் கேக்கரீங்களா??:):).....படம் சிவகவி......நம்ம சாமி பாட்ட அவங்க எப்படி போடுவாங்க ம் ??அப்பாவுக்கு ஒரு மறியாதை செஞ்சிருப்பாங்களோ?? அதுவும் இந்த பாட்டுல......."எந்தன் ஸ்வாமியை பாடும் வாயால் தகப்பன் ஸ்வாமியை பாடுவேனோ"ன்னு வேற பாடியிருக்காரு....??!
ReplyDeleteநான் தான் அந்தப் பாட்டை 'முருகனருள்' பதிவில் இட்டேன் ராதாம்மா. இதோ சுட்டி. http://muruganarul.blogspot.com/2007/11/blog-post.html
ReplyDelete