Thursday, November 22, 2007

நன்றி சொல்லும் நன்னேரம்!

என்னை அறிந்தவராய் யான் அறிந்தவராய்
என்னை அறியாதவராய் யான் அறியாதவராய்
என்னைப் புரிந்தவராய் யான் புரிந்தவராய்
என்னைப் புரியாதவராய் யான் புரியாதவராய்

என்னைப் பெற்றவராய் யான் பெற்றவராய்
என்னை உற்றவராய் யான் உற்றவராய்
என்னை மறுத்தவராய் யான் மறுத்தவராய்
என்னை உடையவராய் யான் உடையவராய்

எல்லாமும் ஆகி யார் எவரும் ஆகி
உள்நின்றொளிர்கின்ற உத்தமனே உன்னை
நல்லதோர் பெருநாளாம் நன்றி கூறும் நன்னாள்
உள்ளத்தின் உவப்பாலே உனைப் போற்றி நின்றேன்

யானேயாகி என்னதும் ஆகி
தானே எங்கும் தக்கதெலாம் ஆகி
வானோர் பெருமானாய் வீற்றிருக்கும் உன்னை
வந்தே தொழுதேன்! வளம் பெற்று வாழ்க!

***

இன்று இங்கே அமெரிக்காவில் Thanks Giving day என்ற விடுமுறை நாள்.

19 comments:

  1. இனிய நன்றி நவில்நாள் வாழ்த்துக்கள் குமரன் :-)

    ReplyDelete
  2. குமரன்
    கவுஜ அருமை!

    அதுவும் முதல் இரண்டு பத்தி; என்னை-யான் ன்னு வரிசையா!
    //என்னைப் பெற்றவராய் யான் பெற்றவராய்//

    //வந்தே தொழுதேன் வளம் பெற்று வாழ்க!//

    அவரைத் தொழுது, அவரையே வாழ்த்தறீங்களோ? :-)))
    மதுரைப் பட்டர்பிரான் ஆனீரோ? :-))

    ReplyDelete
  3. த பார்றா, இதுக்கெல்லாம் லீவா? எங்களுக்கும் லீவு கொடுத்தா நன்றி சொல்லுவோம்ல அட்லீஸ்ட் லீவு குடுத்தவங்களுக்கு.

    ReplyDelete
  4. நன்றி மலைநாடான் ஐயா. :-)

    ReplyDelete
  5. இடுகையின் தலைப்பை 'நன்றி கொல்லும் நன்னேரம்'ன்னு தப்பா படிச்சுட்டாங்களா? மூன்றே முன்று பேர் தான் வந்திருக்கிறார்கள்?! இதுக்குத் தான் நான் கவிதை 'மாதிரி' கூட எழுதுவதில்லை. ஒரு வேளை என்னோட கவிதைக்கு நானே பொருளுரை சொன்னா நல்லா இருக்குமோ? :-) :-(

    ReplyDelete
  6. நன்றி இரவிசங்கர். உங்களுக்கும் இனிய நன்றி நவில் நாள் நல்வாழ்த்துகள். இன்று ஏதாவது தள்ளுபடியில் வாங்கினீர்களா?

    நான் இப்போது தான் கடைகண்ணிகளுக்கு எல்லாம் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தேன். ஒன்றும் பெரிதாக வாங்கவில்லை. குட்ட்ட்டி எம்பி3 பிளேயர் ரெண்டு வாங்கினேன்.

    ReplyDelete
  7. முதல் ரெண்டு பத்தி எழுதுனதுக்கும் உந்துதல் நம்மாழ்வார் தான் இரவிசங்கர். பட்டர் பிரானும் வகுளாபரணரும் தான் நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள். :-)

    ReplyDelete
  8. ஏனுங்க இரத்னேஷ். நம்மூருல இல்லாத விடுமுறை நாட்களா? இங்கே எண்ணி ஆறோ ஏழோ நாட்கள் தான் விடுமுறை நாட்களாக வச்சிருக்காங்க. ஒரு பொங்கல் உண்டா தீபாவளி உண்டா? ஹும்.

    இந்த விடுமுறை சும்மா 'நன்றி நவிலலுக்கு' மட்டும் இல்லை இரத்னேஷ். இது இந்த ஊர் வரலாற்று நிகழ்ச்சியின் அடிப்படையிலான ஒரு விடுமுறை. மேற்தகவல் வேண்டுமென்றால் இணையத்தில் தேடிப் பாருங்கள்.

    ReplyDelete
  9. குமரா!
    அங்கே 'நன்றி சொல்லும் நன்னாள் விடுமுறையா?? இங்கே போக்குவரத்து
    வேலை நிறுத்தத்தால் அல்லாடுவதால்
    எதுவுமே தெரியாது...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. குமரன், நன்றி சொல்லும் நந்நாளில் நல்லவர்களுக்கு எல்லாம் நன்றி சொல்லி விடுவது நல்ல செயல்.

    நன்றி

    ReplyDelete
  11. வாழ்த்துகளுக்கு நன்றி யோகன் ஐயா.

    ReplyDelete
  12. நன்றிக்கு நன்றிகள் சீனா ஐயா. நீங்கள் எதனை முன்னிட்டு நன்றி சொன்னீர்களோ அதையே நானும் முன்னிட்டு உங்களுக்கும் நன்றி சொல்கிறேன். :-)

    ReplyDelete
  13. நல்லவர்க்கும் அல்லவர்க்க்கும்
    இல்லாதவர்க்கும் இருப்பவர்க்கும்
    பொல்லாதவர்க்கும் சொல்லாதவர்க்கும்
    எல்லாருக்கும் எனது நன்றி குமரன்!

    ReplyDelete
  14. நன்று சொன்னீர்கள் எஸ்.கே. நன்றிகள்.

    ReplyDelete
  15. அண்ணா,

    இப்போது செய்யும் பணியும் கடந்தாண்டு இதே நாளில் தான் கிடைத்து.

    நன்றி சொல்லும் நாளே உனக்கு நன்றி.

    நன்றி

    ReplyDelete
  16. ஏதோ ஒரு பாடல் நினைவிற்க்கு வருகிறது ஆனால் வார்த்தை வரவில்லை.

    நன்றி.

    "நன்றி நவிலல்நாள்" வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. உங்களுக்கு நன்றி சொல்லப் பொருத்தமான நாள் சிவமுருகன். :)

    ReplyDelete