Friday, October 05, 2007
வள்ளலார் பிறந்த நாள்
இன்று அக்டோபர் 5 - வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய இராமலிங்க வள்ளலார் பெருமானின் பிறந்த நாள். உலகத்தவர் எல்லோரும் உய்ய வேண்டி சமரச சன்மார்க்கம் கண்டவர் அவர். பிறவா நிலையை எல்லோரும் பெற வேண்டி அருட்பெரும்சோதி மந்திரத்தை உபதேசித்த பெருமானார் அவர். உலகத்தவர் உய்ய ஒளியுடம்பு பெற்று எங்கும் கலந்து நிற்கின்றவர் அவர்.
எங்கெல்லாம் நல்லது நடக்கிறதோ அங்கெல்லாம் வள்ளலாரின் ஒளியுடம்பின் வீச்சு அதிகமாக இருக்கிறது என்பது வள்ளலார் அன்பர்களின் அனுபவம். பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமத்தில் அன்னை, அரவிந்தர் இவர்களின் நிலையான இருப்பை ஒரு சொந்த அனுபவம் மூலம் உணர்ந்த அடியேன் வள்ளலார் அன்பர்களின் அனுபவத்தை உணர்வு பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.
அடிகளாரின் பிறந்த நாளன்று 'உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்' என்று இறையை வேண்டி நிற்கிறேன்.
அன்புக் குமரா!
ReplyDelete//அடிகளாரின் பிறந்த நாளன்று 'உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்' என்று இறையை வேண்டி நிற்கிறேன்.//
அதே அதே
அந்தப் பாடல் முழுவதுமே எனக்குப் பிடித்த பாடல் யோகன் ஐயா.
ReplyDeleteஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வு நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே
It is the time for everyone to follow Vallar's principle
ReplyDeleteஆகா, அப்படியா குமரன் - இப்போதுதான் அறிந்தேன்.
ReplyDelete//பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமத்தில் அன்னை, அரவிந்தர் இவர்களின் நிலையான இருப்பை ஒரு சொந்த அனுபவம் மூலம் உணர்ந்த அடியேன் வள்ளலார் அன்பர்களின் அனுபவத்தை உணர்வு பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.//
கொஞ்சம் விளக்குவீர்களா?
குமரன்!
ReplyDeleteநிறை குறைகளுக்கு அப்பாற்பட்ட நிர்மலஞானி. அதனாற்தான் அடிகளாரை யாரும் கண்டு கொள்வதில்லையோ. என் மனதுக்குப் பிடித்த ஒரு ஆன்மீகவாதி. நினைவுக்கு நன்றி.
நண்பா குமரா !
ReplyDelete//அடிகளாரின் பிறந்த நாளன்று 'உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்' என்று இறையை வேண்டி நிற்கிறேன்.//
பள்ளியிலே அக்காலத்திலே பொருள் புரியாது மனப்பாடப் பகுதிக்காக மனனம் செய்த பாடல் பின்னாளில் எப்போதுமே மேற்கோள் காட்ட, பயன் படுத்தி, மனதை விட்டகலா பாடலாக நினற கதை தனிக்கதை.
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் பெருமானின் பிறந்த நாளில் இட்ட பதிவிற்கு நன்றி.
//மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்// - இன்றைய நாட்டு நிலைமைக்கு அன்றைக்கே சொல்லப்பட்ட அருமையான வரிகள்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteசிங்கையில் கூட வள்ளலார் மன்றத்தில் இருந்து நண்பர் ஒருவர் மின் அஞ்சல் அனுப்பி இருந்தார்.
தூயவெள்ளுடுப்பில் வள்ளலாரின் தோற்றம் அது உள்ள எந்த இடத்திற்கும்
அமைதி கொடுக்கக் கூடியதே.
ஏற்றத்தாழ்வுகளை அருட்பெரும் 'ஜோதியால்' பொசுக்கியவர் என்பதால் வள்ளலார் மீது தனிப்பெரும் அன்பு எனக்கு எப்போதும் உண்டு !
குமரன், மிக்க நன்றி.
ReplyDeleteகடலூர் போக வேண்டும் ஆசையை அதிகப் படுத்தி விட்டீர்கள்.
'ஒருமையுடன் ' பாடல்
என்னுடன் முழுவதும் கலந்த ஒரு பாடல். வாழ்க்கையின் பல நிலைகளில் பொய்மை என்னிடம் கலவாது இருக்க நான் மனத்தில் வைக்கும் வரிகள்.
மிகச் சிறந்த இறைஉணர்வை எழுப்பும் வார்த்தைகள்.
நன்றி குமரன். அன்னையைப் பற்றியும் எழுதுங்கள்.
88-89 வருடங்களில் பிரதி ஞாயிறு தவராது வடலூர் சபைக்குச் சென்று தியானம் செய்ததுண்டு....
ReplyDeleteஇந்தப் பதிவின் மூலம் அதனையும் அந்த புண்ணியனையும், அவரது சீரிய கருத்துக்களையும் நினைவுறுத்தியமைக்கு.....நன்றி.
Dear Kumaraa...
ReplyDeletethankSSS a trillion for typing your thoughts here on VALLALAR on His B'day.
VALLALAR's Unique Great Spiritual Attainment of 'DEATHLESS BODY/INTEGRAL TRANSFORMATION and DEMATERIALISATION for the COLLECTIVE EVOLUTION' is still not known much, even to the target Spiritual community and that is sad.
When it comes to VALLALAR,
we should be talking about DEATHLESS STATE rather than BIRTHLESS STATE.
Thanks once again for writing about VALLALAR.
Spiritually yours...
Krishna Prem
வள்ளலாரின் போதனைகள் சிலவற்றைப் படித்திருக்கிறேன் சதுக்க பூதம். வள்ளலார் அன்பரான என் கல்லூரித் தோழன் கிருஷ்ண பிரேம் (கீழே பின்னூட்டமும் இட்டிருக்கிறார்) மூலம் வள்ளலாரின் நூல்கள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். ஜீவகாருண்யமும் சமரச சன்மார்க்கமும் எளிதாகப் பின்பற்றலாம். ஆனால் வள்ளல் பெருமானார் சொல்லும் தத்துவங்களுக்குள் இறங்கி புரிந்து கொள்ளுதல் எனக்கு கடினமாக இருந்தது.
ReplyDeleteமலைநாடான். அடிகளாரைக் கண்டு கொள்பவர் இருக்கிறார்கள். ஆனால் இன்னும் நிறைய பேருக்கு இவரைப் பற்றித் தெரியவேண்டும். நான் அறிந்ததும் மிகக் குறைவே. நண்பர் கிருஷ்ணபிரேம் மின்னஞ்சல் அனுப்பியதால் எனக்கு அடிகளாரின் பிறந்த நாள் என்று தெரிந்தது. உடனே இடுகை இட்டேன்.
ReplyDeleteஆமாம் சீனா ஐயா. நம் மனதிற்குச் சொல்ல வேண்டியவை எத்தனை எத்தனை. அடிகளார் அவற்றை எல்லாம் ஒரே பாடலில் தொகுத்துத் தந்திருக்கிறார். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று சொல்லும் போதே அப்படி நாமும் மற்றவரிடம் நடந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு வேண்டுதல் மனத்தில் எழும்.
ReplyDeleteநன்றி கோவி.கண்ணன்.
ReplyDeleteஅன்னையைப் பற்றியும் நான் அறிந்தது மிகக் குறைவே வல்லியம்மா. நானும் வடலூருக்கு இது வரை சென்றதில்லை. சித்திவளாகத்திற்குச் சென்றால் வள்ளலாரின் சான்னித்யத்தை நன்கு உணர முடியும் என்று நண்பர்கள் சொல்லுவார்கள். வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை.
ReplyDeleteஞாயிறு தோறும் சென்று தியானித்து வந்தீர்களா மௌலி. நல்ல விஷயம்.
ReplyDeleteகிருஷ்ண பிரேம். நீ சொல்வது உண்மை தான். ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்கும் வள்ளலாரை ஆன்மிக உயர்நிலையைப் பற்றி முழுவதுமாகத் தெரிவதில்லை தான். இந்த இடுகை இடும் போது இறவா நிலை என்று தான் எழுத எண்ணினேன். எழுதி இட்டபின் பார்த்தால் பிறவா நிலை என்று வந்திருக்கிறது. அப்படியே விட்டுவிட்டேன். எல்லா ஆன்மிகர்களும் பிறவா நிலை அடைய வேண்டும் என்று முயல வள்ளலார் இறவா நிலை அடைய வேண்டி அந்த நிலையை அடைந்தார் என்று அறிவேன். மாற்றி எழுதுகிறேன் இடுகையிலும். நன்றி.
ReplyDeletehttp://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html
ReplyDeleteதிருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
Please follow
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)
(First 2 mins audio may not be clear... sorry for that)
(PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)
Online Books
http://www.vallalyaar.com/?p=409 - Tamil
http://www.vallalyaar.com/?p=975 - English