நீண்ட நெடுநாட்களுக்குப் பிறகு ஞானவெட்டியான் ஐயா அவர்களின்
இடுகையொன்று தமிழ்மணத்தில் தெரிந்தது. ஆவலுடன் திறந்து பார்த்தால் அருமையான கருத்தொன்றைச் சொல்லியிருந்தார். மார்ச்சு மாதத்தில் எழுதிய அந்த இடுகையை அப்போதும் படித்திருப்பேன் என்று நினைக்கிறேன்; ஆனால் அதனை மீண்டும் இப்போது படிக்கும் போது மனத்தில் பல எண்ணங்கள் ஓடின. ஒருவரை ஒருவர் வெறுப்பதற்கும் கட்டாயப்படுத்துவதற்கும் மொழியை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது முதற்கொண்டு பல எண்ணங்கள். என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது இந்த இடுகையின் நோக்கம் இல்லை. நண்பர்கள் எல்லோரையும் ஐயாவின் இடுகையைப் படித்துப் பார்க்கும் படி வேண்டிக்கொள்வதே நோக்கம்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteகுமரன், இந்தப் பதிவு இரண்டு பக்கத்தாருக்கும் பொருந்தும் என்பதே என்னுடைய கருத்து. தமிழும் வடமொழியும் இரண்டு கண்கள் என்று சொல்கின்ற தெற்கர்கள் உண்டு. ஆனால் அப்படி நினைக்கின்ற வடவர்கள் இல்லை. ஆகையால் நமது மொழியைப் பார்த்துக் கொள்வதே நமக்குப் போதுமானது என்பதும் என் கருத்து.
ReplyDeleteஇப்படிச் சொல்வதால் வடமொழி மீது எனக்குத் தனிப்பட்ட வெறுப்பு கிடையாது. கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, பிரெஞ்சு, டச்சு ஆகியவைகளை வைக்கும் நிலையில் அதையும் வைத்திருக்கிறேன். ஆனால் தமிழெந்தன் உயிருக்கு நேர். தமிழில் எழுதக் கூடாது பேசக்கூடாது என்று சட்டம் போட்டுத் தடுத்தாலும் தமிழில் நினைப்பதை யாரும் தடுக்க முடியாது. அதையும் எப்படியும் தடுக்க முடியும் என்ற நிலை வந்தால்....அந்தச் சிரமத்தை நான் யாருக்கும் வைப்பேன் என்று நினைக்கவில்லை.
வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு
இந்த வரிசையே போதும் என்பது பாரதியின் கருத்து மட்டுமல்ல என் கருத்தும்.
உங்கள் எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி இராகவன். இரு பக்கத்தாருக்கும் ஐயா சொன்ன கருத்து பொருந்தும் என்பது உண்மை. தமிழும் வடமொழியும் இரு கண்கள் என்று சொல்கின்ற வடவர்களை நானும் பார்த்ததில்லை. அப்படிச் சொல்லும் தெற்கர்கள் உண்டு - அவர்கள் தமிழமுதைப் பருகியதால்.
ReplyDeleteநமது மொழியை நாம் பார்த்துக் கொள்வது மிக வேண்டிய ஒன்று. அதில் மறு கருத்து இல்லை. ஆனால் வடமொழி தெரிந்ததாலேயே ஒருவர் தமிழுக்கு துரோகி ஆகிவிடுகிறார் என்ற எண்ணம் தவறு என்று ஒத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். என் எண்ண ஓட்டங்களைச் சொல்ல இல்லை இந்த இடுகை என்று இடுகையில் சொல்லியிருந்தேன். ஆனால் உங்கள் எண்ணத்தைச் சொன்னதால் இதனைச் சொல்ல வேண்டி வந்தது.
இரண்டாவது பத்தியிலிருந்து நீங்கள் சொன்னதில் எந்த வேறுபாடும் எனக்கு இல்லை. தமிழில் பேசக்கூடாது; எழுதக்கூடாது போன்றவற்றை நீங்கள் இங்கே சொன்னதன் கருத்து புரியவில்லை. அவை ஐயாவின் பதிவிலோ என் பதிவிலோ சொல்லப்படவில்லை. ஆனால் வேறு எங்கோ யாரோ சொன்னதையோ இல்லை சொல்லும் வாய்ப்பு இருக்கிறது என்று நீங்கள் நினைப்பதாலோ அதனைச் சொன்னீர்கள் என்று கருதுகிறேன்.
வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு
அடியேனும் இந்த பாரதி அமர வரிகளைப் பலமுறை இடுகைகளில் சொல்லியிருக்கிறேன். அடியேன் கருத்தும் அதே வரிசையே.
// ஆனால் வடமொழி தெரிந்ததாலேயே ஒருவர் தமிழுக்கு துரோகி ஆகிவிடுகிறார் என்ற எண்ணம் தவறு என்று ஒத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். //
ReplyDeleteவடமொழி தெரிந்ததால் ஒருவர் தமிழ்த்துரோகி ஆக மாட்டார். ஆனால் தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் வடமொழியை உட்கார்த்தி வைக்க விரும்புகிறவர் கண்டிப்பாக துரோகியாவார் என்பது என் கருத்து. இதற்கு எடுத்துக்காட்டுகள் பல சொல்லலாம். திருக்கோயில்களிலிருந்தே தொடங்கலாம்.
அனானி பின்னூட்டம் சிறிது திருத்தப்பட்டுள்ளது. தொடக்கத்திலும் இறுதியிலும் இராகவனைப் பற்றி வந்த வார்த்தைகள் நீக்கப்பட்டிருக்கின்றன. மற்றபடி அனானி பின்னூட்டம் அப்படியே இங்கே...
ReplyDelete--------------------------
/தமிழும் வடமொழியும் இரண்டு கண்கள் என்று சொல்கின்ற தெற்கர்கள் உண்டு. ஆனால் அப்படி நினைக்கின்ற வடவர்கள் இல்லை./
வடவர்களின் தாய்மொழி சமஸ்கிருதம் கிடையாது. இந்தி, மராத்தி, குஜராத்தி, காஷ்மிரி, போஜ்புரி என்றுதான் இருக்கும். அவனை கேட்டால் இந்தியும் சமஸ்கிருதமும் என் இரு கண்கள் என்பான்.தமிழை அவனும் இந்தியை நீங்களும் 'கண்' என்று சொல்ல மாட்டீர்கள்.பிறகு இது என்ன வகையான ஸ்டேட்மெண்ட் ஜீரா?
/இப்படிச் சொல்வதால் வடமொழி மீது எனக்குத் தனிப்பட்ட வெறுப்பு கிடையாது. கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, பிரெஞ்சு, டச்சு ஆகியவைகளை வைக்கும் நிலையில் அதையும் வைத்திருக்கிறேன்./
தனிப்பட்ட வெறுப்பு கிடையாது.ஆனால் பொதுப்பட்ட வெறுப்பு இருக்கிறதா?
தெலுங்கு குஜராத்தி டச்சு சமஸ்கிருதம்..என்ன வகையான பட்டியல் இது? டச்சிலும் குஜராத்தியிலும் தான் கோயில்களில் சுலோகம் சொல்லுகிறார்களா?
/தமிழெந்தன் உயிருக்கு நேர். தமிழில் எழுதக் கூடாது பேசக்கூடாது என்று சட்டம் போட்டுத் தடுத்தாலும் தமிழில் நினைப்பதை யாரும் தடுக்க முடியாது. அதையும் எப்படியும் தடுக்க முடியும் என்ற நிலை வந்தால்....அந்தச் சிரமத்தை நான் யாருக்கும் வைப்பேன் என்று நினைக்கவில்லை./
அடடடடட.....யார் உங்களை சட்டம் போட்டு தமிழில் எழுதக்கூடாது பேசக்கூடாது என்றது? விட்டால் 'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' என்று ஸ்டண்ட் அடிப்பீர்கள் போலிருக்கிறதே?
-------------------------------
தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் வடமொழியை நிறுத்துபவரை துரோகி என்பதில் எனக்கு கருத்து வேறுபாடில்லை இராகவன். நானும் அதனையே சொல்கின்றவன்.
ReplyDelete// /தமிழும் வடமொழியும் இரண்டு கண்கள் என்று சொல்கின்ற தெற்கர்கள் உண்டு. ஆனால் அப்படி நினைக்கின்ற வடவர்கள் இல்லை./
ReplyDeleteவடவர்களின் தாய்மொழி சமஸ்கிருதம் கிடையாது. இந்தி, மராத்தி, குஜராத்தி, காஷ்மிரி, போஜ்புரி என்றுதான் இருக்கும். அவனை கேட்டால் இந்தியும் சமஸ்கிருதமும் என் இரு கண்கள் என்பான்.தமிழை அவனும் இந்தியை நீங்களும் 'கண்' என்று சொல்ல மாட்டீர்கள்.பிறகு இது என்ன வகையான ஸ்டேட்மெண்ட் ஜீரா? //
அனானி நண்பரே....சொல்ல வந்தது சரியா வரலை போல இருக்கு. நீங்க சொன்ன மாதிரி இந்திய நானும் கண்ணுன்னு சொல்ல மாட்டேன். அவன் தமிழ் கண்ணுன்னு சொல்ல மாட்டான். அப்புறம் என்னத்துக்கு வடமொழியைப் பிடிச்சிட்டுத் தொங்கனும். அப்படீன்னு சொல்ல வந்தேன். தூக்கக் கலக்கத்துல ஒழுங்கா வரலை போல.
/// /இப்படிச் சொல்வதால் வடமொழி மீது எனக்குத் தனிப்பட்ட வெறுப்பு கிடையாது. கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, பிரெஞ்சு, டச்சு ஆகியவைகளை வைக்கும் நிலையில் அதையும் வைத்திருக்கிறேன்./
தனிப்பட்ட வெறுப்பு கிடையாது.ஆனால் பொதுப்பட்ட வெறுப்பு இருக்கிறதா? //
பொதுப்பட்ட வெறுப்பா? ம்ம்ம்...ஒன்னு இருக்கு. திருக்கோயில்களில் தமிழ் புழங்கனும். அது இதுவரைக்கும் நடக்க மாட்டேங்குது. அந்த வயித்தெரிச்சல் உண்டு.
// தெலுங்கு குஜராத்தி டச்சு சமஸ்கிருதம்..என்ன வகையான பட்டியல் இது? டச்சிலும் குஜராத்தியிலும் தான் கோயில்களில் சுலோகம் சொல்லுகிறார்களா? //
சும்மா ஒரு லிஸ்ட்டு...இங்கிலீசு வரல பாத்தீங்களா. ஏன்னா அது வேலக்கு உதவுது. அப்படி எந்த வகையிலயும் உதவாத மொழிகளைப் பட்டியல் இட்டிருக்கிறேன். அதுலதான் சுலோகங்களையும் சேர்த்திருக்கிறேன்.
// அடடடடட.....யார் உங்களை சட்டம் போட்டு தமிழில் எழுதக்கூடாது பேசக்கூடாது என்றது? விட்டால் 'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' என்று ஸ்டண்ட் அடிப்பீர்கள் போலிருக்கிறதே? //
:))))))))))))) செம கிண்டல்ங்க. ஸ்டண்ட்டான்னு தெரியாது. ஆனா தமிழ்ல யோசிக்காம என்னால இருக்க முடியுமான்னு தெரியலை. நான் சொன்னது கொஞ்சம் அதிகப்படியான ஸ்டேட்மெண்ட்தான். :)
// /தமிழும் வடமொழியும் இரண்டு கண்கள் என்று சொல்கின்ற தெற்கர்கள் உண்டு. ஆனால் அப்படி நினைக்கின்ற வடவர்கள் இல்லை./
ReplyDeleteவடவர்களின் தாய்மொழி சமஸ்கிருதம் கிடையாது. இந்தி, மராத்தி, குஜராத்தி, காஷ்மிரி, போஜ்புரி என்றுதான் இருக்கும். அவனை கேட்டால் இந்தியும் சமஸ்கிருதமும் என் இரு கண்கள் என்பான்.தமிழை அவனும் இந்தியை நீங்களும் 'கண்' என்று சொல்ல மாட்டீர்கள்.பிறகு இது என்ன வகையான ஸ்டேட்மெண்ட் ஜீரா? //
அனானி நண்பரே....சொல்ல வந்தது சரியா வரலை போல இருக்கு. நீங்க சொன்ன மாதிரி இந்திய நானும் கண்ணுன்னு சொல்ல மாட்டேன். அவன் தமிழ் கண்ணுன்னு சொல்ல மாட்டான். அப்புறம் என்னத்துக்கு வடமொழியைப் பிடிச்சிட்டுத் தொங்கனும். அப்படீன்னு சொல்ல வந்தேன். தூக்கக் கலக்கத்துல ஒழுங்கா வரலை போல.
/// /இப்படிச் சொல்வதால் வடமொழி மீது எனக்குத் தனிப்பட்ட வெறுப்பு கிடையாது. கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, பிரெஞ்சு, டச்சு ஆகியவைகளை வைக்கும் நிலையில் அதையும் வைத்திருக்கிறேன்./
தனிப்பட்ட வெறுப்பு கிடையாது.ஆனால் பொதுப்பட்ட வெறுப்பு இருக்கிறதா? //
பொதுப்பட்ட வெறுப்பா? ம்ம்ம்...ஒன்னு இருக்கு. திருக்கோயில்களில் தமிழ் புழங்கனும். அது இதுவரைக்கும் நடக்க மாட்டேங்குது. அந்த வயித்தெரிச்சல் உண்டு.
// தெலுங்கு குஜராத்தி டச்சு சமஸ்கிருதம்..என்ன வகையான பட்டியல் இது? டச்சிலும் குஜராத்தியிலும் தான் கோயில்களில் சுலோகம் சொல்லுகிறார்களா? //
சும்மா ஒரு லிஸ்ட்டு...இங்கிலீசு வரல பாத்தீங்களா. ஏன்னா அது வேலக்கு உதவுது. அப்படி எந்த வகையிலயும் உதவாத மொழிகளைப் பட்டியல் இட்டிருக்கிறேன். அதுலதான் சுலோகங்களையும் சேர்த்திருக்கிறேன்.
// அடடடடட.....யார் உங்களை சட்டம் போட்டு தமிழில் எழுதக்கூடாது பேசக்கூடாது என்றது? விட்டால் 'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' என்று ஸ்டண்ட் அடிப்பீர்கள் போலிருக்கிறதே? //
:))))))))))))) செம கிண்டல்ங்க. ஸ்டண்ட்டான்னு தெரியாது. ஆனா தமிழ்ல யோசிக்காம என்னால இருக்க முடியுமான்னு தெரியலை. நான் சொன்னது கொஞ்சம் அதிகப்படியான ஸ்டேட்மெண்ட்தான். :)
இராகவன். இங்கே வடமொழி என்றது செங்கிருதமான சமஸ்கிருதத்தைத் தான். ஆனால் நீங்கள் வடமொழி என்றது இந்தியை என்று எடுத்துக் கொண்டீர்களோ என்று உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தால் தோன்றுகிறது. இல்லை நானும் நீங்கள் சொல்ல வந்ததைப் புரிந்து கொள்ளாமல் குழம்புகிறேனா?
ReplyDelete// குமரன் (Kumaran) said...
ReplyDeleteஇராகவன். இங்கே வடமொழி என்றது செங்கிருதமான சமஸ்கிருதத்தைத் தான். ஆனால் நீங்கள் வடமொழி என்றது இந்தியை என்று எடுத்துக் கொண்டீர்களோ என்று உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தால் தோன்றுகிறது. இல்லை நானும் நீங்கள் சொல்ல வந்ததைப் புரிந்து கொள்ளாமல் குழம்புகிறேனா? //
கிழிஞ்சது போங்க. வடமொழின்னா சமசுகிருதம்தான். இந்தின்னு அங்க சொன்னது...அனானி இந்தீன்னு சொன்னதால.
இந்தியையும் வடமொழியையும் போட்டு குழப்பி கொள்வது...இந்திக்காரனுக்கு தமிழ் பிடிக்காததால்(!!!!) எனக்கு சமஸ்கிருதம் பிடிக்காது என ஸ்டேட்மெண்ட் விடுவது, கன்னடம் டச்சு எல்லாம் உதவாத மொழி என்பது (இதை பெங்களூரில் இருக்கும்போது சொல்லியிருந்தால் ஜீரா நிஜமான தைரியசாலி எனலாம்)...தமிழில் 'நினைப்பதை' தடுத்தால் உயிரையும் விடுவேன் என்பது...
ReplyDeleteஜீரா.........தாங்கலை..
அரசியலில் எதுவும் குதிக்க போகிறீர்களா? போட்டோவில் கலர்துண்டு எல்லாம் போட்டுக்கொண்டு ஜம்மென்று இருக்கிறீர்கள்?
குமரன்,
ReplyDeleteபூந்தி என்பது ஹிந்திச் சொல்லா அல்லது வடமொழிச் சொல்லா?
இலங்கையில் லட்டு என்ற சொல்தான் புழக்கத்தில் உண்டு. இந்தப் பூந்தி என்ற சொல் இலங்கையில் நான் கேள்விப்படவே இல்லை.
/* பொதுப்பட்ட வெறுப்பா? ம்ம்ம்...ஒன்னு இருக்கு. திருக்கோயில்களில் தமிழ் புழங்கனும். அது இதுவரைக்கும் நடக்க மாட்டேங்குது. அந்த வயித்தெரிச்சல் உண்டு. */
இராகவன், உங்களின் வயித்தெரிச்சல் எனக்கும் இருக்கு. என் வாழ்நாளில் திருக்கோயில்களில் தமிழ் புழங்குவதைக் கண்டு கேட்டு மகிழவேண்டும் என்பது என் ஆசைகளில் ஒன்று.
// பெங்களூரில் இருக்கும்போது சொல்லியிருந்தால் ஜீரா நிஜமான தைரியசாலி எனலாம்)...தமிழில் 'நினைப்பதை' தடுத்தால் உயிரையும் விடுவேன் என்பது...
ReplyDeleteஜீரா.........தாங்கலை.. //
:))))))))))) இப்ப நெதர்லாந்து வந்துட்டாலும் வேலை பெங்களூருதாங்க. நான் திரும்ப அங்கதான் போயாகனும். இப்ப அவசரப் பட்டு வாய விட்டுட்டோமோன்னு நெனைக்கும் போது பயமாத்தான் இருக்கு.
// அரசியலில் எதுவும் குதிக்க போகிறீர்களா? போட்டோவில் கலர்துண்டு எல்லாம் போட்டுக்கொண்டு ஜம்மென்று இருக்கிறீர்கள்? //
குதிச்சிரலாங்குறீங்களா. நீங்களும் கூட வாங்க. :)
சரிங்க...தூங்கப் போறேன். ரொம்ப நேரமாச்சு. ஏற்கனவே இங்க ஆணி பயங்கரமா இருக்கு. ஆணியா ஆப்பான்னே கண்டுபிடிக்க முடியலை. சனி ஞாயிறுதான் கொஞ்சம் ஒழுங்காத் தூங்க முடியுது.
பூந்தியோ லட்டோ, தானாகத் தின்பது வேறு, அடுத்தவன் இந்தா மரியாதையா இதை தின்னு என்று நமது வாயை பிளந்து திணிப்பது வேறு என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள் தானே குமரன்?
ReplyDeleteதமிழை நாம் வடக்கிந்தியர்கள்மேல் திணிக்கப் போய்த்தான் அவர்களுக்கு தமிழ் மேல் வெறுப்பு வந்து யாருக்கும் தமிழ் தெரியாமல் போய்விட்டது? ;-). இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் ஏன் இப்படி அனைவரும் யோசித்து யோசித்து உடம்பை வருத்திகொள்கிறார்கள்.
A search found 10 entries with பூந்தி in the entry word or full text. The results are displayed using Unicode characters for diacritics and South Asian scripts.
ReplyDeleteகாரப்புந்தி (p. 0884) [ kārappunti ] n kāra-p-punti . < id. + U. būnd. See காராபூந்தி. (இந்துபாக. 298.)
காராபூந்தி (p. 0885) [ kārāpūnti ] n kārā-pūnti . < U. khārā būnd. Eatable in the form of small balls prepared from spiced salted flour in ghee or oil; ஒரு பணிகாரம்.
காராபூவந்தி (p. 0885) [ kārāpūvanti ] n kārā-pūvanti . < id. See காராபூந்தி.
சர்க்கரைப்பூந்தி (p. 1306) [ carkkaraippūnti ] n carkkarai-p-pūnti . < id. +. A kind of sweet confection; இனிய பணிகாரவகை. (இந்துபாக.)
பூந்தி¹ (p. 2837) [ pūnti¹ ] n pūnti . Indian beech. See புன்கு, 1. (மலை.)
பூந்தி² (p. 2837) [ pūnti² ] n pūnti . < U. būndī. A kind of confection made of Bengal-gram flour; பணி யாரவகை.
பூந்தி³ (p. 2837) [ pūnti³ ] n pūnti . See பூவந்தி (W.)
பூந்திக்கொட்டை (p. 2837) [ pūntikkoṭṭai ] n pūnti-k-koṭṭai . < பூந்தி³ +. See பூவந்தி.
பூந்திலட்டு (p. 2837) [ pūntilaṭṭu ] n pūnti-laṭṭu . < பூந்தி² +. See பூந்திலாடு.
பூந்திலாடு (p. 2837) [ pūntilāṭu ] n pūnti-lāṭu . < id. +. Sweet confection balls of Bengal-gram flour; ஒரு வகைப் பணியாரம்.
வெற்றி, நல்ல கேள்வி கேட்டீர்கள். பூந்தி தமிழ்ச்சொல்லா இல்லையா என்று தெரியவில்லை. இலக்கியத்தில் படித்ததாக நினைவில்லை. ஆனால் நான் படித்தும் மறந்திருக்கலாம். இணைய அகரமுதலியில் தேடியதில் மேலே இருப்பது கிடைத்தது. அங்கும் இலக்கிய எடுத்துக்காட்டுகள் இல்லை.
மற்ற ஈழத்தவர் வந்து தான் சொல்லவேண்டும் பூந்திக்கு அங்கே என்ன சொல்லுவார்கள் என்று.
வெற்றி, நீங்கள் சைவராக இருப்பதால் இந்த வயித்தெரிச்சல் மிகுதியாக இருக்கிறது. வைணவக் கோவில்களுக்குச் சென்று பாருங்கள். தமிழ் புழங்குவது மட்டுமின்றி முழுங்குவதையும் பார்க்கலாம். பெருமாள் தமிழின் பின்னே ஓடுகிறார்; வடமொழி அவர் பின்னே ஓடுகிறது என்றே அங்கு சொல்வார்கள். சைவக்கோவில்களிலும் தமிழே முதலிடத்தில் இருந்தது; அந்த நிலை மீண்டும் வரவேண்டும். நம் வாழ்நாளில் கட்டாயம் நிகழும்.
//பூந்தியோ லட்டோ, தானாகத் தின்பது வேறு, அடுத்தவன் இந்தா மரியாதையா இதை தின்னு என்று நமது வாயை பிளந்து திணிப்பது வேறு என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள் தானே குமரன்?
ReplyDelete//
இதில் மறுப்பதற்கு என்ன இருக்கிறது அனானி நண்பரே. முழுக்க முழுக்க ஒத்துக் கொள்கிறேன். இன்று வரை என்னால் இந்தி படிக்க முடியாமல் இருப்பதற்கு சிறு வயதில் இந்தி திணிக்கப்படுகிறது என்ற உணர்வு மிகுந்ததால் தானே. எத்தனை பேர் கேட்டிருப்பார்கள் சமஸ்கிருதம் புரிகிறது இந்தி புரியாதா என்று. புரியாது; கற்கவில்லை என்று சொல்லுவேன்.
//தமிழை நாம் வடக்கிந்தியர்கள்மேல் திணிக்கப் போய்த்தான் அவர்களுக்கு தமிழ் மேல் வெறுப்பு வந்து யாருக்கும் தமிழ் தெரியாமல் போய்விட்டது? ;-). இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் ஏன் இப்படி அனைவரும் யோசித்து யோசித்து உடம்பை வருத்திகொள்கிறார்கள்.
//
:-)))
இனி வரும் பின்னூட்டங்கள் நாளை அனுமதிக்கப்படும்.
ReplyDeleteதிரு குமரன்,
ReplyDeleteஜிராவின் மறுமொழியே எனது கருத்தும்...
//தமிழை நாம் வடக்கிந்தியர்கள்மேல் திணிக்கப் போய்த்தான் அவர்களுக்கு தமிழ் மேல் வெறுப்பு வந்து யாருக்கும் தமிழ் தெரியாமல் போய்விட்டது? ;-). இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் ஏன் இப்படி அனைவரும் யோசித்து யோசித்து உடம்பை வருத்திகொள்கிறார்கள்.
//
:-)))
- என்று தாங்கள் சிரிப்பான் போட்டு வைத்திருப்பதன் பொருள் தெரியவில்லை...தமிழர்கள் எங்கே வடக்கத்தியர் மேல் திணிக்க முயன்றார்கள் என்று ஆதாரம் தர முடியுமா ? உங்களுக்கு தெரிந்திருப்பதால் சிரிப்பான் போட்டு வைத்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். அது பற்றி அறிய தருகிறீர்களா ?
நன்றி !
கோவி. கண்ணன். தவறாகப் புரிந்து கொண்டீர்கள். தவறாகப் புரிந்து கொண்டு அப்படியே விட்டுவிடாமல் கேட்டதற்கு நன்றி. விளக்கம் சொல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கிறதே.
ReplyDeleteஅந்த பலத்த சிரிப்பு அந்த அனானி செய்த கிண்டலுக்கு. நாம் இந்தியைப் படிக்காததற்கு இந்தித்திணிப்பும் அதனால் இந்தியின் மேல் வந்த வெறுப்பும் ஒரு பெருங்காரணம் அல்லவா? அவர் அதனை அப்படியே தலைகீழாகச் சொல்லி கிண்டல் செய்திருந்தார். அதற்குத் தான் அந்தப் பெருஞ்சிரிப்பு.
ஜீராவின் மறுமொழியே உங்கள் கருத்தும் என்று சொல்லியிருக்கிறீர்கள். என்னைக் கேட்டால் அவர் கருத்து தான் என் கருத்தும். ஆனால் சொல்லுபவர் வேறு; சொல்லும் முறை வேறு போலும். அதனால் தவறாகப் புரிந்து கொள்கிறோம். அதனை மாற்ற முடியாது. அவரவர் தமதமது சொல்லும் முறையில் தான் தன் கருத்துகளைச் சொல்ல முடியும். இல்லையா?
//தமிழ் புழங்குவது மட்டுமின்றி முழுங்குவதையும் பார்க்கலாம்.//
ReplyDeleteஎழுத்துப்பிழை. முழங்குவதையும் என்று எழுத நினைத்து தட்டச்சுப் பிழையினால் முழுங்குவதையும் என்று மேலே வெற்றிக்குச் சொன்ன பதிலில் எழுதியிருக்கிறேன். திருத்திப் படித்துக் கொள்ளுங்கள்.
வட மொழி ≠ ஹிந்தி
ReplyDeleteவடமொழி என்பது சமஸ்கிருதம். தமிழ் இலக்கியங்களிலும் அப்படித்தான் பொருள் வரும்படி சொல்லியிருக்கிறார்கள்.
ஆகவே, தமிழும் சமஸ்கிருதமும் நமக்கு இரண்டு கண்களாக இருக்கலாம். ஆந்திராவில் தெலுங்கும் சமஸ்கிருதமும் அவர்களுக்கு இரண்டு கண்கள். குஜராத்தில் குஜராத்தியும், சமஸ்கிருதமும் அவர்களுக்கு இரண்டு கண்கள்.
அங்கே வடமொழி (northern language) என்ற சொல்பதம் இல்லை. அவ்வளவே. அதுக்காக திராவிடவியாதிகள் சொல்லுக் லொள்ளச் சாக்காக தமிழைக் கண்ணாகப் பாவிக்கும் பாங்கு வடநாட்டில் இல்லை, என்று ஜி. ராகவன் சொல்வது அபத்தம் என்று எனக்குப் படுகிறது.
வஜ்ரா, இந்த not= என்பதை எப்படி தட்டச்சினீர்கள்?
ReplyDelete≠
ReplyDelete≤
±
≥
©
≤
≥
:-))
என்னங்க வெற்றி. நீங்களும் இதை மறை பொருளா வச்சிருக்கீங்க? எப்படின்னு சொல்லுங்க வெற்றி.
ReplyDeleteஐயோ,
ReplyDeleteகுமரன் musicindiaonline ல் பாடலைக் கேட்டுக் கொண்டு தட்டச்சு செய்தேன். கவனக் குறைவால்[பாடலின் சுகத்தில் மூழ்கியிருந்ததால்] விளக்கம் எழுத முன் PUBLISH YOUR COMMENT ஐ அழுத்திவிட்டேன். இப்போ உங்களின் பதிவைப் பார்த்ததும்தான் விளக்கம் எழுதாதது தெரிந்தது. மன்னிக்கவும்.
Vajra எப்படித் தட்டச்சினாரோ தெரியாது. நான் செய்ததெல்லாம் MS WORD ல் Insert க்குப் போய் Symbol பட்டியலில் இருந்த இந்தக் குறியீடுகளை MS WORD ல் Insert பண்ணிவிட்டு பின்னர் அதை இங்கே cut & paste செய்தேன். அவ்வளவே.
இந்த இரகசியத்தை (மறைபொருளைச்) சொன்னதற்கு மிக்க நன்றி வெற்றி. நானும் முயன்று பார்க்கிறேன். :-)
ReplyDelete≠
≤
≥
÷
×
மறை பொருளை மறைக்காமச் சொன்னதுக்கு மிகவும் நன்றி வெற்றி!
ReplyDelete× ÷ ≤ ≥ = ≠
அப்படியே $ குறியீடு போல்
யூரோவுக்கும் ஒரு வழி சொல்லுங்களேன்! :-)
கலைமகளுக்கு தமிழும் வடமொழியும் இரண்டு கண்கள் என்று எந்த நாதாரி சொன்னது?
ReplyDeleteசரஸ்வதிதேவிக்கு முகம்-பிரம்மவித்யை; கைகள்- நான்கு வேதங்கள்; கண்கள்-எண், எழுத்து; மார்புகள்- இசையும் இலக்கியமும்; பாதங்கள்- இதிகாசம் புராணங்கள்; யாழ்-ஓங்காரம்; என்று தத்துவ நூல்கள் பேசுகின்றன.
இதுகூட ஒரு பாப்பார பன்னாடை சொன்னதுதான். இதில்கூட கண்களாக எண், எழுத்து என்றுதான் சொல்லி இருக்கிறானே தவிர வடமொழி எண், வடமொழி எழுத்து என்று சொல்லவில்லை!
இதனைப்பற்றி மற்றவர்களும் அறிந்து கொள்ள விரும்பினால் தனித்தலைப்பாக இட்டு என் பதிவிலே விவாதிக்க தயாராக இருக்கிறேன்.
//வெற்றி, நீங்கள் சைவராக இருப்பதால் இந்த வயித்தெரிச்சல் மிகுதியாக இருக்கிறது. வைணவக் கோவில்களுக்குச் சென்று பாருங்கள். தமிழ் புழங்குவது மட்டுமின்றி முழங்குவதையும் பார்க்கலாம்//
ReplyDeleteவெற்றி...
ஒரு சில சைவக் கோயில்கள் உங்கள் வயித்தெரிச்சலைக் குறைக்க வழி பண்ணும் வகையில் இருக்குங்க!
குன்றக்குடி அடிகளார் நிர்வாகத்துக்குட்பட்ட குன்றக்குடி ஆலயம்...மற்றும் திருப்பனந்தாள் மடத்து ஆலயங்களில் தமிழ் முழங்கக் காணலாம். ஆனால் அங்கும் வேள்விப் பூசைகள் வடமொழியிலும் சேர்ந்தே இருக்கும்!
குமரன் சொன்னது போல், வைணவக் கோவில்கள் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று, ஒரு காட்சி பார்த்து விட்டு வாருங்களேன்!
சாத்துமுறைக் (சாற்றுமறை) காலம் எப்போது என்று கேட்டு அப்போது சென்றீர்களேயானால், தமிழ் மட்டுமே தனியாக முழங்கக் காணலாம்!
அரையர் சேவை என்னும் ஒரு ஆலய நிகழ்ச்சியின் போது சென்றீர்களேயானால், முத்தமிழும் முழங்கும்! இயல், இசை, நாடகம் மூன்றும் காணலாம்!
நம்மவர்களின் தமிழ் பற்றே நம்மவர்களின் பலவீனம் என்று மட்டும் புரிகிறது!
ReplyDeleteராகவன் மற்றும் கோவியாரின் கருத்தே என் கருத்தும் என்பதை சொல்லவும் வேண்டுமோ!
ReplyDeleteநமக்கு வடமொழி உட்பட எந்த மொழியையும் வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை .அதே நேரத்தில் வடமொழியை நம் தாய்மொழிக்கு இணையாக வைக்க வேண்டிய அவசியம் என்ன ? அதிலும் சிலருக்கு தமிழை விட வடமொழி பாசம் பொங்கி வழிவதின் அவசியமென்ன ? யாமறியோம் பராபரமே!
விடாதுகருப்பு, கலைமகளுக்குத் தமிழும் வடமொழியும் இருகண்கள் என்று சொன்னவர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர். இணையத்தில் கிடைக்கிறது அந்தப் பாடல். என் பதிவொன்றிலும் கோவி.கண்ணன் இடுகையின் பின்னூட்டத்திலும் அது இருக்கிறது. நீங்கள் 'நாதாரி' என்று அழைத்த அந்தத் தமிழறிஞரை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் தேடிப் படித்துக் கொள்ளுங்கள்.
ReplyDeleteசரஸ்வதி தேவியின் உறுப்புகள் யாவை என்ற பட்டியலை இங்கே இட்டதற்கு நன்றி.
ஜீவா. எந்த விதமான பற்றும் சில நேரங்களில் பலகீனமாகத் தோன்றுவது உண்டு. அதனால் பற்று கொள்வது சரியில்லை என்று சொல்ல முடியாது. அது தான் உயிர்நாடி.
ReplyDeleteஜோ, தங்கள் கருத்திற்கு நன்றி. வடமொழியை நாம் வெறுக்க வேண்டாம்; தமிழை வடமொழியாளர் வெறுக்க வேண்டாம் - என்ற கருத்தைச் சொல்வதற்காகத் தான் ஞானவெட்டியான் ஐயா வடமொழியைத் தமிழுக்கு இணையாக வைக்கிறார் - பூந்தி, இலட்டு - என்ற உவமையின் மூலம். அந்த ஒப்பீடு மொழி என்ற வகையில் மட்டும் தானே ஒழிய மற்ற வகையில் இணை வைக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை. உங்களின் அடுத்தக் கேள்வியை நானும் சேர்ந்து கேட்கிறேன் ஜோ.
ReplyDeleteஅன்பர்களே,
ReplyDeleteலட்டு - பூந்தி
அரேபியச் சொற்கள்
உண்மையாகவா ஒளிர்ஞர் ஐயா? தகவலுக்கு நன்றி.
ReplyDelete