Friday, July 13, 2007

இன்று நல்ல நாளா கெட்ட நாளா?

என்ன எனக்கு திடீரென்று இந்த ஐயம் என்று பார்க்கிறீர்களா? காரணம் இருக்கிறது. நடப்பவைகளைப் பார்த்தாலும் அப்படித் தான் தோன்றுகிறது. 13ம் எண்ணைப் பார்த்தாலே பயப்படுபவர் இருக்கிறார்கள் இங்கே (மேற்குலகில்). அதுவும் 13ம் நாள் வெள்ளிக்கிழமையாக வந்துவிட்டால் இன்னும் அதிகம் பயப்படுகிறார்கள். சென்ற வாரத்திலிருந்து நிறைய பேர் பேசிவிட்டார்கள் அதனைப் பற்றி. இன்று ஜூலை 13 வெள்ளிக்கிழமையில் வந்திருக்கிறதே. அதனைப் பற்றித் தான் கேட்டேன். இன்று நல்ல நாளா கெட்ட நாளா?

இதன் வரலாற்றைத் தேடிய போது விக்கிபீடியா பதில் சொன்னது. நாம் புனித வெள்ளி என்று போற்றும் நாள் தான் இதன் தொடக்கம் என்கிறது. இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டது வெள்ளிக்கிழமை; அவரும் அவருடைய சீடர்களும் சேர்ந்து 13 பேர் கடைசி உணவு அருந்தினார்கள். அதனால் இந்த இரண்டும் இணைந்தது கெட்ட சகுனம் என்ற நம்பிக்கை தோன்றியது.

மேலும் அறிந்து கொள்ள இங்கேயும் இங்கேயும் பாருங்கள்.

6 comments:

  1. இன்று நல்ல நாளே. அலுவலகத்தில் எப்போதும் போல் நன்றாகவே சென்றது. :-)

    ReplyDelete
  2. குமரன் ,

    நீங்க கோளாறு பதிகம் பாடி இருப்பிங்க அதன் நல்ல நாளா இருந்து இருக்கு(நமக்குலாம் கோளாறு பதிக்ம் வேணாம், நாமளே கோளாறு புடிச்சவங்க தானே)

    ஆலிவுட் நடிகைகளுக்கு இது போல மூட நம்பிக்கைலாம் இருக்காது, அவங்க தான் உடம்ப மூடும் நம்பிக்கையே இல்லாதவங்க ஆச்சே! :-))

    ReplyDelete
  3. நீங்க வேற வவ்வால். அது கோளாறு பதிகம் இல்லீங்க. கோளறு பதிகம் = கோள் + அறு பதிகம். நீங்க நினைவுல வச்சுக்கிட்டு இருக்கீங்க. நான் மறந்துட்டேன் பாருங்க. :-(

    ஒரு வேளை நம்மளை மாதிரி கோளாறு புடிச்சவங்களுக்கு கோளறு பதிகம் தேவையில்லைன்னு தான் மறக்க வச்சுட்டாரோ?

    ஹாலிவுட் நடிகைகளுக்கு மட்டுமா? உலகெங்கிலும் அதே கதை தானே. நம் நடிகைகளுக்கு மட்டும் என்ன 'மூட' நம்பிக்கை இருக்கிறதா? :-)

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. நல்லதோ கெட்டதோ! அது நம்மை பொருத்தது.

    13 friday என்ற வைரஸ் கூட பரவியது. இதை பற்றி ஒரு மின்னஞ்சலும் உலவியது. மக்கள் பயந்தனர்.

    அந்த வேயுறு தோளி பங்கனும், வில்லேந்திய சாரங்கனும் இருக்க ஏது பயமெனக்கு, "ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா!...".

    மிக நல்ல நாள் இன்று என நம்புங்கள் பிறரால் நீங்களும் நம்பப் படுவீர்கள். இதுவும் அதே இயேசுநாதர் தான் சொன்னார். இதை அநேக மக்கள் மறந்துட்டாங்க ஆனால் மற்றவற்றை **** **** கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  6. நன்றி சிவமுருகன்.

    ReplyDelete