Monday, July 02, 2007

வலைப்பதிவு நண்பர்கள் மன்னிக்கவும்!

ஒரு மாத காலம் இந்தியாவிற்குச் சென்று வந்தேன். சென்னையில் நான்கு நாட்கள், மதுரையில் பத்து நாட்கள், கோவையில் ஒரு நாள், ஊட்டியில் மூன்று நாட்கள், பெங்களூருவில் பத்து நாட்கள், ஹைதராபாத்தில் மூன்று நாட்கள் என்று பொழுதைக் கழித்து விட்டு வந்தோம். பதிவுலக நண்பர்கள் சிலரிடம் தொலைபேசி எண்கள் பெற்றுச் சென்றிருந்தாலும் யாருக்கும் தொலைபேச இயலவில்லை. யாரையும் சந்திக்க இயலவில்லை. நண்பர்கள் அனைவரிடமும் இதற்காக மன்னிப்பு கேட்கிறேன். கோவித்துக் கொள்ளவேண்டாம்.

15 comments:

  1. welcome back kumaran.

    You need not have mentioned this personal trip.Bloggers need privacy.(from people and autos also:)

    ReplyDelete
  2. ததா,

    மதுரை & பெங்களூரூ வந்தீங்களா???

    சொல்லவே இல்லை... :@

    ReplyDelete
  3. நாங்க கோவிச்சிக்கிறது இருக்கட்டும்.

    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

    ஏதாவது கோவில்களுச்சென்று சேவித்துக் கொண்டீர்களா?

    ReplyDelete
  4. வரணும் குமரன்.
    தம்பி திருமணம் நன்றாக முடிந்திருக்கும்.
    இன்னும் பதிய ஆரம்பிக்கலியா.:)))

    ReplyDelete
  5. உங்க ஊருக்கு வந்தாலே ஓடிப் போற ஆள்தானே!! :))))

    அது எல்லாருக்கும் தெரியும். அதனால தப்பா எடுத்துக்க மாட்டாங்க!!

    ReplyDelete
  6. அடடே! இதுக்கெதுக்கு மன்னிப்பு. சொந்த வேலையாப் போயிட்டு வந்திருக்கீங்க. ரொம்ப சந்தோசம்.

    ReplyDelete
  7. ஆமாம் செல்வன். நீங்க சொல்றது சரி தான். ஆனால் நிறைய பேர் வருத்தப்பட்டார்கள். அதான் இப்படி சுருக்கமாக ஒரு இடுகை.

    ReplyDelete
  8. ஆமாம் இராம். சொல்லாம கொள்ளாம தான் வந்துட்டுப் போனேன். நிறைய வேலை இருந்ததால.

    ReplyDelete
  9. நன்றி சிவபாலன்.

    ReplyDelete
  10. சிபி,

    சென்னையில் வெங்கட்நாராயணா சாலையில் இருக்கும் திருப்பதி கோவில், மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில், தெற்கு கிருஷ்ணன் கோவில், தெற்கு மாசி வீதியில் இருக்கும் காமாட்சி அம்மன் கோவில் & திரௌபதி அம்மன் கோவில், அழகர் கோவில், திருமோகூர்; பெங்களூருவில் இஸ்கான் கோவில், ஹைதராபாதில் பிர்லா மந்திர். இது தான் நான் சென்ற கோவில்களின் பட்டியல். :-)

    இந்த முறை வழக்கமாகச் செல்லும் மதுரை கூடலழகர் கோவில், இம்மையிலும் நன்மை தருவார் கோவில், பழனி, திருப்பதி, புட்டபர்த்தி செல்ல இயலவில்லை. :-(

    ReplyDelete
  11. பதிக்கத் தொடங்கியாச்சே வல்லியம்மா. யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமேன்னு தான் தொடங்கியிருக்கேன். :-)

    தம்பி திருமணம் நல்லபடியா நடந்தது.

    ReplyDelete
  12. சரியா சொன்னீங்க கொத்ஸ். :-)

    ReplyDelete
  13. இராகவன். நீங்க வெளிநாட்டுக்குப் போயிட்டீங்க. அதனால கோவிச்சுக்க மாட்டீங்க. மத்தவங்க வருத்தப்படறாங்க.

    ReplyDelete
  14. பட்டியலில் சில கோவில்களை விட்டுவிட்டேன் சிபி. மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், அழகர் கோவில் பழமுதிர்சோலை போனேன். வழக்கமாகப் போகும் திருப்பரங்குன்றம், மயிலை கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் - இவற்றிற்குச் செல்ல முடியவில்லை.

    ReplyDelete