ஒரு நிமிட மேலாளர் (One Minute Manager) என்றொரு புத்தகத்தை ஏழு வருடங்களுக்கு முன்னர் படித்தேன். படித்தவுடன் அந்தப் புத்தகத்தில் இருக்கும் கருத்து மிகவும் பிடித்தது.
நான்கு ஒரு நிமிட மேலாண்மைக் கருத்துகளை இந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு நிமிடத்தில் குறிக்கோள் குறித்தல் (One Minute Goal Setting)
ஒரு நிமிடத்தில் நிலை அறிதல் (One Minute Status)
ஒரு நிமிடத்தில் பாராட்டுதல் (One Minute Appreciation)
ஒரு நிமிடத்தில் தவறுகளைச் சுட்டுதல் (One Minute Reprimand)
1. ஒரு நிமிடத்தில் குறிக்கோள் குறித்தல்:
இது மிக முக்கியமான ஒன்று. பல மேலாளர்கள் செய்யத் தவறுவது. பல முறை நான் செய்ய மறந்து பின்னர் தவறுகள் நேரும் போது சரி செய்திருக்கிறேன். குறிக்கோள் என்ன என்பதைத் தெளிவாகச் சொல்லாவிட்டால் எப்படி அந்தக் குறிக்கோளை அடைய முடியும்?
சிலர் குறிக்கோளைச் சொல்கிறேன் என்று நிறைய நேரம் எடுத்துக் கொள்வார்கள். இந்த 'ஒரு நிமிடத்தில் குறிக்கோள் குறித்தல்' முறையில் அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டால் போதும். அப்படியென்றால் நீண்ட காலக் குறிக்கோளை வரையறுக்க முடியாது; குறுகிய காலக் குறிக்கோளைத் தான் வரையறுக்க முடியும் என்று சில மேலாளர்கள் நினைக்கிறார்கள். அப்படியில்லை. முதலில் நீண்ட காலக் குறிக்கோளை வரையறுத்துவிட்டு பின்னர் அந்தக் குறிக்கோளை அடைய குறுகிய காலக் குறிக்கோள்களைப் பற்றிப் பேசலாம்.
குறிக்கோளைப் பற்றிப் பேசுதல் என்றால் மேலாளருக்கு மட்டுமே குறிக்கோள் தெளிவாகப் புரிதல் இல்லை. நம்முடன் வேலை பார்த்து அந்தக் குறிக்கோளை அடைய உதவுபவர்களும் அந்தக் குறிக்கோளை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக இதில் பல முறை கோட்டை விட்டு பின்னர் சரி செய்திருக்கிறேன். குறிக்கோள் எல்லோருக்கும் தெளிவாகப் புரிந்தால் தான் வேலை சரியாக சரியான நேரத்தில் நடந்து முடியும். வேலை செய்பவருக்குக் குறிக்கோள் புரியாமல் இருந்தால் அவர்களுக்கு தாங்கள் செய்யும் வேலையின் முக்கியத்துவமும் நேரத்தோடு செய்து முடிக்க வேண்டிய கட்டாயமும் புரியாது. அப்படி நடந்தால் வேலை நேரத்துக்கு நடக்காமல் மேலாளரும் கடைசி நிமிடத்தில் அந்த வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்ய வேண்டியிருக்கும். அப்புறம் யாரை நொந்து என்ன பயன்?
ஒரு நிமிடத்தில் (சரி ஐந்து நிமிடத்தில் என்றே சொல்வோம்) குறிக்கோளைக் குறித்துப் பேசும் போது வேலை செய்பவர்களுக்கும் அந்த குறிக்கோள் புரிந்ததா, அந்தக் குறிக்கோளின் முக்கியத்துவம் புரிந்ததா, அந்த வேலையைச் செய்வதால் எடுத்துக்கொண்ட பணிக்கு என்ன பயன் என்று புரிந்ததா, வேலை செய்யும் தங்களுக்கு அதனால் என்ன நன்மை என்று புரிந்ததா என்று அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு குறிப்பான கேள்விகளை (Pointed Questions) அவர்களிடம் அந்த ஐந்து நிமிடங்களிலேயே கேட்கலாம். பல முறை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதும் இன்னும் சரியான சொற்களைப் பயன்படுத்தினால் அவர்கள் சரியாகப் புரிந்து கொள்வார்கள் என்பதையும் கண்டிருக்கிறேன். அப்படி முதன்முறையிலேயே குறிக்கோளை பணி புரிபவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு விட்டால் மேலாளருக்கு அப்புறம் வேலையே இல்லை; அவர்களே அந்த வேலைக்கு பொறுப்பு எடுத்துக் கொண்டு தானாகவே வேலையை முடித்துவிடுவார்கள்.
அடுத்த மூன்று 'ஒரு நிமிடத்தில்' கோட்பாடுகளை தொடர் இடுகைகளாக இடுகிறேன்.
இந்த இடுகைகள் மேலாளர்களுக்கு மட்டும் இல்லை. இந்தியாவில் இருக்கும் நண்பர்கள் மூலமாக வேலையை இங்கிருந்த படியே ஒருங்கிணைக்கும் மென்பொருளாளர்களும் (Onsite Coordinator), சிறு தொகுப்புத் தலைவர்களும் (Module Leader) இந்த கோட்பாடுகளைப் பயன்படுத்தலாம். நண்பர்கள் தங்கள் அனுபவங்களைப் பற்றிப் பேசினால் இந்தத் தொடர் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.
Expecting your next modules. Keep it up.
ReplyDeleteவசிகர் (வாசிகரா?)
ReplyDeleteஅடுத்த பகுதிகளைக் கேட்கிறீர்களே. இந்தப் பகுதியைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. :-) கீப் இட் அப் தான் அதற்கு பதிலோ? :-) நன்றி வசிகர்.
//பல முறை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதும் இன்னும் சரியான சொற்களைப் பயன்படுத்தினால் அவர்கள் சரியாகப் புரிந்து கொள்வார்கள் என்பதையும்//
ReplyDeleteமிகவும் சரி, குமரன்
ஒரு முறை நாம் சொல்லி விளக்கும் போது, அவ்வளவாகப் புரிந்து கொள்ளவில்லை என்றால், சொன்னதையே வார்த்தை மாறாமல் மீண்டும் சொல்வது வாடிக்கை.
ஆனால் புரியாததால் தான், பணி புரிவோர் தயங்கி நிற்பதும், சொன்னதை வேறு சொற்கள், கொண்டு மீண்டும் விளக்கும் போது...இன்னும் வசதியாகிறது!
Blanchard & Johnson எழுதிய புத்தகம் தானே?
ஆமாம் இரவிசங்கர். அவர்கள் எழுதியது தான்.
ReplyDeleteஅவர்கள் எழுதியதைப் பற்றிய விளக்கங்களாக இந்தத் தொடரை எழுதவில்லை. அவர்களின் கோட்பாடுகளைப் பற்றிப் பேசிவிட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றிப் பேச எண்ணியிருக்கிறேன். அதனால் அந்த புத்தகத்தில் இல்லாதவையும் எழுதியிருப்பேன்.
நீங்கள் சொல்லும் வேடிக்கையை நானும் பல முறை செய்திருக்கிறேன். முதலில் சொன்னது புரியவில்லை என்றால் உடனே ஏற்கனவே சொன்னதையே வார்த்தை பிசகாமல் அப்படியே ஆனால் மிக மெதுவாக விளக்க முயன்றிருக்கிறேன். வேறு வார்த்தைகளில் சொன்னால் உடனே மக்களுக்குப் புரிந்துவிடுகிறது. அந்த முறையைத் தான் இப்போதெல்லாம் பயன்படுத்தும்கிறேன்.
பயனுள்ள பதிவு.
ReplyDeleteபலர் சொல்லும் போது தலை அசைத்து விட்டு திரும்பிக் கேட்டால்தான் ஒன்றுமே புரியவில்லை என்பதை வெளிப்படுத்துவார்கள். அவர்கள் வாயிலிருந்தே, குறிக்கோளை அவர்களது சொற்களில் திரும்பிக் கேட்ட பிறகுதான் சொன்னதை புரிந்து கொண்டார்கள் என்பது தெரியும்.
அன்புடன்,
மா சிவகுமார்
நல்ல பயனுல்ல விஷயம் குமரன். கண்டிப்பா எழுதுங்க எல்லாருக்கும் உபயோகமாக இருக்கும். துவக்கம் நல்லா இருக்கு.
ReplyDeleteஆமாம் சிவகுமார். அண்மைக்காலமாக என் மேலாளர்களுடன் பேசும் போதும் அவர்கள் சொன்னதை நான் சரியாகப் புரிந்து கொண்டேனா என்பதை அறிந்து கொள்ள அவர்கள் சொன்னதைத் திருப்பிச் சொல்லத் தொடங்கியிருக்கிறேன். அப்போது தான் நான் என் குழுவில் இருப்பவர்களுக்குச் சொல்ல முடியும். அவர்களையும் பேசப்பட்டவைகளைச் சுருக்கமாகச் சொல்லச் சொல்லிக் கேட்கிறேன்.
ReplyDeleteதங்கள் பாராட்டிற்கு நன்றி.
நன்றி சந்தோஷ்.
ReplyDeletenangalum etho ezutharom :D
ReplyDeleteநேத்துதான் வாங்கினேன் :-) உங்கள் மொழியில் கேட்க ஆவலாய் உள்ளேன்.
ReplyDeleteகுமரன்,
ReplyDeleteநல்ல பயனுள்ள பதிவு.
/* சிலர் குறிக்கோளைச் சொல்கிறேன் என்று நிறைய நேரம் எடுத்துக் கொள்வார்கள். */
இந்த அவஸ்தையில் மாட்டுப்பட்டு நொந்த அனுபவம் எனக்கு உண்டு.:-)
தொடருங்கள்.
கீதாம்மா. என்ன சொல்றீங்கன்னு புரியலையே?! நீங்க எழுதுற தொடர்கள் எல்லாம் நல்லா சுவையா போகுதுன்னுல்ல நான் நினைச்சுகிட்டு இருக்கேன்?
ReplyDeleteஉதயகுமார். அந்தக் கதையை ஒரே நாள்ல படிச்சிருலாம். இன்னும் படிக்கலைன்னா உடனே படிச்சுருங்க. இன்னொரு புத்தகமும் இருக்கு - . அதையும் வாங்கிப் படிச்சுப் பாருங்க. இந்த ரெண்டு புத்தகங்கள் தான் எனக்கு கீதையைப் போல் உதவுது. :-)
ReplyDeleteஇந்தப் புத்தகத்துல சொன்னதைத் தொட்டுட்டு அப்புறம் அனுபவங்களைப் பகிர்ந்துக்கிறதா தான் எண்ணம். உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துக்கோங்க.
வெற்றி. அந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்களேன். நீங்கள் அவர்கள் நிலையில் இருந்த அனுபவம் உண்டா? அப்படியென்றால் நீங்கள் என்ன செய்தீர்கள்? இருந்ததில்லை என்றால் அந்த நிலை வரும் போது என்ன செய்வீர்கள்? உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துக்கோங்க.
ReplyDeleteநேர்முகத் தேர்வு கேள்விகள் போல இருக்கா? :-)
அப்படி இல்லை. உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துக்கிட்டா நல்லா இருக்குமேன்னு கேட்கிறேன்.
Its an intresting one. The goal setting for any task is a madatory thing.
ReplyDelete"If my mind could not see any thing, then my limbs can do nothing" adding to it "Do see the result and stick with result while doing the actions" its my policy. The post made some good "Fine tune". I 'll do more tune on it.
I have an experience on this too.
Being a non - graduate because of this type of policies and ofcourse god's grace, I 'm leading SAP-HR Team for entire North zone of our company.
Simply its a best thing who ever wants to do, can. "Simply the Best". Like using pencile in the Zero gravity zone.
Thanks for the post and expecting the next too.
Sorry for English comment.
சிவமுருகன், தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நீங்கள் எடுத்துக் காட்டியிருக்கும் மேற்கோள்களும் நல்ல மேற்கோள்கள்.
ReplyDeleteஇவற்றைப் படிக்கும் போது 'ஆமாம். சரி தானே' என்று தோன்றுகிறது. ஆனால் செய்யும் போது சரிவரச் செய்வதில்லை. பலமுறை தவறியிருக்கிறேன்.
சொல்லுதல் யார்க்கும் எளிய என்று சரியாகத் தான் சொல்லியிருக்கிறார்கள்.
நல்லதொரு பதிவு. அல்லது தொடர். மேலாளராக இருப்பது அவ்வளவு எளிதல்ல. தினந்தினம் ஒரு பாடம். இந்தப் பதிவு கண்டிப்பாக உதவும் என்று நம்புவோம்.
ReplyDelete// Udhayakumar said...
நேத்துதான் வாங்கினேன் :-) உங்கள் மொழியில் கேட்க ஆவலாய் உள்ளேன். //
என்ன சவுண்டு பார்ட்டி....மேலாளர் ஆயிட்டீங்களா? ஆகப் போறீங்களா?
வ.ப.செ இதுக்கு ரொம்பவே பொருந்தும்னு நினைக்கிறேன்... :)))
ReplyDeleteஇருந்தாலும் அடுத்தவங்கள எப்படி மேலாண்மை செய்யணும்னு தெரிஞ்சிக்கறது நல்லதுதானே.. :P
NOM
இராமநாதன், வ.ப.செ? NOM?
ReplyDeleteமொத்தமும் படிச்சிட்டு தான் விமர்சனம் :-)
ReplyDeleteஅடுத்த பகுதிக்கு ஆவலுடன்...
என்ன இராகவன் 'உதவும்ன்னு நம்புவோம்'ன்னு சொல்லிட்டீங்க? :-)
ReplyDeleteஆமாம் இராகவன். ரொம்ப கடினமான வேலை தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடம். கத்துக்க நாம தான் தயாரா இருக்கணும்.
மேலாளர் ஆனாத் தான் இந்தப் புத்தகம் படிக்கணும்ன்னு இல்லையே. நானெல்லாம் ரொம்ப நாளுக்கு முன்னாலேயே இதப் படிச்சாச்சு.
பாலாஜி. அப்ப உங்க விமரிசனத்தைப் படிக்க ஒரு வருடம் ஆகலாம்ன்னு சொல்லுங்க. :-)
ReplyDeleteநான் தான் என்னோட வழக்கமான வழக்கத்தின் படி மெதுவா நேரம் கிடைக்கிறப்ப எழுதுவேன். :-)
உங்க ஆவலுக்காக அடுத்தப் பகுதியை விரைவா எழுத முயற்சிக்கிறேன்.
வந்து படித்து சென்றதுக்கு நன்றி இராம்ஸ். :-)
ReplyDeleteI thought One Minute Manager book speaks about three secrets of management. You have written four secrets. Did you invent one? :-)
ReplyDeleteKishore,
ReplyDeleteYou are correct. I googled after seeing your comment. It seems the One Minute Manager is talking about three points only; not four points. :-)
You are making me to search for the book. I will search for it and try to be as close as possible with the topic/title of the book/postings.
Thanks. :-)