Monday, July 31, 2006

இறைவனின் திருநாமம்

நான் உங்கள் அருகில் வந்து "ஐயோ! தேள்! என்று சத்தம் போட்டால் உடனே அலறிக் குதிக்கிறீர்கள்.

"ரஸகுல்லா" என்று சொன்னால் நாக்கில் நீர் சுரக்கிறது.

"நீர் கழுதை" என்று சொன்னால் கோபப் படுகிறீர்கள் , இரத்தம் கொதிக்கிறது,
கண்கள் சிவந்து விடுகிறது .

இப்படியான சாதாரண சொற்களுக்கே இவ்வளவு சக்தி என்றால், இறைவனது திருநாமத்திற்கு எவ்வளவு சக்தி இருக்க வேண்டும்!

பிரகலாதன் , மீரா போன்றவர்களுக்கு இந்த சக்தி பற்றி தெரியும். இறைவனது பெயர் உள்ளத்தை சுத்தப்படுகிறது. இறைவனை நேருக்கு நேர் கொண்டு வருகிறது.

- சுவாமி சிவானந்தர்

31 comments:

  1. ஆமாம். மிக சரி.

    ராம நாமத்தை சொன்னாலே மனம் அமைதி அடைந்து ஒருவித சொல்ல இயலாத மகிழ்ச்சியை தருகிறது...

    ReplyDelete
  2. //இறைவனது பெயர் உள்ளத்தை சுத்தப்படுகிறது. இறைவனை நேருக்கு நேர் கொண்டு வருகிறது. //


    அவனை அறியாதவர்களுக்கும், மறுப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் ரத்தம் கொதிக்க வைக்கிறதே?

    அவனும் சொல்பவனுக்குப் பிடித்த இறைவனாக இருப்பின் தான் சிலருக்கு மகிழ்வு வருகிறது.

    இதற்கு என்ன வழி?

    அனைவரையும்.... அனைவரையும் நாம் விரும்பும் இறைவனின் ரூபமாகக் கண்டுகொண்டால் மட்டுமே நிம்மதி வரும்.

    அல்லது..... கதவைச் சாத்திக்கொண்டு "உள்ளே" அமர வேண்டும்!

    ReplyDelete
  3. தேள்,ரசகுல்லா,கழுதை,இறைவன் நாமம் இவை அனைத்தும் ஒன்றுதான் என உணர்ந்து மூன்றுக்கும் சரிசம அளவில் மதிப்பு தருபவனே ஸ்திதப்பிரஞ்ஞன்.

    அந்த நிலையை அடைய இறைவன் பெயரை உச்சரிக்க வேண்டும் என்பது தான் அத்வைதத்தின் ஐரனி:)

    ReplyDelete
  4. செல்வன் இன்னொரு முக்கியமான Ironyயும் இருக்கிறது. மனமே எல்லா பந்தத்திற்கும் காரணம். மாயையின் முக்கிய ரூபம் மனம்; பிரகிருதியின் முக்கிய வெளிப்பாடு மனம். ஆனால் அந்த மனமே பந்தத்திலிருந்து முக்தி அடைய முக்கிய சாதனம்; வழி. எப்படி இந்த Irony? :-)

    ReplyDelete
  5. அண்ணா,
    //பிரகலாதன் , மீரா போன்றவர்களுக்கு இந்த சக்தி பற்றி தெரியும். இறைவனது பெயர் உள்ளத்தை சுத்தப்படுகிறது. இறைவனை நேருக்கு நேர் கொண்டு வருகிறது.//

    ஒருவேளை உண்மையின் மறு பெயர் தான் இறைவனோ? அகத்தூய்மை வாய்மையார் கணப்பெரும் என்று வள்ளுவர் சொல்லியுள்ளாறே?

    அல்லது இறைவன் நாமத்தை சொல்பவர், பொய்சொல்வதில்லை என்ற பொருளோ?

    ReplyDelete
  6. நல்ல பதிவு. இதில் ஒரு சின்ன அது இருக்கிறது. எது? தேன் என்றால் அதைத் தெரிந்தவனுக்குத்தான் அந்த இன்பம் வரும். ஜேனு என்றால் கன்னடத்தானுக்குத்தான் இன்பம் வரும். தமிழும் கன்னடமும் தெரிந்தவருக்குத் தேன் என்றாலும் ஜேனு என்றாலும் எச்சிலூறும்.

    அதே போல இறைவன் என்று உணர்ந்து வகையிலேயே அந்த இன்பம் பிறக்கும். முருகா என்றால் ராகவனுக்கு இன்பம். பிள்ளையாரப்பா என்றால் கைப்புள்ளைக்கு. பெருமாளே என்றால் குமரனுக்கு. இப்பிடி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி. ஆனால் எல்லாம் ஒன்றுதான்.

    கன்னடத்தானுக்கு அந்தப் பொருள் ஜேனாகிறது. தமிழனுக்குத் தேனாகிறது. ஆங்கிலத்தானுக்கு ஹனியாகிறது. ஆனால் அனைத்தும் ஒன்று. அதுபோல அவரவர் உணர்ந்த வகையில் அவரவர் உணர்ந்த விதத்தில் இறைவன் இனிப்பான்.

    ReplyDelete
  7. பாலாஜி. பல இடங்களில் இராம நாமத்தைப் பற்றிப் பேசியிருக்கிறீர்கள். இராம நாமத்தின் சுவையை நன்கு உணர்ந்துள்ளீர்கள் போலும்.

    ReplyDelete
  8. எஸ்.கே. நல்ல வழிகளைச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  9. செல்வன். எப்போது உங்கள் தொடர் தொடங்குகிறது. உங்கள் தேர்வுகள் முடிந்த பின்னர் தான் என்று எண்ணுகிறேன். அந்தத் தொடரில் ஸ்திதப்ரக்ஞனைப் பற்றிப் பேசுவீர்கள் என்று எண்ணுகிறேன்.

    ReplyDelete
  10. சிவமுருகன். நல்ல ஒப்புநோக்கு. இதனை நீங்களே விரித்து எழுதினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  11. இராகவன். தங்கள் விளக்கம் வழக்கம் போல் நன்கு இனிக்கிறது. நன்றிகள்.

    ReplyDelete
  12. //இப்படியான சாதாரண சொற்களுக்கே இவ்வளவு சக்தி என்றால், இறைவனது திருநாமத்திற்கு எவ்வளவு சக்தி இருக்க வேண்டும்! //
    ஆதிகேசவன், ஜெயலெட்சுமி என்ற திருநாமத்திற்குக் கூட சக்தி இருக்கிறது !
    :)

    வெறும் பெயரில் சக்தி இல்லை ... அதை உணர்ந்து... ஒரு சூழலில் உச்சரிக்கும் போதுதான் அதற்கு சக்தி இருக்கவேண்டும் !

    ReplyDelete
  13. ஆதிகேசவன் என்ற பெயர் எனக்கு முதலில் ஆதிகேசவப்பெருமாளைத் தான் நினைவூட்டுகிறது. ஜெயலக்ஷ்மி என்ற பெயர் எனக்கு முதலில் வெற்றித்திருமகள் என்று சங்ககால நூற்களில் வரும் பெண் தெய்வத்தைத் தான் நினைவூட்டுகிறது. பின்னரே நீங்கள் ஏன் அவற்றைச் சொல்லியிருக்கிறீர்கள் என்று சிந்தித்தப் பின் குற்றம் சாட்டப்பட்டவர்களின் உருவங்கள் நினைவிற்கு வருகின்றன. உண்மை கோவி.கண்ணன் ஐயா. வெறும் பெயர் அவரவர் மனநிலைக்கேற்ப மாறுபட்ட உணர்வுகளைத் தோற்றுவிக்கலாம். சூழலும் மிக முக்கியமே.

    ReplyDelete
  14. அன்புக் குமரா!
    இத்தனை சொல்லுடன் இன்னும் எத்தனை சொல்லையும் ஒரு குழந்தையிடம் சொல்லுங்க! அதற்கு புரியாது; அதன் பொருளை உணரும் வரை! அது போல் ஆண்டவன் நாமத்தை உணர்ந்து சொல்லும் போது; அதன் சக்தியே தனிதான்!அதனால் தான் "சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா" என்றார்கள்.
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  15. வாசி வாசி என்றாலும் நன்றாகத்தானே இருக்கும் .

    குதிரை வண்டிக்காரன் முன்னுக்கு வாங்க முன்னுக்கு வாங்க என்பான் வண்டியில் ஏறியதும். நாம் முன்னுக்கு வருவதில் அவனுக்கு அவ்வளவு அக்கரை. இவைகள் எல்லாம் நல்ல வார்த்தைகள் குமரன் சொல்வது போல்.

    ReplyDelete
  16. கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
    கேட்டவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்
    "கேள்வியே பதிலாக கண்ணன் வந்தான்
    குருடர்களை பார்க்கவைக்கும் பிருந்தாவனம்
    முடவர்களை நடக்கவைக்கும் பிருந்தாவன்ம்"

    உங்கள் பதிவைப் பார்த்ததும் கண்ணதாசனின்
    அமரவரிகள் நினைவுக்கு வந்தது குமரன்

    ReplyDelete
  17. திரு.குமரன். யோகன் பாரீஸ்க்கு ஒரு செய்தி உள்ளது. கொத்ஸ் பதிவுக்கு சென்று பார்க்கச்சொல்லுங்கள்.அவருடைய விளக்கத்தை(கடகம்)திரு. சுஜாதா ஆ.வி யில் குறிப்பிட்டுள்ளார்.

    ReplyDelete
  18. உண்மை தான் யோகன் ஐயா. உணர்ந்து சொல்லுதல் நலம்.

    ReplyDelete
  19. ஆமாம் என்னார் ஐயா. வாசி வாசி என்றாலும் சரி மரா மரா என்றாலும் சரி இரண்டுமே மிக நன்றாகவே இருக்கிறது. பொருள் அறியாமல் இறைவன் பெயரைச் சொன்னாலும் பயனுண்டு என்று தானே சொல்கிறீர்கள்? உண்மை தான்.

    நன்றே சொல்வோம். அதனை இன்றே சொல்வோம்.

    ReplyDelete
  20. நன்றி தி.ரா.ச. கவியரசரின் அருமையான வார்த்தைகளைச் சொன்னதற்கு நன்றி.

    கொத்ஸ் பதிவினை ஏற்கனவே யோகன் ஐயா பார்த்துவிட்டார். சுஜாதா அவர்களின் கட்டுரையை அதற்கு முன்பே அவர் பார்த்துவிட்டு எனக்கு மின்னஞ்சலிலும் சொல்லியிருந்தார். நான் தான் அவர் மின்னஞ்சலை கொத்ஸ் பதிவினைப் பார்த்தபின்பு பார்த்தேன்.

    யோகன் ஐயாவும் பதிவுகள் இடத் தொடங்கிவிட்டார்.

    ReplyDelete
  21. குமரனுக்கு என்ன தடை ?
    வேலுண்டு வினையில்லை !
    மயிலுண்டு பயமில்லை !

    பதிவுகளில் பார்ப்பது அரிதாகிவிட்டதே !

    யாராவது திருப்பரம்குன்றம் செல்பவர்களிடம் சொல்லி குமரன் பெயருக்கு அர்சனை செய்யச் சொல்கிறேன் :))

    தோன்றிய வினைகள் யாவும்
    நொடியினில் மறைந்து போக !

    அன்புடன்.
    ஜி.கே

    ReplyDelete
  22. கோவி. கண்ணன் ஐயா. முடிந்தவரை மற்றவர் பதிவுகளைப் படித்துப் பின்னூட்டங்கள் இட்டுக் கொண்டிருக்கிறேன். அலுவலகத்தில் வேலை அதிகம் ஆகிவிட்டதால் இரண்டு மாதங்கள் எந்தப் பதிவும் இடாமல் இருக்கலாம் என்று முடிவு செய்து இந்த மாதத் தொடக்கத்திலிருந்து எந்தப் பதிவும் இடவில்லை. மற்றபடி வேறு எந்தக் காரணமும் இல்லை.

    எந்த வினையும் இல்லை; எந்தப் பயமும் இல்லை.

    நீங்கள் சொன்னது போல் வேலுண்டு வினை இல்லை; மயிலுண்டு பயமில்லை.

    என் பெயருக்கு அர்ச்சனை செய்யச் சொல்லப் போவதாகச் சொன்னதற்கு நன்றி :-)

    உங்கள் வாழ்த்துக்கும் (வரத்துக்கும்?!) நன்றி. :-)

    ReplyDelete
  23. உங்க எல்லார் மாதிரியும் எனக்கு எழுத வராது.அவ்வளவு தமிழ் ஞானம் இல்லை. என்றாலும் "சொல்லச் சொல்ல இனிக்குதடா, முருகா" என்று பாடியதைப் போல் இறைவன் பெயர் சொல்லச் சொல்ல இனிக்கும் என்பது அதை உணர்ந்தவர்களால் தான் புரிந்து கொள்ள முடியும். சிவானந்தரின் கருத்துக்களை வெளி இட்டதற்கு நன்றி.

    ReplyDelete
  24. கீதா அம்மா. நீங்க ரொம்ப பணிவோடு இதைச் சொல்கிறீர்கள். ஆனால் உங்கள் பதிவுகள் சிலவற்றை அண்மையில் படித்த போது உங்கள் எழுத்துவண்மை நன்கு புலப்படுகிறது. தங்கள் அன்பானச் சொற்களுக்கு நன்றி.

    ஆமாம். நீங்கள் சொல்வது சரி. சொல்லச் சொல்ல இனிக்கும் இறைநாமங்களின் சுவையைச் சொல்லிப்பார்த்தால் தான் தெரியும்.

    ReplyDelete
  25. குமரன்,
    நல்ல பதிவு.


    //"ரஸகுல்லா" என்று சொன்னால் நாக்கில் நீர் சுரக்கிறது.//

    ரஸகுல்லா என்றால் என்ன பொருள்?
    நான் இதுவரை கேள்விப்படாத சொல் இது.

    ReplyDelete
  26. நன்றி வெற்றி. ரசகுல்லா என்பது வங்காளத்தின் மிக பிரபலமான ஒரு இனிப்பு வகை. தமிழகத்தில் இனிப்புக் கடைகளிலும் தற்போது கிடைக்கிறது. கனடாவிலும் இந்தியக் கடைகளில் தேடிப் பாருங்கள். கிடைக்கும். இங்கே அமெரிக்காவிலும் கிடைக்கிறது. நேற்று தான் ஒரு டப்பாவைத் நானும் என் மகளும் சேர்ந்து தின்று முடித்தோம். :-) அருமையான சுவை.

    ReplyDelete
  27. ரஸகுல்லா எனக்கு அவ்வளவாக பிடிகாத இனிப்பு குமரன். :-)

    ReplyDelete
  28. குறும்பன். :-) ரசகுல்லா பிடிக்காதா? இல்லை ரஸகுல்லா பிடிக்காதா? :-)

    எனக்கும் இனிப்பு அவ்வளவாகப் பிடிக்காது என்று தான் சொல்வேன். ஆனால் அண்மையில் ரசகுல்லா மட்டும் விரும்பிச் சாப்பிடத் தொடங்கியிருக்கிறேன். :-)

    ReplyDelete
  29. குமரன்,

    //ரசகுல்லா என்பது வங்காளத்தின் மிக பிரபலமான ஒரு இனிப்பு வகை. தமிழகத்தில் இனிப்புக் கடைகளிலும் தற்போது கிடைக்கிறது. கனடாவிலும் இந்தியக் கடைகளில் தேடிப் பாருங்கள். கிடைக்கும். இங்கே அமெரிக்காவிலும் கிடைக்கிறது.//

    மிக்க நன்றி.

    ReplyDelete