Wednesday, July 05, 2006
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!
அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா!
ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா!
இருமுடிப் பிரியனே சரணம் ஐயப்பா!
ஈசன் திருமகனே சரணம் ஐயப்பா!
உய்வதற்கொரு வழியே சரணம் ஐயப்பா!
ஊழ்வினை அறுப்பவனே சரணம் ஐயப்பா!
எங்கும் நிறைந்தவனே சரணம் ஐயப்பா!
ஏழுலகாள்பவனே சரணம் ஐயப்பா!
ஐயம் நீக்கிடுவாய் சரணம் ஐயப்பா!
ஒன்றாய் நின்றவனே சரணம் ஐயப்பா!
ஓங்காரப் பொருளே சரணம் ஐயப்பா!
ஒளவியம் தனைத் தீர்ப்பாய் சரணம் ஐயப்பா!
அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் என்னைப் போன்ற தமிழ் வலைப்பதிவாளர்கள் எத்தனையோ குற்றங்களைச் செய்து கொண்டிருக்கிறோம். ஒன்றைச் சொல்ல விரும்பி வேறொன்றைச் சொல்கிறோம். உன் கருணையைப் பற்றியே ஐயம் கொள்கிறோம். உன் பாரபட்சம் இல்லாத தன்மையைத் தவறாகப் புரிந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறோம். எத்தனையோ விதங்களில் உன்னை இழித்தும் பழித்தும் பேசுகிறோம். இப்படி நாங்கள் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் மன்னித்துக் காத்து ரக்ஷிக்க வேணும் அருள் தரும் பொன்னு பதினெட்டாம்படி ஐயன் ஐயப்பசாமியே சரணம் ஐயப்பா.
***
ஒளவியம்: பொறாமை, தீவினை
ஸ்வாமி சரணம் !
ReplyDeleteஅறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை*
ReplyDeleteசிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே*
இறைவா நீதாராய் பறையேலோர் எம்பாவாய்.
சிறுபேர் அழைத்தல் தவறல்ல!
ReplyDeleteசிறுமைப்படுத்துவதுதான் தவறு.
நீங்கள் அதைச் செய்யவில்லை, செல்வன்!
வைதாரையும் வாழ வைப்போனின் தம்பியே!
சரணம் ஐயப்பா!
சரணம்
ReplyDeleteஸ்வாமியே சரணம் ஐயப்பா
ReplyDeleteஐயப்பா! ஐயப்பா! சபரி மலை ஐயப்பா!
ReplyDeleteபாரப்பா! பாரப்பா! பக்தர்களை பாரப்பா!
பம்பையில் நீராடி, பதினெட்டாம் படியேறி நாம் உன்னைக் காணவந்தோம்! (2)
நெய்த்தீபம் காட்டி தரிசனம்தான்..ஓ...
பார்த்திடக் கிடைத்திடும் மோட்சமும்தான்...ஓ..
(சரணங்கள் இரண்டும் நாளை, நான் எழுதி வைத்ததிலிருந்து பார்த்து பின்னூட்ட மிடுகிறேன்)
ஸ்வாமி சரணம் மணியன் ஐயா.
ReplyDeleteஅதே தான் செல்வன். அறியாத பிள்ளைகளோம் 'அன்பினாலோ வெறுப்பினாலோ' உன்னைச் 'சிறு பேர் அழைத்தாலோ சிறுமைப் படுத்தினாலோ' சீறி அருளாதே என்று தான் வேண்டுகிறேன்.
ReplyDeleteஎஸ்.கே. சிறுபேர் அழைத்தாலும் சரி. சிறுமைப்படுத்தினாலும் சரி. எல்லாமே ஒரு நிறை தானே ஐயனுக்கு. நாம் சூரியனை நோக்கி எச்சில் உமிழ்ந்தால் அது சூரியனைக் களங்கப்படுத்திவிடுமா என்ன? அது மீண்டும் உமிழ்ந்தவர் மேல் அன்றோ விழும்?!
ReplyDeleteவைதாரையும் வாழவைப்போன் 'தம்பியே' என்று சொல்லிவிட்டீர்கள்? :-) அண்ணனைப் போலத் தானே இந்த ஹரிஹரசுதனும். வைதாரையும் வாழவைப்பவன் இவன்.
ஸ்வாமி சரணம் சிவா அண்ணா.
ReplyDeleteஸ்வாமி சரணம் 'எங்கள் நண்பன்' சரவணன்.
ReplyDeleteசிபி. பாடல் நன்றாக இருக்கிறது. விரைவில் முழுப்பாடலையும் இடவும்.
ReplyDeleteசாமி சரணம்
ReplyDeleteஐயப்ப சரணம்
சாமியே ஐயப்போ...
ஐயப்போ சாமியே!
கள்ளும் முள்ளூம்
காலுக்கு மெத்தை...!
கள்ளும் முள்ளூம்
ReplyDeleteகாலுக்கு மெத்தை...! //
அது 'கள்ளும் முள்ளும்' இல்லை
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை.
வி. க. எங்காவது தவறாகச் சொல்வாரா!!!
ReplyDeleteவிரத காலத்தில் கள்ளையும் முள்ளாக நினைத்துக் காலின் கீழே போட்டு மிதிக்கும் அளவுக்கு உறுதி பூண்டவர் ஐயப்ப பக்தர்கள் என்பதை அப்படித் திரித்துச் சொல்லியிருக்கிறார்!
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!
வி. க. எங்காவது தவறாகச் சொல்வாரா!!!
ReplyDeleteவிரத காலத்தில் கள்ளையும் முள்ளாக நினைத்துக் காலின் கீழே போட்டு மிதிக்கும் அளவுக்கு உறுதி பூண்டவர் ஐயப்ப பக்தர்கள் என்பதை அப்படித் திரித்துச் சொல்லியிருக்கிறார்!
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!
//அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் //
ReplyDeleteஇந்து மதத்தில் மற்ற மதங்களைப் போல் பாவ மண்ணிப்பு உண்டா என்பதற்கு ஐயப்பன் சரியான உதாரணமாக இருப்பார் போலும்
கோவி.கண்ணன். பதிவு போட்ட கையோட இங்கே வந்து பின்னூட்டம் போட்டீங்களா? உங்க பதிவைப் படிச்சிட்டேன். பின்னூட்டம் இனிமே தான் போடணும். :-)
ReplyDeleteவி.கறுப்பு,
ReplyDeleteகள்ளு - குடிக்கிற கள்ளு
முள்ளு - மீன் முள்ளா ?
ஏதோ திள்ளு முள்ளுன்னு மட்டும் தெரியுது :)
விடாது கறுப்பு அண்ணா. நீங்கள் வேண்டுமென்றே கள்ளு என்று போடவில்லை என்று நம்புகிறேன். தட்டச்சுப் பிழைதானே?!
ReplyDeleteஎஸ்.கே. கள்ளும் முள்ளும் காலுக்கு மெத்தை என்பதற்கு உங்கள் விளக்கம் நன்றாக இருக்கிறது. :-)
ReplyDeleteகோவி.கண்ணன் ஐயா. நம் மதத்தில் தான் பாவமன்னிப்பு எப்போதும் உண்டே. பிராயச்சித்தங்கள் என்பவை பாவ மன்னிப்புகள் தானே. அதுவுமின்றி எல்லாவித பாவங்களையும் இறைவன் மன்னிப்பான் மனமிறைஞ்சி வழிபட்டால் என்ற நம்பிக்கையும் உண்டு தானே.
ReplyDeleteகோவி.கண்ணன். ஏதோ விடாது கறுப்பு அண்ணன் தான் தட்டச்சுப் பிழையா கள்ளுன்னு எழுதிட்டார். நீங்களும் திள்ளு முள்ளுன்னு அடிக்கிறீங்களே. அது தில்லுமுல்லு தானே?! :-)
ReplyDelete//கோவி.கண்ணன். பதிவு போட்ட கையோட இங்கே வந்து பின்னூட்டம் போட்டீங்களா? உங்க பதிவைப் படிச்சிட்டேன். பின்னூட்டம் இனிமே தான் போடணும். :-) //
ReplyDeleteநன்று ... கூடவே இந்த பதிவை படித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
http://govikannan.blogspot.com/2006/07/blog-post_03.html
//நீங்களும் திள்ளு முள்ளுன்னு அடிக்கிறீங்களே. அது தில்லுமுல்லு தானே?! :-) //
ReplyDeleteதில்லு முல்லு -ல் ஒரு தில்லுமுல்லு தான் 'திள்ளு முள்ளு'
சரணம் ஐயப்பா!
ReplyDeleteகுமரன்,
தெரிந்து கொள்வதற்காக இவற்றை கேட்கிறேன்.
1.ஐயப்பன் என்ற கடவுளுக்கு ஏன் ஆண் பெண் என்ற பாரபட்சம்?
2.பெண்கள் செல்வதால் ஐயப்பன் கோபம் கொள்வார் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளுகிறீர்களா?
3.மாதவிடாய் என்பது கடவுளே பெண்களுக்கு அளித்த ஒரு உடற்கூறு .அதை கடவுளே தீட்டு என நினைப்பது ஏன்?
(ஒரு கிறிஸ்தவன் உனக்கு இதை கேட்க அருகதை இல்லை என்று நீங்கள் சொல்லமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன்)
கோவி.கண்ணன். மரணத்துடன் ஒரு நேருக்கு நேர் பதிவை விரைவில் படிக்கிறேன்.
ReplyDeleteஜோ. நல்ல கேள்விகள். கட்டாயம் கிறிஸ்தவராய் இருப்பவர்களும் கேட்கத் தோன்றினால் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டிய கேள்விகள். ஏனெனில் ஐயப்பனின் சபரிமலையும் வேளாங்கண்ணியைப் போல் நாகூர் தர்காவைப் போல் மூன்று மதத்தவர்களும் சென்று வழிபடும் கோவிலாகத் தான் இருக்கிறது.
ReplyDelete1. ஐயப்பனுக்கு ஆண் பெண் என்ற பாரபட்சம் இல்லை. எல்லா ஐயப்பன் கோவிலுக்கும் (சபரிமலை உட்பட) பெண்களும் சென்று வழிபடத் தான் செய்கிறார்கள். பெண்களுக்கு அனுமதி இல்லை என்பது தவறான கருத்து. அது உண்மையில்லை. செல்வனின் பதிவில் எஸ்.கே. விளக்கமாகச் சொல்லியிருக்கிறார். அந்தப் பதிவையும் கொஞ்சம் பாருங்கள். மேலும் கேள்விகள் இருந்தால் தயங்காமல் கேளுங்கள். எனக்குத் தெரியாவிடில் தெரிந்தவர்கள் சொல்லுவார்கள்.
செல்வனின் பதிவு: http://holyape.blogspot.com/2006/07/5.html
2. பெண்களும் சபரிமலைக்குச் செல்கிறார்கள்; அதற்குத் தடை இல்லை என்று தான் சொல்கிறேன். இதுவரைப் பெண்கள் சபரிமலைக்குச் சென்றதால் ஐயப்பன் சினம் கொண்டதாகத் தெரியவில்லை. சினமும் கொள்ளமாட்டார் என்று தான் சொல்கிறேன்.
3. மாதவிடாய் என்பது தீட்டாக இந்து மதத்தில் பல பிரிவுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. அது சபரிமலையில் மட்டும் தீட்டாகக் கருதப்படவில்லை. ஆனால் அதே நேரத்தில் எத்தனையோ இந்து சமயப் பிரிவுகளில் பெண்களின் மாதவிடாய் தீட்டாகக் கருதப்படவில்லை. அது இப்போது நம்பிக்கை பால் சேர்ந்ததாக இருக்கிறது. சில பிரிவுகளில் தீட்டாகக் கருதப்பட்டும் சில பிரிவுகளில் தீட்டாகக் கருதப்படாமலும் இருப்பதால் இறைவனே மாதவிடாயைத் தீட்டாகக் கருதுவதாகச் சொல்லமுடியாது. இது மத நம்பிக்கைகளில் ஒன்று.
இராகவன் சொல்வதைப் போல் 'கறையானா நெருப்பைத் தின்ன முடியும்?' என்று கேட்டு மாதவிடாயில் இருக்கும் பெண்களையும் கோவிலுக்குள் (ஏன் வீட்டில் இருக்கும் பூஜையறைக்குள்) அனுமதிக்க முடியும். ஆனால் அது காலாவட்டத்தில் தான் நடக்குமே ஒழிய ஒரே நாளில் மாறாது. அப்படி மாற்றவேண்டுமெனில் பெரும் செல்வாக்கு பெற்ற ஒரு மனிதர் வரவேண்டும். அப்படி வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது. தீட்டாகக் கருதப்பட்டத் தாழ்த்தப்பட்டவர்கள் 'திருக்குலத்தார்' என்று பெயரிடப்பட்டு கோவிலுக்குள் வந்து வழிபடச் செய்திருக்கிறார் இராமானுஜர்.
ஜோவின் கேள்விகள் எனக்காக மட்டும் என்று எண்ணவில்லை. அவரும் அப்படி நினைக்கமாட்டார் என்று எண்ணுகிறேன். அதனால் யார் வேண்டுமானாலும் அவரின் கேள்விகளுக்கு விடையளிக்கலாம். தயை செய்து விடை சொல்லுங்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
குமரன்,
ReplyDeleteவிளக்கங்களுக்கு மிக்க நன்றி .நீங்கள் குறிப்பிட்டதைப் போல உங்களைப் போல சரியான கோணத்தில் என் கேள்விகளை எடுத்துக்கொண்டு அவர்கள் பார்வையில் பதில் அளிப்பதை நானும் எதிர் பார்க்கிறேன்.
ஜோ
ReplyDeleteகுமரன் சொன்னபடி ஐயப்பன் கோயிலில் பெண்கள் போக தடை இல்லை.எனக்கு இது அந்த பதிவு போட்ட பின் தான் தெரியும்.பலரை போல் நானும் இத்தனை நாளாக பெண்கள் சபரிமலையில் அனுமதிக்கப்படுவதில்லை என்றே எண்ணியிருந்தேன்.எஸ்.கே சொல்லித்தான் விவரமே தெரியும்.
முதல் இரண்டு கேள்விக்கும் குமரன் பதில் சொன்னார்.மூன்றாவது கேள்விக்கு மட்டும் பதில் சொல்கிறேன்.
பூஜைகளில் இருவகை உண்டு என வேதம் சொல்கிறது.(சமஸ்கிருத பெயர்கள் மறந்துவிட்டது.நாளை இடுகிறேன்)ஒன்று முறைப்படி,சாஸ்திரப்படி செய்ய வேண்டிய பூஜை.இதில் பெண்களுக்கு மட்டுமல்ல,ஆண்களுக்கே கட்டுப்பாடுகள் உண்டு.அதாவது திருமண சடங்கு,கும்பாபிஷேகம்,யாகம் போன்றவற்றை நடத்த அனைவருக்கும் உரிமை இல்லை.சில கட்டுப்பாடுகள் உண்டு.
இதை விட சிறப்பான பூஜை முறை ஆத்மஹாரம் என்பது.இதன்படி யார் வேண்டுமானாலும் பூஜை செய்யலாம்.எந்த கட்டுப்பாடும் கிடையாது.ஆண்,பெண்,மாதவிலக்கான பெண்,குளிக்காத ஆண்,நாள் கிழமை என எதுவும் இதற்கு கிடையாது.ஆற்றங்கரை மரத்தடி பிள்ளையாரை இந்த முறையில் தான் அனைவரும் கும்பிடுகின்றனர்.கல்யாணமே கூட இந்த முறையில் ஐயர் இல்லாமல்,வேதம் ஓதாமல் செய்து கொள்ளலாம்.(காந்தர்வ விவாகம் என்பார்கள்)
ஒவ்வொரு பூஜை முறைக்கும் ஒரு பெயர்.அந்த பூஜை முறைதான் சிறப்பு,இது சிறப்பில்லை என எதுவும் கிடையாது.மாதவிடாய் இருக்கும் பெண் பூஜை செய்தால் அது ஆத்மஹாரம் எனப்படும்.பக்திதான் முக்கியம்.பூஜை முறை அல்ல.
திருப்பாவை பாடிய ஆண்டாள் மார்கழி மாதத்தின் 30 நாளும் வில்லிபுத்தூர் கோயிலுக்கு சென்று சாமி கும்பிடத்தான் செய்தாள்.30 நாளுக்கும் நாள் ஒன்று விதம் ஒரு பாட்டு இருக்கிறது.தான் சூடிய மாலையை தான் பெருமாளுக்கு போட்டு அழகு பார்த்தாள்.
செல்வன் மிகச்சரியான சமயத்தில் எடுத்துக் குடுத்தீர்கள். முப்பது பாட்டும் பாடி முப்பது நாட்களும் திருக்கோயிலுக்குப் போனாளே ஆண்டால். தான் சூடி அந்த மாலையை தான் கூடிய நாதனுக்கும் படைத்தாளே. அப்பொழுது இல்லாததே தீட்டு. ஏதோ ஆதியிலிருந்தே சில வழக்கங்கள் இருந்ததாக நினைப்பது மிகத் தவறு.
ReplyDeleteஐயன் ஐயப்பன் பேதம் பார்ப்பதில்லை. என்பதே உண்மை. நான் முன்பே சொன்னது போல மீண்டும் சொல்ல விரும்புவது இதுதான். சீறாப்புராணத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறது. "வரைதடத்தைக் கொதுக்கினங்கள் அழிப்பதென". இது எப்படி நடவாதோ...அங்ஙனமே தீட்டும்.
தங்கள் கருத்துகளுக்கு நன்றி செல்வன் & இராகவன்.
ReplyDeleteஸ்வாமி சரணம் !
ReplyDeleteகுமரா!
ReplyDeleteஎனக்கு ஒரு சந்தேகம் ஐயப்பனும்;ஐயனாரும் ஒரே தெய்வமா??? எங்கள் ஈழத்தில் ஒருவர் தான் என்றே நினைக்கிறார்கள் போல் உள்ளது.
அடுத்து ;எந்த மாந்தரும்; நம்பிக்கையுடன்;இறையாலயங்களில் வழிபட வந்தால்,அதைத் தடுப்பதே! "தெய்வ குற்றம்" என நான் கருதுகிறேன். அவன் படைப்பே அனைத்தும் என்று நம்பும் நாம்
குறுகிய சாதி,மத, இன,மொழி;வசதி;பால் அடிப்படையில் மனிதரைப் பிரித்து; நீ இந்த இந்த இடங்களில் தான் நின்று, வழிபட வேண்டுமென்பது; அதற்கு வேத சாத்திரத்தில்; ஆகமத்தில் கூறியிருக்கெனச் சப்பை கட்டுவது.மிகக் கொடுமை; அவமானமும் கூட. ஆண்டவன் வாய்திறந்து பேசுவதில்லை என்பதால்; சிலர் அதை ஒரு வாய்ப்பாக வைத்துச் செய்யும் தகடு தத்தங்களை. நல்லறிவுசால் மக்கள் மாற்ற முற்படவேண்டும். இல்லையேல் வரும்கால இளைஞர் சமுதாயம்; இறைவழிபாட்டிலிருந்து விலகுவதைத் தவிர்க்க முடியாது.
நடக்கும் கொடுமைகள்; முதியோராகிய எங்கள் மனத்தில் கூட "சீ" இப்படியுமா?? என்று வெறுப்பை ஏர்படுத்துகிறது.
ஐயப்பன் நல்ல புத்தியையும்; வஞ்சகமும்,சுயலாபமும் கருதாத மனநிலையை சம்பந்தப்பட்டவர்களுக்குத்
தரட்டும்.
சரணம் சரணம் ஐயப்பா!
யோகன் பாரிஸ்
ஸ்வாமி சரணம் சிவமுருகன்
ReplyDeleteஆமாம் யோகன் ஐயா. பலரும் கருதுவது அது தான் - ஐயனாரும் ஐயப்பனும் ஒன்றே என்பது. வரலாற்றடியானச் (வரலாற்றுப்பூர்வமானச்) சான்றுகளும் அதனையே சுட்டுகின்றன. ஆனால் வெளிப்பார்வைக்கு ஐயனார் நாட்டார் தெய்வமாகவும் ஐயப்பன் நிறுவனப்படுத்தப்பட்ட இந்து மதத் தெய்வமாகவும் தெரிவதால் இந்த ஒற்றுமையை பலரும் அறிவதில்லை.
ReplyDeleteஇறை வழிபாட்டு முறைகள் பற்றியத் தங்கள் கருத்தினை ஏற்றுக் கொள்கிறேன் ஐயா.
சபரிமலை சர்ச்சை நேரத்தில் தங்களது பதிவு வரவேற்க வேண்டிய ஒன்றாகும்.
ReplyDeleteஅர்ஜுன் சம்பத்தின் கவிதை
சபரிமலை சர்ச்சையில்....ஒன்று
சந்தடி சாக்கில்தலையிட்டு
சமத்துவ கவிதை வடிக்கிறது
ஆன்மிக ஆடுகள் முட்டிக்கொள்ளும் போது
நாத்தக நரி ரத்தம்குடிக்க பார்க்கின்றது
ஐயப்பன் வரலாற்றை அவதூராய் சித்தரிக்கும்
அற்பர்களை எச்சரிக்கின்றோம்.
என்ற தலைப்பில் இன்றைய தினமலரில் கூறியுள்ளார்
என்னார் ஐயா. தங்கள் கருத்திற்கும் தினமலரில் வந்திருக்கும் எச்சரிக்கையை இங்கே இட்டதற்கும் நன்றி. நாம் யாருக்கும் எச்சரிக்கை இட வேண்டிய தேவை இல்லை என்று தான் எண்ணுகிறேன் ஐயா. தவறாகப் புரிந்து கொண்டவர்கள் தவறாகப் பேசிக் கொண்டே தான் இருப்பார்கள். அவர்கள் நம் நண்பர்கள், சக வலைப்பதிவாளர்கள் என்பதால் அவர்களுக்காகவும் சேர்ந்து இங்கே வேண்டுதல் வைக்கப்பட்டது. அவ்வளவே.
ReplyDeleteஉங்களை நவீன இயேசுநாதர் என்று ஒருவர் எழுதியிருக்கிறாரே. பார்த்தீர்களா?
ReplyDeleteபார்த்தேன் அனானிமஸ் நண்பரே. இயேசு நாதர் மற்றவர் பாவங்களை தான் ஏற்றுக் கொண்டு அவற்றின் பயனை அனுபவித்தார். நான் மற்றவர் பாவங்களையெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. நான் செய்த, செய்யும் பாவங்களே கணக்கில்லாமல் இருக்கின்றன. இதில் மற்றவர் பாவங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு அனுபவிக்க இயலாது. நான் செய்தது என் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்ட போதே என் நண்பர்கள், சக வலைப்பதிவாளர்கள் இவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்யும் பிழைகளுக்கான மன்னிப்பே. இயேசுநாதர் என்ன செய்தார் என்ற சரியான புரிதல் இல்லாததால் தான் நான் நவீன இயேசுநாதரைப் போல் நடந்து கொள்வதாக அந்த நண்பர் சொல்லிவிட்டார். விட்டுத் தள்ளுங்கள்.
ReplyDeleteசிறியன் செய்த தட்டச்சு பிழையை மன்னிக்கக் கூடாதா?!!!
ReplyDelete