Friday, January 13, 2006

113: பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!!!

இன்று பொங்கல் திருநாள். பழந்தமிழர் தங்கள் புது வருடத்தை இன்று தான் தொடங்கினர் என்று படித்திருக்கிறேன். அதனால் எல்லாருக்கும் பொங்கல் வாழ்த்துகளுடன் புத்தாண்டு வாழ்த்துகளும்.

பூமிக்குத் தென் திசையில் பகலவன் பயணிக்கும் ஆறு மாதங்களும் (ஆடி முதல் மார்கழி வரை) தென் வழி (தக்ஷிணாயனம்) என்பர். கதிரவன் பூமிக்கு வட திசையில் பயனிக்கத் தொடங்கும் வட வழியின் (உத்திராயனம்) முதல் நாள் இன்று. வட வழி ஆறு மாதங்களும் (தை முதல் ஆனி வரை) புனிதமான மாதங்களாகச் சொல்லுவர். அதில் முதல் நாட்களை நன்றி சொல்லும் நாட்களாக நம் முன்னோர் வைத்திருக்கின்றனர். கதிர்கள் நன்கு முற்றி வளர்வதற்கு ஒளிவீசி அருள் செய்யும் கதிரவனை நன்றி கூறி வணங்குவதாகப் பொங்கல் திருநாள் முதல் நாளில் கொண்டாடப் படுகிறது. உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி சொல்லி வணங்குவதாக மாட்டு பொங்கல் இரண்டாம் நாளில் வருகிறது. உலகப் பொதுமறை கொடுத்து உதவிய ஐயன் வள்ளுவனை நினைத்து வணங்குவதாக மூன்றாம் நாள் வருகிறது. எப்போதும் நம்முடன் இருந்து உதவும் நம் உற்றார்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி சொல்லும் விதமாகக் காணும் பொங்கல் வருகிறது.

எல்லா விதங்களிலும் மிக சிறந்த விழாவாக பொங்கல் திருநாள் உள்ளது. அதனை எல்லோரும் மகிழ்ச்சியாக எந்த விதமான பாகுபாடும் இன்றிக் கொண்டாடி மகிழ்வோம்.

பொங்கலோ பொங்கல் என்னும் புண்ணிய கீதம் இங்கு
எங்குமே எழுகின்றது; ஏழையர் இன்னல் தீர
மங்கலம் எங்கும் தங்க மானிடர் அன்பு ஓங்க
பொங்கலைப் போற்றுகின்றோம்! புதியதோர் ஆண்டே வருக!

பொங்கலோ பொங்கல்!!!

29 comments:

  1. குமரன்,
    பொங்கல் வாழ்த்துகள்.
    நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.

    அன்புடன்,
    கல்வெட்டு (எ) பலூன் மாமா

    ReplyDelete
  2. மிக்க நன்றி கல்வெட்டு (எ) பலூன் மாமா. உங்களுக்கும் உங்கள் நண்பர்கள் குடும்பத்தினர் நண்பர்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. மிக்க நன்றி சதயம். வீட்டுக்காரம்மாகிட்டயும் புள்ளகிட்டயும் நீங்க விசாரிச்சதாச் சொல்றேன். ஆனால் என்கிட்ட எந்த குட்டியும் இல்லியே. நாய்க்குட்டி, பூனைக்குட்டிய சொல்றேங்க.

    மங்கலம் என்பது(வும்) சரி என்று தான் நினைக்கிறேன் சதயம். எனக்குத் தெரிந்தவரை அது வடமொழிச் சொல். வடமொழியில் ல ள வித்தியாசம் இல்லை. அதனால் எந்த ல/ளவும் பயன்படுத்தலாம்.

    ஆஹா. குமரன் தப்பா எழுதியிருக்காரேங்கற பாசத்துல சொல்றீங்கன்னு தெரியுது. அந்தப் பாசத்துக்கு ரொம்ப நன்றி.

    ReplyDelete
  4. குமரன், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளமார்ந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. நன்றி இராகவன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. குமரன்,

    தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும்.

    அன்புடன்
    நண்பன்

    ReplyDelete
  7. நன்றி நண்பன் என்கிற ஷாஜஹான். (பேரச் சரியா சொல்றேனா?) உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    கீதா

    ReplyDelete
  9. நன்றி கீதா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. Kumaran,
    Ungalukkum ungal kudumbatharukkum (privacy karuthi peyar veliyidavillai), engal iniya Pongal, Mattu Pongal, Valluvar Thinam, Kanum Pongal Nal Vazhthukkal.

    W/Lv,
    Kumaresh & Famil

    ReplyDelete
  11. நன்றி குமரேஷ். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    மாட்டுப் பொங்கல் உங்கள் வீட்டில் கொண்டாடுவார்களா? எங்கள் வீட்டில் இல்லை. :-)

    ReplyDelete
  12. குமரன் உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  13. நன்றி முத்துகுமரன்

    ReplyDelete
  14. பொங்கல் வாழ்த்துகள் Kumaran.

    ReplyDelete
  15. நன்றி கார்த்திக் ஜெயந்த்

    ReplyDelete
  16. Kumaran ,
    I came to know about u from Thulasi Gopals's blog link.me i am in chiacago now.
    thanks for u r wishes and visiting my blog.

    ReplyDelete
  17. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

    வாழிய நலமே!

    ReplyDelete
  18. இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. குமரன் இந்த பதிவைத்தான் சொன்னிங்களா... புதுசா வேற பதிவு போட்டுட்டார் போலன்னு நெனச்சிட்டேன்.

    இத நான் காலையிலயே படிச்சிட்டேன்..

    போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல்.. இந்த வரிசை தானே எப்பவும் வரும். :)

    ReplyDelete
  20. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. எனது இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    தெக்கிக்காட்டான்.

    ReplyDelete
  22. ரொம்ப நன்றி மூர்த்தி அண்ணா, ஞான வெட்டியான் ஐயா, சிங், தெக்கிக்காட்டான். உங்கள் அனைவருக்கும் மனம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளும் பொங்கல் நல்வாழ்த்துகளும்.

    ReplyDelete
  23. அன்பு நண்பர் குமரனுக்கு, உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்க்கும், குட்டி பாப்பாவுக்கும் என் குடும்பத்தின் பொங்கல் வாழ்த்துக்கள். புது போட்டா போட்டிருக்கிய! அம்சமா இருக்கு.

    ReplyDelete
  24. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. உங்களுக்கும், குடும்பத்தார், மற்றும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    அன்புடன்
    பரஞ்சோதி

    ReplyDelete
  26. ரொம்ப நன்றி சிவா, மணியன், பரஞ்சோதி. உங்கள் அனைவருக்கும் மனம் கனிந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  27. நன்றி கார்த்திக் ஜெயந்த். அடிக்கடி வந்து பார்த்துப் படித்துக் கருத்தினைச் சொல்லிவிட்டுப் போங்க.

    ReplyDelete
  28. ஆமாம் கீதா. இந்தப் பதிவைத் தான் சொன்னேன். :-) ஆமாம். நீங்கள் சொன்ன வரிசை தான் எப்பவும் வரும்.

    ReplyDelete
  29. புது புகைப்படம் பிடித்திருக்கிறதா சிவா. போடுவதற்கு முன் கொஞ்சம் யோசனையாகத் தான் இருந்தது.

    ReplyDelete