இன்னைக்கு ஸரஸ்வதி பூஜைன்னு சொன்னாங்க. அதான் ஸரஸ்வதி தேவியைப் பத்தி நம்ம தமிழ் புலவர் ஒருத்தர் பாடின பாட்டை இங்க பார்க்கலாம்ன்னு. பாட்டு கஷ்டமா இருக்குமோன்னு பாக்குறீங்களா? அர்த்தம் சொல்லிடுவோம்ல.
வெண் தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்(து)
தண்டாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவை கொள் கரும்பே சகல கலா வல்லியே
குமரகுருபரர் எழுதுனதுங்க இது. அவசரப்படாதீங்க...அர்த்தமும் சொல்லிட்றேன்.
வெண் தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்(து)தண்டாமரைக்குத் தகாது கொலோ - அம்மா சகல கலா வல்லியே! என்னம்மா நீ வெள்ள தாமரைபூ மேல மட்டும் தான் உன்னோட காலை வைப்பியா? என் மனசும் வெள்ளை உள்ளம் தாம்மா. கொஞ்சம் அதிலெயும் உன் காலை வைக்கக் கூடாதா?
சகம் ஏழும் அளித்து உண்டான் உறங்க - நாராயணன் இந்த ஏழு உலகத்தையும் காத்து, எங்கே என்னைப் போல உள்ளவங்க இந்த உலகத்தை கெடுத்திடுவாங்களோன்னு பயந்து எல்லா உலகத்தையும் முழுங்கிட்டு உண்ட களைப்பு தீர பாற்கடலுக்கு தூங்க போயிட்டாரு.
ஒழித்தான் பித்தாக - யப்பா நாராயணா...உம்ம தொழில் உலகத்த காப்பாத்துறது மட்டும் தான்...அழிக்கிறது என் வேலை..இப்படி நீர் உலகத்த முழுங்கிட்டு போய் தூங்கலாமான்னு கவலப்பட்டு கவலப்பட்டு சிவனாருக்கு பைத்தியமே புடிச்சுருச்சு.
உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவை கொள் கரும்பே - இதையெல்லாம் பார்த்துட்டு உங்க புருஷன் பிரம்ம தேவர், நாம இந்த உலகத்தை எல்லாம் திரும்பவும் படைச்சுடலாம்ன்னு ஆரம்பிக்கிறப்ப அவரோட வாயில தித்திக்கும் கரும்பா இனிக்கிறியாமே
சகல கலா வல்லியே - அம்மா சகல கலா வல்லி...ஏன் நீ கரும்பா தித்திக்கிறேன்னு எனக்கு தெரியும். நீ தான் எல்லா கலைகளும் அறிந்தவள் ஆச்சே...உன் துணை இருந்தாத் தானே உங்க புருஷன் உலகத்தை படைக்கும் கலைய தெரிஞ்சிக்க முடியும். அதான் உங்களைப் போட்டு மென்னுக்கிட்டு இருக்கிறாரு.
பின்குறிப்பு: புராணம் சொல்லும் செய்திகள் இவை. ஸரஸ்வதி தேவி பிரம்ம தேவரின் நாக்கில் நிலையாக இருக்கிறாள். சிவபெருமானுக்கு 'பித்தன்'ன்னு ஒரு பெயர் உண்டு. பெருமாள் உலகம் அழியும் காலத்துல எல்லாத்தையும் உண்டு சிறுபிள்ளை வடிவத்தில ஆலிலையில தூங்குவார். அவர் பாற்கடல்ல தூங்குறது தான் உங்களுக்கு தெரியுமே. இந்த எல்லா செய்திகளையும் வச்சிக்கிட்டுத் தான் நம்ம குமரகுருபரர் இந்த பாட்டை எழுதியிருக்கிறார் போல.
குமரன். நல்ல பேச்சு நடையில் பொருள் எழுதியிருக்கிறீர்கள். மிகவும் நன்றாக இருக்கிறது. சரஸ்வதி பூஜையை நியாபக படுத்தியதற்க்கு நன்றி. உங்களால சீக்கிரம் நிறைய புராணம் கத்துக்குவோம் போல. நன்றி.
ReplyDeleteUmmakum Sivavukum, Kalvi annayin arrul endrum nillaithu irruku yenathu venduthalgal.
ReplyDeleteAnbudan,
Nattu
சிவா, நடராஜன், நன்றிகள்.
ReplyDeleteSaraswathyya patri pathidavudan ondru ninaivukku varugirathu.Puraanangal padi saraswathyyin kanavar brahma.aanal naan engho padithathu.unmaiyil saraswathyyin thandaithaan brahma.
ReplyDeleteidhu unmaiya?
Nanri.
Lakshmi
நாங்களும் இங்கு புத்தகங்களெல்லாம் வைத்து சரஸ்வதி பூஜை கொண்டாடினோம். நல்லவேளை நீங்களாவது எழுதினீர்கள் - ஏனோ சென்றவருடம்போல் இந்தவருடம் பலர் எழுதவில்லை.
ReplyDeleteஅப்புறம் இன்னொன்று... பூஜை செய்யும்போது மகள் கேட்டாள், ஏம்மா இந்த படிப்புகொடுக்கிற சாமி பத்தி எனக்கு ஏதும் பாட்டு சொல்லிக்கொடுக்கலேன்னு...! நான் ஏதோ "வெள்ளைத்தாமைரையில் வீற்றிருப்பாள்
எங்கள் உள்ளக்கோயிலிலே உரைந்திருப்ப்பாள்"...னு ஏதோ உளறினேன் - மேலே தெரியல.
அதனால சின்னப்பிள்ளைங்க பாடுற மாதிரி வேறு எதாவது பாடல் இருந்தா இங்கே தாருங்கோ. நன்றி.
லக்ஷ்மி, ப்ரம்ம தேவர் படைக்கும் தொழில் புரிபவர் என்பதால் ஏழுலகில் படைக்கப் பட்ட எல்லாருக்கும் அவர் தான் தந்தை. அந்த முறையில் அவர் ஸரஸ்வதிக்கும் தந்தை என கருதலாம். மற்றபடி ஸரஸ்வதி ப்ரம்ம தேவரின் சக்தி என்பதே புராணக் கருத்தும், என் கருத்தும்.
ReplyDeleteநன்றி அன்பு. சின்ன குழந்தைங்க பாடற மாதிரி எளிதான பாடலை சீக்கிரம் தருகிறேன்.
ReplyDeleteஅன்பு, நீங்க உங்க குழந்தைக்கு சொல்லிக் கொடுத்தப் பாட்டையே இங்க குடுச்சாச்சு.
ReplyDeleteகலைவாணி நின் கருணை தேன் மழையே!
விளையாடும் என் நாவில் செந்தமிழே!
(கலை)
அலங்கார தேவதையே வனிதாமணி!
இசை கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!
(கலை)
மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்!
அருள் ஞானக் கரம் ஒன்றில் ஜபமாலை விளங்கும்!
ச்ருதியோடு லய பாவ ஸ்வர ராக ஞானம்!
ஸரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் கானம்!
(கலை)
வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்!
வேணுவில் வரும் கானம் வாணி உன் சக்ரவாகம்!
வானகம் வையகம் உன் புகழ் பாடும்!
வேண்டினேன் உனைப் பாட தருவாய் சங்கீதம்!
(கலை)
Ungal Panni Siraka Vaazthukal. Virravil Muttrum thurantha Munivarai Maara Yennathu vaazthukal.
ReplyDeleteரொம்ப நன்றி அனானிமஸ் நண்பரே...என்னை ஏன் முற்றும் துறந்த முனிவராய் விரைவில் மாற வாழ்த்துகிறீர்கள் என்று தயவு செய்து சொல்கிறீர்களா?
ReplyDelete