நம்ம ஊரு மருதைங்கண்ணே! படிச்ச பசங்க எல்லாம் 'மதுரை'ன்னு சொல்லுவாங்கண்ணே. எங்க ஊருக்கு இன்னொரு பேரும் இருக்குதுண்ணே - 'கூடல் கூடல்'ன்னு சொல்லுவாங்கண்ணே. அதான் நம்ம ஊரு பேரை இந்த இணையப்பதிவேட்டுக்கு வச்சுட்டேண்ணே.
கூடல்ன்னா கலவைன்னு கூட ஒரு அர்த்தம் இருக்குதாம்ண்ணே. கலவையா எதைஎதையோ பத்தி இங்க பேசலாம்ன்னுதான் இந்த பேரை தெரிவு செஞ்சாச்சுண்ணே.
எல்லோரும் கூடும் இடத்துக்கும் கூடல்ன்னு பெயர் சொன்னாங்க - நாமளும் நம்ம கூட்டாளிகளும் கூடி குலாவலாம்ன்னுதான் இந்த பேரை வச்சாச்சுண்ணே.
நீங்க அடிக்கடி இங்க வந்து போய்க்கிட்டு இருங்கண்ணே.
தலைவா... ஒரே நேரத்துல எத்தன ப்ளாக் ஆரம்பிப்பீரு??? ஒரு முடிவோடதான் களத்துல எறங்கிருக்கீரு போல...
ReplyDeleteநடக்கட்டும்.. நடக்கட்டும்...
~அன்புடன்,
தொண்டன்.
வாங்க குமரன். இங்கே ஒரு மாட்டை வச்சே மேய்க்க முடியலை. நீங்க என்னன்னா தினமும் ஒரு மாட்டை சேர்த்து கொண்டிருக்கிறீர்கள். இப்பவே 6 ப்ளாக் ஆச்சு. ஜமாய்ங்க. எல்லாம் முதல் பதிவோடு நிக்குது. சீக்கிரம் ஆரம்பிங்க.
ReplyDeleteசிவா
ReplyDeleteமாடு எவ்வளவு வேண்டுமானாலும் சேத்துக்கலாம். மனைவிதான் ஒண்ணோட நிறுத்திக்கணும். இல்லாட்டி சமாளிக்க முடியாது.
Vanakam Kumaran. Ammamya.....nevir muthiulil thiruvasagam arrubithir...appuram sourastra...ippa Madurai.....onnu vidama ellathyum cover pannindalamnu thittatma....anyway yengalluku nallthuthaan..inna inthanai naal yennaku mattum theirchathu..ippa orrukey ezuthariri...ithulla yennai deala vuttinga..hmm...
ReplyDelete