Tuesday, May 14, 2013

காரேய் கருணை இராமானுச!


காரேய் கருணை இராமானுச! இக்கடலிடத்தில்
ஆரே அறிபவர் நின்னருளின் தன்மை?! அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான்! வந்து நீ என்னை உய்த்த பின் உன்
சீரே உயிர்க்குயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே!

கருமேகத்தை ஒத்த கருணையை உடைய இராமானுசரே! கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் யார் தான் உன் கருணையின், அருளின் ஆழத்தை அறிந்தவர்கள்?! யாரும் இல்லை!

அடியேன் எல்லா துன்பங்களுக்கும் இயற்கையான உறைவிடம்! நீர் வந்து என்னை ஏற்றுக்கொண்டு நல்வழியில் செலுத்திய பின்னர் உமது பெருமைகளே அடியேனின் உயிருக்கு உயிராக நின்று இப்போதெல்லாம் இனிக்கின்றதே!

(இன்று சித்திரை திருவாதிரை! இராமானுசரின் திருநட்சத்திரம்/பிறந்த நாள்)

2 comments:

  1. இன்று ஸ்ரீபெரும்புதூர் சென்று காரேர் கருணை இராமானுஜரை சேவித்து விட்டு வந்து பார்த்தால் தங்கள் பதிவு.

    எம்பெருமானார் திருவடிகளே சரணம்.

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி ஐயா.

    எம்பெருமானார் திருவடிகளே சரணம்.

    ReplyDelete