குத்துவிளக்கு
எரிய கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற
பஞ்சசயனத்தின் மேல் ஏறி
கொத்து
அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக்
கிடந்த மலர் மார்பா! வாய்
திறவாய்!
மைத்தடங்கண்ணினாய்!
நீ உன் மணாளனை
எத்தனைப்
போதும் துயில் எழ ஒட்டாய்
காண்!
எத்தனையேலும்
பிரிவாற்றகில்லாயால்
தத்துவம்
அன்று தகவேலோர் எம்பாவாய்!
குத்துவிளக்கு
எரிய தந்தக்கால்களை உடைய கட்டிலின் மேல்
மெத்து மெத்தென்ற பஞ்சினால் ஆன மெத்தையின் மேல்,
கொத்து கொத்தாக மலர்கள் சூடிய
தலைமுடியை உடைய நப்பின்னையின் கொங்கையைத்
தழுவியபடி கிடக்கும் மலர் போன்ற மார்பை
உடையவனே! வாயைத் திறந்து பேசுவாய்!
மையணிந்த
கண்ணை உடையவளே! நீ உன் கணவணை
எத்தனை நேரமானாலும் துயில் நீங்கி எழ
விடமாட்டேன் என்கிறாய்! எள்ளளவு நேரமும் உன்
கணவனைப் பிரிந்து உன்னால் இருக்க இயலாது
போலும்! அப்படி இருப்பது உன்
தகுதிக்கு சரியானது இல்லை!
No comments:
Post a Comment