Wednesday, February 23, 2011

மொழி எதற்காக? - ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன் மொழி பற்றி எழுதிய இந்த கட்டுரையை இன்று படித்தேன். அதனைப் படித்ததில் பிடித்தது வகையில் பகிர்ந்து கொள்கிறேன்.

http://www.jeyamohan.in/?p=11623

என் மக்கள் இருவரும் மிக நன்றாக சௌராஷ்ட்ரம் பேசுவார்கள். எட்டு வயது மகளுக்குத் தமிழ் கற்று கொள்ள வேண்டும் என்று ஆர்வம்; என் பணிச்சுமையால் அவளுக்குக் கற்றுக் கொடுக்க இயலவில்லை. விரைவில் அதனையும் வாழ்வின் ஒரு முக்கியப் பகுதியாக எடுத்துக் கொண்டு சொல்லிக் கொடுக்க வேண்டும். ஜெயமோகன் சொல்லும் நுண்ணுணர்வுள்ள குழந்தைகள் தான் என் மக்கள். அவர்களுக்கு தமிழைக் கற்றுக் கொடுக்காமல் ஒரு இழப்பு ஏற்படுத்தக் கூடாது என்ற ஊக்கம் இக்கட்டுரையைப் படித்த போது தோன்றுகிறது!

12 comments:

  1. It is unfortunate that the Sourashtrians are not learning the love of their mother tongue from the Tamilians.
    K.V.Pathy

    ReplyDelete
  2. Dear Kumaran,
    There is wide spread regret that the Academy awardee Sri M.V.Venkatram did not write in his mother tongue. I request you , as his successor in Tamil writing, to devote some time for writing in Sourashtra also.
    K.V.Pathy

    ReplyDelete
  3. ரொம்ப நல்லாயிருக்குங்க

    ReplyDelete
  4. முயல்கிறேன் பதி ஐயா!

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. மறுபடியும் பதிவை பார்த்த பின்னாடி, உங்களுக்கு தமிழ் எவ்ளோ பிடிக்கும்னு ஒரு நிமிஷம் தோணி... முந்தைய எனது பின்னூட்டங்கள் உங்களளவில் பொருளற்றவை என்று அழித்துவிட்டேன். :-)

    ReplyDelete
  8. பொருளல்லாதவற்றை பொருளாக்கி வைக்கும் பெருமான் தொண்டரே இராதா! பொருளில்லாததை நீர் சொல்வதும் உண்டோ?!

    கொஞ்சம் நீண்ட பதில் சொல்ல வேண்டுமே என்று தான் நேரம் பார்த்திருந்தேன். சொல்லவும் செய்யலாம். விரைவில். :-)

    ReplyDelete
  9. "பொருளல்லாதவற்றை பொருளாக்கி வைக்கும் பெருமான்"
    :-)
    இதற்கு ஏதாவது பாசுரம் சொல்லுங்களேன். :-)

    ReplyDelete
  10. எனது சிறு வயதில் எனக்கு ஹிந்தி மற்றும் ஷார்ட்-ஹேன்ட் கற்றுக் கொடுக்க எனது பெற்றோர் மிகவும் சிரமம் எடுத்துக் கொண்டனர்.
    நானும் ஒரு வித பயத்தில் படித்துக் கொண்டிருந்தேன்...ரொம்ப நாள் கழித்து எனக்கு அவற்றில் எல்லாம் ஆர்வம் இல்லை என்று தெரிந்து விட்டு விட்டனர். :-)

    அமெரிக்காவில் உள்ள எனது உறவினர் தன் மகன் தமிழ் பேச வேண்டும் மிகவும் சிரமம் எடுத்துக் கொள்கிறார். தாய் தந்தையர் தமிழில் பேசிக் கொள்ளும் பொழுது, அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று அறிய முயலும் ஒரு ஆர்வமாக மட்டுமே இருப்பதை தமிழில் ஆர்வம் இருக்கிறது என்று புரிந்து கொண்டு அவர் செயல்பட்டு வந்தார் என்பதை அவர் குடும்பத்துடன் இந்தியா வந்த பொழுது தெரிந்து கொள்ள முடிந்தது.அவருடைய பெற்றோரே பின்னர் இதனை அவருக்கு சுட்டிக் காட்டினர். தற்பொழுது தமிழ் மொழி மற்றும் பண்பாடு இவற்றை கற்க/அறிய/உணர பிறந்த மண்ணே சிறந்த இடம் என்று ஒரு முடிவுக்கு வந்து எப்படி தாயகம் திரும்பலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறார். x=x+1 syndrome விட்டு வைக்கிறதா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும். :-)

    ReplyDelete
  11. ஆனாலும் எல்லா பெற்றோரையும் ஒரே விதமாக சொல்ல முடியாது. சில அருமையான பெற்றோர் குழந்தைகளுடன் நிறைய நேரம் செலவிட்டு உண்மையான ஆர்வத்தை கண்டறிகிறார்கள். முந்தைய(அழித்த) பின்னூட்டங்கள்...உண்மையான ஆர்வம் இருப்பின் கட்டாயம் சொல்லி கொடுக்க வேண்டும் என்று இருந்திருக்க வேண்டும். :-)

    ReplyDelete