Saturday, January 01, 2011
அம்மையப்பா உங்கள் அன்பை மறந்தேன்!
என் உடல் தன்னில் ஓர் ஈ மொய்த்த போது
உங்கள் கண்ணில் முள் தைத்தாற் போல் இருந்தும்,
என் உடல் நோய் கண்டு இரவொடு பகலும்
கண் உறங்காது உடல் இளைத்தும்,
இன்னமுது ஊட்டி இன்பத் தாலாட்டி
என்னை ஆளாக்கிய பெருமைக்கு
என்னிடம் இயற்கையில் உங்கள் உள்ளுருகும்
அன்பினுக்கு ஒரு கைமாறேது?
என் உயிர் தவப்பயன் என் அம்மையே அப்பா!
இம்மையில் எனது கண் கண்ட
என் அருட்கடவுள் என் அம்மையே அப்பா!
எனக்கொரு நற்கதி உண்டோ?
என் அரும் நிதியாம் அம்மையே அப்பா!
என் பிழை பொறுத்தருள்வீரோ?
என் உயிர்த் துணையாம் அம்மையே அப்பா!
எங்கு சென்று உங்களைக் காண்பேன்?!
அம்மை அப்பா உங்கள் அன்பை மறந்தேன்!
அம்மை அப்பா உங்கள் அன்பை மறந்தேன்!
அறிவிலாமலே நான்...
அறிவிலாமலே நன்றி மறந்தேன்!
அறிவிலாமலே நன்றி மறந்தேன்!
தாயே தந்தையே!
தாயே தந்தையே!
அருமை தாயே தந்தையே!
அருமை தாயே தந்தையே! என்
அருமை தாயே தந்தையே!
நேற்று தான் எனது sanskrit master "மாத்ரு தேவோ பவ: பித்ரு தேவோ பவ:" என்று சொல்லி ராமாயணத்தில் ச்ரவண குமாரன் கதையை சொன்னார்.வீடியோவை பார்க்கவில்லை. பாடல் படிக்கும் பொழுதே நெஞ்சை தொடுகிறது.
ReplyDeleteஅப்புறம் வீடியோவைப் பார்த்தீங்களா இராதா?
ReplyDeleteம்ம்...மாதங்கள் கழித்து பார்த்தேவிட்டேன். பாடல் நெஞ்சைப் பிழிகிறது.
ReplyDeleteஉண்மை இராதா.
ReplyDelete